நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள்

சத்தம்ம - மணிரத்தனா

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள்

Saddhamma-maniratana

Gemstones of the Good Dhamma

தொகுத்து மொழிபெயர்த்தவர் போற்றுதற்குரிய எஸ். தம்மிகா அவர்கள்

Compiled and translated by Ven. S. Dhammika

பொருளடக்கம் Contents

முன்னுரை Preface

ஆசிரியரைப்பற்றி About the Author

1. அயச்சன (வேண்டுகோள்) Ayacana (Request)

2. தம்மவக்க (தம்மம்) Dhammavagga (Dhamma)

3. கிலேசவக்க (மாசுகள்/கிலேசங்கள்) Kilesavagga (The Defilements)

4. தானவக்க (கொடை) Danavagga (Giving)

5. சீலவக்க (ஒழுக்கம்) Silavagga (Virtue)

6. வாச்சவக்க (மொழி) Vacavagga (Speech)

7. போகவக்க (செல்வம்) Bhogavagga (Wealth)

8. மித்தவக்க (நட்பு) Mittatavagga (Friendship)

9. சுடவக்க (கற்பது) Sutavagga (Learning)

10. சாவக்க வக்க (சீடர்) Savakavagga (The Disciple)

11. சித்தவக்க (மனம்) Cittavagga (Mind)

12. சிக்கவக்க (பயிற்சி) Sikkhavagga (The Training)

13. வயாமவக்க (முயற்சி) Vayamavagga (Effort)

14. சத்திவக்க (கடைப்பிடி) Sativagga (Mindfulness)

15. அத்தபராவக்க (நாமும் மற்றவரும்) Attaparavagga (Oneself and Others)

16. மெத்தவக்க I (அன்பு I) Mettavagga I (Love I)

17. மெத்தவக்க II (அன்பு II) Mettavagga II (Love II)

18. சுகவக்க (மகிழ்ச்சி) Sukhavagga (Happiness)

19. துன்ஹிவக்க (அமைதி) Tunhivagga (Silence)

20. விபாஸணவக்க (நுண்ணறிவு) Vipassanavagga (Insight)

21. புத்தவக்க (புத்தர்) Buddhavagga (The Buddha)

22. கிட்டிசத்தா (புகழ்ச்சி) Kittisadda (Praise)

சுருக்கம் Abbreviations

சான்றுகள் References

முன்னுரை:

புத்தரின் மற்றும் அவருடைய நேரடியான சீடர்களின் போதனைகள் "சுத்த பிடகம்" என்று அழைக்கப்படும் பெரும் இலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. உரை நடை வடிவிலும் செய்யுள் வடிவிலும் உள்ள இந்த இலக்கியம் பெரும்பாலான பௌத்தர்கள் அறியப்படாததாகவே உள்ளது. அந்த இலக்கியத்தின் பிரமாண்டமான அளவே அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதன் நடையும், பொருளும் மேலான தத்துவ ரீதியில் அமைந்துள்ளமை மற்றொரு காரணமாகும். ஆனால் இந்தப்பெருமளவான இலக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பலராலும் அறியப்பட்டுள்ளது. அதுதான் தம்மபதம். புத்தரின் பலதரப்பட்ட போதனைகளைப் பற்றிய 423 செய்யுள்கள் அடங்கிய திரட்டு அது. அதன் வசதியான அளவும், சுருக்கமான மெய்ஞ்ஞானம் விளக்கும் வரிகளும், சில இடங்களில் அதன் நடை அழகும் அதைச் சுத்த பிடகத்தின் மிகப் புகழ்பெற்ற புத்தகமாகத் திகழ வைத்திருக்கிறது.

அதேசமயம், தம்மபதத்திற்கு ஈடான முக்கியத்துவமும், மனத்தை ஈர்க்கும் வரிகளும் பலராலும் அறியப்படாமல் சுத்த பிடகத்தில் சிதறிக் கிடக்கின்றன. எனவே அவற்றுள் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, பல தலைப்புகளாகப் பிரித்து வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன். இதனால் படிப்பவரின் ஆர்வம் அதிகரித்துப் போதனைகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான வார்த்தைகள் புத்தரே கூறியவை; மீதம் அவருடைய ஞானம் பெற்ற சீடர்கள் சொன்னவை. ஆனால் சீடர்கள் சொன்னதும் புத்த தம்மத்தின் சாரத்தையே பிரதிபலிக் கின்றன. ஏனெனில்: "நன்றாகப் பேசப்பட்டது எதுவாயினும் அது புத்தரின் வார்த்தைகளே," என்று கூறப்பட்டுள்ளது அல்லவா? (A. IV, 164).

இந்தச் சிறிய படைப்பை எனது நல்ல நண்பர், செல்வி. காண்ஸ்டன்ஸ் சத்தாம் அவருக்குப் படைக்கின்றேன். இந்த "நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள்" மார்க்கத்திற்கு ஒளியூட்டி எல்லா உயிரினங்களையும் நிப்பாண நிலைக்குக் கொண்டு செல்லுமாக!

Preface

The discourses of the Buddha and his direct disciples have been collected together into a huge body of literature known as the Sutta Pitaka. Made up of both prose and verse, much of this literature is little known to the average Buddhist because of its great size and also because in both style and content it is highly philosophical. One selection of this literature is, however, very well known. It is the Dhammapada, a collection of four hundred and twenty-three verses on various aspects of the Buddha's teachings. The Dhammapada's convenient size, pithy wisdom and, at times, great beauty has made it by far the most popular book in the Sutta Pitaka.

However, many other verses of equal relevance and appeal are to be found scattered throughout the Sutta Pitaka which remains virtually unknown. I thought it useful, therefore, to collect some of these verses, arrange them according to subject, and present them in such a way that they may enrich the faith and deepen the understanding of those who read them. Most of the verses are the words of the Buddha himself; a lesser number is attributed to his enlightened disciples. But even these reflect the spirit of the Buddha's Dhamma, for it is said: "That which is well spoken is the word of the Buddha." (A. IV, 164).

This small work is dedicated to my good friend, Miss Constance Sandham. May these "Gemstones of the Good Dhamma" illuminate the path so that all beings may attain Nibbana!

ஆசிரியரைப்பற்றி

போற்றுதற்குரிய எஸ். தம்மிகா அவர்கள்ஆஸ்திரிலியாவில் பிறந்து இளமையிலேயே பௌத்த மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தனது இருபத்து இரண்டாம் ஆண்டில் இந்தயாவிற்குப் பயணம் செய்து போற்றுதற்குரிய எம். சங்கரத்தின மஹா தேரரிடம் துறவு பூண்டார். பின் அவர் இலங்கை சென்று கண்டி மாவட்டத்தில் தங்கிப் பல ஆண்டுகள் தியானம் கற்பித்தார். தற்போது அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து தம்மத்தைக் கற்பித்து வருகிறார்.

About the Author

Venerable S. Dhammika was born in Australia and developed an interest in Buddhism in his early teens. At the age of twenty-two he went to India and was ordained as a Buddhist monk under the Ven. M. Sangharatana Mahathera. He later moved to Sri Lanka where he taught meditation for several years in the Kandy district. He now lives and teaches in Singapore.

* * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu

பிழைத் திருத்தம் / Tamil Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

With permission from Bhante S. Dhammika

©1987 Buddhist Publication Society.

"Gemstones of the Good Dhamma: Saddhamma-maniratana", compiled and translated by Ven. S. Dhammika. Access to Insight (Legacy Edition), 30 November 2013, http://www.accesstoinsight.org/lib/authors/dhammika/wheel342.html

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.