மனமும் சத்தியும்

மனமும் சத்தியும்

அனகாரிகா முனிந்திரா (வங்காள தேசம் 1915-2003)

Mind and Mindfulness

Anagarika Munidra (Bangladesh 1915-2003)

English Source

மொ. ஆ. கு:

சத்தி என்ற பாலி மொழி வார்த்தைக்குப் பல பொருள்கள் இருப்பதால் அதனை மொழி பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்துகிறோம்.

"மனம் வேறு சத்தி வேறு," என்று முனிந்திரா அவர்கள் சொல்வார். மனத்திற்கு இயற்கையாக நிறம் ஏதும் இல்லை. அது பேராசையால் உந்தப் படும் போது அதைப் "பேராசையுள்ள மனம்" என்கிறோம். கோபத்தால் ஆட்கொள்ளப்படும் போது அதனை "கோபமான மனம்" அல்லது "கோபமான மனிதன்" என்கிறோம். சத்தி (மனக் கவனம்) இல்லாவிட்டால், மனம் இந்தக் கோபத்தால் பாதிக்கப்படுகிறது. கோபம் மனத்தை அசுத்தமாக்கிவிடும்; அதில் நஞ்சைக் கலந்து விடும். ஆனால் மனம் வேறு, கோபம் வேறு. மனம் கோபம் இல்லை; கோபமும் மனம் இல்லை. மனம் பேராசை இல்லை; பேராசையும் மனம் இல்லை. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மனத்திற்கு விருப்பு, வெறுப்பு என்ற இயல்புகள் ஏதும் இல்லை. "மனம்" என்றால் "அறியும் தன்மை," "உணர்ந்து கொள்ளும் தன்மை". அவ்வளவு தான்.

“Mind and mindfulness are two different things,” Munindra used to explain. Mind by nature has no color. When it is colored with greed, we call it “greedy mind.” When anger arises, at that moment, it is called “angry man” or “angry mind.” If there is no mindfulness, mind is influenced by this anger. Anger has the nature to pollute the mind; it creates poison. But mind is not anger; anger is not mind. Mind is not greed; greed is not mind. Please remember this. Mind has no nature of liking or disliking. “Mind” means “knowing faculty,” “cognizing faculty.”

முனிந்தரா சத்தியை இவ்வாறு விளக்குவார்:

சத்தி என்பது வேறு: அதாவது கவனம், அறிந்திருத்தல், நினைவில் வைத்திருத்தல், அக்கறை செலுத்துதல் என்பதாகும். சத்தி என்றால் மறவாமை, அறிந்திருப்பது, இப்போது என்ன நடக்கின்றது என்பதை உணர்ந்திருப்பது. உங்களை ஒரே மூங்கிலால் ஆன குறுகிய பாலத்தின் மீது நடந்து ஒரு ஆற்றைக் கடக்கச் சொன்னால், நீங்கள் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்துவைப்பீர்கள் அல்லவா? ஒரே ஒருமுறை கவனமிழந்தாலும் ஆற்றில் விழுந்துவிட நேரிடலாம். சத்தியை இழந்து விட்டால், உங்களுக்குக் காயம் உண்டாகலாம் அல்லது நீங்கள் மரணத்தைக் கூடத் தழுவ நேரிடலாம். எனவே சத்தி என்றால் - நினைவிலும், பேச்சிலும், நடத்தையிலும் - நிகழ் காலத்தில் நடப்பதை மறக்காமல் இருப்பது.

Munindra would then describe sati:

Mindfulness is a different thing: alertness, awareness, remembering, heed-fulness. It means not to forget, just to be aware, to be mindful of what is going on. When you

are asked to walk on a [narrow] one-bamboo bridge over the river, you have to be so careful on every step. Once you forget, there is every possibility of falling down. If

you lose your mindfulness, you will hurt yourself or kill yourself. So, in reality, mindfulness means not to forget what is going on at the present moment—in thought, in word, in deed.

மனம், 'எந்நேரமும், எங்கும் நிறைந்து, ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு' இருந்தாலும், நாம் எப்போதும் சத்தியுடன் (மனக் கவனத்துடன்) இருப்பதில்லை என்பதை முனிந்திரா கவனித்தார். அவர் சொல்வார், "பல முறையும் மனம் உங்களோடு இருப்பதில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் மனத்துடன் ஒன்றி இருப்பதில்லை. மனம் வேறு எங்கேயோ , எதையோ நினைத்தவாறு இருக்கும். நீங்களோ இயந்திரம் போலக் கவனமேதும் இல்லாமல் உணவருந்திக் கொண்டு இருப்பீர்கள்."

முனிந்திராவின் கருத்துப்படி எல்லா நடவடிக்கைகளும் ஒரே வழியில் தான் நடக்க வேண்டும் - கனத்துக்கு கனம் சத்தியுடன் - அறி நிலையில் இருந்தபடிதான் நடக்க வேண்டும்.

Munindra noted that though the mind is “always there, always working,” we are not always mindful. He said, “Many times you will see that mind is not with you, you are not

with the mind. Mind is somewhere else, thinking something else, while [the] eating process is going on mechanically, unmindfully.” According to Munindra, there is only one way to conduct all activities—with moment-to-moment awareness.

* * * * * *