புண்ணக மாணவ பூச்சா Punnaka-manava-puccha

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 5.3

புண்ணக மாணவ பூச்சா - புண்ணகரின் கேள்விகள்

Punnaka-manava-puccha: Punnaka's Questions

Translated from the Pali by: John D. Ireland

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜான் D. அயர்லாந்து

* * *

[போற்றுதற்குரிய புண்ணகர்]

"வேட்கையிலிருந்து விடுபட்டவரிடம், காரண காரியங்களின் ஆணிவேரைக் கண்டவரிடம் [1] நான் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்: எதன் காரணமாக முனிவர்கள், வீரர்கள், பிராமணர்கள், மற்றவர்கள் இந்த உலகில் அக்கினி நைவேத்தியம் செய்து கடவுளருக்குப் (தேவர்களுக்கு) படைக்கின்றனர்? அண்ணலிடம் இந்தக் கேள்வி கேட்கிறேன், அவர் எனக்குப் பதில் கூறட்டும்."

[The Venerable Punnaka:]

"To him who is free from craving, who has seen the root (of things)[1] I have come with a question: for what reason did sages, warriors, brahmanas and other men prepare, here in this world, various sacrificial gifts for the gods (devata)? I ask the Lord this, let him tell me the answer."

[அண்ணல்:]

பலவிதமான யாக காணிக்கைகளை முனிவர்கள், வீரர்கள், பிராமணர்கள், மற்ற மனிதர்கள் கடவுளருக்குப் படைப்பதற்கான காரணம் என்னவெனில் புண்ணக, இந்தத் தோற்றத்திற்கும் (உலகவாழ்வு சம்பந்தப்பட்ட இன்பங்கள் தொடர்பாக) அல்லது அந்தத் (எதிர்காலத்) தோற்றத்துக்கும் விருப்பப்பட்டு, மூப்புக்கும், சிதைவுக்கும் அப்பால் செல்வதற்காகவே இதைச் செய்கின்றனர்.

[The Lord:]

"Whatever sages, warriors, brahmanas and other men, Punnaka, prepared various sacrificial gifts for the gods, they did so in the hope of this or that (future) existence, being induced by (the fact of) old age and decay."

[புண்ணகர்"]

"தேவர்களுக்கு இப்படிப்பட்ட யாக காணிக்கைகளை ஊக்கத்துடன் செய்யும் இவர்கள் பிறப்புக்கு அப்பாலும் சிதைவுக்கு அப்பாலும் செல்கின்றனரா, அண்ணலே?"

[Punnaka:]

"By preparing various sacrificial gifts for the gods, being zealous in sacrificing, do they cross beyond birth and decay, Lord?"

[அண்ணல்:]

"புலன் இன்பங்களுக்கு விருப்பப்பட்டு அவர்கள் நம்பிக்கையோடு (கடவுளரை) புகழ்ந்து, இறைஞ்சி, காணிக்கைகள் அளிக்கின்றனர், புண்ணக்க. அது போன்ற சன்மானத்துக்காக அவர்கள் வேண்டுகின்றனர். தோற்றத்துக்கான மோகம் கொண்டுள்ள, இது போன்ற காணிக்கைகளில் நம்பிக்கை உள்ளவர் பிறப்புக்கும் சிதைவுக்கும் அப்பால் செல்வதில்லை என்கிறேன்."

[The Lord:]

"They hope and extol, pray and sacrifice for things of the senses, Punnaka. For the sake of such reward they pray. These devotees of sacrifice, infatuated by their passion for existence,[2] do not cross beyond birth and decay, I say."

[புண்ணகர்"]

"இது போன்ற காணிக்கைகளில் நம்பிக்கை உள்ளவர் யாக காணிக்கைகள் செய்தும், பிறப்புக்கும், சிதைவுக்கும் அப்பால் செல்வதில்லை என்றால், ஐயா, பின் எப்படிப்பட்ட பயிற்சி செய்து தேவரும் மனிதரும் உள்ள இந்த உலகில் பிறப்புக்கும் சிதைவுக்கும் அப்பால் செல்வது?"

[Punnaka:]

"If these devotees of sacrifice do not cross beyond birth and decay through sacrifice, Sir, then by what practice does one cross beyond birth and decay in this world of gods and men?"

[அண்ணல்:]

இவ்வுலகையும், மறுமையையும் அறிந்தவர், உலகியல் விஷயங்களோடு எந்த சஞ்சலமும் கொள்ளாதவர், அமைதியானவர், நெருப்புப்பூத்தலில்லாதவர், [3] அவாவும் பிரச்சனைகளும் இல்லாதவர் - அவரே பிறப்புக்கும் சிதைவுக்கும் அப்பால் சென்றவர், என்கிறேன்."

[The Lord:]

"He who has comprehended in the world the here and the beyond, in whom there is no perturbation by anything in the world, who is calm, free from the smoldering fires,[3] untroubled and desireless - he has crossed beyond birth and decay, I say."

* * *

விளக்கம்:

Notes:

1. "The root of unwholesome actions, etc." (Comy). There are six roots or basic conditions in a person leading to the performance of unwholesome (unskilled) and wholesome (skilled) actions: greed, aversion, delusion, non-greed (renunciation, detachment), non-aversion (love) and non-delusion(wisdom). The Buddha has seen and understood this as it really is.

"திறமையற்ற செய்கைகளின் வேர்..." ஒருவர் திறமையற்ற அல்லது திறமையான செய்கை செய்வதற்கு ஆறு வேர்கள் அல்லது ஆறு காரணிகள் உள்ளன: பேராசை, வெறுப்பு, அறியாமை, பேராசையின்மை (துறவறம், பற்றில்லாமல் இருப்பது), வெறுப்பின்மை (அன்பு) மற்றும் மயக்கமின்மை (ஞானம்). புத்தர் இவற்றைக் கண்டு, உள்ளதை உள்ளபடி அறிந்தவர்.

2. Or, "burning with lust for life."

அல்லது "உலக வாழ்வுக்கான அதீத விருப்பம்"

3. The three "fires" of greed, aversion and delusion. This is a punning reference, also to be seen in the previous note, to the brahmana's sacrificial fire.

மூன்று நெருப்புக்களாவன: பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை (மயக்கம்).

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1983 Buddhist Publication Society See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.