சங்யோஜண சூத்திரம்: தளைகள்
Sanyojana Sutta: Fetters
AN 10.13
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு
Translated from the Pali by Thanissaro Bhikkhu
"பத்து தளைகள் உள்ளன. எந்தப் பத்து? ஐந்து கீழான தளைகள் மற்றும் ஐந்து மேலான தளைகள்."
ஐந்து கீழான தளைகள் எவை?
1. ஆத்துமா நம்பிக்கை (தொடர்ந்து மாற்றமில்லா 'நான்' இருப்பதாக உள்ள நம்பிக்கை,)
2. ஐயம்,
3. சாங்கியம், சடங்குகள் ஆகியவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளல்
4. காமம் (ஆசை)
5. வெகுளி (வெறுப்பு)
ஐந்து மேலான தளைகள் எவை?
6. உருவங்கள் (ரூப) மீது பற்று,
7. அருவங்கள் (அரூப) மீது பற்று,
8. அகம்பாவம்,
9. அமைதியின்றியிருத்தல்,
10. அறியாமை.
இவையே பத்து தளைகள்.
"There are these ten fetters. Which ten? Five lower fetters & five higher fetters. And which are the five lower fetters? Self-identity views, uncertainty, grasping at precepts & practices, sensual desire, & ill will. These are the five lower fetters. And which are the five higher fetters? Passion for form, passion for what is formless, conceit, restlessness, & ignorance. These are the five higher fetters. And these are the ten fetters."
* * *
சங்யோஜண: பிறப்பு, இறப்பு, மறுபிறப்பென்ற சம்சார சக்கரத்தினுடன் மனத்தைக் கட்டி வைக்கும் தளைகள்
saṃyojana: Fetter that binds the mind to the cycle of rebirth
* * *