நல்லதிர்ஷ்டமும் விதியும்

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை

9. நல்லதிர்ஷ்டமும் விதியும்

Good Luck and Fate

வினா: புத்த பெருமான் மாயமந்திரங்களைப் பற்றியும் ஊழ் அல்லது விதியைப் பற்றியும் என்ன கூறுகிறார்?

விடை: அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறுவது, பாதுகாப்புக்காக மந்திரிக்கப்பட்ட தாயத்துகளைக் கட்டுவது, வீடுகட்டுவதற்கு அதிர்ஷ்டமான மனைகளைத் தேர்ந்தெடுப்பது; வருவதுரைப்பது, அதிர்ஷ்டமான நாட்களை நிர்ணயிப்பது போன்றவை மூட நம்பிக்கைகளென்றும், அவற்றைத் தவிர்க்கு மாறும் புத்த பெருமான் தம் மாணவர்களுக்கு கட்டளையிட்டார். இவற்றை அவர் "கேவலமான கலைகள்" என வருணித்தார்.

"சில சமயவாதிகள் தாம் வாழ்வதற்காக வேண்டி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உணவளிப்பவர்களுக்குக் கீழ்த்தரமான கலைகளான கைரேகை பார்த்துச் சொல்லல், சகுனங் கூறல், கனவுகளைப்பற்றிப் பலன் கூறல், நல்ல, தீய அதிர்ஷ்டங்களைக் கொண்டு வருதல், அதிர்ஷ்ட தேவதையை வணங்குதல், வீடுகட்ட அதிர்ஷ்டமான மனையைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றைக் கௌதம முனிவர், கேவலமான கலையென்றும், தவறான வாழ்க்கை முறையென்றும் கூறினார்."

QUESTION: What did the Buddha teach about magic and fortune telling?

ANSWER: He considered such practices as fortune telling, wearing magic charms for protection, fixing lucky sites for building and determining lucky days, to be useless superstitions and he expressly forbade his disciples from practicing such things. He called all these things 'low arts'. He said;

‘Whereas some religious men, while living of food provided by the faithful, make their living by such low arts, such wrong means of livelihood as palmistry, divining by signs, interpreting dreams… bringing good or bad luck… picking the lucky site for a building, the monk Gotama refrains from such low arts, such wrong means of livelihood.’D.I,9-12

* * * * * * * *

வினா: அப்படியென்றால், ஏன் மக்கள் சில சமயங்களில் அவற்றின் மீது நம்பிக்கை கொண்டு அவற்றைச் செய்கிறார்கள்?

விடை: பேராசை, பயம், அறியாமை ஆகியவை ஆட்கொண்டு இருப்பதால் அவற்றைச் செய்கிறார்கள்! மக்கள் புத்தபெருமானின் போதனைகளை நன்கு அறிந்து, புரிந்து கொண்டவுடன் தூய்மையான உள்ளம் பெற்று விட்டால், இவற்றைத் துண்டுக் காகிதங்களாக, உலோகத் தகடுகளாக, முணு முணுக்கும் சொற்களாக நினைத்து இவற்றை நம்பாது நிராகரித்து விடுவார்கள். புத்த பெருமானின் போதனைப்படி நேர்மை, இரக்கம், புரிந்து கொள்ளல், பொறுமை, மன்னித்தல், பெருந்தன்மை, உண்மை போன்ற நற்குணங்களே உங்களை உண்மையில் பாதுகாத்து உண்மையான முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும்.

QUESTION: Then why do people sometimes practice such things and believe in them?

ANSWER: Because of greed, fear and ignorance. As soon as people understand the Buddha's teachings they realize that a pure heart can protect them much better than bits of paper, scraps of metal and a few chanted words and they no longer rely on such things. In the teachings of the Buddha, it is honesty, kindness, understanding, patience, forgiveness, generosity, loyalty and other good qualities that truly protect you and give you true prosperity.

* * * * * * * *

வினா: சில அதிர்ஷ்ட வசியங்களும் தாயத்துகளும் பலனளிக்கின்றனவே, இல்லையா?

விடை: எனக்குத் தெரிந்த ஒருவன் தாயத்துகளை விற்றே வாழ்க்கை நடத்துகிறான். அவனுடைய தாயத்துகள் நல்லதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருமெனக் கூறுகிறான். உங்களுக்கு வெற்றி தரும் லாட்டரி எண்களை உங்களால் தேர்ந்தெடுக்க முடியுமென உறுதி கூறுகிறான். அவன் கூறுவது உண்மையாக இருந்தால், அவன் ஏன் கோடீசுவரனாகக் கூடாது? அவனுடைய அதிர்ஷ்டத் தாயத்துகள் உண்மையிலேயே வேலை செய்தால் அவனுக்கு ஏன் வாரந்தோறும் லாட்டரி அடிக்கக் கூடாது? அவனுக்குள்ள ஒரே அதிர்ஷ்டம் என்னவென்றால் அவனிடம் தாயத்துகளை வாங்கப் போதுமான அளவில் மூடத்தனமான மக்கள் இருக்கிறார்கள்.

QUESTION: But some lucky charms do work, don't they?

ANSWER: I know a person who makes a good living selling lucky charms. He claims that his charms can give good luck, prosperity and he guarantees that you will be able to predict winning lottery numbers. But if what he says is true then why isn't he himself a millionaire? If his lucky charms really work, then why doesn't he win the lottery week after week? The only luck he has is that there are people silly enough to buy his magic charms.

* * * * * * * *

வினா: அதிர்ஷ்டம் என்று ஒன்றிருக்கிறதா?

விடை: அகராதியில் அதிர்ஷ்டம் என்னும் சொல்லுக்குப் பொருள், மனித வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, அது நன்மையோ, தீமையோ அவை சந்தர்ப்பத்தால், விதியால், நல்வினையால் நடப்பதாக நம்புவது எனக் கூறப்படுகிறது. புத்தபெருமான் இதனை முழுமையாக நிராகரித்துவிடுகிறார். நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் காரண காரியத் தொடர்பிருக்கும். சான்றாக நோய் வருவதற்கு ஒரு காரணமிருக்கும். ஒருவன் கிருமிகளால் தாக்கப்பட்டிருக்கலாம். அல்லது கிருமிகள் அவனை எளிதாகத் தாக்குவதற்கேற்ப அவன் உடல் நலிவுற்றிருக்கலாம். அதனால், நிகழ்ச்சிக்கும் (நோய்) காரணத்துக்கும் (கிருமிகள் அல்லது நலிவுற்ற உடல்) தொடர்பிருப்பது நமக்குத் தெரிகிறது. இரத்த அணுக்களைக் கிருமிகள் தாக்கி நோய்வர வைக்கின்றன. ஆனால் ஒரு தாளிலோ, தகட்டிலோ ஏதோ ஒன்றை எழுதி அதைத் தாயத்தில் அணிந்து கொண்டு பணக்காரனாகிவிடலாம்; தேர்வில் வெற்றியடைந்துவிடலாம் என்றால் இவ்விரண்டுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?

எவையெவை நிகழ்கின்றனவோ அவையெல்லாம் காரண காரியத் தொடர்புடையவை; அதிர்ஷ்டத்தாலோ 'சந்தர்ப்பத்தாலோ' விதியாலோ அல்ல எனப் பௌத்தம் நமக்குப் போதிக்கிறது. அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை யுள்ளவர்கள் எதையாவது பெறவே அலைவார்கள். (வழக்கமாக அதிகப்பணம், செல்வம் முதலியனவற்றையே). புத்தபெருமான் நம் உள்ளத்தைத் தூய்மையாக வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமென்கிறார். அவர் கூறுகிறார்:

'ஆழமாகவும் திறமையாகவும் படித்து நல்லமுறையில் பயின்று நல்வார்த்தைகளைப் பேசினால் அதுவே நமக்குச் சிறந்த நல்லதிர்ஷ்டமாகும்.

தாய் தந்தையரைப் பேணி, மனைவி குழந்தைகளிடம் அன்புடன் ஒழுகி எளிமையான வாழ்வு வாழ்ந்தால் அதுவே நல்லதிர்ஷ்டமாகும்.

ஈகைக் குணமுடனும், நேர்மையுடனும் உறவினர்களைப் போற்றிப் பழிச்சொல்லற்ற செய்கைகளைச் செய்தால் அதுவே நல்லதிர்ஷ்டமாகும்.

தீமையிலிருந்து விலகி, போதை தரும் குடியை விலக்கி எப்பொழுதும் ஒழுக்கத்துடனிருந்தால் அதுவே நல்லதிர்ஷ்டமாகும்.

மரியாதையுணர்வு, அடக்கம், மனத்திருப்தி, நன்றி, நல்ல அறவுரைகளைக் கேட்டல் இவையே சிறந்த நல்லதிர்ஷ்டமாகும்.'

QUESTION: Then is there such a thing as luck?

ANSWER: The dictionary defines luck as 'believing that whatever happens, either good or bad, to a person in the course of events is due to chance, fate or fortune.' The Buddha denied this belief completely. Everything that happens has a specific cause or causes and there must be some relationship between the cause and the effect. Becoming sick, for example, has specific causes. One must come into contact with germs and one's body must be weak enough for the germs to establish themselves. There is a definite relationship between the cause (germs and a weakened body) and the effect (sickness) because we know that germs attack the organisms and give rise to sickness. But no relationship can be found between wearing a piece of paper with words written on it and being rich or passing examinations. Buddhism teaches that whatever happens does so because of a cause or causes and not due to luck, chance or fate. People who are interested in luck are always trying to get something - usually more money and wealth. The Buddha teaches us that it is far more important to develop our hearts and minds. He said:

‘Honoring one’s mother and father, cherishing one’s wife and child, being straightforward in one’s business, this is the best good luck. Being generous, just, helping your relatives and being blameless in one's actions; this is the best good luck. To refrain from evil and from strong drink and to be always steadfast in virtue; this is the best good luck. Reverence, humility, contentment, gratitude and hearing the good Dhamma; this is the best good luck.’ Sn.262-6

* * * * * * * *