மாணவர்/ஆசிரியர்

அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko

அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

தணிசாரோ பிக்கு

Compiled and Translated by

Thanissaro Bhikkhu

Student/Teacher

மாணவர்/ஆசிரியர்

§ "Whatever you do, always think of your teacher. If you forget your teacher, you're cutting yourself off at the root."

"எது செய்தாலும், எப்போதும் ஆசிரியரை மனத்தில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியரை மறந்துவிட்டால் அது உங்களை வேரோடு அறுப்பதற்குச் சமமாகும்."

§ "A person who goes from teacher to teacher doesn't really have any teachers at all."

"தன் ஆசிரியரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கும் ஒருவருக்கு, ஆசிரியர் எவரும் இல்லை என்பதே உண்மை."

§ On occasion people would present Ajaan Fuang with amulets, and he would hand them out among his students — but only rarely among those who were especially close to him. One day a monk who had lived several years with him couldn't help but complain, "Why is it that when you get good amulets, you never give any to me, and always to everybody else?"

Ajaan Fuang replied, "I've already given you lots of things better than that. Why don't you accept them?"

அவ்வப்போது அஜான் ஃபுவாங்கிற்கு மக்கள் காணிக்கைகளை அளிப்பார்கள். அவர் அதை அவரது மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்து விடுவார் - ஆனால் பொதுவாகத் தனக்கு மிகவும் நெருங்கியவர்களுக்கு அவற்றைத் தரமாட்டார். ஒரு நாள் அவருடன் பல வருடங்கள் வாழ்ந்த ஒரு துறவி அவரிடம் முறையிட்டார், "ஏன் ஐயா, தங்களுக்குக் கிடைக்கும் சிறந்த காணிக்கைகளை மற்றவர்களுக்குத் தருகிறீர்கள். ஆனால் எனக்குத் தருவதே இல்லையே?"

அஜான் ஃபூவாங் பதிலளித்தார், "இதைவிட உயர்ந்த பல வற்றை உனக்குத் தந்திருக்கிறேன். அவற்றை ஏன் நீ ஏற்றுக் கொள்வதில்லை?"

§ "Meditators who live close to their teacher, but who don't understand him, are like a spoon in a pot of curry: It'll never know how sweet, sour, salty, rich or hot the curry is."

"ஆசிரியரின் அருகில் வாழ்ந்தும், அவரைப் புரிந்து கொள்ளாத மாணவர்கள், உணவுப் பாத்திரங்களில் உள்ள கரண்டியைப்போல: அந்தப் பதார்த்தங்களில் உள்ள இனிப்பை, புளிப்பை, கசப்பை அல்லது காரத்தை (அதிலேயே மூழ்கிக் கிடந்தும்) அந்தக் கரண்டி எப்போதும் தெரிந்து கொள்ளப் போவதில்லை."

§ Ajaan Fuang's analogy for students who always have to ask their teachers for advice on how to handle even minor problems in everyday life: "They're just like baby puppies. As soon as they defecate they have to run to their mother to have her lick them off. They'll never grow up on their own."

அன்றாடம் நிகழும் சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூட ஆசிரியரிடம் ஓடிவந்து தீர்வு கேட்கும் மாணவர்களைப் பற்றி அஜான் ஃபுவாங் தரும் உவமானம்: "அவர்கள் நாய் குட்டிகளைப் போல. மலம் கழித்த பின் அவை உடனே தங்களை நக்கிவிடுமாறு தாயிடம் ஓடும். அவர்கள் தாங்களாகவே ஒருபோதும் வளர்ச்சி பெற மாட்டார்கள்."

§ "Students who get stuck on their teachers are like gnats. No matter how much you chase them away, they keep coming back and won't leave you alone."

"ஆசிரியர்களோடு அதீதப் பற்றுக் கொள்ளும் மாணவர்கள் நுளம்புகளைப் (கொசு) போல. எத்தனை முறை அவர்களைத் துரத்தி விட்டாலும் திரும்பத் திரும்ப வந்து நிம்மதியாக இருக்க விடவே மாட்டார்கள்."

§ "If a teacher praises a student to his face, it's a sign that that's as far as the student will go — he probably won't be able to practice to any greater heights in this lifetime. The reason the teacher praises him is so that he'll be able to take pride in the fact that at least he's made it this far. His heart will have something good to hold on to when he needs it at death."

"ஒரு ஆசிரியர் தனது மாணவரை அவர் முன்னால் பாராட்டினாரென்றால், அது அந்த மாணவர் பெறக்கூடிய வளர்ச்சியைப் பெற்று விட்டார் என்பதற்கு அறிகுறி. அதற்கு மேல் அவர் இந்த வாழ்க்கையில் அதிகம் வளர்ச்சி பெற மாட்டார். ஆசிரியர் அவரைப் புகழும் காரணம், இந்த அளவிற்குத் தான் வளர்ந்திருக்கிறோம் என்று அவர் பெருமைப் படுவதற்காகத்தான். மரணத்தைச் சந்திக்கும் போது அவர் உள்ளத்தில் இந்த நற்சான்றிதல் தோன்றும்."

§ Many of Ajaan Fuang's students were convinced that he was able to read their minds, because time after time he would broach topics that happened to be going through their heads or weighing down their hearts at the moment. I myself had many experiences like this, and many were reported to me while I was compiling this book. In most cases of this sort, though, what he had to say had special meaning only for those directly involved, and so I'll ask to pass over them here. But there are two cases I'd like to mention, since they strike me as being useful for all who practice the Dhamma.

Once, one of his students — a young man — took the bus from Bangkok to Rayong to help work on the chedi. He got off at the mouth of the road leading to the wat, but didn't feel like walking the six kilometers it would take to get there, so he sat at the noodle stand by the intersection and said to himself — as a challenge to Ajaan Fuang — "If Than Phaw is really something special, may a car come by and give me a lift to the wat." One hour passed, two, three, and not a single car or truck turned into the road, so he finally had to walk the distance on foot.

When he arrived at the wat, he went to Ajaan Fuang's hut to pay his respects, but as soon as Ajaan Fuang saw him approach, he got up, entered his room and closed the door. This shook the student a little, but still he bowed down in front of the closed door. The moment he finished, Ajaan Fuang opened the door a crack and said, "Look. I didn't ask for you to come here. You came of your own free will."

Another time, after the chedi was finished, the same young man was sitting in meditation at the chedi, in hopes that a voice would whisper the winning number of the next lottery in his ear. What he heard, though, was the sound of Ajaan Fuang actually walking past and saying, as if to no one in particular, "Exactly what are you taking as your refuge?"

அஜான் ஃபுவாங்கின் மாணவர்களில் பெரும்பாலோர் அவரால் தங்கள் மனத்தைப் படிக்க முடியும் என்று நம்பினார்கள். ஏனென்றால் திரும்பத் திரும்ப அவர் பேசுவதற்கு எடுத்த தலைப்பு அவர்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் எண்ணம் சம்பந்தமாகவோ அல்லது அவர்கள் உள்ளத்தை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனையைப் பற்றியதாகவோ இருக்கும். நானும் இதனைப் பலமுறை அனுபவித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தைத் தொகுக்கும் போது பலர் தங்களது அனுபவங்களைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால் இது போன்ற பல சம்பவங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தோருக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கும் என்பதால் அவற்றையெல்லாம் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியிருக்கிறது. ஆனால் இங்கு இரண்டு அனுபவங்களைப் பற்றி மட்டும் நான் கூற விரும்புகிறேன். அது அறத்தைப் பயில்வோர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

ஒருமுறை அவரது மாணவர் ஒருவர் - ஒரு இளைஞன் - சேதியம் கட்டுவதற்கு உதவுவதற்காகப் பாங்காகிலிருந்து ராயாங்கிற்கு ஒரு பேருந்தில் வந்தார். விகாரைக்குப் பிரிந்து செல்லும் சாலையின் வாயிலில் இறங்கினார். ஆனால் மேலும் ஆறு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருந்ததைத் அவர் தவிர்க்க விரும்பினார். எனவே அந்தச் சந்தியிலிருந்த நூடல்ஸ் கடையில் அமர்ந்தபடி தனக்குத்தானே இவ்வாறு - அஜான் ஃபுவாங்கிற்கு ஒரு சவாலாக – கூறிக் கொண்டார்: "ஐயா உண்மையாகவே ஒரு சிறப்புடையவரென்றால், இவ்வழியாக ஒரு வாகனம் வந்து என்னை விகாரைக்கு அழைத்துச் செல்லுமாக." ஒரு மணி நேரம் சென்றது, இரண்டு, மூன்று மணி நேரம் சென்றன ஆனால் எந்தக் காரோ, லாரியோ விகாரைக்குப் போகும் சாலைப் பக்கம் திரும்பவே இல்லை. பின் வேறு வழியின்றி அவர் விகாரைக்கு நடந்தே சென்றார்.

விகாரையை அடைந்தவுடன் அவர் அஜான் ஃபுவாங்கின் குடிகைக்கு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகச் சென்றார். ஆனால் அவர் வருவதைக் கண்ட அஜான் ஃபுவாங் எழுந்து அவர் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். சற்று அதிர்ச்சியடைந்தாலும், மாணவர் மூடியிருந்த கதவின் முன் வணங்கினார். வணங்கி முடித்தவுடன் அஜான் ஃபுவாங் கதவைச் சற்றே திறந்து, "இதோ பார். நான் உன்னை இங்கு வரச் சொல்லவில்லை. நீயாக விருப்பப்பட்டுத் தான் இங்கு வந்தாய்."

மற்றொரு முறை, சேதியம் கட்டப்பட்ட பின், அதே இளைஞன் அடுத்த லாட்டரியில் வெற்றி பெறும் எண்களை ஒரு குரல் தனக்குச் சொல்லும் என்ற நம்பிக்கையோடு அந்தச் சேதியத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் கேட்டதோ அஜான் ஃபுவாங் அருகில் நடந்து வந்து குறிப்பாக யாரொருவருக்கும் சொல்லாதது போல, "எதில் தான் நீ அடைக்கலம் கொண்டிருக்கிறாய்?" (புத்த, தம்ம, சங்கத்தில் அடைக்கலம் கொள்ளமால் லாட்டரிச் சீட்டிலா அடைக்கலம் கொள்வது?)

* * * * * *