தான் இன்மை

தான் இன்மை

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Non Self

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

இந்தக் கேள்வி பலராலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. தான் இன்மை என்ற பௌத்தக் கருத்தை விளக்கிக் கூறுங்கள்.

தான் இன்மை என்று கூறுவது சரியே. இதுபற்றிப் புத்தர் கூறுவதாவது, "இந்த உடல் ஒரு நிலையான பொருள் இல்லை. இது ஒரு வேலைக் கிரமம். செய்கையின் ஒழுங்கு. இதில் நிரந்தரமான எதையும் காண முடியாது. நீங்கள் மூன்று வயதில் இருந்தவரும் இல்லை, பத்து வயதில் இருந்தவரும் இல்லை, முப்பது அல்லது ஐம்பது வயதில் இருந்தவரும் இல்லை. தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் உடல் என்கிறோம். அது நிலைத்திருக்கும் தன்மையுடையதாக நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் எதுவும் நிலைத்திருப்பதில்லை. உங்கள் வாழ்க்கையில் நிலைத்து இருக்கிற, சாரம்சமுள்ள, மாற்றம் கொள்ளாத எதுவுமே இல்லை. எல்லாமே - உங்கள் உணர்ச்சிகளும், முடிவெடுக்கும் முறைகளும், விஞ்ஞானமும், நினைவும், உடலும் ஓடும் இயல்பு கொண்ட வேலைக் கிரமம்தான். இவை ஏதும் நீங்கள் இல்லை. இதனாலேயே நிரந்தரமான 'நான்' என்று ஒன்று இருப்பதாக நினைத்தவுடன் குழப்பம் உண்டாகத் துவங்குகிறது. மாற்றம் இந்தக் கருத்தின் மீது தாக்கம் உண்டு செய்யும். நீங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றீர்கள். இப்போது தான் இந்த 'நான்' பதினைந்து வயதுச் சிறுவன் என்ற எண்ணத்தோடு இருந்தது. திடீரென்று பதினாறு வயதாகி விடுகிறது. பின் புதிய நான் (பதினாறு வயது சிறுவன் என்ற நான்) உருவாக வேண்டியிருக்கிறது. 'நான் பதினெட்டு வயதடைந்தவன்,' என்று பழக்கப் படுவதற்குள் இருபத்தி மூன்று வயதாகித் திருமணமும் முடிந்து விடுகிறது. இந்தப் புதிய 'நானை’ (23 வயதாகிய திருமணமான ‘நானை’) உருவாக்கும் முன்னரே முப்பது வயதாகி விவாகரத்தும் ஆகி விடுகிறது. ஒரு அடையாளத்தை நாம் திரும்பத் திரும்ப உருவாக்கப் பார்க்கிறோம். ஆனால் இது தவறான போக்கு. இந்த உடலிலோ, உணர்ச்சிகளிலோ மனத்திலோ நிலையான தன்மை ஏதும் இல்லை. அப்படி இருப்பதாக நினைத்தால் எப்போதும் ஒரு அழுத்தம் மனத்தில் இருக்கும். ஆனால் பௌத்தத் தத்துவத்தில் எண்ணும் போது அதாவது எல்லாம் ஒரு ஓட்டம், எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டது, அவற்றுக்கு அடையாளம் காண வேண்டாம் என்றால் பிரச்சனை இல்லை. அடையாளம் கொள்வதென்றால் என்ன? அடையாளம் இருப்பதென்றால் வெவ்வேறு காலக் கட்டத்தில் மாற்றம் அடையாத ஒன்று. எக்காலத்திலும் மாறாத ஒன்று.

ஆனால் இந்த ‘நான்’ என்று நிலையாக இருப்பதாக நினைப்பதிலிருந்து அப்படி ஏதும் இல்லை, எல்லாம் ஒரு ஓட்டம் தான் என்று நினைக்க ஒரு மாற்றம் தேவை. இதை எண்ணிப் பார்ப்பதால் மட்டுமே மாற்றம் கொண்டுவரமுடியாது. தொடர்ந்து நமது மனத்தைக் கவனிக்க வேண்டும். எப்பொதெல்லாம் ஒன்றின் மீது நாம் பற்றுக் கொள்கிறோமோ அப்போதெல்லாம் அந்தப் பற்று உண்டாவதை அறிய வேண்டும். நான் இது, நான் அது, இது என்னுடையது, என்னுடையது மறைந்துவிடுமோ? என்னுடையது காணாமல் போய்விட்டது. இந்த நான், எனது என்பதெல்லாம் நிலையான இயல்புகள் கொண்டவற்றின் மீது உள்ள உரைந்து போன கருத்துக்கள். ஆனால் எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதால் இந்த 'எனது', கட்டுப்பாடு' அல்லது 'சொந்தம்' போன்ற வார்த்தைகளையெல்லாம் நம்பினால் நீங்கள் தொடர்ந்து துக்கம் அனுபவிப்பது நிச்சயம். நீங்கள், 'உன்னால் எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாது, ஏனென்றால் சொந்தம் கொண்டாட எதுவும் நிலையாக இருப்பதில்லை. இருப்பதெல்லாம் சம்பவ ஓட்டங்கள் தான். அவை மாறுகின்றன, கட்டுப்படுத்த முடியாததை என்ன செய்ய? எனக்குப் பொருட்கள் தேவைப் படுகிறது,' என்று நினைக்கின்றீர்கள். ஆனால் அவற்றைப் பெற முடியாது. ஆகவே இப்படிச் சொந்தம் கொண்டாட நினைப்பதை விட்டு விடுங்கள். பின் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவற்றை விட்டு விடாமல் உலகுக்குக் கட்டளை இட நினைத்தால், உலகிடமிருந்து இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டால், உலகை ஆள நினைத்தால், உலகை நடத்த முற்பட்டால் துக்கம் அனுபவிப்பீர்கள். உலகைக் கட்டுப் படுத்தி அதை இயங்க வைக்க முயற்சிப்பதை விட்டு விட்டால் அது தானாக இயங்குவதை அறியலாம். உங்கள் காலணிக் கயிற்றைப் பிடிப்பதை விட்டு விட்டால் நடக்கும் போது தவறி விழுவதில்லை. நடப்பதெல்லாம் அழுத்தத்தின் முடிவே. புத்தர், 'சுற்றிலும் பாருங்கள், எல்லாம் மாறுகிறது. எதைப் பிடித்தாலும் நழுவிச் சென்று விடுகிறது. பிடிக்காத சூழ்நிலைமீது மனஸ்தாபம் கொள்கிறோம். ஆனால் பின் அந்தச் சூழ்நிலை மாறிவிடுகிறது.' ஆகவே கவலைப் படுவதில் என்ன பயன்?

இந்த விகாரையை நிர்வகித்த ஒருவர் இப்படிச் சுவாரசியமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். மக்கள் அவரிடம் வந்து தங்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கூறுவார்கள். அவர் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்.

பின், 'எல்லாம் மோசமாகவே நடக்கட்டும்!' என்பார்.

'என்ன இப்படிச் சொல்கிறீர்கள்!' என்று அவரிடம் வந்தவர்கள் அதிர்ச்சியுடன் கேட்பார்கள்.

'நீங்கள் இவ்வளவு கவலைப் பட்டது வீணாகக் கூடாதல்லவா? அதனால் தான்.' என்று பதில் கூறுவார் (சிரிப்பு).

நிலமை மோசமாகி விட்டால் என்ன? முன்கூட்டியே கவலைப் படுவதில் எந்தப் பயனும் இல்லை. நிலைமை சீரடைந்து விட்டால் தான் என்ன? இந்நிலையிலும், முன் கூட்டியே கவலைப் படுவதில் எந்தப் பயனும் இல்லை. ஆகவே கவலைப் படுவது பகுத்தறிவான போக்கு இல்லை. அது பயனற்றது. ஆனாலும் நாம் கவலை கொள்கிறோம். இது வாய்மையைத் தவறாகப் புரிந்து கொள்வதனாலேயே உண்டாகிறது. எண்ணப் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தக் கவலையை விட முடியும்.

A saw-horse. எனக்கு மூன்று வயதிருக்கும்போது யாரோ என் வீட்டருகில் கரடிகள் உலவுவதாகக் கூறினார்கள். எனக்குக் கரடிகள் ஆபத்தான மிருகங்கள் என்று ஏதோ ஒரு கதையில் படித்திருந்ததால் தெரிந்திருந்தது. அப்போது நாங்கள் வாழ்ந்தது வான்கூவர் நகரின் புறநகர்ப் பகுதியில். வீட்டின் பின்புறத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்திருந்த காலம். பொதுவாகப் பின்புறத்தைக் காட்டிக் கவனமாக இருக்கச் சொல்வார்கள். நான் அந்தத் திசையில் பார்த்தபோது ஒரு தச்சன் வேலைசெய்யும் மேஜை இருப்பதைக் கண்டேன். அது மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் அந்த வயதில் எனக்கு அது ஒரு உயிரினம் போலவே தோன்றியது. அது தான் கரடி என்றே நினைத்தேன். அந்தப் பக்கமாகப் பல நாட்கள் செல்லவே இல்லை. அந்தக் கரடி எனக்காகவே காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. நான் அந்தப் பக்கம் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அது என்னை எதிர் பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிந்தது. கரடி உன்னைச் சாப்பிட்டு விடும் என்று வேறு கூறியிருந்தார்கள். பார்ப்பதற்குக் கொடூரமான தோற்றம் கொண்ட கரடி, காத்துக் கொண்டே இருந்தது. பின் எப்படியோ நானே அது கரடி அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். மனத்தில் அந்தக் கருத்துத் தோன்றியவுடன் நான் அந்தத் தச்சன் மேஜைக்குச் சென்று அதன் மீது ஏறி அமர்ந்தும் பிரச்சனை ஏதும் எழவில்லை. எல்லாம் மனத்தில் உண்டாகும் ஒரு மாற்றம் தான். இல்லையா? அந்த மர மேசையைப் பற்றிக் கவலைப்பட்ட தெல்லாம் அது உண்மையில் என்ன என்பதை அறியாத வரை தான். ஆனால் அது கரடி என்று நினைத்திருக்கும் வரை அங்கு என்னால் போக முடியவில்லை. பின் யதார்த்தத்தை அறிந்து கொண்டதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றம் தொடர்ந்து பயிற்சி செய்து உண்மை நிலையை உங்களுக்கே திரும்பத் திரும்ப விளக்கிக் கொண்டால் தான் ஏற்படும். சித்தத்தைப் பயன் படுத்தினால் மட்டும் போதாது. நமது கல்விமுறையில் இப்படித்தான் கற்பிக்கின்றனர். தொடர்ந்து முடிவில்லா யோசனைகள். ஆனால் யோசித்தால் மட்டும் போதாது. அதற்குப் போதிய சக்தியில்லை. மேல் மட்டத்திலேயே இருப்பதால் ஒரு மாற்றம் கொண்டுவர முடிவதில்லை. இது ஒரு பயம் கொண்டவரைப் போல. உதாரணமாகச் சிலருக்குச் சிலந்திகளைக் கண்டால் பயம். சிலருக்கு குறுகிய இடங்களில் இருக்கப் பயம். அவருக்குத் தெரியும், தனக்குப் பயம் இருப்பது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயம் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அந்தப் பயம் நீடிக்கிறது. இந்த அளவில் உள்ள எண்ணங்களில் மாற்றத்தை உண்டாக்க முடியாது. ஆழமான அமைதியையும், மன ஒருமைப் பாட்டினையும் வளர்த்துக் கொண்டு பயிற்சி செய்தால் மட்டுமே தெளிவாகப் பார்க்கமுடியும். விபாஸனா என்ற வார்த்தையின் பொருள் தெளிவாகப் பார்த்தல் என்பதுதான். தெளிவாகச் சிந்தித்தல் என்பது இல்லை. தெளிவாகக் காணுதல். இவ்வாறு பார்க்க வேண்டுமென்றால் மன நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைக்க வேண்டும். மனத்தைச் சாந்தப் படுத்த வேண்டும். இதற்குத் தரப்படும் உவமானம்: பானையைச் செய்வதற்கு முன் அந்தக் களிமண்ணோடு வேலை பார்க்க வேண்டும். அதை நன்கு பிசைய வேண்டும். பெரும்பாலானோர் மனத்தைச் சரியாகப் பயன்படுத்த முடிவதில்லை. ஆகவே சற்று நிதானப் பயிற்சிகள் செய்து மனதை சமநிலைக்குக் கொண்டுவருவது முன்கூட்டியே செய்ய வேண்டிய வேலை. அதன் பின் மனத்தை நீங்கள் விரும்பும் திசையில் செலுத்தலாம்.

Here is a favourite question that comes up again and again. Please explain the Buddhist view on non-self.

Non-self is a good way to put it. The Buddha just says, "Look, this body is not a thing. It is just a process. There is no permanent identity in there . You are not the 3 yr old, you are not the ten year old. You are not the 30 year old or the 50 year old. There is a stream of events which we call a body. Don't get that confused with any permanent identity. Nothing permanent lasts throughout your life. There is nothing in your life that is enduring that is substantial and unchanging. Everything - your feelings, your decision making process, your consciousness, your memory, you body are rivers of transient phenomenon. Nothing about that is you. That is why whenever you have an identity going you will be bound to run into confusion because it will be under pressure all the time, because change is pressuring it. You are changing. You just get used to being fifteen and you are sixteen and you have to work out a whole new kind of tactic. Get used to being 18 and now you are 23 and you are married. Just start getting that together and now you are 30 and divorced. You are trying to restablish an indentity. The problem is you are making a mistake. There isn't no solid aspect to the body or the mind or feelings or anything about it. When you operate under the mode that there is, then you are always running into stress. And when you operate under the realistic mode that everything is a flow, a change, don't identify. What does indentifying mean? Identity means that something is identical in two moments of time. Identity is something that has indentity in time. That is how we will define it.

It is a kind of shift. You can't just get this intellectually. You just have to practice this catching yourself fixing on things, identifying things, fixing yourself in time saying I am this, I am that. This is mine. Mine is threatented. Mine is gone. The concept of I, me and mine are frozen concepts about things that have enduring indetities. Since nothing does, if you really believe this word 'mine', or 'control' or 'ownership' you are always going to be under stress. When you say, 'Wait a second, you can't own things because there are no things. There are just flows and events. And they change and are subject to change in very complex ways and you can't control.' What should I do but I want things. But you can't have things. So you better get over it and then you will be happy. But as long as you don't get over it and try to command the world, demand the world, boss the world, run the world - you are always under stress . When you give up running the world, lo and behold, it runs itself. You let go of your shoe laces, lo and behold, you don't fall after all. All that happens is tension goes away. The Buddha says, 'Look around. Everything just changes. Grasp anything and it slips away from you. Get upset on some bad situation and then it goes away on you.' And then what was all that worrying about?

One of our stewards had this saying. It is good. People would be telling him about their problems. I have this problem and that. He would listen to them and then he'd say 'Well, hope everything goes bad for you.' '

'What! Why? How come you say that?'

'Well I wouldn't want you do all this worrying for nothing.' (laughter).

What if it does go bad? Then you would have done all the worrying for nothing. What if it goes right ? Then you would have done all the worrying for nothing. So worry is the irrational attitude. Worry is irrational. it is useless. However we do it. it is grounded in a whole way of perceiving reality and it is only by that cognitive shift that it drops.

When I was 3 years old, some how somebody told me there were bears around. I knew there was something very dangerous about bears. That was when it was just becoming the suburbs of Vancouver at that time. There was a lot of forest at the back. They generally pointed out at the back window. I looked out there and there was a saw horse out there. Wooden saw horse. I realized it was alive. I thought it was a bear. And I wouldn't go out there for days. It was waiting for me out there. Everytime I looked out, it was still waiting. And this thing could eat you. Thy told me bears could eat you and this thing just looked horrible to look at. It was waiting there. Waiting, waiting, waiting. And then finally I don't know how I worked it out, I realized that was not a bear out there. The moment that happened I can just go out there and sit on that thing. But that was a congnitive shift, isn't it. All the worries and concerns over the saw horse until I understood what it was But as long as I thought that saw horse was a bear, I wouldn't go out there. It is a shift in you perception of reality.

That can only happen by continous practice and re-explaining reality to yourself again and again. Not only by intellectual process which is usualy the only way we are taught in the educational process. Endless proliferation of thought . But it has no power. It tends to stay at the surface so you can't (make the shift). It is like a person with a phobia. I know I have a phobia. I know it is irrational but I still am afraid. That level of thinking just doesn't tend to undo things. It is only by the practice of deepening stillness and samdhi and practicing these slowing down and clarifying processes that would give more power to those seeing processes. We don't call it thinking. Remember the word is vipassana for insight. That means clear seeing, not thinking. Clearly seeing. In order to see you have to first of all slow the processes of mind down and make it workable. They always compare it to before you can make a pot you have to work the clay. Most people when they use their mental processes it is too unwieldly. So developing some samadhi eveness and steadiness of mind is about working the mind. Making it malleable, so that you can shape it the way you want it to go.

* * * * * *