திஸ்ஸ மெத்திய்ய மாணவ பூச்சா Tissa-metteyya-manava-puccha
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 5.2
திஸ்ஸ மெத்திய்ய மாணவ பூச்சா சூத்திரம்: திஸ்ஸ மெத்திய்யரின் கேள்விகள்
Tissa-metteyya-manava-puccha: Tissa-metteyya's Questions
Translated from the Pali by: Thanissaro Bhikkhu
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு
* * *
[திஸ்ஸ மெத்திய்யர்]
இந்த உலகில் திருப்தியுடன் வாழ்பவர் யார்?
யாரிடம் மனசஞ்சலம் இருப்பதில்லை?
எப்படிப்பட்ட சிந்தனையாளர் இரண்டு
எல்லைகளையும் (பக்கங்களையும்) தெரிந்தவராக,
அவற்றின் மத்தியில் நிலைத்திருப்பதில்லை?
மாமனிதர் என்று நீங்கள் கூறுவது யாரை?
இங்கு உள்ளவர் தையற்காரியை - வேட்கையைக் - கடந்து சென்றவர் யார்?
[Tissa-metteyya:]
Who
here in the world
is contented?
Who
has no agitations?
What thinker
knowing both sides,
doesn't adhere in between?
Whom
do you call a great person?
Who here
has gone past
the seamstress: craving.
[புத்தர்:]
சிற்றின்பங்களுக்கு மத்தியில், புனித வாழ்வை மேற்கொள்பவர்,
எப்போதும் கடைப்பிடியுடன், வேட்கை இல்லாமல்;
விவேகத்துடன் கட்டவிழ்த்த (சுமையை இறக்கிய) துறவி:
அவருக்கு மனசஞ்சலம் இல்லை.
அவர், சிந்தனையாளர் - இரண்டு எல்லைகளையும் தெரிந்தவர் -
அவற்றின் மத்தியில் நிலைத்திருப்பதில்லை.
அவரையே மாமனிதர் என்கிறேன்.
தையற்காரியைக் - வேட்கையைக் - கடந்து சென்றவர் அவர்.
[The Buddha:]
He who
in the midst of sensualities,
follows the holy life,
always mindful, craving-free;
the monk who is
— through fathoming things —
Unbound:
he has no agitations. He,
the thinker
knowing both sides,
doesn't adhere in between. He
I call a great person. He
here has gone past
the seamstress: craving.
* * *
விளக்கம்:
Note:
அங்குத்தாரா நிகாயத்தில் (AN 6.61) மூத்த துறவிகள் பலர் இந்த வரிகளில் வரும் "இரண்டு எல்லைகள்" மற்றும் "மத்தியில்" என்ற வார்த்தைகளுக்கான பொருளைப் பற்றி விவாதிக்கின்றனர். அவர்களுள் ஆறு பேர் கீழ்கண்ட வெவ்வேறு விளக்கங்களைத் தருகின்றனர்:
1. ஊறு ஒரு எல்லை. ஊற்றின் தோற்றம் மறு எல்லை. ஊற்றின் முடிவு இடைநிலை. (ஊறு (Phassa – Contact) என்றால் என்ன? ஊறு ஆறு வகைப்படும்: கண்ணினால் உண்டாகும் ஊறு, காதினால் உண்டாகும் ஊறு, மூக்கினால் உண்டாகும் ஊறு, நாக்கினால் உண்டாகும் ஊறு, உடலினால் உண்டாகும் ஊறு, சித்தத்தினால் உண்டாகும் ஊறு. இவையே அந்த ஆறு ஊறுகளாகும். புலன், புலன் பொருள், அறி நிலை: இவை மூன்றின் காரணமாக ஊறு உண்டாகிறது)
2. கடந்த காலம் ஒரு எல்லை, எதிர்காலம் மறு எல்லை. நிகழ் காலம் மத்திய நிலை.
3. இன்பம் ஒரு எல்லை. துன்பம் மறு எல்லை. இன்ப துன்பமற்ற நுகர்ச்சி இடை நிலையாகும்.
4. அரு (அருவம் - மனம்) ஒரு எல்லை. உரு (உருவம் - உடல்) மறு எல்லை. உணர்வு (அறி நிலை) இடை நிலை.
5. வெளியில் உள்ள ஆறு புலன் பொருட்கள் (காட்சிகள், ஓசைகள், வாசனைகள், சுவைகள், பரிசங்கள், கருத்துக்கள்) ஒரு பக்கம், ஆறு புலன் உருப்புகள் (கண், காது, மூக்கு, நாக்கு, உடல், சித்தம்) மறு பக்கம். உணர்வு (அறி நிலை) இடை நிலை.
6. 'தான்' என்ற உணர்வு ஒரு பக்கம். 'தான்' என்ற உணர்வு தோன்றக் காரணம் மறுபக்கம், 'தான்' என்ற உணர்வின் முடிவு, இடை நிலை.
பின் இதைப் பற்றிப் புத்தரின் கருத்து கேட்கப் பட்டது. அவர் இந்தக் கருத்துக்கள் அனைத்துமே பொருத்தமானவையே என்று பாராட்டினார். ஆனால் தான் மனத்தில் நினைத்திருந்த பொருள் மேற்கூறிய முதல் விளக்கமே என்று தெளிவு படுத்தினார்.
AN 6.61 reports a discussion among several elder monks as to what is meant in this poem by "both sides" and "in between." Six of the elders express the following separate opinions:
Contact is the first side, the origination of contact the second side, and the cessation of contact is in between.
The past is the first side, the future the second, and the present is in between.
Pleasant feeling is the first side, painful feeling the second, and neither-pleasant-nor-painful feeling is in between.
Name (mental phenomena) is the first side, form (physical phenomena) the second, and consciousness is in between.
The six external sense media (sights, sounds, aromas, flavors, tactile sensations, ideas) are the first side, the six internal sense media (eye, ear, nose, tongue, body, intellect) the second side, and consciousness is in between.
Self-identity is the first side, the origination of self-identity the second, and the cessation of self-identity is in between.
The issue is then taken to the Buddha, who states that all six interpretations are well-spoken, but the interpretation he had in mind when speaking the poem was the first.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
©1994 Thanissaro Bhikkhu. See details English Source
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.