சிந்தனை

அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko

அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

தணிசாரோ பிக்கு

Compiled and Translated by

Thanissaro Bhikkhu

Contemplation

சிந்தனை

§ "Everything that happens to you has its causes. Once you contemplate it skillfully until you know its causes, you'll be able to get past it."

"வாழ்க்கையில் நடப்பவையெல்லாம் ஏதாவது காரணங்களினாலேயே நடைபெறுகின்றன. நடப்பனவற்றைத் திறமையோடு சிந்தித்தால் அவற்றிற்கான காரணங்களை அறிந்து கொள்வதோடு, பின் அவற்றைக் கடந்து அப்பாலும் சென்று விடலாம்."

§ "Our defilements have made us suffer enough already. Now it's our turn to make them suffer."

"நமது மாசுகள் நம்மைத் துன்புறுத்தியது போதும். இப்போது நாம் அவற்றைத் துன்புறுத்தும் சந்தர்ப்பம் வந்து விட்டது."

§ There are two kinds of people: those who like to think and those who don't. When people who don't like to think start meditating, you have to force them to contemplate things. If you don't force them, they'll simply get stuck like a stump in concentration, and won't get anywhere at all. As for those who like to think, they really have to use force to get their minds to settle down. But once they've mastered concentration, you don't have to force them to contemplate. Whatever strikes the mind, they're sure to contemplate it right away."

இரண்டு வகையான மனிதர்களே உள்ளனர்: ஒரு சாரார் சிந்திக்க விரும்புவோர் மற்றொரு சாரார் சிந்திக்க விரும்பாதோர். சிந்திக்க விரும்பாதோர் தியானம் செய்யத் துவங்கும் போது அவர்களைச் சிந்திக்க வைக்கக் கட்டாயப் படுத்த வேண்டி இருக்கும். கட்டாயப் படுத்தவில்லை என்றால் மன ஒருமைப்பாட்டின் மீது பற்றுக் கொண்டு அதிலேயே மூழ்கி விடுவர். அதற்கு மேல் முன்னேற அவர்களால் முடிவதில்லை. சிந்திப்போரைப் பொருத்தவரையில் அவர்களது மனத்தை அமைதிப் படுத்த வன்மையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் மன ஒருமைப் பாட்டை அவர்கள் திறமையாக வளர்த்துக் கொண்ட பின் அவர்களை மேலும் சிந்திக்க வைக்கக் கட்டாயப் படுத்த வேண்டியதில்லை. அவர்கள் மனத்தில் எது தோன்றினாலும் அதைப் பற்றி உடனே பிரதிபலிப்பார்கள்."

(மன ஒருமைப்பாடு அடைந்த பின் சிந்தனை வளர்ந்தால் தான் ஞானம் பெற முடியும்)

§ "The discernment that can let go of defilement is a special discernment, not ordinary discernment. It needs concentration as its basis if it's going to let go."

"மாசுகளை விட்டுவிடும் விவேகம் சாதாரண விவேகம் இல்லை. அது சிறந்த விவேகம். ஆனால் அதற்கு மன ஒருமைப்பாடு என்ற அடித்தலம் தேவைப்படுகிறது. அப்போது தான் மாசுகளை விட முடியும்."

§ "For insight to arise, you have to use your own strategies. You can't use other people's strategies and expect to get the same results they did."

"கடையுறுநோக்கு (மெய்யுணர்வு) எழவேண்டுமென்றால், நாம் நமது திறமைகளைப் பயன்படுத்த வேண்டும். மற்றவர் பயன்படுத்தும் வழிகளைப் பின்பற்றி, அவர்கள் பெற்ற விளைவுகளை நாம் அடைந்து விடலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது."

§ "When insights arise, don't try to remember them. If they're real insights, they'll stay with you. If you try to memorize them, they'll turn into labels and concepts, and will get in the way of new insights arising."

"மெய்யுணர்வு உண்டானால், அவற்றை நினைவில் வைத்திருக்க முயற்சிக்காதீர்கள். உண்மையான மெய்யுணர்வாக இருந்தால் அது உங்களிடமே தொடர்ந்து இருக்கும். அவற்றை மனனம் செய்ய நினைத்தால், அவை வெறும் கருத்துக்களாகி விடும். பின் புதிய மெய்யுணர்வுகள் உண்டாக அவை தடையாக இருக்கும்."

§ A meditator in Singapore once wrote a letter to Ajaan Fuang, describing how he applied the Buddha's teachings to everyday life: Whatever his mind focused on, he would try to see it as inconstant, stressful, and not self. Ajaan Fuang had me write a letter in response, saying, "Do things ever say that they're inconstant, stressful, and not self? They never say it, so don't go faulting them that way. Focus on what labels them, for that's where the fault lies."

சிங்கப்பூரில் வாழும் தியானம் செய்பவர் ஒருவர், புத்தரின் போதனைகளை அன்றாட வாழ்வில் அவர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று அஜான் ஃபுவாங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்: தனது மனத்தை எதன் மீது கவனம் செலுத்தினாலும் அது நிலையற்றது என்பதையும், துக்கம் உண்டாக்குபவை என்பதையும், சாரமில்லாதவை என்பதையும் கவனிப்பதாக எழுதியிருந்தார். அஜான் ஃபுவாங் என்னை அவருக்குப் பதில் எழுதச் சொன்னார். அவர் பதில், "பொருட்கள் எப்போதாவது தாம் நிலையற்றவை, துக்கம் விளைவிப்பவை, சாரமில்லாதவை என்று சொல்கின்றனவா? அவை எப்போதும் அப்படிச் சொன்னதில்லை. எனவே அவற்றில் குறை காண வேண்டாம். அவற்றை அப்படி நினைக்கத் தூண்டுவதைப் பற்றிச் சிந்தியுங்கள். அங்கு தான் குற்றம் இருக்கிறது."

§ "Even though your views may be right, if you cling to them you're wrong."

"உங்கள் கருத்துக்கள் சரியானவையாக இருந்தாலும் அவற்றொடு நீங்கள் பற்றுக் கொண்டு விட்டால் நீங்கள் தவறான கருத்துக் கொண்டவராகின்றீர்கள்."

§ The wife of a Navy lieutenant was meditating at home when suddenly she had an urge to give Ajaan Fuang a good tongue-lashing. No matter how much she tried to drive the thought out of her mind, she couldn't. Several days later she went to ask his forgiveness, and he told her, "The mind can think good thoughts, so why can't it think bad thoughts? Whatever it's thinking, just watch it — but if the thoughts are bad, make sure you don't act in line with them."

கடற்படை அதிகாரியின் மனைவி ஒருவர் தன் வீட்டில் தியானம் செய்து கொண்டிருக்கும் போது அஜான் ஃபுவாங்கை வசை பாட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உண்டானது. அந்த எண்ணத்தை எவ்வளவு தான் மனத்திலிருந்து விரட்ட முயன்றும் அவரால் அது முடியவில்லை. பல நாட்கள் கழித்து அவர் அஜான் ஃபுவாங்கிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர், "மனம் நல்ல எண்ணங்களை நினைக்க முடியும் போது ஏன் அதனால் தீய எண்ணங்களை நினைக்க முடியாது? அது எதை நினைத்தாலும் அதைக் கவனியுங்கள் - ஆனால் எண்ணங்கள் தீயவையாக இருந்தால், அதன் படி செயற்படாமல் இருந்தால் போதும்."

§ A high school student once said that in practicing meditation, if his mind thought good thoughts he'd let them pass, but if it thought bad thoughts he'd put a stop to them right away. Ajaan Fuang told him, "Just watch them. See who it is that's thinking good thoughts and bad thoughts. The good thoughts and bad thoughts will disappear on their own, because they fall under the Three Characteristics of inconstancy, stress, and not-self."

மேல்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் தியானம் செய்யும் போது நல்ல எண்ணங்கள் எழுந்தால் அவற்றைத் தங்க விடுவதாகவும், தீய எண்ணங்கள் எழுந்தால் அவற்றை உடனே நீக்க முயற்சி செய்வதாகவும் கூறினார். அஜான் ஃபுவாங் அவனிடம், "நீ அவற்றைக் கவனிக்க வேண்டும். யார் நல்ல எண்ணங்களையும் தீய எண்ணங்களையும் நினைப்பது? நல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் தாமாகவே தோன்றி மறைந்து விடும். ஏனென்றால் அவை மூன்று இயல்புகளான நிலையாமை, துக்கம் மற்றும் சாரமின்மை ஆகியவற்றைக் கொண்டவை."

§ "If the mind is going to think, let it think, but don't fall for its thoughts."

"மனம் யோசிக்க வேண்டுமென்றால் யோசிக்கட்டும். ஆனால் அந்த எண்ணங்கள் உங்களை வீழ்த்த விட்டுவிட வேண்டாம்."

§ "The defilements are like duckweed. You have to keep pushing them out of the way so that you can see the clear water underneath. If you don't keep pushing them aside, they'll move in to cover the water again — but at least you know that the water underneath them is clear."

"மாசுகள் நீர்ப்பாசிகளைப் போல. தெளிவான நீரைப் பார்க்க வேண்டுமானால் அவற்றை ஒதுக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றை ஒதுக்குவதை நிறுத்தி விட்டால் அவை உடனே நீரை மூடிவிடும் - ஆனால் நீர்ப்பாசிகளுக்கடியில் உள்ள நீர், தெளிவாக இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?"

§ A woman complained to Ajaan Fuang that she had been meditating for a long time but still couldn't cut any of her defilements. He laughed and said, "You don't have to cut them. Do you think you can? The defilements were part and parcel of this world long before you came. You were the one who came looking for them. Whether or not you come, they exist on their own. And who says that they're defilements? Have they ever told you their names? They simply go their own way. So try to get acquainted with them. See both their good and their bad sides."

அஜான் ஃபுவாங்கிடம் ஒரு பெண் தான் நீண்ட காலம் தியானம் செய்தும் எந்த மாசுகளையும் களைய முடியவில்லை என்று முறையிட்டார். அவர் சிரித்துக் கொண்டே சொன்னது, "அவற்றைக் களைய வேண்டியதில்லை. அவற்றைக் களைய முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்த உலகில் நீங்கள் தோன்றுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே மாசுகள் தோன்றிவிட்டன. நீங்கள் தான் அவற்றைத் தேடி வந்தீர்கள். நீங்கள் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவை தாமாகவே இருப்பவை. மேலும் அவை மாசுகள் என்று யார் உங்களிடம் சொன்னது? தங்கள் பெயரை அவை உங்களிடம் எப்போதாவது சொல்லியதுண்டா? அவை தங்கள் இயல்புகளுக் கேற்பத் தான் நடந்து கொள்ளும். எனவே அவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவற்றின் நல்ல இயல்புகளையும், தீய இயல்புகளையும் கவனியுங்கள்."

§ One day Ajaan Fuang was explaining to a new student how to watch the arising and passing away of the defilements. It so happened that she was a veteran reader of many Dhamma books, so she offered her opinion: "Instead of just looking at them this way, shouldn't I try to uproot them?"

"If all you can think of is uprooting them," he replied, "their fruit just might fall on the ground and start growing again."

ஒரு நாள் அஜான் ஃபுவாங் ஒரு புதிய மாணவிக்கு மாசுகள் தோன்றி மறைவதை எப்படிக் கவனிப்பது என்று கற்பித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் பல பௌத்த நூல்களைப் படித்தவராதலால் தனது கருத்தை அவர் தெரிவித்தார், "இவ்வாறு அவற்றை கவனித்துக் கொண்டிருப்பதை விட அவற்றை வேரோடு பிடுங்கி எறிவது நல்லதில்லையா?"

"அவற்றை வேரோடு பிடுங்குவதைப் பற்றி மட்டுமே நீ நினைத்துக் கொண்டிருந்தால், பிடுங்கும்போது அவற்றில் உள்ள பழங்கள் மண்ணில் விழுந்து மீண்டும் புதிய செடிகள் வளர்ந்து விடலாம் அல்லவா."

§ One of Ajaan Fuang's students told him that she had reached the point in her meditation where she felt indifferent to everything she encountered. He warned her, "Sure, you can be indifferent as long as you don't run into anything that goes straight to the heart."

அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர், தான் தியானம் செய்வதன் காரணமாக எதைச் சந்தித்தாலும் அதன் மீது தனக்கு அக்கறை இல்லாத நிலைக்கு வந்துவிட்டதாகக் கூறினார். அஜான் ஃபுவாங், "உள்ளத்தைத் துளைக்கும் விஷயம் ஏதேனும் வராதவரை அக்கறை இல்லாமல் இருக்கலாம்," என்று மாணவியை எச்சரித்தார்.

§ "Everyone lives with suffering, suffering, suffering, but they don't comprehend suffering, which is why they can't free themselves from it."

"எல்லோருமே துக்கம், துக்கம், துக்கம் என்று துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்கள் துக்கத்தை அறிந்து கொள்வதில்லை. அதனால் தான் துக்கத்திடமிருந்து அவர்களால் விடுபட முடிவதில்லை."

§ "Those who know don't suffer. Those who don't know are the ones who suffer. There's suffering in every life — as long as there are the five khandhas, there has to be suffering — but if you really come to know, you can live in ease."

"அறிந்தவர்கள் துக்கப் படுவதில்லை. அறியாதவர்களே துக்கம் அனுபவிக்கின்றனர். ஒவ்வொரு வாழ்விலும் துக்கம் உள்ளது - ஐந்து கந்தங்கள் உள்ள வரை துக்கம் இருக்கத்தான் செய்யும் - ஆனால் அவற்றை அறிந்த பின்பு, நாம் அமைதியாக வாழலாம்."

§ "When you're sick you have a golden opportunity. You can contemplate the pains that arise from your illness. Don't simply lie there. Meditate at the same time. Contemplate the behavior of the pains as they arise. Don't let the mind fall in with them."

"நோய்வாய்ப் பட்டிருக்கும் போது உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. நோயிலிருந்து உண்டாகும் இன்னல்களை எண்ணிப் பார்க்கலாம். சும்மா படுத்துக் கிடக்காமல், அந்தச் சமயத்தில் தியானமும் செய்ய வேண்டும். இன்னல்களின் இயல்புகளை நினைத்துப் பாருங்கள். அவற்றோடு சேர்ந்து மனமும் இன்னல்பட விட்டுவிடக் கூடாது."

§ One of Ajaan Fuang's students was taking cobalt treatments for cancer until she developed an allergic reaction to the anesthesia. The doctors were at a loss as to what to do, so she suggested that they try the treatment without the anesthesia. At first they were reluctant to do so, but when she assured them that she could use the power of her meditation to withstand the pain, they finally agreed to give it a try.

After the treatment Ajaan Fuang visited her at the hospital. She told him that she had been able to concentrate her mind so as to endure the pain, but it had left her exhausted. He advised her: "You can use the power of concentration to fight off pain, but it squanders your energy. You have to approach the pain with discernment, to see that it's not you. It's not yours. Your awareness is one thing, the pain is something separate. When you can see it in this way, things will be easier."

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவருக்கு, அந்த நோய்க்கு ஒளிக்கதிர் (radiation) சிகிச்சை செய்யும்போது உண்டாகும் வலியைப் பொறுத்துக் கொள்ள, மயக்க மருந்து தரப்பட்டது. ஆனால் அந்த மயக்க மருந்து அவர் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மயக்க மருந்து தராமல் சிகிச்சை செய்தால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாதென்பதால், மருத்துவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போது மாணவி மயக்க மருந்தில்லாமலே சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கிய மருத்துவர்கள், அவர் தியானப் பயிற்சியின் துணையோடு வலியைச் சமாளிக்கப் போவதாகக் கூறிய பின் சம்மதித்தனர்.

சிகிச்சை முடிந்ததும், அஜான் ஃபுவாங் மாணவியைப் பார்க்கச் சென்றார். மாணவி, தான் மனத்தை ஒருமுகப்படுத்தி வலியைப் பொறுத்துக் கொண்டதாகவும் ஆனால் அது அவரை மிகவும் சோர்வடையச் செய்து விட்டதாகவும் கூறினார். அவர் தந்த அறிவுரை: "மன ஒருமுகப்படுத்தல் வலியை பொறுத்துக் கொள்ளச் செய்யும் என்றாலும், அது சோர்வடையவும் செய்யும். அந்த வலியை விவேகத்துடன் அணுக வேண்டும். அது நீங்கள் அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். அது உங்களதும் அல்ல. அறிநிலையில் இருப்பது ஒன்று, வலியோ வேறொன்று. இவ்வாறு கவனிக்க முடிந்தால், சற்றுச் சுலபமாக இருக்கும்."

§ Several months later the same woman went to hear a famous Bangkok monk give a sermon on the cycle of life, death, and rebirth as an ocean of suffering. It had a profound effect on her, and afterwards she went to visit Ajaan Fuang and told him about it. As she was speaking, the image of the ocean struck her as so overwhelming that tears came to her eyes, so he said, "Now that you know it's an ocean, why don't you just cross over to the other side?" That was enough to stop her tears.

சில மாதங்களுக்குப் பின் அதே மாணவி ஒரு புகழ் பெற்ற பாங்காக் நகரத் துறவியின் போதனையைக் கேட்கச் சென்றார். அப்போதனையில் வாழ்வு, மரணம், மறுபிறப்பென்ற சம்சாரச் சக்கரம் ஒரு துயரக் கடலென்று போதிக்கப் பட்டது. இந்தப் போதனையைக் கேட்டுப் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்மாணவி அஜான் ஃபுவாங்கிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த துயர்க் கடலைப் பற்றி நினைக்கும் போதே அவர் கண்களில் நீர் பொங்கியது. அஜான் ஃபுவாங், "இப்போது உனக்கு அது கடலெனத் தெரிகின்றது அல்லவா? ஏன் மறுகரையைச் சென்றடைய முயற்சிக்கக் கூடாது?" அதைக் கேட்ட பின் மாணவியின் கண்ணீர் நின்றுவிட்டது.

§ "The Buddha didn't teach us to cure our pains. He taught us to comprehend them."

"புத்தர் நமக்கு, நமது இன்னல்களைக் குணமாக்கக் கற்பிக்கவில்லை. அவற்றை அறிந்து கொள்ளவே கற்பித்தார்."

§ "It's true that illness can be an obstacle to your meditation, but if you're intelligent enough to take illness as your teacher, you'll see that the body is a nest of illnesses, and that you shouldn't cling to it as yours. You can then uproot the attachments that are concerned about the body — because nothing in it is yours at all. It's simply a tool for you to use to make good karma and pay off your old bad karma debts as you are able."

"இன்னல்கள் நமது தியானத்திற்குத் தடையாக இருக்கும் என்பது உண்மை தான், ஆனால் நாம் சாதுர்யமாகச் செயற்பட்டு அந்த இன்னல்களையே நமது ஆசானாக ஆக்கி விட்டால், நமது உடல் ஒரு இன்னல்களின் கூடு என்பதையும், அவற்றோடு பற்றுக் கொள்ளக் கூடாது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். உடல் சம்பந்தமான பற்றுகளை யெல்லாம் வேறோடு பிடிங்கி விடலாம் - ஏனென்றால் அவற்றில் எதுவுமே உங்களுக்குச் சொந்தமானதில்லை. நல்ல கன்மச் செயல் செய்வதற்காகவும், பழைய தீய கன்மங்களின் விளைவுகளைக் களையவும் அது (உடல்) ஒரு பயனுல்ல கருவி மட்டுமே."

§ "When you focus on seeing pain and stress, you have to get to the subtle levels — to the point where you see that stress arises the instant you open your eyes and see things."

"வலியையும், அழுத்தங்களையும், இன்னல்களையும் நோக்கிக் கவனம் செலுத்தும்போது நுட்பமான கவனம் இருக்க வேண்டும். கண்களைத் திறந்து ஒரு காட்சியைப் பார்க்கும்போதே இன்னல்கள் பிறப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்."

§ Advice for a woman who had to live with one illness after another: "Use your mindfulness to contemplate the body until you can visualize it as bones falling down in a heap, and you can set them on fire until there's nothing left. Then ask yourself: Is that your self? Then why does it make you suffer and feel pain? Is there any 'you' in there? Keep looking until you reach the true core of the Dhamma — until there's nothing of yours at all. The mind will then see itself as it really is, and let go of its own accord."

அடுத்தடுத்து வந்த நோய்களோடு வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு அஜான் ஃபுவாங் தந்த அறிவுரை: "மனக் கவனத்தைப் பயன்படுத்தி உடலைப் பிரதிபலிக்க வேண்டும். எலும்புகளெல்லாம் ஒரு குவியலாக விழுவதை மனக் கண்ணால் பார்த்து அதற்குத் தீயிட்டு ஒன்றுமில்லாமல் போவதைக் கவனிக்க வேண்டும். பின் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: அது நீங்களா? பின் ஏன் உங்களுக்கு வலியையும் துன்பத்தையும் உண்டாக்குகிறது? அவற்றில் 'நீங்கள்' என்று எதேனும் இருக்கிறதா? அறத்தின் சாரத்தை அறியும்வரை கவனித்துக் கொண்டே இருங்கள் - 'உங்களை' எங்கும் காணாத வரையில் கவனித்துக் கொண்டிருங்கள். பின் மனம் தனது உண்மையான உருவத்தை விளங்கிக் கொண்டு, பிடிப்பை விட்டு விடும்."

§ "Tell yourself: The reason I still feel suffering is because I still have an 'I'."

"உங்களிடமே நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்: நான் இன்னமும் துக்கம் அனுபவிப்பது என்னிடம் இன்னமும் 'நான்' இருப்பதால் தான்."

§ "The day will arrive when death comes to you, forcing you to let go of everything of every sort. That's why you should practice letting go well in advance so that you can be good at it. Otherwise — let me tell you — it's going to be difficult when the time comes."

"ஒருநாள் மரணம் உங்களைச் சந்திக்க வரும். அப்போது நீங்கள் கட்டாயமாக எல்லாவற்றையும் விட்டு விட வேண்டி நேரும். அதனாலேயே நாம் அவற்றை முன்கூட்டியே விட்டுவிடப் பயிற்சி செய்கிறோம். பயிற்சி செய்வதால் (பற்றுகளை) விட்டு விடுவது சுலபமாகிறது. பயிற்சி செய்யவில்லை யென்றால் - நான் உங்களிடம் கூறுகிறேன் - நேரம் வரும் போது அவற்றை விட்டு விடுவது எளிதாக இருக்காது."

§ "You don't have to be afraid of death. You'd do better to be afraid of birth."

"மரணத்திற்கு அஞ்சத் தேவையில்லை. ஆனால் பிறப்பிற்குத்தான் அஞ்ச வேண்டும்."

§ "When you die don't get caught up on the symptoms of dying.

"மரணம் நேரிடும் போது, மரணத்தின் அறிகுறிகளின் மீது கவனம் செலுத்த வேண்டாம்."

§ "Lift the mind above what it knows."

"தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும், மனத்தை மேலே உயர்த்துங்கள்."

§ "Whatever dies, let it die, but don't let the heart die."

"எது இறந்தாலும் இறந்து போகட்டும். ஆனால் உள்ளத்தை இழந்துவிட வேண்டாம்."

* * * * * *