புத்தரின் வார்த்தைகள் 32-59

புத்தரின் வார்த்தைகள்

புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை

ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா

தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA

Daily Readings from the Buddhist Scriptures

By Bhante S. Dhammika

பிப்ரவரி 32-59 February

32. இலாபத்தாலும், கௌரவத்தாலும், புகழாலும் வரும் அனுகூலங்களுக்காகப் புனிதமான வாழ்க்கை வாழ்வதில்லை; நல்லொழுக்கத்தால் வரும் அனுகூலங்களுக்காகவும் புனிதமான வாழ்க்கை வாழ்வதில்லை; மனத்தை ஒருநிலைப் படுத்தியதால் வரும் அனுகூலங்களுக்காகவும் புனிதமான வாழ்க்கை வாழ்வதில்லை; அறிவாலும், ஞானக்கண்ணோட்டத்தாலும் அடையும் அனுகூலங்களுக்காகவும் அவ்வாழ்க்கை வாழப்படுவதில்லை.

ஆனால், அந்த அசைக்க முடியாத மனத்தின் சுதந்திரம், அதுவே புனிதமான வாழ்வின் குறிக்கோள்; அதுவே நோக்கம்; அதுவே உச்சநிலை.

The holy life is not lived for the advantages that come from gains, honours or fame; it is not lived for the advantages that come from morality; it is not lived for the advantages that come from concentration, nor is it lived for the advantages that come from knowledge and vision. But that which is unshakable freedom of mind - that is the aim of the holy life, that is the goal, that is it’s culmination. M.I,197

33. தீய எண்ணங்கொண்டவர்களுடனும், கோபக்காரர்களுடனும், பொறாமையுள்ளம் படைத்தவர்களுடனும், மற்றவர் துன்பங்கண்டு மகிழ்ச்சியடைபவர்களுடனும் புத்திசாலிகள் நட்புக் கொள்ளக்கூடாது. உண்மையில் கெட்டவர்களுடன் நட்புக் கொள்வது தீமையே பயக்கும்.

நன்றியுள்ளவர்கள், நல்லவர்கள், அறிவாளிகள், அதிகம் கற்றவர்கள் ஆகியவர்களுடன் தான் புத்திசாலிகள் நட்புக் கொள்ள வேண்டும். உண்மையில் நல்லவர் தொடர்பு ஆசீர்வதிக்கப் பட்ட ஒன்றாகும்.

One who is clever should make no friends

Amongst the malicious, the angry, the envious

Or those who delight in the misfortunes of others.

Truly, contact with the bad is evil.

One who is clever should make friends

With those with faith, the pleasant, the wise,

And those with great learning.

Truly, contact with the good is blessed.

Th.1018-1019

34. ஒருவன் உணவை மற்றவர்க்குக் கொடுத்தால் அவன் ஐந்து பொருள்களைக் கொடுத்தவனாகிறான். எந்த ஐந்து? அவன் உயிர், அழகு, மகிழ்ச்சி, வலிமை, அறிவுக் கூர்மை ஆகியவற்றைக் கொடுக்கிறான். இவற்றைக் கொடுப்பதால் அவன் உயிர், அழகு, மகிழ்ச்சி, வலிமை, அறிவுக்கூர்மை ஆகியவற்றின் குணங்களில் இங்கும், பிறகும் பங்கெடுத்துக் கொள்கிறான்.

In giving food, one gives five things. What five? One gives life, beauty, happiness, strength and intelligence. And in giving these things, one partakes in the qualities of life, beauty, happiness, strength and intelligence, both here and hereafter. A.III,42

35. உள்ளஞ் சம்பந்தபட்டவற்றில், இப்போதுதான் ஆரம்ப நிலையில் கற்றுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, இன்னும் மனத்தை அடக்கியாள முடியாத ஒருவனுக்கு ஆனால் தொல்லைகளில் இருந்து அமைதி பெற விரும்பும் அவனுக்கு, மனதை நெருங்கிக் கவனிப்பதைப் போன்ற உதவிகரமான ஒன்று வேறெதுவுமே கிடையாது.

Concerning those internal things, one who is a learner and who has not yet come to mastery of mind, but who dwells aspiring for freedom from bonds, I know of no other thing so helpful as giving close attention to the mind. It.9

36. மனம் மாசுபட்டால், உயிர் வாழ்வன மாசுபடும்; மனத்தைத் தூய்மைப்படுத்துவதால் உயிர்வாழ்வனவும் தூய்மையடைகின்றன.

By defilement of mind, beings are defiled; by purification of mind, beings are purified. S.III,151

37. உள்ளேயும் வெளியேயும் மூச்சு விடும்பொழுது மனக் கவனம் செய்யும் தியான முறையை விருத்தி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அது மாபெரும் பலன்களையும், அனுகூலங்களையும் அளிக்கும். அதை எப்படி வளர்ப்பது? அதை ஏன் பெரிதாகப் பேசுகிறோம்? அதனால் என்ன மாபெரும் பலன், மாபெரும் அனுகூலம் ?

ஒருவர் ஒரு காட்டில் தனிமையான இடத்திற்குச் சென்று, ஒரு மரத்தினடியிலோ, வெட்டவெளியிலோ கால்மேல் கால்போட்டு, முதுகை நேராக நிமிர்த்தி அமர்ந்து மனத்தை ஒரு நிலைப்படுத்த ஆரம்பிக்கிறார். கவனத்துடன் மூச்சை உள்ளே இழுக்கிறார். வெளியே விடுகிறார். மூச்சை நெடுநேரம் உள்ளே இழுக்கும் போது 'நான் நீண்ட மூச்சை உள்ளே இழுக்கிறேன்' என்பதை அவர் உணர்கிறார். மூச்சை நீண்ட நேரம் வெளியே விடும் போது 'நான் நீண்ட நேரம் மூச்சை வெளியே விடுகிறேன்' என்பதை உணர்கிறார். விரைவாக மூச்சை இழுக்கும் போது 'நான் விரைவாக மூச்சை இழுக்கிறேன்' என்பதையும், விரைவாக மூச்சை வெளியே விடும் போது 'நான் விரைவாக மூச்சை வெளியே விடுகிறேன்' என்பதையும் அவர் உணர்கிறார். தனக்குப் பயிற்சியளித்துக் கொள்ளும் ஒருவர், 'மூச்சை உள்ளே இழுக்கும் போது என் முழு உடலையும் உணர்கிறேன்' என்றும் 'மூச்சை வெளியே விடும் போது என் முழு உடலையும் உணர்கிறேன்' என்றும் கருதுகிறார். 'மூச்சை உள்ளே இழுக்கும் போது என் உடற்செயல்களை அமைதியாக்குகிறேன்' என்றும் 'மூச்சை வெளியே விடும் போது என் உடற்செயல்களை அமைதியாக்குகிறேன்' என்றும் உணர்கிறார். இவ்வாறு பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

Develop the meditation called mindfulness of in-and-out breathing because it is of great fruit, of great advantage. And how is mindfulness of in-and-out breathing developed, how is it made much of, how is it of great fruit, great advantage? Concerning this, one who has gone to the forest, to the root of a tree or to an empty place, sits down cross-legged with the back straight, establishing mindfulness in front of him. Mindfully one breathes in, mindfully one breathes out. Breathing in a long breath one knows: ‘I am breathing in a long breath;’ breathing out a long breath one knows: ‘I am breathing out a long breath.’ Breathing in a short breath one knows: ‘I am breathing in a short breath;’ breathing out a short breath one knows: ‘I am breathing out a short breath.’ One trains oneself, thinking: ‘Breathing in I shall experience the whole body.’ One trains oneself, thinking: ‘Breathing out I shall experience the whole body.’ One trains oneself, thinking: ‘Breathing in I will tranquillize bodily activities.’ One trains oneself, thinking: ‘Breathing out I will tranquillize bodily activities.’ M.I,425

38. சரியான நேரத்தில் பேசுதல், உண்மையைப் பேசுதல், அமைதியாகப் பேசுதல், குறிக்கோளைப் பற்றிப் பேசுதல், அன்போடு பேசுதல் ஆகிய ஐந்து குறியீடுகளுடன் பேசிய பேச்சே சரியாகப் பேசிய பேச்சாகவும், குறையற்ற, பழியற்ற, அறிஞர்களால் குறைகூறாப் பேச்சாகவும் அமையும்

If a word has five marks it is well-spoken, not ill-spoken, not blameworthy or condemned by the wise. It is spoken at the right time, it is spoken in truth, it is spoken gently, it is spoken about goal and it is spoken with love. A.III,243-4

39. எந்தக்குடும்பங்களில் தாய் தந்தையர் வணங்கப் படுகின்றனரோ, அங்கு அவர்கள் பிரம்மா என்றும், பழம்பெரும் ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட்டு, பழம்பெரும் கடவுளருடன் நிலை நிறுத்தப்படுகின்றனர். எந்த வீட்டில் தாயும் தந்தையும் வணங்கப் படுகின்றனரோ, அவர்கள் உண்மையிலேயே காணிக்கை பெறத் தகுதியானவர்கள். 'பிரம்மா', 'பழம்பெரும் ஆசிரியர்கள்', பழம்பெரும் கடவுளர்கள்', 'காணிக்கை பெறத் தகுதியானவர்கள்' போன்ற சொற்கள் தாய் தந்தையர்க்கே உரியது. ஏனென்றால், தாய் தந்தையர் குழந்தைகளுக்காகவே அதிகம் பாடுபடுகின்றனர் - அவர்களை வளர்த்து, உணவளித்து, இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைப்பது பெற்றோர்களே.

Those families where the mother and father are worshipped in the home are said to be like Brahma, like teachers of old, they are ranked with the ancient gods. Truly worthy of offerings are those families where the mother and father are worshipped in the home. ‘Brahma,’ ‘teachers of old,’ ‘teachers of old,’ ‘gods of old,’ and ‘worthy of offerings’ are terms for a mother and father. And why is this? Because a mother and father do much for their children - they bring them up, nourish them and introduce them to the world. A.II,70

40. புலனால் அடையும் மகிழ்ச்சி ஐவகைப்படும். அவை எவை?

கண்ணால் காணக்கிடைப்பவை, மகிழ்ச்சிகரமானவை, விரும்பக் கூடியவை, வசீகரமானவை, புலனுணர்வால் மகிழ்ச்சி தரக்கூடியவை, கவர்ச்சியானவை, காதுகளால் அறியக் கூடிய ஒலிகள், மூக்கால் நுகர்ந்து அனுபவிக்கக் கூடிய வாசனைகள், நாக்கால் அறியக் கூடிய சுவைகள், மெய்யால் உணரக்கூடிய ஸ்பரிச உணர்ச்சிகள். இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை, மகிழ்ச்சியானவை, விரும்பக் கூடியவை, புலன்களின் உணர்வால் ஏற்படும் இன்பத்திற்குத் தொடர்புடையவை, கவர்ச்சியானவை. இவையே புலனால் ஏற்படும் ஐவகை இன்பங்களாகும்.

இந்த ஐம்புலன்களால் ஏற்படும் மகிழ்ச்சியோ இன்பமோ அவற்றையே புலனுணர்வால் ஏற்படும் மகிழ்ச்சியெனக் கூறப்படுகிறது. இவை எல்லாம் சாதாரண மகிழ்ச்சி, சராசரி மனிதனின் மகிழ்ச்சி, ஓர் இழிவான மரியாதைக் குறைவான மகிழ்ச்சி . இது தொடரக் கூடாது, வளர்ந்து விடக் கூடாது, இதனை வலியுறுத்தக் கூடாது. இது ஓர் அஞ்சத்தக்க மகிழ்ச்சியென நான் கூறுவேன்.

There are these five strands of sense pleasure. What five? Material shapes cognizable with the eye, pleasant, liked, enticing, connected with sensual pleasures, alluring. Sounds cognizable with the ear, smells cognizable with the nose, tastes cognizable with the tongue, and touches cognizable with the body, all of them agreeable, pleasant, liked, enticing, connected with sensual pleasures, alluring. These are the five strands of sense pleasure.

Whatever happiness or joy arises as a result of these five strands of sense pleasure, that is called the happiness of sense of pleasure. It is a common happiness, a happiness of the average person, an ignoble happiness. It should not be pursued, developed or emphasized. It is a happiness to be feared, I say. M.I,454

41. உயர்ந்த எண்ணங்களை வளர்த்துக் கொள்ள விரும்பும் ஒருவன் ஐந்துவித ஒழுக்கங்களை அவ்வப்போது கற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஐந்து என்ன?

ஒருவன் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது பேராசை, பகைமை, மாயை, ஏமாற்றம் ஆகியவையுடன் கூடிய திறனற்ற தீய எண்ணங்கள் அவன் உள்ளத்தில் எழலாம். அப்பொழுது அவன் வேறு நுணுக்கமான வேலையைச் செய்யத் தொடங்க வேண்டும். அவன் மனம் செய்யும் தொழிலில் மூழ்கி விடுவதால் அவனுள் எழும் தீய எண்ணங்கள் குறைந்து விடும். அப்போது மனம் உறுதியாக நிற்கும்; அமைதியாகும். ஒரே திசையில் ஒருநிலைப் படுத்தப்படும். இது ஒரு தச்சனோ அவனது உதவியாளோ, ஒரு பெரிய மர ஆப்பை ஒரு சிறிய ஆப்பைக் கொண்டு வெளியே எடுப்பதற்கு ஒப்பாகும்.

செயல்திறமுள்ள வேலையொன்றைச் செய்து கொண்டிருக்கும்போதும் பேராசை, பகைமை, மாயை தொடர்புடைய செயல் திறனற்ற தீய எண்ணங்கள் எழலாம்; அப்போது இவையெல்லாம் அனுகூலமற்ற எண்ணங்களெனச் சிந்திக்க வேண்டும்; 'உண்மையிலேயே இவ்வெண்ணங்கள் செயல் திறனற்ற உபயோகமற்ற பழிமிக்க துன்பத்திற்கு இட்டுச்செல்லும் எண்ணங்கள்' என எண்ண வேண்டும். அப்படி நினைத்தால், அச்செயல் திறனற்ற, பயனற்ற எண்ணங்கள் மங்கிவிடும். பிறகு, மனம் உறுதியாக, அமைதியானதாக, ஒரே நினைவுடையதாக ஒரு நிலைப்படுத்தப்படும்.

இப்படி நினைப்பது எதற்கு ஒப்பானதென்றால் மிக அழகாக உடை உடுத்திக் கொண்ட ஓர் இளைஞனோ அல்லது இளம்பெண்ணோ, ஓர் இறந்து போன பாம்பின் பிணத்தையோ, நாயின் பிணத்தையோ, அல்லது மனிதப் பிணத்தையோ தன் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும்? அவர்களுக்கு வெறுப்பும் அருவருப்பும் உண்டாகும் அல்லவா?

மேலும் இவ்வெண்ணங்கள் செயல் திறனற்ற உபயோகமற்ற பழிமிக்க துன்பத்திற்கு இட்டுச்செல்லும் எண்ணங்கள் என எண்ணும் போதும் பேராசை, பகைமை, மாயை தொடர்புடைய செயல் திறனற்ற எண்ணங்கள் மீண்டும் தோன்றினால், அவற்றை மறந்துவிட வேண்டும்; அவற்றின் மீது கவனம் செலுத்தக் கூடாது. பிறகு, அப்பயனற்ற தீய எண்ணங்கள் மங்கிவிடும். உள்ளம் உறுதியாக அமைதியுடன் ஒரே நோக்கத்துடன் ஒருநிலைப் படுத்தப்படும். இச்செயல் தீயவற்றைக் காண விரும்பாது கண்களை மூடிக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

பேராசை, பகைமை, மாயை தொடர்புடைய பயனற்ற எண்ணங்களை மறக்க, தவிர்க்க நினைக்கும் போது அவை மீண்டும் தலை தூக்கினால், அவற்றைத் தானாக அடங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம் உள்ளம் உறுதியாக அமைதியுடன் ஒரே நோக்கத்துடன் ஒருநிலைப்படுத்தப்படும். இச்செயல் காரணமின்றி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் நிற்பதற்கும், காரணமின்றி நின்று கொண்டிருப்பவன் அமர்வதற்கும், காரணமின்றி அமர்ந்து கொண்டிருப்பவன் படுப்பதற்கும் சமமாகும். ஆக, அவன் சுறுசுறுப்பான நிலையிலிருந்து, சுறுசுறுப்புக் குறைந்த ஓய்வெடுக்கும் நிலைக்குச் செல்கிறான்.

ஆனால் இவ்வாறு செய்தும் பேராசை, பகைமை, மாயை தொடர்புடைய தீய திறனற்ற எண்ணங்கள் தலைத் தூக்கினால் என்ன செய்வது? அப்பொழுது பல்லைக் கடித்துக் கொண்டு நாக்கை மேல் அண்ணத்தின் மீது அழுத்திக் கொண்டு மனத்தை மனத்தாலேயே கட்டுப்படுத்தி , அடக்கித் தடுக்க வேண்டும். அப்போது அத்தீய, திறனற்ற எண்ணங்கள் மங்கி மனம் உறுதியாக அமைதியாக ஒருநிலைப்படுத்தப்படும். இது பலம் வாய்ந்த ஒரு மனிதன் பலமற்ற ஒருவனின் தலையையும், தோள்களையும் பற்றி அழுத்திக் கொண்டிருப்பதற்குச் சமமாகும்.

இப்படிச் செய்பவனை எண்ணவழிகளின் தலைவன் எனக் கூறலாம். நினைக்கவேண்டிய எண்ணங்களை நினைக்கிறான். தவிர்க்க வேண்டிய எண்ணங்களைத் தவிர்க்கிறான். இவன் பேராசையை அறுத்தவன். தொல்லைகளை அறுத்தவன். பெருமையை அடக்கித் துக்கத்திற்கு முடிவு கட்டுபவன்.

One who is intent on developing higher thought should attend to five things from time to time. What five? If, while attending to something, evil unskillful thoughts associated with greed, hatred and delusion should arise, then one should attend instead to something that is skillful. Then these evil unskillful thoughts will subside and the mind will be steady, calmed, one-pointed and concentrated. It is just as if a carpenter or his apprentice might knock out, drive out, draw out a large peg with a small one.

If, while attending to something that is skilled, evil unskillful thoughts associated with greed, hatred and delusion still arise, then one should ponder the disadvantages of those thoughts, thinking: ‘Truly, these thoughts are unskillful, blameworthy and conducive to suffering.’ Then those evil unskillful thoughts will subside and the mind will be steady, calm, one-pointed and concentrated. It is just as if a well-dressed young man or woman, on having the carcass of a snake, a dog or a human being hung around his or her neck would be repelled, ashamed and disgusted.

If, however, while pondering the disadvantages of these thoughts, evil unskilled thoughts associated with greed, hatred and delusion still arise, then one should forget about them, pay them no attention. Then those evil unskillful thoughts will subside and the mind will be steady, calm, one-pointed and concentrated. It is just as if a man with sight might shut his eyes or turn away in order to avoid seeing something.

But if, while trying to forget about and pay attention to those thoughts, evil unskillful thoughts associated with greed, hatred and delusion still arise, then one should allow them to settle. Then those evil unskillful thoughts will subside and the mind will be steady, calm, one-pointed and concentrated. It is just as if a man, finding no reason for running, walks; then finding no reason for walking, stands; then finding no reason for standing, sits down; then finding no reason for sitting, lies down. Thus he goes from a strenuous posture to a more relaxed one.

But if, while allowing those thoughts to settle, evil unskillful thoughts associated with greed, hatred and delusion still arise, then, with teeth clenched and tongue pressed against the palate one should restrain, subdue and suppress the mind with the mind. Then those evil unskillful thoughts will subside and the mind will be steady, calm, one-pointed and concentrated. It is just as if a strong man should hold down a weaker one by seizing his head and shoulders.

One who does these things is called a master of the pathways of thought. The thought he wants to think, he thinks; the thought he does not want to think, he does not think. He has cut off craving, removed the fetters, mastered pride and put an end to suffering. M.I,119

42. அன்பு நிறைந்த மனத்தோடு

ஒருவருக்கு எல்லா உலகின் மீதும்

கருணை இருக்கையில்; மேலும், கீழும், எதிர்பக்கத்திலும் அளவில்லா மற்றும் எல்லாப் பக்கமும் முடிவற்ற நட்புணர்வோடு மனம் பொங்கி

பூரண, முழு வளர்ச்சி பெற்றிருக்கையில்;

எதேனும் குறைப்பாடான செயலை நாம் செய்திருந்தால் அது நமது மனத்தில் நிலைத்திருக்காது.

When with a mind of love

One feels compassion for

All the world; above, below and across,

Unlimited and everywhere,

Filled with infinite kindness,

Complete and fully developed;

Any limited actions one may have done

Do not linger in the mind. Ja.II,61

43. கண்களால் ஒரு வடிவத்தைக் கண்ட பின், மூக்கினால் ஒரு மணத்தை முகர்ந்த பின், நாக்கினால் ஒரு சுவையைச் சுவைத்த பின், உடலால் ஓருணர்ச்சியை உணர்ந்த பின், அல்லது உள்ளத்தால் ஒன்றை நினைத்த பின் அதன் பொதுத் தோற்றத்தாலோ அல்லது விவரத்தாலோ ஒருவன் வயப்படுவதில்லை. அவன் தன் புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தாமலிருந்தால் கவர்ச்சி, வெறுப்பு மற்றும் தீய திறனற்ற எண்ணங்கள் மனதில் தோன்றும். அதனால், அவன் புலன்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப் படுத்துகிறான். இப்படிப் புலன்களைக் கட்டுப்படுத்தும் உயரிய கட்டுப்பாடு இருப்பதால், அவன் தனக்குள் அமைதியைக் குலைக்க முடியாத மகிழ்ச்சியை அடைகிறான்.

Having seen a shape with the eye, smelt a smell with the nose, savored a taste with the tongue, felt a touch with the body or cognized a thought with the mind, one is not entranced by its general appearance or its detail. For if one lived with the sense organs uncontrolled, attraction, repulsion and evil unskilled states of mind would grow. So, one controls the sense organs, and having this noble control of the sense organs, one experiences the happiness of being unruffled. M.I,346

44. தங்கத்தில் ஐந்து குறைபாடுகள் இருப்பதால், அதனை வளைக்க முடியாது. அதைக் கொண்டு ஒரு பொருளைச் செய்ய முடியாது. அது மின்னவும் மின்னாது, சுலபமாய் முறிந்துவிடும், சிறந்த வேலைப்பாட்டிற்கும் தகுதியற்றதாகிவிடுகிறது. எந்த ஐந்து? இரும்பு, செம்பு, தகரம்,ஈயம், வெள்ளி ஆகிய இவையே அந்த ஐந்தாம். தங்கம் இவ்வைந்திலிருந்தும் விடுபட்டால் அதனை வளைக்க முடியும், ஒரு அணியைச் செய்யப் பயன்படும், மின்னும், முறியாது, நல்ல வேலைப்பாட்டிற்கு உகந்ததாகும். இதனைக் கொண்டு தனி முத்திரை பதித்த மோதிரமோ, காதணியோ, கழுத்தணிகளோ, தங்கச் சங்கலியோ எவை வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைப் போலவே மனத்திலும் ஐந்து குறைபாடுகள் உள. அவை இருப்பதால் மனத்தை வளைக்க முடியவில்லை. செயற்படுத்த முடியவில்லை; பிரகாசிப்பதில்லை; முறிக்கக் கூடியதாயிருக்கிறது. மாசுகளை ஒழிக்க சரியான முறையில் ஒழுங்கு படவுமில்லை. எந்த ஐந்து?

புலன் ஆசை, கெட்ட எண்ணம், சோம்பலும் சோம்பேறித்தனமும், ஓய்வற்ற நிலையும் கவலையும், சந்தேகம் ஆகியவையே அவை. எப்பொழுது மனம் இக்குறைபாடுகளிலிருந்து விடுதலை பெறுகிறதோ, அப்போதே மனத்தை வளைக்க முடியும்; செயல்படும்; ஒளிதரும்; முறியாது; மாசுகளை ஒழிக்கச் சரியான முறையில் ஒழுகும். அதன்பின் ஒருவன் உளமார்ந்த அறிவை உணரத் தன் மனத்திற்குக் கட்டளையிடலாம். அப்படி உளமார்ந்த அறிவை உணர்ந்த ஒருவன் அது, எந்நிலையிலிருந்தாலும் அதனை நேராகக் காணலாம்.

There are these five debasements of gold, because of which gold is not pliable, not workable or glistening, but is brittle and not fit of perfect workmanship. What five? Iron, copper, tin, lead and silver. But when gold is free from these five debasements it becomes pliable, workable, glistening, not brittle and fit of perfect workmanship. Then whatever sort of ornament one wants, a signet ring, ear-ring, necklace or a gold chain, it can be used for that.

In the same way, there are these five debasements of the mind because of which the mind is not pliable, workable, or glistening, but is brittle and not rightly composed for the destruction of the defilements. What five? Sense desire, ill-will, sloth and laziness, restlessness and worry, and doubt. But when the mind is free from these five debasements it is pliable, workable, glistening, not brittle but rightly composed for the destruction of the defilements. Then one can direct the mind to the realization by psychic knowledge of whatever can be realized by psychic knowledge and can see it directly, whatever its range might be. A.III,16

45. சில துறவிகள் அவர்கட்குள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை கவனித்த புத்தர் அவர்களிடம் சொன்னார்: 'மிருகங்கள் ஒன்றுக்கொன்று மரியாதையுடனும், விட்டுக்கொடுத்தும், நற்பண்புடனும் இருக்கும் போது நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டும்.'

The Lord said to the monks who were quarrelling: “If animals can be courteous, deferential and polite to each other so should you be.” Vin.II,162

46. நாம் மூச்சு விடும்போதும், உள்ளிழுக்கும்போதும் மனத்தை ஒருமுகப்படுத்தும் பழக்கத்தை மேற்கொண்டு வளர்ச்சியடையச் செய்தால், அது அமைதியைத் தரும், அது மிகச் சிறந்தது, முழுமையானது. மேலும் அது மகிழ்ச்சிகரமாக வாழும் வழியுமாகும். அதுவுமின்றி, மனத்திலுதித்த திறனற்ற தீய எண்ணங்களை விரட்டி ஒரு நொடியில் மறையச் செய்துவிடும். இது எப்படியென்றால், கோடைக்காலத்தின் கடைசி மாதத்தில் தூசும் குப்பைகளும் பறந்து கொண்டிருக்கும் போது, எப்படி திடீரென மழை பெய்து ஒரு நொடியில் தூசையும், குப்பைகளையும் அடக்கிவிடுகிறதோ அதற்குச் சமமாகும்.

This concentration on in-and-out breathing, if cultivated and developed, is something peaceful and excellent, something perfect in itself and a pleasant way of living also.

More than that, it dispels evil thoughts that have arisen and makes them vanish in a moment.

It is just as when, in the last month of the hot season, the dust and dirt fly up and suddenly a great shower of rain lays it and makes it settle in a moment. S.V,321

47. ஒரு நல்ல மனிதன் ஒரு குடும்பத்திலே மறு பிறவி எடுப்பானேயானால், அது பலருக்கும் நன்மையளிக்கும்; நலம் பயக்கும். மகிழ்ச்சியளிக்கும்; அவன் பெற்றோர்கள், அவன் மனைவி, குழந்தைகள், அவனுடைய வேலைகாரர்கள், தொழிலாளர்கள், அவனுடைய நண்பர்கள், கூட்டாளிகள், துறவிகள், அறவோர், ஆகியோர்க்கும் நன்மையுண்டாகும்; நலமே விளையும்; மகிழ்ச்சியளிக்கும்.

When a good person is reborn into a family, it is for the welfare, the happiness and the benefit of many - for that person’s parents, their spouse and children, their servants and workers, and their friends and companions. It is also for the welfare, the happiness and the benefit of monks and brahmans. A.III,46

48. நகுலபிதா என்னும் ஒர் இல்வாழ்க்கை நடத்துபவனும் நகுலமாதா என்னும் அவன் மனைவியும் அண்ணலிடம் வந்து, 'அண்ணலே நான் சிறுவனாக இருக்கும் போதே எனக்குத் திருமணமாகி என் மனைவி என் இல்லத்திற்கு வந்துவிட்டாள். நான் எதையும் உணராத வயது. இந்நாள் வரை நான் அவளுக்கு எதிராக எண்ணத்தாலோ உடலாலோ எச்செயலையும் எல்லை மீறிச் செய்ததில்லை. நாங்களிருவரும் ஒன்றாகவே வாழ விரும்புகிறோம். இப்பிறவியில் மட்டும் இல்லை, அடுத்த பிறவியிலும் கணவன் மனைவியாகவே வாழ விரும்புகிறோம்' என்றார்.

நகுலமாதாவும், 'அண்ணலே நானும் சிறுமியாக ஒன்றும் அறியாதவளாக இருந்த போது என் கணவனின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அவரும் அப்போது சிறுவனாகவே இருந்தார். அவருக்கெதிராக மனதாலும், உடலாலும் எல்லைமீறி எச்செயலையும் நான் செய்ததில்லை. அண்ணலே நாங்களிருவரும் ஒன்றாகவே வாழ விரும்புகிறோம். இப்பிறவியில் மட்டுமின்றி, அடுத்த பிறவியிலும் நாங்கள் கணவன் மனைவியாகவே வாழ விரும்புகிறோம்' என்றாள்.

அப்பொழுது அண்ணல் கூறினார். 'கணவன் மனைவி இருவரும் இப்பிறவியிலும் மறு பிறவியிலும் கூடி வாழ விரும்பினால், அவர்கள் இருவரும் ஒருவர்கொருவர் தூய்மையாகப் பொருந்தி வாழ்ந்து, ஒழுக்கத்திலும் இணைந்து, இரக்க குணத்திலும் இணைந்து, அறிவிலும் ஒருமித்து இணைந்து வாழ்ந்தால், அவர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் கணவன் மனைவியாகவே பிறந்து வாழ்வார்!'

The householder Nakulapita and his wife Nakulamata came to see the Lord and having sat down, Nakulapita said: “Lord, since my wife was brought home to me when I was a mere boy, she being a mere girl, I have not been unfaithful to her even in thought, much less in body. Lord we desire to behold each other, not just in this life, but in the next life also.”

Then Nakulamata said: “Lord, since I was brought to my husband’s house when I was a mere girl, he being a mere boy, I have not been unfaithful to him even in thought, much less in body. Lord, we desire to behold each other, not just in this life, but in the next life also.”

At this, the Lord said: “If both husband and wife desire to behold each other in both this life and the next life too, and both are equal in faith, equal in virtue, equal in generosity and equal in wisdom, then they will behold each other in this life and the next life also.” A.II,61

49. இறந்தகால நிகழ்கால எதிர்கால ஆசையை அடிப்படையாகக் கொண்டவைபற்றி மனத்தால் நினைவுகூர்ந்து இலயித்துப் போவதும் உண்டு. அப்படி நினைப்பதால் ஆசை உருவாக்கப்படுகிறது. ஆசைப்படுவதால் ஒருவன் அவற்றுடன் பிணைக்கப்படுகிறான். அதனால் மனம் நிறைந்த பேராசையையே நான் பிணைப்பு எனக் கூறுகிறேன்.

One remembers and turns over in the mind thoughts about things based on desire in the past, present and future. As one does so, desire is generated, and being desirous, one is fettered by those things. And a mind full of lust is what I call a fetter. A.I,264

50. செல்வத்தால் விளையும் அனுகூலமற்ற தன்மைகள் ஐந்துள. அவை எவை? செல்வத்திற்கு நெருப்பால், வெள்ளத்தால், அரசர்களால், திருடர்களால், பாசமற்ற சந்ததியரால் ஆபத்து உண்டு.

செல்வத்தால் ஐந்து நன்மைகளும் உண்டு. அவை எவை? செல்வத்தின் உதவியால் ஒருவன் தன்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம்; மனைவியை, குழந்தைகளை, வேலைக்காரர்களை, தொழிலாளர்களை மகிழ்விக்கலாம்; நண்பர்களை, நெருங்கியவர்களை மகிழ்ச்சியுறச் செய்யலாம்; உயர்ந்த எண்ணத்துடன், எதிர்கால மகிழ்ச்சியையும் மேன்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் மகிழ்ச்சியான நிலையைத் தருவதற்குத் துறவிகளுக்கும், அறவோர்களுக்கும் தானம் செய்யலாம்.

There are these five disadvantages of wealth. What five? Wealth is in danger of fire, flood, kings, robbers and unloved heirs. Then, there are these five advantages of wealth. What five? With the help of wealth one can make oneself happy, one’s parents happy, one’s spouse, children, servants, and workers happy, and one’s friends and companions happy. And to monks and brahmins one can make offerings with lofty aim, connected with a happy future, resulting in happiness, leading to heaven. A.III,259

51. சிஹா அண்ணலைக் கேட்டார்: 'அண்ணலே, தாராள மனப்பான்மையின் பயனைக் காண இயலுமா?'

அண்ணல் கூறினார், 'ஆம் தாராள மனப்பான்மையின் பயனைக் காண இயலும். தாராள மனப்பான்மையுடன் கொடுக்கும் ஒருவரைப் பலர் விரும்புவர். பலருக்கும் அவர் விருப்பமுடையவர் ஆகிறார். இச்செயலால் தாராள மனப்பான்மையின் பயனைக் காணலாம். நல்லவர்களும் அறிஞர்களும் அவரைப் பின்பற்றுவர். இதன் மூலம் தாராள மனப்பான்மையின் பயனைக் காணலாம். அவரைப் பற்றிய புகழ் பரவுகிறது. அவர் எந்தச் சமுகத்தில் நுழைந்தாலும், உயர்குடி மக்கள் சார்ந்த சமுதாயமாக இருக்கட்டும் அல்லது, அறவோர்களாக இருக்கட்டும், இல்வாழ்வோராக இருக்கட்டும் அல்லது துறவிகளாகவே இருக்கட்டும், அவர் நம்பிக்கையுடன் அவர்களிடையே நுழைவார். அவர் துன்பப் படுத்தப் படுவதும் இல்லை. இது கொடைத் தன்மையில் காணக் கூடிய பயனாகும். இறுதியாக அந்தத் தாராள மனப்பான்மையுடன் அளிப்பவர் இறந்த பின் சொர்க்கத்தில் மறுபடியும் பிறக்கிறார். இது எதிர்காலத்தில் காணப்படும் பயனாகும்.'

Siha asked the Lord: “Is it possible, Lord, to see the results of generosity?” And the Lord said: “Yes, it is possible to see the results of generosity. The giver, the generous one, is liked and dear to many. This is a result of generosity that is observable. Good and wise people follow the generous person. This is a result of generosity that is observable. The generous person earns a good reputation. This also is a result of generosity that is observable. Once again, in whatever company he enters, be it nobles, brahmins, householders or monks, the generous person enters with confidence and without trouble. This is a result of giving that is observable. And finally, the giver, the generous person, is reborn in heaven after death. This is a result of generosity that can only be seen hereafter.” A.III,39

52. வாருங்கள்! புலன் உணர்ச்சிகளின் கதவுகளைப் பாதுகாத்தபடி வாழுங்கள். விழிப்புடைய மனத்துடன் கவனமுடைய மனத்தை, கவனிக்கப்பட்ட மனத்தைக் கொண்டால் அது எழுச்சியையும் ஈர்ப்பையும் உடையதாக இருக்கும்.

Come, live with the doors of the senses guarded, watchfully mindful, carefully mindful with the ways of the mind well-watched, possessed of a mind that is awake and observing. A.III,138

53. பரத்வாச குலத்தைச் சேர்ந்த அக்கசோக என்னும் அந்தணன் தங்கள் குலத்தலைவன் சித்தார்த்த கௌதமரின் சங்கத்தில் சேர்ந்துவிட்டான் என்பதை உணர்ந்து கோபத்துடனும், வெறுப்புடனும் அண்ணலிடம் சென்று வசைமாரி பொழிந்தான். அவன் முரட்டுத்தனமான, கடினமான வார்த்தைகளால் திட்டி முடித்த பிறகு, அண்ணல் கேட்டார்.

'அந்தணா, நண்பர்களும், நெருங்கியவர்களும் உறவினர்களும் உன்னிடம் விருந்தினர்களாக வந்தால் அவர்களை வரவேற்பதுண்டா?'

'ஆம், கோதமா, சில சமயங்களில் வரவேற்பதுண்டு.'

'அவர்களுக்குக் கடினமான மற்றும் மிருதுவான உணவுகளைத் தயாரித்து வழங்கி ஓய்வும் கொடுப்பதுண்டா?'

'ஆம், கோதமா, சில சமயங்களில் நான் செய்வதுண்டு.'

'நீ வழங்கியவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவை யாருக்குச் சொந்தமாகும்?'

'அவை எனக்குச் சொந்தமாகும்.'

'இங்கும் அதே நிலைதான், அந்தணா! எந்த வார்த்தைகளால் என்னை வசைபாடினாயோ , இழித்துரைத்தாயோ, கடுமொழி பகர்ந்தாயோ அம்மொழிகளால் உன்னை நான் திருப்பித் தாக்கவில்லை. அதாவது அம்மொழிகளை நான் உன்னிடமிருந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அவை உன்னுடையவை அவை உனக்குச் சொந்தமானவை. ஒருவன் மற்றவனை வசைபாடிய போது அவன் திரும்பி வசைபாடி, இழித்துரைக்கும் போது அவன் மற்றவனை இழித்துரைத்து, கடினமொழி கூறியபோது அவன் திருப்பிக் கடினமொழி கூறினால், அவை வீட்டுக்காரனும் விருந்தினனும் கலந்துரையாடி உண்டு மகிழ்வதற்கு ஒப்பாகும். அந்தணா! நாமிருவரும் அப்படி உண்ணவில்லை, கருத்தைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஆதலால், அவை உன்னுடையவை; அவை உனக்குச் சொந்தமானவை.'

Akkosaka of the Bharadvaja Brahmin clan came to know that the leader of the clan had joined the Sangha of the monk Gotama. Angry and displeased, he went to where the Lord was and reviled and abused him with rude, harsh words. When he had finished, the Lord said: “What do you think, brahmin? Do you receive visits from friends and acquaintances, kith and kin and other guests?”

“Yes, Gotama, sometimes I do.”

“And do you prepare for them food both hard and soft and give them rest?”

“Yes, Gotama, sometimes I do.”

“And if they do not accept these things from you, whose do these things become?”

“They become mine.”

“It is the same here, brahmin. That with which you revile, scold and abuse me, who does not revile, scold or abuse you, that I do not accept from you. It is yours, brahmin, it belongs to you. One who reviles when reviled, who scolds when scolded, who abuses when abused - it is as if a host and a visitor dined together and made good. We, brahmin, have not dined together nor have we made good. It is yours, brahmin. It belongs to you.” S.I,161-2

54. புலனுணர்வால் ஏற்படும் ஆசை ஒரு தடையாகும். அத்தடை உள்ளத்தை முழுவதும் மறைத்து அறிவை மங்கச் செய்கிறது. பகைமை, சோம்பேறித்தனம், செயலற்ற தன்மை, அமைதியற்ற நிலை, கவலை, சந்தேகம் ஆகிய அனைத்தும் தடைகளே! இவ்விடையூறுகள் உள்ளத்தை முழுதும் மறைத்து அறிவைப் பலகீனப்படுத்துகின்றன. உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து வளர்ந்த அறிவைப் பலகீனப்படுத்தும் இத்தடைகளைக் கைவிட்டு விட்டால், தவிர்த்துவிட்டால், அறிவைப் பலப்படுத்தித் தன் நன்மையையும் உணர்ந்து, பிறர் நன்மையையும் உணர்ந்து, இருவர் நன்மையையும் உணர்ந்து செல்வந்தர்களுக்குப் பொருத்தமான அறிவையும் காட்சியையும் பெற்று, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட நிலைக்குச் செல்லலாமென்பது திண்ணம்.

Sense desire is an obstruction and a hindrance which enshrouds the mind and weakens wisdom. Ill-will, sloth and torpor, restlessness and worry and doubt are all obstructions and hindrances which enshroud the mind and weaken wisdom. Surely it is possible that one, after abandoning these obstructions and hindrances which grow in and up over the mind and weaken wisdom, being strong in wisdom, should know his own good, the good of others, the good of both, and attain that knowledge and vision befitting the Noble Ones and transcending human states. A.III,63

55. ஆதரவில்லாது வைக்கும் பானை தலைகீழாகக் கவிழ்ந்துவிடும். ஆனால், தகுந்த ஆதரவுடன் வைக்கும் பானை கவிழாது. அதைப்போலவே ஆதரவற்ற மனம் எளிதில் கவிழ்ந்து விடும். ஆதரவுள்ள மனமோ கவிழ்வதென்பது சிரமமே. மனத்திற்கு ஆதரவென்றால் அது என்ன? அவை தான் அட்டாங்க மார்க்கமென்னும் எட்டு உயர்ந்த வழிகளாம். அவையாவன, நற் சாட்சி, நற் சிந்தனை, நல் வாய்மை, நற் செயல், நல் வாழ்க்கை, நன் முயற்சி, நன் மனக் கவனம், நன் மன ஒருமைப்பாடு .

Just as a pot without support is easily upset while one with support is difficult to upset, in the same way, the mind without support is easily upset and the mind with support is difficult to upset. And what is the support of the mind? It is the Noble Eightfold Path: Perfect View, Perfect Thought, Perfect Speech, Perfect Action, Perfect Livelihood, Perfect Effort, Perfect Mindfulness and Perfect Concentration. S.V,21

56. ஒரு துணி கறை படிந்து அழுக்காக இருக்கும்போது அதைப் பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு வண்ணச் சாயங்களில் தோய்த்தால் அத்துணியில் சரியாகச் சாயம் பிடிக்காது. ஏன்? ஏனென்றால் அது கறை படிந்த துணி. அதைப்போலவே தூய்மையற்ற மனம் உள்ளோர் ஒரு தீவினையைத் தான் எதிர்பார்க்கலாம்.

ஒரு தூய்மையான துணியைப் பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு வண்ணச் சாயங்களில் தோய்த்தால் சரியாகச் சாயம் பிடித்துக் கொள்ளும். அது ஏன்? ஏனென்றால் துணி தூய்மையாக இருப்பதால் சாயம் சரியாகப் பிடித்துக் கொள்கிறது. அதைப்போலவே உள்ளம் எப்போது தூய்மையாக இருக்கிறதோ அப்போது நல்வினையை/ஊழை எதிர்பார்க்கலாம்.

When a cloth that is stained and dirty cloth is dipped in green, yellow, red or crimson dye, it will not be properly dyed. And why? Because it is not clean. In the same way, a bad destiny can be expected when the mind is stained. When a cloth that is quite clean and is dipped in green, yellow, red or crimson dye, it will be properly dyed. And why? Because it is clean. In the same way, a good destiny may be expected when the mind is pure. M.I,36

57. 'நல்வழி வாழ்க்கை', 'மேதகு வாழ்க்கை', 'ததாகதரின் வாழ்க்கைமுறை!' என்று எவனொருவன் மேற்கண்ட வாக்கியங்களைச் சரியாகப் பயன்படுத்துகிறானோ, அவன் மனக் கவனத்துடன் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் செயலினால் ஏற்படும் மன ஒருமைப்பாட்டினை விவரிக்கவே அப்படிக் கூறுகிறான்.

One who would rightly use the terms ‘noble way of life,’ ‘sublime state,’ ‘the Tathagata’s way of life’ would do so to describe the intent concentration on in-and-out breathing.

S.V,326

58. 'தீமை வராது எனக்' கெனவே

தெளிவற்று எண்ண வேண்டாம்.

துளித் துளியாக விழும் நீரே

பானையை நிரப்பிவிடும்.

அதே போல் சிறிது சிறிதாக

முட்டால் தீமையால் நிரப்பப் படுவான்.

'நன்மை வராது எனக்'கெனவே

மதியின்றி எண்ண வேண்டாம்.

துளித் துளியாக விழுந்த நீரினால்

பானை நிரம்பியது போலவே,

சிறிது சிறிதாகச் சேரும் நன்மையே

அறிஞனை நன்மையால் நிரப்பிவிடும்.

Do not think lightly of evil, saying:

‘It will not come to me.’

A drop at a time is the water pot filled.

Likewise, little by little

The fool is filled with evil.

Do not think lightly of good, saying:

‘It will not come to me.’

A drop at a time is the water pot filled.

Likewise, little by little

The wise one is filled with good.

Dhp.121-122

59. செல்வம் போன்றவற்றை இழந்துவிட்டால் அவை ஒன்றும் பெரிய இழப்பல்ல. ஆனால் அறிவை இழந்து விட்டால் அது பேரிழப்பாகும்.

செல்வம் போன்றவற்றை அடைந்துவிட்டால் அதுஒன்றும் அவ்வளவு முக்கியத்துவமுடையதல்ல. அறிவைப் பெறுவதே மிக முக்கியத்துவம் வாய்ந்தசெயலாகும்.

Of little importance is the loss of such things as wealth. But a terrible thing it is to lose wisdom. Of little importance is the gaining of such things as wealth. Great is the importance of gaining wisdom. A.I,15