பிங்கிய-மாணவ-பூச்சா Pingiya-manava-puccha

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 5.16

பிங்கிய-மாணவ-பூச்சா: பிங்கியரின் கேள்வி

Pingiya-manava-puccha: Pingiya's Question

Translated from the Pali by: John D. Ireland

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜான் D. அயர்லாந்து

* * *

போற்றுதற்குரிய பிங்கியர்:

"நான் வயதாகி வலிமை இழந்தவன். இளமையின் அழகும் மறைந்துவிட்டது. கண் பார்வையும் குன்றி விட்டது, காதும் சரியாகக் கேட்பதில்லை. குழப்பமான நிலையில் மரணமுற விரும்பவில்லை. எனக்குத் தம்மத்தைக் கற்பியுங்கள். அதை அறிந்து பிறப்பையும், மூப்பையும் கைவிட்டு விடுகிறேன்." [1]

The Venerable Pingiya:

"I am old and feeble, the comeliness of youth has vanished. My sight is weak and I am hard of hearing. I do not wish to perish whilst still confused. Teach me the Dhamma by understanding which I may abandon birth and decay." [1]

அண்ணல்:

"விவேகமற்ற மனிதர் தங்கள் உடலின் காரணமாக வருந்தித் துன்புறுவதைக் கண்டு, பிங்கியரே, நீங்கள் விவேத்துடனும், உடல் மீது பற்றில்லாமலும் இருந்தால் மறு பிறப்பெடுக்க மாட்டீர்."

The Lord:

"Seeing heedless people afflicted and suffering through their bodies, Pingiya, you should be heedful and renounce body so as to not come again to birth."

போற்றுதற்கிரிய பிங்கியர்:

"பத்து திசைகளிலும் - வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற நாற்றிசையும், அவற்றின் கோணத்திசைகள் நான்கும், மேல், கீழ் ஆகிய- உலகில் நீங்கள் காணாதது, கேட்காதது, உணராதது, அறியாதது எதுவும் இல்லை. எனவே தம்மத்தைப் போதியுங்கள். அதை அறிந்து நான் பிறப்பையும் மூப்பையும் கைவிட்டு விடுகிறேன்.

The Venerable Pingiya:

"In the ten directions — the four quarters, four between, and those above and below — there is nothing in the world not seen, heard, sensed or understood by you. Teach me the Dhamma by understanding which I may abandon birth and decay."

அண்ணல்:

"வேட்கையில் சிக்கிய மனிதரைக் கண்டு, பிங்கியரே, அவர்கள் முதுமையினால் நோயுற்றுத் துன்புருவதை உணர்ந்து, நீங்கள் விவேகத்துடன் வேட்கையை விட்டு விட்டால் மறுபிறப்பெடுக்கமாட்டீர்."

The Lord:

"Seeing men caught in craving, Pingiya, tormented and afflicted by old age, you should be heedful and renounce craving so as to not come again to birth."

* * *

விளக்கம்:

Note:

1. Jara: decay, decrepitude, old age.

ஜரா: அழிவு, முதுமை

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1983 Buddhist Publication Society See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.