உடல் Body

Body

உடல்

11

If the body could talk, it would be telling us all day long, "You’re not my owner, you know." Actually it’s telling it to us all the time, but it’s Dhamma language, so we’re unable to understand it.

பேச முடிந்தால் உடல் நம்மிடம் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும், "நீ என் சொந்தக்காரன் இல்லை, தெரியுமா?" என்று. உண்மையில் அது என்னேரமும் நமக்கு இதைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. ‘தரும' மொழியில் சொல்வதால் நமக்குத்தான் அது விளங்குவதில்லை.

12

Conditions don’t belong to us. They follow their own natural course. We can’t do anything about the way the body is. We can beautify it a little, make it look attractive and clean for a while, like the young girls who paint their lips and let their nails grow long, but when old age arrives, everyone is in the same boat. That is the way the body is. We can’t make it any other way. But, what we can improve and beautify is the mind.

நிலைமைகள் நமக்குச் சொந்தம் இல்லை. அவைகள் தங்களின் இயல்பான செயல் முறைகளைப் பின்பற்றுகின்றன. உடல் இருக்கும் நிலையை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது. இளம் பெண்கள் தங்கள் உதடுகளுக்குச் சாயம் பூசிக்கொள்வதும் நகங்களை வளர்ப்பதும் போல, கொஞ்சம் அழகு படுத்தலாம், கொஞ்சம் கவர்ச்சி யூட்டலாம், சிறிது நேரம் சுத்தமாக வைத்துக்கொள்ளளாம். ஆனால் முதுமை எய்தும் போது எல்லோரும் ஒரே படகில் தான் பயணிக்கிறோம். வேறு எப்படியும் மாற்ற முடியாது. மாறாக நாம் என்ன செய்யமுடியும் என்றால், நமது மனதை மேம்படுத்தி அழகுறச் செய்ய முடியும்.

13

If our body really belonged to us, it would obey our commands. If we say, "Don’t get old," Or "I forbid you to get sick" does it obey us? No! It takes no notice. We only rent this "house", not own it. If we think it does belong to us, we will suffer when we have to leave it. But in reality, there is no such thing as a permanent self, nothing unchanging or solid that we can hold on to.

உடல் நமக்குச் சொந்தம் என்றால், நமது கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். ஆனால் "வயதாகாதே!" என்றோ "நோய் வாய்ப்படாதே!" என்றோ சொன்னால் கேட்கிறதா என்ன? இல்லையே! நமது சொல்லைக் கவனிப்பதே இல்லையே! இந்த 'வீட்டில்' வாடகைக்குத்தான் இருக்கிறோம். இது நமது சொந்த வீடு அல்ல. சொந்தம் என்று நினைத்தால், அதை விட்டுச் செல்ல வேண்டிய நிலையில் துக்கம் தான் அனுபவிப்போம். உண்மையில், நிலையான 'நான்' என்று ஒன்றும் இல்லை. மாறாததாகவும் பிடிப்பதற்குக் கெட்டியானதாகவும் எதுவுமே இல்லை.