சார்பில் தோற்றம்

சார்பில் தோற்றம் முகப்பு Dependent Origination Home

படச்ச சமுப்பாத

சார்பிற்றோற்றம் (சார்பில் தோற்றம்)

திரு. T.Y. லீ

Paticca Samuppada - The Law of Dependent Origination

Adapted from a presentation by Mr. T.Y.Lee

முன்னுரை

Introduction

படச்ச சமுப்பாத அல்லது சார்பில் தோற்றம் என்ற கோட்பாடு புத்தர் கற்பித்த ஒரு முக்கியப் போதனை. இது தன்மத்திற்கு அடிப்படையானது.

புத்தர் ஞானம் பெற்ற இரவு அவர் இவ்வாறு கூறியதாகச் சொல்லப் படுகிறது:

படச்ச சமுப்பாதையை அறிபவன் தன்மத்தை அறிகிறான். தன்மத்தை அறிபவன் படச்ச சமுப்பாதையை அறிகிறான்.

Paticca Samuppada naya, or the Law of Dependent Origination, is one of the most important teachings of the Buddha as it is fundamental to the Dhamma.

On the night of His Enlightenment, the Buddha is recorded to have said :

One who sees Dependent Origination, sees the Dhamma.

One who sees the Dhamma, sees Dependent Origination.

புத்தர் ஞானம் பெற்ற முதல் வாரத்தின் இறுதியில், இரவின் முதல் ஜாமத்தின் போது படச்ச சமுப்பாதத்தின் பன்னிரண்டு நிதானங்களை நேர் தொடராகப் பிரதிபலித்தார்:

"இது இருந்தால் அது இருக்கிறது.

இது உண்டானால் அது உண்டாகிறது.

இவ்வாறு எல்லாத் துக்கமும் தோன்றுகிறது.

At the end of the first week after his enlightenment, the Buddha in the first watch of the night, reflected on the 12 Links of Paticca Samuppada in direct order thus:

“When this cause exists, this effect is;

With the arising of this cause, this effect arises.

Thus does this whole mass of suffering originate.”

இரவின் இரண்டாம் ஜாமத்தின் போது, படச்ச சமுப்பாதத்தின் பன்னிரண்டு நிதானங்களைப் புத்தர் எதிர்மாறான தொடராகப் பிரதிபலித்தார்:

"இது இல்லையானல் அது இல்லை.

இது ஒழிய அது ஒழிகிறது.

இவ்வாறு எல்லாத் துக்கமும் மறைகிறது.

In the middle watch of the night, the Buddha reflected on the 12 Links in reverse order thus :

“When this cause does not exist, this effect is not;

With the cessation of this cause, this effect ceases.”

“Thus does this whole mass of suffering cease.”

இரவின் மூன்றாம் ஜாமத்தின் போது படச்ச சமுப்பாதத்தின் பன்னிரண்டு நிதானங்களை நேர் தொடராகவும், எதிர்மாறான தொடராகவும் பிரதிபலித்தார்:

"இது இருந்தால் அது இருக்கிறது.

இது உண்டானால் அது உண்டாகிறது.

இது இல்லையானல் அது இல்லை.

இது ஒழிய அது ஒழிகிறது.

இவ்வாறு எல்லாத் துக்கமும் தோன்றுகிறது.

இவ்வாறு எல்லாத் துக்கமும் மறைகிறது.

குறிப்பு: ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை. (ஒரு நாழிகை 24 நிமிடங்கள்.) ஒரு மணி இரண்டரை நாழிகை. எனவே ஒரு சாமம் 180 நிமிடங்கள். மூன்று மணி நேரம். சூரியன் மறைந்த முதல் 3 மணிகள் முதற்சாமம்.

அதாவது 06 P.M. to 09 P.M. முதற்சாமம். 09 P.M. to 12 A.M. இரண்டாம் சாமம். 12 A.M. to 03 A.M. மூன்றாம் சாமம்.

In the third watch of the night, the Buddha reflected on the 12 Links in direct and reverse order thus:

“When this cause exists, this effect is;

with the arising of this cause, this effect arises.

When this cause does not exist, this effect is not;

with the cessation of this cause, this effect ceases.”

“Thus does this whole mass of suffering arise.

Thus does this whole mass of suffering cease.”

சுருங்கச் சொன்னால் ஒன்றின் நிகழ்கால நிலை அதன் முந்தைய கால நிலையைச் சார்ந்து இருக்கின்றது.

இது இருந்தால் அது இருக்கிறது.

(இமஸ்மிம் சதி இதம் ஹோதி):

இது இல்லையானல் அது இல்லை.

(இமஸ்மிம் அசதி இதம் நஹோதி)

படச்ச சமுப்பாத, பொதுவாக விவரிப்பது ஒரு ஜீவனென்பது உடலின், மனதின் நிலைகளின் தொடர் ஓட்டம்.

அந்நிலைகள் தோன்றி, இருந்து, மறையும். அவை மற்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படும்.

Simply put : a state of existence depends on its prior or antecedent state.

“Imasmin sati, idam hoti.

Imasmin asati, idam na hoti.”

“If there is this, there is that.

When there is not this, there is not that”.

Paticca samuppada explains in general terms that a being is nothing more than a flow of physical and mental conditions which arises, exists and passes away depending on other conditions.

இந்தக் கோட்பாடு நமது பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் சம்சாரத்தில் தொடர்ந்து எடுக்கும் மறுபிறப்பை விளக்குகிறது. துக்கம் எப்படித் தோன்றுகிறது என்பதையும், அதனைத் தோற்றுவிக்கும் காரணிகளை நீக்கினால் துக்கத்தை முடிக்கலாம் என்பதையும் காட்டுகிறது.

துக்கத்தின் வேர்கள் அறியாமையும், பற்றுமே. மேன்மையான அட்டாங்க மார்க்கத்தின் மூலமாக இந்த வேர்களைக் களைந்த பின் ஞானம் பிறக்கிறது. அதன் விளைவாகத் துக்கம் முடிவுக்கு வருகிறது. சம்சாரத்தில் முடிவில்லாத நமது மறுபிறப்புப் பயணங்களும் முடிவுக்கு வருகின்றது. பின் நிப்பாண நிலையில் உள்ள நிரந்தரமான ஆனந்தம் நமக்குக் கிடைக்கின்றது.

It explains our birth, life, death and continued rebirth in Samsara. It shows how suffering arises and how it can be ceased through the removal of the causes or conditions which give rise to suffering. The roots of suffering are ignorance and craving, and once they are removed through the practice of the Noble Eight-Fold Path, Enlightenment is achieved and suffering thus comes to an end. Our endless rounds of rebirth in samsara then ceases, and the permanent bliss and happiness of Nibanna is attained.

இந்தக் காரண காரியங்கள் படச்ச சமுப்பாதையில் உள்ள பன்னிரண்டு இணைப்புகளில் விளக்கப்படுகின்றன. புத்தர் இந்தக் கோட்பாட்டினைப் பல போதனைகளில் விளக்குகிறார் – உதாரணமாக, படச்ச சமுப்பாத விபங்க சூத்திரம், மஹாநிதான சூத்திரம் ஆகியவை. இந்தக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தையும் அதில் ஆழமான கருத்துக்கள் இருப்பதையும் கீழ்க்கண்ட உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புத்தருடைய அணுக்கத் தொண்டரான ஆனந்தர் அவரிடம்: "அதிசயம்! ஐயா, படச்ச சமுப்பாதை என்ற கோட்பாடு எவ்வளவு ஆழமானது என்பதை நினைக்கும் போது வியப்பாக உள்ளது. ஆனாலும் அது எனக்கு மிகவும் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது."

அதற்குப் புத்தர்: "அப்படிச் சொல்லாதே, ஆனந்தா; அப்படிச் சொல்லாதே. படச்ச சமுப்பாதை ஒரு ஆழமான கோட்பாடு. அது ஆழமாகவும் தெரிகிறது. இந்தத் தன்மத்தைப் புரிந்து கொள்ளாததால் தான் இந்தத் தலைமுறையினர் ஒரு சிக்கடைந்த நூற் கண்டைப் போல, அடர்த்தியான திரண்ட புதர்களைப் போல, சம்சாரத்தில் சிக்கிச் சுழன்று, நற்கதியடையாமல் துன்பத்திலும், துயரத்திலும் கீழான மறுபிறப்புகளுக்கும் அப்பால் நகர முடியாமல் தவிக்கின்றனர்."

These causes and conditions are explained in the 12 links of Paticca Samuppada, and the Buddha expounded this teaching in important discourses such as the Paticca Samuppada Vibhanga Sutta and Mahanidana Sutta.

The importance and profoundness of this doctrine can be seen in the Buddha’s reply to Ananda who said :

“It's amazing, Lord, it's astounding, how deep this Dependent Origination is, and how deep its appearance, and yet to me it seems as clear as it can be.”

The Buddha replied :

"Don't say that, Ananda. Don't say that. Deep is this dependent origination, and deep its appearance.

It's because of not understanding and not penetrating this Dhamma that this generation is like a tangled skein, a knotted ball of string, like matted rushes and reeds, and does not go beyond transmigration, beyond the planes of deprivation, woe, and bad destinations.”

"படச்ச சமுப்பாத போதனை, இரண்டு சாத்தியக்கூறுகளை நிராகரிக்கிறது: ஒன்று, வெறுமையிலிருந்து பொருட்கள் தோன்றலாம் என்ற சாத்தியம். அதாவது எந்தக் காரணமும் இல்லாமல் தோன்றுவதற்கான சாத்தியம். மற்றது ஒரு இரச்சகன் (அல்லது கடவுள்) பொருட்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற சாத்தியம். இந்த இரண்டும் முடியாத காரியங்கள்." - தலை இலாமா

எனவே படச்ச சமுப்பாத, பொருட்கள் காரணம் இல்லாமல் தோன்றாது என்கிறது. மேலும் ஒரு கடவுள் வெறுமையிலிருந்து பொருட்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற கருத்தையும் அது நிராகரிக்கிறது.

The teaching of Dependent Origination also precludes two possibilities :

“One is the possibility that things can arise from nowhere, with no causes and conditions.

The second is that things can arise on account of a transcendent designer or creator.

Both these possibilities are negated.”

The Dalai Lama.

Paticca Samuppada therefore, also explains that things do not arise without a cause, or that things arise because of a creator.

* * * * *

சார்பில் தோற்றம் - அபிதம்மத்தின் விளக்கம்

Dependent Origination - Abhidhamma

அபிதம்மத்தில், படச்ச சமுப்பாதை இவ்வாறு பகுப்பாய்வு செய்யப் படுகிறது:

பன்னிரண்டு இணைப்புகள்

மூன்று காலங்கள்

மூன்று சந்திகள்

இரண்டு வேர்கள்

மூன்று வளையங்கள்

நான்கு பிரிவுகள்

இருபது செய்முறைகள்

In the context of the Abhidhamma, Paticca Samupada

should be understood to have :

Twelve links

Three periods

Three connections

Two roots

Three rounds

Four divisions

Twenty modes

சார்பில் தோற்றத்தின் பன்னிரண்டு இணைப்புகள்

The 12 links of Dependent Origination

"பேதைமை சார்வாச் செய்கை யாகும்

செய்கை சார்வா உணர்ச்சி யாகும்

உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்

அருவுரு சார்வா வாயி லாகும்

வாயில் சார்வா ஊறா கும்மே

ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்

நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்

வேட்கை சார்ந்து பற்றா கும்மே

பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி

கருமத் தொகுதி காரணமாக

வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்

தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு

அவலம் அரற்றுக் கவலை கையாறெனத்

தவலில் துன்பந் தலைவரும் என்ப. "

(மணிமேகலை 30-ஆம் காதை 103-116)

Depending on ignorance arises kammic formations.

Depending on kammic formations arises rebirth consciousness.

Depending on rebirth consciousness arises mind and matter.

Depending on mind and matter arises six sense bases.

Depending on six sense bases arises contact.

Depending on contact arises feeling.

Depending on feeling arises craving.

Depending on craving arises clinging.

Depending on clinging arises becoming.

Depending on becoming arises birth.

Depending on birth arises decay, suffering and death.

பாலி மொழியில் பன்னிரண்டு இணைப்புகள்

The 12 links in Pali

Avijja – Ignorance - பேதைமை

Sankhara – Kammic formations - செய்கை

Viññana – Rebirth consciousness - உணர்வு

Nama-rupa – Mind and matter - அருவுரு

Salayatana – Six sense bases - வாயில்

Phassa – Contact - ஊறு

Vedana – Feelings - நுகர்வு

Tanha – Craving - வேட்கை

Upadana – Clinging - பற்று

Bhava – Becoming - பவம்

Jati – Birth - தோற்றம்

Jara-marana – Decay, suffering and death - வினைப்பயன்

"அவிஜ்ஜா பச்சயா ஸங்க்காரா

ஸங்க்கார பச்சயா விஞ்ஞானம்

விஞ்ஞான பச்சயா நாமரூபம்

நாமரூப பச்சயா ஸளாயதனம்

ஸளாயதன பச்சயா பஸ்ஸ

பஸ்ஸ பச்சயா வேதனா

வேதனா பச்சயா தண்ஹா

தண்ஹா பச்சயா உபாதானம்

உபாதான பச்சயா பவ

பவ பச்சயா ஜாதி

ஜாதி பச்சயா ஜராமரணம்

ஸோக பரிதேவ துக்க தோமஸ்ஸு பாயாஸா ஸம்பவந்தி"

Avijja paccaya sankhara

Sankhara paccaya viññanam

Viññana paccaya namarupam

Namarupa paccaya salayatanam

Salayatana paccaya phasso

Phassa paccaya vedana

Vedana paccaya tanha

Tanha paccaya upadanam

Upadana paccaya bhavo

Bhava paccaya jati

Jati paccaya jara-maranam

சார்பில் தோற்றத்தின் கால மாதிரியான வகைப் படுத்தல்

Three Periods model of Dependent Origination

1. கடந்த காலம்

கடந்த காலத்தில் உண்டான காரணிகள்

2. நிகழ் காலம்

நிகழ் காலத்தின் மீதான பாதிப்புகள்

நிகழ் காலத்தில் உண்டாகும் காரணிகள்

3. எதிர் காலம்

எதிர் காலத்தின் மீதான பாதிப்புகள்

Past

- Causes of the Past

Present

- Effects on the Present

- Causes of the Present

Future

- Effects on the Future

1. கடந்த வாழ்வு

கடந்த வாழ்வில் நாம் ஞானம் பெறவில்லை என்பதால் நமக்குப் பேதமை (அறியாமை) இருந்தது. அதன் காரணமாக நாம் திறமையான மற்றும் திறமையில்லாத செய்கைகளை உடலாலும், பேச்சாலும், மனத்தாலும் செய்தோம். அதனால் கன்மத்தையும், வினைப்பயனையும் உருவாக்கினோம். எனவே பேதமையும், செய்கையும் கடந்த காலத்தைச் சேரும்.

2. நிகழ் காலம்

கடந்த காலக் கன்மப் பயனாக நிகழ் கால வாழ்க்கையில் பிறப்பெடுத்தோம். ஆகவே கருவில் தோன்றியது முதல் மரணிக்கும் வரை

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம் எல்லாம் எழுகின்றன. எனவே இவை எல்லாம் நிகழ் காலத்தைச் சார்ந்தவை.

குறிப்பு: நிகழ் காலம் மேலும் இரு பகுதியாகப் பகுக்கப் படுகிறது.

நிகழ் காலக் காரணங்கள்: உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு ஆகியவை இதில் அடங்கும்.

நிகழ் காலப் பாதிப்புகள்: வேட்கை, பற்று, பவம் ஆகியவையாகும்.

3. எதிர் காலம்

நிகழ் காலத்தில் நடைபெறும் பவம் எதிர்காலத்தில் பிறப்பை உண்டாக்குகிறது. எனவே பிறப்பும், மரணமும் அடுத்த பிறவியில் நடைபெறும் ஆதலால் தோற்றமும், வினைப்பயனும் எதிர்காலத்தைச் சேரும்.

குறிப்பு: தோற்றம் இருவகைப்படும். கம்ம தோற்றம் (தெரிந்து செயல்படும் தோற்றம்). இது நிகழ் காலத்தைச் சேரும். உபாபத்தி தோற்றம் (மறுபிறப்புத் தோற்றம்). இது எதிர் காலத்தைச் சேரும்.

1. Past life

In the past life, we still possess ignorance as we are not enlightenened. Therefore, we perform wholesome and unwholesome actions of body, speech and mind which create kamma and vipaka. Avijja and sankhara thus belong to the past.

2. Present life

The kamma from the previous life then produces rebirth in the present life. Thus, from the moment of conception till death, vinnana, nama-rupa, salayatana, phassa, vedana, tanha, upadana and bhava arise. Therefore, all these belong to the present life.

Note : The present life can be further sub-divided into two parts. Present life Causes comprising of vinnana, nama-rupa, salayatana, phassa, vedana, and Present life Effects comprising of tanha, upadana and bhava.

3. Future life

Bhava performed in the present life produces rebirth in the next life. Birth and death will therefore again occur in the next life.

Thus, jati and jara-marana belong to the future life.

Note : Bhava can be subdivided into kamma bhava (the volitional process of becoming) which belongs to the present life, and upapatti bhava (the rebirth process of becoming) which belongs to the future life.

மூன்று சந்திகள்

Three Connections

கடந்தகாலக் காரணங்கள் - Past causes நிகழ்காலப் பாதிப்புகள் - Present effects

நிகழ்காலப் பாதிப்புகள் - Present effects நிகழ்காலக் காரணங்கள் - Present causes

நிகழ்காலக் காரணங்கள் - Present causes எதிர்காலப் பாதிப்புகள் - Future effects

முதல் சந்தி

செய்கைக்கும், உணர்வுக்கும் உள்ள சந்தி தான் கடந்தகாலக் காரணங்களுக்கும், நிகழ் காலப் பாதிப்புக்களுக்கும் உள்ள சந்தி.

இரண்டாம் சந்தி

நுகர்வுக்கும், வேட்கைக்கும் உள்ள சந்தி தான் நிகழ் காலப் பாதிப்புக்களுக்கும், நிகழ்காலக் காரணங்களுக்கும் உள்ள சந்தி.

மூன்றாம் சந்தி

பவத்திற்கும், தோற்றத்திற்கும் உள்ள சந்தி தான் நிகழ் காலக் காரணங்களுக்கும், வருங்காலப் பாதிப்புக்களுக்கும் உள்ள சந்தி.

First Connection

The connection between sankhara and vinnana constitutes the connection between Past causes and Present effects.

Second Connection

The connection between vedana and tanha

constitutes the connection between Present effects and Present causes.

Third Connection

The connection between bhava and jati

constitutes the connection between Present causes and Future effects.

நிப்பாண நிலையை அடைந்திருந்தாலொழிய முதல் சந்தியையும், மூன்றாம் சந்தியையும் உடைக்க முடியாது. ஏனென்றால் அவை முன் வாழ்க்கை முடிந்த பின்பும், மறுபிறப்பு உண்டாவதற்கு முன்னும் நடைபெறுகின்றன.

நாம் அக்கறை காட்ட வேண்டியது இரண்டாம் சந்திக்குத்தான். அதாவது நுகர்வுக்கும் வேட்கைக்கும் இடையில் உள்ள சந்தி. நாம் பாவனை (தியானம்) செய்தால், நற்கடைப்பிடியை வளர்த்தால் நமது நுகர்வுகள் (உணர்ச்சிகள்) வேட்கையாவதைத் (பற்று) தடுக்கலாம். ஏனென்றால் நம்மால் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிகிறது. காட்சியைக் காட்சி என்றும், கோபத்தைக் கோபமென்றும், ஆசையை ஆசை என்றும் பார்க்கமுடிகிறது.

எனவே நுகர்வு வேட்கையாவதற்குப் பதில் அது மெய்ஞ்ஞானமாக வளர்கிறது. இவ்வாறு படச்ச சமுப்தை என்ற தொடர் சஞ்கிலியின் வலுவைக் குறைத்து இறுதியில் நுகர்வுக்கும் வேட்கைக்கும் இடையில் அதனை முறித்து விடலாம். சங்கிலியை முறித்து விட்டால் நாம் நிப்பாண நிலையை அடைவோம்.

The First and Third connections cannot be broken unless one has attained Nibbana, as it occurs between the ending of a previous life and the beginning of a new one.

What we are concerned about is the second connection, ie. between vedana and tanha. If we practice vipassana bhavana and develop mindfulness, we can avoid feelings developing into cravings as we are able to note, eg. seeing as seeing, anger as anger, desire as desire, etc.

If so, instead of vedana developing into tanha, vedana will develop into panna or wisdom. In this case, the cycle of paticca samuppada can be weakened and eventually broken at this link between vedana and tanha, and Nibanna ultimately attained.

இரு வேர்கள்

Two Roots

பேதமை

வேட்கை

Avijja - Ignorance

Tanha - Craving

படச்ச சமுப்பாதையை மேலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.

1. அவிஜ்ஜை அல்லது பேதமை (அறியாமை)

முதல் பிரிவு கடந்த காலச் செய்கைகளோடு துவங்கி நிகழ் கால விளைவுகளில் முடிகிறது. அது பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு ஆகிவற்றை உள்ளடக்கும். இந்தப் பிரிவுக்குப் பேதமையே வேர் அல்லது மூலாதாரம்.

2. வேட்கை

இரண்டாம் பிரிவு நிகழ்காலக் காரணங்களோடு துவங்கி எதிர் கால விளைவுகளோடு முடிகிறது. அது வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் ஆகிவற்றைக் கொண்டது. இந்தப் பிரிவுக்கு வேட்கையே வேர் அல்லது மூலாதாரம்.

வேர்களைக் களைவது:

படச்ச சமுப்பாதையின் வேர்களான பேதமையும், வேட்கையும் தான் நம்மை முடிவில்லா மறுபிறப்பில் சிக்க வைக்கின்றன. எனவே இந்த வேர்களை அறுத்தால் அல்லது அழித்தால் மட்டுமே நாம் துக்கத்திலிருந்து விடுபட முடியும். இதற்காக நாம் செய்யும் பயிற்சி தான் நல் ஒருக்கமும், தியானப் பயிற்சியும். (சமதா விபாஸனா பாவனை). இந்தப் பயிற்சியின் மூலம் உயிர் வாழ்தலின் எல்லா அனுபவங்களிலும் மூன்று இயல்புகளான துக்கம், நிலையாமை மற்றும் சாரமின்மை இருப்பதை அறிகிறோம். இவ்வாறு மறுபிறப்பிலிருந்து விடுதலை பெற்று நிரந்தர அமைதியையும், நிப்பாண மகிழ்ச்சியையும் அடைகிறோம்.

Paticca samuppada can also be divided into two sections.

Avijja

The first section starts from Past Causes and ends at Present Effects. It comprises avijja, sankhara, vinnana, nama-rupa, salayatana, phassa, and vedana.

In this section, avijja is the root or origin.

Tanha

The second section starts from Present Causes and ends at Future Effects. It comprises tanha, upadana, bhava, jati and jara-marana.

In this section, tanha is the root or origin.

Destroying the roots

The two roots in paticca samupadda are avijja and tanha which keep us bound to endless rebirth in samsara.

Therefore, these two roots must be cut off or destroyed in order for us to attain liberation from suffering. This is done by the practice of concentration and insight meditation (samatha and vipassana bhavana).

With this practice, we can realize the true nature of existence by seeing the Three Characteristics of dukkha, anicca and anatta. We then attain freedom from rebirth and the permanent peace and happiness of Nibbana.

மூன்று வட்டங்கள்

Three Rounds

படச்ச சமுப்பாத வட்டங்கள்.

1. கிலேச (மாசுகள்) வட்டம் – கிலேசங்களின் வட்டம்

பேதமை

வேட்கை

பற்று

2. கன்ம வட்டம் - கன்மச் செய்கைகளின் வட்டம்

செய்கை

கன்ம பவம்

3. வினைப்பயன் வட்டம் - விளைவுகளின் வட்டம்

உணர்வு, அருவுரு, வாயில்

ஊறு, நுகர்வு

மறுபிறப்புச் செயற்றொடர்

தோற்றம்

வினைப்பயன்

Paticca Samuppada Vattani

Kilesa vatta – Round of defilements

Avijja

Tanha

Upadana

Kamma vatta – Round of volitional activities

Sankhara

Kamma bhava (volitional process)

Vipaka vatta – Round of resultants

Viññana, nama-rupa, salayatana

Phassa, vedana

Upapatti bhava (rebirth process)

Jati

Jara-marana

படச்ச சமுப்பாத வட்டங்கள்

'வட்டம்' என்றால் சுற்றிச் சுற்றி வருவது, வண்டிச் சக்கரம் சுற்றி வருவது போல. படச்ச சமுப்பாதையை மூன்று வட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதல் வட்டம் கிலேச வட்டம். அதில் கிலேசங்களான பேதமை, வேட்கை மற்றும் பற்று மூன்றும் சேரும்.

இரண்டாம் வட்டம், கன்ம வட்டம் அல்லது செய்கை வட்டம். அதில் செய்கை மற்றும் பவத்தின் இரண்டு பிரிவுகளில் ஒன்றான கன்ம பவம் சேரும். ஏனென்றால் இவை இரண்டும் நாம் தெரிந்து செய்யும் காரியங்கள்.

மூன்றாவது வட்டம் விளைவு வட்டம்.

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு,

மறுபிறப்பு செயற்றொடர் (பவத்தின் இரண்டாம்

பிரிவு), தோற்றம், வினைப்பயன் எல்லாம்

விளைவுகள் என்பதால் இதில் சேரும்.

Paticca Samuppada Vattani

‘Vatta’ means going round and round like the rotation of a wheel. Paticca samuppada can be sub-divided into ‘three rounds’ or ‘three vattas’.

The first segment is the round of defilements or kilesa vatta. It is comprised of ignorance (avijja), craving (tanha) and clinging (upadana), as these are defilements.

The second segment is the round of volitional activities or kamma vatta. It is comprised of kammic formations (sankhara) and the volitional process of becoming (kamma bhava), as these are volitional activities.

The third segment is the round of resultants or vipaka vatta. It is comprised of rebirth consciousness (vinnana), mind-body (nama-rupa), six sense bases (salayatana), contact (phassa), feelings (vedana), the rebirth process of becoming (upapatti bhava), birth (jati) and decay, suffering and death (jara-marana), as these are all resultants.

கிலேச வட்டம்: கிலேச வட்டம், கன்ம வட்டத்திற்கு இடம் கொடுக்கிறது. கடந்த காலத்தில் பேதமையின் காரணமாக நமக்குப் புலன்களை ஈர்க்கும் பொருட்கள் மீது வேட்கை உண்டானது. வேட்கையைக் கட்டுப்படுத்தா விட்டால் அது பற்றாக மாறிவிடுகிறது. எனவே பேதமை, வேட்கை மற்றும் பற்றின் காரணமாக நாம் செய்கையிலும் கன்ம பவத்திலும் ஈடு படுகிறோம். இவ்வாறு தான் கிலேச வட்டம் கன்ம வட்டத்திற்கு இடம் தருகிறது.

கன்ம வட்டம்: கன்ம வட்டம் விளைவுகள் வட்டத்திற்கு இடம் தருகிறது. ஏனென்றால் இறந்த காலத்துச் செய்கை மற்றும் கன்ம பவத்தின் காரணமாக மறுபிறப்புப் பவமும், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, தோற்றம், வினைப்பயன் எல்லாம் நிகழ்காலத்தில் எழுகின்றன. எனவே செய்கையின் கன்மப் பிறப்பின் காரணமாக, நாம் இந்தப் பிறவியில் மறுபிறப் பெடுக்கின்றோம். இவ்வாறு கிலேச வட்டம் கன்ம வட்டத்திற்கு இடம் தருகிறது.

விளைவுகள் வட்டம்: இந்த வட்டம் கிலேச வட்டத்திற்கு இடம் தருகிறது. இந்தப் பிறவியில் உணர்வோடு பேதமையும், வேட்கையும், பற்றும் மறைந்திருக்கும் கிலேசங்களாகக் கூடவே இருக்கின்றன. ஆனால் வாயிலின் காரணமாக, நாம் புலன்களை ஈர்க்கும் பொருட்களோடு தொடர்பு கொள்வதால், ஊறும், நுகர்வும் எழுகின்றன. இதனால் மறைந்திருக்கும் (latent) கிலேசங்கள் வெளிப்படையான (full-fledged) கிலேசங்களுக்கு இடம் தருகின்றன. ஆகவே மறுபிறப்பின் காரணமாகக் கிலேசங்கள் மீண்டும் தோன்றுகின்றன. இப்படித்தான் விளைவுகள் வட்டம் கிலேச வட்டத்திற்கு இடம் தருகின்றது.

Kilesa vatta - round of defilements

Kilesa vatta gives rise to kamma vatta. In the past, because of avijja, we have tanha to sense objects. When tanha is not controlled, it becomes upadana.

Therefore, due to avijja, tanha and upadana, we perform sankara and kamma bhava. This is how kilesa vatta gives rise to kamma vatta.

Kamma vatta - round of volitional activities

Kamma vatta gives rise to vipaka vatta. Because of sankara and kamma bhava in the past life, upapatti bhava, vinnana, nama-rupa, salayatana, phassa, vedana, jati and jara-marana will arise in the present life.

Therefore, due to sankara and kamma bhava, we are reborn again in this life. This is how kamma vatta gives rise to vipaka vatta.

Vipaka vatta - round of resultants

Vipaka vatta gives rise to kilesa vatta. In this life, vinanna is accompanied with avijja, tanha and upadana as latent defilements (anusaya kilesas). And because of salayatana, we are in contact with sense objects, and phassa and vedana arises. As a result, the anusaya kilesas will then arise as full-fledged kilesas.

Therefore, due to rebirth, the kilesas will again arise. This is how vipaka vatta gives rise to kilesa vatta.

தோற்றத்தின் வட்டங்கள்:

ஆகவே கிலேச வட்டத்தின் காரணமாகக் கன்ம வட்டம் தோன்றுகிறது. கன்ம வட்டத்தின் காரணமாக விளைவுகள் வட்டம் தோன்றுகிறது. விளைவுகள் வட்டத்தின் காரணமாக கிலேச வட்டம் மீண்டும் தோன்றுகிறது. எனவே இந்த வடங்கள் சுழன்று கொண்டே இருப்பதால் நாம் சம்சாரத்தில் முடிவில்லாமல் மறுபிறப் பெடுத்துக்கொண்டே இருக்கின்றோம். சுழற்சியை முடிக்க வேண்டுமானால் இரண்டு வேர்களான பேதமையையும், வேட்கையையும் களைய வேண்டும். பின் துக்கத்திலிருந்து விடுதலை பெறலாம்.

The rounds of existence

Once again, as a result of kilesa vatta, kamma vatta arises. And as a result of kamma vatta, vipaka vatta arises. And as a result of vipaka vatta, kilesa vatta will again arise.

Therefore, the rounds of vatta will keep on turning and we will be endlessly reborn in samsara, until we destroy the twin roots of avijja and tanha and thereby attain liberation from suffering.

நான்கு பிரிவுகள் / இருபது செய்முறைகள்

Four Divisions / Twenty Modes

இறந்த கால காரணங்கள் - 5

பேதமை, செய்கை, வேட்கை, பற்று, பவம்

நிகழ் கால விளைவுகள் - 5

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு

நிகழ் கால காரணங்கள் - 5

வேட்கை, பற்று, பவம், பேதமை, செய்கை

எதிர் கால விளைவுகள் - 5

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு

Past causes – 5

Avijja, sankhara, tanha, upadana & bhava

Present effects – 5

Viññana, nama-rupa, salayatana, phassa & vedana

Present causes – 5

Tanha, upadana, bhava, avijja & sankhara

Future effects – 5

Viññana, nama-rupa, salayatana, phassa & vedana

இருபது செய்முறைகளும் நான்கு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டு இவ்வாறு விளக்கப்படுகின்றன:

1. இறந்த காலக் காரணங்கள்: பேதமையும் செய்கையுமே கடந்த காலத்தில் காரணங்களாகத் தோன்றுகின்றன. ஆனால் பேதமை கிலேச வட்டத்தினுள் சேரும். அதனோடு வேட்கையும் பற்றும் கிலேச வட்டத்தில் உள்ளடங்கும். அதே சித்தத்தில் தோன்றுவதால் வேட்கையும் பற்றும் கடந்த கால காரணங்களோடு சேர்க்கப்பட வேண்டும். சங்காரம் கன்ம வட்டத்தினுள் சேரும். அதனோடு கன்மப் பவமும் அதே வட்டத்தில் இருப்பதால் அதனையும் கடந்த காலக் காரணங்களோடு சேர்க்க வேண்டும். அதனால் கடந்தகாலக் காரணங்களில் இவ்வைந்தும் அடங்கும்: பேதமை, செய்கை, வேட்கை, பற்று மற்றும் பவம்.

The Twenty Modes are explained and categorized into the Four Divisions as such :

1. Past causes

In the Past life period, we see only avijja and sankhara as the Past causes. However, avijja is part of the Round of defilements (Kilesa vatta) as are tanha and upadana. Since these occur together in the same citta, tanha and upadana must also be included in Past causes.

Sankhara is part of the Round of volitional activities (Kamma vatta) as is kamma bhava. Therefore, bhava is also included in Past causes.

There are thus five Past causes of avijja, sankhara, tanha, upadana and bhava.

2. நிகழ் கால விளைவுகள்

இறந்த காலக் காரணங்களால் நிகழ் காலத்தில் மறுபிறப்பெடுக்கிறோம். அதனால் இந்த ஐந்து நிகழ்கால விளைவுகளைக் காணலாம்: உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு. இவை ஐந்தும் தோன்றியுள்ள ஜீவனைக் குறிக்கும்.

2. Present effects

Due to the causes of the Past life period, rebirth takes place in the present life.

Therefore, there are five Present effects of vinnana, nama-rupa, salayatana, phassa and vedana that arise in the Present life period, representing the being that comes into existence.

3. நிகழ் காலக் காரணங்கள்: இந்தப் பிறப்பில் வேட்கையும், பற்றும், பவமும் எதிர் கால மறுபிறப்புக்குக் காரணமாக இருகின்றன. மேற் கூறியது போல வேட்கையும், பற்றும் இருக்கும் போது பேதமையையும் உடன் சேர்க்க வேண்டும். மேலும் செய்கையையும் கன்ம பவத்தோடு சேர்க்க வேண்டும். எனவே ஐந்து நிகழ் காலக் காரணங்கள்: வேட்கை, பற்று, பவம், பேதமை, செய்கை

3. Present causes

In the Present life period, tanha, upadana and bhava are the Present causes for future rebirth.

As explained above, when there is tanha and upadana, avijja is also implicitly included. Also, sankhara must be grouped together with kamma bhava.

Therefore, the five Present causes are tanha, upadana, bhava, avijja and sankhara.

4. எதிர் கால விளைவுகள்: எதிர் காலத்தில் இருப்பது தோற்றமும், வினைப்பயனுமே. இவை பிறப்பு, மூப்பு மற்றும் மரணத்தைக் குறிக்கும். தோன்றியுள்ள ஜீவன் இவைகளால் ஆனது: உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு. எனவே இவ்வைந்தும் எதிர்கால விளைவுகளைக் குறிக்கும்.

குறிப்பு: படச்ச சமுப்பாதத்தில் ஒரு காரணம் ஒரு விளைவை மட்டும் ஏற்படுத்தும் என்றும், அந்த விளைவு பின் மற்றொன்று தோன்றக் காரணமாவதாகவும் குறிப்பிடப் பட்டாலும் உண்மையில் பல காரணங்கள் ஒரே சமயத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று பத்தான நயா என்ற போதனை கூறுகிறது.

4. Future effects

In the Future life period, there is only jati and jara-marana, representing birth, decay and death respectively. The being that has come into existence is composed of vinnana, nama-rupa, salayatana, phassa and vedana.

Thus, vinnana, nama-rupa, salayatana, phassa and vedana are the five Future effects.

Note : Although Paticca Samuppada states that one cause gives rise to one effect, which in-turn becomes the cause to give rise to another effect, there are actually many causes taking place at the same time likewise giving rise to many effects, etc. as shown in Patthana naya.

* * * * * *