பௌத்த சமய நூட்கள்

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை

11. பௌத்த சமய நூட்கள்

The Buddhist Scriptures

வினா: கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் சமய நூட்கள் உள்ளன. பௌத்த சமய நூட்கள் எவை?

விடை: பௌத்த சமயப் புனித நூல் திரிபிடகம் என்று அழைக்கப்படும். பண்டைய இந்திய மொழியான பாலி மொழியில் இது எழுதப்பட்டது. இந்த மொழி கிட்டத்தட்டப் புத்தர் பேசிய மொழிக்கு நெருங்கிய மொழியாகும். திரிபிடகம் ஒரு மிகப் பெரிய புத்தகம். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏறத்தாழ 40 தொகுதிகள் கொண்டதாகும்.

QUESTION: Nearly all religions have some kind of holy writings or Bible. What is the Buddhist holy book?

ANSWER: The sacred book of Buddhism is called the Tipitaka. It is written in an ancient Indian language called Pali which is very close to the language that the Buddha himself spoke. The Tipitaka is a very large book. The English translation of it takes up nearly 40 volumes.

* * * * * * * *

வினா: திரிபிடகம் என்பதற்கு என்ன பொருள்?

விடை: பாலியில் தி என்றால் 'மூன்று'. பிடகம் என்றால் 'கூடை'. இந்தப்பெயரின் முதல் பாகம் இப்புனித நூலில் மூன்று பகுதிகள் இருப்பதைக் குறிக்கிறது. சுட்ட பிடகம் என்று அழைக்கப்படும் முதல் பகுதியில் புத்தரின் அனைத்துப் போதனைகளும் அவரின் ஞானம் பெற்ற சீடர்களின் சில போதனைகளும் அடங்கியுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள போதனைகள் பல தரப்பட்ட கருத்துக்களைக் கொண்டவை. இத்தகைய போதனைகளால் புத்தர் மாறுபட்ட பல்வேறு மக்களுக்கும் வாய்மையைப் (தர்மத்தை) போதிக்க முடிந்தது. பல போதனைகள் சமய உரைகளாகவும், மற்றவை உரையாடல் வடிவிலும் உள்ளன. தம்மபதம் போன்ற பிற பகுதிகள் கவிதை வடிவில் உள்ளன. மிருகங்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்ட மகிழ்ச்சியூட்டும் ஜாதகக் கதைகளும் சுட்டப் பிடகத்தில் அடங்கும்.

திரிபிடகத்தின் இரண்டாம் பகுதி வினய பிடகம் என்று அழைக்கப்படும். துறவிகளுக்கு வரையறுக்கப்பட்ட நியதிகளும், நடைமுறை விதிகளும், விகாரையை நிர்வகிக்கத் தேவையான அறிவுரைகளும், விதிமுறைகளும், சங்கத்தின் ஆரம்ப கால வரலாறும் அடங்கியது வினய பிடகம்.

திரிபிடகத்தின் மூன்றாம் பகுதி அபிதம்ம பிடகம் என்று அழைக்கப்படும். தனிநபரை நிர்மாணிக்கும் அங்கங்களைத் தர்க்கரீதியில் வகைப்படுத்தி நுணுகி ஆராயும் சிக்கலான முயற்சி இது. அபிதம்ம பிடகம் திரிபிடகத்தின் முதல் இரண்டு பகுதிகளுக்குப் பின்னர் உருவாகியதென்றாலும் அவைகளுக்கு முரண்பாடாக எதுவும் இதில் சொல்லப்படவில்லை.

'பிடகம்' என்ற வார்த்தையை ஆராய்வோம். பண்டைய இந்தியாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மூலப் பொருட்களைக் (மணல், செங்கல் போன்றவற்றை) கூடைகளில் எடுத்துச் செல்வது வழக்கம். கூடைகளைத் தலையில் சுமந்து கொண்டு சிறிது தூரம் நடந்து அடுத்தவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்புவார்கள். கூடையைப் பெற்றவரும் அதைப் போலவே சிறிது தூரம் நடந்து இன்னொருவரிடம் கூடையை ஒப்படைப்பார். புத்தரின் காலத்தில் எழுத்துக்கள் கண்டு பிடிக்கப் பட்டிருந்தாலும் எழுதி வைப்பதை விட நினைவில் கொள்வதைத்தான் நம்பகமான ஊடகமாகக் கருதினார்கள். எழுதப்பட்ட புத்தகங்கள் மழைக் காலத்தில் நைந்து போய் விடலாம் அல்லது கரையானால் அரிக்கப்பட்டு அழிந்து போகலாம் . ஆனால் மனித நினைவாற்றலோ உயிருள்ள வரை நீடிக்கும். அதனால், துறவிகள் புத்தரின் போதனைகளை மனப்பாடம் செய்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு, கட்டுமானப் பணித் தொழிலாளர்கள் கூடைகளில் மண்ணையும், செங்கற்களையும் ஒருவரிடமிருந்து மற்றவர் பெற்றுக் கொள்வதைப் போலவே, பரிமாறிக் கொண்டனர். இதன் காரணமாகவே திரிபிடகத்தின் மூன்று பகுதிகளும் 'பிடகம்' அதாவது கூடைகள் என்று அழைக்கப் படுகின்றன. பல நூற்றாண்டுகள் கழித்துத் திரிபிடகம் சுமார் கி.மு 100 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏட்டிலும் எழுதி வைக்கப்பட்டது. இதற்கு முன்னரே இந்தியாவிலும் எழுதிவைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

QUESTION: What does the name Tipitaka mean?

ANSWER: It is made up of two Pali words, ti means ‘three’ and pitaka means ‘basket’. The first part of the name refers to the fact that the Buddhist scriptures consist of three sections. The first section, called the Sutta Pitaka, contains all the Buddha’s discourses as well as some by his enlightened disciples. The type of material in the Sutta Pitaka is very diverse which allows it to communicate the truths that the Buddha taught to different types of people. Many of the Buddha’s discourses are in the form of sermons while others are in the form of dialogues. Other parts like the Dhammapada present the Buddha’s teachings through the medium of poetry. The Jatakas, to take another example, consist of delightful stories in which the main characters are often animals. The second section of the Tipitaka is the Vinaya Pitaka. This contains the rules and procedures for monks and nuns, advice on monastic administration and procedure and the early history of the monastic order. The last section is called the Abhidhamma Pitaka. This is a complex and sophisticated attempt to analyze and classify all the constituents that make up the individual. Although the Abhidhamma is somewhat later than the first two sections of the Tipitaka, it contains nothing that contradicts them.

Now for the word ‘pitaka’. In ancient India construction workers used to move building materials from one place to another by means of a relay of baskets. They would put the baskets on their heads, walk some distance to the next worker, pass it to them, and he would repeat the process. Writing was known in the Buddha’s time but as a medium it was considered less reliable than the human memory. A book could rot in the monsoon damp or be eaten by white ants but a person’s memory could last as long as they lived. Consequently, monks and nuns committed all the Buddha's teachings to memory and passed them on to each other just as construction workers passed earth and bricks to each other in baskets. This is why the three sections of the Buddhist scriptures are called baskets. After being preserved in this manner for several hundred years the Tipitaka was finally written down in about 100 BC in Sri Lanka although it might have been written down in India before that.

* * * * * * * *

வினா: சமய நூட்கள் நினைவிலேயே அத்தனை காலம் பாதுகாக்கப் பட்டிருந்தால் அது நம்பகத்தன்மை கொண்டதாகக் கருத முடியாதே? புத்தரின் போதனைகள் பலவும் தொலைந்தோ அல்லது திரிபடைந்தோ இருக்கலாமே?

விடை: திரிபிடகத்தைப் பாதுகாப்பது துறவிகள் சங்கத்தின் கூட்டு முயற்சியாக இருந்தது. அவர்கள் அவ்வப்போது சந்தித்துத் திரிபிடகத்தின் ஒரு பகுதியையோ, முழுவதுமாகவோ ஓதுவார்கள். இதனால் புதிதாக எதையும் சேர்க்கவோ மாற்றவோ முடியாததாக ஆகிவிட்டது. இப்படி யோசித்துப் பாருங்கள்.ஒரு நூறு பேருக்கு ஒரு பாடல் மனப்பாடமாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அவர்கள் ஒன்றாகப் பாடிக்கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் அதை மாற்றிப் பாடினாலோ அல்லது எதையாவது சேர்க்க முயன்றாலோ என்ன ஆகும்? சரியாகப் பாடும் பெரும்பான்மையினர் மாற்றத்தை அனுமதிக்கமாட்டார்களல்லவா? மேலும் அக்காலத்தில் கவனத்தைத் திசை திருப்பவோ மனக் குழுப்பம் உண்டாக்கவோ தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், விளம்பரங்கள் என்று எதுவுமே இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அதன் காரணமாகவும் துறவிகள் தியானத்தில் ஈடுபட்டிருந்ததாலும் அவர்களுக்கு மிகச் சிறப்பான நினைவாற்றல் இருந்தது. இப்போது திரிபிடகம் புத்தக வடிவில் கிடைத்தும், திரிபிடகத்தை முழுவதும் மனப்பாடமாக ஓதக்கூடிய துறவிகள் இன்றும் இருக்கின்றனர். மென்கோங் சயாதேவ் என்ற பர்மியத் துறவி, திரிபிடகத்தை முழுவதும் ஓதக்கூடியவராக இருந்ததால், கின்னஸ் புத்தகத்தில் உலகத்திலேயே சிறந்த நினைவாற்றல் உள்ளவர் என்ற பேர் பெற்றிருக்கிறார்.

QUESTION: If the scriptures were preserved in memory for so long they must be very unreliable. Much of the Buddha’s teachings could have been lost or changed.

ANSWER: The preservation of the scriptures was a joint effort by the community of monks and nuns. They would meet together at regular intervals and chant parts or all of the Tipitaka. This made it virtually impossible for anything to be added or changed. Think of it like this. If a group of a hundred people know a song by heart and while they are all singing it one gets a verse wrong or tries to insert a new verse, what will happen? The sheer number of those who know the song correctly will prevent the odd one from making any changes. It is also important to remember that in those days there were no televisions, newspapers or advertising to distract and clutter the mind which, together with the fact that monks and nuns meditated, meant that they had extremely good memories. Even today, long after books have come into use, there are still monks who can recite the whole Tipitaka by heart. The monk Mengong Sayadaw of Burma is able to do this and he is mentioned in the Guinness Book of Records as having the world’s best memory.

* * * * * * * *

வினா: 'பாலி' என்று குறிப்பிட்டீர்கள். அது என்ன?

விடை: பண்டைய பௌத்த நூட்கள் 'பாலி' என்ற மொழியில் எழுதப்பட்டன. புத்தர் எந்த மொழியில் பேசினார் என்று யாருக்கும் உறுதியாகத் தெரிவில்லையென்றாலும் அவர் பாலி மொழியில் பேசியிருப்பார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இந்த மொழியில் பேசியிராவிட்டாலும் இதற்கு நெருங்கிய மொழி ஒன்றில் தான் பேசியிருக்கக்கூடும். உண்மையில் புத்தர் வட இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று, பல போதனைகள் நிகழ்த்தியதால் அவர் அவ்வவ்விடங்களில் பேசப்பட்ட வேறுபட்ட பல மொழிகளிலும் பேசியிருக்கக் கூடும்.

QUESTION: You mentioned Pali. What is that?

ANSWER: Pali is the name of the language that the oldest Buddhist scriptures are written in. No one is sure what language the Buddha spoke, but it is traditionally believed to have been Pali. If he did not speak this language, he probably spoke something very close to it. In fact, because he traveled and taught very widely, it is likely that the Buddha spoke several of the languages that were currant in northern India at that time.

* * * * * * * *

வினா: பௌத்த சமய நூட்கள் பௌத்தர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?

விடை: திரிபிடகத்தை ஒரு தெய்வீக நூலாகவோ, தவறே இல்லாத ஒரு கடவுளின் அறிக்கையெனவோ, அதன் ஒவ்வொரு வார்த்தையினையும் நம்பியே ஆக வேண்டுமெனவோ பௌத்தர்கள் நினைப்பதில்லை. ஒரு மா மனிதனின் போதனைகள் அடங்கிய குறிப்பேடு தான் திரிபிடகம். அதில் விளக்கங்களும், அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், ஊக்க மளித்தலும் அடங்கியிருக்கின்றன. அதனைச் கவனத்தோடும், மரியாதையோடும் படிக்கவேண்டும். நமது குறிக்கோள் திரிபிடகத்தினைப் படித்துப் புரிந்து கொள்வதுதான். அப்படியே நம்ப வேண்டுமென்ப தில்லை. புத்தரும் அவரது போதனைகளை அப்படியே நம்பிவிடாமல், நமது அனுபவத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்க்கச் சொல்கிறார். திரிபிடகத்தின் மீதான ஒரு பௌத்தரின் மனப்போக்கை ஒரு விஞ்ஞானி ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீதான மனப்போக்கோடு ஒப்பிடலாம். ஒரு விஞ்ஞானி பரிசோதனைகளையும் ஆய்வுகளையும் செய்து பின் தனது கண்டுபிடிப்பு களையும் முடிவுகளையும் ஒரு ஆய்வுப் பத்திரிக்கையில் வெளியிடுவது வழக்கம். அதைக் கவனத்தோடு படிக்கும் மற்ற விஞ்ஞானிகள் அதனைச் சரியானதென்றோ நம்பத்தக்கதென்றோ உடனே ஏற்றுக்கொள்வதில்லை. அதே ஆய்வைத் தாங்களும் செய்து அந்த முடிவுகள் சரியானவையே என்று கண்ட பிறகுதான் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

QUESTION: How important are the scriptures to Buddhists?

ANSWER: Buddhists do not consider the Tipitaka to be a divine, infallible revelation from a god, every word of which they must believe. Rather, it is a record of the teaching of a great man that offers explanations, advice, guidance and encouragement, and which should read thoughtfully and respectfully. Our aim should be to understand what the Tipitaka teaches, not just believe it, and thus what the Buddha says should always be checked against our experience. You might say that the informed Buddhist’s attitude towards the scriptures is similar to a scientist’s attitude towards research papers in a scientific journal. One scientist conducts an experiment and then publishes his or her findings and conclusions in a journal. Other scientists will read the paper and treat it with respect but they will not consider it valid and authoritative until they have conducted the same experiment and got the same results.

* * * * * * * *

வினா: முன்னர் தம்மபதம் என்பதனைக் குறிப்பிட்டீர்கள். அது என்ன?

விடை: திரிபிடகத்தின் முதல் பகுதியில் உள்ள ஒரு சிறு தொகுதியே தம்மபதம் ஆகும். அதன் பெயரை 'வாய்மையின் வழி' என்றும் 'வாய்மை வரிகள்' என்றும் மொழி பெயர்க்கலாம். புத்தர் கூறிய 423 போதனைகள் கவிதை வடிவில் தம்மபத்தத்தில் அடங்கியுள்ளன. அப்போதனைகளில் சில சாரமுள்ளவை, சில ஆழ்ந்த அறிவுள்ளவை, சில உணர்ச்சிமிக்க உவமானங்கள் கொண்டவை, சில மிகுந்த அழகு கொண்டவை. ஆகையால் தம்மபதம் பௌத்த நூட்களிலேயே மிகவும் புகழ் வாய்ந்த நூல். கிட்டத்தட்ட உலகின் முக்கியமான மொழிகள் எல்லாவற்றிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் உலக சமய நூட்களின் தலை சிறந்த படைப்புகளுள் ஒன்றாகத் தம்மபதமும் கருதப்படுகிறது.

QUESTION: Before you mentioned the Dhammapada. What is that?

ANSWER: The Dhammapada is one of the smallest works in the first sections of the Tipitaka. The name could be translated as ‘The Way of Truth’ or ‘Verses of Truth’. It consists of 423 verses, some pithy, some profound, some containing appealing similes, others of considerable beauty, all spoken by the Buddha. Consequently the Dhammapada is the most popular piece of Buddha literature. It has been translated into most major languages and is recognized as one of the masterpieces of world religious literature.

* * * * * * * *

வினா: திரிபிடகத்தின் எந்தப் புத்தகங்களையும் தரையிலோ, கைக்கடியிலோ வைக்கக்கூடாதென்றும், ஒரு உயர்ந்த இடத்தில் தான் வைக்க வேண்டும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா?

விடை: சமீப காலம் வரை பௌத்த நாடுகளில் மத்திய காலஞ் சார்ந்த ஐரோப்பாவைப்போலப் புத்தகங்கள் மிகவும் அபூர்வமானதாகவும் விலைமதிக்கத் தக்கவையாகவும் இருந்தன. ஆதலால் திரிபிடக நூட்களும் மிகவும் மரியாதையுடனும் கவனமாகவும் பாதுகாக்கப்பட்டன. நீங்கள் மேலே குறிப்பிட்ட நடைமுறைகளும் இந்த மரியாதையையே காட்டுகின்றன. இந்தப் பழக்கங்களும், மரியாதையும் சரியானவை தானென்றாலும் திரிபிடக நூட்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை அதில் உள்ள போதனைகளைக் கடைப் பிடிப்பதே ஆகும்.

QUESTION: Someone told me that you should never put a copy of the scriptures on the floor or under your arm, but that it should be placed in a high place. Is this true?

ANSWER: Until recently in Buddhist countries as in medieval Europe, books were rare and valuable objects. Therefore, the scriptures were always treated with great respect and the customs you have just mentioned are examples of this. However, while customs and traditional practices are alright, most people today would agree that the best way to respect the Buddhist scriptures would be to practice the teachings they contain.

* * * * * * * *

வினா: திரிபிடகப் புத்தகங்களைப் படிப்பது மிகவும் கடினமாக இருக்கிறதே. அவை மிகவும் நீண்டதாகவும், சொன்னதையே திருப்பித் திருப்பிக் கூறுவதாகவும், சலிப்புண்டாக்குவதாகவும் இருக்கின்றனவே.

விடை: ஒரு சமய வேதாகம நூலைப் படிக்கும் போது அதில் அமைந்துள்ள சொற்கள் மேன்மைப் படுத்துவ தாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும், பாராட்டத்தக்க தாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் அது நம்மை உயர்வு படுத்துவதாகவும் நமக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்திருக்கும். அதே மன நிலையில் நாம் திரிபிடகத்தைப் படிக்கும் போது சற்று ஏமாற்றம் ஏற்படலாம். புத்தரின் சில போதனைகள் உள்ளம் கவரும் அழகிய தன்மை உடையதென்றாலும், பல போதனைகளில் வேதாந்தக் கோட்பாடுகளும், சொல் விளக்கங்களும், தர்க்க வாதங்களும், தியானம் செய்வதற்கும், நன்னடத்தைக்குமான விரிந்த அறிவுரைகளும், தெளிந்த வாய்மைகளுமே அடங்கியிருக்கின்றன. அவை நம் அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ளனவேயன்றி உணர்ச்சிக்கு வழிகோலுவதாக அமைந்திருக்கவில்லை. மற்ற மத நூல்களோடு ஒப்பிட்டுப் பாராமல் திரிபிடகத்தை மட்டும் ஆராய்ந்தால் அதில் ஒரு வகைத் தனித்துவம் மிக்க அழகு மிளிர்வது கண்கூடாகத்தெரியும் - அது தெளிவான, ஆழமான, மெய்யறிவூட்டும் அழகு.

QUESTION: I find it difficult to read the Buddhist scriptures. They seem long, repetitious and boring.

ANSWER: When we open a religious scripture we expect to read words of exaltations, joy or praise that will uplift and inspire us. Consequently, someone reading the Buddhist scriptures is likely to be a bit disappointed. While some of the Buddha’s discourses contain considerable charm and beauty, most resemble philosophical thesis with definitions of terms, carefully reasoned arguments, detailed advice on conduct or meditation, and precisely stated truths. They are meant to appeal more to the intellect than to the emotions. When we stop comparing the Buddhist scriptures with those of other religions we will see that they have their own kind of beauty – the beauty of clarity, of depth and of wisdom.

* * * * * * * *

வினா: முதன் முதலில் பனை ஓலைகளில் தான் திரிபிடகம் எழுதப்பட்டதாகப் படித்திருக்கிறேன். ஏன் இவ்வாறு எழுதப்பட்டது?

விடை: திரிபிடகம் முதலில் எழுதப்பட்டபோது இந்தியாவிலும் இலங்கையிலும் காகிதம் கண்டு பிடிக்கப்படவில்லை. கடிதங்கள், ஒப்பந்தங்கள், வரவு செலவு கணக்குப் புத்தகங்கள், பத்திரங்கள் போன்றவை மிருகங்களின் தோல்களிலும், மெலிந்த உலோகத் தகடுகளிலும் அல்லது பனை ஓலைகளிலும் தான் எழுதப்பட்டன. பௌத்தர்கள் மிருகங்களின் தோல்களைப் பயன் படுத்துவதை விரும்பவில்லை. உலோகத் தகடுகளைப் பயன்படுத்துவது மிகவும் விலை மிக்கதாகவும், கடினமான செயலாகவும் இருந்திருக்கக் கூடும். எனவே பனை ஓலைகள் பயன் படுத்தப்பட்டன. ஒலைகளை விசேட முறையில் பதப்படுத்திய பின், மரப் பலகைகளுக்கு இடையே வைத்து, துளையிட்டு நூலினால் ஒன்றாக கட்டினர். அவை இன்றைய புத்தகங்களைப் போலவே படிப்பதற்கு வசதியாகவும் நீடிக்கக் கூடிய தன்மை கொண்டதாகவும் இருந்தன. பௌத்த மதம் சீனாவுக்கு வந்த பிறகு பௌத்த சமய நூட்கள் பட்டுத் துணியிலும், காகிதத்திலும் எழுதப்பட்டன. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நூட்களின் பிரதிகள் அதிகமாகத் தேவை பட்டதன் காரணமாக அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப் பட்டது. உலகில் அச்சிட்டு வெளியிடப்பட்ட முதல் புத்தகம் புத்தரின் போதனைகளுள் ஒன்றின் சீன மொழி பெயர்ப்புப் புத்தகமே ஆகும். அது கி.பி 828 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

QUESTION: I read that the Buddhist scriptures were originally written on the leaves of palm trees. Why was this done?

ANSWER: At the time the scriptures were written, paper had not been invented in India or Sri Lanka. Ordinary documents like letters, contracts, accounts and deeds were written either on animal skins, thin metal sheets or palm leaves. Buddhists didn’t like to use animal skins and writing the scriptures on metal sheets would have been both expensive and cumbersome and so palm leaves were used. After the leaves were specially prepared, they were bound together with string and put between two wooden covers making them convenient and durable, just like a modern book. When Buddhism came to China the scriptures were written on silk or paper. About 500 years later the need to produce many copies of the scriptures led to the invention of printing. The world’s oldest printed book is a Chinese translation of one of the Buddha’s discourses published in 828 CE.

* * * * * * * *