ஹிரி சூத்திரம் Hiri Sutta
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 2.3
ஹிரி சூத்திரம்: மனச்சாட்சி
Hiri Sutta: “Conscience” and so on
Translated from the Pali by: Laurence Khantipalo Mills
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: லாரண்ஸ் கந்திபாலோ மில்ஸ்
* * *
Though this person says “I am your friend”,
nothing’s done for you as comrade would,
but bereft of conscience, e’en despising you:
as “not one of mine” this person should be known.
"நான் உன் நண்பன்," என்று சொல்லியும் ஒருவன்
நண்பன் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், அவன்
மனச்சாட்சி இல்லாதவன்,
உங்களை வெறுக்கின்றான்.
அவனை இவ்வாறு தெரிந்து கொள்ளுங்கள்:
"நீ என் நண்பன் இல்லை."
Who uses pleasant words to friends
but does not act accordingly,
wise people understand like this:
“a speaker not a doer.”
எவனொருவன் இன்பவார்த்தைகளை நண்பர்களிடம் பேசியும்
அதன்படி நடக்காவிட்டால்,
மெய்ஞ்ஞானம் உள்ளவர் இதைப்
புரிந்து கொள்வார்:
"வெட்டிப் பேச்சாளன், செய்கையைக் காணோம்."
That one’s no friend who diligently
seeks your faults, desiring strife;
but with whom one rests, as child on breast,
is friend indeed who none can part.
தவறாமல் குறை கண்டு பிடிப்பான், பிரச்சனையை வளர்ப்பான்
அப்படிப்பட்டவன் ஒரு நண்பன் இல்லை;
ஆனால் ஒருவனை நம்பமுடிந்தால், குழந்தை மார்பை நம்புவதுபோல,
அவனே உண்மையான நண்பன்.
யாரும் பிரித்து விட முடியாத நண்பன்.
One who causes states of joy,
who brings praiseworthy happiness,
who’s grown the Fruits’ advantages,
the human burden bears.
ஆசீர்வாதங்களையும் நல்வினைப்பயனையும் மனத்தில் வைத்தவாறு
தன் பொறுப்புகளைச் சுமக்கும் ஒருவன் (கடும் முயற்சி செய்பவன்)
புகழக் கூடிய மகிழ்ச்சியையும் ஆனந்த நிலைகளையும்
தோற்றும் காரணங்களை வளர்க்கிறான்.
Having drunk of solitude
and tasted Peace sublime,
free from sorrow, evil-free,
one savour: Dharma’s joy. [1]
தனிமை என்ற போஷாக்கை அருந்தி,
உன்னத அமைதியில் திளைத்து
அறத்தின் ஆனந்தத்தைச் சுவைப்பவன்
துக்கத்திலிருந்தும், தீயனவற்றிலிருந்தும் விடுபடுகிறான். [1]
* * *
Note:
[1] தம்மபதம் 205 Dhammapada 205
ஏகாந்தத்தின் இன்பத்தையும், அமைதியின் இன்பத்தையும் நுகர்ந்த பிறகு, ஒருவன் தர்மத்தின் இன்பத்தைப் பருகும்போது, பயமும் பாவமும் விலகுகின்றன. [ப.ராமஸ்வாமி மொழிபெயர்ப்பு]
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
© Details from English Source With gratitude to https://suttacentral.net for English source.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.