கோபம்

கோபம்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Anger

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

மொ. ஆ. கு: பொதுவாகப் பௌத்த பிக்குகள் மதியத்திற்கு மேல் உணவு ஏதும் உட்கொள்ள மாட்டார்கள். ஆனால் மாலை வேலையில் தேனீர் அருந்துவார்கள். அச்சமயத்தில் விகாரையில் தங்கியிருக்கும் இல்லற மக்கள் அவர்களுடன் அமர்ந்து தங்களுக்குள்ள அறம் சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு விளக்கம் கேட்பது வழக்கம். சோனா பிக்கு அவர்களின் விகாரையில் இல்லற மக்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களைச் சிலர் பதிவு செய்து, 'தேனீர் நேரப் போதனைகள்,' என்ற தலைப்பில் அப்பதிவுகளை வெளியிட்டிருக்கின்றனர். சில பதில்கள் சுருக்கமாக இருக்கும் . மற்றவை கேட்பவர் சந்தேகம் தீரும்வரை நீடித்திருக்கும்.

[பதிவுக் கருவி பிக்குவின் அருகில் இருப்பதால் சில கேள்விகள் தெளிவாகப் பதிவாகவில்லை. ஆனால் பிக்கு அவர்களின் பதிலை வைத்து, மன்னித்தல்... கோபம்.. மாயை (அறியாமை) ஆகியவை சம்பந்தபட்ட கேள்விகள் என்று புரிந்து கொள்ள முடிகிறது]

மன்னித்தல்... கோபம்... மாயை.

மன்னிக்க விரும்புவது ஒரு நல்ல பண்பு. இது மன்னிக்கப்பட்டவரின் நலனுக்காக என்பதைவிட மன்னிப்பவரின் நலனுக்காக என்பதே சரி. மன்னிக்கப்படுவதும் நல்லதுதான். ஆனால் மன்னிப்பது அதைவிட நல்லது. ஏனென்றால், மனத்தில் எதிர்ப்பை வைத்திருப்பதும் மனக்கசப்புக் கொள்வதும் ஒரு சங்கடமான அனுபவம். உங்களை யார் என்ன செய்திருந்தாலும், ஏன் அது உயிரற்ற பொருளாக இருந்தாலும் மனக்கசப்புக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் எப்போதாவது கல் தடுக்கி விழுந்து அந்தக் கல்லைத் திட்டியிருக்கின்றீர்களா? ஒரு கல்லின் மேல் கோபம் கொள்ளும்போது யார் துன்புறுகின்றார்கள்? கல்லா அல்லது நீங்களா? உங்களை ஒருவர் சினமூட்டினால் யார் துன்புறுவது? நீங்கள் கோபமாக இருக்கும் போது யார் துன்புறுகின்றார்கள்? துன்புறுவது நீங்கள் தான்.

எனவே மன்னித்தல் என்பது, 'நாம் ஏன் துன்புற வேண்டும்?' என்று நம்மையே கேட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். நமக்கு யார் என்ன துன்பம் இழைத்திருந்தாலும், மன்னித்தலே நன்று. மன்னிக்காமல் இருப்பதில் என்ன பயன்? அப்போது துக்கம் அனுபவிப்பது யார்? நாம் மட்டுமே. கோபத்தின் காரணமாக, மனக்கசப்பு, எதிர்ப்பு, வெறுப்பு போன்றவற்றின் காரணமாக உண்டாகும் துக்கத்தைக் கைவிடுவதே அறிவுள்ள செயல். ஒருவர் மீது தோன்றும் எல்லாவித எதிர்ப்பு உணர்ச்சிகளும் - வெறும் எரிச்சலிலிருந்து கொலைவெறி வரை - இவை எல்லாம் துக்கமே. எப்படிப்பட்ட கோபமானாலும் அது மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளேதும் இல்லாமல் எழாது. மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சியோடு ஒன்றி அதை விட்டுப் பிரிக்கமுடியாதபடியேதான் கோபம் எழும். ஒருவர் நம்மைத் துன்புறுத்துகிறார்; நம்மை ஒரு தடியால் அடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவர்மேல் கோபம் கொள்வதென்பது அந்தத் தடியை எடுத்து நம்மை நாமே மீண்டும் அடித்துக் கொள்வது போலத்தான். உங்களை நீங்களே அடித்துக் கொள்ளாமல் இருப்பது அறிவுள்ள செயல் அல்லவா? ‘கோபங்கொண்டு எதிர்ப்பது என்பது ஒரு எரிகின்ற கொள்ளிக் கட்டையைப் பிடித்து மற்றவரை அடிக்க முற்படுவது போல’ என்று புத்தர் கூறினார். அதைப் பிடித்தவுடன் நம்மை நாமே சுட்டுக் கொள்கிறோம். அல்லது தடி ஒரு பக்கம் அசுத்தமாகவும் மறுபக்கம் எரிகிறதாகவும் உள்ளதெனப் புத்தர் கூறினார். எந்த பக்கத்தைப் பிடித்தாலும் ஒன்று, சுட்டுக் கொள்வோம் அல்லது அழுக்கடைவோம். எனவே அந்தத் தடியை எடுக்கவே வேண்டாம் என்று புத்தர் கூறினார். எந்தச் சூழ்நிலையானாலும் மனக்கசப்புக் கொள்வதில் உள்ள குறைபாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு மோசமாக இருந்தாலும், எத்தனை காலம் நீடித்திருந்தாலும் அந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்க ஒரே வழி – மனக் கசப்பைக் கைவிடாமல் இருப்பது தான். உங்களை அல்லல் படுத்துபவரை மனதில் இருத்தி அவரை மன்னிக்க விரும்பா விட்டாலும் குறைந்தது மன நிதானத்தோடு இருக்க முற்பட வேண்டும். அதாவது அவர்மேல் வெறுப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதைச் செய்தாலே துக்கத்திலிருந்து விடுபட்டு விடலாம். மன்னித்தலைப் பொருத்தவரையில், அது மன்னிக்கப்பட்டவர் அனுபவிக்க வேண்டிய தீவினையிலிருந்து அவரைக் காப்பாற்றப் போவதில்லை. அவரை நாம் மன்னிப்பதால் அது மறைந்து போகப் போவதில்லை. ஏன்? அவரைச் சந்தித்து , "உன்னை நான் மன்னிக்கிறேன்," என்று சொல்வதுகூடத் திறமையான செயலாக இல்லாமல் இருக்கலாம். அது அவரிடம் சொல்லவேண்டிய சரியான சொற்களாக இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால் அவர், தான் செய்த தவற்றைப் பிரதிபலித்து அதிலிருந்து விடுபடக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் திறமையான செயல் என்ன வென்றால் உங்கள் உள்ளத்தில் உள்ள மனக் கசப்பை நீக்க வேண்டுவதே. அதுவே முதலான காரியம்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் நீங்களே தவறு செய்தாலும் உங்களுக்கும் இது பொருந்தும். அதாவது குற்றம் செய்தவரும் நீங்கள், மன்னிப்பவரும் நீங்களே. நாம் குற்றம் செய்திருந்தால் நாம் நம்மையே மன்னிக்கத் தயங்குகிறோம். 'நான் என்னை மன்னிக்கக் கூடாது. நான் பாடம் கற்கும் வரை நான் துன்புற வேண்டும்,' என்று நினைக்கின்றோம். நீங்கள் கற்க வேண்டியது என்ன? நீங்கள் திறமையற்ற காரியம் செய்கிறீர்களென்றால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இரண்டு வயதுக் குழந்தை அழுகிறதென்றால் அதற்கு ஏதோ காரணம் இருக்கும் ஏதோ வசதியற்ற நிலை இருக்கும். அதற்குத் தூக்க நேரமாக இருக்கலாம், துணி ஈரமாகியிருக்கலாம். ஏதாவது காரணம் இல்லாமல் அது அழாது. நாமும் அது போலத்தான். நாம் ஆத்திரத்தோடு பேசுவதும், ஆத்திரத்தோடு ஒரு செயலைச் செய்வதும் ஏதோ அசௌகரியத்தோடோ அல்லது துன்ப உணர்ச்சியோடோ நாம் இருப்பதால் தான். குற்றம் செய்திருந்தால் விரைவில் நம்மை நாமே மன்னித்துக் கொள்ள வேண்டும். அதை (மனக் கசப்பை) விடுங்கள். ஏனென்றால் எதிர் காலத்தில் நாம் மேலும் திறமையுடன் நடந்து கொள்ள விரும்புவோம். இது போன்று ஆத்திரமான நிலையில் இருக்க நாம் விருப்பப்பட மாட்டோம். ஆத்திரமாகப் பேசுவதையும், நடந்து கொள்வதையும் தவிர்க்கப் பார்ப்போம்.

நாம் கோபமாக இருக்கும் போது கத்திப் பேசுவது அந்த கோபத்தை நம்முள் இருந்து வெளிக் கொண்டு வரும் ஒரு ஆழ்மனத்தின் முயற்சியே ஆகும். சத்தம்போட்டல் ஆத்திரத்தை வெளிப்படுத்தி அதைக் குறைத்து விடலாம் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அது அந்த முறையில் வேலை செய்வதில்லை. உண்மையில் சத்தம் போடுவது ஆத்திரத்தை அதிகரிக்கவே செய்கிறது.

நீங்கள் கோபத்தை உணர வேண்டுமானால் எரிச்சலுடன் சத்தமாகப் பேசத் தொடங்குங்கள். கோப உணர்ச்சி உங்கள் நினைவுக்கு வரும். கோபமாக இருந்தால் அதன் எதிர்ச் செயலைச் செய்து பாருங்கள். சாந்தமாகவும் அன்போடும் நடந்து பாருங்கள். மனச்சலனமும் அந்த வழியைப் பின்பற்றிச் சரீர சாத்திரத்தைத் தொடரும். அதுபோன்ற சரீர சாத்திரத்துடன் தொடங்கினால், அதாவது சிரிக்கத் தோன்றாதபோது சிரித்தால் அது சம்பந்தமான எண்ணங்களை நினைவு கூர்ந்து அது சிரிப்பு அல்லது சாந்தமான பேச்சோடு சம்பந்தப்பட்ட தொடர்ந்த மனச்சலனத்தை உண்டுசெய்யும். ஆனால் அதன் எதிர்ச்செயலை செய்தால் வெறுப்பான முகச்சாடையைக் காட்டினாலோ ஆத்திரத்துடன் பேசினாலோ அது தொடர்பான மனச்சலனமே தொடரும்.

கேள்வி: சத்தம் போட்டுப் பேசுவதால் அந்தக் கோபத்தை வெளியேற்றி விடமுடியுமா? அப்படிச் செய்வது நல்லது தானே?

ஆனால் சத்தம் போட்டுப் பேசுவதால் கோபத்தை வெளியேற்றிவிட முடியாது. சத்தம் போட்டுப் பேசுவதால் கோபம் வெளியேறிவிடும் என்று நினைப்பதும் தவறான கருத்து. அது கோபத்தை மிகைப்படுத்தவே உதவும். மேலும் அது பகைமையையே ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தான காரியம். இன்றைய மனோதத்துவத் துறையில் இப்படிப்பட்ட கருத்து இருக்கிறது. அவர்களுக்குக் கோபத்தின் மீது போதிய பயம் இல்லை. கோபத்தை வெளி கொண்டுவர முடியும் என்று நினைப்பது உலக நடைமுறைக்குச் சாத்தியமானது இல்லை. நாம் கோபத்தின் மீது பயத்தைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பயப்பட வேண்டிய விஷயம். நாம் பொதுவாக அதைப் பற்றி நினைப்பதும் பேசுவதும்.. அது என்னவோ சாதரணமாக நடைபெறும் விஷயம் என்றும்.. எல்லோரும் கோபம் கொள்வது சகஜம் என்றும்.. ஏன்? கோபம் கொள்வது அதிகாரத்தைத் தெரிவிக்கும் வகையில் நல்லதும் கூட என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். ஆனால் இத்தகைய கருத்துக்கள் அதன் சேதத்தை நுணுகி அறியாததால் தான். மேலும் பௌத்த நோக்கில் அந்தக் கோபமான மனோசஞ்சலம் முடிந்தவுடன் அதன் விளைவுகள் முடிந்து விடுவ தில்லை. இல்லை, உடனே முடிவதில்லை. ஒரு அடிச்சுவடு உண்டாக்கப்பட்டுவிட்டது. ஒரு பழக்க வழக்கம் திடமாக்கப் பட்டுவிட்டது. கன்மக் கோட்பாட்டின் படி விளைவுகள் உண்டாகும். கோபம் முடிந்தவுடன் அதன் விளைவாக வேறு எதுவும் உண்டாகாது என்றில்லை. கோபம் கொண்டால் நாம் விரும்பாத விளைவுகள் (தீவினை) வரும். இதனாலேயே நாம் அதன் மீது பயம் கொள்கிறோம்.

கூட்டத்தில் உள்ள ஒருவர் சொல்கிறார்: சில சமயம் நான் கோபமாக இருக்கும் போது வாய்விட்டுச் சிரித்தால் எனக்குப் பெரும் நிம்மதி ஏற்படுகிறது.

கோபத்திலிருந்து விலகிவிடமுடிந்தால் சரி. எது உங்களை விடுவித்தாலும் அந்த வழி சரியே. அதனை மேலும் நீட்டிக்குமாறு அதன் வழியே தொடர்ந்து செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் சினத்தை வெளிக்காட்டுவதால் நாம் அதற்கு மென்மேலும் ஆதரவு அளித்து விடுகிறோம், உறுதிப் படுத்தி விடுகிறோம். தலையணையை ஆத்திரத்தில் குத்துவது போன்றவையெல்லாம் நமது கோபத்தை வெளிக் காட்டும் செயலாகும். இந்தக் கோபத்தை ஆரம்பத்திலேயே கண்டு கொள்ள நமக்கு ஒரு ஆரோக்கியமான வழி தேவை. பின்னால் அறிந்து கொள்வதை விட முன்னரே அறிந்து கொள்வது நல்லது.

எவ்வளவு விரைவில் இந்த மனக்கசப்பை விட்டு விடுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. ஒரு சிலர் வாழ்க்கையில் பாதி நாட்களைக் கோபக்காரராகவே வாழ்ந்து கழித்து விடுகின்றனர். அது அவர்கள் குணத்தோடு ஒன்றி விடுகிறது. 'அவனா? அவன் ஒரு கோபக்காரன்' என்ற பழிச்சொல் நிலைத்து விடுகிறது.

இது ஒரு ஆபத்தான விஷயம்; ஒரு நோய். புத்தர் இதனை ஒரு நோய்வாய்ப்பட்டவருடன் ஒப்பிடுகிறார். கோபத்திலிருந்து மீண்ட பிறகு கிடைக்கும் நிம்மதி, ஒரு நோய் குணப்பட்டபின் கிடைக்கும் நிம்மதிக்கு ஒப்பாகும். தலைவலியோ, காய்ச்சலோ குணப்படுத்தப்பட்டபின் ஏற்படும் நிம்மதிக்கு ஒப்பாகும். கோபம் தணிந்தால் அது மிகப்பெரிய நிம்மதியைத் தரும். நடந்ததைப் பின்னர் நினைத்துப் பார்த்தால் நம்பத்தக்கதாகத் தெரிந்த அது ஒரு ஏமாற்றமாகத் தெரியும். 'உண்மையாகவே அவன் ஒரு மடையன், எப்போதும் பொய் பேசுபவன் ..இது உண்மையே. யாராலும் மறுக்கமுடியாத உண்மை. என் எண்ணத்தை வேறு எவரும் மாற்றமுடியாது.' இப்படி எப்போதாவது உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் உங்களுக்கே சொல்லிக் கொள்ள வேண்டும், 'நான் ஏமாந்துவிட்டேன். நான் அறியாமையில் முழ்கி இருக்கிறேன்.' 'எனக்கு அறியாமையில் இருப்பதாகத் தெரியவில்லை.' தெளிவாக இருந்தால் அது அறியாமையாக இருக்கமுடியாதல்லவா? அறியாமை கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்று பெயர் பெற்றது. கோபத்தை மட்டுமே நாம் உணர்ந்து கொள்ள முடியும். எனவே கோபம் கொள்ளும் போது நாம் அதைத் தெரிந்து கொள்கிறோம். எனவே 'நாம் அறியாமையில் இருக்கிறோம்' என்பதை உணர்கிறோம்.

இது ஒன்றைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்வது போன்றது. நீங்கள் வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரு நாள் கதவு சமையல் அறைக்குள் ஆறடி தள்ளி இருப்பதாகத் தோன்றுகிறது. 'நான் இதைத் தவறாகக் காண்கிறேன். எனது மூக்குக் கண்ணாடியில் ஏதோ பிரச்சனை இருக்கலாம். இப்படித்தான் நாம் ஊகிக்க முடியும். பார்த்தால் ஆறடி தள்ளி இருப்பதாகத் தெரிகிறது. கண்களில் பிரச்சனை யென்றால் அப்படித்தான் தோன்றும். அதில் சந்தேகம் ஏதும் இல்லை.

ஓலிவர் சாக்ஸ் என்ற நரம்பியல் மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. நீண்ட காலம் அவரோடு தொடர்புகொண்டிருந்த நோயாளிகளைப் பற்றி எழுதினார். அப்படி வந்தவர்களில் ஓய்வு பெற்ற தச்சரும் ஒருவர். அவர் ஒரு நரம்பியல் மருத்துவ நிறுவனத்தில் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருடைய நோயின் ஓர் அறிகுறி, நிற்கும்போது ஒரு பத்து பாகை சாய்ந்தவாறு நிற்பார். மக்கள் அவரைப் பார்த்து நீங்கள் சாய்ந்தவாறு நிற்கின்றீர்கள் என்பார்கள். ஆனால் அவருக்கு அப்படித் தெரிவதில்லை. தான் நேராக நிற்பதாகத்தான் அவருக்குத் தோன்றுகிறது. மாறாக அவர் நேராக நிற்கும் போது, தான் சாய்ந்தவாறு நிற்பதாக அவருக்குத் தோன்றும். அதனால் அவர் மக்கள் சொல்வதை நம்பமாட்டார். அப்படிச் சாய்ந்தவாறு நிற்பவருடன் பேசுவது சற்றுச் சங்கடமான விஷயம். அவர்கள் சொல்வதை அவர் ஏற்க மாட்டார். மருத்துவர் சாக்ஸ் அவரை ஒரு கண்ணாடி முன் நிற்கவைத்து அவர் சாய்ந்து நிற்பதைச் சுட்டிக் காட்டினார். அவரும், 'அட கடவுளே! நான் சாய்ந்தவாறுதான் நிற்கிறேன்,' என்று அப்போதுதான் புரிந்து கொண்டார். 'நான் நேராக நிற்பதாகத்தான் எனது மனக்குறிப்பு என்னிடம் சொல்கிறது. ஆனால் நான் சாய்ந்தார்ப்போல நின்றால் தான் நேராக நிற்பதாக உணர்கிறேன்.' ஆக அவருடை நேரடி மனக்குறிப்பை அவரால் நம்பமுடியவில்லை. தச்சராக வேலை செய்த அவர் இந்த அனுபவத்தை முன்கூட்டியே பலமுறை சந்தித்திருக்கிறார். தச்சு வேலையில் இந்தச் சந்தேகம் அடிக்கடி எழும். இந்த மரக்கட்டை நேராக இருக்கிறதா வளைந்திருக்கிறதா? பார்த்தால் நேராக இருப்பதாகத்தான் தெரியும். அனுபவம் காரணமாகத் தச்சர் தம் மனக்குறிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆக அவர் மட்டப்பலகையைப் (சமனறியுந் தச்சுக்கருவி) பயன்படுத்துகிறார். இந்த நோயாளி தச்சர் ஒரு மூக்குக் கண்ணாடி அணிபவர். அவர் பிரச்சனையைத் தீர்க்க இப்படிப்பட்ட சமனறியும் சிறு கருவியைத் தமது மூக்குக் கண்ணாடியில் மாட்டிக் கொண்டார். நீர்க்குமிழியை மத்தியில் வைத்தவாறு நேராக நடக்கத் தொடங்கினார். பொதுவாக அவர் ஆரம்பத்தில் மட்டப்பலகையை நம்பவில்லை. ஆனால் காலப்போக்கில் அதை நம்பத் தொடங்கினார். மக்கள் தங்கள் நேர் மனக்குறிப்பை நம்புவதைவிட அது போன்ற கருவிகள் காட்டும் குறிப்பை நம்புகின்றனர்.

கோபம், பேராசை, மாயம் போன்ற மனோசலனங்களை இப்படித்தான் நீங்கள் கையாளவேண்டும். நீங்கள் ஏமாற்றத்தில் உள்ளதை அவை உங்களுக்குச் சொல்லுகின்றன. நாம் நேரடியாக மாயத்தை அறிய முடியாது. அந்த மனத்தின் நிறத்தைக் காணமுடியாது. மனத்தில் ஒரு வண்ணத்தைக் கலந்து விட்டால் அதன் வழியாக நீங்கள் உலகைக் காணும் போது அந்த வண்ணத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

நான் உங்களிடம் நீல நிற ஒளியைப் பற்றியும், சிவப்பு நிற ஒளியைப்பற்றியும் கூற வேண்டும். ஆசையே சிவப்பு விளக்கு. உங்கள் நெற்றியில் ஒரு விளக்கு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பேதலிக்கப்படாதவரை, மாயத்தில் மூழ்காதவரை அது வெள்ளை ஒளியைத் தருகிறது. எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி காண்பிக்கிறது. ஆனால் அவ்வப்போது உங்களுக்குத் தெரியாமலேயே அது சிவப்பு ஒளியைத் தருகிறது. அச்சமயத்தில், எல்லாம் கவர்ச்சியாகவும், சுவையானதாகவும், விரும்பத்தக்கதாகவும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சமயங்களில் உங்களுக்குத் தெரிய வேண்டியது , "நான் மயக்கத்தில் இருக்கிறேன்," என்பதைத்தான். ஏனெனில் நான் காண்பதெல்லாம் கவர்ச்சியாகவும், சுவையானதாகவும், விரும்பத்தக்கதாகவுமே தோன்றுகின்றன.

நீல ஒளி எல்லாவற்றையும் வெறுக்கத் தக்கதாகக் காண்பிக்கிறது. குறையைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. உணவின் மீது நீல ஒளியைக் காட்டினால் அது அருவருப்பாக, சாப்பிடப் பிடிக்காததாகத் தோன்றும். ஒரு மனிதர் மீது நீல வெளிச்சத்தைக் காண்பித்தால் அவர் ஒரு பிணம் போன்று தோன்றுவார். அதனால் தான் சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ளன. சிவப்பு விளக்கு பகுதிகளை ஒழிக்க எனக்கு ஒர் அற்புதமான திட்டம் தோன்றுகிறது (சிரிப்பு). அப்பகுதிகளின் தெரு விளக்குகளை நீல நிற விளக்குகளாக மாற்றி விடவேண்டும். காமப்பசி உடனே, அந்த நொடியிலேயே அடங்கி விடும் (சிரிப்பு)!

இப்படித்தான் நடக்கிறது. சமநிலையில் உள்ள மனம் வெள்ளை ஒளியினால் காண்கிறது - உருவத்தை உள்ளது உள்ளபடி பார்க்கிறது, விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல் பார்க்கிறது. குறைகள் மீது மாத்திரம் கவனம் செலுத்துவதில்லை. ஒருவரின் குறைகளை மட்டும் எடுத்துக்காட்டுவதில்லை.

நாம் குறைகளை மக்கள் மீதே அதிகமாகக் கண்டாலும், சில சமயம் பொருட்கள் மீதும் காண்கிறோம். வீட்டுச் சாமன்களும் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அதுகூட மனத்தை ஆட்டிப் படைக்கலாம். அது அப்படி இருக்கிறது அதை அங்கேயே வாங்கவேண்டும். வாங்க வசதி இல்லாமல் இருந்தாலும் அதை வாங்கியேதீர வேண்டும் என்று சில சமயம் நினைக்கலாம். வாங்காவிட்டால் அதில் எதோ குறையை காண்போம். உங்கள் மனக்குறிப்பு வேலைசெய்கிறது. ஒரு பொருளை முழுதுமாகப் பார்க்காமல் அதில் உள்ள குறைகளை மட்டும் பார்ப்பது அல்லது அதன் குணங்களை மட்டும் காண்பது அது. அதை அப்படியே நம்பிவிடுகிறோம். நமக்குத் தோன்றும் மனக்குறிப்புகளில் தவறே இல்லாததாகத் தோன்றுகிறது. அது மட்டுமல்ல அதை வேறு எப்படியும் பார்க்க முடிவதில்லை. அச்சமயத்தில் நீங்கள் பின் வாங்கிப் புத்தர் என்ன கூறினார் என்பதை நினைவூட்டிக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனக் குறிப்பிருந்தால் எங்கேயோ மணி (கவனம், கவனம் என்ற அறிவிப்பொலி ) அடிக்கத் தொடங்க வேண்டும்.

மனோதத்துவ நிபுணரும்/பொறியியலாளருமான ஒருவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அதனைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் கோபப்படும்போதெல்லாம் அந்தக் கருவி ஒரு ஒலி எழுப்பும். கோபப்படும் போது அது, 'பீப்.. பீப் ..,' என்ற ஓசை எழுப்பியவுடன் உங்களுக்குக் கோபம் எழுவதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த ஓசை கேட்டவுடன் நீங்கள சொல்லிக் கொள்ளவேண்டியது, 'நான் மாயத்தில் மூழ்கியிருக்கின்றேன்,' என்று.

தலாய் இலாமா அவர்கள் வந்திருந்தபோது அவருடன் கலந்துரையாட ஒரு மண்டபத்திற்கு அழைத்திருந்தனர். நானும் அங்கு சென்றிருந்தேன். கலந்துரையாடலின் போது அந்த மனோதத்துவ நிபுணரும் இருந்தார். அவர் தான் கண்டுபிடித்த கருவியைத் தலாய் இலாமா அவர்களுக்கு விளக்க முற்பட்டார்.

"இப்படிக் கழுத்தில் தொங்கவிடக் கூடிய ஒரு கருவி இருந்தால், அதன் பயன்பாடு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?" என்று தலாய் இலாமாவை அவர் கேட்டார். அறிந்த நிலையில் இருந்து கோபம், பேராசை, அவா போன்றவற்றைத் தெரிந்து கொள்வதுதான் பௌத்தப் பயிற்சி. ஆனால் மனத்தின் அறிந்த நிலையைப் பேணி வளர்க்க எல்லோராலும் முடிவதில்லை. ஆகவே இப்படிபட்ட ஒரு கருவி இருந்தால் வசதிதானே? கோபம் உண்டாகும் போதெல்லாம் அது 'பீப்..பீப்.. ' என்று ஒசை எழுப்பும்.

தலாய் இலாமா அவர்களின் ஆங்கில அறிவு சிறப்பானதல்ல என்பதால் அவரும் அருகில் இருந்த ஆவரது மொழிப்பெயர்ப்பாளரும் நீண்ட நேரம் மாறி மாறித் திபெத்திய மொழியிலும் ஆங்கிலத்திலும் பேசிக் கொண்டனர்.

பின்னர் நிபுணர் சொன்னதை நன்கு விளங்கிக் கொண்டபின், தலாய் இலாமா சொன்னார்,

"நான் (அக்கருவி) ஒன்றை வாங்கிக் கொள்வேன்!" என்றார் (நீண்ட சிரிப்பு).

பேராசை, வெறுப்பு, மாயம்

ஆக, இதுதான் கோபம். கோபம் மிகப் பெரிய குறை. ஆனால் கோபத்தை நீக்குவது பேராசையை நீக்குவதைக் காட்டிலும் எளிது. இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கோபம் நமது நற்பெயரின் மேல் படிந்துவிட்ட மாபெரும் கறை. நாம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்க வேண்டுமென்றால் அதை நாம் அகற்றியாக வேண்டும். அது உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் தொல்லை தருவதாகும். ஆனால் அதை அகற்றுவது பேராசையை நீக்குவதை விட எளிது. ஏனென்றால் கோபம் எப்போதுமே துன்பமயமான உணர்வுடன் சேர்ந்தே எழும். எப்போதும் அது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதில்லை. அதை நீக்க உங்களுக்கே இயல்பானஆர்வம் இருக்கும். அதன் மேல் பற்றுக் கொள்ள எந்தவித நல்ல காரணமும் இல்லை என்பதை உணர்வதால் அதை மிகவும் எளிதாகக் குறைக்க முடியும். பேராசையை நீக்குவது கடினம். ஏனென்றால் அது எப்போதும் இன்பமான உணர்ச்சியுடன் கூடியே எழும். பேராசையை நீக்க உங்களுக்கே மனம் வராது. ஏனென்றால் பேராசையை – அது தவறு என்றாலும் - நீக்க வேண்டிய காரணம் என்ன என்பது உங்களுக்குப் புரிவதில்லை. மாயத்தை நீக்குவது அதைவிடக் கடினம். ஏனென்றால் அதை நேரடியாகக் கண்டு கொள்ளவே முடியாது. அதுவே மிகப் பெரிய குறை.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Forgiveness... Anger... Delusion.

It is a wise idea to forgive. For the sake of the forgiver, not the forgiven. May be very nice to be forgiven. It is actually even better to forgive because to hold a grudge, to hold resentment is a very troubling experience. No matter what a person has done to you, even inanimate objects.. Have you ever stubbed your toe on something and then cursed that rock. You get mad at an inanimate object, who suffers? The rock or you? When somebody makes you mad who suffers? When you are angry who is suffering - you.

So forgiveness is another way of saying, why suffer? No matter what anybody has done. What is the point? Who is suffering now. Just you. So just out of sheer wisdom to let go of suffering that has arisen around anger, resentment, grudge, ill-will - all of the whole spectrum from just irritability to cold hatred - it's all suffering. You cannot experience any spectrum of anger not associated with unpleasant feeling. It always arises inseparable with unpleasant feeling. So somebody else did something to you. It is somebody hits you and then you get that thing and keep hitting yourself with it. So wouldn't it be wiser not to hit yourself? Or to retaliate in anger is the Buddha says it is like picking up a burning stick to hit somebody with. You pick that up and you burn yourself. Or he says one one end it is covered with filth and the other end is burning. Either end you grab, it you either burn yourself or you walk away soiled completely. So he says don't pick up the stick. Get it clear in your mind the total disadvantage of harbouring resentment, under any circumstances.

No matter how bad or how long this went on, there is only one way to make it worse and that is to hold resentment. Now you may not want to bring the person to mind to give forgiveness but you at least strive for equanimity, the state of non harbouring of ill-will and that delivers you from suffering. As far as forgiveness, you cannot lift the negative or unwholesome structures that a person has made. You cannot lift it off by forgiveness. And it may not even be the most skillful thing to say 'I forgive you'. Maybe it is not the right thing to say to that person. They may need to learn a lesson or something but what the skillful thing is is to discharge any resentful emotion from your own system, that is the primary thing.

And of course it applies to oneself. That is the real interesting ... You are the culprit and you are the forgiver. You are the one who did it. You are the only one who can give yourself forgiveness. That is when you are holding back. I really don't deserve this. I am going to suffer until I learn my lesson. What is the lesson you need to learn? You usually do unskillful things because you have a reason. A two year old usually cries for a reason. They are uncomfortable, they are too sleepy, they are too something or other. Same with you. You don't speak harshly.. do things unless you are experiencing discomfort or pain. When you are happy in a good mood you don't do stupid things. You don't feel like doing unskillful things. First thing you should do is quickly forgive yourself. Let go, because in the future you will act more skillfully because you won't be looking for the discharge of this tension of the negative experiences. You won't have to discharge unwholesome speech or something.. shouting and so forth.

One of the reasons why we shout when we get angry is actually an unconscious attempt to get out of the anger to get the anger out of you. Feels like you can shout it out. And of course often does not work. In fact it increases it.

If you want to experience anger just start talking in an angry, loud way. You will be reminded of the emotion. Do the opposite if you are angry. Talk in a very soft manner. Act as if you are gentle and kind. The emotion may follow that hint, it will follow the physiology. Lead with that physiology, smile when you don't feel like it and it will remind you of something and the emotion connected with smiling or gentle speech will follow but just try the opposite and make the facial gesture of disgust and then speak in a harsh way and the emotion will follow.

Q. By being loud can we let it out though?

But you don't let it out though. This is the false thing, by shouting you don't let it out. You can actually increase, you can antagonize it. In fact it is very dangerous and generally in psychology they have their own idea, they don't have enough fear of anger. They do not have a healthy enough fear of anger. The idea of getting the anger out is not real. You must kind of build up your fear of anger. It is a fearful thing. In a normal way we think about it .. the language has been that .. well anger it is alright ..everybody gets angry or maybe it is good you make some power points or whatever .. but it is a lack of true insight into how damaging this emotion is and from a Buddhist point of view it just doesn't just stop when the emotion subsides. It is not over. A track has been laid down. A neuronal circuit has been strengthened and from the point of view of karma there will be results. It is not that nothing will ever come of this. When you get angry, unwished for results (results from negative karma) will come and that is why we have an heightened fear of this.

<.. unclear comment from a listener.. I feel so much better after laughing aloud when I am angry. ..>

If you can free yourself from it. Whatever helps you free yourself from it. You got to be really careful not to sustain it by acting in accord with it. And aso in letting it out it often sustains it. By hitting a pillow and that sort of thing that is actually acting on the anger. I thing we need a more wholesome kind of highly developed sense of catching it very very early it is much better to catch it very early than after wards.

<.. unclear comment from a listener..

We hope that as soon as we get over it the better. Sooner the better..

<.. unclear comment from a listener.. We can see some people are angry half their life and it sort of becomes part of their character>

It is dangerous. It is a disease. The Buddha compares it to having a disease. And when you get over anger it is just like getting over an illness. It feels like getting over an headache or the flu or something. It is a very great sense of relief to get over anger. When you look back, it is such a delusion. It is so convincing. The cause of the anger, the reasoning behind the anger, the necessity for the anger. It's utterly convincing at the time. 'It is true that that person is an idiot, full of falsehood etc. It is utterly undeniable that is the reality and no one can convince me otherwise.' Whenever you feel that way you should always say 'I am deluded. I am in a state of delusion now.' 'I don't feel deluded.' It wouldn't be delusion if you thought it was. Delusion is notoriously, absolutely undetectable. Only the anger is detectable. Therefore you deduce that, 'I must be deluded.'

It is like misperception about something. You are walking around your house and the door appears to be six feet inside the kitchen and you think: 'I must be misperceiving this, something wrong with my glasses. You can only deduce, the actual appearance is hundred percent sure. If you have a problem with your eyes that is what it looks like. There is no doubt about that.

One of the cases of Oliver Sacks. He is a neurologist. H is a very good writer as well. He writes about some of his patients he has had over time. One case ..this guy is a retired carpenter. He was in a neurological institute. One of the symptoms of his conditions was that he would lean over to one side like this on about a 10 degree angle. People would say you are leaning. But he wouldn't know that. He feels he is standing straight up. But when he stands straight up he feels like he was leaning. So he wouldnt' believe ..people would say.. it is really awkward talking to a person who is leaning like that. so he wouldn't believe them. So anyway Sacks showed him in a mirror that he was leaning. Come over here. 'Oh my God, I am leaning.' It utterly feels like I am perfectly straight up but when I am leaning..' so he could not trust his direct perception of this. But having been a carpenter all his life he many many times had this experience.. it is very common in carpentry. can you trust this sense of whether this 2 by 4 is straight or not. What do you do? How do you find if a 2 by 4 is straight or not. You get a level. He wore glasses as well. So he wore a little level on his glasses. A little mark in a sense. So having been a carpenter all his life ..keep the bubble in the middle in the level and then he walked perfectly straight. While often in carpentry you swear the level is wrong, but after a while you learn to trust it. You trust it over your direct perception.

This is what you have to do with your delusive emotions like anger and greed and so forth. They tell you that you are deluded. You can't see the delusion directly. You can't see that colouring of the mind. What is happening is that dye is poured into the mind. It is colouring the world around you.

I have to talk about blue light and red light. When desire is red light. You have a little light on your forehead. When you are not deluded at all, it is white. And illuminating everything as it really is. But every now and then unannounced to you it goes red. At that time everything seems so alluring, delicious, desirable and you have to think now the red light must be on because I am perceiving things as alluring, delicious and desirable. Then the blue light makes everything repulsive. Makes it see nothing but faults. If you put blue light on food it becomes unappetizing. You put it on a person shine blue light on a person they look corpse like, dead. That is why of-course they have red-light districts. And I have a brilliant suggestion for how to cure red-light districts - put blue light on all the street lamps. And the appetite will go right away, instantly (laughs).

So this is what is happening and the balanced mind is seeing through white light - the object as it is, neither repulsive nor attractive. We are not fixated on the faults. Extracting the fault out of say, a person . The problem is with people mostly but it could be with objects. You get picky with your furniture, this and that, you are obsessively, you think it is so wonderful you have to buy it right. You can't afford it but you have to buy it or it has a fault. You didn't notice it before but now you see it. What is happening is that you are extracting, part of your perception apparatus is extracting the fault or extracting the beautiful and the whole picture is dropping into the background and the extracted aspect is up there and people believe it. It is utterly convincing. There is no doubt that is what I see. Not only that I cannot see it any other way. At that point you have to go back and say what has the Buddha taught me? When this is upon me, when I feel this experience upon me, the bells should go off.

Remember the psychologist/engineer who had designed a little doodad (gadget) that hung around your neck and it would actually trigger when you felt anger. It would go - 'beep be beep' when you felt anger, so you knew you are angry . When you hear that beep you say, 'Ok, I am deluded.'

I was at the orpheum (theatre) for the Dalai Lama's discussion and this psychologist was part of the panel and he tried to explain this to the Dalai Lama :

What if I had a machine that I could hang around your neck and instead of mindfulness, mindfulness is the thing that is supposed to detect when you are angry, desiring, greed and anger. Since most people don't have so much mindfulness I am going to have a little thing that goes, 'beep be beep.' The Dalai Lama's English is not so good and he had to discuss this with his interpreter/translator .. back and forth in Tibetan and English ... mindfulness machine..aware.. do what ..

Then after he got the whole picture he said, "I'll buy one!" (lots of laughter)

OK, so that's anger. Anger is the worst fault but it is more easy to get rid of than greed. So you should remember that. Anger is a heavy stain upon the personality and you really need to get rid of that to feel happy, to feel well and it is problematic for everybody around you. But it is easier to get rid of than desire because it always accompanied by unpleasant feeling. It is never pleasant. You will be motivated to try to get over it and it is possible to really drastically reduce your anger when you understand that it has no positive aspects to it. Desire is harder because it is accompanied by pleasant feeling. So it is more difficult to see why you would want to get rid of your desire, your distorted desire. And delusion is the most difficult of all to get rid of because it is undetectable and it is a great fault.

* * * * * *