பிரமவிகாரபாவனை
நான்கு உன்னத மனோநிலைகள் - ஓர் உவமானம்
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
The Sublime Attitudes - A Simile
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
பிரமவிகாரபாவனை pirama-vikāra- pāvaṉai, n. < brahmanvikārapāvaṉai, viz., upēṭcai, karuṇai, maittiri, mutitai;
உபேட்சை, கருணை, மைத்திரி, முதிதையென்னும் நான்கு பிரிவு கொண்ட பாவனை. (மணிமேகலை. பக். 389, அரும்.)
Source: Univ of Madras Tamil Lexicon
நல்லெண்ணம்/அன்பு/மைத்திரி (பாலியில்: மெத்தா) Loving Kindness
கருணை (கருணா) Compassion
மற்றவர் வெற்றியைப் பாராட்டல்/முதிதை (முதிதா) Sympathetic Joy or Appreciation
மன நிதானம்/அமைதி/உபேட்சை (உபேக்கா) Equanimity
பிரமவிகாரங்கள் என்றழைக்கப்படும் நான்கு உண்ணத மன நிலைகள் உரை நடைகளில் கீழ்கண்டவாரு விளக்கப்பட்டிருக்கின்றன.
மெத்தா - மைத்திரி அல்லது அன்பு - மற்றவர் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்ற விருப்பம்.
மைத்திரி அல்லது அன்பு என்பது வையிற்றினுள் உள்ள குழந்தை மீது பெற்றொருக்கு உள்ள உணர்ச்சியைப் போல. குழந்தை எப்படிப்பட்ட தோற்றமுடையது என்பது தெரியாது. ஆண் குழந்தையா பெண்குழந்தையா என்பதும் தெரியாது (உரைநடை எழுதபட்ட சமயத்தில் ஸ்கேன் போன்ற கருவிகள் எல்லாம் கட்டுபிடிக்கப்படவில்லை). அதன் குணாதிசயங்களும் தெரியாது. இருந்தாலும் அது நல்ல படியாக இருக்க வேண்டும் என்ற ஆழமான எண்ணம் பெற்றொருக்கு இருக்கின்றது. அதன் மீது அன்பான எண்ணங்கள் செலுத்துகிறோம். "நீ நன்றாக இரு!". "என்னவாக இருந்தாலும்அது நல்லபடியாக இருப்பாயாக." "நல்லபடியாக பிறக்கட்டும். துன்பப்படாமல் இருக்கட்டும்." இதுவே அன்பு அல்லது மைத்திரி. நமது குடம்பத்தினர் மீது இப்படி பட்ட எண்ணங்களை செலுத்துகிறோம். அவர்களின் குணங்களை / குறைபாடுகளை பற்றியெல்லாம் நினைப்பதில்லை.
கருணா - கருணை - மற்றவர் அனுபவிக்கும் துன்பம் குறையவேண்டும் என்ற விருப்பம்.
குழந்தை பிறந்த முதல் சில வருடங்களில் அது பெற்றோரை முழுவதும் நம்பி இருக்கிறது. அப்போது பெற்றொர்கள் அதன் மீது கருணை செலுத்துகின்றனர். ஏனென்றால் அது மிகவும் அவதிப்படுகிறது. அழுக்கடைய கூடிய துணிகள். வயிற்று வலி. பல வகையான இன்னல்கள். தடுமாறிக்கோண்டிருக்கிறது. நடக்க தெரியவில்லை. பேச தெரியவில்லை. பெற்றொருக்கு அந்த மழுழையின் துன்பம் குறையவேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறது. வயிற்றில் உள்ள போது அது துன்பப்படுகிறதா மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. வயிற்றுல் உள்ள போது அன்பான எண்ணங்களை செலுத்துகிறோம். பிறந்த பின் துன்பபடுவதை கண்டு அதன் துன்பத்தை குறைக்க முற்படுகின்றோம்.
முதிகை - மற்றவர் மகிழ்ச்சியை கண்டு நாமும் மகிழ்தல்
பின் குழந்தை சிறுமியாகி பள்ளிக்குடம் சென்று படிக்க, விளையாட துவங்குகிறது. வாழ்க்கையில் சில சாதனைகள் புரிய தொடங்குகிறது. சில விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கிறது. அதற்கு ஏக மகிழ்ச்சி. விட்டுக்கு வந்து தான் பள்ளியில் வரைந்த குச்சி போன்ற உருவங்கள் கொண்ட படத்தினை காண்பித்து அது அம்மா இது அப்பா என்று பெருமையுடன் கூறுகிறது. அதற்கு ஏக சந்தோஷம். ஆசிரியரும் நன்றாக வரைந்ததாக கூறினார் என்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது. அதன் சந்தோஷத்தை கண்டு பெற்றோரும் பூரிக்கின்றனர் சந்தோஷப்படுகின்றனர்.
உபேக்கை - சம மன நிலை, அமைதி
இறுதி கட்டம் உபேக்கை. மனக்கலக்கமின்றி, அமைதியாக, நிதானமாக நடுவுநிலைமையில் இருத்தல். இப்போது அந்த குழந்தை பெரியவளாகிவிட்டாள். அதற்கென்று குடும்பம், வேலை, பொருப்புகள். தணியாக இயங்க துவங்கிவிட்டாள். இப்போது பெற்றொரின் முக்கிய மனநிலையாக இருக்க வேண்டியது, "அவள் தனது வாழ்க்கையை தானாக நடத்தட்டும்," என்பது தான். பெற்றோரின் மனநிலை உபேக்கை என்பது. சமமனநிலையோடு இருத்தல். மகள் தனது வாழ்க்கையின் மேடு பள்ளங்களை தானக சாமாளிக்க வேண்டும். எல்லோர் வாழ்க்கையிலும் மேடு பல்லங்கள் இருக்கத்தானே செய்யும்? நாம் அவர்களின் வாழ்க்கையை எடுத்து நடத்த முடியாது. கூடாது. நாம் உபேக்கையை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் அதிர்ஷ்டம் மாறும் போது நாம் சம நிலையாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நாம் தலையிட கூடாது. அவர்கள் ஏற்க வெண்டிய பொருப்பை நாம் ஏற்கக்கூடாது. கண்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றில்லை. புறக்கனித்து, அக்கறை இன்றி இருக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் மேடு பள்ளங்களை வாழ்க்கையில் சந்திக்கும் போது நாம் சம மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். தாங்கள் வாழ்க்கயின் மேடு பள்ளங்களை சந்திக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் சமமனநிலையோடு உபேக்கையோடு ஒருவர் இருப்பது அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
* * * * * *
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
Transcribed from an audio tape available at birken.ca
One way of describing the four attitudes is a commentarial way of putting into perspective. Loving Kindness is the feeling that parents have towards the child while it is still in the womb. You don't know what it looks like, you don't know what is in there (these commentaries are before the times of scans and ultrasounds) but nevertheless there is a strong feeling of wish for well being. You don't know what is in there, whether a girl or a boy, what its qualities and characteristics are. It is a black box. You are just radiating Loving Kindness for this being wishing 'may it be well,' whatever it is in there 'hope it is all right,' 'hope it turns out all right,' 'hope it is not suffering.' So that is Loving Kindness. Towards the members of you family you practice in that blank way. You forget about their personal characteristics all together.
Then the compassion is when the child is born for the first few years of its life it is entirely dependent on the parents so it is you have a chance to practice compassion for it, for it is suffering a lot. Dirty diapers and belly aches and all kinds of stuff. Stumbling around, can't talk all that stuff. Parents have a chance to manifest a wish to relieve their suffering. While it is in the womb you don't know whether it is suffering or happy or whatever but you just have this general diffuse sense of radiation of Loving Kindness.
Then the child gets to a higher stage when it is off to school and running around and playing sports. It tends to have accomplishments in its life. It succeeds at something. And it is very happy. Comes home with a picture of mum and dad, you know the stick drawings that you stick on the refrigerator. 'Daddy'. And it is very pleased with itself. the teacher said this is good. I like it. The that is sympathetic joy. You rejoice in the child's joy.
Last stage is equanimity. That child is now an adult child. And it is growing up and has a family of its own or independent and now your main attitude is, 'it has to lead its own life. It has to deal with its own situation.' Now you main attitude is equanimity - a balanced sterling veritude of being balanced as its goes through the various things that an adult must go through to deal with it. You cannot take command or control over that person's life. You can only just practice equanimity - balance in the midst of their changing fortunes. So in a sense we may apply that to a mother's attitude towards her grown children is now the predominant attitude has to be equanimity - balance in the midst all kinds of moves, things are happening to them . You can no longer intervene or take responsibility for it or anything like that.You simply have to be balanced and equanimous - not apathetic of course . Not callous, not indifferent not uncaring but you have to keep your radiation of equanimity toward them in their ups and downs in their life. That is very very helpful to a person going through things too. Somebody in the wings that is stable. It is very very helpful to have somebody who is staying balanced in the middle of your emergencies, your crises etc. So you might think of it in that way.
* * * * * *