வங்கீசர் சூத்திரம் Vaṅgīsa Sutta
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 2.12
வங்கீசர் சூத்திரம் - வங்கீசர் கேள்விகளும் புத்தரின் பதிலும்
Vaṅgīsa Sutta - Vaṅgīsa’s Questions, Buddha’s Answer
Translated from the Pali by: Laurence Khantipalo Mills
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: லாரண்ஸ் காந்திபாலோ மில்ஸ்
* * *
இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:
ஒருமுறை அண்ணல் ஆலாவியில் அக்காலவ ஆலயத்தில் தங்கியிருந்தார். சற்று முன்னர் தான் போற்றுதற்குரிய வங்கீசரின் உபாத்தியாயர் (ஆசிரியர்), அவர் பெயர் நிக்ரோதகப்ப பெரியவர், அக்காலவ ஆலயத்தில் இறந்து விடுகிறார். வங்கீசர் மனத்தில் இந்தக் கேள்வி எழுந்தது. 'எனது ஆசான் முழுமையான குளுமை (நிப்பாண நிலை, பேராசை, வெறுப்பு, அறியாமை ஆகிய நெருப்புகள் இல்லாத குளுமையான நிலை) அடைந்தாரா இல்லையா?'
பின்னர் வங்கீசர் தனிமையை விட்டு எழுந்து அண்ணலிடம் சென்று அவருக்கு மரியாதை செலுத்திய பின் ஒரு புறமாக அமர்ந்து அண்ணலிடம்: "நான் தியானத்தில் அமர்ந்திருந்தபோது என் மனத்தில் இந்தக் கேள்வி எழுந்தது, 'எனது ஆசான் முழுமையாகக் குளுமை பெற்றுவிட்டாரா இல்லையா?' "
பின் வங்கீசர் தன் இருக்கையிலிருந்து எழுந்து, தன் மேலாடையை ஒரு பக்கத் தோளின் மீது போட்டுக் கொண்டு, மரியாதையுடன் கைகூப்பி அண்ணலிடம் பா வரிகளில் இவ்வாறு கூறினார்:
Thus have I heard:
At one time the Lord dwelt at Āḷāvī, at the Aggāḷava Shrine. Not long before, the venerable Vaṅgīsa’s preceptor, by name the elder Nigrodhakappa, had become completely Cool at the Aggāḷava Shrine. Then in Vaṅgīsa’s mind, being at one and in solitude, arose this thought: “Has my preceptor become completely Cool or has he not?”
Later in the day Vaṅgīsa left his solitude and went to the Lord and having drawn near him, paid his respects and sat to one side. While sitting there Vaṅgīsa said this to the Lord: “While I was sitting in meditation this thought arose in my mind: ‘Has my preceptor become completely Cool or has he not?’”
Vaṅgīsa then arose from his seat, placed his upper robe over one shoulder and, lotussing his hands respectfully, addressed the Lord with these verses.
Vaṅgīsa:
We ask now the Teacher of wisdom supreme—
who’s cut off all doubts in this very life,
that Aggāḷava bhikkhu who died recently,
famous, well-known, was he truly Cool-become?
வங்கீசர்:
நாங்கள் மேன்மையான ஞானம் பெற்ற ஆசிரியரைக் கேட்கிறோம் -
இந்த வாழ்விலேயே தனது சந்தேகங்களை யெல்லாம் தீர்த்தவர்,
சமீபத்தில் இறந்த புகழ்வாய்ந்த கீர்த்தி பெற்ற அக்காலவ பிக்கு,
உண்மையிலேயே நிப்பாண நிலையை அடைந்து விட்டாரா?
His name Nigrodhakappa was,
to that brahmin given by the Radiant One,
he went around revering you, and, strenuous
seeking Liberation, O Seer of the Secure.
அந்தப் பிராமணருக்கு நிக்ரோதகப்ப என்று
பெயர் சூட்டியது பகவர் தான்.
செல்லும் இடங்களிலெல்லாம் அவர் பகவரைப் போற்றிப் பாராட்டினார்
மேலும், ஓ அண்ணலே அவர் வீடுபேறு அடைவதற்குக் கடும் முயற்சி செய்தார்.
O Sakya, All-Seeing, we all wish to know
concerning this hearkener, Kappa by name,
all of our ears are ready to hear—
the Teacher you are, the One unsurpassed.
ஓ சாக்கியரே, எல்லாம் உணர்ந்தவரே (புத்தரே),
கப்ப என்ற பெயர் கொண்ட, தம்மத்தைச் செவிகொடுத்துக் கேட்டவரின்
நிலைபற்றி நாங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
உங்கள் பதிலைச் செவிமடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்
- நீங்கள் ஆசிரியர். உங்களை மிஞ்சியவர் எவரும் இங்கு இல்லை.
Sever our doubt and tell me of this:
that he knew complete Cool, O Wisdom Profound:
tell this in our midst, O All-Seeing One,
as thousand-eyed Sakka by devas ringed.
எங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி அவர் ஞானியானாரா இல்லையா என்பதை
எங்களுக்குத் தெரிவியுங்கள்,
ஓ மெய்ஞ்ஞானம் பெற்றவரே எங்கள் மத்தியில் அதைத் தெரியப் படுத்துங்கள்,
ஓ அனைத்தும் உணர்ந்தவரே, ஆயிரம் கண் கொண்ட சக்கனைச் (தேவர் தலைவணை)
சுற்றியுள்ள தேவர்களைப்போல நாங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளோம்..
Whatever here deluded paths bring on the bondages,
on ignorance’s side, the bases for all doubts,
on reaching the Tathāgatha they cease to be,
for certainly his Eye is supreme among men.
அறியாமையினால் உலக விஷயங்களில் கட்டுண்டவர்கள்,
பல விதமான மயக்கத்தினால், சந்தேகமடைகின்றனர்.
ஆனால் ததாகதரிடம் செல்லும்போது அவைகள் களையப் படுகின்றன
அவரது கண்கள் ஞானக் கண்கள். அவர் மனிதருள் மேன்மையானவர்.
If never, no one, could defilements disperse,
as forceful wind a piled-up mass of clouds,
enshrouded would be, for sure, the whole world,
and even the illustrious would have no chance to shine.
சூறைக் காற்று முகிற்கூட்டத்தைத் துரத்தி விடுவதுபோல,
யாராலும் மனமாசுகளை நீக்க முடியாவிட்டால்,
உலகமே நிச்சயமாக இருள் சூழ்ந்து விடும்.
புகழ் பெற்றவரும் பிரகாசிக்க வாய்ப்பு இருக்காது.
But the Wise in this world are the makers of light
and you, a Wise One, are such I conceive,
we have come upon Him who Knows and who Sees—
to those here assembled, Kappa clearly reveal.
ஆனால் மெய்ஞ்ஞானம் உடையவர்களே இவ்வுலகிற்கு வெளிச்சம் காட்டுவோர்.
அண்ணலே நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர்,
நாங்கள் அத்தகைய எல்லாம் தெரிந்தவரிம்,
அறிவு நுட்பம் உடையவரிடம் (தீர்க்கதரிசியிடம்) வந்துள்ளோம்.
இங்கு கூடியிருப்போருக்குக் கப்பரைப் பற்றிக் கூறவும்.
Swiftly send forth fair speech, O Fairest One,
as swan (its neck) stretches sounding softly forth;
with your melodious voice so well-modulated
to it we listen, all of us, attentively.
அழகுமிக்கவரே, தங்கள் பதிலுரையை விரைவில் கூறவும்,
அன்னம் (தன் கழுத்தை) மென்மையான சத்தத்துடன் நீட்டுவது போல;
உங்கள் இனிமையான குரல், உயர்வு தாழ்வு இல்லாதது.
நீங்கள் சொல்லப் போவதைக் கேட்கத் துடிப்புடன் உள்ளோம்.
Remainderless, you’ve let go of birth and death—
I’ll urge the One who’s Cleansed to Dharma teach;
ordinary persons cannot act out their desires, [1]
but with discrimination Tathāgatas act.
பிறப்பையும், இறப்பையும் விட்டுவிட்ட உங்களை வலியுறுத்துகிறோம் -
தூய்மையானவரைத் தன்மத்தைப் பேச வற்புறுத்துகிறோம்;
சாதாரண மனிதர் தாங்கள் விரும்பியதைச் செய்யவியலாது [1]
ஆனால் ததாகதர்கள் விவேகத்துடன் நடந்து விரும்பியதைச் செய்து முடிப்பர்.
(Your) expositions (of Dharma) so thoroughly based
on straightforward wisdom then thoroughly grasped;
(and he) last lotussed his hands with greatest
so do not delude us, You of wisdom supreme.
உங்கள் முழுமையான விளக்கம் நேர்மையான மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது.
அவை நன்றாகக் கற்கப்பட்டவை;
இறுதியாக மரியாதையுடன் கைகூப்பிக் கேட்கிறேன்: மேன்மையான மெய்ஞ்ஞானம் உடையவரே,
எங்களை அறியாமையில் (கப்பரின் நிலையைப் பற்றி) வைத்திருக்க வேண்டாம்.
Having known the Dharma noble, the basics and refined,
You the Energetic One who Knows, do not delude.
I long for your words as for water one does
in summer season by heat overcome.
Rain down on our ears!
உன்னத அறத்தைத் தெரிந்தவரே, ஆற்றலுடையவரே,
(கப்பரின் விதியை) தெரிந்தவரே, எங்களை அறியாமையில் வைத்திருக்க வேண்டாம்.
கோடைகாலத்தில் வெப்பத்தில் வாடிப்போனவர்
நீருக்காக ஏங்குவது போல, உங்கள் வார்த்தைகளுக்கு எங்குகிறோம்.
எங்கள் காதில் மழை பொழியுங்கள்!
That purpose for which Kappāyana led
the life of purity—surely it wasn’t in vain;
did he become Cool or did residues remain—
tell of his Freedom, that we long to hear.
கப்பயானர் வாழ்ந்த தூய்மையான
வாழ்க்கை - கண்டிப்பாக வீண் போயிருக்காது;
அவர் எல்லா மாசுகளையும் களைந்தாரா (ஞானியாக இறந்தாரா), இல்லை
இன்னமும் சில மாசுகள் அவரிடத்தில் மிஞ்சியிருக்கின்றனவா (மறுபிறப்பெடுப்பாரா)?
அவர் பெற்ற சுதந்திரத்தை பற்றிக் கூறுங்கள், அவர் எந்த நிலையில் இறந்தார் என்று தெரிந்து கொள்ள ஏங்குகிறோம்.
Buddha
Craving he cut for mind and body both —
craving’s stream that long had lain within him;
completely he has crossed beyond all birth and death — So the Blessed One spoke, the Fore before the Five. [2]
புத்தர்:
நீண்ட நாள் அவருள் ஓடிக் கொண்டிருந்த வேட்கை ஓடையை -
மனத்திற்கும் உடலுக்கும் இருந்த வேட்கையை அவர் அறுத்து விட்டார்;
முழுமையாகப் பிறப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு அப்பால் சென்று விட்டார் -
இவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டவர் கூறினார், அந்த ஐவருக்கு முதல்வர். [2]
Vaṅgīsa:
Hearing your word, O Seventh of Seers,
I’m both pleased and truly satisfied.
Truly my question’s not in vain—
that brahmin did elude me not!
வங்கீசர்
முனிவருள் சிறந்தவரே, உங்கள் வார்த்தைகளைக் கேட்டு,
நான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன்.
என் கேள்வி வீண்போகவில்லை -
அந்தப் பிராமணர் (என் ஆசிரியர்) என்னை ஏமாற்றவில்லை!
As he spoke, he acted so,
one of the Buddha’s hearkeners
who rent the deceiver Māra’s net,
spread wide and very strong.
அவர் பேசியது போலவே அவர்
நடந்தும் கொண்டார்,
புத்தரின் போதனைகளைச்
செவிமடுத்துக் கேட்டவர்
ஏமாற்றுகாரன் எமன் போட்ட
விரிவான வலிமையான மரண
வலையில் சிக்கவில்லை.
Lord, Kappa the capable
saw graspings’, clingings’ source;
Kappāyana has gone beyond
death’s realm so hard to cross.
அண்ணலே, திறமையான கப்பர்
பற்றின், வேட்கையின் ஆதாரத்தைப் (துவக்கத்தைப்) பார்த்தவர்;
கப்பயானர், அடைவதற்குக் கடின இடமான
மரணத்துக்கு அப்பால் சென்று விட்டார்.
* * *
Notes:
விளக்கம்:
[1] "Among outsiders (puthujjana), trainees (sekha), and arahant disciples there is no ability to do whatever they wish; they cannot know or speak whatever they want. But the Tathaagatas act with discretion; their actions are preceded by wisdom. The point is that they can know or speak whatever they want."
சாதரணமானவர்களுக்கு முழுமையான ஞானம் இல்லாததால் அவர்கள் விரும்பியதைச் செய்யும் திறமையற்றவர்கள். ஆனால் ததாகதர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும். Source
[2] The Buddha is regarded as the foremost, that is, the chief or leader and teacher of the group of five monks who heard the First Sermon. Thaga gives other explanations of the word, i.e. "controller of the five senses."
புத்தர் தான் முதன்மையாமானவர். அவர் தான் ஞானம் பெற்றபின் செய்த முதல் போதனையின் போது ஐந்து துறவிகளுக்கு அதைப் போதித்தார். இது ஒரு விளக்கம்.
ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்தியவர் புத்தர். இது மற்றொரு விளக்கம்.
Source: These lines are also in: Theragatha lines 1263, 1279
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
© Details from English Source With gratitude to https://suttacentral.net for English source.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.