மரக்கறி உணவுமுறை

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை

8. மரக்கறி உணவுமுறை

Vegetarianism

வினா: பௌத்தர்கள் மரக்கறி உணவு உண்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தானே?

விடை: அவசியமில்லை! புத்த பெருமான் மரக்கறி உணவாளர் அல்லர். புத்த பெருமான் அவர்தம் மாணவர்களை மரக்கறியுணவு மட்டும் உண்ணச் சொல்லவில்லை. இன்றும் பல நல்ல பௌத்தர்கள் மரக்கறி உணவுமட்டும் உண்பவர்களல்லர்.

பௌத்த நூட்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:

"முரட்டுத்தனமுடையவராயும், இரக்கமற்றவராயும் இருப்பதும், ஒருவரைக் காணாதபோது பழியுரைப்பதும், ஒருவரின் நண்பர்களுக்குத் துன்பம் விளைவிப்பதும், கல்நெஞ்சுடையவராய் இருப்பதும், அகந்தையுடனும், பேராசையுடனும் இருப்பதும் - இவையே ஒருவரை தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை."

"நெறிகெட்ட நடத்தையும், வாங்கிய கடனைத் திருப்பித் தராததும், தொழில் முறையில் ஏமாற்றுவதும், மக்களிடையே பிளவை உண்டாக்குவதும் - இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை."

QUESTION: Buddhists should be vegetarians, shouldn't they?

ANSWER: Not necessarily. The Buddha was not a vegetarian, he did not teach his disciples to be vegetarian and even today there are many good Buddhists who are not vegetarians. In the Buddhist scriptures it says;

“Being rough, pitiless, back-biting, harming one's

friends, being heartless, arrogant and greedy – this

makes one impure, not the eating of meat.

Being of immoral conduct, refusing to repay debts,

cheating in business, causing divisions amongst

people – this makes one impure, not the eating of meat.” Sn. 246-7

* * * * * * * *

வினா: நீங்கள் புலால் உண்டால் மறைமுகமாக ஓருயிரின் சாவுக்குக் காரணமாக மாட்டீர்களா? இச்செய்கை முதல் நல்லொழுக்கத்தை மீறியதாக ஆகாதா?

விடை: நீங்கள் புலால் சாப்பிட்டால் ஓருயிரின் சாவுக்கு மறைமுகமாகவும், பகுதியாகவும் காரணமாகிறீர்கள். அதே சமயத்தில் காய்கறி உணவு உண்ணும் போதும் ஓருயிரின் சாவுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள் என்பதும் உண்மைதான். விவசாயி பூச்சிக் கொல்லி மருந்துகளையும், நச்சுக் கலவையையும் பயிர்களின் மேல் தெளிப்பதால் காய்கறிகள் துளைகள் ஏதுமின்றி நம் உணவாகின்றன. மேலும் விலங்குகள் கொல்லப்படுவதால்தான், உங்களுக்கு இடைவார்கள், கைப்பை, எண்ணெய், சோப்பு மற்றும் நாம் உபயோகிக்கும் ஆயிரக்கணக்கான பொருள்கள் கிடைக்கின்றன. மற்ற உயிர்களின் மரணத்துக்கு மறைமுகமாகவோ, பகுதியாகவோ காரணமாகாமல் வாழ்வோமென்பது இயலாத காரியம். அடுத்து, உயிரினமாகப் பிறந்து விட்டால், புத்த பெருமான் போதித்த நான்கு பேருண்மைகளில் ஒன்றான, முதல் உண்மையான எல்லா உயிர்களும் அனுபவிப்பது "துக்கம்” என்பது உறுதியானது. முதல் நல்லொழுக்கத்தை ஏற்கும் போது நாம் நேரடியாக எந்த உயிரையும் கொள்ளுதலைத் தவிர்க்க முற்படுகிறோம்.

QUESTION: But if you eat meat you are responsible for animals being killed. Isn't that breaking the First Precept?

ANSWER: It is true that when you eat meat you are indirectly or partially responsible for killing a creature but the same is true when you eat vegetables. The farmer has to spray his crop with insecticides and poisons so that the vegetables arrive on your dinner plates without holes in them. And once again, animals have been killed to provide the leather for your belt or handbag, the oil for the soap you use and a thousand other products as well. It is impossible to live without, in some way, being indirectly responsible for the death of some other beings. This is yet another example of the First Noble Truth: ordinary existence is suffering and unsatisfactory. When you take the First Precept, you try to avoid being directly responsible for killing beings.

* * * * * * * *

வினா: மகாயானப் பௌத்தப் பிரிவினர் புலால் உண்பதில்லையல்லவா?

விடை: அப்படிச் சொல்வது சரியல்ல. சீனநாட்டு மகாயானப் பௌத்தர்கள் மரக்கறியுணவையே வலியுறுத்துகின்றனர். ஆனால், ஜப்பான், மங்கோலியா மற்றும் திபெத்து நாட்டைச் சேர்ந்த பௌத்தத் துறவிகளும் இல்வாழ்வோரும் வழக்கமாகவே புலால் உண்கின்றனர்.

QUESTION: Mahayana Buddhists don't eat meat.

ANSWER: That is not correct. Mahayana Buddhism in China laid great stress on being vegetarian but both the monks and lay people of the Mahayana tradition in Japan, Mongolia and Tibet usually eat meat.

* * * * * * * *

வினா: இருந்தாலும் பௌத்தர்கள் மரக்கறியுணவு உண்பவர்களாக இருப்பதையே நல்லதென்று நான் நினைக்கிறேன்.

விடை: ஒருவன் மிகக் கடுமையான மரக்கறியுணவு உண்பவனாக இருந்தும், சுயநலக்காரனாகவும், நேர்மையற்றவனாகவும், கேவலமானவனாகவும் இருந்து மற்றொருவன் புலால் உண்பவனாக இருந்தும், மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பவனாக, நேர்மையானவனாக எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துபவனாக இருந்தால், இவ்விருவரில் எவன் சிறந்த பௌத்தனாவான்?

நேர்மையானவனும் அன்பு கொண்டவனும் தான்.

ஏன்?

அப்படிப்பட்ட ஒருவன் தெள்ளத்தெளிவான நல்ல மனத்தைக் கொண்டவனாவான்.

மிகவும் சரி. புலால் உண்ணும் ஒருவன் தூய்மையான மனத்தை உடையவனாகவும், புலால் உண்ணாத ஒருவன் தூய்மையற்ற மனத்தை உடையவனாகவும் இருக்கலாம். புத்தபெருமானின் போதனைகளில் முக்கியமானது உங்கள் மனத்தின் தன்மையே. உங்கள் உணவில் என்ன கலந்திருக்கிறது என்பதல்ல. பல பௌத்தர்கள் புலாலைத் தவிர்ப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால், சுயநலக்காரர்களாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! நேர்மையற்றவர்களாகவும், கொடுமையானவர்களாகவும், பொறாமைக் காரர்களாகவும் இருக்கிறார்கள்! அவர்கள் மிகச் சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய உணவு முறையை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், தங்கள் மனத்தை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. அது அவர்களுக்குச் சிரமமாகத் தோன்றுகிறது. நீங்கள் புலால் உண்பவரோ, இல்லையோ ஆனால் பௌத்த சமயத்தில் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே முக்கியமாகும்.

QUESTION: But I still think that a Buddhist should be vegetarian.

ANSWER: If there were a person who was a very strict vegetarian but who was selfish, dishonest and mean, and another person who was not vegetarian but who was thoughtful to others, honest, generous and kind, which of these two people would be the better Buddhist?

The person who was honest and kind.

Why?

Because such a person obviously has a good heart.

Exactly. One who eats meat can have a pure heart just as one who does not eat meat can have an impure heart. In the Buddha's teachings, the important thing is the quality of your heart, not the contents of your diet. Many people take great care never to eat meat but they may not be too concerned about being selfish, dishonest, cruel or jealous. They change their diet which is easy to do while neglecting to change their hearts which is a difficult thing to do. So whether you are a vegetarian or not, remember that the purification of the mind is the most important thing in Buddhism.

* * * * * * * *

வினா: ஆனால் பௌத்தர்களின் நோக்கின்படி, நல்ல உள்ளம் கொண்ட மரக்கறி உண்பவர், நல்ல உள்ளம் கொண்ட புலால் உண்பவரை விட மேலோங்கியவர் தானே?

விடை: நல்ல உள்ளம் கொண்ட மரக்கறி உண்பவரின் நோக்கம் என்ன என்பது முக்கியம். இக்காலத்தில் புலால் உணவு உற்பத்தியாகும் தொழிற்சாலைப் பண்ணைகளில் மிருகங்கள் கொடூர வாழ்வு வாழ்கின்றன. (சான்றாக இக்காலக் கோழிப் பண்ணைகளில் சிறு கூண்டுகளில் இரண்டு மூன்று கோழிகள், மூக்கு வெட்டப் பட்டு, வாழ்நாள் முழுதும் சிறகு விரிக்கக்கூட முடியாமல் வதைப் படுகின்றன.) இப்படிப்பட்ட பண்ணைகளின் கொடூரத்தோடு தொடர்பேதும் வைத்துக்கோள்ள வேண்டாமென்பதாலும், மிருகங்களின் மீதான அக்கரையுமே மரக்கறி உண்பரின் நோக்கமென்றால் அவர் தனது இரக்கவுணர்வை புலால் உண்பவரை விட மேலோங்கி வளர்த்துக் கொண்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். பலரும் அவர்கள் உள்ளத்தில் தம்மம் வளர இயல்பாகவே மரக்கறி உண்பவர்களாக மாறுகிறார்கள்.

QUESTION: But from the Buddhist point of view, would the person who had a good heart and was vegetarian be better than the person who had a good heart but was a meat eater?

ANSWER: If a good-hearted vegetarian’s motive in avoiding meat was concern for animals and not wanting to be involved in the cruelty of modern industrial farming, then he or she would definitely have developed their compassion and their concern for others to a higher degree than the meat eater would have. Many people find that as they develop in the Dhamma that they have a natural tendency to move towards vegetarianism.

* * * * * * * *

வினா: புத்தர் கெட்டுப்போன பன்றிக் கறி உண்டதனால் தான் இறந்தார் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா?

விடை: இல்லை, உண்மை இல்லை. பௌத்த சமய அறநூல்களின்படி புத்தரின் கடைசிச் சாப்பாடு 'சுகர மத்தாவா' என்ற உணவு கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் இன்றைக்குத் தெளிவாகத் தெரியவில்லை. 'சுகர' என்றால் பன்றி, எனவே பன்றிக்கறி கொண்ட உணவாக இருக்கலாம். ஆனால் அது ஒரு வகையான காய்கறிப் பொரியலாகவோ ஒரு வகைப் பண்டமாகவோகூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த உணவின் பெயர் குறிப்பிட்டிருப்பதால் அது தான் புத்தரின் இறப்பிற்குக் காரணம் என்று சிலர் நினைக்கின்றனர். புத்தர் அவரது 80 ஆவது வயதில் இறக்கும் போது சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். உண்மையென்னவென்றால் அவர் வயோதிகத்தினால் தான் இறந்தார்.

QUESTION: Someone told me that the Buddha died from eating spoiled pork. Is that true?

ANSWER: No, it is not. The scriptures mention that the Buddha’s last meal consisted of a dish called sukara maddava. The meaning of this term is no longer understood but the word sukara means a pig so it may refer to a preparation of pork although it might just as easily refer to a type of vegetable, a pastry or something else. Whatever it was, the mention of this food has led some people to think that eating it caused the Buddha’s death. The Buddha was 80 at the time he passed away and he has been ailing for some time. The reality is that he died of old age.

* * * * * * * *