சார்பில் தோற்றம் முகப்பு Dependent Origination Home
Paticca Samuppada
Dependent Arising - Bhikku Bodhi
படச்ச சமுப்பாத
சார்பில் தோற்றம் - பிக்கு போதி
இந்தப் போதனையின் முக்கியத்துவம் Importance of this teaching
இது இருந்தால் அது இருக்கிறது When there is this.. that comes to be!
முதற்காரணம் The first cause of the Universe..
சம்சார சக்கரத்தின் ஆரைகள் Spokes of the wheel of existence..
தவலில் துன்பம் தலைவரும் என்ப... Such is the arising of suffering..
இந்த உயிர் முந்தைய உயிரின் விளைவு.. Our present life.. the result of our past life..
ஞானம் பெற்றதால் கண்டுபிடித்தது The striking discovery of the enlightenment..
சார்பில் தோற்ற நடைமுறைச் செயற்பாடு Practical Implementation of the Theory of Dependent Arising
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மா-சம்புத்தாஸ.
Namo tassa bhagavato arahato sammā-sambuddhassa.
பாலி மொழி வார்த்தையான 'படச்ச சமுப்பாத' என்பது இரண்டு வார்த்தைகளின் சேர்க்கையாகும்.
'படச்ச' என்றால் சார்ந்த, ஆன, காரணமாக என்றும், 'சமுப்பாத' என்றால் தோன்றுதல் என்றும் பொருள்படும். ஆனால் சாதாரணத் தோன்றல் இல்லை. 'சம்' என்ற முன் சேர்க்கைச் சொல் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பால் உண்டான சிக்கலான தோற்றம் என்ற கருத்தை முன்வைக்கிறது.
The Pali word Paticca Samuppada is a compound of two words.
Paticca means depending on, because off, conditioned by.
Samuppada means arising. But not a simple arising. The prefix Sam- suggests the idea of complexity, of the inter-connectedness or inter-relatedness, characterising the process of arising.
* * * * *
இந்தப் போதனையின் முக்கியத்துவம் Top
புத்த பகவான் மொழிந்த பல சூத்திரங்களிலிருந்து இந்தப் போதனையின் முக்கியத்துவத்தை அறியலாம். ஒரு சூத்திரத்தில் பகவான், சார்பில் தோற்றத்தைக் காண்பவன் அறத்தைக் காண்கிறான் என்றும், அறத்தைக் காண்பவன் சார்பில் தோற்றத்தைக் காண்கிறான் என்றும் குறிப்பிடுகிறார். அறம் அல்லது தம்மம் தான் புத்தர் கண்டெடுத்த வாய்மை. எதையும் சார்ந்து இல்லாத, தனித்து நிற்கக் கூடிய வாய்மை. ஆக இந்தக் கூற்றினால் புத்தர் அவர் அறிந்த ஆழமான வாய்மையைச் சார்பில் தோற்றத்தோடு ஒப்பிடுகிறார்.
வேறு சில சூத்திரங்களில் புத்தர் தாம் ஞானம் பெற எடுத்த படிகளை விவரிக்கும் போது ஞானம் பெறுவதற்கு முன்னர் தான் துக்கத்தை உண்டாக்கும் காரணங்களைப் பிரதிபலிக்கும் போது அது சார்பில் தோற்றக் கோட்பாட்டிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார். ஆக வேறு கோணத்தில் பார்க்கும் போது சார்பில் தோற்றத்தின் கண்டுபிடிபை ஞானம் பெறுவதோடு ஒப்பிடலாம்.
புத்தர், தான் ஞானம் பெற்ற பின் பல வாரங்கள் சார்பில் தோற்றத்தின் மீது தியானம் செய்ததாகக் கூறுகிறார். அதில் உள்ள நிதானங்களை ஒவ்வொன்றாக வரிசைக் கிரமப்படி மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் பிரதிபலித்தாகக் கூறுகிறார்.
பிறிதொரு சமயம் (திக நிகாயம் 15ஆம் சூத்திரம்) புத்தரின் அணுக்கத் தொண்டரான ஆனந்தர் அவரிடம், 'ஐயா, சார்பில் தோற்றக் கோட்பாடு ஆழமானதென்று கூறப்பட்டாலும், அதை ஐயப்பாடில்லாமலும், தெளிவாகவும் நான் அறிந்து கொண்டேன். மேலும் அது தோற்றத்திற்கும் தெளிவாக உள்ளது.' என்றுகூறினார். அதைக்கேட்ட புத்தர், 'ஆனந்தா, அப்படிச் சொல்லாதே; அப்படிச் சொல்லாதே. இந்தச் சார்பில் தோற்றக் கோட்பாடு அறிவதற்கு மிக ஆழமானது. பார்ப்பதற்கும் ஆழமானது. இந்தக் கோட்பாட்டினை அறியாததால் தான் மனிதர்கள் ஒரு சிக்கலுற்ற நூற்கண்டைப் போலவும் ஒரு முட்புதரைப் போலவும் சிக்கலில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் இந்த சம்சாரச் சுழலிலிருந்து தப்ப முடியாமல் திரும்பத் திரும்ப மறுபிறப்பெடுத்துக் கொண்டுள்ளனர்' என்று கூறினார். (ஆனந்தர் முழு ஞான நிலையான அரஹந்த நிலையை அடையாததால் இந்தக் கோட்பாட்டினை மேலோட்டமாகப் புரிந்து கொண்டிருந்தாலும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைப் புத்தர் அறிந்திருந்தார். புத்தர் பரிநிப்பாணம் அடைந்த பின்னர்தான் அதாவது மறைந்த பின்னர்தான் ஆனந்தர் அரஹந்த நிலை பெற்றதாகத் திரிபிடகத்தில் கூறப்படுகிறது.)
ஆக சார்பில் தோற்றக் கோட்பாடு புத்தரின் ஞானநிலை சம்பந்தப்பட்டது மட்டுமின்றி, தம்மம் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் வாய்மை சம்பந்தப்பட்டதுமாகும். அதனை அறிந்து விடுதலை பெற வேண்டும். அதனை அறியாததனால் தான் நாம் பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற சம்சாரச் சுழலில் சிக்கிக் கொண்டு அந்தச் சுழலிலிருந்து விடுதலை பெறாமல் தவிக்கின்றோம்.
ஆக புத்தரின் போதனைகளின் சாரம் சார்பில் தோற்றத்தில் இருப்பதை உணரலாம். அதனை அறிவாற்றலோடு புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உள்ளப் பூர்வமாகவும் உணர்ந்து வீடுபேறடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
Importance of this teaching
The great importance of this teaching can be seen from several suttas spoken by the Buddha. In one sutta the Buddha says that one whos sees Dependent Arising sees the Dhamma. And one who sees the Dhamma sees Dependent Arising. The Dhamma is the Truth discovered by the Buddha. Truth that exists by itself, independent of all other influences. In this statement the Buddha makes an explicit equation between the profound truth he has realized and Dependent Arising.
Again it is said in some other suttas in his description of his own quest for enlightenment the Buddha says that immediately before his enlightenment he was sitting in meditation began inquiring into the chain of conditions seeking the causal origination of suffering. This inquiry led him to the discovery of DA. So from one angle we can equate the discovery of DA with the attainment of enlightenment itself.
Another time (15 th sutta of the Diga Nikaya) the Buddha's attendent the venerable Ananda comes to the Buddha and he says, 'Bhante/Sir, Even though the doctrine of Dependent Arising is said to be very deep, to myself it seems very clear and very obvious and it also appears very clear and obvious.' When this was said the Buddha replied, 'Ananda, Do not speak in this way. Do not speak in this way. This Dependent Arising is deep in Truth and it is deep in its appearance. It is through not understanding, through not penetrating this Dhamma of Dependent Arising that this generation of living beings has become entangled like a matted ball of thread, become like grass and rushes unable to pass beyond the woeful states of existence and samsara the cycle of existence.'
So Dependent Arising is not only the contents of Buddha's enlightenment, not only the contents of the Dhamma but it is also the Truth that has to be realized to gain liberation. It is through not seeing and not understanding Dependent Arising that we have wandered and roamed in the cycle of Birth and Death and it is by penetrating the Truth of Dependent Arising that we are to gain freedom liberation from the cycle of Birth and Death.
So you can see that the essence of the Buddha's teaching lies precisely in Dependent Arising. It is the key not only to an intellectual understanding of the Dhamma but to the attainment of liberation.
* * * * *
சார்பில் தோற்றக் கோட்பாடு Top
சார்பில் தோற்றப் போதனைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று இந்தப் போதனை ஒரு பொதுமையான கோட்பாடு (generalization). அதன் இரண்டாது அம்சம் புத்தரின் போதனைகள் அக்கறை கொள்ளும் பிரச்சனையைத் தீர்ப்பது சம்பந்தப் பட்டது - அது தான் நாம் வாழ்க்கையில் அனுபவிக்கும் துக்கம் என்ற பிரச்சனை.
சார்பில் தோற்றத்தை ஒரு பொதுமையான கோட்பாடு என்ற வகையில் உலகில் நடக்கும் எல்லாச் செயற்றொடர்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அது பொருந்தும். இந்தக் கோட்பாட்டிற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அதற்குப் புற ஆதரவும் தேவைப் படுவதில்லை. அதாவது தோன்றுவதெல்லாம் காரணங்களாலேயே தோன்றுகின்றன. தோன்றிய எல்லாமும் காரணிகளாலேயே நிலைத்திருக்கின்றன. அந்தக் காரணிகளின் ஆதரவில்லாமல் அச்செயல்கள் தோன்றி இருக்கவும் முடியாது. நிலைத்தும் இருக்காது.
இதனை பின்வரும் விதிமுறையால் தெளிவு படுத்தலாம்:
இது இருந்தால் அது இருக்கிறது.
(இமஸ்மிம் சதி இதம் ஹோதி):
இது உண்டானால் அது உண்டாகிறது.
(இமஸ்ஸுப்பாதா இதம் உப்பஜ்ஜதி)
இது இல்லையானல் அது இல்லை.
(இமஸ்மிம் அசதி இதம் நஹோதி)
இது ஒழிய அது ஒழிகிறது.
(இமஸ்ஸ நிரோதா இதம் நிருஜ்ஜதி)
இதன் முதல் இரண்டு வரிகள் காரண காரிய முறையில் நிகழ்ச்சிகள் தோன்றுவதை விளக்குகிறது.
கடைசி இரண்டு வரிகள் சார்பின்மையால் அந்நிகழ்ச்சிகள் முடிவுறுவதை விளக்குகிறது.
A இருந்தால் B இருக்கிறது.
A உண்டானால் B உண்டாகிறது.
A இல்லையானல் B இல்லை.
A ஒழிந்தால் B ஒழியும்.
B தோன்றுவதற்கு A இருக்க வேண்டும்.. அதாவது A என்ற காரணி இருப்பதால் B தோன்றுகிறது. உதாரணமாக ஆப்பில் விதைகளைச் சார்ந்து ஆப்பில் மரங்கள் இருக்கின்றன. ஆப்பில் விதை இருந்தால் ஆப்பில் மரம் தோன்றச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆப்பில் விதை தோன்றினால் ஆப்பில் மரமும் தோன்றலாம்.
B தோன்றக் காரணமான A இல்லையென்றால் B இருக்கமுடியாது. B, A யைச் சார்ந்து இருப்பதால், A இல்லாத போது B யும் இருக்காது. மேலும் A மறைந்து விட்டால் B யும் மறைந்து விடும்.
ஆப்பில் மர உதாரணத்திற்கு மறுபடியும் வருவோம். ஆப்பில் விதை இல்லையென்றால் மரமும் இருக்க முடியாது. விதை அழிந்து விட்டால் ஆப்பில் மரம் தோன்ற முடியாது. ஏனென்றால் ஆப்பில் மரமான B, விதையான A வைச் சார்ந்து இருக்கின்றது.
LAW OF CONDITIONALITY
Now the teaching of Dependent Arising has two aspects.One aspect is an abstract principle or what we might call a structural principle.The second aspect is the application of that principle to the problem - which is the main concern of the Buddha's teaching - i.e the problem of suffering. In the abstract form, as a structural principle, Dependent Arising is the most fundamental law underlying every process and event that can occur. This law is beginning-less and endless. A law that has no external ground and requires no external support. This structural principle that underlies all phenomena is the law of conditionality. That is, whatever arises, arises in dependence on conditions; everything that exists, exists in dependence on conditions. And without the support of the appropriate conditions, the given phenomena will not be able to arise and will not be able to remain in existence.
This is illustrated by this formula:
"When there is this, that comes to be; with the arising of this, that arises. When there is not this, that does not come to be; with the cessation of this, that ceases."
The first part of the formula, the positive part, explains the conditional arising of phenomena.
The second part explains their conditional cessation.
In order for any factor B to come into existence its condition A must exist, or be operative. That is B arises through the contribution of its condition A. To give an example, apple trees exist in dependence on the apple seeds. If there is an apple seed, an apple tree can come into existence. If an apple seed comes into being, the tree can come into being.
When A, the condition for the occurrence of B, does not exist, then the phenomenon B will not exist. But as B exists in dependence on A, then with the absence of A, B will not occur, and if A ceases, then B will cease.
Thus coming back to the apple tree, if there is no apple seed, then there can't be any tree, and if the seed is destroyed, then there can be no growth of the apple tree. For the tree B depends on the seed A.
* * * * *
முதற்காரணம் Top
சார்பில் தோற்றக் கோட்பாடு எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஒரு தூசிலிருந்து பிரபஞ்சங்கள் உட்பட, ஒரு கணப்பொழுது நீடிக்கும் எண்ணத்திலிருந்து ஒரு பேரரசு வரை - காரணங்களால் உருவானவை எல்லாம் அவற்றுக்கான காரணிகள் இருந்தால் தான் தோன்றுகின்றன. காரணிகள் இல்லாவிட்டால் அவைகள் தோன்றாது.
இந்தச் சார்பில் தோற்றக் கோட்பாட்டினைப் புத்த பகவான் உருவாக்கவில்லை. அது எப்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. புத்தர், 'புத்தர்கள் தோன்றினாலும் தோன்றா விட்டாலும் இந்தக் கோட்பாடு இருக்கும்,' என்றார்.
காரணங்களால் தோன்றிய அனைத்தும் அக்காரணிகளைச் சார்ந்தே தோன்றுகின்றன. இந்தக் கோட்பாட்டினைப் புத்தர் ‘வாய்மை’ என்றார். மாறாத, மாற்ற முடியாத கோட்பாடென்றார். எல்லா நிகழ்வுகளுக்கும் அடித்தலமான கோட்பாடென்றார்.
பௌத்தக் கருத்தான சார்பில் தோற்றம் ஒரே ஒரு காரணத்தைச் சார்ந்துதான் செயல்கள் தோன்றுவதாகக் கருதுவதில்லை. பல காரணிகள் ஒரு செயலைத் தோற்று விக்கின்றன. பௌத்த விளக்கத்தின்படி இந்தக் கோட்பாடு ஒரு குளத்தில் பரவும் நீர் அலைகள் போலவும், சிலந்தி வலையின் பின்னல்கள் போலவும் பல காரணிகளின் சார்பினால் தோன்றுகின்றன என்றும், பின் தோன்றிய அச்செயல்கள் பிற நிகழ்வுகள் தோன்றக் காரணமாகின்றன என்றும் கூறுகின்றது. ஆக பல காரணங்களால் நிகழ்வுகள் தோன்றுகின்றன. தோன்றிய நிகழ்வுகளும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக ஆப்பில் மரம், ஆப்பில் விதையின் காரணமாக மட்டும் தோன்றுவதில்லை. விதை தான் முக்கிய காரணம் என்றாலும், மரம் தோன்ற மண்ணும், நீரும், வெளிச்சமும், உரமும் தேவை. ஆப்பில் மரமும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆப்பில் மரம் பல ஆப்பில் பழங்களை உருவாக்குகிறது. அந்த ஒவ்வொரு ஆப்பில் பழத்திலும் பல விதைகள் இருக்கின்றன. அவை மேலும் பல ஆப்பில் மரங்கள் தோன்றக் காரணிகளாகின்றன. அதிலிருந்து மேலும் பல ஆப்பில் விதைகள் தோன்றுகின்றன.
ஆக பல காரணங்களினால் பல விளைவுகள் உண்டாகி ஒவ்வொரு விளைவும், காரணமாக மாறி மேலும் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஆகவே இந்தச் சிக்கலான சிலந்தி வலை போன்ற சம்பவங்களுக்கு மூல காரணம் என்று ஒன்றும் இல்லை. பௌத்தத்தின் சார்பில் தோற்றக் கோட்பாட்டிற்கும், மேற்கத்திய சிந்தனைமுறைக்கும் உள்ள ஒரு வித்தியாசம் இதுவே. பொதுவாக நாம் (ஆசிரியர் பிக்கு போதி ஒரு மேற்கத்தியர்) காரண காரியத் தொடர்பிற்கு ஒரு மூல காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். சில மதங்கள் அந்த முல காரணம் கடவுள் என்கின்றன. கடவுள் பிரபஞ்சத்தை அவரது விருப்பத்தினால் உருவாக்கினார் என்றும், அதனால் இந்தக் காரண காரியச் செயற்றொடர் துவங்கியது என்றும் கூறுகின்றன. ஆனால் பௌத்த நோக்கில் இந்தத் தொடருக்கு முதல் காரணம் என்று ஒன்றும் இல்லை. காரண காரியத் தொடரின் துவக்கத்தை நினைத்துப் பார்க்க முடியாது. காலவரையற்ற செயற்றொடர் இது.
THE FIRST CAUSE OF THE UNIVERSE..
This law of conditionality embraces all existing phenomena. From a particle of dust to a world systems, from a fleeting thought to a whole empire. Everything that is put together, that is compounded, comes into existence only through its appropriate conditions. And if the conditions do not exist, then the phenomenon will not exist.
Now this law of conditionality is not the creation of the Buddha. It is a law that is always operative. The Buddha says whether enlightened ones arise or do not arise, this law remains.
That all compounded things come into being in dependence on their conditions. This principle of conditionality the Buddha calls actual reality. He says it is unvaraible, unalterable. It is the fundamental principle that underlies the occurrence of every event.
The Buddhist conception of DA does not recognize a single cause. Phenomena do not arise only from one cause, but from any conditions.
The Buddhist model of conditionality works with the notion of a complex, interrelated network of conditions, of events linked together like the ripples of water on a pond or lake the fibres of a spider's web. They are nodes in a network rather than points in a straight line. In the Buddhist idea of conditionality, no phenomenon arises from a single cause; for any phenomenon to arise there must be many conditions, many causal factors must work together in a functional integration. Further, any phenomenon that comes to being through these many conditions, itself serves as a condition for the arising of many other phenomena. Thus each causal factor has not only one effect, but many effects.
For example, the apple tree does not arise only from the seed. The seed is the main condition. But it also requires soil, water, sunshine, fertilizer, etc. The apple tree in turn has many effects. It gives rise to many apples, and those many apples each contain many seeds, and each of these seeds in turn can become the source for another apple tree which will give rise to more apples.
Thus from many causes comes many effects and each effect in turn becomes a cause giving rise to many other effects.
Therefore this whole complex interlocking web of events has no first cause. This is a significant difference between the Buddhist ideas of conditionality and Western ways of thinking. Usually we think that the chain of cause and effect needs a first cause. And theistic religions identify that first cause with God who creates the universe through his will and thereby sets the whole wheel of revolving. But from the Buddhist standpoint there is no first cause for the process of conditionality, no original beginning.The succession of causes and conditions revolves without any conceivable beginning, without any discoverable first point the process has been going on through begining-less time without any bounds or limits to its sphere of operation.
* * * * *
சம்சார சக்கரத்தின் ஆரைகள் Top
புத்த பகவான் சார்பில் தோற்றப் போதனையை ஒரு வெறும் கோட்பாடாக மட்டும் கற்பிக்கவில்லை. தம்மத்தின் முக்கிய நோக்கத்தை - அதாவது துக்கத்திலிருந்து விடுபடுதலை - அடைவதற்காகவே இதனைப் போதித்தார். சம்சார சக்கரத்தில் சுழல்வது திருப்திகரமான காரியம் இல்லை. காலங் காலமாக இந்தச் சம்சாரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றோம். அறத்தின் நோக்கமான துக்க நிவாரணம், சம்சாரச் சக்கரத்திலிருந்து விடுபட்டால் தான் கிடைக்கப் பெறுவோம். இந்தச் சம்சார வட்டத்தின் துவக்கத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று புத்தர் கூறினார். எவ்வளவு கடந்த காலத்திற்குச் சென்றாலும் அதற்கு முன்பிருந்த ஒரு காலத்திற்குப் போக முடியும் என்பது தெரிய வரும். சம்சாரத்திற்கு ஆரம்பம் இல்லையென்றாலும் அது காரண - காரியத் தொடர்பினாலேயே நிலவுகிறது. அது தொடர, குறிப்பிட்ட காரணிகள் இருக்க வேண்டும். இவற்றையே பன்னிரண்டு நிதானங்களைக் கொண்டு புத்தர் விளக்கினார்.
அவை: 1. பேதமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6 ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் (மூப்பு, பிணி, சாக்காடு).
இந்தப் பன்னிரண்டும் சம்சார சக்கரத்தின் ஆரைகள். இவற்றை நம் மனத்திலேயே, நமது அனுபவங்களிலேயே கவனிக்கமுடியும். இந்த நிதானங்களோடு நாம் சம்சாரச் சக்கரத்தில் சுழன்று கொண்டு அவலம், அரற்றுக் கவலை, கையாறு (மணிமேகலை 30-116) எனப் பலவித துன்பங்களை அனுபவிக்கின்றோம். இவற்றைப் பற்றி அறியாததால் தான் நாம் சுழலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த வாய்மையை அறிந்த பின், சார்பில் தோற்ற வாய்மையை அறிந்தபின், இந்தச் சுழற்சியை நிறுத்தி விடலாம். பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற தொடர் சங்கிலியை முறித்து விடலாம். பின் உண்மையான, நீடிக்கும் விடுதலையைப் பெறலாம்.
SPOKES OF THE WHEEL OF EXISTENCE
The Buddha did not teach dependent arising merely as a theory. He presents this because it is central to the aim of Dhamma, deliverance from suffering. Suffering in its deepest aspect is the intrinsic unsatisfactoriness of the round of existence - samsara. The cycle of birth and death through which we have been wandering through beginingless time. The aim and goal of the teaching - ie the cessation of suffering, liberation from dukka and that comes by bringing an end to Smasara to the wheel of becoming. Now Buddha says the first point to this round of becoming, samsara, cannot be discovered. No matter how far we go back in time, we always find a possibility of going back further. However, though samsara does not have a beginning in time, it does have a distinct causal structure. It is sustained, kept in motion, by a precise set of conditions. These conditions the Buddha sets out in a sequnce of twelve factors and these make up the practical side of his teaching on dependent arising.
These twelve factors are: ignorance, volitional formations, consciousness, mentality - materiality, six sense faculties, contact, feeling, craving, clinging, existence, birth, and aging and death.
These twelve factors are the spokes of the wheel of existence and are all to be found within ourselves - in our own minds, in our own experience. It is through these factors that we revolve over and over in samsara meeting with different forms of suffering with sorrow lamentation grief and despair.. Because we are ignorant of these factors we continue to be held in bondage. By discovering this truth, the truth of dependent arising, it becomes possible to bring the repeated process of birth and death to a standstill and thereby to reach true and lasting freedom.
* * * * *
புத்தர் கூறியதாவது: Top
பேதைமை சார்வாச் செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும்
அருவுருச் சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப (மணிமேகலை 30,104-117)
SUCH IS THE ARISING OF SUFFERING !
The Buddha points out that:
with ignorance as condition the volitional formations arise
Dependent on volitional formations consciousness arises.
Dependent on consciousness mentality-materiality arises.
Dependent on mentality-materiality the six sense faculties arise.
Dependent on the six sense faculties contact arises.
Dependent on contact feeling arises.
Dependent on feeling craving arises.
Dependent on craving clinging arises.
Dependent on clinging existence arises.
Dependent on existence birth arises.
Dependent on birth, aging, death, sorrow, lamentation, pain, grief and despair arise.
Such, the Buddha says, is the arising of the whole mass of suffering.
* * * * *
இந்த உயிர் முந்தைய உயிரின் விளைவு.. Top
பன்னிரண்டு நிதானங்களின் நடைமுறையை விளக்கப் புத்தர் அவற்றை மூன்று தொடர் ஜன்மங்களில் பிரித்துக் காட்டினார். அவற்றை எந்த மூன்று தொடர் ஜன்மங்களைக் கொண்டும் விவரிக்கலாம்.
உணர்விலிருந்து பவம் வரை உள்ள நிதானங்கள் (எண் 3-10): இந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், முதல் இரண்டு நிதானங்கள் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையையும், கடைசி இரண்டு நிதானங்கள் - பிறப்பு மற்றும் வினைப்பயன் (மூப்பு,பிணி சாக்காடு) ஆகியவை - அடுத்த வாழ்க்கையையும் குறிக்கும்.
இது போன்ற பிரிவுகள் இந்நிதானங்கள் எப்படிச் செயற்படுகின்றன என்பதை விளக்கத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பேதமையும், செய்கையும் முன் வாழ்க்கையில் மட்டுமே நடந்தன என்றும், பிறப்பும், மரணமும் அடுத்த வாழ்க்கையில் தான் நடக்கும் என்றும் நினைத்துவிட வேண்டாம். அடுத்த விளக்கங்களைப் படித்த பின்னர் இந்தப் பன்னிரண்டு நிதானங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன வென்றும், ஒவ்வொரு உயிரிலும் நடைபெறுவன என்பதும் தெரிய வரும்.
ஆனால் காரண காரியத் தொடர் வட்டத்தைத் தெளிவாக விளக்கப் புத்தர் இந்த நிதானங்களை மூன்று தொடர் பிறப்புகளில் பிரித்துக் காட்டினார்.
நாம் இந்த உயிரிலிருந்து தொடங்குவோம். இது மூன்றாம் நிதானமான உணர்வோடு தொடங்குகிறது. நமது வாழ்க்கை, தொடர் அனுபவங்களைக் கொண்டது. இந்த அனுபவங்களில் உணர்வே அடிப்படையான அம்சம். வாழ்க்கை, கருவில் ஒரு கண உணர்வோடு தொடங்குகிறது. அதில் துவங்கி மரணமுறும்வரை உணர்வுகள் தொடர்கின்றன. இப்போது பின்வரும் இந்தக் கேள்விகள் எழுகின்றன: இந்தப் பிறப்பெடுக்க எவை காரணிகளாக இருந்தன? உணர்வு எங்கிருந்து தோன்றியது? நாம் எங்கிருந்து வந்தோம்? எப்படி இத்தோற்றம் கொண்டோம்? இந்தத் தனித்தன்மை கொண்ட மனிதராக எப்படி ஆனோம்? ஏதேச்சையாகப் பொருட்களின் கலவையால் - அணுக்கள் பலவாறு சேர்ந்ததால் - தோன்றினோமா? ஒரு கடவுள் தமது விருப்பத்தின் காரணமாகத் தோற்று வித்தாரா? இவை அனைத்தையும் சார்பில் தோற்றக் கோட்பாடு தெளிவாக்குகிறது.
புத்தர் இந்த ஜன்மம் இதற்கு முந்தைய ஜன்மத்தின் விளைவு என்றார். நாம் இந்தப் பிறப்பெடுத்ததற்கு நமது முந்தைய ஜன்மத்தின் அறியாமையும், செய்கையுமே காரணம். பின் இந்த வாழ்க்கையில் நமது வேட்கையும் பற்றின் காரணமாகவும் நமது செய்கையின் காரணமாகவும் நாம் அடுத்த வாழ்க்கைத் தோற்றத்தை நிர்ணயிக்கும் சக்திகளை உண்டாக்குகிறோம் - மறுபிறப்பு பின் அதைத் தொடர்ந்து மூப்பும் மரணமும். இப்படி இந்தச் செயற்றொடர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
OUR PRESENT LIFE THE RESULT OF OUR PAST LIFE..
To clarify the working of the twelve factors the Buddha explains them as distributed over three successive lives. They can be applied to any three lives in sequence.
If we take the main portion from consciousness through existence (No 3 -10) as applying to the present life, the first two factors pertain to the past life, to the immediately preceding life, and the last two factors, birth, and aging, and death, represent the next life, our future existence.
This division is made only as an expository device for giving a clear explanation of the working of the factors. We should not take these literally to mean that ignorance and volitional formations occurred only in the past and do not occur now or that birth and death are events that will take place only in the future. As we go along we will see that there is an interlocking of the factors, so that all of them can actually be found in each single existence.
But in order to give a clear, neat and precise explanation of the causal operation of the cycle of becoming the Buddha has spread them out extended them out and shown how they work over three successive lifetimes.
Now let us take as our own starting point of explanation, the present existence in which we are living now. This starts with the third factor, consciousness. Our life is a stream of experience in which consciousness is the most fundamental factor. Life begins at conception with a moment of consciousness and consciousness continues all the way through the course of our existence right up to the moment of death. Now the question comes up: What are the conditions that brought us into this present existence? From where does consciousness arise? Where have we come from? How have we come into being. How have we come in to be the person that we are? Have we come into being just by chance as a result of material processes - combinations of molecules. Have we come into being through the will of some creator God? This is made clear through the teaching on dependent arising.
The Buddha explains that our present life is the result of our past life. We have come into being on account of our own ignorance and volitions in the past. Thereafter in this present life, through our craving and attachment, through our actions or karma, we set rolling the forces that bring about a new existence in the future, new birth followed by aging and death, thus the process of becoming is repeated over and over again.
* * * * *
பேதமை - அவிஜ்ஜா
IGNORANCE - Avijja
பேதமை என்றால் அறியாமை.
புத்தர் பன்னிரண்டு நிதானங்களின் தொடர் வரிசையைப் பேதமையோடு தொடங்குகிறார். பாலி மொழியில் இது 'அவிஜ்ஜா' எனப்படும். கடந்த வாழ்வில் (அல்லது கடந்த பிறவியில்) நம் மனம் பேதமையினால் தெளிவற்று இருண்டு இருந்தது. இந்தப் பேதமை எப்போது துவங்கியது என்று சொல்வதற்கில்லை. நமது கடந்த வாழ்வில் எவ்வளவு முந்தைய காலத்துக்குச் சென்றாலும் அச்சமயத்திலும் மனம் அறியாமயினால் இருண்டிருப்பதைக் காணலாம். பேதமை அல்லது அறியாமை என்றால் என்ன? புத்தர் நான்கு மேன்மையான உண்மைகளைப் பற்றித் தெரியாமலும், அவற்றை உள்ளப் பூர்வமாகப் புரிந்து கொள்ளாமலும் இருப்பதே அறியாமை என்றார்.
அந்த நான்கு வாய்மைகளாவன:
1. துக்கம்
2. சமுதயம், அதாவது துக்க உற்பத்தி
3. நிரோதம், அதாவது துக்க நிவாரணம்
4. மக்க, அதாவது துக்க நிவாரண மார்க்கம்.
அறியாமை என்பது நான்கு மேன்மையான உண்மைகளைப் பற்றி மனத்தளவில் மட்டும் தெரியாமல் இருப்பது என்பது இல்லை. கடந்த காலத்தில் நாம் புகழ் பெற்ற பௌத்த அறிஞர்களாக இருந்திருக்கலாம். பௌத்த நூல்களைப் பற்றிய முழுமையான அறிவு நமக்கு இருந்திருக்கலாம். ஆனால் நான்கு மேன்மையான உண்மைகளை உள்ளப் பூர்வமாகப் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை. உண்மைகளின் வீடுபேறடைய வைக்கும், விடுவிக்கும் அறிவை நாம் பெற்று விட்டதாகக் கூற முடியாது. அறியாமை என்பது நான்கு மேன்மையான உண்மைகளைப் பற்றிய ஆன்மீகக் குருட்டுத் தன்மை. அவற்றின் முழு ஆழத்தையும், பரப்பையும் அறியாமல் இருப்பது.
பொதுவாக, சார்பில் தோற்ற நிதானங்கள் படமாகக் காண்பிக்கப்படும் போது பேதமை நிதானத்தை ஒரு வயதான கண் தெரியாத பெண்மணி கைத்தடியுடன் தட்டுத் தடுமாறி நடப்பது போன்று காண்பிப்பார்கள். அறியாமை என்பது ஒரு வகைக் குருட்டுத் தன்மை. நம் மனத்தை இருட்டாக்கி எல்லாவற்றையும் திரித்துப் பார்க்க வைக்கிறது. உள்ளதை உள்ளபடி பார்க்காதபடி மறைத்து விடுகிறது. அறியாமை எப்போது துவங்கியது என்பதைக் கண்டறியவும் முடியாது.
ஆதியும் அந்தமும் இல்லாக் காலத்திலிருந்தே அறியாமை, நம்மைப் பொருட்கள் நிலையானவை, இன்பம் தருபவை, கவர்ச்சியானவை, சாரமுடையவை என்று எண்ண வைக்கிறது. அவற்றின் உண்மையான பண்புகளான நிலையாமை, துக்கம் மற்றும் சாரமின்மையை நாம் காண முடியாததற்கு அறியாமையே காரணம். இந்த அறியாமையிலிருந்தே மற்ற மாசுகளான பேராசை, வெறுப்பு, அகம்பாவம், தவறான எண்ணம், பொறாமை, கோபம் போன்றவை தோன்றுகின்றன. அறியாமை ஒரு முதற் காரணம் - அதாவது அது தோன்றக் காரணிகள் ஏதும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. அது தோன்றக் காரணங்கள் இருக்கின்றன. அது மனத்தின் இயல்பு என்பதால் அது உயிர்களின் மனத்தையும், உடலையும் சார்ந்து உள்ளது. அதேசமயம் ஜீவன்கள் மறுபிறப்பெடுக்கக் காரணமாகவும் இருக்கிறது எனவே பவம் என்ற செயற்றொடர் ஒரு சக்கரத்தைப்போலச் சுற்றிச் சுற்றி வருகிறது. காரணத்தால் தோன்றினாலும் மற்ற காரணிகளோடு ஒப்பிடும் போது அறியாமை ஒரு அடித்தலக் காரணியாகும். ஆகவே புத்தர் அவரது விளக்கத்தை அறியாமையோடு துவங்குகிறார்.
அறியாமை முற்பிறப்பில் இருந்தமையால் தான் நாம் இன்றைய நிலையில் இருக்கின்றோம் என்றாலும், நமது அறியாமை கடந்த காலத்திலேயே கழிந்து விட்டது என்று நினைத்துவிடக் கூடாது. நான்கு மேன்மையான உண்மைகளை உள்ளப் பூர்வமாக உணராதவரை மனத்தில் அறியாமை இருந்து கொண்டே இருக்கும். இந்த அறியாமையின் காரணத்தால்தான் நாம் செய்யும் காரியங்கள் நம்மைத் தொடர்ந்து மறுபிறப்பெடுக்கச் செய்கிறது. இந்த அறியாமையே நம்மைச் செய்கையில் ஈடுபட வைக்கிறது.
இருண்ட மனத்தோடு நாம் செய்யும் செய்கைகள் நமக்கு எதிர் காலத்தில் மறுபிறப்பை உண்டாக்குகிறது. இவ்வாறு நாம் முதல் இரண்டு நிதானங்களைச் சேர்க்கும் முதல் வாசகத்துக்கு வருகிறோம். அதாவது, "பேதைமை சார்வாச் செய்கை யாகும்".
The Buddha starts the sequence of factors with ignorance, 'Avijja'. In our past lives our minds were obscured by a basic ignorance. No first point can be found to this ignorance. No matter how far back we go through our past lives, we always finds that our minds have been obscured by ignorance. What is ignorance? The Buddha defines ignorance as not knowing, not seeing the Four Noble Truths; the truth of suffering, its origin, its cessation and the way to its cessation. Ignorance does not mean the mere lack of conceptual knowledge of the four noble truths. Perhaps in the past we were great Buddhist scholars. We had thorough knowledge of all the Buddhist scriptures. This does not mean that we had true understanding of the four nobles Truths. The liberating knowledge of the Truths. Ignorance is a spiritual blindness concerning the four noble truths, it means, not understanding the Four Noble Truths in their full depth and range.
It is usually represented in the pictures of dependent arising by a blind old woman stumbling along with the aid of a stick. Ignorance is a kind of blindness, a spiritual blindness which has covered over our minds and caused us to see things in a distorted manner. It has given rise to various conceptual and perceptual distortions which prevent us from understanding things as they really are. Ignorance is without any conceivable beginning.
Through beginning-less times ignorance has led us to see things as being permanent, pleasurable, attractive and self, and prevented us from seeing them in their real characteristics of impermanence, suffering and selflessness. Out of this ignorance come all other defilements, such as greed, aversion, pride, wrong views, jealousy, selfishness anger etc.. It has to be emphasized that ignorance is not the first cause of things. It also arises through conditions. It arises as a factor in the mind in living beings. As a mental factor it depends on the minds and bodies of these beings and in turn it leads to the re-arising of those beings. Thus the process of becoming turns as a wheel around and around. Though it arises through conditions, ignorance is the most fundamental condition of all the others.
Therefore the Buddha takes this as a starting point for explanation.
Though ignorance was active in the past and brought us into the present we should not think that ignorance was left behind in the past. As long as we lack perfect insight into the four noble truths, into the Dhamma then ignorance remains in our mind. It continues to lurk in our mind leading us into actions which bring about renewed birth in the future.
Now because of this ignorance we engage in action. This brings us to the first proposition, which connects together the first two factors: "In dependence on ignorance volitional formations arise."
செய்கை - சங்கார
VOLITIONAL FORMATIONS - Sankharas
ஆன்மீகக் குருட்டுத் தன்மையினால் அதாவது பேதமையினால் நாம் செய்கையில் ஈடுபடுகின்றோம். நமது தவறான பார்வையினாலும், அறியாமையினாலும் செய்யப்படும் செய்கைகளால் நமது தனிச்சையை (will) நாம் செயற்படுத்துகிறோம். இந்தச் செய்கைகள் தான் சங்காரங்கள் எனப்படும். சங்காரம் என்றால் உருவாக்குதல், கட்டுதல், சேர்ப்பது. இங்கு சங்காரம் மனக்கட்டுமானங்களைக் குறிக்கிறது. தனிச்சையோடு அறியாமையால் மூடப்பட்ட மனத்தில் எழும் கட்டுமானங்கள். சங்காரமும் கன்மமும் ஒன்று. கன்மமென்றால் சுயேட்சையாக விரும்பிச் செய்யும் செய்கைகள். இவை மெய்யாலும், மொழியாலும் வெளிபடுகின்றன. அல்லது மனத்திலேயே அடங்கியிருக்கும் செய்கைகளாகவும் இருக்கலாம். நாம் முடிவுகள் எடுக்கும் போதும், திட்டங்களைத் தீட்டும் போதும், ஆசைகளை உண்டாக்கும் போதும், வேவ்வேறு எண்ணங்களை நினைக்கும் போதும் மனத்தில் செய்கைகள் நடைபெறுகின்றன. ஆக இந்த வெளிப்படையாக உடலாலும், பேச்சாலும் காணப்படும் செய்கைகளானாலும் சரி, மனத்தில் அடங்கிய செய்கைகளானலும் சரி அவற்றைச் சங்காரங்கள் என்கிறோம்.
இச்செய்கைகள் மனத்தில் - ஒரு விதை மண்ணில் பதிவதைப்போல – பதிந்து விடுகின்றன. அந்த விதை முதிர்ந்து விளைவுகள் தரக்கூடியதாக உள்ளது. அச்செய்கைகளின் வினைப்பயன் இவ்வாழ்விலேயே பின்னர் முளை விடலாம், அல்லது அடுத்த வாழ்வில் முளை விடலாம் அல்லது பின் ஒரு எதிர்கால வாழ்வில் பல கோடி ஆண்டுகளுக்குப் பின்பும் முளைக்கலாம்.
அறியாமையின் காரணமாக இருண்ட மனத்திலிருந்து தோன்றும் செய்கை மனத்தில் ஒரு சுவட்டை விட்டுச் செல்கிறது. இந்த மனப்பதிவு எதிர் காலத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. எதிர்காலப் பலன் கொண்டது.
சார்பில் தோற்றத்தைப் பொருத்தவரை செய்கையின் முக்கிய இயல்பு மரணத்தினால் உண்டாகும் இடைவெளியைக் கடந்து எதிர் காலத்தில் புதிய பிறப்புண்டாக்கி மறு பிறப்பு எடுக்கச் செய்யும் சக்தியேயாகும். அறியாமையால் செய்யப்படும் செய்கைகளுக்கு மறுபிறப்பு உண்டாக்கும் சக்தி உண்டு. மறுபிறப்பு உண்டாக்கும் இந்தச் செய்கை இரண்டு வகைப்படும். அவை நல்வினை (குசல) அல்லது தீவினைச் (அகுசல) செய்கைகளாக இருக்கலாம். நல்வினைச் செயல்கள் மனத் தூய்மையானவை. தீவினைச் செய்கைகள் ஒழுக்கக் கேடானவை, தீமையானவை. ஒவ்வொருவகைச் செய்கையும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். நல்வினையாக இருந்தால் நற்பிறப்பிற்கும், தீவினையாக இருந்தால் தீய மறுபிறப்பிற்கும் எடுத்துச் செல்லும். ஆனால் நல்வினைச் செயல்களும், தீவினைச் செயல்களும் அறியாமையின் சார்பில் தோன்றுபவையே. இரண்டும் அறியாமையிலிருந்து தோன்றித் தொடர்ந்து பவம் என்ற சக்கரத்தைச் சுற்ற வைக்கின்றன.
தொடரில் அடுத்த சங்கிலிக்கு வருகிறோம்: அதாவது, "செய்கை சார்வா உணர்ச்சி யாகும்".
Dependent on our spiritual blindness, ignorance, we engage in actions. Actions grounded on our delusions and our wrong views.
We activate our will. We engage in occasions of actions. All of these volitional actions, these volitional formations are called Sankharas. Sankhara means forming, constructing, creating, putting together and here it refers specifically to the mental formations. Formations of will that arise in the mind covered over by ignorance. The factor of sankhara is equivalent to kamma. Kamma means volitional formations or acts of will, which are expressed outwardly through the body and speech or actions that remain in the mind when we make decisions, formed plans, aroused desires, think different thoughts and so on. All of these activities of volition whether they are expressed outwardly through body or speech or whether they remain inwardly in the mind these are the volitional formations the Sankaras.
It is deposited in the mind as a seed with a potency, a power of germinating in the future and of producing results.
They might germinate in the future in this present life, or they might germinate in the next life or they might germinate in some future existance after that even after many eons. Whenever there is a volitional action that arises in the mind encompassed by ignorance, that action leaves an imprint in the mind, a formation with the capacity to mature, to fructify in the future.
In the context of dependent arising, the most important aspect of volitional formations is their power to cross over the gap created by death and to generate a new existence in the future. That is the volitional formations underlay-ed by ignorance have a power to bring about rebirth. These volitional formations that produce rebirth can be of two kinds. They can be wholesome volitions or unwholesome volitions - kusala or akusala. The wholesome volitions are morally pure or good volitions. The unwholesome volitions are morally blameworthy, bad or harmful volitions. Each kind of volition brings about a different kind of rebirth. The wholesome volitions brings a good rebirth. The unwholesome volitions bring about a bad rebirth. But both type of volitions - the wholesome and unwholesome ones are both conditioned by ignorance. They both arise out of ignorance and both sustain the wheel of becoming. They both keep the wheel of existence in motion. Now we come to the next link in the series:
"With the volitional formations as condition consciousness arises."
உணர்வு - விஞ்ஞான
CONSCIOUSNESS -Vinnana
மனத்தில் செய்கை சேரச் சேரப் பேதமையும் தொடர்ந்து இருந்தால், மரணம் உண்டாகும் போது ஒரு புதிய உணர்வு மரணத்தின் பின் உற்பத்தியாகிறது. இதுவே புதிய வாழ்க்கையின் முதல் உணர்வு.
பௌத்த மரபில், உணர்வு என்பது ஒரு நிலையான பொருள் இல்லை. மாற்றமடையா ஆன்மா என்று உணர்வை வருணிக்க முடியாது. உணர்வு என்பது தொடர் வரிசையாக உண்டாகும் உணர்வுகள். ஒவ்வொரு உணர்வும் கடல் அலைகள் போன்று தோன்றி மறையும் தன்மை கொண்டது. மரணம் உண்டான பின் இந்த வாழ்க்கையின் கடைசி உணர்வு தோன்றி மறைகிறது. ஆனால் பேதமையின், செய்கையின் சக்திகளால் இந்த வாழ்வின் கடைசி உணர்வு அடுத்த வாழ்வின் முதல் உணர்வைத் தாயின் கருப்பையில் கருத்தரிக்கப்பட்ட கருவோடு சேர்க்கிறது. இப்படிப் புதிய தோற்றம் உண்டாகிறது.
புதிய தோற்றத்தைத் துவக்கும் முதல் உணர்வு முந்தைய செய்கைகளின் சார்பில் தோன்றியது. அச்செய்கைகளே அதற்கு உருவம் தருகின்றன. கருத்தரிக்கப்பட்ட கணத்தில் தோன்றும் முதல் உணர்வு, 'மறுஇணைப்பு உணர்வு' எனக் கூறப்படும். ஏனென்றால் கடந்த வாழ்வையும், இந்த வாழ்வையும் இணைக்கும் உணர்வு அது. புதிய ஜீவனை அதன் கடந்த வாழ்வுகளோடு இணைக்கிறது.
முந்தைய செய்கையினால் உண்டான அனுபவங்கள் அனைத்தையும் இந்த 'மறுஇணைப்பு உணர்வு' புதிய ஜீவனிடம் செலுத்துகிறது.
மறுபிறப்பை முடிவு செய்யும் கன்மச் செயல் நல்வினையானதாக இருந்தால் மேன்மையான 'மறுஇணைப்பு உணர்வோடு’ நற்பிறப்பு தோன்றுகிறது. மறுபிறப்பை முடிவு செய்யும் கன்மச் செயல் தீயதாக இருந்தால் கீழான 'மறுஇணைப்பு உணர்வோடு’ தீய மறுபிறப்பு உண்டாகிறது. ஆனால் நற்கதியானாலும், தீய கதியானலும் அவை அறியாமையின் சார்பில் செய்யப்படும் செய்கையினால் பாதிக்கப் படுகிறது.
இந்த மறுஇணைப்பு உணர்வு சட்டென்று தோன்றி மறைந்தாலும், முன் போலவே ஒரு தொடர் வரிசையாக உணர்வுகள் வரத் தொடங்குகின்றன. இந்த உணர்வுகள் வாழ்நாள் முழுவதும் மரணம் உண்டாகும் வரை நீடிக்கின்றன.
If volitional formations are accumulated in the mind and ignorance is still present, when death occurs, a new moment of consciousness will be generated right after death. This is the first moment of consciousness of the new life.
From the Buddhist perspective, consciousness is not regarded as a single persisting entity, a self or a soul which continues unchanged. Consciousness is seen rather a series of acts of consciousness, each one arising and breaking up like the waves of the ocean. When death comes the last act of consciousness of this life arises and passes away. But through the force of ignorance and the force of the volitional formations, the final process of consciousness generates out of itself a new act of consciousness which springs up in the mother's womb, links up with the fertilized ovum, and starts the new existence.
This first act of consciousness that starts the new existence, occurring at the moment of conception is conditioned by the past volitional formations. It is given its form or shape by those volitional formations. This is called called the 'patisandhicitta', the "relinking consciousness", because it links together the past life with the present life, the new being the new person with his entire past.
That is this rebirth consciousness functions as a vehicle for the transmission of all the past experience of all the past karma and the reason why the rebirth consciousness brings up is because of the wholesome and the unwholesome volitions that were formed and stored up in the past life.
If the karma the volition that determines rebirth is a wholesome one then they will follow a favourable type of rebirth with a superior type of relinking consciousness. If the rebirth determining volitions is an unwholesome one then there will take place a lower type of rebirth with an inferior type of relinking consciousness. But whether it be a high or a low rebirth that rebirth will be determined or conditioned by the volitional formations that are under-laid by ignorance by the spiritual blindness.
When the rebirth consciousness arises it lasts for a brief moment and breaks up and stops. But immediately after the rebirth consciousness, the same basic type of consciousness continuous to flow as a series of mental acts throughout the entire life. It flows as a subliminal, passive flow of consciousness underlying all our active states of mind, continuing all the way from the moment following rebirth through to the moment of death. This passive stream of consciousness is called 'bhavanga', the stream of existence or the life continuum.
Now we come to the next link in the series.
அருவுரு - நாமரூப
MENTALITY - MATERIALITY -- Nama - rupa
"உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்"
அருவுரு என்பது மனமும் உடலும் கொண்ட உயிரினத்தைக் குறிக்கும். மறுஇணைப்பு உணர்வு கருத்தரிப்பின் போது தோன்றும்போது அது தனித்துத் தோன்றுவதில்லை. அருவுருவோடு சேர்ந்தே தோன்றுகிறது.
அருவுரு என்பது பாலியில் நாமரூப எனப்படும்.
அரு என்றால் அருவம் (அ + ரூப) - உருவமற்றது என்று பொருள். இது மனத்தைக் குறிக்கும். உரு என்றால் உருவம். நிலம், நீர், வெப்பம், காற்று ஆகியவற்றால் ஆனது.
ஒரு ஜீவன் ஐந்து கந்தங்களாலானது என்று பிக்கு போதி அவர்களின் பிறிதொரு கட்டுரையில் குறிப்பிட்டோம். உடல், மனம் சம்பந்தப்பட்ட நான்கு இயல்புலான நுகர்வு, குறிப்பு, பாவனை மற்றும் உணர்வு ஆகிய ஐந்து கந்தங்களின் சேர்க்கையே ஜீவன் என்கிறோம்.
நமது ஒவ்வொரு அனுபவத்திலும் இந்த ஐந்து கந்தங்களையும் காணலாம். சொல்லப்போனால் 'நான்' என்கிற எண்ணமே இவ்வைந்து கந்தங்களின் காரணமாகவே தோன்றுகிறது. இந்த ஐந்துள் கருத்தரிக்கும் போது மறுஇணைப்பு உணர்வு, உணர்வு என்ற கந்தமாகத் தோன்றுகிறது. புதிய ஜீவனின் உடலே உடல் கந்தமாகிறது.
மனிதப் பிறப்பெடுத்தால் புதியதாகப் பிறப்பெடுக்கும் உருவம் தான் கருத்தரிக்கப்பட்ட கரு (fertilized egg). மனம் சார்ந்த உணர்வோடு சம்பந்தப்பட்டவை மற்ற இயல்புகளான நுகர்ச்சி, குறிப்பு மற்றும் பாவனை ஆகியவை.
ஆக மறுபிறப்பின் முதல் கணத்திலேயே - அந்த ஒரே உயிரணு இருக்கும் போதே - நுகர்ச்சி, குறிப்பு மற்றும் பல பாவனைகள் (மனத்தின் கட்டுமானங்கள்) தோன்றி விடுகின்றன. இவ்வாறு இந்த ஐந்து கந்தங்களும் ஒன்றையொன்று சார்ந்த வண்ணம் மரணம் உண்டாகும் வரை நீடிக்கின்றன.
"With consciousness as condition mentality - materiality arises."
Mentality-materiality is a term for the psycho-physical organism. When the rebirth consciousness springs up at the moment of conception it does not arise in isolation. It occurs in association with the totality of the psycho-physical organism, which also comes into being at the time of conception.
That phycho-physical organism is what is nama-rupa. Nama - we translate as mentality, the mental factors. And rupa - as materiality the material or physical factors. We have explained previously (not in this essay) that a living being is a compound of five aggregates, the material form, feeling, perception, mental formations and consciousness.
These five are always present in every experience. In fact these five constitute the experience of self. Among the five aggregates at the moment of conception the rebirth consciousness is present as the aggregate of consciousness. When the rebirth consciousness springs up it is associated with the other four aggregates. The material form aggregate is represented by materiality, rupa, the body of the new born organism.
In the case of a human rebirth the materiality or form is the body of the new-born organism, the single fertilized egg.
On the mental side, associated with the rebirth consciousness the other three aggregates are found - feeling, perception and mental formations. These represent nama. So at the very moment of rebirth there will be present even in that one cell fertilized egg there will be present a distinct feeling, a perception and several mental formations. And this complex of the five aggregates of consciousness and nama rupa, consciousness and the rest of the psych physical organism this continues as an organized totality all the way through till death. In separable, all the factors dependent on one another. Thus at the moment of conception there comes into being a living being complete with all five aggregates.
வாயில் - ஆறு இந்திரியங்கள் - ஸளாயதன (இந்திரியம் - Sense organ)
SIX SENSE FACULTIES - Salayatana
"அருவுரு சார்வா வாயி லாகும்"
அருவுரு உள்ள உயிர், வளரும்போது ஐந்து இந்திரியங்கள் தோன்றுகின்றன; கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் உடல் ஆகியவையே அவை.
மனம் ஆறாவது இந்திரியம் - அதுவே எண்ணங்கள் கொண்ட உருப்பு - மற்ற புலன்களிலிருந்து தோன்றும் செய்திகளை முறைப்படி அது புரிந்து கொள்ளும். மேலும் தனது பொருட்களையும் - கருத்துக்கள், மன உருவங்கள் போன்றவற்றையும் - அது அறியும்.
அருவுரு சார்பாக ஆறு இந்திரியங்களும் தோன்றுகின்றன. கருத்தரிக்கும் போதே உடல் என்ற இந்திரியம் தோன்றிவிட்டது. மறுஇணைப்பு உணர்வின் காரணமாக மனமும் தோன்றிவிட்டது. கரு ஒரே ஒரு உயிரணுவாகத் துவங்கி வளர வளர மற்ற நான்கு இந்திரியங்களும் தோன்றுகின்றன. கண், காது, மூக்கு மற்றும் நாக்கு தோன்றிய பின் அந்த உருப்புக்கள் மூலம் அதனதற்கேற்ப புலன் அனுபவங்களைப் பெறுகிறோம்.
"With mentality-materiality as condition the six sense faculties arise."
As the psycho-physical organism grows and evolves, the five physical sense faculties appear; the eye, ear, nose, tongue and body. There is also the mind faculty, the organ of thought, ideas of conceptualization which coordinates the other sense data and also cognizes its own objects - ideas, images, concepts, etc.
So we have these six sense faculties which come into being conditioned by nama-rupa the psycho-physical organism. At the moment of conception itself there is present the body faculty - the body as a sense faculty. And the mind faculty is also present functioning as the rebirth consciousness. Then as the organism evolves in the embryonic period the other four sense faculties begin to take shape. As the cell multiplies and divides and takes on more specialized function then the eye, ear, nose and tongue emerge and as they emerge they make possible sense experience through those faculties.
Thus we come to the next link.
ஊறு - பஸ்ஸ
வாயில் சார்வா ஊறா கும்மே
CONTACT - Phassa
ஊறு என்றால் சந்தி, தொடர்பு, அல்லது ஸ்பரிசம் (connection, contact) என்று பொருள். இதனை விளக்க நாம் ஆறு இந்திரியங்களை மேலும் சற்று தெளிவாக்க வேண்டும்.
உலகிடமிருந்து பெறும் விஷயங்களை இந்த ஆறு இந்திரியங்களும் ஒன்று சேர்க்கின்றன. இப்படிப் பெறும் செய்திகள் நம் உயிரைப் பாதுகாக்கவும், வாழ்க்கையில் செயற்படவும் நமது பிற காரியங்களைச் செய்யவும் உதவுகின்றன. அதனதற்கேற்ற புலன் செய்திகளை ஒவ்வொரு இந்திரியமும் பெறுகிறது. கண் உருவங்களையும், காது சப்தங்களையும், மூக்கு நுகர்வுகளையும், நாக்கு சுவைகளையும், உடல் ஸ்பரிசங்களையும், மனம் மற்ற இந்திரியங்களிடமிருந்து வரும் செய்திகளையும் மற்றும் தனது அகப்பொருட்களான கருத்துக்கள், குறிப்புகள் போன்றவற்றையும் பெறுகிறது. இந்த ஆறு இந்திரியங்கள் (வாயில்) சார்பாக ஊறு தோன்றுகிறது. ஊறு என்றால் என்ன?
ஊறு என்பது குறிப்பிட்ட உணர்வும், அதற்குத் தகுந்த புலன் பொருளும், புலன் உறுப்போடு ஒன்று கூடுவதைக் குறிக்கும்.
உதாரணமாக, கண் உணர்வு, உருவங்களைக் கண் மூலமாக அறிகிறது. காது ஒலி சார்பாகக் கேட்கும் உணர்வு தோன்றுகிறது. மனமும், மனத்தின் பொருட்களின் சார்பாக எண்ண உணர்வுகள் தோன்றுகின்றன. ஊறு என்றால் உணர்வு, பொருள் மற்றும் உறுப்பின் சேர்க்கை. கண் மூலமாக உருவம் ஸ்பரிசிக்கப்படுகிறது. காதுமூலமாக சப்தங்களும், மூக்கு மூலமாக நுகர்வுகளும், நாக்கு மூலமாகச் சுவையும், உடல் மூலமாகத் தொடு உணர்ச்சியும் உணரப்படுகின்றன. மனம் மூலமாக எண்ணங்கள் உணரப் படுகின்றன. ஆக ஆறு இந்திரியங்கள் ஒவ்வொன்றையும் தழுவிய ஆறு ஸ்பரிசங்கள் / ஊறுகள் உள்ளன.
"With six sense faculties as condition contact arises."
To explain contact we first have to say a few more words about the six sense faculties.
The six sense faculties serve as our means for gathering information about the world. Information that allows us to survive, to function, to fulfill our purposes. Each faculty can receive the type of sense data appropriate to itself. The eye receives form, the ear sounds, nose smells, the tongue tastes, the body tangibles, the mind can deal with the objects of the other senses and also with its own kinds of objects, ideas, concepts, abstract notions and so on. Now conditioned by these six sense faculties contact arises. What is meant by this contact?
Contact means the coming together of the particular type of consciousness with the appropriate sense object through the sense faculty. In dependence of the eye and form visual consciousness arises. In dependence of the ear and sound hearing consciousness arises. And so forth. In dependence of the mind and mind objects mind or thought consciousness arises.
Contact is the union of consciousness, object and organ. Through the eye it contacts forms. Through the ear it contacts sounds. Through the nose it contacts smells. Through the tongue it contacts taste. Through the body it contacts tangibles. Through the mind faculty it contacts ideas. Thus there are these six kinds of contacts corresponding to the six faculties.
நுகர்ச்சி - வேதனா
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
FEELING - Vedana
மனம் ஒரு பொருளை அனுபவிப்பது நுகர்ச்சி மூலமாகத்தான். ஆறு வகையான நுகர்ச்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் எந்தப் புலன் உறுப்புகள் மூலமாகத் தோன்றினவோ, அதைச் சார்ந்தே உள்ளது. உதாரணமாகக் கண் மூலமாகத் தோன்றும் நுகர்ச்சி, காது மூலமாகத் தோன்றும் நுகர்ச்சி போன்றவை. மேலும் நுகர்ச்சிகள் மூன்று தன்மை கொண்டுள்ளன. அவை இன்பமான, துன்பமான மற்றும் நொதுமலான (இன்பமும், துன்பமுமல்லாத) நுகர்ச்சிகள்.
இந்த நுகர்ச்சிகள் ஏன் எழுகின்றன? ஏனென்றால் இந்த அருவுரு கொண்ட ஜீவனிடம் ஆறு இந்திரியங்கள் உள்ளன. அதன் மூலமாக மனம் ஆறுவிதமான பொருட்களோடு தொடர்பு கொள்கிறது. நமது ஒவ்வொரு அனுபவத்திலும் நுகர்ச்சி இருக்கின்றது. ஒரு உருவத்தைப் பார்த்தாலும், ஒரு ஒலியைக் கேட்டாலும் நமது அனுபவத்தைப் பாதிக்கும் உணர்ச்சி சேர்ந்தே இருக்கும். சில சமயம் அந்த நுகர்ச்சி மிக மெல்லியதாக இருக்கும். ஆனால் அது இருப்பது உறுதி.
நுகர்ச்சிகள் மூலமாகவே முந்தைய கன்மச் செயல்களின் பயனை நாம் பெறுகிறோம்.
"Dependent on contact as a condition feeling arises."
Feeling is the "effective tone" by which the mind experiences the object. There can be six kinds of feeling as determined by the organ through which the feeling arises e.g. there is feeling born of eye contact, feeling born of ear contact, and so forth.. feeling born of mind contact. By way of its effective quality, feelings are of three types; pleasant or agreeable feeling, painful or disagreeable feeling and then there is indifferent or neutral feelings.
Why do these feelings arise? They arise because we have this psycho-physical organism with its six sense faculties through which our minds contact the six kinds of sense objects. Some feeling is present in every occasion of experience. Whenever we see a sight, hear a sound etc. some feeling is present colouring our experience of the object. Sometimes the feeling may be faint and indistinct but it is present all the same at every moment.
It is through these feeling that our past kammas work themselves out and bring their fruits.
வேட்கை - தன்ஹா
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
CRAVING - Tanha
சம்சார சக்கரத்தில் சுழல இந்த நிதானத்தில் ஒரு முக்கிய படி எடுக்கின்றோம். இதுவரை கூறப்பட்ட நிதானங்கள், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு மற்றும் நுகர்ச்சி ஆகியவை கடந்த காலக் கன்மங்களைக் குறிக்கும். கடந்த காலக் கன்மச் செய்கையினால் தோன்றியவை அவை.
கடந்த காலக் கன்மம் என்பது கடந்த காலத்தில் அல்லது வாழ்க்கையில் செய்த, சேர்க்கப்பட்ட வினை. அவை நிகழ்காலத்தில் பழுக்கின்றன. பின் அவ்வினைப்பயனை நாம் அனுபவிக் கின்றோம்.
கடந்த கால அறியாமையினாலும், செய்கையினாலும் நாம் பிறப்பெடுத்து இந்த உடல் தோன்றி, அதனோடு இந்திரியங்களூம் தோன்றி அதனால் நுகர்ச்சிகளை அனுபவிக் கின்றோம். இவை எல்லாம் கடந்த காலத்தின் வினைப்பயன்.
ஆனால் இப்போது வேட்கை தோன்றக் கடந்த கால வினைப்பயனிலிருந்து நிகழ் காலக் காரணிகளுக்கு நகர்ந்து செல்கிறோம். நிகழ் காலத்தில் நடைபெறும் காரணிகள் எதிர் கால விளைவுகளை உண்டாக்கும்.
நுகர்ச்சிகளைச் சார்ந்து வேட்கை எழுகிறது.
இன்ப நுகர்ச்சிகளை அனுபவிக்கும் போது அவற்றோடு பற்றுக் கொள்கிறோம். அவற்றை அனுபவிக்கிறோம், சுவைக்கிறோம், அவை தொடர வேண்டும் என்று ஆசைப் படுகின்றோம். திரும்பத் திரும்ப இன்பம் உண்டானது நிகழ வேண்டும் என்றும், அந்த அனுபவம் நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். இவ்வாறு வேட்கை உண்டாகி அந்த இன்பத்தைப் பற்றிக் கொள்கிறோம்.
துன்பமான நுகர்ச்சியை அனுபவிக்கும் போது அந்த நுகர்ச்சி ஒரு வெறுப்பை உண்டாக்குகிறது. துன்ப நுகர்ச்சியினால் அது தோன்றக் காரணமாக இருந்ததை அழிக்க முயல்கிறோம் அல்லது அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறோம். அல்லது இன்பம் தருபவைகளில் ஈடுபட்டு அந்தத் துன்பத்தை மறக்கப் பார்க்கிறோம். ஆக அறியாமையால் இருட்டாக்கப் பட்ட மனத்தைக் கொண்டு நாம் திரும்பத் திரும்பச் செய்வது இதைத்தான்: துன்பத்தைக் கண்டு ஓடுவது. இன்பத்தைத் தேடிச் செல்வது. வேட்கையே இந்தச் செய்கையில் ஈடுபட வைக்கிறது.
ஆனால் நுகர்ச்சியிலிருந்து வேட்கைக்கு எடுத்துச் செல்லும் தொடர் அவசியம் நடைபெற வேண்டுமென்பதில்லை. இது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தி.
நுகர்ச்சிக்கும், வேட்கைக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளி போர் நடக்கக் கூடிய ஓர் இடம். இந்தச் சம்சாரச் சுழழை நிறுத்தக் கூடிய இடம். இந்த நுகர்ச்சிக்கும், வேட்கைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் நிகழும் போர் தான் நாம் காலவரையற்றுச் சம்சாரத்தில் பிணைந்து இருப்போமா அல்லது விடுதலை பெறுவோமா என்பதைத் தெளிவு படுத்தும். வேட்கைக்கு இடம் கொடுக்காமல் நமது நுகர்ச்சிகளை நற்கடைப்பிடியுடனும், கவனத்துடனும், உள்ளது உள்ளபடி அறிந்தோமானால் வேட்கை கெட்டிப்பட்டு, இறுகுவதைத் தவிர்க்க முடியும். வேட்கை எதிர்காலத்தில் மறுபிறப்பெடுக்க வைப்பதைத் தடுக்கலாம்.
மெய்ஞ்ஞானத்தைப் (wisdom) பயன்படுத்தி புதிய தோற்றம் எடுப்பதை நுகர்ச்சி தோன்றும் இவ்விடத்திலேயே நிறுத்தி, மேலும் வேட்கை கொள்ளாமலும், புதிய தோற்றம் எடுக்காமலும் இருக்க வைக்க முடியும். ஆக நுகர்ச்சிக்கும் வேட்கைக்கும் உள்ள தொடர்புதான் மிக முக்கியமான சந்தி - கடந்த காலத்தில் வேறூன்றி இருக்கும் நிகழ்காலத் தொடருக்கும், நிகழ்காலத்தைச் சார்ந்திருக்கும் எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் தொடருக்கும் உள்ள சந்தி.
இந்தச் சந்தியில் தான் வீடுபேறடையச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும். இங்கு தான் இருசாராரும் போர் புரிகின்றனர். ஒருபக்கம் கிளேசங்கள் மறுபக்கம் மாசுகள். இவைதான் எதிரிகள். எதிரி படையச் சந்திப்பது ஞானத்துக்கு எடுத்துச் செல்லும் ஏழு ஞான அங்கங்கள். (seven factors of enlightenment)
ஆனால் நாம் இப்போது சம்சாரச் சக்கரம் முன் செல்வதைப் பற்றி ஆராய்வதால் அடுத்த படிக்குச் செல்வோம். வேட்கை தோன்றி விட்டது. வேட்கையைச் சார்ந்து பற்றுத் தோன்றுகிறது.
"Dependent on feeling as a condition craving arises."
With this link we take a major step forward in the movement of the wheel of existence. All the factors we have mentioned so far - consciousness, mentality - materiality, the six sense faculties, contact and feeling - represent the results of past kamma. They arise through the maturation of kamma from our past volitional formations - which we performed or accumulated in the past life and which are now germinating in the present and producing their fruit.
As a result of our past ignorance and volition we have taken birth acquired this body with its sense organs and experienced the different kinds of feelings. All this comes about through the result of causes sown in the past.
But now with the arising of craving we make a move from the resultant sequence of the past having its effects in the present to the causes operating in the present generating a new existence in the future.
In dependence of feeling there arises craving.
When our minds are covered over by ignorance and we experience pleasurable feelings we become attached to those feelings. We enjoy them, relish them and we crave for a continuation of this experience. For a repetition of it. For a renewal of it. Thus craving arises desiring or holding on to to pleasure into the future.
When we experience painful feeling, this pain awakens an aversion, a desire to eradicate the source of pain, to flee from it, to smother it by indulging in more pleasurable sensations. And so with a mind covered over by ignorance the deluded person gets caught in the pattern of running away from pain and running in pursuit of pleasure. The pattern spelt out by craving.
But this pattern, by which feeling leads to craving, does not occur as a matter of strict necessity. This is a very very important point we come to. Between feeling and craving there is a space, a gap which can become a battlefield where the round of existence can be brought to an end. It is here in this space between feeling and craving the battle will be fought which will determine whether bondage will continue indefinitely into the future or whether it will be replaced by enlightenment and liberation. For, if instead of yielding to craving, to the driving thirst of pleasure we contemplate our feeling with mindfulness and awareness and understand them as they really are, then we can prevent craving from crystallizing and solidifying. We can prevent craving from arising and from sustaining renewed existence in the future.
By applying wisdom we can stop the process of becoming, right at that point where feeling arises preventing it from issuing in further craving and renewed existence. So the link between feeling and craving that is the vital meeting ground of the present sequence rooted in the past and the present causal sequence leading to the future. And it is here that the work of achieving liberation has to take place. This is the battleground where the defilements - the enemy will be met by the army of the enlightenment factors.
But now we are dealing with the forward movement of the round and so we continue. Craving has arisen. Now we have the next step, in dependence upon craving, clinging arises.
பற்று - உபாதான
CLINGING - Upadana
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
இப்போது சம்சார சக்கரம் முன் நகர்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். பற்றுத்தான் வேட்கையின் வலுவைப் பெருகச் செய்கிறது.
நான்கு விதமான பற்றுகள் உள்ளன:
1. புலன் இன்பங்கள் மீது பற்று.
தோன்றும் இன்ப நுகர்ச்சிகளோடு பற்றுக் கொள்கிறோம், இன்பம் தரும் பொருட்களோடு பற்றுக் கொள்கிறோம்.
2. கருத்துக்கள் மீது பற்று.
நமது நம்பிக்கைகள், கோட்பாடுகள் மீது பற்றுக் கொள்கிறோம். யதார்தத்ததை விளக்கப் பல கருத்துக்கள் நமக்குத் தோன்றுகின்றன. அவற்றோடு பற்றுக் கொள்கிறோம்.
3. சாங்கியங்கள், விதிகள், விரதம், அனுஷ்டானங்கள் மீது பற்று.
விதிகளோடும், சாங்கியங்களோடும், விரதம் போன்ற பயிற்சிகளோடும் பற்றுக் கொள்கிறோம். கண்மூடித்தனமாக இவற்றைச் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று நம்புவது தவறு. ஆம். விதிகள் முக்கியமானவைகளாக இருக்கலாம், ஒழுக்க விதிகள் தேவைப்படலாம், சாங்கியங்கள் பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் நாம் செய்யும் தவறு - தவறான கருத்தினால் - அவற்றோடு பற்றுக் கொள்வதே.
4. நான்காவது பற்று மிக அடித்தலமான பற்று. இதுவே ஆணவப் பற்று.
நான் என்ற மாறாத ஒன்று இருப்பதாக உள்ள கருத்தின் மீது பற்று. இந்த உடலும், மனமும் ஒரு ஆத்துமா என்றும் அல்லது ஆத்துமாவைச் சேர்ந்தவை என்றும் நினைப்பது.
வேட்கைக்கும், பற்றுக்கும் உள்ள வேறுபாடு ஒரு உவமானத்தின் மூலம் விளக்கப் படுகிறது. வேட்கை என்பது ஒரு திருடன் ஒரு பொருளைத் திருடக் கையை நீட்டுவதைப்போல. பற்று அத்திருடன் பொருளை எடுத்ததால் அந்தப் பொருள் அவன் கைக்குச் சென்று விட்டதைக் குறிக்கும்.
ஆக வேட்கை இருக்கும் நிலையில் ஒருவர் இன்பம் தரும் பொருளை அல்லது தனக்குப் பயன் தரும் கருத்துக்களை அல்லது குறிப்புகளைப் பெறக் கையை நீட்டுகிறார். பற்று இருக்கும் நிலையில் அப்பொருட்கள் கைவசம் வந்து விட்டதையும் அவற்றைச் சொந்தம் கொண்டாடுவதையும் குறிக்கும்.
"Dependent on craving as a condition, clinging arises."
Now we are dealing with the forward movement of the round. What is this clinging? Clinging is the intensification of craving.
There are four types of clinging:
(a) clinging to sense pleasures.
We cling to the pleasurable feelings that arise and we cling to the objects that give rise to these pleasures.
(b) clinging to views.
We cling to our theories, our opinions our conceptions, to our beliefs. We set up a string of categories through which we interpret reality for ourselves, to make things intelligible to ourselves. we hold and grasp that scheme.
(c) clinging to rules and observances.
We cling to various precepts, we cling to rituals to ascetic practices whatever. But the notion that following these rules blindly, performing these rituals blindly that that is going to lead us to salvation. Of course the rules might be important, the precepts necessary, the rituals might be helpful. The mistake lies in clinging to them with wrong views with misunderstanding.
(d) The fourth type of clinging the most fundamental type of clinging.
This is the clinging to the notion of an ego entity. Clinging to our mind and body as being a self or the belongings of a self. Clinging arises out of craving.
The difference between craving and clinging is illustrated by a simile. Craving is like a thief extending his hand to grasp some object that he intends to steal, clinging is like the thief taking hold of the object and taking possession of it.
So at the stage of craving the person is reaching out for the enjoyable object for the idea or notions that he demands and needs. At the stage of clinging he grasps hold of that object or that set of ideas and he is appropriating it for himself.
பவம் - பவ
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
EXISTENCE - Bhava
பவத்தின் போது நாம் கன்மங்களைச் (கருமத் தொகுதி) சேர்க்கின்றோம். இச்சமயத்தில் நாம் செய்கையில் ஈடுபடுவதால் கன்மங்களைச் சேர்க்கிறோம். இவை நல்வினையாகவோ தீவினையாகவோ இருக்கலாம். இவை தொடர் ஓட்டமான உணர்வில் சேர்த்து வைக்கப் படுகின்றன. வேட்கையாலும், பற்றின் காரணமாகவும் சேர்த்து வைக்கப் பட்ட கன்மங்கள் எதிர்காலத்தில் மரணத்தின் பின் ஒரு புதிய பிறப்பை உண்டாக்குகிறது. ஆக பவம் சார்ந்து மறுபிறப்புத் தோன்றுகிறது.
"Dependent on clinging as a condition existence arises."
What is meant here by existence - bhava is the "kammicly" accumulative side of existence, the phase of life in which we act, in which we accumulate kamma, in which we generate more volitional formations - wholesome and unwholesome, the phase in which we build up these formations, accumulate them in the flow of consciousness, store them away in the on going flow of consciousness. When these kammas are accumulated through craving and clinging then after death these kammas bring about a new existence in the future. That is in dependence upon existence birth takes place.
"கருமத் தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்"
வாழ்ந்த போது வேட்கையினாலும், பற்றின் காரணமாகவும் சேர்த்த கன்மங்கள் காரணமாக மரணத்தின் பின் நாம் மறுபடியும் தோன்றுகிறோம். இந்தப் பவம் என்கிற ஓட்டம் புதிய பிறப்பிலும் தொடர்கிறது. எதிர் காலத்தில் புதிய தோற்றம் பிறப்பிலிருந்தே தோன்றுகிறது. இதுவே பதினொன்றாவது நிதானம் - ஜதி அல்லது பிறப்பு. நிகழ்கால வேட்கையும், பற்றும், கன்மச் சேர்க்கையும் இந்த எதிர்காலப் பிறப்பை உண்டாக்குகிறது. தத்துவ இயல்படி பார்க்கும் போது, பிறப்பு என்பது எதிர்காலத்தில் தோன்றும் ஐந்து கந்தங்களே. மறுஇணைப்பு உணர்வோடு அருவுரு சேர்ந்து தோன்றுவது.
Through the kammically accumulative side of existence, through our stored up kammas driven by craving and clinging after death we reappear where the stream of becoming goes on taking a new birth. The new existences in the future begins with birth. That is given here as the eleventh factor - jati - birth. This future birth is to be brought about by the present craving, clinging and the karmic accumulations. And birth in the strict philosophical sense consists in the future manifestations of the five aggregates. A rebirth consciousness together with the nama-rupa the mental and material factors.
"தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறெனத்
தவலில் துன்பந் தலைவரும் "
அடுத்ததாக, பிறப்பைச் சார்ந்து தோன்றுவது மூப்பும், மரணமும். எதிர்காலத்தில் பிறப்பெடுப்பதாலேயே நாம் அதற்கான வினைப் பயனைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவே மூப்பும் மரணமும். பௌத்த நூட்களில் சில இடங்களில் அதனோடு சோகம், புலம்பல், வேதனை, துயரம், நம்பிக்கையின்மை ஆகியவையும் குறிப்பிடப் படுகின்றன. மணிமேகலையில் இது "மூப்புப் பிணி சாக்காடு
அவலம் (sorrow) அரற்றுக் (lamentation) கவலை (worry) கையாறு (despair)" எனக் கூறப்படுகிறது.
Then in dependence on birth there arises aging and death. That is because we take birth in the future then we have to pay the inevitable price. We have to undergo aging and death. Some of the texts also mention sorrow, lamentation, pain, grief and despair. So those are the twelve factors of dependent arising.
* * * * *
ஞானம் பெற்றதால் கண்டுபிடித்தது Top
திரும்பத் திரும்ப மறுபிறப்பெடுக்கும் செயற்றொடரிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது. இவ்வழியைப் பயன்படுத்தித்தான் சம்சார சக்கரத்தின் சுழலை நிறுத்த முடியும்.
இப்படித் திரும்பத் திரும்பப் பிறந்து இறந்து மறுபிறப்பெடுக்கும் செயற்றொடர் தொடர வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்வதற்கு ஒரு மூல காரணம் உள்ளது. அதுவே பேதமை - அறியாமை. புத்தரின் மிகப் பெரும் கண்டுபிடிப்பு பேதமையைக் களைய முடியும் என்பதே. எல்லாச் செயல்களின், பொருட்களின் உண்மையான தன்மையை அறிய முடியும். அவற்றை உள்ளது உள்ளபடி கவனிக்க முடியும். இந்த மெய்ஞ்ஞானத்தோடு அறியாமையை வேறோடு களைய முடியும். அறியாமை இல்லாதபோது வினைப்பயன் கொண்ட செய்கையும் முடிவுக்கு வருகிறது.
ஞானம் பெற்ற மனிதர் அதாவது அறஹந்தரும் (சித்தர், அறவண அடிகள் என்று தமிழில் கூறப்படுவர்) செய்கையில் ஈடுபடுகிறார். எதையும் செய்யாமல் இருப்பதில்லை. தனிச்சையைப் (will) பயன்படுத்துகிறார், முடிவுகள் எடுக்கிறார். ஆனால் இச்செய்கைகள் கெட்டியாகி வினைபயன் கொண்ட செய்கைகளாவதில்லை. மனத்தில் படிவதில்லை. மறுபிறப்பெடுக்கும் சக்தியில்லாதவை அவை.
சாதாரண மனிதர் அதாவது ஞானம் பெறாதவர் புதிதாகப் போடப்பட்ட சிமென்ட் தரையில் நடப்பவரைப்போல. சிமென்ட் கெட்டியானதும் பாதச் சுவடுகள் நிலைத்து விடுகின்றன. ஞானம் பெற்றவரின் செய்கைகளோ ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் விட்டுச் செல்லும் சுவடுகளைப் போல. அவை பறந்து சென்றதற்கான அடையாளமே இருக்காது. அவர்கள் செய்கைகள் மனத்தில் படிவதில்லை.
தம்மபதத்தில் புத்தர் அரஹந்தர்களைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:
"பொருளாசையை விட்டு, உணவைக் கட்டுப் படுத்தி, குறியற்ற சூனியமான நிர்வாண மோட்சம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இருப்பவருடைய அடிச்சுவடுகள், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகள் காணப்படாதது போலக் காணப்படா." தம்மபதம் 92
"யார் ஆஸவங்களை (குற்றங்களை) அழித்து விட்டாரோ, யார் உணவில் ஆசையற்று, குறியற்ற சூனியமான நிர்வாண மோட்சத்தில் நோக்கமாக இருக்கிறாரோ அவர் சென்ற பாதையின் அடிச்சுவடுகள், ஆகாயத்தில் பறந்து சென்ற பறவைகளின் பாதை அறியப்படாதது போன்று அறியப்படா." தம்மபதம் 93 (நில்வக்கே ஸோமானந்த தேரர் மொழி பெயர்ப்பு)
மெய்ஞ்ஞானத்தை எழுப்பி விடுதலை பெற்ற அரஹந்தர் அறியாமையை ஒழித்து, வினைப்பயன் கொண்ட செய்கைகளைச் செய்வதில்லை. அறியாமை இல்லாதபோது வினைப்பயன் கொண்ட செய்கையும் முடிவுக்கு வருகிறது. ஞானம் பெற்று விட்டதால் மறுபிறப்பெடுக்க வேண்டும் என்ற வேட்கையும் அவருக்கு இல்லை. எனவே அவர் வாழ்க்கை முடிந்தபின் மறுஇணைப்பு உணர்வு (rebirth consciousness) தோன்றுவதில்லை. அதனால் உணர்வு செயற்றொடர் முடிவுறுகிறது. உணர்வு முடிய அருவுருவும் முடிகிறது. அதனால் வாயில், ஊறு, நுகர்ச்சியும் இராது. நுகர்ச்சி இல்லாவிட்டால் வேட்கையும், பற்றும் இராது. அதனால் கன்மச் சேர்க்கையும் இருக்காது. (பவம்), பிறப்பும் இருக்காது; பிறப்பில்லை யென்றால் மூப்பும், மரணமும் இல்லை. இதுவே துக்கத்தின் முடிவு. துக்கம் முடிவுற்றால் சம்சார சக்கரமும் முடிவுக்கு வந்து விடுகிறது.
THE STRIKING DISCOVERY OF THE ENLIGHTENMENT
Now there is one catch to this whole process of repeated existence. There is a way to bring this whole sansara to an end.
This process of repeated existence does not have to continue. It hinges upon a single underlying root. That root is ignorance. The most striking discovery of the enlightenment of the Buddha is that ignorance can be eradicated. It is possible to generate a kind of knowledge and understanding of the true nature of phenomena, an understanding which breaks through all the screens of delusion and distortions, a knowledge which sees phenomena as they really are. By arousing this knowledge, this realization, the wisdom of enlightenment, ignorance can be eradicated, eclipsed and annihilated. With the cessation of ignorance, volitional formations come to an end.
The liberated person, the arahant acts. He is not completely passive. He uses his will, he decides things, chooses, performs actions. But his acts of volition do not harden and solidify into volitional formations. They remain as mere functions or activities of the will without getting deposited in the mind as accumulations as hardened formations. His volitions lose the potency of bringing about renewed existence in the future.
The volitions of an ordinary person, an unenlightened person, these can be compared to footprints left in wet cement. When the cement hardens the foot prints are retained. The volitions of a liberated person, an arahant these are like tracks of birds flying through the sky. No trace remains. His volitions don't harden into formations.
In the Dhammapada 92-93 the Buddha says of the Arahants: "Those who do not accumulate, who have understood the nature of food whose object is the void and unconditioned liberation, their track is hard to trace like that of birds in the sky."
Because he has aroused the wisdom of enlightenment the Arahant, the liberated one, has eliminated ignorance and no longer forms volitional formations. Thus with the cessation of ignorance the volitional formations cease. Because he has reached enlightenment he no longer has any craving for renewed existence. So when he reaches the end of his life time there is no precipitation of a rebirth consciousness. With the cessation of the volitional formations the process of consciousness ceases.
With the cessation of consciousness there is no new mentality - materiality no psycho - physical organism coming in the future. With the cessation of mentality - materiality there are no more sense faculties, no more contact, no more feeling. When there is no feeling, there is no more craving, no more clinging, no more accumulation of kamma, no birth; with the ending of birth there is no more aging and death. All the Dhukka the suffering of the round come to an end. That is the cessation of suffering, the ending of the round.
* * * * *
சார்பில் தோற்ற நடைமுறைச் செயற்பாடு Top
சார்பில் தோற்றத்தை நடைமுறையில் எப்படிப் பயன்படுத்துவது? இந்தப் பன்னிரண்டு நிதானங்களும் சங்கிலித் தொடரைப்போல ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. இதில் முக்கியமானது நுகர்ச்சிக்கும், வேட்கைக்கும் உள்ள தொடர்பே. இதனால் தான் வேட்கையே துக்கத்திற்கான காரணம் என்று புத்தர் நான்கு மேன்மையான உண்மைகளில் குறிப்பிடுகிறார். ஆக நடைமுறையில் நாம் செய்ய வேண்டியது ஒரு நுகர்ச்சிக்குப் பின்னர் வேட்கை தொடராமல் இருக்கச் செய்ய வேண்டும். நுகர்ச்சி தோன்றும் போது மிகவும் நற் கடைப்பிடியுடன் இருக்க வேண்டும். நுகர்ச்சியின் காரணமாகப் பேரானந்தம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதைப் பிடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். நற்கடைப்பிடி இல்லாவிட்டால் இன்பமான நுகர்ச்சி தோன்றும் போது அது வேட்கையைத் தோற்று விக்கிறது. இன்பம் தந்த பொருள் மீது மோகம் கொள்கிறோம். அதனோடு பற்றுக் கொள்கிறோம். அதனால் அந்தப் பொருள் தரும் இன்பத்தை மேலும் விரும்புகிறோம். ஆனால் நற்கடைப்பிடி இருக்கும் போது இன்பம் தோன்றினால், 'இப்போது இன்ப நுகர்ச்சி தோன்றியுள்ளது,' என்பதை அறிகிறோம். அதைத் தெரிந்திருப்பதோடு மட்டுமே நிறுத்தி விடுகிறோம். அதற்கு அடிமையாகி விடுவதில்லை. பின் அந்த நுகர்ச்சியை மெய்ஞ்ஞானத்தோடு கவனிக்கும் போது அந்த நுகர்ச்சி நிலையற்றது, திருப்தியற்றது, சாரமற்றது என்பதை அறிகிறோம். இந்த நடவடிக்கை நுகர்ச்சி வேட்கையை உண்டாக்காமல் இருக்கச் செய்கிறது. இப்படி மெய்ஞ்ஞானம் கூர்மையாக ஆகஆக, ஆழமாக ஆகஆக அடிப்படை அறியாமையைத் தவிர்க்கிறது. அறியாமை படிப்படியாக வெட்டப்பட்டு இறுதியில் வேறோடு பிடுங்கி எறியப் படுகிறது. நாம் வீடு பேறடைகிறோம்.
PRACTICAL IMPLEMENTATION OF THE THEORY OF DEPENDENT ARISING...
Now let us see the practical implementation of this teaching. As we saw, the most important factor is the link between feeling and craving. That is why Buddha singles out craving as the origin of suffering in the Four Noble Truths. So what we have to do in our own practice is to prevent feeling from leading to craving. We have to be mindful and clearly aware of the feeling that arises. and not delight in them, hold to them, and cling to them. If we lack mindfulness when pleasant feeling arises, it issues in craving. We relish the object, become attached to it and desire more of the pleasure it gives. But if we have mindfulness, we become aware "a pleasant feeling has arisen". We stop at awareness without succumbing to it. Then applying wisdom to the feeling, we understand the feeling as impermanent, unsatisfactory, without a self. These measures prevent the feeling from giving rise to craving. As we go on cultivating wisdom, wisdom grows sharper and sharper, deeper and deeper until it cuts off the basic ignorance. It cuts off layer after layer of ignorance, and when all ignorance is eliminated the state of liberation is achieved.
End of Dependent Arising
* * * * *