உவமானங்கள் 49-60
இது போலத்தான்
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
It’s Like This
1 0 8 D H A M M A S I M I L E S
Venerable Ajahn Chah
* * * * * *
49. தாண்டிச் செல்ல வேண்டிய சாலைகள் Top
இந்த நோங் பா போங் விகாரைக்கு வரும் வழியில் நீங்கள் பல சாலைகளைக் கடந்திருப்பீர்கள். ஆனால் அவை முக்கியமில்லை. அவை உங்களுக்குத் தேவையற்றவை என்பதால் அவற்றை விரைவாகக் கடந்து வந்தீர்கள். உலக அனுபவங்களும் அப்படித்தான்: நாம் மனம் அமைதி அடையவேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் தேவையற்ற தொந்தரவு செய்யும் அனுபவங்களை அதனுள் கொண்டு வந்து அதைக் கிளறி விடுகிறோம். அவற்றைத் தாண்டி செல்ல வேண்டிய சாலைகள் என்று அறிந்தால், அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுங்கிச் சென்று விடுவோம். இதைத்தான் தேவையற்ற முன்யோசனைகளை வெட்டுவது என்பது. உதாரணமாக, "மனம் அமைதியாக இருக்கும் போது அதற்கு என்ன தெரியும்? எதைப் பார்க்கும்?" என்பது போன்ற எண்ணங்களை வெட்டி விடுங்கள். அவை உங்கள் பாதையில் தேவையற்ற பொருட்களைப் பரப்பித் தடங்கள் உண்டாக்குகின்றன.
Roads to Pass By
When you come here to Nong Paa Pong Monastery, there are roads crossing your way. But they don’t matter. You simply go past them, because you don’t want them. The same with all the preoccupations in the world: We want the mind to quiet down but then we bring in disturbing preoccupations to stir it up again. If we understand that they’re simply roads to pass by, we pass them by without paying them any attention. That’s what it means to cut preoccupations away. For example, “When the mind is quiet, what will it know? What will it see?” Cut those thoughts away. They simply clutter up your path.
50. ஒன்றைத் தெரிந்தால், அனைத்தும் தெரிந்தது போல Top
காட்சிகள், சப்தங்கள், மணங்கள், சுவைகள், மற்றவை: இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிந்தால், எல்லா வற்றையும் தெரிந்தது போலத்தான். எல்லாம் ஒரே இயல்புகளைக் கொண்டவை. இது இந்தக் கோழிகளுக்கு உள்ள இயல்புகளை அறிவது போல. ஒரு கோழியின் இயல்புகளைத் தெரிந்து கொண்டால் போதும். பிறகு பிற மாநிலங்களுக்குச் சென்று இதே போன்ற பறவைகளைப் பார்த்தால், அவைகளும் இந்தக் கோழியின் இயல்புகளைக் கொண்டிருப்பது தெரியும். நீங்கள் அந்தப் பறவை வாத்து அல்ல என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவை கோழிகள். அது உங்களுக்கு உறுதியாகத் தெரியும்.
நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சப்தம் கேட்டால், அந்தச் சப்தம் உங்களைத் தொந்தரவு செய்வதில்லை. தொந்தரவு உண்டானதாக மனத்தில் தோன்றினால், நீங்கள் தான் சப்தத்தைத் தொந்தரவு செய்கின்றீர்கள். அங்கு தான் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். உன்னிப்பு மெதுவாக எழும். படிப்படியாகப் பிரதிபலித்து நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். எங்கு பிரச்சனை தோன்றுகிறதோ அங்கு பிரச்சனையின் தீர்வும் உள்ளது. நீங்கள் மன ஒறுமைப்பாடு தியானம் செய்யும் போது அதிகம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. மனத்தை ஒன்றாக்குங்கள். மூச்சு உள் வருவதையும், வெளிச் செல்வதையும் கவனியுங்கள். வேறு எதாவது எண்ணங்கள் மனத்தில் தோன்றி கவலை உண்டாக்கினால், மீண்டும் அந்த முச்சுக்கே வந்துவிடுங்கள். மூச்சு பற்றிக் குழப்பம் ஏற்பட்டால், அது வெளிவருகிறதா, உள் செல்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டால் மறுபடியும் மனக்கவனத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
Know One, Know Them All
Sights, sounds, smells, tastes, everything: When you know one, you know them all. They all have the same characteristics. It’s kind of like recognizing what characteristics this chicken has. All you have to do is learn to recognize one chicken. Then when you go to different provinces and find other animals like this one, you’ll know that they’re like this chicken. You don’t have to go remembering that those other ones aren’t ducks. They’re chickens. You’re sure of the matter.
When you’re sitting in meditation and a sound comes in, it’s not the case that the sound is disturbing you. When that awareness arises, you’re disturbing the sound. That’s where you have to solve the problem. Discernment will gradually arise. You gradually contemplate and judge things for yourself. Wherever you get snagged, you undo the problem right there. Your duties while you practice concentration don’t require you to do a lot. Keep the mind one. Know the breath coming in, the breath going out. When you get worried about something else, focus on the breath again. When you get confused about the breath, not knowing whether it’s coming in or going out, establish your mindfulness all over again.
51. இரண்டு வேறுபட்ட பொருட்கள் Top
ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கும் போது அங்கு உள்ள சப்தங்கள் தொந்தரவு செய்தால் வேறொரு அமைதியான இடம் தேடிச் சென்று உட்காருகின்றீர்கள். ஆனால் அங்கும் சப்தங்கள் வந்து உங்களைப் பாதித்தால் மறுபடியும் மனச்சஞ்சலப் படுகின்றீர்கள். அதற்குக் காரணம் உங்கள் அறிவு மனக் குறிப்புகளிலிருந்து வருகிறது. வாய்மைக்கு நிகராக வரவில்லை. உண்மையென்னவென்றால் நீங்கள் சப்தங்களோடு வாழ்கின்றீர்கள், சப்தங்களும் உங்களோடு வாழ்கின்றன. அங்கு பிரச்சனை இல்லை, ஏனென்றால் அவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.
உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். இதோ இங்குள்ள பொருள். அதைத் தூக்கினால் அது பாரமாக இருக்கிறது. கீழே வைத்தவுடன் அது பாரமாக இல்லை. ஏன் பாரமாக இருக்கிறது? ஏனென்றால் நீங்கள் அதைத் தூக்கி வைத்திருக்கின்றீர்கள். அதைக் கீழே வைத்தவுடன் ஏன் பாரமில்லாமல் இருக்கிறது? ஏனென்றால் நீங்கள் அதைத் தூக்கிக்கொண்டு இருக்கவில்லை. "தூக்குவது" என்பது சப்தம் உங்களைத் தொந்தரவு செய்வதாக நினைப்பது. அப்படி நினைத்தால், நீங்கள் பாதிக்கப் படுவீர்கள். இந்தப் பொருள் ஒரு கிலோ எடை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அங்கேயே விட்டுவிட்டால் அது ஒரு கிலோ பாரம் மட்டுமே உள்ளது. சப்தங்களும் அது போலத் தான். சப்தங்களை விட்டுவிட்டால் அவை உங்களைத் தொந்தரவு செய்யாது- ஏனென்றால் அவற்றைப் பிடித்துக் கொள்வதில்லை.
Two Different Things
If you sit in one place and sounds get you all upset, you go away from that place and find another place that’s quiet. But if there are sounds there, you get upset again. That’s because your knowledge comes from perceptions. You don’t know in line with the truth. The truth is that you live with sounds, and sounds live with you, and there are no issues, because you’re two different things.
I’ll give you an example. If you lift up this object, it’s heavy. If you put it down, it’s not heavy. Why is it heavy? Because you lift it up. Why is it light when you put it down? Because you’re not lifting it. “Lifting it” is simply a matter of clinging to the idea that the sound is disturbing you. If you think in that way, you get upset. Suppose that this object weighs one kilogram. If you leave it there, it weighs just a kilogram. It’s the same with sounds. If you leave the sounds alone, they won’t disturb you—because you don’t grab onto them.
52. மனத்தால் கொல்லப்படுவது Top
மனம் உண்மையில் மிக முக்கியமான ஒன்று. அது உங்களை கொல்லவும் கூடும். அதே சமயம் ஆபத்திலிருந்து உங்களை விடுவிக்கவும் கூடும். இதனை நாம் அடக்கிப் பழக்கிய காட்டு மிருகங்களிடமிருந்து காணலாம். எடுத்துக்காட்டாக காட்டுக்கோழிகளுக்கு மனிதரைக் கண்டால் மிகுந்த பயம். ஒரு காட்டுக் கோழியை அருகில் நன்றாகப் பார்ப்பதற்காக அதன் மீது பாய்ந்து பிடித்தால் அது செத்துவிடும். அது சாவதற்கு காரணம் என்ன? அதன் பழக்கப்படாத காட்டு மனமே காரணம். அதற்குப் பயம் ஏற்பட்டால் அது மரண பயமாக மாறி அதைக் கொன்று விடுகிறது. மனிதர்களும் அப்படித்தான். நாம் சோகமாக இருக்கும் போது நம் கண்களில் நீர் வழிகிறது. மிகுந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களிலும் நம் கண்களீல் கண்ணீர் வழிகிறது - ஏனென்றால் மனதிற்கு மிகச் சரியான நிலையில் இருக்க முடிவதில்லை.
Killed by the Mind
The mind is something really important. It can kill you or it can get you out of danger. We can see this from wild animals that we tame. Wild chickens, for instance, are really afraid of people. If you pounce on one and hold it to have a good look at it, it’ll die. What killed it? The fierceness of its mind killed it. If it’s afraid, it can be so afraid that it dies. Just like people: When we get sad, the tears will flow. When we get too happy, the tears will flow—because the mind doesn’t stay in a condition that’s just right.
53. மனத்தில் மறைவது Top
ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் நல்வினையையோ தீவினையையோ நாம் பார்ப்பதில்லை. அதன் உருவம் மட்டுமே உள்ளது. அது நிர்வாணமாகப் பிறக்கிறது. ஒரு பிறவியிலுள்ள பொருட்களை அடுத்த பிறவிக்கும் நாம் கையில் எடுத்துக் கொண்டு வர முடியாது என்பதையே இது காட்டுகிறது. ஆகவே தான் ஒரு குழந்தை பிறக்கும் போது, கையோடு எந்தப் பொருளையும் கொண்டுவருவதில்லை. ஆனாலும் கடந்த வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்குத் தொடர்ந்து வரும் சில பொருட்களும் இருக்கின்றன. ஆனால் அவை வேரோரிடத்திலிருந்து வருகின்றன - அவை மனத்தோடு வருகின்றன.
உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். இது ஒரு மாங்கொட்டையைப் போல அல்லது லம்யாய் (இலைச்சீ என்றும் அழைக்கபடும்) பழக் கொட்டையைப் போல. அது கொட்டையாக மட்டுமே இருக்கும் வரை அதை எவ்வளவு கவனமாக ஆராய்ந்தாலும் அதில் மரத்தையோ, பூக்களையோ காணமுடியாது. ஏனென்றால் அவை மிக நுட்பானவை. ஆனால் அதனுள் ஏதோ இருக்கிறது. அதே போல ஒருவர் இவ்வுலகில் பிறக்கும் போது கைகளிலோ, தோள் மீதோ எதையும் சுமந்து கொண்டு வரவில்லையென்றாலும், அவர்கள் எதையோ கொண்டு வந்திருப்பது இயற்கை முதிற்சியடையும் போது தெரிய வரும் - ஏனென்றால் அவை ஏற்கனவே அங்கு இருக்கின்றன. மாங்கொட்டையைப் போல: மரத் தண்டு, இலைகள், கிளைகள் எல்லாம் அந்த மாங்கொட்டையில் மறைந்திருக்கின்றன. அந்தக் கொட்டையை விதைத்தால், அது மரத்தண்டாகவும், இலைகளாகவும் பூக்களாகவும் தானாக மாறிவிடும். அதனால் தான் புத்தர் மக்களை வேறுபடுத்துவது அவர்களின் செய்கையே (பாலி மொழியில் கம்மம், கர்மம்) என்று கூறினார்.
Hiding in the Mind
When a child is born, we don’t see any good or bad kamma. There’s just a body. It comes naked. This shows that the things in one life can’t be held in our hands to see in the next life. This is why, when a child is born, it doesn’t bring anything along in its hands. But there are things that come along, simply that they come along somewhere else. They come along in the mind.
I’ll give you an example, like a mango seed or lamyai seed. As long as it’s still a seed, you can examine it carefully and not find a tree in there, any flowers in there, because they’re very subtle. But there’s something in there. Even though a person coming into this life doesn’t hold anything in his hands or carry anything over his shoulder, these things appear when nature begins to mature—for they’re already there. Like a mango seed: the trunk, the leaves, the branches are all there in the mango seed. If we plant the seed in the ground, it’ll turn into a trunk, leaves, and flowers on its own. This is why the Buddha said that kamma is what sorts people out so that they’re different.
54. வலிமையும் இணக்கமும் Top
ஒழுக்கம் ஒரு வலிமை. ஒருக்கம் ஒரு வலிமை. உன்னிப்பு ஒரு வலிமை. இந்த வலிமைகளெல்லாம் ஒன்றுகூடிச் சேர்ந்து வேலைசெய்யும் போது அது "மக்க-சமங்கி": இணக்கத்தோடு உள்ள மார்க்கம் எனப்படும். இந்த இணக்கம் எழுந்தவுடன், நீங்கள் அறத்துக்கு விழிப்புற்று விடுகின்றீர்கள். இங்கு உள்ள அனைவரையும் போல. நாம் அனைவரும் இணக்கத்தோடு செயற்படும் போது சிக்கலற்று, அமைதியாக இருக்கலாம். மாணவர்களையும் ஆசியர்களையும் போல: ஆசிரியர்களும் இணக்கத்தோடு இருந்து, மாணவர்களும் இணக்கத்தோடு இருந்தால், பள்ளிக்கூடமே அமைதியுடன் செயற்படும். மாணவர்கள் இணக்கத்தோடு இல்லாமல், ஆசிரியர்களும் இணக்கத்தோடு இல்லாவிட்டால், வெவ்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தால், அங்கு அமைதி இராது. ஆசியர்களும் மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்: ஆசிரியர்கள் அவர்கள் கடைமைகளைச் செய்ய வேண்டும், மாணவர்கள் மாணவருக்கான கடமைகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கடமையை முழு முயற்சியோடு செய்யவேண்டும், அப்போது பிரச்சனைகள் எழாது.
ஒருக்கத்தைப் பயில்வதும் அது போலத்தான்: ஒழுக்கம், ஒருக்கம், உன்னிப்பு ஆகியவை இருக்கும் போது எல்லாவிதமான நல்ல நிகழ்ச்சிகளும் அங்கேயே இருக்கும், ஒன்றுக்கொன்று இணக்கத்துடன் உதவிகரமாகச் செயற்படும்.
இன்னும் அருகில், உடலுக்கு வருவோம்: நான்கு பூதங்களான மண், நீர், வெப்பம், காற்று இணக்கத்துடன் செயற்படும் போது, உடல் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது - இது உள் இருக்கும் இணக்கத்தின் காரணம். ஆனால் உடல் இணக்கத்தோடு இல்லாவிட்டால் - வெப்பம் அதிகமாகவோ, மண் அதிகமாகவோ, காற்று அதிகமில்லாமலோ இருந்தால் - உடல் நோய்வாய்ப் படுகிறது, அசௌகரியப் படுகிறது.
Strength & Harmony
Virtue is a strength. Concentration is a strength. Discernment is a strength. When they pool their strengths and work together so that they’re one and the same, that’s called magga-samangi: the path in harmony. As soon as this harmony arises, that’s when you awaken to the Dhamma. It’s like all of us here. When we’re in harmony, we can be at our ease. Like students or teachers: If the teachers are in harmony, if the students are in harmony, the whole school is at ease. When the students are not in harmony and the teachers are not in harmony, running off in different directions, then there’s no peace. The teachers and students have to cooperate: teachers following their duties as teachers, students following their duties as students. Each person performs his or her duties to the full. No problems will arise.
The same with practicing concentration: When there’s virtue, concentration, and discernment, all kinds of good things will stand out right there, right where they’re helping one another in harmony.
To bring the matter in even closer, into the body: When the properties of earth, water, fire, and wind are in harmony, the body is beaming with health— because of the harmony within it. But if the body isn’t in harmony—if there’s too much fire, too much earth, and not enough wind—the body will grow sick and uncomfortable.
55. நீங்கள் நிறைவுற்றது உங்களுக்கே தெரியும் Top
இரவும் பகலும் வேகமாக ஓட, நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார். நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தால் நம்பிக்கையோடு அடைக்கலம் கொள்வதற்கு ஒன்று இருக்கிறது. உதாரணமாக நீங்கள் சரியான செயல் ஒன்றை இன்று செய்தீர்கள். ஆனால் ஒரு நண்பன் "நீ செய்தது தவறு," என்கிறான். உங்களுக்கு நண்பன் மீது கோபம் வருகிறது. அது நீங்கள் நல்ல செயல்களைச் செய்கின்றீர்கள், ஆனால் தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுகிறது. மற்றவர் உங்களைச் சரியில்லை என்று சொல்வதைக் கேட்டு அவர்கள் சொல்வதற்கு நிகராக நீங்களும் சரியில்லாமல் ஆகின்றீர்கள். உண்மையில், நீங்கள் நல்லது செய்தால், மற்றவர் அதைச் "சரி இல்லை," என்றாலும் நீங்கள் நல்லவரே. இருக்கும் நிலையில் நிமிர்ந்து நிற்கலாம். ஏனென்றால் நீங்கள் நல்லது செய்திருக்கின்றீர்கள். இது சாதம் வயிறு நிறையச் சாப்பிட்டது போல. மற்றவர் வந்து உங்களிடம் நீங்கள் நிறையச் சாப்பிடவில்லையென்றால் அவர்களை நம்புவீர்களா? நீங்கள் நிறைவாகச் சாப்பிட்டுவிட்டது உங்களுக்கே தெரியும். எனவே உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. உங்கள் மீது நம்பிக்கை இருக்கும் போது உங்கள் ஆதரவில் நிற்கலாம்.
அங்கிருந்து 'அத்தன கோடயாத்தனம்' செல்லலாம்: அதாவது நீங்களே உங்களுக்கு அறிவுரை கூறிக் கொள்ளலாம். தவறு செய்தால் நீங்களே கடிந்து கொள்ளலாம். எது செய்தாலும் நீங்களே அறிவுரை கூறிக் கொள்ளுங்கள்.
மொ. ஆ. குறிப்பு: 'அத்தன கோடயாத்தனம்' நீங்களே உங்களுக்கு அறிவுரை கூறிக் கொள்ள வேண்டும்.
இந்த வார்த்தைகளைத் தம்மபதம் 379 இல் காணலாம்.
You Know You’re Full
The Buddha emphasized that we should think about what we’re doing as days and nights fly past, fly past. If we know what we’re doing, we have a refuge we can depend on. For example, if you do something right today, but a friend says, “What you did is wrong,” then you get angry with your friend. That shows that you do good things but think things that aren’t good. Other people say you’re not good, and you become not good in line with their words. Actually, if you do good, then even if other people say, “not good,” you’re still good. You can stand your ground. After all, what you did was good. It’s like eating rice today until you’re full. If other people come and say you’re not full, will you believe them? You believe in yourself that you’re already full. When you can believe in yourself, that’s when you can depend on yourself.
From there you go to attana codayattanam: You yourself should admonish yourself. If you do wrong, admonish yourself. Whatever you do, keep admonishing yourself.
56. நாரும், நாரில்லாததும் Top
அவர்கள் "நீங்களே உங்களுக்கு அறிவுரை கூறிக் கொள்ள வேண்டும்." என்று சொல்லும் போது அதில் "உங்களுக்கு" என்பது அத்தா (ஆத்மா). ஆனால் உங்களைப் பொருத்த வரைக்கும் அப்படி இல்லை.
தண்ணீர் கலங்கி இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதை வடிகட்டினால், கலங்கிய நீரிலிருந்து தெளிந்த நீர் கிடைக்கும். "அது தெளிவான நீர்." உங்களையே நீங்கள் வடிகட்டிக் கொண்டால், அது அனத்தா, தான்-இன்மை. தான் என்பதிலிருந்து வந்தது. அது தான்-இன்மை என்பது உங்களுக்கே தெரியும். அப்போது தான் அது அனத்தா (ஆத்மா இன்மை). உங்கள் உன்னிப்புக்கு நிகராக உள்ள தான்-இன்மை. ஆனால் சிலர் எல்லாம் அனத்தா என்றால், ஆதாயம் பெருவது யார்? என்று கேட்கின்றனர்.
நாம் 'தான்' என்பதையும் 'தான்-இன்மையை'யும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று மற்றதின் மேல் உள்ளது. கடைக்குச் சென்று தேங்காய் வாங்கி வந்திருக்கின்றீர்களா? அல்லது ஒரு வாழைப்பழத்தை? ஒரு தேங்காய் வாங்கும் போது, அதில் நாரும் ஓடும் இருக்கும். அவை அதனோடு சேர்ந்து வருகின்றன. யாராவது உங்களிடம் வந்து, "ஐயா, அது நார், அது ஓடு. அதையும் சமையலில் போடப்போகின்றீர்களா? போடப் போவதில்லையென்றால் அதை ஏன் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்கிறார். வாங்கியவருக்கும் அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை என்பது தெரியும், ஆனால் அதை வீட்டுக்குக் கொண்டு செல்லத்தான் வேண்டும். அதைப் பிரித்து வீசும் நேரம் இன்னும் வரவில்லை. எனவே அவற்றையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். இது உலக வழக்கம். தேங்காய் வாங்கும் போது, அந்த நாரையும், ஓட்டையும் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்.
சம்பிரதாயங்களும் விடுதலையும் இது போல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே வருகின்றன.
Husk & Not-husk
When they say, “Admonish yourself,” “self” is atta. As for yourself, it’s not like that. Suppose that some water is murky. You filter it and see the clear water that comes from the murky water: “That’s clear water.” If you filter yourself, it’ll be anatta, not-self, coming out of self. You’ll see that it’s not-self. That’s when it’s anatta in line with the understanding of your discernment. But some people think that if everything is anatta, not-self, then what’s there to gain?
We have to understand self and not-self. They lie on top of each other. Have you ever been to a market to buy a coconut? To buy a banana? When you buy a coconut, it has its husk and its shell. They come along with it. If someone comes up and says, “Hey. That husk. That shell. Are you going to put them in your curry, too? If not, then why are you carrying them?” The person buying the coconut knows that you can’t eat the husk or the shell, but you have to bring them along. The time hasn’t come to throw them away, so you have to bring them along. This is convention. When you buy a coconut, don’t get deluded about the husk or the shell.
Conventions and release come along with each other in the same way.
57. சரியானவற்றுள் உள்ள தவறு Top
இந்தப் பாத்திரம், அதை எங்கு வைத்திருந்தாலும், ஒரு நாள் உடையத்தான் போகிறது. இந்தத் தட்டு, அதை எங்கு வைத்திருந்தாலும், ஒரு நாள் உடையத்தான் போகிறது. ஆனால் நம் குழந்தைகளுக்கு அவற்றைக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுத்தர வேண்டும். பத்திரமாக எடுத்து வைக்கக் கற்றுத்தர வேண்டும். நம் குழந்தைகளுக்கு இந்தச் சம்பிரதாயமான முறைகளைக் கற்றுத்தர வேண்டும். அப்படிச் செய்தால் பாத்திரத்தை நீண்ட நாள் பயன்படுத்தலாம். நாம் அறத்தை அறிகிறோம், நாம் அறத்தைப் பயில்கிறோம் என்பதற்கு இது ஒரு அறிகுறி.
அந்தப் பாத்திரம் உடையப் போவது உறுதி என்பதை அறிந்திருக்கின்றீர்கள். அதனால் உங்கள் குழந்தைகளிடம், "கவலைப்பட வேண்டாம். அதில் சாப்பிட்ட பின், அதைக் கழுவ வேண்டாம். கீழே போட்டுவிட்டால், அதனால் என்ன? அது நமக்குச் சொந்தம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் தூக்கிப் போடுங்கள். எப்படியும் உடையத்தான் போகிறது." என்று சொன்னால், நீங்கள் மூடத்தனமாக நடந்து கொள்கின்றீர்கள் என்று பொருள்.
சம்பிரதாயங்களை அறிந்து கொண்டால், நாம் நோய்வாய்ப்படும் போது மருந்து எடுத்துக் கொள்வோம். உடல் சூடாக இருந்தால் குளிக்கச் செல்கிறோம். குளிராக இருந்தால், உடலைப் போர்த்துக் கொண்டு சூடாக்க எதையாவது தேடுகிறோம். பசிக்கும் போது சாதத்தை உண்கிறோம். சாதத்தை உண்டாலும் இந்த உடல் ஒரு நாள் மறையும் என்பது தெரியும். ஆனால் இப்போது, அதற்கான நேரம் வரவில்லை. இந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: அது உடையவில்லை, எனவே அதைப் பாதுகாத்து முடியும் வரை அதைப் பயன்படுத்த வேண்டும்.
What’s Wrong in What’s Right
We’ve seen that this bowl, no matter where you put it, will someday have to break. This plate, no matter where you put it, will someday have to break. But we have to teach our children to wash these things so that they’re clean and put them away safely. We have to teach children in line with these conventions so that we can use the bowl for a long time. This is a sign that we understand the Dhamma and are practicing the Dhamma.
If you see that the bowl is going to break and tell your children, “Don’t worry about it. When you’ve finished eating out of it, you don’t have to wash it. If you drop it, it doesn’t matter. It’s not really ours. Toss it anywhere you want, for it’s ready to break.” If you speak in this way, you’re simply too stupid. If we understand conventions, then when we fall sick we look for medicine to take. When we feel hot, we take a bath. When we feel cold, we find something to keep the body warm. When we’re hungry, we find rice to eat. We know that even though we eat rice, the body’s still going to die. But at the moment, it hasn’t reached its time to die. Like this bowl: It hasn’t yet broken, so we take care of it so
that we can benefit from it while we can.
58. வாய் வழியே ஊட்டுவது Top
புத்திசாலி மக்கள்: அவர்களுக்கு அதிகம் கற்பிக்கத் தேவை இல்லை. புத்தியற்ற மக்கள்: எவ்வளவு தான் கற்பித்தாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால் இது கற்பிக்கும் ஆசிரியரையும் பொருத்தது. பல நேரங்களில் நாம் நல்ல மனோபாவம் இல்லாத போதே கற்பிக்கிறோம். நாம் குழந்தகளுக்குக் கற்பிப்பது போல: நாம் குழந்தைகள் மீது கோபமாக இருக்கும் போது தான் அவர்களுக்குக் "கற்பிக்கிறோம்", பின் உடனே கூச்சலிடவும் செய்கிறோம். நல்ல விதத்தில் கற்றுத் தர நமக்கு விருப்பமில்லை. மோசமான மனோபாவத்துடன் இருக்கும் போது ஏன் கற்பிக்க வேண்டும்? அந்த நேரங்களில் கற்பிக்க வேண்டாம் என்பேன். எல்லோரும் சற்று நல்ல மனோ பாவத்துடன் இருக்கும் வரை காத்திருப்பது நல்லது. கேட்பவர் எவ்வளவு தான் தவறு செய்தாலும் அதை ஒதுக்கிவிடுங்கள். இருவரும் நல்ல மனோ பாவத்துடன் இருக்கும் வரை காத்திருங்கள்.
இதை நினைவில் கொள்க. சரியா? நான் கவனித்தவரை இல்லறத்தார் கோபமாக இருக்கும் போது தான் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றனர். அது குழந்தைகளின் உணர்ச்சிகளைப் பாதிக்கிறது. நீங்கள் நலமற்றதை அவர்களுக்குத் தருகின்றீர்கள். பின் அவர்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்? நீங்கள் துக்கம் அனுபவிக்கின்றீர்கள், உங்கள் குழந்தைகளும் துக்கம் அனுபவிக்கின்றார்கள். அதுதான் நடைமுறை. நம் எல்லாருக்கும் நல்லது பிடித்திருக்கிறது, ஆனால் நமது நன்மை போதுமானதாக இல்லை. ஒருவருக்கு நல்லது தர விருப்பப் படுகின்றீர்கள். ஆனால் சரியான நேரமோ, இடமோ, நடந்து கொள்ளும் முறையோ உங்களுக்குப் தெரியாமலிருந்தால் அதனால் நன்மை ஏதும் விளையாது. இது ஒரு சுவையான உணவைப் போல. அந்த உணவால் நீங்கள் பயன்பெற வேண்டுமானால், அதை உங்கள் வாயால் உண்ண வேண்டும். காது வழியாகத் திணித்துப் பாருங்கள். அதனால் ஏதேனும் பயன் விளையுமா? அந்த அறுசுவை உணவினால் ஏதாவது பயன் கிடைக்குமா? நம் அனைவருக்கும் நலம் விளைவிக்கும் நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மற்றவர்களின் அத்தகைய சந்தர்ப்பங்களையும் நாம் பார்க்க வேண்டும். (நமக்குத் தக்க நேரத்திலும், மற்றவருக்கு ஏற்ற நேரத்திலும் ஒன்றைச் செய்யவேண்டும்.) அதுதான் அனைவருக்கும் பொருந்தும் வழி. .
Feeding Through the Mouth
People who are intelligent: You don’t have to teach a lot. People who are not intelligent: No matter how much you teach them, they don’t understand. But this depends on the teacher, too. By and large, we teach when we’re in a bad mood. As when we teach our children: It’s only when we’re angry with them that we “teach” them, and then it’s just a matter of yelling at them. We’re not willing to teach them nicely. When people are in a bad mood, why should you teach one another? I’d say not to teach at that time. Wait until everyone’s in a better mood. No matter how wrong the other person is, put it aside for the time being. Wait until you’re both in a good mood.
Remember this, okay? From what I’ve observed, lay people teach their children only when they’re angry with them. And so it hurts the children’s feelings. You’re giving them something that’s not good, so why should they accept it? You suffer; your children suffer. That’s the way things are. We all like what’s good, but our goodness isn’t enough. If you try to give someone something good but you don’t have a sense of time and place, a sense of your role, nothing good comes from it. It’s like delicious food. You have to eat it with your mouth if you’re going to benefit from it. But try stuffing it in your ear: Will it give any benefit? Will that delicious food give any benefit? All of us have our openings. You have to look for the other person’s openings. That’s the way it is with everybody.
59. பானையை அடிக்கும் குயவன் Top
குழந்தைகளை வளர்க்கும் போது, உங்களுக்கு உன்னிப்புத் தேவை. குயவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? குயவர்கள் பானையை நாள் முழுதும் அடித்துக்கொண்டிருப்பார்கள். அதை அடித்து அடித்தே பானையாக்குவார்கள். அதை அடிப்பது உடைப்பதற்காக அல்லை. குழந்தைகளிடமும் அப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும். அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் கடுமையாக இருக்க வேண்டிய நேரம் வந்தால், சொல்லால் மட்டுமே கடுமை காட்ட வேண்டும், உள்ளத்தால் அல்ல. உங்களையே துக்கத்தில் ஆழ்த்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் மோசமான மனோ பாவத்துடன் இருந்தாலும், அவர்களுக்குத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருங்கள். குயவன் பானைகளை அடித்துக் கொண்டு இருப்பதைப்போல. அவன் நோக்கம் பானைகளை அழகாக்குவதுதான், உடைப்பதற்கு அல்லை. உங்கள் குழந்தைகளுக்கும் அப்படியே கற்றுத்தர வேண்டும்.
Potters Beating Pots
When raising your children, you need to have discernment. Have you ever watched potters? Potters beat their pots all day. They beat them to make them into pots. They don’t beat them to break them. It’s the same with your children. You have to keep teaching them. When the time comes to be fierce with them, be fierce only with your mouth, but not with your heart. Don’t make yourself suffer. Even though you may be in a bad mood, you keep on teaching them, in the same way that a potter beats his pots all day. His intention is to make the pots beautiful. He doesn’t beat them to break them. You should teach your children in the same way.
60. கட்டாயப் படுத்திக் கனிய வைத்தல் Top
பயிற்சி செய்ய முடியாதவரைக் கண்டு கோபப்பட வேண்டாம். அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டே இருங்கள். அவர்கள் அறிவு முதிர்ச்சி அடைந்தவுடன் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால், பிரச்சனைகள் மறைந்துவிடும்.
இது பழுக்காத ஒரு பழத்தைப் போல. அதை இனிப்பாக ஆகுமாறு கட்டாயப் படுத்த முடியாது, ஏனென்றால், அது இன்னும் பழுக்கவில்லை, புளிப்பாக இருக்கிறது. அது இன்னும் சிறியதாகவும் பச்சையாகவும் இருக்கிறது. அதைப் பெரிதாகவும் பழுத்ததாகவும் ஆக வேண்டுமெனக் கட்டாயப் படுத்த முடியாது. அதை அதன் போக்கில் இருக்க விடுங்கள். முதிர்ச்சி அடைந்ததும் தானாகவே பெரிதாகிவிடும், இனிப்பாகிவிடும், பழுத்துவிடும். இப்படி எண்ணும்போது, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். உலகில் மக்களோடும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
Forcing the Fruit
Don’t get angry with people who can’t yet do the practice. Just keep on teaching them. When their faculties mature, they’ll be ready to accept what you say. If you keep on acting in this way, problems fall away.
It’s like a fruit that’s still unripe. You can’t force it to become sweet, because it’s still unripe, still sour. It’s still small and unripe. You can’t force it to become large and sweet. Just let it be. When it matures, it’ll grow large on its own, sweet on its own, ripe on its own. If you can think in this way, you can be at your ease. That’s the way it is with people in the world.