உலகமே ஒரு சிறைச்சாலை

FILM : MANIMEGALAI

SONG : ULAGAME ORU SIRAICHALAI

SINGER : P.BHANUMATHI

MUSIC : G.RAMANATHAN

LYRICS : KAMBATHASAN

YEAR : 1959

YouTube Video

உலகமே ஒரு சிறைச்சாலை

உலகமே ஒரு சிறைச்சாலை

இங்கே உற்றமும் இருக்கே(?) உடல் சிறைச்சாலை

உலகமே ஒரு சிறைச்சாலை

ஐயிரண்டு திங்கள் அன்னை

வயிரே சிறைச்சாலை

அணிவரும் ஏழைக்கும்

ஆசையே சிறைச்சாலை

ஐயிரண்டு திங்கள் அன்னை

வயிரே சிறைச்சாலை

அணிவரும் ஏழைக்கும்

ஆசையே சிறைச்சாலை

வெயில் தரும் பகலுக்கு

இரவே சிறைச்சாலை

வெயில் தரும் பகலுக்கு

இரவே சிறைச்சாலை

விதி முடிந்தால் இங்கே

பிடிமண் சிறைச்சாலை

விதி முடிந்தால் இங்கே

பிடிமண் சிறைச்சாலை

உலகமே ஒரு சிறைச்சாலை

மெய்மைதனக்கு இங்கே

பொய்மையே சிறைச்சாலை

மேவிடும் காட்சிக்கெல்லாம்

கண்ணே சிறைச்சாலை

மெய்மை தனக்கு இங்கே

பொய்மையே சிறைச்சாலை

மேவிடும் காட்சிக்கெல்லாம்

கண்ணே சிறைச்சாலை

துய்ய புத்தபிரான் அருளாம் மலர்த்தாளை

துய்ய புத்தபிரான் அருளாம் மலர்த்தாளை

தோத்திரம் செய்பவர்க்கே சிறையே தவச்சாலை

உலகமே ஒரு சிறைச்சாலை

இங்கே உற்றமும் இருக்கே(?) உடல் சிறைசாலை

உலகமே ஒரு சிறைச்சாலை

* * * * *

குறிப்பு:

தாள் - Stem, pedicle, stalk; பூ முதலியவற்றின் அடித்தண்டு

தோத்திரம் 1. Praise, laudation, eulogy, panegyric; புகழ்ச்சி. 2. Words of salutation; வணக்கமொழி

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை

உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன

மணிமேகலை 30-189,190

கந்தங்கள் உடலையும் மனத்தையும் குறிக்கும். மனம் நான்கு கூறுகள் கொண்டுள்ளது: நுகர்வுகள் (feelings), குறிப்பு (perception), பாவனை (volition or mental formations) மற்றும் உணர்வு (consciousness). நமது வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் இந்த ஐந்து கந்தங்களுள் அடங்கும். ஆனால் இவ்வைந்தோடும் பற்றுக்கொள்வது துக்கத்தை விளைவிக்கும். அதனால் அவை ஒரு சிறைச்சாலையாகிவிடுகின்றன என்பதற்கான பௌத்த போதனையின் விளக்கம் இங்கே

YouTube பதிவுக்கு நன்றி: திரு. Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI