உபாசிவ-மாணவ-பூச்சா Upasiva-manava-puccha
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 5.6
உபாசிவ-மாணவ-பூச்சா: உபாசிவரின் கேள்விகள்
Upasiva-manava-puccha: Upasiva's Questions
Translated from the Pali by: Thanissaro Bhikkhu
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு
* * *
[உபாசிவர்:]
தனிமையில், சாக்கியரே,
எதனையும் நம்பி இராமல்,
என்னால் பெரும் வெள்ளத்தைத்
தாண்டிச் செல்ல முடியாது.
கூறுங்கள், எல்லாம் அறிந்த அறிவாற்றலுள்ளவரே
(எல்லாக் கோணங்களிலிருந்தும் அனைத்தையும் பார்ப்பவரே),
நம்பிக்கையுடன்
எதன் ஆதரவோடு வெள்ளத்தைக் கடப்பது?
[Upasiva:]
Alone, Sakyan, & with nothing to rely on,
I can't venture across
the great flood.
Tell me, All-around Eye,
the support to rely on
for crossing over this flood.
[புத்தர்:]
மனத்தை இன்மையில் கவனம் செலுத்தி, [1]
எதையும் நம்பியிராமல்,
புலன் இன்பங்களைக் கைவிட்டு,
பேச்சைத் தவிர்த்து,
வேட்கையின் முடிவை
இரவும் பகலுமாகக் கவனித்து
வெள்ளத்தைக் கடந்து செல்.
[The Buddha:]
Mindfully focused on nothingness, [1]
relying on 'There isn't,'
you should cross over the flood.
Abandoning sensual pleasures,
abstaining from conversations,
keep watch for the ending of
craving, night & day.
These 2 thinks will help you cross the occean. The perception of nothingness and the awareness that there is nothing.
[உபாசிவர்:]
புலன் இன்பங்களிடமிருந்து விடுபட்டவர்,
இன்மையைச் சார்ந்திருந்து,
மற்றதை எல்லாம் விட்டு விட்டு,
மனக்குறிப்புகளிடமிருந்து விடுபடுகிறார்: [5]
ஆனால் அப்படி விடுபட்டவராகத் தொடர்ந்து இருப்பாரா?
(அல்லது மீண்டும் மனக்குறிப்புகளில் சிக்கிக் கொள்வாரா?)
[Upasiva:]
One free from passion
for all sensual pleasures
relying on nothingness, letting go of all else,
released in the highest emancipation of perception:
Does he stay there unaffected?
[புத்தர்:]
புலன் இன்பங்களுக்கான அவாவிடமிருந்து
விடுபட்டவர்
இன்மையைச் சார்ந்திருந்து,
மற்றதை எல்லாம் விட்டு விட்டு,
மனக்குறிப்புகளிடமிருந்து விடுபடுகிறார்:
அப்படி விடுபட்டவராக அவர் தொடர்ந்து இருப்பார்.
[The Buddha:]
One free from passion
for all sensual pleasures
relying on nothingness, letting go of all else,
released in the highest emancipation of perception:
He stays there unaffected.
[உபாசிவர்:]
எல்லாம் அறிந்த அறிவாற்றலுள்ளவரே,
(மனக்குறிப்புகளிடமிருந்து விடுபட்டாராக) பல ஆண்டுகள் பாதிக்கப்படாமல் அங்கேயே இருந்தால்
அவர் குளுமை பெற்று (காமம், வெறுப்பு, மயக்கம் என்ற தீயை அணைத்தவராக)
விடுதலை பெறுவாரா?
அவர் உணர்வு அப்படி இருக்குமா?
[Upasiva:]
If he stays there, O All-around Eye,
unaffected for many years,
right there
would he be cooled & released?
Would his consciousness be like that?
[புத்தர்:]
சுழன்றடிக்கும் காற்றால்,
எரியும் தீ அணையும் போது
அணைந்த தீ எங்கு போயிற்று
என்பதைக் கூற முடியாது, [2]
அது போல, மனக்குறிப்புகள் இல்லாத முனிவர்
நிப்பாண நிலையை அடைகிறார்.
அந்த நிலையை விரித்துக் கூற முடியாது
(அவரைப் பற்றி வேறு எதையும் தெரிந்து கொள்ள முடியாது).
[The Buddha:]
As a flame overthrown by the force of the wind
goes to an end
that cannot be classified,[2]
so the sage free from naming activity
goes to an end
that cannot be classified.
[உபாசிவர்:]
முடிவை எட்டிய ஒருவர்:
அவர் மறைந்துவிட்டாரா,
அல்லது தோன்றுவதில்லையா,
அல்லது என்றென்றும்
துன்பத்திலிருந்து விடுபட்டவராக இருக்கின்றாரா?
முனிவரே தயவுகூர்ந்து எனக்குத் தெரிவியுங்கள்
ஏனென்றால் இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
[Upasiva:]
He who has reached the end:
Does he not exist,
or is he for eternity
free from dis-ease?
Please, sage, declare this to me
as this phenomenon has been known by you.
[புத்தர்:]
முடிவை எட்டியவரை எவராலும்,
எப்படியும் நிர்ணயிக்க, அளவிட
முடியாது. அவரை வர்ணிக்கும் வார்த்தைகளும் இல்லை.
அவர் தோன்றுவதில்லை என்றும் கூறமுடியாது.
அனைத்தையும் துறந்தவரைப்
(நிப்பாண நிலையை அடைந்தவரை)
பற்றிப் பேசும் வழிகளும் ஏதும் இல்லை.
[The Buddha:]
One who has reached the end
has no criterion [3]
by which anyone would say that —
for him it doesn't exist.
When all phenomena are done away with,[4]
all means of speaking
are done away with as well.
* * *
விளக்கம்:
Notes:
1. "Nothingness" here denotes the dimension of nothingness, one of the four levels of mental absorption on formless themes. One attains this level, after surmounting the dimension of the infinitude of consciousness, by focusing on the perception, "There is nothing." MN 26 tells us that Alara Kalama, the Buddha's first teacher when the latter was still a Bodhisatta, had attained this level of mental absorption and had thought that it was the highest possible attainment. The Bodhisatta left him upon realizing that it was not true liberation from stress and suffering. Nevertheless, the dimension of nothingness can be used as a basis for the insight leading to that liberation. On this point, see Sn.V.14 and AN 9.36.
இங்கு இன்மை என்பது ஒரு ஆழமான தியான நிலை என்று கூறப்பட்டுள்ளது. புத்தர் போதிசத்துவராக இருந்த போது அலார காளமா என்ற அவருடைய ஆசிரியர் இந்த நிலையை அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அதுவே மேன்மையான மனநிலை என்று கருதினார். ஆனால் போதிசத்துவர் அழுத்தத்திடமிருந்தும், துக்கத்திடமிருந்தும் அது விடுதலை தராது என்று கருதியதால் அந்த ஆசிரியரை விட்டு விலகி விடுகிறார். ஆனாலும் அதை அடித்தலமாக வைத்து மேலும் வளர்ச்சி பெறலாம் என்று இங்கு குறிப்பிடப் படுகிறது.
2. For a discussion of this passage in light of early Buddhist theories of fire, see The Mind Like Fire Unbound, Chapter 1.
3. For a discussion of the meaning of "criterion" in this passage, see The Mind Like Fire Unbound, Chapter 1.
4. Although Upasiva refers to the goal as a phenomenon (dhamma), the Buddha describes it as the transcending of all phenomena. For some of the implications of this statement, see AN 3.134.
[5] மனக்குறிப்புகள் தான் உலக வழக்கங்கள். நாம் சிறு வயதிலிருந்து கற்றுக் கொள்வது. நாம் ஆண் அல்லது பெண் என்று சொல்வது ஒரு மனக்குறிப்பு. ஒரு நாய் நம்மைப் பார்க்கும் போது அது நம்மை ஆண் என்றோ, பெண் என்றோ பார்ப்பதில்லையே? உலக வழக்கங்களுக்காக நாம் ஆண் அல்லது பெண் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்தக் குறிப்போடு பற்றுக் கொண்டு விட்டால் அது பிரச்சனையாகி விடலாம். உதாரணமாக நாம் ஆண் என்ற குறிப்போடு பற்றுக் கொண்டு விட்டால், ஆண் என்றால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக வழக்கத்தில் சொல்லப்படுகிறது. 'ஆண் என்றால் விசிலடிக்கத் தெரியவேண்டும்.'
பற்று இருந்தால் 'ஐயோ, நான் ஆண்பிள்ளை என்றாலும் எனக்கு விசிலடிக்கத் தெரியவில்லயே' என்று சஞ்சலப்படுவோம். மனக்குறிப்புகளிடமிருந்து விடுபட்டவரென்றால் அக்குறிப்புகளோடு பற்றில்லாமல் இருப்பது.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
©1994 Thanissaro Bhikkhu. See details English Source
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.