அனங்கண சூத்திரம்

அனங்கண சூத்திரம்

களங்கமின்மை (கசடற இருத்தல்)

(சுருக்கம். ஒரு பகுதி மட்டுமே)

Anaṅgaṇa Sutta (MN 5)

Unblemished

Source

ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அச்சமயம் போற்றுதற்குரிய சாரிபுத்திரர் துறவிகளிடம் "நண்பர்களே!" என்று அழைத்தார்.

"ஆம், நண்பரே," என்று கூடியிருந்த துறவிகள் பதிலளித்தனர்.

போற்றுதற்குரிய சாரிபுத்திரர் கூறியது:

"உலகில் நான்கு வகையான மனிதர்கள் உள்ளனர். எந்த நான்கு?"

"ஒருவகையினர், களங்கம் உள்ளவர்கள். ஆனால் 'தன்னுள் களங்கம் உள்ளது,' என்பதை அவர்கள் அறியாதவர்கள்.

இரண்டாம் வகையினரும் களங்கம் உள்ளவர்கள். ஆனால் 'தன்னுள் களங்கம் உள்ளது,' என்பதை அவர்கள் அறிவார்கள்.

மூன்றாவது வகையினர் களங்கமற்றவர்கள். ஆனால் 'தன்னுள் களங்கம் இல்லை,' என்பதை அவர்கள் அறியாதவர்கள்.

நான்காவது வகையினரும் களங்கமற்றவர்கள். ஆனால் 'தன்னுள் களங்கம் இல்லை,' என்பதை அவர்கள் அறிவார்கள்.

Ven. Sāriputta said, “There are these four individuals to be found existing in the world. Which four?

“There is the case where a certain individual, being blemished, does not discern as it has come to be that ‘I have an inner blemish.’ Then there is the case where a certain individual, being blemished, discerns as it has come to be that ‘I have an inner blemish.’ Then there is the case where a certain individual, being unblemished, does not discern as it has come to be that ‘I have no inner blemish.’ Then there is the case where a certain individual, being unblemished, discerns as it has come to be that ‘I have no inner blemish.’

களங்கம் உள்ள இருவகையினருள் 'தன்னுள் களங்கம் உள்ளது,' என்பதை அறியாதவர்கள் கீழானவர்கள். தங்களுள் களங்கம் உள்ளதை அறிந்தவர்கள் மேலானவர்கள்.

அது போல, களங்கம் இல்லாத இருவகையினருள் 'தன்னுள் களங்கம் இல்லை,' என்பதை அறியாதவர்கள் கீழானவர்கள். தங்களுள் களங்கம் இல்லாததை அறிந்தவர்கள் மேலானவர்கள்.

* * *

இவ்வாறு கூறிய பின் போற்றுதற்குரிய மஹா மொக்கலானர் போற்றுதற்குரிய சாரிபுத்திரரிடம், "நண்பரே எதன் காரணமாகக் களங்கம் உள்ள இருவகையினருள் தங்களுள் களங்கம் இருப்பதை அறியாதவர்களை கீழானவர் என்றும், மற்றவரை மேலானவர் என்றும் அழைக்கின்றீர்கள்? அது போல களங்கம் இல்லாத இருவகையினருள் தங்களுள் களகங்கம் இல்லாததை அறியாதவர்களைக் கீழானவர் என்றும் மற்றவர்களை மேலானவர் என்றும் அழைக்கின்றீர்கள்?"

1. [போ. சாரிபுத்திரர்:] "களங்கம் உள்ளவர், ஆனால் 'தன்னுள் களங்கம் உள்ளது,' என்பதை அறியாதவர்களிடத்தில் அந்தக் களங்கத்தைக் கைவிட வேண்டும் என்ற விருப்பமோ, அதற்கான முயற்சியோ, நிலையான உந்துதலோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் இறக்கும் போது காமம் (அவா), வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை) கொண்டவராக - களங்கம் கொண்ட தூய்மையில்லா மனத்தோடு தான் இறப்பார்.

எடுத்துக் காட்டாக, ஒரு கடையிலிருந்தோ அல்லது ஒரு கொல்லரிடத்திலிருந்தோ புழுதியும், அழுக்கும் படிந்த ஒரு வெண்கலப் பாத்திரத்தை வாங்கி வந்த ஒருவர் அதைப் பயன்படுத்தாமலும், சுத்தப் படுத்தாமலும், புழுதி படிந்த ஒரு இடத்தில் வீசியிருந்தால்: அந்த வெண்கலப் பாத்திரம் காலப்போக்கில் மேலும் அழுக்காகவும். தூய்மையற்றதாகவும் ஆகும் அல்லவா?

[Ven. Sāriputta:] “With regard to that, my friend, when an individual, being blemished, doesn’t discern that ‘I have an inner blemish,’ it can be expected of him that he will not generate desire, endeavor, or arouse persistence for the abandoning of that blemish. He will die with passion, with aversion, with delusion—blemished and with a mind defiled.

“Just like a bronze bowl brought back from a shop or a family of smiths all covered with dust & dirt, that the owners would neither use nor clean, but would throw away in a dusty place: Wouldn’t that bronze bowl eventually become even more dirty & defiled with time?”

[போ. மஹா மொக்கலானர்:] "ஆம், நண்பரே."

[போ. சாரிபுத்திரர்:] "அது போலவே தன்னுள் களங்கம் உள்ளதை அறியாதவர் அந்தக் களங்கத்தைக் கைவிட முயற்சி செய்யாமல் மேலும் களங்கம் உறுவார் என்பதையே நாம் எதிர் பார்க்கலாம்."

2. [போ. சாரிபுத்திரர்:] "களங்கம் உள்ளவர், ஆனால் 'தன்னுள் களங்கம் உள்ளது,' என்பதை அறிந்தவரிடத்தில் அந்தக் களங்கத்தைக் கைவிட வேண்டும் என்ற விருப்பும், முயற்சியும், நிலையான உந்துதலும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவர் இறக்கும் போது காமம், வெகுளி, மயக்கம் இல்லாமல் - களங்கம் இல்லாத தூய்மையான மனத்தோடு இறப்பார்.

எடுத்துக் காட்டாக, ஒரு கொல்லரிடத்திலிருந்தோ அல்லது கடையிலிருந்தோ புழுதியும், அழுக்கும் படிந்த ஒரு வெண்கலப்பாத்திரத்தை வாங்கி வந்த ஒருவர் அதைச் சுத்தப் படுத்திப் பயன் படுத்துவதோடு அதனை ஒரு புழுதி படிந்த இடத்தில் வீசாமல் இருப்பதால்: அந்த வெண்கலப் பாத்திரம் காலப்போக்கில் மேலும் சுத்தமாகவும், தூய்மையானதாகவும் ஆகும் அல்லவா?

“Then again, when an individual, being blemished, discerns as it has come to be that ‘I have an inner blemish,’ it can be expected of him that he will generate desire, endeavor, and arouse persistence for the abandoning of that blemish. He will die without passion, without aversion, without delusion—unblemished and with a mind undefiled.

“Just like a bronze bowl brought back from a shop or a family of smiths all covered with dust and dirt, that the owners would both use and clean, and would not throw away in a dusty place: Wouldn’t that bronze bowl eventually become clean and pure with time?”

[போ. மஹா மொக்கலானர்:] "ஆம், நண்பரே."

[போ. சாரிபுத்திரர்:] "அது போலவே தன்னுள் களங்கம் உள்ளதை அறிந்தவர் அந்தக் களங்கத்தைக் கைவிட முயன்று அதனைக் கைவிடுவார் என்பதை எதிர்பார்க்கலாம்."

3. [போ. சாரிபுத்திரர்:] "களங்கம் இல்லாதவர், ஆனால் 'தன்னுள் களங்கம் இல்லை,' என்பதை அறியாதவர் அழகியவற்றை நாடுவார் என்று எதிர்பார்க்கலாம் (அல்லது பிறர் சொற்களைக் கேட்டு வழி தவறி நடக்கலாம்). அவ்வாறு நாடும்போது காமம் அவர் மனத்தை எதிர்கொள்ளும். அவர் இறக்கும் போது காமம், வெகுளி, மயக்கம் கொண்டவராக - களங்கம் கொண்ட தூய்மையில்லா மனத்தோடுதான் இறப்பார்.

எடுத்துக் காட்டாக, ஒரு கொல்லரிடத்திலிருந்தோ அல்லது கடையிலிருந்தோ சுத்தமான தூய்மையான ஒரு வெண்கலப்பாத்திரத்தை வாங்கி வந்த ஒருவர் அதைப் பயன்படுத்தாமலும், சுத்தப் படுத்தாமலும் ஒரு புழுதி படிந்த இடத்தில் வீசியிருந்தால்: அந்த வெண்கலப் பாத்திரம் காலப்போக்கில் அழுக்குப் படிந்தும் தூய்மையற்றதாகவும் ஆகிவிடும் அல்லவா?

“Then again, when an individual, being unblemished, doesn’t discern as it has come to be that ‘I have no inner blemish,’ it can be expected of him that he will attend to the theme of beauty. As he attends to the theme of beauty, passion will assault his mind. He will die with passion, with aversion, with delusion—blemished and with a mind defiled.

“Just like a bronze bowl brought back from a shop or a family of smiths clean and pure, that the owners would neither use nor clean, but would throw away in a dusty place. Wouldn’t that bronze bowl eventually become dirty and defiled with time?”

[போ. மஹா மொக்கலானர்:] "ஆம், நண்பரே."

[போ. சாரிபுத்திரர்:] "அது போலவே தன்னுள் களங்கம் இல்லாததை அறியாதவர் அழகியவற்றின் மீது ஆசை கொள்வதால் காமம் அவர்மனத்தில் புகுந்து களங்கம் உறுவார் என்பதை

எதிர்பார்க்கலாம்."

4. [போ. சாரிபுத்திரர்:] "களங்கம் இல்லாதவர், ஆனால் 'தன்னுள் களங்கம் இல்லை,' என்பதை அறிந்தவர் அழகியவற்றை நாட மாட்டார் என்று எதிர் பார்க்கலாம். அவ்வாறு நாடாமையால் காமம் அவர் மனத்தை எதிர்கொள்ளாது. அவர் இறக்கும் போது காமம், வெகுளி, மயக்கம் இல்லாமல் - களங்கம் இல்லாத் தூய்மையான மனத்தோடு இறப்பார்.

எடுத்துக் காட்டாக, ஒரு கொல்லரிடத்திலிருந்தோ அல்லது கடையிலிருந்தோ சுத்தமான தூய்மையான வெண்கலப் பாத்திரத்தை வாங்கி வந்த ஒருவர் அதைப் பயன்படுத்திச் சுத்தப் படுத்துவதால், மேலும் அதனை ஒரு குப்பையுள்ள இடத்தில் வீசாமல் இருப்பதால்: அந்த வெண்கலப் பாத்திரம் காலப்போக்கில் மேலும் சுத்தமாகவும், தூய்மையானதாகவும் ஆகும் அல்லவா?

“Then again, when an individual, being unblemished, discerns as it has come to be that ‘I have no inner blemish,’ it can be expected of him that he will not attend to the theme of beauty. As he doesn’t attend to the theme of beauty, passion won’t assault his mind. He will die without passion, without aversion, without delusion—unblemished and with a mind undefiled.

“Just like a bronze bowl brought back from a shop or a family of smiths clean and pure, that the owners would both use and clean, and would not throw away in a dusty place: Would n’t that bronze bowl eventually become even more clean and pure with time?”

[போ. மஹா மொக்கலானர்:] "ஆம், நண்பரே."

[போ. சாரிபுத்திரர்:] "அது போலவே தன்னுள் களங்கம் இல்லாததை அறிந்தவர் அழகியவற்றை நாடாமல், காமம் அவர்மனத்தில் புகாமல் தொடர்ந்து தூய்மையானவராக இருப்பார் என்பதை எதிர்பார்க்கலாம்."

"இதுவே காரணம் நண்பர் மொக்கலானரே. களங்கம் உள்ள இருவகையினருள் 'என்னுள் களங்கம் உள்ளது,' என்பதை அறியாதவர் கீழானவர். தங்களுள் களங்கள் உள்ளதை அறிந்தவர்கள் மேலானவர்கள். அது போல களங்கம் இல்லாத இருவகையினருள் 'தன்னுள் களங்கம் இல்லை,' என்பதை அறியாதவர் கீழானவர். தன்னுள் களங்கம் இல்லாததை அறிந்தவர் மேலானவர்.

* * *

[போ. மஹா மொக்கலானர்:] " 'களங்கம், களங்கம்' எனப் பேசப்படுகிறது. 'களங்கம்' என்றால் என்ன?"

[போ. சாரிபுத்திரர்:] "தீயவற்றில் வசப்படுதல். திறமையில்லா விருப்பங்கள்: இவை தான் 'களங்கம்' எனப்படும்.

எடுத்துக் காட்டாக, ஒரு துறவியின் மனத்தில் இந்த விருப்பம் தோன்றலாம்: 'ஓ, நான் தவறேதும் செய்திருந்தால், நான் செய்த தவற்றை மற்ற துறவிகள் தெரிந்து கொள்ளாமல் இருக்கட்டும்'. ஆனால் அவர் தவறு செய்து மற்ற துறவிகளுக்கு அவர் தவறு செய்தது தெரிந்து விடலாம். பின் 'மற்ற துறவிகளுக்கு நான் செய்த தவறு தெரிந்து விட்டது,' (என்று எண்ணியவாறு) அவர் கோபமும், அதிருப்தியும் கொள்கிறார். கோபம் அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, should I have fallen into an offense, may the monks not know about me, that I have fallen into an offense.’ But it’s possible that the monks would know about that monk that he had fallen into an offense. (Thinking,) ‘The monks know about me that I have fallen into an offense,’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, நான் தவறேதும் செய்திருந்தால், நான் செய்த தவற்றை மற்ற துறவிகள் சங்கத்தின் மத்தியில் இல்லாமல் தனிமையில் குற்றம் சாட்டட்டும்'. ஆனால் மற்ற துறவிகள் தனிமையில் இல்லாமல் சங்கத்தின் மத்தியில் குற்றம் சாட்டி இருக்கலாம். பின் 'மற்ற துறவிகள் என்னைத் தனிமையில் இல்லாமல் சங்கத்தின் மத்தியில் குற்றம் சாட்டி விட்டனர்,' (என்று எண்ணியவாறு) அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, should I have fallen into an offense, may the monks accuse me in private, and not in the middle of the Saṅgha.’ But it’s possible that the monks would accuse him in the middle of the Saṅgha, not in private. (Thinking,) ‘It’s in the middle of the Saṅgha that the monks accuse me, and not in private,’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, நான் தவறேதும் செய்திருந்தால், ஒரு நண்பன் என்னைக் குற்றம் சாட்டட்டும். எதிரி குற்றம் சாட்ட வேண்டாம்'. ஆனால் ஒரு எதிரி அவரைக் குற்றம் சாட்டியிருக்கலாம். அதனால் அவர் கோபமும், அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, should I have fallen into an offense, may a friend accuse me, and not an enemy.’ But it’s possible that an enemy would accuse him, and not a friend. (Thinking,) ‘An enemy accuses me, and not a friend,’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, ஆசிரியர் துறவிகளுக்குப் போதிக்கும் போது என்னிடம் மட்டும் கேள்விகளையும், பதில் கேள்விகளையும் கேட்கட்டும். மற்ற துறவிகளிடம் கேட்கக் கூடாது.' ஆனால் ஆசிரியர் கேள்விகளையும் பதில் கேள்விகளையும் மற்ற துறவிகளிடம் கேட்டு விடுகிறார். அதனால் அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம் அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may the Teacher instruct the monks, cross-questioning just me again and again, and not cross-questioning another monk again and again.’ But it’s possible that the Teacher would instruct the monks, cross-questioning another monk again and again, and not cross-questioning that monk again and again. (Thinking,) ‘The Teacher instructs the monks, cross-questioning another monk again and again, and not cross-questioning me again and again,’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, உணவு பிச்சை கேட்க கிராமத்துக்குள் செல்லும் போது துறவிகள் என்னைப் பின் தொடர்ந்து வரட்டும். வேறொரு துறவியைப் பின் தொடர்ந்து செல்லக் கூடாது.' ஆனால் துறவிகள் வேறொரு துறவியைப் பின் தொடர்ந்து சென்று விடுகின்றனர். அதனால் அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may the monks enter the village for alms following just me, and not following another monk.’ But it’s possible that the monks would enter the village for alms following another monk, and not following that monk. (Thinking,) ‘It’s following another monk, and not me, that the monks enter the village for alms,’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, எனக்கே மேலான உணவும், முதன்மையான ஆசனமும், முதலில் தண்ணீரும், முதன்மையான தானமும் தரப்படவேண்டும். வேறொரு துறவிக்கு அல்ல.' ஆனால் வேறொரு துறவிக்கே மேலான உணவும், முதன்மையான ஆசனமும், முதலில் தண்ணீரும், முதன்மையான தானமும் தந்து விடுகின்றனர். அதனால் அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may I alone receive the foremost meals, the foremost seat, the foremost water, the foremost alms, and not another monk.’ But it’s possible that another monk would receive the foremost meals, the foremost seat, the foremost water, the foremost alms. (Thinking,) ‘It’s another monk who receives the foremost meals, the foremost seat, the foremost water, the foremost alms, and not me’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, நானே உணவு அருந்திய பின் மங்கலம் ஓத (உணவு அளித்தவர்க்கு ஆசிகூறல்) வேண்டும். வேறொரு துறவி அல்ல.' ஆனால் வேறொரு துறவியே உணவு அருந்திய பின் மங்கலம் ஓதி விடுகிறார். அதனால் அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may I alone give the blessing in the dining hall after the meal, and not another monk.’ But it’s possible that another monk would give the blessing in the dining hall after the meal. (Thinking,) ‘It’s another monk who gives the blessing in the dining hall after the meal, and not me’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

'ஓ, நானே விகாரைக்கு வருகை தந்துள்ள மற்ற ஆண் துறவிகளுக்கு, பெண் துறவிகளுக்கு, உபாசகர்களுக்கு (ஆண் இல்லறத்தார்), உபாசிகளுக்கு (பெண் இல்லறத்தார்) அறத்தைப் போதிக்க வேண்டும் வேறொரு துறவி அல்ல.' ஆனால் வேறொரு துறவியே விகாரைக்கு வருகை தந்த மற்ற ஆண் துறவிகளுக்கு, பெண் துறவிகளுக்கு, உபாசகர்களுக்கு (ஆண் இல்லறத்தார்), உபாசிகளுக்கு (பெண் இல்லறத்தார்) அனைவருக்கும் அறத்தைப் போதித்து விடுகிறார். அதனால் அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may I alone, and not another monk, teach the Dhamma to monks… nuns… men lay followers… women lay followers who have come to the monastery.’ But it’s possible that another monk would teach the Dhamma, and not that monk…

'ஓ, எனக்கு மட்டுமே மற்ற ஆண் துறவிகளும், பெண் துறவிகளும், உபாசகர்களும், உபாசிகளும் மரியாதையும், வணக்கமும் செலுத்திப் போற்ற வேண்டும். வேறொரு துறவிக்கு அல்ல.' ஆனால் வேறொரு துறவிக்கே மற்ற ஆண் துறவிகளும், பெண் துறவிகளும், உபாசகர்களும், உபாசிகளும் மரியாதையும், வணக்கமும் செய்து அவரைப் போற்றி விட்டனர். அதனால் அவர் கோபமும் அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may the monks… nuns… men lay followers… women lay followers pay honor, respect, reverence, and veneration to me alone, and not to another monk.’ But it’s possible that the monks… nuns… men lay followers… women lay followers would pay honor, respect, reverence, and veneration to another monk, and not to that monk…

'ஓ, எனக்கு மட்டுமே நல்ல அழகான சீவர ஆடைகளும், தானமும், இருப்பிடமும், நோய் தீர்க்கத் தேவைப்படும் மருந்தும் கொடுக்கப்பட வேண்டும். வேறொரு துறவிக்கு அல்ல.' ஆனால் வேறொரு துறவிக்கே நல்ல அழகான சீவர ஆடைகளும், தானமும், இருப்பிடமும், நோய் தீர்க்கத் தேவைப்படும் மருந்தும் கொடுத்து விடுகின்றனர். அதனால் அவர் கோபமும், அதிருப்தியும் கொள்கிறார். கோபம், அதிருப்தி இரண்டும் களங்கம்.

“It’s possible, friend, that there’s the case where this sort of wish might arise in a certain monk: ‘O, may I alone, and not another monk, be the one who receives exquisite robes… exquisite alms… exquisite lodgings… exquisite medicinal requisites for curing the ill. But it’s possible that another monk, and not that monk, is the one who receives exquisite medicinal requisites for curing the ill. (Thinking,) ‘It’s another monk who receives exquisite medicinal requisites for curing the ill, and not me,’ he is angry and disgruntled. Anger and disgruntlement are both a blemish.

* * *

இது போன்ற களங்கங்களை ஒரு துறவி கைவிடவில்லையென்றால் அவர் காட்டிலே வாழ்பவரானாலும், தனிமையில் வாழ்பவரானாலும், வீடு வீடாகச் சென்று உணவுப் பிச்சை கேட்பவரானாலும், மற்றவர் வீசிய கந்தல் துணிகளை உடுத்துபவரானாலும் அவரோடு புனித வாழ்வு வாழும் பிறர் அவருக்கு மரியாதை தர மாட்டார்கள்; போற்றவும் மாட்டார்கள். ஏன்? ஏனென்றால் தீயவற்றில் வசப்படுதல், திறமையில்லா விருப்பங்கள் ஆகியவை அவர் உள்ளத்திலிருந்து விடுபடவில்லை.

“Now friend, if these influences of evil, unskillful wishes are seen or heard to be unabandoned in any monk, then even though he’s a wilderness dweller, a dweller in isolated lodgings, an alms-goer, a house-to-house alms-goer, a refuse-rag wearer, a wearer of coarse robes, still his companions in the holy life don’t pay him honor, respect, reverence, or veneration. Why is that? Because these influences of evil, unskillful wishes are seen or heard to be unabandoned in him.

ஆனால் இது போன்ற களங்கங்களை ஒரு துறவி கைவிட்டு விட்டால் அவர் கிராமத்திலே வாழ்பவரானாலும், வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டு உணவு தரப்படுபவரானாலும், இல்லறத்தார் கொடுக்கும் ஆடைகளை உடுத்துபவரானாலும் அவரோடு புனித வாழ்வு வாழும் பிறர் அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அவரைப் போற்றுவார்கள். ஏன்? ஏனென்றால் தீயவற்றில் வசப்படுதல், திறமையில்லா விருப்பங்கள் ஆகியவை அவர் உள்ளத்திலிருந்து கைவிடப் பட்டுள்ளன.

“But, friend, if these influences of evil, unskillful wishes are seen or heard to be abandoned in any monk, then even though he’s a village dweller, a receiver of meal invitations, a wearer of robes given by lay people, still his companions in the holy life pay him honor, respect, reverence, or veneration. Why is that? Because these influences of evil, unskillful wishes are seen or heard to be abandoned in him.

* * *