பௌத்தமும் கடவுள் கொள்கையும்

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை

3. பௌத்தமும் கடவுள் கொள்கையும்

Buddhism and the God-Idea

வினா: பௌத்தர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா?

விடை: இல்லை. பௌத்தர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. இதற்குப் பல காரணங்களுள. புத்த பெருமான் நவீன கால சமூகவியலார்களைப் போலவும், உளநூல் அறிஞர்களைப் போலவும், சமயக் கருத்துகள், குறிப்பாகக் கடவுள் கொள்கைகள் மனக்கவலையிலிருந்து, பயத்திலிருந்து உருவானவையே எனக் கருதினார். புத்த பெருமான் கூறுகிறார்:

"பயத்தால் ஆட்கொள்ளப்பட்ட மனிதன், புனிதமான மலைகளையும், புனிதமானது என்று கருதிய தோப்புகளையும், புனிதமான மரங்களையும், கோவில்களையும் நாடிச் சென்றான்!" - தம்மப்பதம் 188

கற்கால மனிதன், தான் பயங்கரமான பகைமை சூழ்ந்த உலகில் வாழ்வதையுணர்ந்தான். பயங்கர மிருகங்களிடம் அச்சம், சரியான உணவு கிடைக்காத நிலை, தம் உடலில் ஏற்படும் காயங்கள், நோய்கள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், எரிமலை போன்றவற்றால் தொடர்ந்த ஆபத்து, பாதுகாப்பற்ற தன்மை. இச்சூழ்நிலையில் தான் மனிதன் தனக்கு வசதிகள் கருதியும் நல்ல காலங்கள் வேண்டு மென்பதற்காகவும், ஆபத்தான நேரங்களில் தனக்குத் தைரியத்தைத் தருவித்துக் கொள்ளவும், தவறு நடந்த நேரங்களில் தனக்கு ஆறுதலளித்துக் கொள்ளவும் கடவுள் என்ற கருத்தினை உருவாக்கினான். இன்றளவும் மக்கள் தமக்குச் சிரமம் அதிகரிக்கும் போதுதான், பெருஞ் சமயவாதிகளாக மாறுகின்றனர். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், கடவுள் நம்பிக்கைதான் தங்கள் சிரமங்களை எதிர்கொள்வதற்குத் தங்களுக்குச் சக்தியைத் தருவதாகக் கூறுவார்கள். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கடவுளைப் பற்றி மட்டுமே கூறுவர். ஏனென்றால், மிகச் சிரமமான நேரம் ஒன்றில், அவர்கள் அந்தக் குறிப்பிட்ட கடவுளை வேண்டியதாகவும், அக்கடவுள் உதவியதாகவும் கூறுவர். இவையெல்லாம் புத்த பெருமானின் கருத்தான 'கடவுள் நம்பிக்கை என்பது பயத்தாலும், ஏமாற்றத்தாலும் ஏற்பட்டது' என்பதனை உறுதி செய்கின்றன. புத்த பெருமான் நமது பயத்துக்கான காரணங்களை அறிந்து கொள்ளச் சொன்னார்; பேரவாக்களைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்; நம்மால் மாற்ற முடியாத செயல்களை, நிகழ்ச்சிகளைப் பொறுமையுடனும் துணிவுடனும் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்; அச்சத்தை, அவர் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளால் அன்றி, பகுத்தறிந்து விளங்கிக் கொள்ளச் கூடிய வகையில், அவர் தவிர்த்தார்; போக்கினார்.

புத்த பெருமான் கடவுளை நம்பாததற்கான இரண்டாவது காரணம், இந்நம்பிக்கையை ஆதரிப்பதற்கான எவ்விதச் சான்றுகளும் இல்லாமையே. உலகில் எத்தனையோ சமயங்கள் உள. அவை ஒவ்வொன்றும் தமது சமயத்துக்கு மட்டுமே கடவுளின் கட்டளைகள் இருப்பதாகவும் கடவுளின் போதனைகளைத் தங்கள் புனித நூல்கள் மட்டுமே பாதுகாத்து வருவதாகவும் கடவுளின் இயற்கைத் தன்மையை அவர்கள் சமயம் மட்டுமே அறிந்திருப்பதாகவும் மற்றச் சமயங்களிடம் அவை இல்லையெனவும், ஒவ்வொரு சமயத்தினரும் கூறுகின்றனர். சிலர் கடவுளை ஆணென்றும், சிலர் அதைப் பெண்ணென்றும், சிலர் பொதுவானது என்றும் கூறுவர். ஒவ்வொருவரும் தங்கள் கடவுள் இருப்பதை, இயங்குவதை நிரூபிக்கப் போதுமான சான்றுகள் இருப்பதாகக் கூறுவர். ஆனால், ஒவ்வொரு சமயத்தினரும், மற்ற சமயத்தினர் கூறும் இதே காரணங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பர். பல சமயங்கள் பல நூற்றாண்டுகளாகக் கைக்கொண்டு வரும் இந்நம்பிக்கையை நிரூபிக்க எவ்வளவோ முயன்றும் இன்று வரை உண்மையான, உறுதியான, சரியான முறையில் விளக்க அல்லது எதிர்த்து வாதாடக் கூடிய ஆதாரங்களை எவராலும் கொடுக்க அல்லது நிரூபிக்க முடிந்ததா? அதனால் தான் பௌத்தர்கள் இப்படிப்பட்ட எந்த முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

புத்த பெருமான் கடவுளை நம்பாததற்கான மூன்றாவது காரணம், அப்படிப்பட்ட நம்பிக்கையே தேவையில்லை என்பதுதான். சிலர் இவ்வுலகம் உண்டானதற்கான காரணத்தை அறிந்து கொள்ளக் கடவுள் நம்பிக்கை அவசியம் என்கின்றனர். இது தேவையற்ற ஒன்று. அறிவியல், எல்லோரும் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு உலகம் எப்படி உண்டாகியது என்பதை, கடவுள் கொள்கையைத் தவிர்த்து, நிரூபித்துவிட்டது. ஒரு சிலர் மகிழ்ச்சியுடனிருப்பதற்கும் அர்த்தமுடன் வாழ்வதற்கும், கடவுள் நம்பிக்கை அவசியம் என்கின்றனர். ஆனால் உலகில் எத்தனையோ இலட்சக்கணக்கான பேர், பௌத்த சமயத்தினர், பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள், சுயமாகச் சிந்திப்பவர்கள், மகிழ்ச்சிகரமான, பொருளுள்ள, உபயோககரமான வாழ்க்கையை நடத்துகின்றனரே!

சிலரோ மனிதர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால், தங்களுக்கே உதவிக்கொள்ளத் தங்களால் இயலாதென்றும், அதனால் கடவுள் நம்பிக்கை இருந்தால் எதையும் எதிர்க்கத் தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்குமென்றும் கூறுகின்றனர். மறுபடியும் சாட்சியங்கள் அவர்கள் கூறுவதை மறுக்கின்றன. சிலர் தங்கள் இயலாமையையும், முட்டுக்கட்டைகளையும், இடையூறுகளையும், பெரும் தடங்களுக்கு மத்தியில் தங்கள் திடமான உள்மனத்தால் வெற்றி கொண்டதாகக் கூறுவதைக் கேட்கலாம். கடவுள் நம்பிக்கையின்றிச் சொந்த முயற்சியாலேயே வெற்றி கண்டதாகவும் கூறுவார்கள்.

மனிதன் முக்தியடையக் கடவுள் அவசியமெனச் சிலர் கூறுவர். ஆனால், இவ்வாதம் முக்தி என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இப்படிப்பட்ட கொள்கைகளைப் பௌத்தர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

புத்தபெருமான், ஒவ்வொரு மனிதனிடமும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், அளவற்ற அன்பைப் பொழியவும், மற்ற உயிர்களிடம் இரக்கம் காட்டவும், முழுமையாக விளங்கிக் கொள்ளக் கூடியதுமான சக்திகள் அவனிடம் இருக்கின்றன என்பதை அவர் அனுபவத்தால் அறிந்தார். புத்தபெருமான் நம் கவனத்தைச் சொர்க்கத்திலிருந்து நம் உள்ளத்துக்கே திருப்பி விட்டுவிட்டார்; நமது பிரச்னைகளுக்கு நாமே நம்மை அறிந்து முடிவுகள் காண ஊக்கப்படுத்தினார்.

QUESTION: Do you Buddhists believe in a god?

ANSWER: No, we do not. There are several reasons for this. Like modern sociologists and psychologists, the Buddha saw that many religious ideas, and especially the god-idea, have their origin in anxiety and fear. He says:

‘Gripped by fear people go to the sacred mountains, sacred groves, sacred trees and shrines.’Dhp.188

Primitive humans found themselves in a dangerous and hostile world. The fear of wild animals, of not being able to find enough food, of injury or disease, and of natural phenomena like thunder, lightning and volcanoes was constantly with them. Finding no security, they created the idea of gods in order to give them comfort in good times, courage in times of danger, and consolation when things went wrong. To this day you will notice that people often become more religious at times of crises and you will hear them say that the belief in their god or gods gives them the strength they need to deal with life. Often they explain that they believe in a particular god because they prayed in time of need and their prayer was answered. All this seems to support the Buddha’s teaching that the god-idea is a response to fear and frustration. The Buddha taught us to try to understand our fears, to lessen our desires and to calmly and courageously accept the things we cannot change. He replaced fear with rational understanding not with irrational belief.

The second reason the Buddha did not believe in a god is because there does not seem to be very much evidence to support this idea. There are numerous religions, all claiming that they alone have God’s words preserved in their holy books, that they alone understand God’s nature, that their god exists and that the gods of other religions do not. Some claim that God is masculine, some that she is feminine and others that it is neuter. Some claim that God is unitary, others that he is a trinity, and yet others that his nature is unknowable. They are all satisfied that there is ample evidence to prove the existence of the god they worship, but they scoff at the evidence opposing religions use to prove the existence of their gods. It is surprising that despite so many religions using so much ingenuity over so many centuries to prove the existence of a god, that there is still no real, concrete, substantial or irrefutable evidence for such a being. They cannot even agree amongst themselves what this god that they worship is like. Buddhists suspend judgment until such evidence is forthcoming.

The third reason the Buddha did not believe in a supreme deity is because he felt that the belief was not necessary. Some claim that the belief in a god is necessary in order to explain the origin on the universe. But science has very convincingly explained how the universe came into being without having to introduce the god-idea. Some claim that belief in god is necessary to have a happy, meaningful life. But again we can see that this is not so. There are millions of atheists and free-thinkers, not to mention many Buddhists, who live useful, happy and meaningful lives without belief in a god. Some claim that belief in God’s power is necessary because humans, being weak, do not have the strength to help themselves. Once again, the evidence indicates the opposite. One often hears of people who have overcome great disabilities and handicaps, enormous odds and difficulties, through their own inner resources, their own efforts and without belief in a god. Some claim that a god is necessary in order to give salvation. But this argument only holds good if you accept the theological concept of salvation, and Buddhists do not accept such a concept.

Based on his own experience, the Buddha saw that each human being has the capacity to purify the mind, develop infinite love and compassion and perfect understanding. He shifted attention from the heavens to the heart and encouraged us to find solutions to our problems through self-understanding.

* * * * * * * *

வினா: அப்படிக் கடவுளர் இல்லையென்றால் இவ்வுலகம் எப்படி இங்கு வந்தது?

விடை: இவ்வினாவுக்கு விடையளிக்க எல்லாச் சமயங்களிலும் புராணக் கதைகளும் கட்டுக் கதைகளுமுள. மனிதனுக்கு ஒன்றுந்தெரியாத பழங்காலத்தில் இக்கதைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இயற்பியலும், வானநூலும், நிலநூலும் உள்ள இக்காலத்தில், புராண இதிகாசக்கதைகள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக, அறிவியல் ஆதாரங்கள் அவ்விடத்தைப் பிடித்துவிட்டன. கடவுள் கொள்கையைத் தவிர்த்து உலகம் எப்படி உண்டாகியது என்பதனை, அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டு விட்டது.

QUESTION: But if there are no gods how did the universe get here?

ANSWER: All religions have myths and stories which attempt to answer this question. In ancient times such myths were adequate but in the 21st century, in the age of physics, astronomy and geology, such myths have been superseded by scientific fact. Science has explained the origin of the universe without recourse to the god-idea.

* * * * * * * *

வினா: உலகம் உண்டான மூலக் கருத்தைப் பற்றிப் புத்தபெருமான் என்ன கூறுகிறார்?

விடை: அது மிகச் சுவையானது. உலகம் எப்படி உண்டாகியது என்ற புத்தபெருமானின் கருத்தும் அறிவியல் அறிஞர்களால் உலகம் எப்படி உண்டாகியது என்ற கருத்தும் மிக நெருக்கமுடையவை. அகன்னா சூத்திரத்தில், புத்தபெருமான் உலகம் அழிந்து மீண்டும் இன்று சுழன்று கொண்டிருக்கும் நிலைக்கு வந்து கணக்கிடவியலா இலட்சக்கணக்கான ஆண்டு களாகின்றன என்று கூறுகிறார். எண்ணற்ற ஆண்டுகளுக்குப் பின் முதல் உயிரினங்கள் நீரின் மேற்புறத்தில் தோன்றியதாகவும் அதற்குமடுத்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு எளிய உயிரினங்களிலிருந்து கூட்டு உயிரினங்கள் தோன்றியதாகவும், அவர் கூறுகிறார். இச்செயல்களனைத்தும் தொடக்கமோ முடிவோ இன்றி, இயற்கைக் காரணங்களாலேயே இயக்கி வைக்கப்பட்டன.

QUESTION: What does the Buddha say about the origin of the universe?

ANSWER: It is interesting that the Buddha’s explanation of the origin of the universe corresponds very closely to the scientific view. In the Aganna Sutta, the Buddha described the universe being destroyed and then re-evolving into its present form over a period of countless millions of years. The first life formed on the surface of the water and again, over countless millions of years, evolved from simple into complex organisms. All these processes were, he said, without beginning or end, and are set in motion by natural causes.

* * * * * * * *

வினா: கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லையெனக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் அதிசயங்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

விடை: அதிசயங்கள் நிகழ்வது கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க எனப் பலர் நம்புகின்றனர். கடவுள் அருளால் ஒரு நோய் குணமாயிற்று என்று சிலர் கூறுவதை நாம் கேட்கிறோம். ஆனால், எந்த மருத்துவரிடமிருந்தோ, அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்தோ அப்படிப்பட்ட ஒரு சான்றிதழை நாம் கண்டதில்லை. அழிவிலிருந்து ஒருவர் அதிசயமாகக் காப்பாற்றப் பட்டார் என்று இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையிலிருந்து கேள்விப்பட்டவரிடமிருந்தே நாம் கூறக் கேட்கிறோம். ஆனால், என்ன நடந்தது என்பதை நேரில் கண்ட ஒருவரும் நம்மிடம் கூறியதில்லை. ஓர் உடல் ஊனமுற்றவன் நலமடைந்ததாக, வெறும் பிரார்த்தனையால் நலமடைந்ததாகக் கேள்விப் படுகிறோம். ஆனால், அதற்கான சாத்தியக் கூற்றை விளக்கும் சான்றிதழ் ஒரு மருத்துவரோ, நர்சோ நமக்கு அளித்ததில்லை. குருட்டுத் தனமான நம்பிக்கைகள், ‘இரண்டாவது நபர் கூறினார்; ஒருவர் சொல்ல நான் கேள்விப்பட்டேன்' போன்ற வதந்திகள் சரியான சான்றுகள் ஆகா.

இருந்தாலும் சில சமயங்களில் விவரிக்க முடியாத நிகழ்ச்சிகள் ஏற்படுவது உண்மை தான். அப்படி ஏற்படும் அல்லது நிகழும் நிகழ்ச்சிகளை நம்மால், விளக்க இயலாத தன்மையை வைத்து, அந்நிகழ்ச்சி ஏற்பட்டது கடவுள் செயலால் தான் என்பது மடமை. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், நமது அறிவு இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான். நவீனகால மருந்துகள் கண்டுபிடிக்கும் முன்பு, நோய், மக்களைத் தண்டிப்பதற்காகவே கடவுள் அனுப்பினார் என நம்பினர்; ஆனால் நோய்கள் ஏற்படும் காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்தவுடன் இன்றைய மனிதன், ஒரு நோய் கண்டவுடன் அதற்கான மருந்தை அருந்தி நோயைக் குணப்படுத்திக் கொள்கிறான்.

காலப்போக்கில், நோய் உண்டாவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்ததைப் போல், உலகத்தைப் பற்றிய நமது அறிவும் முழுமை பெற, விவரிக்க முடியாத நிகழ்ச்சிகள் நிகழும் காரணங்களை நாம் கண்டுபிடித்து விடக்கூடும்.

QUESTION: You say there is no evidence for the existence of a god but what about miracles?

ANSWER: There are many people who believe that miracles are proof of existence of some sort of god. We hear wild claims that a healing has taken place, but we never seem to get independent testimony of this from a medical office or a doctor. We hear second-hand reports that someone was miraculously saved from disaster, but we never seem to get eye-witness accounts of what is supposed to have happened. We hear rumors that prayer straightened a diseased body or strengthened a withered limb, but we never see X-rays or get comments from doctors or nurses to prove these rumors. Wild claims, second-hand reports and hearsay are no substitute for solid evidence, and solid evidence of miracles is very rare.

However, unusual and unexplained things sometimes do happen. But our inability to explain such things does not prove the existence of gods. It only proves that our knowledge is as yet incomplete. Before the development of modern medicine, when people didn’t know what caused sickness, they believed that God or the gods sent diseases as a punishment. Now we know what causes such things and when we get sick we take medicine. In time, when our knowledge of the world is more complete, we may find out what causes unexplained phenomena, just as we can now understand what causes disease.

* * * * * * * *

வினா: ஆனால் பெரும்பாலான மக்கள் ஏதாவதொரு தோற்றத்தில் கடவுளை நம்புகிறார்களே, அது உண்மையாகத் தானே இருக்க வேண்டும்?

விடை: இல்லை. ஒரு காலத்தில் உலகம் சமமட்டமான தரையாக இருந்ததாக அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கை தவறானது என்று நிரூபிக்கப் படவில்லையா?. ஒரு கொள்கை உண்மையானதா, இல்லையா, என்பதை நிரூபிக்க, அக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அதிகமானவர்களா, குறைவானவர்களா என்று பார்ப்பது தவறு; ஒரு கொள்கையின் உண்மையான தன்மையை அறிய, அதை நிரூபிக்கக் கூடிய சான்றுகளை வைத்தே அக்கொள்கையைப் பற்றி நாம் முடிவெடுக்க வேண்டும்.

QUESTION: But so many people believe in some form of god, it must be true.

ANSWER: Not so. There was a time when everyone believed that the Earth was flat, but they were all wrong. The number of people who believe in an idea is no measure of the truth or falsehood of that idea. The only way we can tell whether an idea is true or not is by looking at the facts and examining the evidence.

* * * * * * * *

வினா: கடவுள் இருப்பதற்குச் சாட்சி எங்கு பார்த்தாலும் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனரே. இயற்கையின் அழகு, பல பகுதிகளைக் கொண்ட மனித உடலின் சிக்கலான அமைப்பு - இதெல்லாம் ஒரு மேலோங்கிய அறிவு படைத்த அன்புள்ளம் கொண்ட கடவுளைக் குறிக்கிறதாகக் கூறுகின்றனரே?.

விடை: இயற்கையின் மறுபக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் இந்தக் கூற்றின் அடிப்படையே நொறுங்கிப்போய் விடுகிறது - தொழுநோய், புற்றுநோய்க்கிருமிகள், ஒட்டுண்ணிப் புழுக்கள், இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள், "பிளேக்" என்னும் கொள்ளை நோய் பரவச் செய்யும் எலிகள் - போன்றவையும் இவ்வுலகில் காணப்படுகின்றனவே? ஒரு மேன்மையான நுண்ணறிவு உள்ள கடவுள் ஏன் இவ்வாறு துன்பமும் துயரமும் விளைவிப்பவைகளை உருவாக்க வேண்டும்? மேலும் பூகம்பங்களினாலும், வரட்சியாலும், வெள்ளத்தாலும், சூனாமிகளாலும் எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றன என்பதையும் எண்ணிப் பாருங்கள். அன்பான கடவுள் உலகத்தை உருவாக்கினாரென்றால் இது போன்ற கொடுமைகளை ஏன் உருவாக்க வேண்டும்?

QUESTION: Some people say that the evidence is everywhere. They say that the beauty of nature and the complexity of the human body are all evidence of a higher intelligence and a loving creator.

ANSWER: Unfortunately this idea breaks down as soon as you look at the other side of nature - leprosy bacteria, cancer cells, parasitic worms, blood-sucking insects and plague rats. Why would a higher intelligence design things that cause so much misery and suffering? Then stop to consider how many people die or are injured in earthquakes, droughts, floods and tsunamis. If there really is a loving creator, why does he create such things or allow them to happen?

* * * * * * * *

வினா: நான் பௌத்தரானால் இவ்வுலகில் மிகவும் தனிமையாக இருப்பேன். கடவுளை நம்பும் ஒருவருக்கு எந்நேரமும் அவரிடம் சென்று, பிரச்சனைகளைக் கூறி அவரது பாதுகாப்பையும் உதவியையும் நாடலாம். கடவுள் நம்பிக்கை மேலான ஆறுதல் தருவதாக நான் நம்புகிறேன்.

விடை: கடவுளை நம்புவோர் அவரால் உதவப்படுவதாகவும் பாதுகாக்கப்படுவதாகவும் நினைக்கின்றனர். உண்மையில் அப்படி நடப்பதில்லை. அவர்கள் நம்பிக்கையின் காரணமாக ஆறுதலும் தன்னம்பிக்கையும் உண்டாவதாக நினைத்தாலும் அது அவர்கள் மனத்திலிருந்துதான் வருகிறது. தெய்வச்செயலால் இல்லை. கடவுளை நம்புவோருக்கு நம்பாதவரை விட விபத்துக்கள் குறைவாக நிகழ்வதாகவோ, நீண்ட நாள் வாழ்வதாகவோ, புற்று நோய் குறைந்து காணப்படுவதாகவோ, தேர்வுகளில் சிறப்பாகச் செய்வதாகவோ, பணக்காரர்களாக வாழ்வதாகவோ, அல்லது வேறு எந்த விதத்திலும் மாறுபட்டு இருப்பதாகவோ எந்தச் சான்றுகளும் இல்லை. ஒரு பெரும் விமானத்தில் 600 பேர் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். அவ்வப்போது நிகழ்வதைப்போல, அவ்விமானம் விழுந்து நொறுங்கினால், அதில் உள்ள 600 பேரும் மரணமடைவர். கடவுளை நம்புபவரும் நம்பாதவரும் ஒரே நிலையில் தான் இருப்பர்.

நம் அனைவரிடமும் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சமாளிக்க தேவையான மனத் திடனும் அறிவும் இருக்கிறது. நாம் இத் திறமைகளை வளர்த்து, ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். ஆதாரமில்லாத நம்பிக்கைகளைச் சார்ந்திருக்கக் கூடாது.

QUESTION: If I became a Buddhist I would be all alone in the universe. People who believe in some god can always call upon him to help and protect them when they have a crisis. I think this is a much more comforting belief.

ANSWER:People who believe in a supreme being think that that they are being helped or protected. But actually they are not. The comfort and confidence they might feel has come from their belief, their mind, not from anything a deity has done for them. There is no evidence that people who believe in a supreme being have less accidents, live longer, have lower rates of cancer, do better in the exams, are richer or are different in any other way from people who do not believe. A jumbo jet can carry 600 passengers. If one crashes, as occasionally happens, all 600 people die, those who believe in divine help and those who do not.

All of us have the psychological resources and the intelligence to deal with the difficulties of life. We should try to develop and strengthen these resources rather than rely on pleasing but unfounded beliefs.

* * * * * * * *

வினா: அப்படிப் பௌத்தர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்றால், நீங்கள் எதைத்தான் நம்புகிறீர்கள்?

விடை: நாங்கள் கடவுளை நம்புவதில்லை; ஏனென்றால் நாங்கள் மனிதர்களை நம்புகிறோம். ஒவ்வொரு மனிதரும் உயர்வானவர், அரிதானவர் எனக் கருதுகிறோம்; ஒவ்வொருவரிடமும் ஒரு புத்தராக மாறக் கூடிய சக்தி இருக்கிறதென நம்புகிறோம்; ஒரு முழுமையான மனிதனாக அவன் மாறமுடியுமென நம்புகிறோம். அறியாமையையும், பகுத்தறிவற்ற கொள்கைகளைக் கடந்து, எவை, எப்படி இருக்கின்றனவோ, அவற்றின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ள முடியுமென நம்புகிறோம்; நாங்கள் வெறுப்பு, கோபம், தீய எண்ணம், பொறாமை போன்ற குணங்களை, அன்பு, இரக்கம், பொறுமை, பெருந்தன்மை முதலிய எண்ணங்களால் மாற்றமுடியுமென நம்புகிறோம்; ஒவ்வொரு மனிதனும் முயன்றால், அதனைச் சரியான முறையில் அறிந்துள்ள ஒரு பௌத்தரால் வழி நடத்தப்பட்டால், உண்மையை அறிந்து கொள்ளும் சக்தி அவர்களிடமே இருக்கிறதென நம்புகிறோம்;

ஒருவரும் நம்மைக் காப்பாற்றுவதில்லை; நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வேறு யாராலும் ஒன்றும் செய்ய இயலாது; முடியாது; பல புத்தர்களால் நமக்கு தெளிவாகக் காட்டப்பட்ட சரியான வழிகளில் நாமே நடக்கவேண்டுமெனப் புத்தபெருமான் கூறுகிறார்.

QUESTION: So if you Buddhists don’t believe in gods, what do you believe in?

ANSWER: We do not believe in a god because we believe in humanity. We believe that each human being is precious and important, that all have the potential to develop into a Buddha – a perfected human being. We believe that human beings can outgrow ignorance and irrationality and see things as they really are. We believe that hatred, anger, spite and jealousy can be replaced by love, patience, generosity and kindness. We believe that all this is within the grasp of each person if they make the effort, guided and supported by their fellow Buddhists and inspired by the example of the Buddha. As the Buddha says:

‘No one saves us but ourselves,

No one can and no one may.

We ourselves must walk the path,

But Buddhas clearly show the way.’ Dhp.165

* * * * * * * *