பெண்களும் ஞானமும்

பெண்களும் ஞானமும்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Women and Enlightenment

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி (பெண்): புத்தர் ஒருவரின் தோலின் நிறமோ அல்லது பாலினமோ ஞானம் பெறுவதற்கு ஒரு தடையெனக் கருதினாரா?

இல்லை. புத்தர் நிறமோ அல்லது பாலினமோ ஞானம் பெறுவதற்கு ஒரு தடையெனக் கருதவில்லை. புத்தரிடம், 'பெண்கள் முழுமையாக ஞானம் பெற முடியுமா?' என்று கேட்டதற்கு, 'முடியும். ஆண்களைப் போலவே பெண்களாலும் முழுமையாக ஞானம் பெற இயலும்,' என்று பதிலளித்தார். ஆகவே ஒருவரின் பால் ஆன்மீக வாழ்விற்கு ஒரு தடையானதாக அவர் ஒருபோதும் கருதவில்லை.

ஆனால் அக்காலத்தில் பெண்கள் மீது பெரிதும் பாகுபாடு காட்டப்பட்டது என்பது உண்மை. சமூகம் பெண்களை வெறுக்க வில்லையென்றாலும் அவர்களைச் சற்றுக் கட்டுப்படுத்தியே வைத்திருந்தது. ஏன்? சமீபகாலம் வரை உலகில் உள்ள அனைத்துச் சமூகங்களிலும் பெண்களுக்கு எதிராகப் பாராபட்சம் காட்டப்பட்டு வந்தது ஒரு நிதர்சனமான உண்மையல்லவா?

புத்தர் ஒரு புரட்சிகரமான கொள்கையைப் பின்பற்றிப் பெண்களுக்குத் துறவற சங்கத்தை ஏற்படுத்த இணங்கினார். அதுவரை கணவரின் அல்லது குடும்பத்தினரின் பாதுகாப்பில் மட்டுமே வாழமுடிந்த பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பிற்கு அப்பால் துறவு கொள்ளவும், பெண்கள் தாங்களே நடத்தும் ஒரு கூட்டுரிமைச் சமூகம் அமைத்துக் கொள்ளவும் முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது. அக்காலத்தில் இத்திட்டம் ஒரு மாபெரும் புரட்சிகரமான செயலாகக் கருதப்பட்டது. புத்தரும் இது ஒரு புரட்சிகரமான திட்டம் என்றே கூறினார். இவ்வாறு செய்வதால் பௌத்த மதம் நீண்ட நாள் நீடிக்காமல் அழிந்து போக நேரிடுமோ என்ற அச்சமும் நிலவியது. ஏனென்றால் பெரும்பாலான சமூகத்து மக்கள், பெண்கள் இவ்வாறு துறவு பூண்டு, சங்க அமைப்பு உண்டாக்கிக் கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் புத்தர் உறுதியுடன் இதை நாம் செய்வோம் என்றார். நடப்பது நடக்கட்டும், எதிர்ப்பைச் சமாளிப்போம் என்று துணிந்து செயல் பட்டார். பெண்களுக்குச் சங்கம் ஏற்படுத்திக் காட்டினார்.

மேலும் அவர் சங்கத்தில் அனைத்து ஜாதி மக்களையும் அனுமதித்தார். இந்தியாவில் இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் ஜாதியின் அடிப்படையில் மிகுந்த பாகுபாடு காட்டப் பட்டது. ஜாதி அமைப்பும் மிக வலுவானதாக இருந்தது. ஆனால் புத்தர் எல்லா ஜாதியினரையும் துறவறம் ஏற்க அனுமதித்தார். எனவே மிகவும் கீழ் ஜாதியில் பிறந்த துறவியானாலும் க்ஷத்திரிய, பிராமண ஜாதியில் பிறந்த துறவிகளைவிட ஒரு நாள் மட்டுமே முன்கூட்டித் துறவறம் பூண்டிருந்தால்கூட அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முதலில் துறவறம் பூண்டவரைப் பின்னர் துறவறம் பூணுவோர் வணங்குவது சங்கத்தின் மரபு. அதன் விளைவாகக் கீழ் ஜாதியில் பிறந்த துறவியை மேல் ஜாதியில் பிறந்த துறவிகள் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவும் புத்தர் செய்த மிகப் புரட்சிகரமான ஒரு செயலாகவே கருதப்பட்டது. இப்பழக்கத்தை ஜாதியை அடிப்படையாகக் கொண்டு சிறப்புப் பெற்றிருந்த பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பாகத் தலைமுறை தலைமுறையாகக் கோவில்களில் பூசாரிகளாக இருந்த பிராமண ஜாதியினருக்கு இது மனக்கசப்பை உண்டாக்கியது. அவர்கள் இதுவரை வகித்த வந்த அதிகாரத்துக்கு இது பெரும் சவாலாக அமைந்தது. இதற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. ஆனாலும் புத்தர் எதிர்ப்புக்கு அஞ்சாமல் அவரது கொள்கையை நடைமுறைப் படுத்தினார்.

ஆகவே அவர் செய்த இது போன்ற புரட்சிகரமான செயல்கள் ஜாதியின் அடிப்படையில் பிளவு பட்டிருந்த இந்திய சமூக அமைப்பை எதிர்த்து பௌத்த மதம் தொடர்ந்து நீடிப்பதையும் அதன் வளர்ச்சியையும் பாதித்திருக்கலாம். ஆனால் அவர் நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து செயல்பட்டார். ஆகவே ஒருவரின் பாலினம் அவரது ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும் என்று எப்போதுமே பௌத்தத்தில் கருதப்படவில்லை.

புத்தர் அவதரித்த காலத்தில் இது மிகவும் புரட்சிகரமான செயல் என்பதை நாம் உணர வேண்டும். உலகில் வேறு எங்குமே இத்தகைய சமூக மாற்றத்தைக் காண்பது அரிதாக இருந்த காலம் அது. கிருத்துவ மதத்தில் பெண்களுக்கான ஏற்பாடு புத்தரின் காலத்திற்குப் பின்னர் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்தே துவங்கப்பட்டது என்பதைக் காணும்போது இது எவ்வளவு முற்போக்கான, புரட்சிகரமான திட்டம் என்பது நம்மை வியக்கச் செய்கிறது.

புத்தர் அவரது சங்கத்தை, சமுதாயத்தோடு தொடர்பற்றுத் தனியாகச் செயற்படுகிற வகையில் உண்டாக்க வில்லை. துறவற சங்கம் சமூகத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார். அந்தத் தொடர்பும் மிக நெருக்கமானதாகவும், ஆழமானதாகவும் இருக்கவேண்டும் என்று கருதினார். சங்கத்திற்காகப் புத்தர் ஏராளமான விதிமுறைகளை வகுத்து, அவை பற்றிய பாமர மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவர்கள் கூறிய குற்றம் குறைகளை ஆராய்ந்து அதன்பின் விதிமுறைகள் இறுதி செய்யப் பட்டன. குறைகளைக் கேட்டபின் அவை மீண்டும் நடைபெறாவண்ணம் ஆண் துறவிகளுக்கும், பெண் துறவிகளுக்கும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

துறவிகள் தலை முடியைக் கட்டாயமாக மழித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அக்கால மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் படவில்லை. முடியை மழித்துக் கொள்வது அக்காலத்தில் நடைமுறை வழக்கத்தில் இல்லாததால், சிலர் துறவிகளை 'மொட்டைப் பண்டாரங்கள்’ என்று பெயரிட்டுக் கேலி செய்தனர். ஆனால் முடியை மழிப்பதன் மூலம் துறவிகள் அனைவருக்கும் ஒருவித சம நிலை உண்டானது. மாறாக ஒரு குறிப்பிட்ட முறையில் துறவிகள் முடியலங்காரம் செய்து கொள்ள வேண்டுமெனப் பணித்திருந்தால் அது எல்லோராலும் செயற்படுத்த முடியாமல் போகலாம். மேலும் வழுக்கைத்தலையர்கள் நிலைமை என்னவாகும்? முடியைத் துறப்பது அனைவராலும் எளிதாகச் செய்யக்கூடிய செயல் அல்லவா? ஆக துறவறம் பூணுவது முடியை மழிப்பதில் துவங்குவது என்ற கருத்து உண்டானது. துறவிகள் தங்களைப் பிறர் இழித்துப் பேசுவதைப் பொருட்படுத்த வில்லை. தலைமுடி ஒரு பெரிய தலைபோகிற விஷயம் இல்லையல்லவா? எனவே அதனோடு பற்று கொள்ள வேண்டாம்.

இரந்து உண்டு துறவிகள் தங்கள் பசிப்பிணியைப் போக்கிக் கொள்வதையும் சிலர் குறை கூறினர். புத்தரே ஒரு அரச பரம்பரையிலிருந்து வந்தவர். அவரும் ஒரு பிச்சா பாத்திரத்தைக் கையில் ஏந்தி வீடு வீடாகச் சென்று உணவு ஏற்றார். 'நீங்களெல்லாம் வேலையேதும் செய்வதில்லை, ஆனால் உணவு கேட்க மட்டும் வந்து விடுகின்றீர்கள்,' என்றெல்லாம் குறை கூறப்பட்டது. பௌத்தத்தின் பரந்த மனப் போக்கின் காரணமாக அது பிற நாடுகளுக்குப் பரவும்போதும் அங்குள்ள சமூக வழக்கங்கள் காரணமாகவும் சில பிரச்சனைகள் எழுந்தன.

கேள்வி (பெண்): சமூகம் தீடீரென்று மாறிப் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மட்டுமில்லாமல், அவர்களுக்கு மேலாகவும் செயற்பட்டால், பௌத்தத்தில் ஆண் துறவிகள், பெண் துறவிகளின் வழக்கங்கள் மாறி, ஆண் துறவிகள் பெண் துறவிகளுக்கு வணங்கும் வழக்கம் உண்டாகலாம் அல்லவா?

புத்தரின் காலத்தில் சமூதாயம் அவ்வாறு இருந்திருந்தால் புத்தர் விதிமுறைகளையும் அப்படி மாற்றியிருப்பார். ஏன்? புத்தரே கூடப் பெண்ணாக இருந்திருக்கலாம். அவர் உருவாக்கிய வழக்கம் சங்கத்தில் மூத்தவர் யார் என்பதை வைத்து உருவானது. வயதில் அல்ல. ஆக இளையோர் மூத்தோருக்கு வணங்குவது என்ற விதியை ஏற்படுத்தினார். இளையோர், மூத்தோர் என்பது துறவறம் பூண்ட நாளிலிருந்து கணக்கெடுக்கப்பட்டது. பெண் துறவிகளுக்கான சங்கம் ஆண் துறவிகளுக்கான சங்கம் அமைந்த பின்னர் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது. எனவே பெண் துறவிகளின் சங்கத்தைவிட, ஆண் துறவிகளின் சங்கம் முதியது. ஆண் துறவிகளும், பெண் துறவிகளும் தனித்தனியே வாழ்ந்தனர். பெண் துறவிகள் மற்ற பெண் துறவிகளுக்குக் கற்றுக் கொடுத்தனர். ஆண் துறவிகள் மற்ற ஆண் துறவிகளுக்குக் கற்றுக் கொடுத்தனர். இவ்விரு சமூகங்களிடையே அதிகத் தொடர்பு இருக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குறைந்தது இருபது ஆண்டுகள் துறவறம் பூண்டிருந்த, சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த ஆண் துறவி ஒருவர், பெண் துறவிகள் வாழும் சங்கத்துக்குச் சென்று அற போதனை தருவார். அறத்தைப் பற்றிய கலந்துரையாடல் இருக்கும். அவ்வளவுதான். இல்லறத்தைச் சார்ந்த ஆண், பெண் துறவியிடம் அற போதனை கேட்கச் செல்லும்போது பெண் துறவியை வணங்குவது மரபு. எனவே ஆண்கள் பெண்களை வணங்குவதில்லை என்பதற்கு இடம் இல்லை. இல்லற ஆண், பெண் துறவியைக் காட்டிலும் இளையவர். எனவே பெண்துறவிக்கு வணக்கம் செலுத்துகிறார்.

கேள்வி (பெண்): இருபது ஆண்டுகளுக்கு முன் துறவறம் பூண்ட பெண் துறவி சென்ற வாரம் துறவறம் பூண்ட ஆண் துறவிக்கு வணக்கம் செலுத்த வேண்டுமா?

ஆம். வணக்கம் செலுத்த வேண்டும்.

கேள்வி (பெண்): இந்த வழக்கம் ஆண், பெண் துறவிகள் சமமில்லாமையைக் குறிக்கும் ஒரு நேரடியான அறிக்கையில்லையா?

இல்லை. ஏனென்றால் ஆண்கள் சங்கம் பெண்கள் சங்கத்தை முந்தியது. ஒரே சங்கத்தினுள் துறவறம் பூண்ட காலத்தை வைத்து யார் மூத்தவர், யார் யாருக்கு வணங்குவது என்ற நெறிமுறை உள்ளது. அதே போல ஒரு எண்பது வயதான இல்லற ஆண், இருபது வயதான பெண் துறவியை வணங்குவது மரபு. அவர் அந்தப் பெண்ணுக்குக் கீழ்ப்படிகிறார்.

கேள்வி: (பெண்): பேமா சோட்ருன் (Pema Chodrun - புகழ் பெற்ற கன்னடியப் பெண் துறவி) இருபது ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி செய்துள்ளார் அவர் நேற்றுத்தான் துறவறம் பூண்ட இருபது வயதுள்ள ஆண் துறவிக்கு மட்டமானவரா?

மட்டமானவர் இல்லை. இது ஒரு அமைப்பு. அவ்வளவுதான். இதில் மதிப்புக் கலந்திருப்பற்கான அறிகுறி எங்கும் இல்லை. ஆக ஞானம் பெற்ற ஒரு துறவி தன்னை விட இரண்டு நாட்களுக்கு முன்னர் துறவறம் பூண்ட, இன்னும் ஞானம் பெறாத துறவியை வணங்குவது வழக்கம். ஞானமே பெற்றிருந்தாலும் வணங்குகிறார். எந்த அளவு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்தார் என்பதை வைத்து வணங்குவதில்லை. இது ஒரு அமைப்பு. எப்படி உட்காருவது என்பதை நிர்ணயிக்க இது உதவுகிறது. அவ்வளவே.

இது ஒரு தொழிற்சங்கத்தைப் போல. நீண்ட நாள் உறுப்பினர் நேற்றுச் சேர்ந்தவரைவிட மூத்தவர் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர் நேற்றுச் சேர்ந்தவரை விடத் திறமைசாலி என்று கூற முடியாது. ஒரு துறவி இன்னொருவரை வணங்குவது அவருக்குப் பின்னர் துறவறம் பூண்டவர் என்பதற்கு அறிகுறி. பெண் துறவிகள் ஆண் துறவிகளை வணங்குவது பெண் துறவற சங்கம் ஆண்கள் துறவற சங்கத்துக்குப் பின்னர் துவங்கப் பட்டது என்பதற்கு அறிகுறி. பெண் துறவிகள் மதிப்பில் குறைந்தவர்கள் என்று கருத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் நமக்கு இளையவரெல்லாம் நம்மைவிட இழிந்தவர் என்றாகிவிடும். அப்படி இல்லை. அவர்கள் வயதால் இளையவர்கள் என்பது மட்டுமே. ஒருவர் மற்றவரை வணங்குவதை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இந்தியப் பண்பாட்டில் வணங்குவது என்பது பொதுவான வழக்கம்.

யார் யாரை வணங்குவது என்ற விதி வகுக்கப்படுமுன் இதை ஒட்டி ஒரு விவாதம் நடந்தது. எப்படிப்பட்ட வழக்கத்தைக் கடைப்பிடிப்பது? யார் மூத்தவர்? சரி செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து வந்தவரை மூத்தவர் என்று வைத்துக் கொள்வோமா? இல்லை. அது சரிப் பட்டு வராது. மேல் ஜாதியில் பிறந்த துறவிகளை மூத்தவர்களாக வைத்துக் கொள்வோமா? இல்லை, அதுவும் சரிபட்டுவராது. ஆன்மீகப்பாதையில் முன்னேற்றத்தைக் கண்டவர்களை மூத்தவர்களாக நியமிப்போமா? இல்லை, அதுவும் சரிப் பட்டுவராது. ஏனென்றால் யார் ஞானம் பெற்றது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? எனவே இறுதியாகத்தான் துறவறம் பூண்ட வயதை வைத்துச் செய்யலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. துறவறம் பூண்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அவ்வளவு தான். அதற்கு மேல் இதில் பொருள் இருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

புத்தர் பெண்களின் தகுதியை நன்கு தெரிந்திருந்தார். ஆனந்தர் அவரிடம், 'பெண்கள் ஞானம் பெற முடியுமா?' என்று கேட்ட கேள்விக்கு, 'கண்டிப்பாக,' என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆணித்தரமாகப் பதிலளித்தார். அவர் பெண்களுக்கான சங்க சமூகத்தை ஏற்படுத்தினார். பல ஞானம் பெற்ற பெண் துறவிகளும் இருந்தனர். ஞானம் பெற்ற பெண் துறவிகளின் கூற்று 'தெரிகதா' என்ற தொகுப்பில் விளக்கப் பட்டுள்ளது. அதேபோல ஞானம் பெற்ற ஆண் துறவிகளின் கூற்று 'தெராகதா' என்ற தொகுப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆக இரு பாலினருக்கும் தனித்தனியாக இரு தொகுப்புகள் உள்ளன. புத்தருக்குச் சீடர்களாகத் தலை சிறந்த பெண் துறவிகளும், தலை சிறந்த ஆண் துறவி களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஆறு அதிசய குணாதிசியங்களைக் கொண்ட சித்தர்கள் (அரஹந்தர்கள்). சித்த சக்திகள் கொண்ட முழுமையான ஞானிகள் அவர்கள். முழு ஞானம் பெற்ற ஆண் துறவிகள், சாரிபுத்திரர், மோஹாலனா போன்ற அவரது தலைசிறந்த சீடர்களைப் போலவே ஆயிரக்கணக்கான பெண் துறவிகளுக்குப் போதனை தந்தார்கள். துறவிகளுக்கான விதி முறைகள் விநயம் என்று அழைக்கப்படும். அதில் ஆண் துறவிகளுக்கும் பெண் துறவிகளுக்கும் விதிகள் விளக்கப் பட்டிருக்கின்றன. ஆகப் பெண்கள் ஆன்மீக வளர்ச்சி பெறுவதில் தடையேதும் இல்லை. அதாவது அவர்கள் பெண்கள் என்பதால் தடை ஏதும் இல்லை. ஆனால் சமூகத்தில் தடை இருக்கலாம். சமூகத்தில் பெண்கள் வீட்டின் பாதுகாப்பை கடந்து சுதந்திரமாக ஆன்மீக வளர்ச்சியை நாடிச் செல்வதில் சமூகம் விதித்த தடயங்கள் இருக்கலாம்.

கேள்வி: (பெண்): இங்கு தான் எனக்குப் பிரச்சனை. விதிகள் சரி. யார் யாரை வேண்டுமானாலும் வணங்கட்டும், யார் மூத்தவர், யார் இளையவர் என்பதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் அதற்குக் காரணம் சமுதாயம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அக்காலத்தில் சமுதாயம் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஏன், இன்னும் இருபது வருடங்களில் சமூக அமைப்பு தலைகீழாக மாறி விடலாம். சமயமும் அதற்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அக்கால சமூக அமைப்பின் காரணமாகவோ, ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த அமைப்பின் காரணமாகவோ இருபது ஆண்டுகளுக்கும் முன் இருந்த சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டோ ஏன் சமயம் இருக்க வேண்டும்? காலத்திற்கேற்பச் சமயம் மாற வேண்டாமா?

புத்தர், தான் மறைந்த பின் சிறு சிறு விதிகளைத் துறவிகள் மாற்ற விருப்பப் பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறியிருந்தார். ஆனால் தனிப்பட்ட துறவிகள் மட்டும் இந்த மாற்றத்தைச் செய்ய முடியாது. சங்கம் ஒன்று கூடி பெரும்பாலான துறவிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே விதிகளை மாற்ற முடியும்.

தாய்லாந்திலோ, ஆசியாவிலோ பெண்களுக்குப் பௌத்தப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு உள்ளபடி இல்லை என்று சொல்வதில் நியாயம் உள்ளது. அதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் ஆசிய சமுதாயங்கள் சமீப காலம் வரை மேற்கத்திய சமுதாயங்களில் இருந்தது போலவே பாகுபாடு காட்டும் சமுதாயமாகத்தான் இருந்தன. புத்தர் பெண்களுக்கு உண்டாக்கிய வாய்ப்பு புரட்சிகரமானது. அவரது கருத்துக்களை இப்போது தான் மேற்கத்திய சமுதாயம் ஏற்கத் தொடங்கியிருக்கின்றது. ஆனால் உலக அளவில் ஒரு சிறு பகுதியினரே பெண்களுக்குச் சம உரிமை என்ற கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஆசியாக் கண்டத்தில் பார்த்தால் பெருமளவில் இன்னமும் சம உரிமைக் கருத்து ஏற்கப் படவில்லை. (மேற்கத்திய நாடுகளில் வாழும்) நீங்கள் இது முடிந்து விட்ட பிரச்சனை என்று நினைக்கலாம். பெண்களுக்கு சம உரிமைப் புரட்சி நடந்து முடிந்துவிட்டதாக எண்ணலாம். ஆனால் அப்படி இல்லை. உலகில் பெருமளவில் இந்தக் கருத்து இன்னமும் சமூகத்தால் ஒப்புக் கொள்ளப் படவில்லை என்பதே உண்மை.

பிக்குணிகள் சங்கம் தாய்லாந்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு (2004 ஆண்டில்) முன் வரை வரவே இல்லை. இறுதியாக இப்போது அது வந்து விட்டது. இது ஒரு நல்ல அறிகுறி. பௌத்தத்தில் பிக்குணி சங்கம் மீண்டும் தேரவாத பிரிவில் தோன்றியிருப்பது ஒரு பெரும் மாற்றமே. சீன பௌத்தப் பிரிவில் பெரும்பாலாகப் பிக்குணிகள் உள்ளனர். தாய்வானிலும், ஹாங்காங்கிலும் ஆண் துறவிகளைவிடப் பெண் துறவிகளே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் முழுமையாகப் பிக்குணிகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர். தேரவாதப் பிரிவில் மட்டுமே பிக்குணிகள் சங்கம் காலப்போக்கில் அழிந்துவிட்டது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டது. இலங்கையில் ஆண் துறவிகளின் சங்கமும் அவ்வப்போது அழிந்து விட்டதை நினைவில் கொள்ள வேண்டும். பின் தாய்லாந்து சென்று மீண்டும் துறவிகளை அழைத்து வந்தனர். இலங்கையில் துறவிகளே இல்லாமல் போய்விட்டனர். சமுதாய மாற்றங்களாலும் அரசியல் குழப்பங்களாலும் புதிதாகத் துறவிகளுக்குத் துறவிப் பட்டம் அளிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இரண்டு முறை மறைந்து போனது. முதல் முறை மறைந்த போது, பெண் துறவிச் சங்கமும் மறைந்தது. ஆனால் பெண் துறவிச் சங்கம் தாய்லாந்துக்கோ பர்மாவுக்கோ செல்லாததால் அங்கிருந்து ஆண் துறவிகளை அழைத்துவந்தது போலப் பெண் துறவிகளை அழைத்துவர முடியவில்லை. அப்படிச் சமூகக் குழபங்கள் இருக்கும் நிலையில் சங்கத்தைத் தொடர்வது கடினமாக இருந்தது. பொதுவாக முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் சங்கமே.

கேள்வி (ஆண்): ஒரு மந்திரக்கோலை அசைத்து மாற்றங்களை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. எனவே நாம் நம்மை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் துக்கம் உண்டாகிறது. பின் கோபம், பயம், தவறாக நடத்தப்பட்டதாக நினைப்பது போன்ற வேதனை உண்டாகிறது. இப்படிப்பட்ட துக்கத்தை எப்படிச் சமாளிப்பது? இப்படிப்பட்ட துக்கங்களைத் தினசரி வாழ்க்கையில் சமாளிக்க வேண்டுமே?

முக்கியமாக நாம் செய்யவேண்டியது, இந்தத் துக்கத்தைச் சுற்றி 'நான்' என்ற கருத்தை உண்டாக்காமல் இருப்பது தான். 'நான்' துன்புறுகிறேன் என்ற கருத்து உண்டாகிவிட்டால் துக்கம் தொடர்வது உறுதி. துக்கம் இருப்பதற்குக் காரணம் இந்த 'நான்' என்ற கருத்துத் தான். நான் அடக்கப்பட்ட பெண் என்று நினைத்து, எனக்கு இந்த நிலை பிடிக்கவில்லை, ஏன் என்னை அடக்குகின்றனர் என்றெல்லாம் நினைத்தால் 'நான்' என்ற கருத்து உண்டாகிவிட்டது என்று பொருள்.

உதாரணமாக நான் கனடாவில் பிறந்தவன். சை! இந்த நாட்டில் பௌத்தர்களும் இல்லை, ஒன்றும் இல்லை என்று நினைக்கலாம். முதன்முதலில் நான் ஒரு வட அமெரிக்கப் பௌத்த விகாரைக்குள் நுழைந்த போது அங்கு கட்டிடவேலை கூட முடிக்கப்பட வில்லை. அதற்கு முன் (வட அமெரிக்காவில்) துறவறம் பூண வாய்ப்பே இல்லை. ஆசியாவிற்கு சென்றால் தான் வாய்ப்பு இருந்தது. பாவம் நான். எல்லாவற்றையும் விட்டு விட்டு அறிமுக மில்லாத கண்டத்திற்குப் பலமுறை செல்ல வேண்டும். அப்படி நான் அங்கலாய்த்திருக்கலாம். ஆனால் அப்படியா நினைப்பது? இல்லை. அப்படி நினைக்கக் கூடாது. வருத்தப்படக் கூடாது. ஆசியா கண்டத்திற்குப் போக வேண்டுமென்றால் போகவேண்டியது தான். அதைக் கொண்டாட வேண்டியடில்லை. புதிய நாட்டுக்குச் செல்வதால் பிரச்சனையே இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் 'நான்' என்ற கருத்தை உண்டாக்க வேண்டாம். அப்படி 'எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை' என்று நினைத்து துக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். அதையே நினைத்து அரற்றிக் கொண்டிருக்க வேண்டாம். அது அரசியல், சமுதாயம் சம்பந்தப் பட்டது. சமநிலை இல்லாதவரை, அநீதியும் அநியாயமும் இருக்கும்வரை கோபப்படப் போவதாக நினைத்தீர்களென்றால் இன்னமும் நீண்ட நெடிய காலம் முடிவு பெற முடியாத பிரச்சனைகளின் காரணமாக நீங்கள் துக்கம் அனுபவித்துக்கொண்டே இருப்பீர்கள்.

ஒவ்வொருவருக்கும் சில சிக்கல்கள் இருக்கலாம். தோல் நிறம், ஜாதி, பால், மதம் என்று ஒவ்வொருவருக்கும் அதனதன் காரணமாக மனத்தில் பிரச்சனைகள் இருக்கலாம். அதனால் தான் துன்புருகிறேன் என்று நினைக்கலாம். ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அவை எல்லாம் மனத்தின் உருவாக்கமே. 'நான் இது', 'நான் அது,' என்று நினைக்கவேண்டாம். இந்த 'நான்' என்ற பிரச்சனை, கருத்து நாமாகவே உண்டாக்கிக் கொண்டது.

சமூக அநீதிகள் உங்கள் பயிற்சியின் துவக்கத்தில் துக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். உங்களுக்கு இது போன்ற சமூக அநீதிகளால் எளிதில் மனம் பாதிக்கப்படுமானால் உங்களுக்கு இது ஆன்மீக வளர்ச்சியில் தடங்கலாக இருக்கும். உங்கள் துக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். இந்த அநீதிகளுக்கு மத்தியிலும் சுதந்திரமாக இருக்க வேண்டும், இருக்க முடியும்.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Did the Buddha consider skin colour or gender an impediment to enlightenment?

He didn't consider skin colour or gender an impediment to enlightenment. And the Buddha was asked, 'Are women able to get full enlightenment?' and he said, "Yes." Just like men. Yes. So he did not consider gender to be an impediment to enlightenment. But true enough there was misogyny at that time. Misogyny is the discrimination against women or actually the word is pretty strong it means hatred of women. But I don't know if society actually hated women but certainly all the ancient societies did (have prejudice against women) and right until the present. There was a suppressive element to it for women. And the Buddha was radical at that time. He did allow a nuns order to be established. Set up a situation where women can go forth as nuns and practice and be in community away from the protection of husbands or family. For women at that time had to live under the protection of family or husband. So that was the first time that any structure was set up for women to go off and make their own community. And so they did. It was very radical move at that time. The Buddha said this is extremely radical. They were all aware that the sassana the religion may not last as long if we do this. But the whole society did not think this is what the women should be doing. So he said OK we will do it. Take the chance. And he did it. He also admitted people of all castes. Of course in India to this day there is a very strong caste structure where there is discrimination. He allowed people to ordain completely independent of caste, so that a person in the lowest caste if they ordained a day before somebody from royalty or brahman caste would have seniority over them and that monk would be junior to him and he would have to bow to somebody who is from the lowest caste. That also was an incredibly socially radical move and also caused a lot of resentment especially from the Brahmin caste who were the hereditary priest caste of society. That challenged their power. There was a lot of resistance, lot of criticism about that. But he said we will do it any way. So there are several things that he did that could have shortened the life of the whole religion but he did take a chance to do it. So there was never any consideration that gender is an impediment to enlightenment.

You have to realize how advanced or how radical that is. You don't find it anywhere in the ancient world at that time. You don't find the nuns order in Christianity established for another thousand years after the Buddha. It is amazing how advanced and radical this was at that time.

The way the Buddha structured things was not independent of society. He is very aware that the monastic order should interact with society. And he had to design some skillful interactions. So a lot of the rules are laid down after a lot of criticisms and blame and so forth by lay people about certain things and he responds to that by laying down the rules for the monks and the nuns. But he did. Men shaving their head was a very unpopular thing. One of the insults for monks who shaved their head was 'shavling recluse' because it was not standard for men to shave their heads. The Buddha decided for the monks to shave their head, it was a kind of equality that way. Imagine if you can have one style of hair style what will you have? Bald people can't confirm to it. At least everybody can shave their hair. The idea of renunciation shave off their hair. That was considered a strong identification mark and it was used as an insult. Of course the monks did not think it was an insult at all. Your hair is shaved off it is not a big deal. Don't get attached.

Being an alms mendicant was also criticized by some. The Buddha himself came from royalty. And he went out collecting alms going through villages with a begging bowl. You guys don't work, collecting food this and that all kinds of criticism.

From time to time as it spread out into other countries there was also certain countries had social structures that really had trouble with these communities. It was remarkable and egalitarian.

Q (woman): So should society change all of a sudden and women not only be equal to men but surpass men would you then switch all the roles and the nuns order is ahead of the monks order and all the monks bow to the nuns ....(last part of question unclear)

If it was the case at that time, if that was the structure of society was that way he would have made it that way or she would have made it that way. It could have been a female Buddha. What he did is establish by seniority. You bow in order of seniority. Just from the time you ordained. And the women's order was formulated some ten years after the monks order. Some years after anyway sometimes uncertain. Anyway it is established after the monks order and that is why it is junior to the monks order. And the monks and nuns are in separate communities. Nuns are teaching nuns and monks are teaching monks. Monks are not allowed to take nuns as disciples and nuns are not allowed to take monks as disciples. So they have seniority within their order. And there is very little interaction. So there is a visit once every about 2 weeks from a monk who has twenty years in the robes. Goes to see the nuns community to give a talk and he is selected by the sangha and that is the interaction. Laymen who would come and ask for a teaching from a nun would bow to the nun. So it is not a matter of men not bowing to the women. Lay man is junior to the nuns and he bows to the nun.

Q (woman) Would a nun who was ordained twenty years ago still have to bow to a monk that was ordained a week before?

Yes.

Q (woman) And is that not a direct statement of inequality then?

No. Because the monks order is senior to the nuns order. In terms of the order. Within the order there is seniority within the order. In the same way that a lay man who is 80 years old would bow to a nun who is 20 years old. He is junior to her.

Q (woman) Would Pema Chodrun who has practiced for 20 years lower than a 20 year old monk who was ordained yesterday?

Not lower than. Just a structure. There is no indication of value to it. So an enlightened person 20 years old has to bow to an unenlightened monk who is 2 days senior to him. So if he is a fully enlightened person he still has to bow. There is no indication to the quality of attainment or value associated with it. It is simply a structural feature so that you sit in order.

Like a union. Seniority does not indicate that you are the best. This means that you were ordained at a certain time previous to the other person. So you move up the line. It is strictly a structural feature. And the nuns community was created after the monks community so it is junior to them. It does not mean that nuns are inferior. That would meant hat everybody who was junior to you is inferior to you. That is not the case. It means that they are junior to you. That's all. It is a mark that the nuns order was established later than the bhikku's order. And that is all that means. We may have misunderstood what bowing means. It is just a gesture. Very common expression in Indian society.

There was discussion before they established this rule about seniority, how will we establish it. If you come from a very wealthy family you should get seniority. That wouldn't do. How about from the upper caste. That wouldn't do. How about from enlightenment? No, that wouln't do. Becasue who is enlightened? How are you going to figure that one out. So we would just do it by age. How old you are from the time of ordination. And that is all that means. Nothing else attached to it.

Buddha is aware of women's merit. Ananda asked him, Can women get enlightened? Sure. There has never been a question about that. He did establish a nun's order. There were all kinds of enlightened nuns. The sayings of the enlightened nuns are in the collection called the Terighata. And then there is the sayings of the enlightened monks called the Theraghata. A collection of both. And he had his foremost nun disciples and his foremost monk disciples. They were arahants with what we call the six super normal capacities. Fully enlightened with all psychic powers. Just as his chief arahant male disciples were. And he had many many disciples some of them taught hundreds or thousands of nuns just as his disciples Sariputta and Mogalana. The vinaya is laid out for nuns as well as monks. Many encounters. Women do not have any impediments to being enlightened. Nothing to do with being a woman. It might be do with society. there are impediments in society that are structured where it is difficult to have the freedom to leave home.

Q (woman) That is the only problem I have. Even the rules are fine, bow to whoever and the structure someone is below and so on but as soon as you introduce the reason based on society however it was then. But it isn't like that now and in twenty years from now it may be flip flopped and therefore there should be a need for religion to adapt to that. So based on the social structure then or even fifty years ago or 20 years. it has changed so should the religion not be changed with the times..?

The instructions of the Buddha is, he said to the monks you may change the lesser and minor rules after I am departed. But not the individual monks the sangha the vast majority of monks may if they so see fit, change it.

It would be fair to say that the practice opportunities for women in Thailand or in Asia is not as good as for men. There is no doubt about it. And the reason is because the Asian society just as the western society until very recently has been a discriminatory society as simple as that. That's the way it has been. It has been a very radical introduction of an opportunity, very very radical. We are just catching up to that idea now in the west. Remember a fairly small part of the population of the world is there. If you go to Asia it is not like this is old news. What? Pardon? You may assume that this is a fait accompli. This is something already done and the revolution has taken place and it is all over. But it is not. Not by any means. There is a hugh portion of the world that is nowhere and not caught up to this idea.

The bhikkuni order never made it to Thailand until about two years ago. It has finally arrived. It is a good sign. It is a remarkable shift in Buddhism that the return of the Bhikkuni order in the Theravada school. The Chinese schools have a substantial number of nuns. In Taiwan and Hong Kong there are more nuns than monks. And they are considered fully ordained Bhikkunis. It is just in the Theravada school that the nuns order died out. About 700 years ago. So they are now reintroducing it, which is remarkable. You must realize that the monks order died out a few times in Sri Lanka. They had to go to Thailand to reestablish it. There were no monks. Couldn't ordain a monk there because of social conditions. Died out twice. And the first time it died out, the nuns order died out too. And the nuns order had never been brought to Thailand or Burma. So the monks order had to go to Thailand to get the monks to reintroduce the ordination in Sri Lanka. So from time to time because of social upheaval and so forth it is not easy to keep a monks or nuns order going. Usually the first order to go is the nun's.

Q (Male) We can't wave a magic wand to change everything overnight. So we take care of ourselves. But then the suffering comes, anger, fear, mistreatment or being hurt. How to deal with that kind of suffering, if we deal with that kind of suffering in our daily paths.

The primary thing is not make an identity around it. To form an identity around this problem and then you are determined to suffer. Identity is the cause for suffering. If you think I am an oppressed woman, I don't like that that, it is bad, why me or whatever then you form an identity around it. Identity is real suffering. For instance I am born in Canada. Damn, eh? No Buddhists, no nothing around. I arrived in the first forest monastery in North America before the carpet was put down. And there were no opportunities before that. We had to go to Asia. Poor me. I have to leave everything and go to a strange continent. On and on. But is that the way to think? No. Don't think about that. Don't bemoan that. Just go. Do it. We don't have to celebrate it. We don't have to say it doesn't matter.. Don't create an identity around it. Don't create suffering around it. Don't obsess around it. It is in the political and social realm. That is why with that kind of social resentment etc. you will never end suffering. If you are determined to be resentful as long as inequality and injustice go on you will suffer because it will go on for a long, long, long time. So you can be free now in the midst of it.

These things can really catch you. They can really catch you and everybody has their thing. The thing that catches them . It can be being a Catholic or being jewish or could be skin colour, it could be all kinds of stuff. Whatever it is you are catching is, remember is a creation of your mind. Don't have to be, 'I am this' or 'I am that'. Proliferation around identity, resentment is self inflicted.

Social issues can be a source of suffering, specially at the beginning of your practice It is one area where you can fall if you are the type that is conscious about these social problems. It can be one of your great sufferings.

* * * * *