புத்த வந்தனம்

புத்த வந்தனம் Buddha Vandana

Audio - Malgudi Shuba

Iti pi so bhagavā arahaṃ sammā-sambuddho,

Vijjā-caraṇa-sampanno sugato lokavidū,

Anuttaro purisa-damma-sārathi satthā deva-manussānaṃ buddho bhagavāti;

He who has attained the Truth, the Worthy One, Rightly Self-awakened

consummate in knowledge & conduct, one who has gone the good way, knower of the cosmos,

unexcelled trainer of those who can be taught, teacher of human & divine beings; awakened; blessed;

இதிபிஸோ பகவா அரஹம் சம்மா-சம்புத்தோ,

விச்சா சரண சம்பண்ணோ சுகதோ லோகவிது,

அனுத்தரோ புரிச தம்ம சாரதி சத்தா தேவ மனுஸ்ஸானம் புத்தோ பகவாதி;

வாய்மையை அடைந்த அவர், தகுதியான அவர், சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்ற அவர்,

முழுமையான அறிவும் நடத்தையும் கொண்ட அவர், நல்ல வழியில் சென்ற அவர், பிரபஞ்சத்தை அறிந்த அவர்,

கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியரான அவர்; விழிப்புற்றவர்; ஆசிர்வதிக்கப்பட்டவர்;

*****

பாலி மொழிச் சொற் பொருள்

iti இதி = thus இப்படி

pi = also: and also; even so; but; however; probably; perhaps.

bhagava பகவா = Blessed One (who has good fortune, happiness, prosperity)

ஆசீர்வதிக்கப்பட்டவர் (மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழிப்புள்ள) - புத்தரின் ஒரு விகடப் பெயர்

araha அரஹா = worthy of; deserving தகுதியானவர்

aranhant அரஹந்த் = One who has attained Nirvana நிர்வான மோட்சம் (ஞானம்) அடைந்தவர்

samma சம்மா = right சரியாக

sambuddha சம்புத்தா = understood clearly; known perfectly. the Omniscient One.

ஞானம் பெற்ற, முழுமையாக விழிப்புற்ற - புத்தரின் மற்றொரு விகடப் பெயர்

vijjācaraṇasaṃpanno விச்சா சரண சம்பன்னோ

vijjācaraṇa விச்சா சரண = knowledge and conduct. அறிவும் நடத்தையும்

saṃpanna சம்பன்னா = endowed with, possessed of; உள்ளவர்

sugato சுகதோ = Well-gone. An epithet of the Buddha. புத்தரின் ஒரு பெயர்.

lokavidū லோகவிடு = knowing the world. A compound of two words:

loka லோக = world உலகம்

vidū விது = clever, wise, knowing, skilled in. அறிவுள்ள, தெரிந்த, திறமையான

anuttarapurisadammasārathī அனுத்தரோ புரிச தம்ம சாரதி = the highest charioteer of people who can be led.

ஞானம் பெற விரும்புவோரை அழைத்துச் செல்லும் மேலோங்கிய தேரோட்டி

anuttara அனுத்தர =

highest. Literally: "to which there is no higher". It is composed of the word uttara- (uttara-, Adj.: higher) which is preceded by the negative prefix an-. உயர்ந்த

purisadamma புரிச தம்ம = person who can be led. Consists of:

purisa புரிச = person, man மனிதன்

damma தம்ம = tamable, can or should be led. பணிய வைக்கக் கூடிய

sārathi சாரதி -, N.m.: charioteer (probably from sa+ratha-; ratha-, N.m.: chariot with the

prefix sa-, with) இரதத்தோடு இருக்கும் அதாவது இரதம் ஓட்டுபவர்.

Purisa-damma-sārathi is therefore a "charioteer" or a leader of such people, who allow themselves to be led. The first part of the compound (anuttara-) is in some versions of this gāthā separated from this compound and forms one more characteristic of the Buddha just by itself (The highest, unsurpassed).

satthā: satthar சத்தா = teacher ஆசான்

devamanussa தேவ மனுஸா = gods and people. தேவரும் மனிதரும்

buddho புத்தோ : buddha = awakened. விழிப்புற்றவர்

bhagavā பகவாதி : bhagavant = see above. மேல் பார்க்கவும்

விளக்கவுரை Based on this English Commentary

இந்த வரிகள் தினசரி சமயாசாரங்களின் போது, வந்தனம் மற்றும் திசரணத்திற்குப் பிறகு சொல்லப்படும். இவ்வரிகள் புத்தரின் குணங்களை எடுத்துக் காட்டுகின்றன. இதனால் நம் வாழ்க்கையில் அவரால் கிடைத்த நலனை நினைவு கொள்கிறோம்.

நிர்வான மோட்சத்தை அடைந்து விட்டதால், அவர் ஒரு அரஹந்தர். அவர் சரியாகவும் முழுமையாகவும் விழிப்புற்றவர். அவர் இந்த ஞானத்தை வெளி உதவி இல்லாமல் அடைந்தவர். மேலும் தர்மத்தை அனைத்து உயிர்களுக்கும் கற்பித்தவர்.

அவருக்கு அறிவும், நடத்தையும் இருந்தது. இங்கு அறிவு என்பது நிர்வான மோட்சத்தைப் பற்றிய அறிவு மட்டு மல்லாமல் மற்ற அறிவாகிய மேலோங்கிய ஆன்மீக சக்திகளும் ('அபிஞ்ஞா'), மந்திர சக்திகளும் ('இத்தி') மற்றும் நுண்ணறிவும் ('விபாஸனா') அவருக்கு இருந்தன. நடத்தை என்பது அவரது பண்பினையும், தன்னடக்கத்தையும், கட்டுப்பாட்டையும், மனக் கவனத்தையும் குறிக்கும்.

'சுகதா' என்ற பெயராலும் புத்தர் அழைக்கப்படுவார். இது அவரது மகிழ்வான, திருப்தியான வாழ்வைக் குறிக்கிறது. ஏற்கனவே நிர்வான மோட்சத்தை அடைந்த மகிழ்வான நிலையைக் குறிக்கிறது.

அவர் உலகை நன்கு தெரிந்தவர். உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதையும், அதில் உள்ள ஒவ்வருவரின் தனித் தன்மையையும் தெரிந்தவர். உலகை எப்படிச் சமாளிப்ப தென்பதையும் அதில் உள்ளோரை எப்படிக் கற்பிக்க வைப்பதென்பதையும் அவர் தெரிந்திருக்கிறார்.

கற்க விரும்புவோருக்குக் கற்பிக்க வைப்பதில் அவரே தலை சிறந்தவர்.

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அவர் ஆசான். பௌத்த மதத்தில் தேவர்களும் மனிதர்களைப்போல ஜீவன்கள் தான். அவர்களுடைய வாழ்க்கைக் காலம் நம்மை விட மிகவும் நீடித்திருக்கும். மேலும் மனிதரைக் காட்டிலும் சக்தி உள்ளவர்களாகவும் இருக்கலாம். ஆனால் மனிதரைப் போல அவர்களும் ஒரு நாள் மரணத்தைச் சந்திக்க வேண்டும். எனவே அவர்களும் நிர்வான மோட்சம் அடைவதற்கு முயற்சிக்க வேண்டும் . புத்தர் ஒருவரால் மட்டுமே தேவர்களுக்குக் கற்பிக்க முடியும்.

அவர் ஒரு புத்தர், விழிப்புற்றவர். நிர்வான மோட்சத்தை இங்கேயே இப்போதே அடைந்தவர். அந்தப் பாதையைப் பெரும் எண்ணிக்கையானோருக்குக் கற்பித்தவர்.

அவர் ஆசீர்வதிக்கப் பட்டவர். மகிழ்ச்சியுற்றவர்.

இப்படி அவர் குணங்களை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்வதனால் நமக்கும் இவ்வுலகத்திற்கும் புத்தர் செய்த நன்மைகள் நினைவில் வருகிறது. இதனால் நமது முதன் மையான ஆசானான அவருக்கு மரியாதை செலுத்துகிறோம்.