தம்மபதம் - விழிப்பு

14. புத்த வர்க்கம - விழிப்பு

Buddhavagga - Awakened

179-180

பிறப்பு இறப்பாகிய வழியை நீக்கி, ஆசையறுத்து, வெல்லப்படாத வெற்றியையுடைய ஞானி யாகிய புத்தரை (உலக வழியில்) நீ எந்தப் பாதையில் செலுத்தமுடியும்?

Whose conquest can't be undone, whose conquest no one in the world can reach; awakened, his pasture endless, pathless: by what path will you lead him astray?

(உலக) நெறியை நீத்தவரும் அளவற்ற ஞானம் உடையவரும் நச்சுத்தன்மையுள்ள ஆசைத் தளையை அறுத்தவருமாகிய புத்தரை நீ எந்த (உலக) வழியில் செலுத்த இயலும்?

In whom there's no craving — the sticky ensnarer — to lead him anywherever at all; awakened, his pasture endless, pathless: by what path will you lead him astray?

181

விழிப்புடன் தியானத்தில் அமர்ந்து துறவு பூண்டு முழுஞானம் பெற்றவரை தேவரும் விரும்பு கிறார்கள்.

They, the enlightened, intent on jhana, delighting in stilling and renunciation, self-awakened and mindful: even the devas view them with envy.

182

மனிதராகப் பிறப்பது அருமையானது. மனிதராக வாழ்வது அருமையானது. ‘சத்’ தர்மத்தைக் கேட்பது அருமையானது. புத்தராகப் பிறப்பது (புத்த பதவியை அடைவது) அருமையானது.

Hard the winning of a human birth. Hard the life of mortals. Hard the chance to hear the true Dhamma. Hard the arising of Awakened Ones.

183-185

'பாவங்களைச் செய்யாதிரு; நல்லவற்றைச் செய்; மனதைச் சுத்தப்படுத்து' என்னும் இவை

புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.

The non-doing of any evil, the performance of what's skillful, the cleansing of one's own mind: this is the teaching of the Awakened.

'பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்ல துறவு ஆகும், நிர்வாண மோக்ஷம் மேலான பதவி யாகும்' என்று புத்தர்கள் கூறுகிறார்கள். பிறரைத் துன்புறுத்திக் கஷ்டப்படுத்துகிறவர்

சந்நியாசியும் ஆகமாட்டார்; சமணரும் ஆகமாட்டார்.

Patient endurance: the foremost austerity. Unbinding: the foremost, so say the Awakened. He who injures another is no contemplative. He who mistreats another, no monk.

'நிந்திக்காதே; துன்புறுத்தாதே; பாதி மோக்க வழியைப் பின்பற்றிநட; மித உணவுகொள்,

ஏகாந்தமாக இருந்து தியானத்தில் பழகு' என்னும் இவையே புத்தருடைய உபதேசங்களாகும்.

Not disparaging, not injuring, restraint in line with the Patimokkha, moderation in food, dwelling in seclusion,

commitment to the heightened mind: this is the teaching of the Awakened.

186-187

பொன் காணத்தை (நாணயத்தை)ப் பொழிந்தாலும் காம ஆசையைத் திருப்திப்படுத்த முடியாது.

காம இச்சை சிறு போது இன்பமும் பிறகு துக்கத்தையும் கொடுக்கிறது என்பதை அறிந்தவனே ஞானியாவான். தேவசுகங்களையும் விரும்பாதே. முழுஞானம் பெற்றவரின் சீடர்கள் சையை (பற்றை) அழிக்க ஊக்கமுள்ளவராய் இருக்கிறார்கள்.

Not even if it rained gold coins would we have our fill of sensual pleasures. 'Stressful, they give little enjoyment' — knowing this, the wise one finds no delight even in heavenly sensual pleasures. He is one who delights in the ending of craving, a disciple of the Rightly Self-Awakened One.

188-192

அச்சங்கொண்டவர், மலைகளையும், காடுகளையும், சோலைகளையும், துறவிகள் வசிக்கும் இடங்களையும் தமக்குப் புகலிடமாகச் சரணம் அடைகிறார்கள்.

They go to many a refuge, to mountains and forests, to park and tree shrines: people threatened with danger.

இவை யாவும் நல்ல புகலிடம் ஆகா. மேலும் இப்புகலிடங்கள் துக்கத்தைப் போக்குவன அல்ல.

That's not the secure refuge, not the supreme refuge, that's not the refuge, having gone to which, you gain release from all suffering and stress.

புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்சாட்சி பெற்று நான்கு வாய்மை களான:- துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்கத்தை நீக்கும் வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள்,

But when, having gone to the Buddha, Dhamma, and Sangha for refuge, you see with right discernment the four noble truths — stress, the cause of stress, the transcending of stress, and the noble eightfold path, the way to the stilling of stress:

உண்மையான புகலிடத்தை யடைகிறார்கள். இந்தப் புகலிடம் மேலானது. இதை யடைந்தவர் எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

that's the secure refuge, that, the supreme refuge, that is the refuge, having gone to which, you gain release

from all suffering and stress.

193

புருஷ ஞானி (புத்தர்) கிடைப்பது அருமை. அவர்கள் எப்போதும் தோன்றுவது இல்லை. இந்தத் தீரன் பிறந்த குலம் மேன்மையடைகிறது.

It's hard to come by a thoroughbred of a man. It's simply not true that he's born everywhere. Wherever he's born, an enlightened one, the family prospers, is happy.

194

புத்தர்களின் தோற்றம் சுகமானது. அவர்கள் போதிக்கும் ‘சத்’ தர்மம் சுகமானது. சங்கத்தில் சேர்வது சுகமானது. சங்கத்தில் சேர்ந்தவரின் சன்மார்க்க ஞானம் சுகமானது.

A blessing: the arising of Awakened Ones. A blessing: the teaching of true Dhamma.

A blessing: the concord of the Sangha. The austerity of those in concord is a blessing.

195-196

ஆசையைக் கடந்து, பொய்க்காட்சியை நீக்கித் துன்பங்களையும் துக்கங்களையும் அறுத்த

புத்தர்களையாவது அவருடைய சீடர்களையாவது போற்றி வணங்குகிறவர்கள், நிர்வாண மோக்ஷம் அடைந்து, எவ்வித அச்சங்களையும் அகற்றினவர்களைப் போற்றி வணங்கு கிறவர்கள், இவ்வளவு அவ்வளவு என்று மதிப்பிட முடியாத புண்ணிய சீலர் ஆவார்கள்.

If you worship those worthy of worship, — Awakened Ones or their disciples — who've transcended

complications, lamentation, and grief, who are unendangered, fearless, unbound: there's no measure for reckoning that your merit's 'this much.'