ஆதாரம் உனை அல்லால்
FILM : MANIMEGALAI
SONG : AATHARAM UNAI ALLAL
SINGER : P.BHANUMATHI
MUSIC : G.RAMANATHAN
LYRICS : KAMBATHASAN
YEAR : 1959
ஆதாரம் உனை அல்லால் இந்த அபலைக்கு யாரும் இல்லை ஐயா
உந்தன் பாதார விந்தமே பவம் நீக்கிடும் நல்ல பரம மருந்து ஐயா
உந்தன் பாதார விந்தமே பவம் நீக்கிடும் நல்ல பரம மருந்து ஐயா
ஆதாரம் உனை அல்லால் இந்த அபலைக்கு யாரும் இல்லை ஐயா
போதி மாதாவா புத்த பிரானே
போதி மாதாவா புத்த பிரானே
பஞ்ச பூதங்கள் வென்றுயிர் காத்த தேவனே
பூதங்கள் வென்றுயிர் காத்த தேவனே
ஆதாரம் உனை அல்லால் இந்த அபலைக்கு யாரும் இல்லை ஐயா
ஜகமதிலே தீமைக்கெல்லாம் தீமையாம் பசி நீங்கவும்
அகமலர்ந்து அச்சய பாத்திரம் அருள்வாய்
ஆருயிர்களைத் தாங்கவும்
நீதியான பஞ்ச சீலம் வென்றோனே (?)
நீதியான பஞ்ச சீலம் வென்றோனே (?)
நிருவாண நிலையாம் உண்மை கண்டோனே
நிருவாண நிலையாம் உண்மை கண்டோனே
ஆதாரம் உனை அல்லால் இந்த அபலைக்கு யாரும் இல்லை ஐயா
உந்தன் பாதார விந்தமே பவம் நீக்கிடும் நல்ல பரம மருந்து ஐயா
ஆதாரம் உனை அல்லால் இந்த அபலைக்கு யாரும் இல்லை ஐயா
அன்பே சரணம்
அருளே சரணம்
புண்யா சரணம்
புத்தா சரணம்
அன்பே சரணம்
அருளே சரணம்
புண்யா சரணம்
புத்தா சரணம்
புத்தா சரணம்
புத்தா சரணம்
......
* * * * * *
விந்தம் – தாமரை
பாதார விந்தம் – பாதத் தாமரை
அச்சய பாத்திரம்: அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் இந்தப் பாத்திரத்தை மணிமேகலை வேண்டுவது உலகில் பசிப்பிணி போக்கித் தருமம் செய்வதற்காக.
புண்யா - புண்ணியனே
YouTube பதிவுக்கு நன்றி: திரு. Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI