அஜான் சா பற்றி
அஜான் சா பற்றி
About Ajahn Chah
போற்றுதற்குரிய அஜான் சா (போதின்யானா தேரா என்றும் அழைக்கப் படுவார்) வட கிழக்குத் தாய்லாந்தில், உபால் மாகாணத்தில் உள்ள பான் கோர் என்ற கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு வழிவழியாக வந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கிராமியத் தாய்லாந்தில் வளரும் எல்லாச் சிறுவர்களையும் போலவே அவரது இளமைக்காலத்தில் அவரும் வாழ்ந்தார். பின் அவர்கள் மரபுப்படி அங்குள்ள கிராம விகாரை ஒன்றில் பல ஆண்டுகள் பயிற்சி பெறும் துறவியாகத் துறவறம் பூண்டு பயின்று வந்தார். அங்கு அவர் படிக்க, எழுதக் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் சில அடிப்படைப் பௌத்தப் போதனைகளையும் கற்றார். பல வருடங்களுக்குப் பின் தமது பெற்றோருக்கு உதவி புரிவதற்காகத் துறவறத்தைக் களைந்து மீண்டும் இல்லற வாழ்க்கைக்கே திரும்பினார். ஆனால் துறவு வாழ்க்கை அவரை மிகவும் ஈர்த்ததன் காரணமாகத் தமது இருபதாம் வயதில் மீண்டும் ஒரு விகாரைக்குச் சென்று பிக்கு ஆவதென முடிவு செய்தார்.
இவ்வாறு அவர் முதல் சில ஆண்டுகள் தன் பிக்கு வாழ்க்கையில் சவுகத நூட்களைப் (பௌத்த நூட்களை) படித்தும் பாலி மொழியைக் கற்றும் வந்தார், ஆனால் அவர் தந்தையாரின் மரணம், வாழ்க்கையின் உறுதியற்ற தன்மையை உணரச் செய்து, புத்தரின் போதனைகளின் உண்மையான சாராம்சத்தினைக் கண்டு பிடிக்க ஊக்குவித்தது. அவர் பல்வேறு விகாரைகளுக்கும் பயணம் மேற்கொண்டு, விணயத்தை (துறவிகள் நடைமுறை விதிகள்) நன்கு அறிந்து கொண்டார். அப்போது வனவாச மரபு வழித் துறவிகளில் தலை சிறந்த ஒப்பற்ற ஆசிரியராகக் கருதப்பட்ட போற்றுதற்குரிய அஜான் முன் அவர்களுடன் குறுகிய காலமே எனினும், குறிப்பிடத்தகுந்த காலத்தை அவர் கழித்தார். அஜான் முன்னுடன் கழித்த காலத்திற்குப் பின், பல வருடங்கள் தாய்லாந்தின் பல பகுதிகளையும் சுற்றி வந்தார். அப்போது தியானப் பயிற்சிக்கு மிக உகந்த இடங்கள் என்று கருதப்பட்ட வனங்களிலும், சுடுகாடுகளிலும் அவர் தன் காலத்தைச் செலவிட்டார்.
ஒரு காலக்கட்டத்தில் தாம் பிறந்த கிராமப் பகுத்திக்கே வந்து சேர்ந்தார். அவர் அங்கு வந்திருக்கும் செய்தி பரவியதும், பா பொங் வனத்தில் ஒரு விகாரை அமைக்க வேண்டுமென அவர் வேண்டப் பட்டார். அச்சமயத்தில் அந்த வனம் காட்டு விலங்குகளும், பேய்களும் நடமாடும் இடமாகக் கருதப்பட்டது. அஜான் சாவின் தியானத்தின் மீதான, அதாவது தம்மப் பயிற்சி மீதான, தரமான அணுகுமுறையும், அவரது நேரடியாகக் கற்பிக்கும் எளிமையான முறையும், வாழ்க்கையில் பயன்படக்கூடிய பயிற்சிகளை அவர் வலியுறுத்தியதும், அவரின் நடுநிலையான போக்கும், பல துறவிகளையும், இல்லற மக்களையும் அவர் பால் ஈர்த்தது.
1966 ஆம் ஆண்டும் முதல் முறையாக வாட் பா போங் விகாரைக்கு சுமேதோ பிக்கு என்ற ஒரு மேற்கத்தியர் தங்க வந்தார். அப்போதிருந்து மேலை நாட்டு மக்கள் அஜான் சாவைச் சந்திக்க வருவதும் நிலையாக அதிகரித்தது. 1975 ஆம் ஆண்டு மேற்கத்தியருக்கும், தாய் நாட்டு மக்கள் அல்லாதவர்களுக்கும் முதல் கிளை விகாரை தொடங்கப்பட்டது. அதுவே வாட் பா நாநாசாட். அஜான் சுமேதோ அதன் முதல் தலைமை பிக்கு வாக இருந்தார்.
1976 ஆம் ஆண்டு போற்றுதற்குரிய அஜான் சா, அஜான் சுமேதோ அவர்களுடன் இங்கிலாந்துக்கு அழைக்கப் பட்டார். அதன் விளைவாக தாய்லாந்துக்கு வெளியில் முதல் முறையாக வாட் பா போங்கின் கிளை விகாரை அமைக்கப்பட்டது. அதிலிருந்து, பல கிளை விகாரைகள் இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும், ஆஸ்திரேலியாவிலும், நியூ ஜீலாந்திலும், இதாலியிலும், கனடாவிலும் துவக்கப்பட்டுள்ளன.
1980 ஆம் ஆண்டு போற்றுதற்குரிய அஜான் சாவிற்குச் சில ஆண்டுகளாகவே இருந்து வந்த கிறுகிறுப்பும், நினைவிழத்தலும் அடிக்கடி நிகழ்ந்தன. இதனால் 1981 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு சத்திரச் சிகிச்சை செய்யப் பட்டது. ஆனால் அச்சிகிச்சை வெற்றி பெறாததால், பாரிசவாதம் உருவாவதை நிறுத்த முடியவில்லை. அவரது இறுதிக் காலத்தை அவர் படுத்த படுக்கையில் இருந்த வண்ணம் வாய் பேச முடியாத நிலையிலேயே கழித்தார். ஆனால் இது, அவர் விகாரைக்குத் தொடர்ந்து துறவிகளும் இல்லற மக்களும் வருவதைத் தடைப் படுத்தவில்லை. அவர்களுக்கு அஜான் சாவின் போதனைகள் தொடர்ந்து வழி காட்டியாகவும், தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் இருந்தன.
* * * * * *
Venerable Ajahn Chah (Pra Bhodinyana Thera) was born into a typical farming family in Bahn Gor village, in the province of Ubol Rachathani, N.E. Thailand, in 1918. He lived the first part of his life as any other youngster in rural Thailand, and, following the custom, took ordination as a novice in the local village Wat for a number of years, where he learned to read and write, in addition to some basic Buddhist teachings. After a number of years he returned to the lay life to help his parents, but, feeling an attraction to the monastic life, at the age of twenty he again entered a Wat, this time for higher ordination as a bhikkhu, or Buddhist monk.
He spent the first few years of his bhikkhu life studying scriptures and learning Pali, but the death of his father awakened him to the transience of life and instilled in him a desire to find the real essence of the Buddha's teaching. He began to travel to other monasteries, studying the monastic discipline in detail and spending a very brief but significant time with Venerable Ajahn Mun, the most outstanding meditation Master of the ascetic, forest-dwelling tradition. Following his time with Venerable Ajahn Mun, he spent a number of years traveling around Thailand, spending his time in forests and charnel grounds, ideal places for developing meditation practice.
At length he came within the vicinity of the village of his birth, and when word got around that he was in the area, he was invited to set up a monastery at the Pa Pong forest, a place at that time reputed to be the habitat of wild animals and ghosts. Venerable Ajahn Chah's impeccable approach to meditation, or Dhamma practice, and his simple, direct style of teaching, with the emphasis on practical application and a balanced attitude, began to attract a large following of monks and laypeople.
In 1966 the first westerner came to stay at Wat Pa Pong, Venerable Sumedho Bhikkhu. From that time on, the number of foreign people who came to Ajahn Chah began to steadily increase, until in 1975, the first branch monastery for western and other non-Thai nationals, Wat Pa Nanachat, was set up with Venerable Ajahn Sumedho as the abbot.
In 1976 Venerable Ajahn Chah was invited to England together with Ajahn Sumedho, the outcome of which was eventually the establishment of the first branch monastery of Wat Pa Pong outside of Thailand. Since then, further branch monasteries have been established in England, Switzerland, Australia, New Zealand and Italy.
In 1980 Venerable Ajahn Chah began to feel more acutely the symptoms of dizziness and memory lapse which he had been feeling for some years. This led to an operation in 1981, which, however, failed to reverse the onset of the paralysis which eventually rendered him completely bedridden and unable to speak. However this did not stop the growth of monks and laypeople who came to practice at his monastery, for whom the teachings of Ajahn Chah are a constant guide and inspiration.
* * * * * *
© Copyright
Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/