உள்ளமும் மனமும் Heart and Mind

Heart and Mind

உள்ளமும் மனமும்

30

Only one book is worth reading: the heart.

ஒரே ஒரு புத்தகம் மட்டுமே படிக்கத் தகுதி வாய்ந்தது: உள்ளம் என்ற புத்தகம்.

31

The Buddha taught us that whatever makes the mind distressed in our practice hits home. Defilements are distressed. It’s not that the mind is distressed! We don’t know what our minds and defilements are. Whatever we aren’t satisfied with, we just don’t want anything to do with it. Our way of life is not difficult. What’s difficult is not being satisfied, not agreeing with it. Our defilements are the difficulty.

பயிற்சியின் போது நம் மனதில் எவையெல்லாம் துயரம் உண்டாக்கு கிறதோ அது நம்மை ஆழமாகத் தொடும் என்று புத்தர் நமக்குக் கற்றுத் தந்தார். தூய்மையைக் கெடுப்ப தெல்லாம் துயரம் உண்டாக்குகின்றன. மனம் துயரப்படுகிறது என்பதல்ல! நமக்கு மனமும், மனத்தூய்மையைக் கெடுப்பவையும் என்ன என்பது தெரிவதில்லை. எவையெல்லாம் நமக்குத் திருப்தி தருவதில்லையோ அவைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்புவ தில்லை. நமது நடைமுறை வாழ்க்கை கடினமானதல்ல. எது கடினமான தென்றால் திருப்தி அடையாமலும், ஒத்துக் கொள்ளாமலும் இருப்பதும் தான். நமது தூய்மையைக் கெடுப்பவைதான் நமக்குச் சங்கடத்தை உண்டாக்குகின்றன.

32

The world is in a very feverish state. The mind changes from like to dislike with the feverishness of the world. If we can learn to make the mind still, it will be the greatest help to the world.

உலகம் நிம்மதியற்ற நிலையில் இருக்கிறது. மன நிலைகளும் உலகின் நிம்மதியற்ற தன்மைக்கேற்ப விருப்பு வெறுப்பு என மாறிக் கொண்டிருக்கிறது. மனதைச் சாந்தமுறச் செய்யக் கற்றுக்கொண்டால், அதுவே உலகுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

33

If your mind is happy, then you are happy anywhere you go. When wisdom awakens within you, you will see Truth wherever you look. Truth us all there is. It’s like when you’ve learned how to read - you can then read anywhere you go.

உங்கள் மனம் மகிழ்ச்சியோடு இருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். உங்களுள் நுண்ணறிவு விழித்துக் கொண்டால், எங்கு பார்த்தாலும் நீங்கள் உண்மையைக் காணுவீர்கள். உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் படிக்கக் கற்றுக் கொண்ட பிறகு எங்கு சென்றாலும் படிக்கமுடிகிறதல்லவா? அப்படித்தான் உண்மையும்.

34

If you’re allergic to one place, you’ll be allergic to every place. But it’s not the place outside you that’s causing you trouble. It’s the "place" inside you.

ஒரு இடம் உங்களுக்கு ஒவ்வாமையாக அமைந்தால் ஒவ்வொரு இடமும் உங்களுக்கு ஒவ்வாததாகவே அமையும். ஆனால் உங்களுக்குப் புறத்தே உள்ள இடம் உங்களுக்குப் பிரச்சனை தருவதில்லை. உங்கள் "உள்" இடம் தான் பிரச்சனை தருகிறது.

35

Look at your own mind. The one who carries things thinks he’s got things, but the one who looks on only sees the heaviness. Throw away things, lose them, and find lightness.

உங்கள் மனதைக் கூர்ந்து நோக்குங்கள். சாமான்களைச் சுமந்து செல்பவன் தன்னிடம் பொருட்கள் உள்ளதைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆனால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்குச் சாமானின் பாரம் மட்டுமே தெரிகிறது. எனவே சாமான்களைத் தூக்கி எறியுங்கள், தொலைத்து விடுங்கள். அதன் பிறகு பாரம் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

36

The mind is intrinsically tranquil. Out of this tranquility, anxiety and confusion are born. If one sees and knows this confusion, then the mind is tranquil once more.

இயற்கையாகவே மனம் அமைதியானது. இந்த அமைதியிலிருந்து தான் கவலையும், குழப்பமும் பிறக்கின்றன. இந்தக் குழப்பத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டால், மனம் மீண்டும் அமைதி அடைகிறது.

37

Buddhism is a religion of the heart. Only this. One who practices to develop the heart is one who practices Buddhism.

பௌத்த மதம் உள்ளத்தைச் சார்ந்த சமயம். அவ்வளவுதான். எவரொருவர் உள்ளத்தை நன்கு வளர்க்கப் பயில்கிறாரோ அவரே பௌத்த மதத்தைப் பின் பற்றுகிறவர் எனலாம்.

38

When the light is dim, it isn’t easy to see the old spider webs in the corners of the room. But when the light is bright, you can see them clearly and then be able to take them down. When your mind is bright, you’ll be able to see your defilements clearly, too, and clean them away.

மங்கலான வெளிச்சத்தில் அறையின் மூலைகளில் உள்ள பழைய சிலந்திக் கூடுகளைப் பார்ப்பது எளிதல்ல. ஆனால் வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது சிலந்திக்கூடுகளைத் தெளிவாகப் பார்த்து அவற்றை அகற்றிவிட முடிகிறது. அதேபோல் உங்கள் மனம் தெளிவாக இருக்கும் போது மனதைக் கெடுக்கும் மாசுகளை நன்கு புரிந்து கொண்டு அவற்றைக் களைந்து விடலாம்

39

Strengthening the mind is not done by making it move around as is done to strengthen the body, but by bringing the mind to a halt, bringing it to rest.

உடலை அசைத்துப் பலப்படுத்துவதைப் போல மனதை அசைத்துப் பலப்படுத்த முடியாது. மனதைப் பலப்படுத்த அதை நிலைநிறுத்தி அமைதியாக்க வேண்டும்.

40

Because people don’t see themselves, they can commit all sorts of bad deeds. They don’t look at their own minds. When people are going to do something bad, they have to look around first to see if anyone is looking: "Will my mother see me?" "Will my husband see me?" "Will my children see me?" "Will my wife see me?" If there’s no one watching, then they go right ahead and do it. This is insulting themselves. They say no one is watching, so they quickly finish their bad deed before anyone will see. And what about themselves? Aren’t they a "somebody" watching?

மக்கள் தங்களை உணர்ந்து கொள்ளாததால் பல்வேறு தீய செயல்களைச் செய்கிறார்கள். தங்கள் மனதை அவர்கள் பார்ப்பதில்லை. மக்கள் ஏதாவது தகாத செயலைச் செய்வதற்கு முன்னால் சுற்று முற்றும் பார்க்கிறார்கள். "வேறுயாரவது பார்க்கிறார்களா?" "அம்மா என்னைப் பார்த்துவிடுவாரா?" "கணவன் என்னைப் பார்த்துவிடுவாரா?" "எனது குழந்தைகள் என்னைப் பார்த்துவிடுவார்களா?" "எனது மனைவி என்னை பார்த்துவிடுவாளா?" என்று நோக்குகிறார்கள். யாரும் கவனிக்கவில்லையென்றால் அச்செயலைச் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. இது தங்களையே அவமதித்துக் கொள்ளும் செயலாகும். அவர்கள் மற்றவர் யாரும் தங்களைப் பார்க்காதபோது சட்டென்று தகாத செயலைச் செய்து முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னவானார்கள்? அவர்களும் கவனித்துகொண்டிருக்கும் "ஒருவர்" தானே?

41

Use your heart to listen to the Teachings, not your ears.

போதனைகளை உள்ளத்தைக் கொண்டு கேட்க வேண்டும். காதுகளைக் கொண்டல்ல.

42

There are those who do battle with their defilements and conquer them. This is called fighting inwardly. Those who fight outwardly take hold of bombs and guns to throw and to shoot. They conquer and are conquered. Conquering others is the way of the world. In the practice of Dhamma we don’t have to fight others, but instead conquer your own minds, patiently resisting all our moods.

சிலர் தங்கள் தூய்மையைக் கெடுக்கும் சங்கதிகளோடு போர் செய்து வெற்றி காண்கிறார்கள். இதனை அகத்தே (உள்ளே) நிகழும் ஆன்மீகச் சண்டை எனலாம். புறத்தே சண்டை செய்பவர்கள் குண்டு எறிந்தும் துப்பாக்கிகளாலும் போர் செய்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் அல்லது வீழ்த்தப் படுகிறார்கள். மற்றவர்களை வெற்றி கொள்வதுதான் உலகின் நடைமுறையாக உள்ளது. தரும நெறியில் நடக்கும் நாம் பிறரோடு போராடாமல் நமது மனத்தோடு போராடுகிறோம். பொறுமையாக இருந்து அலைக்கழியும் மனத்தோடு போராடி வெற்றி காண்கிறோம்.

43

Where does rain come from? It comes from all the dirty water that evaporates from the earth, like urine and the water you throw out after washing your feet. Isn’t it wonderful how the sky can take that dirty water and change it into pure, clean water? Your mind can do the same with your defilements if you let it.

மழை நீர் எங்கிருந்து வருகிறது? பூமியில் சிறுநீர், கால் கழுவிய தண்ணீர் போன்ற அழுக்கு நீர் ஆவியாகிய பிறகு மழையாகப் பொழிகிறது . அழுக்கு நீர் தூய, தெளிந்த நீராக மாறுவது அபூர்வமான செயலல்லவா? அதுபோலவே உங்கள் மனதிற்கு அனுமதி கொடுத்தால் அதுவும் அலைக்கழிக்கும் தீய எண்ணங்களை அடக்கித் தூய்மைப் படுத்திவிடும்.

44

The Buddha said to judge only yourself, and not to judge others, no matter how good or evil they may be. The Buddha merely points out the way, saying, "The truth is like this." Now, is our mind like that or not?

புத்தர் உங்களையே அலசித் தீர்ப்புக் கூறச் சொன்னார், மற்றவர்களை அல்ல. மற்றவர்கள் எவ்வளவு நல்லது கெட்டது செய்தாலும் அவர்களைப் பற்றி அலசிப் பார்க்க வேண்டாம். "உண்மை இப்படித்தான்" என்று புத்தர் வழியை மட்டும் காட்டுகிறார். நம் மனமும் அப்படியா இல்லையா?