முன்னுரை Introduction

Introduction

முன்னுரை

When people would say to Ajahn Chah that they found it impossible to practice in society, he would ask them, "If I poked you in the chest with a burning stick, would you say that indeed you were suffering, but since you live in society you can’t get away from it?" Ajahn Chah’s response makes a point not unlike the Buddha’s parable of the poisoned arrow. The Buddha tells of a man who had been shot by an arrow and would not let anyone pull it out until his questions about the arrow, the bow and the archer were all answered. The only problem was that the wounded man would probably die before he could get the replies to all his questions. What the wounded man had to realize was that he was in pain and dying, and he should do something about that right away.

அஜான் சாவிடம் சிலர் சமுதாயத்தில் (தினசரி கடமைகளின் காரணமாக) பௌத்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது சாத்தியமாக இல்லை என்று சொல்வார்கள். அஜான் சா அவர்களைக் கேட்பார், "நான் உங்கள் நெஞ்சை ஒரு கொள்ளிக் கட்டையால் குத்தினால், ‘ஆம்; சுடுகிறது, ஆனால் சமுதாயத்தில் வாழ்வதால் அதைத் தடுத்து விலகிச் செல்ல முடியவில்லை' என்றா சொல்வீர்கள்?". அஜான் சாவின் பதில் புத்தர் சொன்ன விஷ அம்பு கதையைப் போன்றது தான். அம்பினால் தாக்கப்பட்ட ஒருவன் அந்த அம்பைப் பற்றியும், வில்லைப் பற்றியும், அம்பு எய்தவனைப் பற்றியும் கேள்விகள் கேட்டு, தான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் யாரும் தன் உடம்பில் இருக்கும் அம்பை எடுக்கக் கூடாது எனத் தடுக்கின்றான். பிரச்சனை என்னவென்றால் காயம்பட்ட அவன் எல்லாப் பதில்களும் தெரிந்து கொள்வதற்கு முன்பே இறந்துவிட நேரிடலாம். காயம்பட்டவன், வேதனையில் சாகக் கிடக்கிற நிலையில், உயிர்தப்பிக்க உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதைத்தான் உணர வேண்டும்.

Ajahn Chah emphasized this point over and over again in his teachings: you’re suffering; do something about it now! He wouldn’t spend much time talking about peace, wisdom, or Nibbanic states but rather the practice of constantly being aware of what was happening within the body and mind within the present moment, learning how to simply watch and let go. Meditation, he’d say, was not getting things, but getting rid of things. Even when asked about the peace one could attain through practice, he would instead rather speak of the confusion that one should first get rid of, for, as he put it, peace is the end of confusion.

இந்தக் கருத்தைத்தான் அஜான் சா திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்: துக்கம் அனுபவிக்கிறீர்கள்; அதைத் தவிர்க்க உடனடியாக ஏதாவது செய்யுங்கள்! அவர் அமைதி பற்றியும், நுண்ணறிவு பற்றியும், நிர்வாண மன நிலைகள் பற்றியும் அதிகம் பேசாமல், ஓயாமல் உடம்பிலும் மனத்திலும் அந்தக் கணத்தில் நிகழ்வதைக் கவனித்து அறிந்து, அதைக் "கை விடுவதைப்" பற்றியே பேசினார். தியானம் செய்வது பொருட்களை அடைவதற்காக அல்ல, மாறாகப் பொருட்களைத் துறப்பதற்காகவே என்று அவர் சொல்வார். வழக்கத்தைப் (புத்தரின் வழியைப்) பின்பற்றுவதால் வரும் மன அமைதியைப் பற்றிக் கேட்டால் கூட அவர் முதலில் குழப்பங்களைக் களைய வேண்டியதன் அவசியம் பற்றித்தான் பேசுவார், ஏனென்றால் அவர் சொற்படி குழப்பம் நீங்கினால் மன அமைதி தானாக வந்து சேரும்.

This collection reflects not only on suffering and meditation practice but also gives us some insight into impermanence, virtue, non-self and so on. We hope that the reader with take this little book as a companion and "good friend" for moments of quiet reflection, and perhaps get a glimpse of the "no-Ajahn Chah" who used to say, "I’m always talking about things to develop and things to give up, but, really there’s ‘nothing’ to develop and ‘nothing’ to give up.

இந்தத் திரட்டில் உள்ள கருத்துக்கள் துக்கம் பற்றியும் தியான வழியைப் பற்றியும் மட்டுமல்லாமல், நிலையாமை, நற்பண்பு, "தான்" என்ற மமதையின்மை போன்ற கருத்துக்களையும் நமக்குத் தெளிவுறுத்துகிறது. இதைப் படிப்பவர்கள் அமைதியாகச் சிந்திக்கும் போது இந்தக் கருத்துக்களைத் தமக்குத் துணை புரியும் "நல்ல நண்பனாகக்" கருதுவார்கள் என்று நம்புகிறோம். படித்த பிறகு "இங்கு இல்லாத அஜான் சா" வைப்பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்றும் நம்புகிறோம். அவர் சொல்வார் "நான் அடிக்கடி நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய கருத்துக்களையும், கைவிட வேண்டிய கருத்துக்களையும் பற்றிச் சொல்கிறேன். உண்மையில் சொல்லப்போனால் நாம் வளர்த்துக் கொள்ளவும் ஒன்றும் இல்லை கைவிடுவதற்கும் ஒன்றும் இல்லை".