மூச்சோடு இருப்பது

மூச்சோடு இருப்பது

தணிசாரோ பிக்கு

Stay with the breath

Thanissaro Bhikkhu

English version follows Tamil translation

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு விஷயத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். அற போதனையின் மீது கூட கவனம் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் செய்வதற்குச் சம்பந்தப்பட்டது எதேனும் போதனையில் இருந்தால் அதை நீங்கள் கேட்டுக் கொள்வீர்கள். சம்பந்தப்பட்டதாக இல்லை என்றால் அது உங்கள் மனக்கவனத்தைத் திசை திருப்பி விடும். எனவே அதைப் போக விடுங்கள். வேறு யாருக்காவது அது பயன்தரலாம் அல்லது போதிப்பவருக்குப் பயன் தரலாம். ஆனால் நீங்கள் கவனத்தைப் புறத்தில் செலுத்த வேண்டாம். மூச்சின் உணர்ச்சியின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள். உள் மூச்செடுக்கும் போது உள் மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்திருங்கள். வெளி மூச்செடுக்கும் போது வெளி மூச்செடுக்கிறோம் என்பதை உணர்ந்திருங்கள். உடலில் எங்கெல்லாம் தோன்றும் உணர்ச்சிகளால் உள் மூச்செடுக்கிறோம் அல்லது வெளி மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கிறோம் என்பதைக் கவனியுங்கள். அந்த உணர்ச்சிகளை எப்படி உணர்கின்றீர்கள்? உள் மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக இருக்கிறதா? வெளி மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக உள்ளதா? உள் மூச்சின் முடிவில் அல்லது வெளி மூச்சின் இறுதியில் அசௌகரியமாக இருந்தால் அது, மூச்சு மிகவும் நீண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி. ஆக மூச்சின் நீளத்தைச் சற்றுக் குறைத்து விடுங்கள். உள் மூச்சு திருப்திகரமாக இல்லாவிட்டால் சற்று நீண்ட உள் மூச்சு விட்டுப் பாருங்கள். மூச்சின் தாளலயம் உடலை நாம் அறிவதை எப்படிப் பாதிக்கிறது? மூச்சின் மீதான நமது எண்ணங்கள் உடலில் தோன்றும் உணர்ச்சிகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனியுங்கள். மூச்சோடு சண்டையிட்டுக் கஷ்டப்பட்டு மூச்சை இழுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை. ஏனென்றால் நாம் கஷ்டப்படாவிட்டாலும் மூச்சு தானாகவே வந்து போகத்தான் போகிறது. அதனுடன் சண்டைபோடாமல் இருப்பதே உடலுக்கு நல்லது. எனவே முச்சு எந்தத் திசையிலிருந்து வந்தாலும் உடலின் எந்தப் பாகத்திலிருந்து வந்தாலும் அது தானே செயற்படட்டும் என்று உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் ஒரே கடமை உடலில் தோன்றும் உணர்ச்சிகளை அறிந்திருப்பதும், அவைகளை வசதியாக இருக்க விடுவதுமேயாகும். ஏனெனில் அவை வசதியாக இருந்தால் மூச்சோடு நாம் சேர்ந்து இருப்பதும் சுலபமாகிவிடும். நாம் இங்கு பயிற்சி செய்வது மனத்தை நிகழ் காலத்தில் அடங்க வைப்பதற்காகத்தான். அமைதியாக இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

மனம் நிகழ் காலத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று, நிகழ் காலத்தில் மனம் இராவிட்டால் நாம் கடந்த காலத்தை நினைத்து ஓடிக் கொண்டே இருப்போம். அல்லது வருங்காலத்தை நினைத்துக் கற்பனையில் மிதந்து கொண்டு இருப்போம். இப்படி இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது மனத்தைச் சாந்தபடுத்தப் போவதில்லை. அது தளர்ந்து விடும். எனவே நிகழ் காலத்தில் மூச்சின் இதமான உணர்ச்சியோடு இருப்பது மனத்திற்கு ஆறுதளிக்கிறது. மனத்தில் எண்ணங்கள் எழுந்தால் அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டாம். தியானத்தின் போது உங்கள் ஒரே கடமை, வசதியான மூச்சின் உணர்ச்சியோடு இருந்து மனத்திற்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே.

இப்படித் தியானிப்பதற்கு மற்றொரு காரணம், மனம் நிகழ்காலத்தில் இருந்தால் மட்டுமே அதில் நடப்பனவற்றை நாம் கவனிக்க முடியும். ஒரு நாளின் பெரும்பாலான பகுதியை நாம் நமது எண்ணங்களைக் கவனித்துக் கொண்டும் அவற்றுள் நுழைந்தும் காலத்தைக் கழிக்கின்றோம். ஆனால் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கவனிப்பதில்லை. திறமையற்ற எண்ணங்கள் - அதாவது துக்கம் உண்டாக்கும் எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான எண்ணங்கள் அக்கறை இல்லாமல் அவசரப்பட்டு உருவாகின்றன என்பது தெளிவாகிறது. மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கையில், இது அப்படி, அது இப்படி என்று மனம் தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று வேறொரு இடத்தைப் பற்றிய எண்ணம் தோன்றுகிறது.

இது கணிப்பொறியின் (computer) சாவிப்பலகையில் (keyboard) 'Ctrl' சாவியை அழுத்துவதுபோல. திடீரென்று எழுத்துக்களின் பொருளே மாறிவிடுகிறது. 'S' என்ற எழுத்து இனி 'S' இல்லை. அது 'சேமி' (Save) என்ற பொருள் கொள்கிறது. 'C' என்ற எழுத்து 'C' இல்லை. அது 'நகல்' (Copy) என்ற பொருள் கொள்கிறது. ஏனென்றால் அந்த 'Ctrl' சாவி அழுத்தப் பட்டிருக்கிறது. மனமும் அது போன்றதேதான். சாதாரணமாக உடலின் உணர்ச்சி, மூச்சின் உணர்ச்சி திடீரென்று வேறு ஒரு இடத்தின், வேறு ஒரு காலத்தின், வேறு சிலரைப் பற்றிய எண்ணங்களாகி விடுகின்றன. பின் அந்த எண்ணங்கள் மனத்தில் பெரும் சஞ்சலத்தை உண்டாக்கி விடுகின்றன. அந்த எண்ணங்களுள் நுழைந்து விட்டால் வேறு ஒரு உலகில் நுழைந்து விட்டுப் பின் அது நல்ல உலகமா இல்லையா என்பதை ஆராய்வது போல. பல முறையும் உரிய காலத்திற்குள் அதைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த உலகில் நுழைந்த பின் அதில் சிக்கிக் கொள்கிறோம்.

மனம் உருவாக்கிய உலகங்களின் சிக்கல்களிலிருந்து எப்படிச் சிக்கலை விலக்கி வெளிவருவது? அந்த உலகங்கள் உருவாக்கும் செயற்றொடர்களைக் கவனிப்பதனாலேயே வெளிவர முடியும். அச்செயற்றொடர்களைக் கவனித்தபின் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தி விடுகிறோம். பயனுள்ள சமயங்களில் பயன்படுத்திக் கொண்டு பயனற்ற சமயங்களில் அவற்றை விட்டுவிட வேண்டும். பயனில்லாதவற்றை அல்லது தீயனவற்றை உருவாக்கும் செயல்களைத் தெரிந்தே நாம் உருவாக்கப் போவதில்லை, இல்லையா? நாம் அவற்றை உருவாக்குவதற்குக் காரணம், அவற்றை உருவாக்குவதை நாம் அறியாததனால் தான். அவ்வுலகங்கள் ஏற்கனவே இருப்பதாகத் தெரிகிறது. மனத்தில் தானாகவே தோன்றியதாகத் தெரிகிறது. அப்படி உருவாவது மறைந்திருந்து நடைபெறுவதாலும், நமது காட்சிக்குத் தெரிவதில்லை என்பதாலும் நாம் அவற்றைக் கவனிப்பதில்லை.

நாம் தியானம் செய்து மனத்தை நிகழ்காலத்தில் கட்டுப் படுத்தி அதன் எண்ணங்கள் உருவாகும் செயற்றொடரைக் கவனிக்கிறோம். மறைந்து இருக்கும் அந்தச் செயற்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம். தியானம் எளிமையான பயிற்சி தான். மனத்தை மூச்சொடு இருக்க வைக்கிறோம். அது வேறு எங்காவது சென்று விட்டால் அதை மீண்டும் மூச்சிற்கே கொண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப அதை மூச்சிடமே கொண்டு வந்து இடைவெளியில்லாமல் மூச்சைக் கவனிக்க வைக்கிறோம். இது எளிமையான பயிற்சி என்றாலும் மிக முக்கியமானதுமாகும். மனத்தின் ஆரோக்கியத்திற்கும் பிழைப்பிற்கும் இது ஒரு அடிப்படையான திறமையாகும். எனவே இங்கு செய்யும் ஒரு மணி நேரத் தியானத்தைப் பயனற்ற நேரம் என்று நினைக்கவேண்டாம். இது மிகக்குறுகிய காலமே. இந்த ஒரு மணி நேரத்தைப் பயன்படுத்தி மனத்தை ஆறுதலடையச் செய்யுங்கள். ஒரே விஷயத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உயிர் இதை நம்பி இருப்பதாக நினைத்துச் செய்யுங்கள். உண்மையில் உங்கள் உயிர் இதை நம்பித்தான் இருக்கிறது.

"Stay with the Breath" by Thanissaro Bhikkhu

Transcribed from an audio recording

Try to stay focused on one thing for the rest of the hour. You don't even have to focus on the Dharma talk. If there is anything relevant to what you are doing it will come right in and you will notice it and you will hear it. If it is not relevant to what you are doing, it is a distraction. So let it go. It may be useful for somebody else or may be useful for the person giving the talk but you don't have to focus your attention outside. Just keep it on the sensation of the breath. When you breath in, know you are breathing in. When you breath out, know you are breathing out. Notice where in the body you have the sensations that tell you - now you are breathing in, now you are breathing out. And notice how those sensations feel. Do they stay comfortable all the way through the in breath, all the way through the out. If there is some stress or strain at the end of the in breath or at the end of the out it is a sign that the breath is too long. So allow it to be a little bit shorter. If the in breath doesn't feel satisfying you might try a little bit longer. See how the rhythm of the breath affects your sense of the body. See also how your conception of the breath affects your sensations of the body. If you feel that you have to pull the breath in, you really have to fight to pull it in.That is really unnecessary because the breath is going to come in and go out on its own without you having to fight. But it is much better for the body if you don't fight. What this means is that if you are going to force it in a way it doesn't naturally go. So just tell your self which ever direction your breath is going to come in and out of the body wherever it is going to come in out of the body let it do its own thing. Your only duty is to keep track of the sensations. And to allow those sensations to be comfortable. Because the more comfortable they are, the easier it is to stay with the breath. What you are trying to do here is to get the mind to settle down in the present moment. With a sense of ease, with a sense of belonging.

For several reasons. One, it is simply good for the mind to have this sense of belonging right here because if you don't belong in the present moment you are going to be running around in the past, running around in the future. And the mind that cannot settle down is a mind that is going to wear itself out. So it is healing for the mind simply to be able to stay here with this comfortable sensation of the breathing. Whatever thoughts come to the mind you don't have to pay them any attention. Your only duty is to stay right here and allow this process of being with the sensation of comfortable breathing to heal both the body and the mind.

The other reason why we do this is because only when the mind is in the present moment can it see what it is doing. We spend most of our day looking at our thoughts, getting into our thoughts. We rarely look at the process of how a thought forms. Because that is the only way we can get around unskillful thinking, any kind of thinking that creates suffering. We still look at the process. And see how jerry rigged the whole thing is - how arbitrary it is. All the make belief that the mind does and the messages it sends back and forth make belief this is this and that is that and all of a sudden you got a thought of some other place.

It is like pressing the ctrl button on our computer keyboard. All of a sudden the letters of the alphabet mean something else. An 'S' is not an 'S' anymore it is a 'Save'. A 'C' is not a 'C' anymore it is a 'Copy'. Because you have got that key pressed. It is the same with the mind. What would be ordinarily a sensation of the body, a sensation of the breath suddenly becomes a thought of some other place, some other time, some other people. Then those kinds of thought can wreak all kinds of havoc in the mind. Once you move into them it is like moving into another world and then finding out if it is a good world or not. A lot of times it is too late. Once you are there you are in there and then you are stuck and it can get very entangling.

So this is how you unentangle yourself from the worlds of the mind, by watching the process by which those worlds are created. When you see the process you give a lot less credence you begin to use them simply when they are useful and then drop them when they are not. When after all something is going to be useless or actually harmful why create it. The reason we create is because we don't realize we are creating it. It seems to be just be there. Pops up in the mind of its own accord. Because the process of creation is an underground process. It is out of sight and therefore it is out of our awareness.

What we are doing is to meditate to bring the mind to the present moment to put it in a position where it can see the processes of thought creation. Bring them up into the live day. Even though it may simple this process of just staying with the breath staying with the breath coming back to the breath when the mind wanders off trying to be as sensitive as possible to the whole breath in and the whole breath out without there being any gaps. It is a simple process but it is an important one. It is a really basic skill for the survival and well being of of the mind. So don't think of this hour as a long time. It is all very short. And try to make use of the whole hour to heal the mind. To do just this one thing. Stay with the breath. As if your life depended on it, because it does.