எளிமையாகச் சொல்வதென்றால்
In Simple Terms
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
108 Dhamma Similes by Ajahn Chah
1. Your Real Home Top
Your external home isn't your real home.
It's your supposed home, your home in the world.
As for your real home, that's peace.
The Buddha has us build our own home
by letting go till we reach peace.
உங்களது உண்மையான வீடு
உங்கள் புற வீடு உங்கள் உண்மையான வீடு அல்ல.
அது உங்களது வீடு என்று உலக வழக்கப்படி சொல்லப்படுகிறது, உலகில் அது உங்களது இல்லம்.
உங்கள் உண்மையான வீடு எது? அது மன அமைதி தான்.
புத்தர் நமது வீட்டை நம்மையே கட்டச் சொன்னார். எப்படி?
அமைதி கிட்டும்வரை (பற்றுகள்) அனைத்தையும் கைவிட வேண்டும்.
2. To the Ocean Top
The streams, lakes, and rivers that flow down to the ocean, when they reach the ocean, all have the same blue color, the same salty taste.
The same with human beings: It doesn't matter where they're from — when they reach the stream of the Dhamma, it's all the same Dhamma.
கடலை நோக்கி
கடலை நோக்கிச் செல்லும் ஓடைகளும், ஏரிகளும், நதிகளும் கடலைச் சேர்ந்த பின் எல்லாம் நீல நிறமாகத் தோற்றம் கொள்கின்றன. அனைத்தும் உப்புச் சுவையைக் ஏற்கின்றன.
மனிதரும் அது போலவே: எங்கிருந்து அவர்கள் வந்தாலும் சரி - அவர்கள் தம்மத்தை அடைந்தபின், அந்தத் தம்மம் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.
3. Groundwater Top
The Buddha is the Dhamma; the Dhamma is the Buddha. The Dhamma the Buddha awakened to is something always there in the world. It hasn't disappeared. It's like groundwater. Whoever digs a well down to the level of the groundwater will see water. It's not the case that that person created or fashioned the water into being. All he's done is to put his strength into digging the well so that it's deep enough to reach the water already there.
So if we have any discernment, we'll realize that we're not far from the Buddha at all. We're sitting right in front of him right now. Whenever we understand the Dhamma, we see the Buddha. Those who are intent on practicing the Dhamma continuously — wherever they sit, stand, or walk — are sure to hear the Buddha's Dhamma at all times.
நிலத்தடிநீர்
புத்தர் தான் தம்மம்; தம்மம் தான் புத்தர். புத்தர் விழிப்புறக் காரணமான தம்மம் உலகில் எப்போதும் உள்ளது தான். அது ஒருபோதும் மறைந்து விட வில்லை. இது நிலத்தடி நீரைப்போல. நிலத்தடி நீர் உள்ள அளவு வரை யார் கிணறு ஒன்றைத் தோண்டினாலும் அந்த நீரைக் காண்பார்கள். அவர்கள் அந்த நீரை உருவாக்கவோ, உற்பத்தி செய்யவோ இல்லை. அவர்கள் செய்ததெல்லம் தங்கள் சக்தியைப் பயன்படுத்திக் கிணற்றைத் தோண்டியது மட்டுமே. போதுமானவரை தோண்டியபின் ஏற்கனவே இருந்த நீரை எட்டி விடுகின்றனர்.
எனவே நமக்கு விவேகம் இருந்தால், நாம் புத்தரிடமிருந்து அதிக தூரத்தில் இல்லை என்பதை உணர்வோம். அவர் முன், எதிரிலேயே நாம் இப்போதும் உட்கார்ந்திருக்கின்றோம். நாம் தம்மத்தைப் புரிந்து கொள்ளும் போதெல்லாம் புத்தரைக் காண்கின்றோம். எப்போதும் தம்மத்தைப் பயில விரும்புவோர் – உட்காரும்போதும், நிற்கும்போதும், நடக்கும்போதும் எந்த நிலையிலும் சரி - அவர்கள் புத்தரின் தம்மத்தை எந்நேரமும் கேட்பது நிச்சயம்.
4. It's All Right Here Top
The Buddha is the Dhamma; the Dhamma is the Buddha. He didn't take away the knowledge he awakened to. He left it right here. To put it in simple terms, it's like the teachers in schools. They haven't been teachers from birth. They had to study the course of study for teachers before they could be teachers, teaching in school and getting paid. After a while, they'll die away — away from being teachers. But you can say that in a way the teachers don't die. The qualities that make people into teachers remain right here. It's the same with the Buddha. The noble truths that made him the Buddha still remain right here. They haven't run off anywhere at all.
எல்லாம் இங்கேயே உள்ளது
புத்தர் தான் தம்மம்; தம்மம் தான் புத்தர். அவர் விழிப்புற்ற அறிவை (அவர் மறைந்தபின்) தன்னோடு எடுத்துக் கொண்டு போய்விட வில்லை. இங்கேயே விட்டுச் சென்றார். எளிமையாகச் சொல்வதென்றால், பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர்களைப் போல. அவர்கள் பிறக்கும்போதே ஆசிரியர்களாகப் பிறப்பதில்லை. ஆசிரியர்களுக்கான பயிற்சியைப் படித்து முடித்த பின்னரே அவர்கள் ஆசிரியர்களாகி, பள்ளிகளில் கற்பித்து, அதற்குரிய சம்பளத்தைப் பெறுகின்றனர். சில காலத்திற்குப் பின் - அவர்கள் இறந்த பின் – ஆசிரியர்பணியிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். ஆனால் அதே சமயம் ஆசிரியர்கள் மறைந்து விட்டதாகக் கூற முடியாது. மக்களை ஆசிரியர்களாக்கும் பண்புகள், இயல்புகள் இங்கேயே இருக்கின்றன. புத்தரும் அது போலவே. புத்தரைப் புத்தராக்கிய மேன்மையான உண்மைகள் இங்கேயே உள்ளன. அவை எங்கேயும் ஓடி மறைந்து விடவில்லை.
5. Elephants, Oxen, & Water Buffaloes Top
Training the mind well is a useful activity. You can see this even in draft animals, like elephants, oxen, and water buffaloes. Before we can put them to work, we have to train them. Only when they're well trained can we use their strength and put it to different purposes. All of you know this.
A mind well trained is of many times greater value. Look at the Buddha and his noble disciples. They changed their status from being run-of-the-mill people to being noble ones, respected by people all over. And they've benefited us in more wide-ranging ways than we could ever determine. All of this comes from the fact that they've trained their minds well.
A mind well trained is of use in every occupation. It enables us to do our work with circumspection. It makes us reasonable instead of impulsive, and enables us to experience a happiness appropriate to our station in life.
யானைகள், காளைகள் மற்றும் எருதுகள்
மனத்தைப் பயில்விப்பது ஒரு பயனுள்ள நடவடிக்கை. நமக்கு உதவும் விலங்குகளான யானைகள், காளைகள் மற்றும் எருதுகளிடத்திலும் இதைக் காணலாம். அவற்றை வேலையில் ஈடுபடுத்துமுன் அவற்றுக்குப் பயிற்சிதர வேண்டும். அவை நன்றாகப் பயில்விக்கப்பட்ட பின்பே அவற்றின் வலிமையைப் பயன்படுத்தி நமக்கு வேண்டிய வேலைகளைச் செய்து கொள்ள முடியும். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் இது.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனம் பன்மடங்கு மதிப்படைகிறது. புத்தரையும் அவரது மேன்மையான சீடர்களையும் பாருங்கள். அவர்கள் சாதாரண மனிதர்களாயிருந்து அனைவரும் மதிக்கக்கூடிய மேன்மையானோராகத் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொண்டனர். நம்மால் கற்பனையும் செய்ய முடியாத அளவு அவர்கள் நமக்கு நன்மை செய்துள்ளனர். இவையெல்லாம் அவர்கள் தங்கள் மனத்தை நன்கு பயிவித்ததால் உண்டானது.
நன்கு பயில்விக்கப்பட்ட மனம் எல்லாத் தொழில்களிலும் பயன் தருகிறது. நமது கடமைகளைக் கவனமாகச் செய்ய வைக்கிறது. திடீர் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் விவேகத்துடன் செயல்பட முடிகிறது. இதனால் நமது வாழ்க்கை நிலைக்கு (அந்தஸ்துக்கு) ஒப்பான மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கின்றோம்.
6. The Roots Top
We're like a tree with roots, a base, and a trunk. Every leaf, every branch, depends on the roots to absorb nutrients from the soil and send them up to nourish the tree.
Our body, plus our words and deeds, our senses of sight, hearing, smell, taste, and feeling, are like the branches, leaves, and trunk. The mind is like the roots absorbing nutrients and sending them up the trunk to the leaves and branches so that they flower and bear fruit.
வேர்கள்
நாம் வேர்களும், அடித்தளமும், தண்டும் கொண்ட ஒரு மரத்தைப்போல. ஒவ்வொரு இலையும், கிளையும் வேர்கள் மண்ணிலிருந்து நீரையும் ஆகாரத்தையும் உரிஞ்சித் தங்களுக்குப் போஷாக்கூட்டும் என்று நம்பியிருக்கின்றன.
நமது உடலும், நமது மொழியும் செய்கையும், நமது பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும், உணரும் புலன்களும் கிளைகள், இலைகள், தண்டைப்போல. மனம் பூத்துக் காய், பழம் பிடிக்க தண்டின் வழியே இலை, கிளைகளுக்குப் போஷாக்கை உரிஞ்சி அனுப்பும் வேர்களைப் போல.
7. The Lost Wallet Top
It's as if you leave home and lose your wallet. It fell out of your pocket onto the road away back there, but as long as you don't realize what happened you're at ease — at ease because you don't yet know what this ease is for. It's for the sake of dis-ease at a later time. When you eventually see that you've really lost your money: That's when you feel dis-ease — when it's right in your face.
The same holds true with our bad and good actions. The Buddha taught us to acquaint ourselves with these things. If we aren't acquainted with these things, we'll have no sense of right or wrong, good or bad.
தொலைந்த பணப்பை (பர்ஸ்)
வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது பணப்பையைத் தொலைத்து விடுவதைப்போல. உங்கள் சட்டைப்பையிலிருந்து எப்போதோ அது சாலையில் விழுந்துவிட்டது. ஆனால் உங்களுக்கு அது தெரியாதவரை நீங்கள் இயல்பாக, அமைதியாக இருக்கின்றீர்கள் - அமைதியாக இருக்கக் காரணம் உங்களுக்கு இந்த அமைதி எதனால் உண்டானது என்பதை அறியாமல் இருப்பதால் தான். பின் வரப்போகும் அமைதியின்மையின் பொருட்டே இந்த அமைதி உள்ளது. நீங்கள் உங்கள் பணத்தைத் தொலைத்து விட்டதை அறிந்த பின்னரே அமைதியின்மை உங்கள் முகத்தில் தோன்றுகிறது.
நமது நல்ல செய்கைகளும், தீய செய்கைகளும் அது போலத்தான். புத்தர் இவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்று நமக்குக் கற்பித்தார். இவற்றை நாம் அறிந்து கொள்ளவில்லை யென்றால், சரியானது எது, தவறானது எது, நல்லது எது, தீயது எது என்பதைத் தெரிந்து கொள்ள மாட்டோம்.
8. Wagon Wheels, Wagon Tracks Top
The cycle of rebirth is like a wagon wheel. An ox is pulling the wagon. If it keeps on pulling the wagon without stop, the wagon tracks will keep on erasing the ox tracks without stop. The wagon wheels aren't long, but they're round. You could say that they're long, but their length is round. We see their roundness but we don't see their length. As long as the ox pulls without stopping, the wagon wheels turn without stopping.
On a later day the ox stops. It's tired. It drops the yoke. The ox then goes its way, the wagon goes its way. The wagon wheels stop of their own accord. If you leave them there a long time, they disintegrate into earth, water, wind, and fire, turning back into grass and dirt.
It's the same with people who are still making kamma: They don't come to closure. People speaking the truth don't come to closure. People with wrong views don't come to closure.
வண்டிச் சக்கரமும், சக்கர அடிச்சுவடும்
மறுபிறப்பென்ற சக்கரம் (சம்ஸாரச் சக்கரம்) வண்டிச் சக்கரத்தைப்போல. எருது வண்டியை இழுத்துச் செல்கிறது. எருது வண்டியை நிற்காமல் இழுத்துச் செல்லும் வரை, சக்கரச்சுவடுகள் எருதின் பாதச் சுவடுகளை அழித்துக் கொண்டே செல்கின்றன. சக்கரங்கள் நீளமானவை இல்லை என்றாலும் அவை வட்டவடிவில் உள்ளன. அவை நீளமானவை என்றும் கூறலாம், ஆனால் அவற்றின் நீளம் வட்ட வடிவில் உள்ளது. அவற்றின் வட்ட வடிவை நாம் கண்டாலும் அவற்றின் நீட்சியை நாம் காணுவதில்லை. எருது நிற்காமல் வண்டியை இழுக்கும் வரை, வண்டிச்சக்கரம் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கும்.
பின் ஒரு நாள் எருது நிற்கிறது. அதற்குக் களைப்பாகி விட்டது. அதன் நுகத்தடியை இறக்கி வைத்து விடுகிறது. பின் எருது தன் வழியே செல்கிறது, வண்டி தன் வழியே செல்கிறது. வண்டிச் சக்கரம் தானாக நின்று விடுகிறது. நீண்ட நாள் அப்படியே விட்டுவிட்டால் அவை மண்ணாக, நீராக, காற்றாக, நெருப்பாகச் சிதைந்து பின் புல்லாக, புழுதியாக மாறி விடுகின்றன.
கன்மம் உண்டாக்கும் மனிதரும் அப்படியே: அவர்கள் ஒரு முடிவுக்கு வருவதே இல்லை. உண்மையைப் பேசும் மனிதரும் முடிவுக்கு வருவதில்லை. தவறான பார்வை கொண்ட மனிதரும் ஒரு முடிவுக்கு வருவதில்லை.
9. A Block of Ice Top
If you place a large block of ice out in the open sun, you can see it deteriorate — in the same way the body ages — bit by bit, bit by bit. After only a few minutes, only a few hours, it will all melt into water. This is called khaya-vaya: ending, deterioration.
The deterioration of fabricated things has been going on for a long time, ever since the world came into being. When we're born, we take on these things as well. We don't discard them anywhere. When we're born, we take on illness, aging, and death. We gather them up at the same time.
Look at the ways it deteriorates, this body of ours. Every part deteriorates. Hair of the head deteriorates; hair of the body deteriorates; fingernails and toenails deteriorate; skin deteriorates. Everything, no matter what, deteriorates in line with its nature.
ஒரு பனிக்கட்டி
ஒரு பனிக்கட்டியை வெய்யிலில் வைத்துக் கவனித்தால் அது கரைந்து சிதைவதைக் காணலாம் - உடல் வயோதிகமடைவதும் அதுபோலத்தான் – மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக. ஒரு சில நிமிடங்களிலேயே, ஒரு சில மணி நேரத்திலேயே பனிக்கட்டி முழுவதும் கரைந்து நீராகி விடுகிறது. இதைப் பாலி மொழியில் காய-வாயா என்பார்கள்: முடிவு, சிதைவு.
கட்டுமானப்பொருட்களின் சிதைவு நீண்ட நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே சிதைவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பிறக்கும் போதே, இந்த இயல்பினை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதனை எங்கும் ஒதுக்கி விடுவதில்லை. பிறக்கும் போதே, பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்கிறோம். அவற்றை ஒரே சமயத்தில் சேர்த்துக் கொள்கிறோம்.
இந்த நமது உடல், அது சிதைவடைவதைக் கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு பாகமும் சிதைகிறது. தலையில் உள்ள முடி சிதைகிறது; உடலில் உள்ள முடி சிதைகிறது; கைவிரல் நகமும், கால்விரல் நகமும் சிதைகின்றன; தோல் சிதைகிறது. எல்லாம், எதுவாயினும் சரி, அதன் இயற்கைக் குணத்திற்கு நிகராகச் சிதைவடைகிறது.
10. Children, Bullets Top
A gun shoots its children — its bullets — outward. We shoot ours inward, into our heart. When they're good, we're shot in the heart. When they're bad, we're shot in the heart. They're an affair of kamma, our children. There are good ones, there are bad ones, but both the good and bad are our children all the same.
When they're born, look at us: The worse off they are, the more we love them. If one of them comes down with polio and gets crippled, that's the one we love the most. When we leave the house we tell the older ones, "Look after your little sister. Look after this one" — because we love her. When we're about to die we tell them, "Look after her. Look after my child." She's not strong, so you love her even more.
குழந்தைகள், துப்பாக்கிக் குண்டுகள்
ஒரு துப்பாக்கி அதன் குழந்தைகளை - அதாவது அதன் குண்டுகளை - வெளியில் சுடுகிறது. நாம் உட்புறமாக, நமது உள்ளத்தை நோக்கிச் சுட்டுக் கொள்கிறோம். அவர்கள் நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டால், நமது உள்ளம் துலைக்கப் படுகிறது. அவர்கள் தீயசெயல்களைச் செய்தாலும், நமது உள்ளம் துலைக்கப் படுகிறது. அவர்கள் - நமது குழந்தைகள் – கன்மச் செயற்பாடு சம்பந்தப் பட்டவர்கள். நல்ல செய்கைகளும் உள்ளன, தீய செய்கைகளும் உள்ளன. ஆனால் எப்படிப்பட்டவையானாலும் நல்லதோ, கெட்டதோ அவை நமது குழந்தைகளே.
அவர்கள் பிறக்கும் போது, நம்மைக் கவனித்துப் பாருங்கள்: அவர்கள் உடல் நிலை மோசமாக மோசமாக, நாம் அதற்கு ஒப்ப அவர்களை மேலும் மேலும் நேசிக்கின்றோம். அவர்களுள் ஒருவருக்குப் போலியோ நோய் வந்து கால் ஊனமாகிப் போனால் அவர்களைத்தான் நாம் அதிகமாக நேசிக்கின்றோம். வீட்டை விட்டு நாம் வெளியே செல்லும் போது மூத்த பிள்ளைகளிடம், "உங்கள் தங்கையைக் கவனித்துக் கொள்ளுங்கள். அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்கிறோம் - ஏனென்றால் அவள் மீது நமக்கு அதிகப் பாசம். நாம் இறக்கும் தருவாயிலும் அவர்களிடம். "அவளை கவனித்துக் கொள்ளுங்கள். என் பிள்ளையை கவனித்துக் கொள்ளுங்கள்.” என்று கூறுகிறோம். அவள் வலிமையற்றவள் எனவே அவள் மீது மேலும் அதிக அன்பு காட்டுகிறோம்.
11. The Tail of the Snake Top
We human beings don't want suffering. We want nothing but pleasure. But actually, pleasure is nothing but subtle suffering. Pain is blatant suffering. To put it in simple terms, suffering and pleasure are like a snake. Its head is suffering; its tail is pleasure. Its head contains poison. Its mouth contains poison. If you get near its head, it'll bite you. If you catch hold of its tail it seems safe, but if you hold onto its tail without letting go, it can turn around and bite you just the same. That's because both the head of the snake and the tail of the snake are on the same snake.
Both happiness and sadness come from the same parents: craving and delusion. That's why there are times when you're happy but still restless and ill at ease — even when you've gotten things you like, such as material gain, status, and praise. When you get these things you're happy, but your mind isn't really at peace because there's still the sneaking suspicion that you'll lose them. You're afraid they'll disappear. This fear is the cause that keeps you from being at peace. Sometimes you actually do lose these things and then you really suffer. This means that even though these things are pleasant, suffering lies fermenting in the pleasure. We're simply not aware of it. Just as when we catch hold of a snake: Even though we catch hold of its tail, if we keep holding on without letting go, it can turn around and bite us.
So the head of the snake and the tail of the snake, evil and goodness: These form a circle that keeps turning around. That's why pleasure and pain, good and bad are not the path.
பாம்பின் வால்
மனிதராகிய நாம் துக்கப்பட விரும்புவதில்லை. இன்பத்தையே விரும்புகிறோம். ஆனால் உண்மையில் இன்பம் ஒரு நுட்பமான துக்கம் தான். துன்பம் வெளிப்படையான துக்கம். எளிதாக விளக்குவதென்றால் துன்பமும், இன்பமும் ஒரு பாம்பைப் போல. அதன் தலை துக்கம்; அதன் வால் இன்பம். அதன் தலையில் நஞ்சு உள்ளது. அதன் வாயில் நஞ்சு உள்ளது. அதன் தலைக்கருகில் சென்றால் அது உங்களைக் கடித்து விடும். அதன் வாலைப் பிடித்துக் கொண்டால் அது பாதுகாப்பானதாகத் தோன்றலாம். ஆனால் அதன் வாலை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தால், அது தன் தலையைத் திருப்பி உங்களை எப்படியும் கடிக்கத்தான் போகிறது. ஏனென்றால் பாம்பின் தலையும் பாம்பின் வாலும் ஒரு பாம்பின் அங்கங்களே.
மகிழ்ச்சியும், சோகமும் ஒரே பெற்றோரிடத்திலிருந்தே தோன்றியவை: வேட்கை மற்றும் அறியாமை. அதனால் தான் நீங்கள் மகிழ்ச்சியான நிலையில் இருந்தாலும் உங்களுக்குப் பிடித்தவை கிடைத்த போதிலும் – பொருள், இலாபம், அந்தஸ்து, புகழ் ஆகியவை கிடைத்த போதிலும், சற்று அலைக்கழிக்கப் பட்டும், வசதியற்றும் இருக்கின்றோம். இவை கிடைக்கும் போது நாம் மகிழ்கிறோம், ஆனாலும் மனம் அமைதியாக இல்லை. ஏனென்றால் நமக்கு ஏற்படும் ஐயம் அவற்றை நாம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் தான். அவை மறைந்து விடுமோ என்று நமக்குப் பயம். இந்தப் பயமே நம்மை அமைதியில்லாமல் வைத்திருக்கிறது. சில சமயம் இவற்றை உண்மையிலேயே தொலைத்து விடுகிறோம். அப்போது உண்மையில் நாம் மிகவும் வருந்துகிறோம். இதன் பொருள் என்ன? இவை நமக்குச் சுகம் தந்தாலும், அந்த இன்பத்திலும் துன்பம் கலந்திருக்கிறது என்பது தான். இதை நாம் கவனிப்பதில்லை. பாம்பைப் பிடித்துக் கொள்வது போல: வாலை பிடித்துக் கொண்டாலும், அதை விடாமல் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்தால் அது தன் உடலைத் திருப்பி நம்மைக் கடித்து விடக் கூடும்.
எனவே பாம்பின் தலையும் வாலும், தீமையும் நன்மையும்: இவை ஒரு வட்ட வடிவாகச் சுற்றிக் கொண்டே வருகின்றன. அதனால் தான் இன்பமும் துன்பமும், நல்லதும் கெட்டதும் மார்க்கம் ஆகாது.
12. The King of Death Top
We live like a chicken who doesn't know what's going on. In the morning it takes its baby chicks out to scratch for food. In the evening, it goes back to sleep in the coop. The next morning it goes out to look for food again. Its owner scatters rice for it to eat every day, but it doesn't know why its owner is feeding it. The chicken and its owner are thinking in very different ways.
The owner is thinking, "How much does the chicken weigh?" The chicken, though, is engrossed in the food. When the owner picks it up to heft its weight, it thinks the owner is showing affection.
We too don't know what's going on: where we come from, how many more years we'll live, where we'll go, who will take us there. We don't know this at all.
The King of Death is like the owner of the chicken. We don't know when he'll catch up with us, for we're engrossed — engrossed in sights, sounds, smells, tastes, tactile sensations, and ideas. We have no sense that we're growing older. We have no sense of enough.
மரணத்தின் அரசன்
என்ன நடக்கிறது என்பதை அறியாத கோழியைப்போல நாம் வாழ்கிறோம். காலையில் அந்தக் கோழி தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு இரை பொறுக்கச் செல்கிறது. மாலையில் தன் கூண்டுக்குள் தூங்குவதற்குச் சென்று விடுகிறது. அடுத்த நாள் காலை மீண்டும் உணவு தேடிச் செல்கிறது. அதன் சொந்தக்காரன் தினந்தோறும் கோழிக்கும் குஞ்சுகளுக்கும் அரிசி தெளிக்கிறான். ஆனால் அந்தக் கோழிக்கு அவன் எதற்காக உணவளிக்கிறான் என்பது புரிவதில்லை. கோழியும் அதன் சொந்தக்காரனும் வேவ்வேறு வழியில் சிந்திக்கின்றனர்.
சொந்தக்காரன் நினைப்பது, "கோழியின் எடை எவ்வளவு இருக்கும்?" கோழியோ உணவருந்துவதில் ஈடுபாடு கொண்டிருக்கிறது. சொந்தக்காரன் எடை கணிப்பதற்கு அதைத் தூக்கும் போது, அந்தக் கோழி அவன் தன்னிடம் அன்பு காட்டுவதாக எண்ணுகிறது.
நமக்கும் என்ன நடைபெறுகிறது என்பது தெரிவதில்லை: எங்கிருந்து வந்தோம், இன்னமும் எவ்வளவு காலம் வாழ்வோம், எங்கு செல்வோம், யார் நம்மை அங்கு அழைத்துச் செல்வார்கள். இவற்றை எல்லாம் நாம் அறிவதில்லை.
மரணத்தின் அரசன் அந்தக் கோழியின் சொந்தக்காரனைப்போல. அவன் நம்மை எப்போது பிடித்துச் செல்வான் என்பது நமக்குத் தெரிவதில்லை, ஏனென்றால் நாம் ஈட்டுபாட்டில் உள்ளோம் - காட்சிகள், சப்தங்கள், சுவைகள், நுகர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு. காலம் செல்லச் செல்ல நாம் வயதாகிக் கொண்டிருப்பதை உணர்வதில்லை. போதும் என்ற எண்ணமே நமக்குத் தோன்றுவதில்லை.
13. The Beginning Is the End Top
When we're born we're already dead, you know. Aging and death are the same thing. It's like a tree. Part of it's the base; part of it's the end at the tip. When there's a base, there's an end. When there's an end, there's a base. When there's no base, there's no end. When there's an end, there has to be a base. An end without a base: That can't be. That's how it is.
So it's kind of amusing. When a person dies, we're sad and upset. We sit and cry, grieving — all kinds of things. That's delusion. It's delusion, you know. When a person dies we sob and cry. That's the way it's been since who knows when. We don't stop to examine this carefully. Actually — and excuse me for saying this — it appears to me that if you're going to cry when a person dies, it'd be better to cry when a person is born. But we have it all backwards. When a child is born, people beam and laugh from happiness. But actually birth is death. Death is birth. The beginning is the end; the end is the beginning.
ஆரம்பமே முடிவு
பிறந்த உடனேயே நாம் இறந்துவிட்டோம் என்பது தெரியுமா? மூப்பும், மரணமும் ஒன்று தான். இது ஒரு மரத்தைப்போல. அதன் ஒரு பகுதி அதன் அடித்தளம்; அதன் மறு பகுதி அதன் நுனி. அடித்தளம் இருக்கும் போது ஒரு நுனியும் இருக்கும். நுனி இருக்கும் போது அடித்தளமும் இருக்கும். அடித்தளம் இல்லையென்றால் நுனியும் இல்லை. நுனி இல்லையென்றால் அடித்தளமும் இல்லை. அடித்தளம் இல்லாமல் நுனி இருக்கமுடியுமா?: அப்படி இருக்க முடியாது. நடைமுறை அப்படித்தான்.
கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஒருவர் இறக்கும் போது நாம் சோகப் படுகிறோம், துக்கப் படுகிறோம். அழுகிறோம், புலம்புகிறோம் - பல விதமான சோகம். அது ஒரு மயக்கம். மயக்கம் தெரியுமா? ஒருவர் இறக்கும் போது நாம் புலம்பி அழுகிறோம். காலங்காலமாக அதுதான் நடைமுறை. நாம் இதனை நின்று கவனமாகப் பிரதிபலிப்பதில்லை. சொல்லப்போனால் – நான் இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும் – எனக்குத் தோன்றுவது, அழ வேண்டுமானால், பிறக்கும் போது அழுவதே சரியானது. ஆனால் நாம் தலைகீழான வழக்கத்தைக் கொண்டுள்ளோம். பிறப்பின் போது மகிழ்ந்து பூரிக்கின்றோம். ஆனால் பிறப்பு என்பது மரணம். இறப்பு என்பது பிறப்பு. ஆரம்பமே முடிவு. முடிவே ஆரம்பம்.
14. Leaves Top
When we sit in a quiet forest when there's no wind, the leaves are still. When the wind blows, the leaves flutter.
The mind is the same sort of thing as leaves. When it makes contact with an object, it vibrates in line with its nature. The less you know of the Dhamma, the more the mind vibrates. When it feels pleasure, it dies with the pleasure. When it feels pain, it dies with the pain. It keeps flowing on in this way.
இலைகள்
காற்று வீசாத அமைதியான வனத்தில் அமர்ந்திருக்கும்போது, இலைகள் அசையாமல் இருக்கின்றன. காற்றடிக்கும் போது இலைகள் அசைந்தாடுகின்றன.
மனம் அந்த இலைகளைப் போன்றதே. மனம் ஒரு பொருளோடு தொடர்பு கொள்ளும் போது, அந்தப் பொருளின் குணத்திற்கு ஏற்ப அது அதிர்கிறது. தம்மத்தைக் குறைவாகத் தெரிந்திருந்தால், மனம் அதிகமாக அதிரும். இன்பத்தை நுகரும் போது இன்பத்தோடு மாண்டு விடுகிறது. துன்பத்தை நுகரும் போது துன்பத்தோடு மாண்டுவிடுகிறது. இப்படித்தான் அதன் ஓட்டம்.
15. Colored Water Top
Our heart, when it's at normalcy, is like rainwater. It's clean water, clear, pure, and normal. If we put green coloring in the water, yellow coloring in the water, the color of the water turns to green, turns to yellow.
The same with our mind: When it meets with an object it likes, it's happy. When it meets with an object it doesn't like, it gets murky and uncomfortable — just like water that turns green when you add green coloring to it, or yellow when you add yellow coloring. It keeps on changing its color.
வண்ண நீர்
நமது உள்ளத்தை அதன் இயல்பான நிலையில், மழைநீரோடு ஒப்பிடலாம். சுத்தமான தண்ணீர், தெளிவான, தூய்மையான, இயல்பான நீர். அதில் பச்சை வண்ணத்தைக் கலந்தால் அல்லது மஞ்சல் வண்ணத்தைக் கலந்தால் அந்த நீர் பச்சை நிறமாகவோ அல்லது மஞ்சல் நிறமாகவோ தோற்றம் கொள்ளும்.
மனமும் அது போலத்தான்: அதற்குப் பிடித்த பொருளைச் சந்தித்தால், அது மகிழ்வுறுகிறது. அதற்குப் பிடிக்காத பொருளைச் சந்தித்தால் அது குழம்பிப்போய் வசதியற்றுப் போய் விடுகிறது - நீரில் பச்சை வண்ணத்தைச் சேர்க்கும் போது அது பச்சை நிறம் கொள்வதைப்போல, அல்லது மஞ்சல் வண்ணத்தைச் சேர்க்கும் போது அது மஞ்சல் நிறம் கொள்வதைப்போல. அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
16. Orphaned Top
Our mind, when there's no one looking after it, is like a child without parents to look after it — an orphaned child, a child with no protector. A person without a protector suffers, and it's the same with the mind. If it's not trained, if its views aren't straightened out into right views, it's put to a lot of difficulties.
அனாதை
நமது மனம், அதை அரவணைக்க யாரும் இல்லையென்றால், பெற்றோர் கவனிப்பு இல்லாத ஒரு குழந்தையோடு அதனை ஒப்பிடலாம் - அனாதைக் குழந்தை. பாதுகாக்க யாரும் இல்லாத குழந்தை. பாதுகாப்பு இல்லாத ஒருவர் துன்புறுகிறார். மனமும் அதுபோலத்தான். அதனைப் பயில்விக்க வில்லையென்றால், அதன் கருத்துக்களைச் சீர்ப்படுத்தவில்லையென்றால், அது பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
17. Why It's Heavy Top
When suffering arises, you have to see that it's suffering, and to see what this suffering arises from. Will you see anything? If we look at things in an ordinary way, there's no suffering. For example, while we're sitting here, we're at ease. But at another moment we want this spittoon, so we lift it up. Now things are different. They're different from when we hadn't yet lifted up the spittoon. When we lift the spittoon, we sense that we're more weighed down. There's a reason for it. Why do we feel weighed down if it's not from having lifted the spittoon? If we don't lift it, there's nothing. If we don't lift it, we feel light. So what's the cause and what's the result? All you have to do is observe just this much and you know. You don't have to go off studying anywhere else. When we grasp onto something, that's the cause of suffering. When we let go there's no suffering.
கனமாக இருப்பது ஏன்
துக்கம் தோன்றும் போது, அதனைத் துக்கம் என அறிந்து, அது எங்கிருந்து தோன்றியது என்பதையும் கவனிக்க வேண்டும். எதையாவது கவனிப்பீர்களா? சாதாரணமான நிலையில் விஷயங்களைக் கவனித்தால், அங்கு துக்கம் இருக்காது. உதாரணமாக இங்கு உட்கார்ந்திருக்கும்போது நாம் அமைதியாக இருக்கின்றோம். ஆனால் மற்றொரு கனத்தில் நமக்கு இந்தக் காளாஞ்சி (எச்சில் உமிழுங் கலம்) தேவைப்படுகிறது. எனவே அதை எடுக்கிறோம். இப்போது விஷயங்கள் மாறுபடுகின்றன. அதனை எடுப்பதற்கு முன் இருந்த நிலையிலிருந்து மாறுபட்டிருக்கிறது. அதை எடுத்தவுடன் நாம் பாரம் சுமந்திருப்பதாக உணர்கிறோம். அதற்கு ஒரு காரணம் உண்டு. காளாஞ்சியை எடுப்பதன்றி நாம் சுமை தாங்கியிருப்பதாக நினைக்க, வேறு காரணம் ஏதேனும் உண்டா? தூக்கவில்லையென்றால் ஒன்றும் இல்லை. தூக்கவில்லையென்றால் இலேசாக இருப்பதாகத் தோன்றுகிறது. சரி பின் காரணி என்ன, விளைவு என்ன? இதை மட்டும் கவனித்தால் உங்களுக்குத் நிலைமை தெரிய வரும். வேறு எங்கும் சென்று எதையும் கற்க வேண்டியதில்லை.
ஒன்றைப் பற்றிக் கொண்டால் அதுவே துக்கத்தின் காரணமாகிறது. அதைக் கைவிட்டால் துக்கமும் இல்லை.
18. A Hypodermic Needle Top
...This is suffering. Ordinary suffering is one thing; suffering above and beyond the ordinary is something else. The regular pains of this bodily fabrication — pains when you're standing, pains when you're sitting down, pains when you're lying down: This sort of thing is ordinary suffering, the regular suffering of these bodily fabrications. The Buddha experienced feelings like these. He felt pleasures like these, pains like these, but he realized that they were ordinary. All these ordinary pleasures and pains he was able to bring to stillness because he understood them. He understood ordinary suffering: It was just the way it was. It wasn't all that strong. Instead, he kept a look-out for visiting suffering, suffering above and beyond the ordinary.
It's like when we're sick and go to the doctor for a shot. The hypodermic needle gets inserted through our skin and into our flesh. It hurts a little, but that's an ordinary thing. No big deal. This is the way it has to be for everybody. The suffering above and beyond the ordinary is the suffering of upadana, or clinging. It's like bathing a hypodermic needle in poison and sticking it into the body. This doesn't hurt in just an ordinary way; this isn't just ordinary suffering. It hurts enough to kill you.
தோலுக்கடியில் மருந்தேற்றும் ஊசி
..இதுவே துக்கம். சாதாரணத் துக்கம் என்பது ஒன்று; அதற்கு மேலும் அப்பாலும் உள்ள துக்கமோ வேறொன்று. பல சேர்க்கைகளின் கட்டுமானமான இந்த உடலில் தோன்றும் சாதாரண வலிகள் - நிற்கும்போது உண்டாகும் வலி, உட்காரும்போது ஏற்படும் வலி, படுத்திருக்கும்போது ஏற்படும் வலி: இவையெல்லாம் சாதாரணத் துக்கம், இந்த உடலின் காரணமாக ஏற்படும் இயல்பான தொந்தரவுகள். புத்தரும் கூட இவற்றை அனுபவித்தார். இது போன்ற இன்பங்களை அனுபவித்தார். இது போன்ற துன்பங்களையும் அனுபவித்தார். இவை எல்லாம் சாதாரணமானவை என்பதை உணர்ந்தார். இவற்றை அவர் அறிந்து கொண்டபடியால் இந்தச் சாதாரண இன்ப துன்பங்களை அவர் அடக்க முடிந்தது. சாதரணத் துன்பங்களை அவர் புரிந்து கொண்டிருந்தார்: இயற்கைக் குணத்தின் படி தோன்றும் செயல்கள் அவை. அப்படி ஒன்றும் அவை வலிவானவை அல்ல. ஆனால் அவர் வெளியிலிருந்து வரும் துக்கத்தைக் கவனிப்பதில் அக்கறை செலுத்தினார். இவைதான் சாதாரண துக்கத்திற்கு மேலும், அப்பாலும் உள்ளவை.
இது நமக்கு நோய் உண்டாகும் போது மருத்துவரைப் பார்க்கச் செல்வதைப்போல. மருந்தேற்றும் ஊசி தோலுக்குள் குத்தப்பட்டுச் சதையில் ஏறுகிறது. கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் அது சாதாரண வலிதான். எல்லோரும் அனுபவிக்கும் வலி இது. இந்தச் சாதாரணத் துன்பத்திற்கு மேலும் அப்பாலும் உள்ளது உபாதானத் துக்கம் அல்லது பற்று. இது ஊசியில் மருந்தை ஏற்றாமல் விஷத்தை ஏற்றி உடலில் குத்துவது போல. இது சாதாரண வலியைப் போலத் தோன்றுவதில்லை. இந்தத் துக்கம் உங்களைக் கொன்றுவிடக் கூடிய வலியை ஏற்படுத்துகிறது.
* * *