மஹா பரிநிப்பாண சூத்திரம் 4
தாய்லாந்து Wat Lokaya Sutha, Ayutthaya, Thailand படம் ஆதாரம்
யானையின் பார்வை
The Elephant's Look
4.1. ஒரு நாள் அதி காலை பகவர் தம் சீவர ஆடைகளைச் சரி செய்து, மேல் ஆடையையும், பிச்சாபாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வைசாலிக்கு உணவேற்கச் சென்றார். வைசாலியில் சஞ்சரித்துப் பெற்ற உணவை உண்ட பின் திரும்ப அவர் இருப்பிடம் வந்து வைசாலியை ஒரு யானையின் பார்வையில் [1] பார்த்தவாறு, அவர் போ. ஆனந்தரிடம்: "ஆனந்தா, ததாகதர் வைசாலியைப் பார்ப்பது இதுவே கடைசி தடவை. வா, ஆனந்தா, நாம் பாந்தா (Bhaṇḍa) கிராமம் செல்வோம்.
"அப்படியே செய்வோம், அண்ணலே,"
என்று பகவருக்குப் பதிலுரைத்தார் ஆனந்தர்.
பின் பகவர் ஒரு பெரும் துறவி சங்கத்தாருடன் பாந்தா கிராமத்திற்குச் சென்றார். அங்கு பகவர் பாந்தா கிராமத்திற்கு அருகில் தங்கினார்.
4.2. அங்கு அவர் துறவிகளுக்குப் போதித்தார்: "நான்கு இயல்புகளுக்கு விழிப்புறாமையால், அவற்றைத் தெளிவாக்கிக் கொள்ளாமையால் நீங்களும் நானும் (பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற) சம்சார சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றிச் சுற்றி வந்துள்ளோம், எந்த நான்கு?
மேன்மையான ஒழுக்கத்திற்கு (சீலம்) விழிப்புறாமையால், அதனைத் தெளிவாக்கிக் கொள்ளாமையால் நீங்களும், நானும் சம்சார சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றி வந்துள்ளோம். மேன்மையான மன ஒருமைப்பாட்டிற்கு (சமாதி) விழிப்புறாமையால், அதனைத் தெளிவாக்கிக் கொள்ளாமையால், நீங்களும், நானும் சம்சார சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றி வந்துள்ளோம். மேன்மையான விவேகத்திற்கு (பஞ்ஞா, மெய்யறிவு) விழிப்புறாமையால், அதனைத் தெளிவாக்கிக் கொள்ளாமையால் நீங்களும், நானும் சம்சார சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றி வந்துள்ளோம். மேன்மையான விடுதலைக்கு [2] விழிப்புறாமையால், அதனைத் தெளிவாக்கிக் கொள்ளாமையால் நீங்களும், நானும் சம்சார சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றி வந்துள்ளோம்.
“It’s through not awakening to or penetrating noble virtue that we have transmigrated and wandered on for such a long time, you and I. It’s through not awakening to or penetrating noble concentration… It’s through not awakening to or penetrating noble discernment… It’s through not awakening to or penetrating noble release that we have transmigrated and wandered on for such a long time, you and I.
"(ஆனால் இப்போது) இந்த மேன்மையான ஒழுக்கத்திற்கு விழிப்புற்று, அதனைத் தெளிவாக்கிக் கொண்டுள்ளோம். மேன்மையான மனஒருமைப் பாட்டிற்கு விழிப்புற்று, அதனைத் தெளிவாக்கிக் கொண்டுள்ளோம். மேன்மையான விவேகத்திற்கு விழிப்புற்று, அதனைத் தெளிவாக்கிக் கொண்டுள்ளோம். மேன்மையான வீடுபேற்றுக்கு விழிப்புற்று, அதனைத் தெளிவாக்கிக் கொண்டுள்ளோம். பவம் உண்டாக்கும் வேட்கையை நசுக்கி விட்டோம். பற்றினை முடித்து விட்டோம். இனி, மேலும் பவம் தோன்றப் போவதில்லை.
“(But now,) this noble virtue has been awakened to and penetrated, noble concentration has been awakened to and penetrated, noble discernment has been awakened to and penetrated, noble release has been awakened to and penetrated. Craving for becoming has been crushed, the guide to becoming [i.e., clinging] is ended. There now is no further-becoming.”
4.3. இப்படிப் பகவர் கூறினார். பிறகு, ஆசிரியர், ததாகதர் மேலும் கூறியது:
ஒழுக்கம், மனஒருமைப்பாடு, விவேகம்,
மற்றும் ஈடில்லா வீடுபேறு:
மதிப்புக்குரியவரான கோதமர்
இவற்றுக்கு விழிப்படைந்து விட்டார்.
நேரடியாக அறிந்த அந்த விழிப்புற்றவர்,
மற்ற துறவிகளுக்கும் அறிவிக்கிறார்.
துக்கத்தை முடித்த ஆசான்,
ஞானக்கண் உள்ளவர்,
முழுமையாக வீடு பேறு அடைந்தவர்.
That is what the Blessed One said. Having said it, the Teacher, the One Well-Gone, said further:
Virtue, concentration, discernment,
And unexcelled release:
These qualities have been awakened to
By Gotama, the prestigious.
Directly knowing this, he shows it to the monks
The awakened one,
The teacher who has made an ending of stress,
The one with eyes,
Totally unbound.
4.4. பந்தா கிராமத்தில் பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டிற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."
4.5. பகவர் பாந்தா கிராமத்தில் விரும்பிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: 'வா, ஆனந்தா, நாம் ஹத்தி (Hatthi) கிராமம்...., அம்ப (Amba) கிராமம்...., ஜம்பு (Jambu) கிராமம்.....செல்வோம்.' அந்த ஒவ்வொரு இடங்களிலும் பகவர் அதே போதனையைப் பிக்குகளுக்கு வழங்கினார். பின் அவர், “வா, ஆனந்தா, நாம் போகநகருக்குச் (Bhoganagara) செல்வோம்." என்றார்.
4.6. "அப்படியே ஆகட்டும், அண்ணலே."
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் போகநகர் சென்றார்.
நான்கு சிறந்த பிரமாணங்கள்
The Four Great References
4.7. போகநகர் சென்ற பகவர், ஆனந்தர் ஆலயத்தில் தங்கினார்.
அங்கு பிக்குகளுக்குப் பகவர் போதித்தார், "துறவிகளே, நான் உங்களுக்க நான்கு சிறந்த பிரமாணங்களைப் (standards) பற்றிப் போதிக்கப் போகிறேன். கவனமாகக் கேளுங்கள்."
"அப்படியே செய்கிறோம், அண்ணலே," என்று துறவிகள் பதிலுரைத்தனர்.
4.8. பகவர் கூறினார், "துறவி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: 'பகவர் முன்னிலையில் அவர் இவ்வாறு கூறினார், அவர் முன்னிலையில் இருக்கும் போது இதனை நான் கேட்டறிந்தேன்: இதுவே தம்மம், இதுவே விநயம், இதுவே ஆசிரியரின் போதனை.'
இவ்வாறு அவர் சொன்னதை அங்கீகரிக்கவும் வேண்டாம். அதேசமயம் ஏளனம் செய்யவும் வேண்டாம். அங்கீகரிக்காமலும், ஏளனம் செய்யாமலும் அவர் வார்த்தைகளைக் கவனமாகக் கருதி, சூத்திரங்களுடனும், விநயத்தோடும் ஒப்பிடுங்கள். இவ்வாறு செய்கையில் அவர் வார்த்தைகள் சூத்திரங்களுடனும், விநயத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவை அவற்றுக்கு நிகராக இல்லாததாக இருந்தால் நீங்கள் இவ்வாறு முடிவெடுக்கலாம்: 'இது பகவரின் வார்த்தைகளே அல்ல; இந்தத் துறவி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்' - பின் அவர் வார்த்தைகளை நிராகரித்து விடுங்கள். ஆனால் அவர் வார்த்தைகள் சூத்திரங்களுடனும், விநயத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை அவற்றிற்கு நிகராக இருந்தால் நீங்கள் இவ்வாறு முடிவெடுக்கலாம்: 'இது பகவரின் வார்த்தைள் தான்; இந்தத் துறவி சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்.' "இதுவே முதல் பிரமாணம்.
The Blessed One said, “There is the case where a monk says this: ‘Face-to-face with the Blessed One have I heard this, face-to-face have I received this: This is the Dhamma, this is the Vinaya, this is the Teacher’s instruction.’ His statement is neither to be approved nor scorned. Without approval or scorn, take careful note of his words and make them stand against the suttas and tally them against the Vinaya. If, on making them stand against the suttas and tallying them against the Vinaya, you find that they don’t stand with the suttas or tally with the Vinaya, you may conclude: ‘This is not the word of the Blessed One; this monk has misunderstood it’ and you should reject it. But if, on making them stand against the suttas and tallying them against the Vinaya, you find that they stand with the suttas and tally with the Vinaya, you may conclude: ‘This is the word of the Blessed One; this monk has understood it rightly.’
4.9. "அடுத்ததாகத் துறவி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: 'அங்கு உள்ள ஒரு விகாரையில் புகழ் பெற்ற பெரியார் ஒருவரின் தலைமையில் ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கத்தில் நான் இருக்கும்போது நான் இவ்வாறு கேள்வியுற்றேன். அந்தச் சங்கத்தில் நான் இருக்கும் போது இதனை நான் கேட்டறிந்தேன்: இதுவே தம்மம், இதுவே விநயம், இதுவே ஆசிரியரின் போதனை'... (மேல் கூறியது போல)... இதுவே இரண்டாம் பிரமாணம்.
“Then there is the case where a monk says this: ‘In a monastery over there dwells a Saṅgha with well-known leading elders. Face-to-face with that Saṅgha I have heard this, face-to-face have I received this: This is the Dhamma, this is the Vinaya, this is the Teacher’s instruction.’ …
4.10. "அடுத்ததாகத் துறவி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: 'அங்கு உள்ள ஒரு விகாரையில் பல நன்கு கற்றறிந்த மூத்த துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் மரபு தெரிந்தவர்கள். அவர்கள் தம்மத்தை, விநயத்தை, மாதிகாவினை [3] மனனம் செய்துள்ளனர். அந்தப் பெரியவர்களின் முன்னிலையில் நான் இவ்வாறு கேள்வியுற்றேன். அந்தப் பெரியவர்களின் முன்னிலையில் இதனை நான் கேட்டறிந்தேன்: 'இதுவே தம்மம், இதுவே விநயம், இதுவே ஆசிரியரின் போதனை.'... (மேல் கூறியது போல)... இதுவே மூன்றாம் பிரமாணம்.
“Then there is the case where a monk says this: ‘In a monastery over there dwell many learned elder monks who know the tradition, who have memorized the Dhamma, the Vinaya, and the Mātikā.Face-to-face with those elders I have heard this, face-to-face have I received this: This is the Dhamma, this is the Vinaya, this is the Teacher’s instruction.’…
4.11. "அடுத்ததாகத் துறவி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: 'அங்கு உள்ள ஒரு விகாரையில் ஒரு மூத்த துறவி இருக்கிறார். அவர் மரபு தெரிந்தவர். அவர் தம்மத்தை, விநயத்தை, மாதிகாவினை மனனம் செய்துள்ளார். அந்தப் பெரியவரின் முன்னிலையில் நான் இவ்வாறு கேள்வியுற்றேன். அந்தப் பெரியவர் முன் இருக்கும் போது இதனை நான் கேட்டறிந்தேன்: இதுவே தம்மம், இதுவே விநயம், இதுவே ஆசிரியரின் போதனை.'
இவ்வாறு அவர் சொன்னதை அங்கீகரிக்கவும் வேண்டாம், அதே சமயம் ஏளனம் செய்யவும் வேண்டாம். அங்கீகரிக்காமலும், ஏளனம் செய்யாமலும் அவர் வார்த்தைகளைக் கவனமாகக் கருதி சூத்திரங்களுடனும், விநயத்தோடும் ஒப்பிடுங்கள். இவ்வாறு செய்கையில் அவர் வார்த்தைகள் சூத்திரங்களுடனும், விநயத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவை அவற்றுக்கு நிகராக இல்லாவிட்டால் நீங்கள் இவ்வாறு முடிவெடுக்கலாம்: 'இது பகவரின் வார்த்தைகளே அல்ல; இந்தத் துறவி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.' - பின் அவர் வார்த்தைகளை நிராகரித்து விடுங்கள். ஆனால் அவர் வார்த்தைகள் சூத்திரங்களுடனும், விநயத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவை அவற்றுக்கு நிகராக இருந்தால், நீங்கள் இவ்வாறு முடிவெடுக்கலாம்: 'இது பகவரின் வார்த்தைகள் தான்; இந்தத் துறவி சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்.' இதுவே நான்காம் பிரமாணம்.
“Then there is the case where a monk says this: ‘In a monastery over there dwells an elder monk who knows the tradition, who has memorized the Dhamma, the Vinaya, and the Mātikā. Face-to-face with that elder I have heard this, face-to-face have I received this: This is the Dhamma, this is the Vinaya, this is the Teacher’s instruction.’ His statement is neither to be approved nor scorned. Without approval or scorn, take careful note of his words and make them stand against the suttas and tally them against the Vinaya. If, on making them stand against the suttas and tallying them against the Vinaya, you find that they don’t stand with the suttas or tally with the Vinaya, you may conclude: ‘This is not the word of the Blessed One; this monk has misunderstood it’ and you should reject it. But if, on making them stand against the suttas and tallying them against the Vinaya, you find that they stand with the suttas and tally with the Vinaya, you may conclude: ‘This is the word of the Blessed One; this monk has understood it rightly.’
துறவிகளே, இந்த நான்கு சிறந்த பிரமாணங்களை நினைவில் கொள்ளுங்கள்.
4.12. போகநகர ஆனந்தர் ஆலயத்தில் பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப் பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப் பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப் பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டுக்குப் பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."
4.13. பகவர் போகநகர ஆனந்தர் ஆலயத்தில் விரும்பிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் பாவை (Pāvā) செல்வோம்." என்றார்.
"அப்படியே ஆகட்டும், அண்ணலே."
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் பாவை சென்று அங்கு சுண்டர் என்ற தட்டாரின் மாந்தோப்பில் தங்கினார்.
பகவரின் கடைசி உணவு
The Buddha's Last Meal
4.14. பின் சுண்டர் என்ற தட்டார் இவ்வாறு தெரிய வந்தார்: "புத்தர் பாவை வந்திருப்ப தாகவும் தற்போது பாவை அருகில் உள்ள தனது மாந்தோப்பில் தங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர்." எனவே அவர் பகவரை சந்திக்கச் சென்று, பகவரை அணுகி அவருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொண்டு ஒரு புறமாக அமர்ந்தார். பகவர் அவருக்கு தம்ம போதனை நிகழ்த்தி அவரை ஈர்த்து, விழித்தெழச் செய்து, ஊக்குவித்தார்.
4.15. பின் பகவரால் கற்பிக்கப்பட்டு, ஈர்த்து, விழித்தெழச்செய்து, ஊக்குவிக்கப்பட்ட சுண்டர், பகவரிடம்: "அண்ணலே! பகவர் எனது அழைப்பை ஏற்றுத் தாங்களும் பிக்கு சங்கத்தாரும் நாளைய உணவு தானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்." பகவர் மௌனமாக இருந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
4.16. பகவர் அழைப்பை ஏற்றுக் கொண்டார் என்பது உறுதியானதும் சுண்டர் தனது இருக்கையிலிருந்து எழுந்து, மரியாதையுடன் வணங்கி, அவரை வலம் வந்து அங்கிருந்து புறப்பட்டார்.
4.17. பின் பல அருமையான பொதுவாக உண்ணப்படும் உணவு வகைகளையும், எப்போதாவது உண்ணும் உணவு வகைகளையும் - ஏராளமான மென்மையான பன்றி (siikara-maddava pig-delicacy) உட்பட [4] - தயார் செய்த பின் இரவு முடிந்ததும் பகவரிடம் சென்று: "அண்ணலே, உணவு தயாராகி விட்டது", என்று கூறினார்.
4.18. பின் பகவர் அதிகாலை நேரத்தில், தனது கீழாடையைச் சரிசெய்து, பிச்சா பாத்திரத்தையும் மேலுடையையும் எடுத்துக் கொண்டு சங்கத்தினருடன் சுண்டரின் வீட்டுக்குச் சென்று அவருக்கென்று அமைக்கப் பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது பகவர் சுண்டரிடம், "சுண்டா, தயாரிக்கப்பட்டிருக்கும் மென்மையான பன்றிக் கறியை எனக்குப் பரிமாறிவிட்டு, துறவிகளுக்கு மற்ற உணவுவகைகளைப் பரிமாறு," என்றார்.
"அப்படியே செய்கிறேன், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்த சுண்டர், பகவருக்குப் பன்றிக் கறியைப் பரிமாறிவிட்டு, துறவி சங்கத்திற்குப் பொதுவாக உண்ணப்படும் உணவுவகைகளையும் எப்போதாவது உண்ணும் உணவு வகைகளையும் பரிமாறினார்.
4.19. பின் பகவர் அவரிடம், "சுண்டா, மீதமுள்ள பன்றிக் கறியை ஒரு குழியில் புதைத்து விடு. தேவர்கள், மாரர்கள், பிரமர்கள் வாழும் உலகில் அல்லது துறவிகள், பிராமணர்கள், தெய்வங்கள், ஆவிகள், மனிதர்கள் வாழும் இந்த உலகில் - ததாகதரைத்தவிர - இதைச் சாப்பிட்டபின் அவர்களுக்கு நல்ல விளைவு உண்டாகுமென எனக்குத் தெரியவில்லை."
"அப்படியே செய்கிறேன், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்த சுண்டர், மீதமுள்ள பன்றிக் கறியை ஒரு குழியில் புதைத்து விட்டு பகவரிடம் திரும்பச் சென்று அவருக்கு வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது பகவர் அவருக்குத் தம்ம போதனை நிகழ்த்தி அவரை ஈர்த்து, விழித்தெழச்செய்து, ஊக்குவித்தார். பின்னர் அவர் இருக்கையிலிருந்து எழுந்து அங்கிருந்து புறப்பட்டார்.
4.20. பின் பகவரின் உடலில் - சுண்டரின் உணவை உண்டபின் - ஒரு பெரும் பிணி உண்டானது. இரத்த பேதியுடன் மிக்க வலியையும், மரண வேதனையையும் பகவர் அனுபவித்தார். ஆனாலும் பகவர் அதனை - கடைப்பிடியோடு, விழிப்புடன் இருந்து - அதனால் பாதிக்கப் படாமல் (மனத்தளவில்) குறை கூறாமல் பொறுத்துக் கொண்டார்.
பின்னர் போ. ஆனந்தரிடம், "ஆனந்தா, நாம் குசிநகரம் (Kusinārā) செல்வோம்," என்றார்."அப்படியே ஆகட்டும் அண்ணலே," என்று போ ஆனந்தர் பதிலுரைத்தார்.
சுண்டர் என்ற தட்டார் தந்த உணவு தானத்தை உண்ட பின்
பகவருக்குக் கடுமையான மரண மெய்தத்தக்க
நோய் உட்கொண்டது என்று கேள்வியுற்றேன்.
மென்மையான பன்றிக் கறியை உண்ட பின்
கடுமையான நோய் உண்டானது ஆசானுக்கு.
அது ஓய்ந்ததும், பகவர்
"குசிநகருக்கு நான் செல்வேன்," என்றார்.
I have heard that,
On eating Cunda the silversmith’s meal,
The enlightened one was touched by illness—
Fierce, deadly.
After he had eaten the pig-delicacy,
A fierce sickness arose in the Teacher.
After being purged of it,
The Blessed One said,
“To the city of Kusinārā
I will go.”
கலங்கல் நீர் தெளிவானது
The Clearing of the Waters
4.21. பின் பகவர், சாலையை விட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று, போ. ஆனந்தரிடம்: "ஆனந்தா, என்னுடைய வெளி ஆடையை நான்காக மடி. எனக்குக் களைப்பாயிருக்கிறது. உட்கார வேண்டும்," என்றார்.
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்த ஆனந்தர் மேலாடையை நான்காக மடித்தார். பகவர் மடிக்கப்பட்டிருந்த ஆடையின் மீது அமர்ந்தார்.
4.22. பின் அவர் போ. ஆனந்தரிடம், "ஆனந்தா, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. எனக்குத் தாகமாக இருக்கிறது. நான் தண்ணீர் குடிக்க வேண்டும்."
இதைக் கேட்டவுடன், போ ஆனந்தர் பகவரிடம், "அண்ணலே, இப்போது தான் இந்த ஆற்றை ஐநூறு வண்டிகள் கடந்து சென்றுள்ளன. நீர் குறைவாயுள்ள இந்த ஆற்றில் - வண்டிச் சக்கரங்கள் கடந்து சென்றமையால் தெளிவில்லாத கலங்கல் நீர் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் ககுத்த ஆறு (Kakudha River) வெகு தூரமில்லை. அதில் சுத்தமான நீர், தூய்மையான நீர், குளுமையான, தெளிவான நீர் உள்ளது. ஆற்றங்கரை ஓரத்திலும் களைப்பார இடமுள்ளது. அது புத்துணர்ச்சியூட்டும். அங்கு பகவர் குடிக்கத் தகுந்த நீரை அருந்திக் கால்களையும் நீரில் கழுவிக் குளுமையாக்கிக் கொள்ளலாம்."
4.23. ஆனால் இரண்டாம் முறை பகவர் ஆனந்தரிடம், "ஆனந்தா, எனக்குச் சற்றுத் தண்ணீர் கொண்டுவா. எனக்குத் தாகமாக இருக்கிறது. நான் தண்ணீர் குடிக்க வேண்டும்," என்றார்.
இரண்டாம் முறையும் போ ஆனந்தர் பகவரிடம், "அண்ணலே, இப்போது தான் ஐநூறு வண்டிகள் ஆற்றைக் கடந்துசென்றுள்ளன. நீர் குறைவாயுள்ள இந்த ஆற்றில் - வண்டிச் சக்கரங்கள் கடந்து சென்றமையால் தெளிவில்லாத கலங்கல் நீர் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் ககுத்த ஆறு வெகு தூரமில்லை. அதில் சுத்தமான நீர், தூய்மையான நீர், குளுமையான, தெளிவான நீர் உள்ளது. ஆற்றங்கரை ஓரத்திலும் களைப்பார இடமுள்ளது. அது புத்துணர்ச்சியூட்டும். அங்கு பகவர் குடிக்கத் தகுந்த நீரை அருந்திக் கால்களையும் நீரில் குளுமையாக்கிக் கொள்ளலாம்."
4.24. மூன்றாம் முறை பகவர் ஆனந்தரிடம், "ஆனந்தா, எனக்குச் சற்றுத் தண்ணீர் கொண்டுவா. எனக்குத் தாகமாக இருக்கிறது. நான் தண்ணீர் குடிக்க வேண்டும்," என்றார்.
"அப்படியே செய்கிறேன், அண்ணலே," என்று பகவரிடம் கூறிய போ. ஆனந்தர் - ஒரு பாத்திரத்துடன் - ஆற்றுக்குச் சென்றார். சேறும் மண்ணும் கலந்து ஓடிக் கொண்டிருந்த நீர் அவர் அருகில் சென்றதும் தெளிவாகவும், தூய்மையாகவும், கலங்கலில்லாமலும் ஓடுவதைக் கண்டார்.
4.25. இந்த எண்ணம் அவருக்குத் தோன்றியது, "என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்! - ததாகதரின் பெரும் சக்தியும் பெரும் வலிமையும்! - நீர் குறைவாயுள்ள இந்த ஆற்றில் வண்டிச் சக்கரங்கள் மண்ணைக் கலக்கியதால் சேறும், மண்ணும் கலந்து ஓடிக்கொண்டிருந்த நீர் நான் அருகில் சென்றதும் தெளிவாகவும், தூய்மையாகவும் கலங்கலில்லாமலும் ஓடுகிறதே!" பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு அவர் பகவரிடம் சென்று, பின் அவரிடம், "என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்! - ததாகதரின் பெரும் சக்தியும், பெரும் வலிமையும்! - நீர் குறைவாயுள்ள இந்த ஆற்றில் வண்டிச் சக்கரங்கள் மண்ணைக் கலக்கியதால் சேறும் மண்ணும் கலந்து ஓடிக்கொண்டிருந்த நீர், நான் அருகில் சென்றதும் தெளிவாகவும், தூய்மையாகவும், கலங்கலில்லாமலும் ஓடியது! இந்த நீரைக் குடியுங்கள், பகவரே! நீரைக் குடியுங்கள், ததாகதரே!"
பின் பகவர் அந்த நீரைக் குடித்தார். [5]
புக்குஸ என்ற மள்ளர்
Pukkusa the Malla
4.26. அச்சமயம் ஆலார காலாமரின் (Āḷāra Kālāma) [6] சீடரான புக்குஸ மள்ளபுத்திரர் (Pukkusa Mallaputta) குசிநகரத்திலிருந்து பாவைக்குச் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவர் பகவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரை அணுகினார். அணுகி அவருக்கு மரியாதை செலுத்தி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது அவர் பகவரிடம், "அதிசயம் அண்ணலே, ஆச்சரியமாக உள்ளது: மெய்ஞ்ஞானம் அடைந்தோர் நிலையான அமைதியில் வாழ்வதைக் காண!
4.27. ஒரு முறை ஆலார காலாமர் பயணம் மேற்கொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் அந்த நாளைக் கழிப்பதற்கென அமர்ந்தார். அப்போது ஐநூறு வண்டிகள் அவர் அருகிலே சென்றன. அந்த நூற்றுக்கணக்கான வண்டிகளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவன் ஆலார காலாமரை அணுகி, அவரிடம், 'போற்றுதற்குரிய ஐயா, இப்போது ஐநூறு வண்டிகள் இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' என்று கேட்டார்.
'இல்லை நண்பரே, நான் காணவில்லை.'
'அவற்றின் சப்தத்தைக் கேட்டீர்களா?'
'இல்லை, நண்பரே, நான் கேட்கவில்லை.'
'நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தீரா?'
'இல்லை நண்பரே, நான் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.'
'நீங்கள் உணர்வோடு இருந்தீர்களா?'
'ஆம், நண்பரே.'
''போற்றுதற்குரிய ஐயா, உணர்வோடு இருந்தும், விழிப்போடு இருந்தும், ஐநூறு வண்டிகள் சென்றும் அவற்றைக் காணவும் இல்லை, கேட்கவும் இல்லை என்கின்றீரே! ஆனாலும் உங்கள் வெளியாடை அவற்றின் புழுதியில் மூடப்பட்டுள்ளனவே!'
'ஆம், நண்பரே.'
அந்த மனிதனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது, 'என்ன அதிசயம்! என்ன ஆச்சரியம்! மெய்ஞ்ஞானம் அடைந்தோர் நிலையான அமைதியில் வாழ்வதைக் காண - உணர்வோடு இருந்தும், விழிப்போடு (தூங்காமல்) இருந்தும், ஐநூறு வண்டிகள் சென்றும் அவர் அவற்றைக் காணவும் இல்லை, கேட்கவும் இல்லை! [7]
அவர் ஆலார காலாமரின் மீது இருந்த ஆழ்ந்த நம்பிக்கையைத் தெரிவித்த பின் (அவரைப் புகழ்ந்து விட்டு), புறப்பட்டார்."
4.28. "என்ன நினைக்கின்றாய், புக்குஸ? இந்த இரண்டில் எது மிகக் கடினமான விஷயம்? எதனை வளர்ப்பது கடினம்? ஐநூறு வண்டிகள் அருகிலேயே செல்லும் போது அவற்றைக் காணாமலும், கேட்காமலும் இருப்பதா; அல்லது மழைத் தெய்வம் மழையைப் பொழியும் போது, மழைத் தெய்வம் கொட்டும் போது, மின்னல் அடித்துக் கொண்டிருக்க, இடி (காற்றை) பிளந்து கொண்டிருக்க ஒருவர் அவற்றைக் காணாமலும், கேட்காமலும் இருப்பதா? "
4.29. "அண்ணலே, ஐநூறு வண்டிகள் என்ன - 600 வண்டிகள், அல்லது 700 வண்டிகள், அல்லது, 800 வண்டிகள், அல்லது, 900 வண்டிகள், அல்லது 1000 வண்டிகள், அல்லது 100,000 வண்டிகள் கூட மழைத் தெய்வத்திற்கு ஒப்பாகாது. மழைத் தெய்வம் மழையைப் பொழியும் போது, மழைத் தெய்வம் கொட்டும் போது, மின்னல் அடித்துக் கொண்டிருக்க, இடி (காற்றை) பிளந்து கொண்டிருக்க ஒருவர் அவற்றைக் காணாமலும் கேட்காமலும் இருப்பது தான் கடினமான விஷயம். அதனை வளர்ப்பது தான் கடினம்."
4.30. "ஒரு சமயம் புக்குஸ, நான் ஆதுமாவில் (Ātumā) தானியங்கள் தூற்றும் களஞ்சியத்தில் தங்கியிருந்தேன். அப்போது மழைத் தெய்வம் மழையைப் பொழியும் போது, மழைத் தெய்வம் கொட்டும் போது, மின்னல் அடித்துக் கொண்டிருக்க, இடி (காற்றை) பிளந்து கொண்டிருக்க அந்தக் களஞ்சியத்தின் அருகில், இரு விவசாயிகள் - அண்ணன் தம்பி மார்கள் - கொல்லப்பட்டனர். அவர்களுடன் நான்கு எருதுகளும் கொல்லப் பட்டன.
"பின் ஆதுமாவிலிருந்து அந்த இரு விவசாயிகள் - அண்ணன் தம்பி மார்கள், நான்கு எருதுகளுடன் கொல்லப்பட்ட இடத்திற்கு ஒரு பெருந்திரளான மக்கள் கூட்டம் சென்றது.
4.31. அப்போது அந்தக் களஞ்சியத்தின் வெளியே வந்த நான் அதன் கதவருகே நடந்த வண்ணம் தியானம் செய்து கொண்டிருந்தேன். அந்தப் பெருங்கூட்டதிலிருந்து வந்த ஒருவன் என்னிடம் வந்து, பின் வணங்கி ஒரு புறமாக நின்றான்.
4.32. அவ்வாறு நிற்கையில் நான் அவனிடம், 'நண்பரே, இங்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்துள்ளதற்கு என்ன காரணம்?' என்று வினவினேன்.
"இப்போது தான், அண்ணலே - மழைத் தெய்வம் மழையைப் பொழியும் போது, மழைத் தெய்வம் கொட்டும் போது, மின்னல் அடித்துக் கொண்டிருக்க, இடி (காற்றை) பிளந்து கொண்டிருக்க - இரு விவசாயிகள் - அண்ணன் தம்பி மார்கள் - கொல்லப்பட்டனர். அவர்களுடன் நான்கு எருதுகளும் கொல்லப்பட்டன. அதன் காரணமாகவே இந்தப் பெருங்கூட்டம் சேர்ந்துள்ளது. ஆனால் நீங்கள் அண்ணலே: நீங்கள் எங்கு இருந்தீர்கள்?'
"'நான் இங்கேயே தான் இருந்தேன், நண்பரே.'
"'ஆனால் நீங்கள் எதையும் காணவில்லயா?'
"'இல்லை நண்பரே, நான் காணவில்லை."
"'ஆனால் நீங்கள் சப்தத்தைக் கேட்க வில்லையா?'
"'இல்லை நண்பரே, நான் கேட்கவில்லை."
"'ஆனால் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்களா?'
"'இல்லை நண்பரே, நான் தூங்கவில்லை."
"'ஆனால் நீங்கள் உணர்வோடு இருந்தீர்களா?'
"' ஆம் நண்பரே, நான் உணர்வோடு தான் இருந்தேன்."
அப்போது அண்ணலே, உணர்வோடும், விழிப்போடும் இருந்தும், மழைத் தெய்வம் மழையைப் பொழியும் போது, மழைத் தெய்வம் கொட்டும் போது, மின்னல் அடித்துக் கொண்டிருக்க, இடி (காற்றை) பிளந்து கொண்டிருக்க நீங்கள் எதையும் காணவும் இல்லை, எதையும் கேட்கவும் இல்லையா?
"'ஆம் நண்பரே.'
4.33 "பின் புக்குஸ, அந்த மனிதனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது, 'என்ன அதிசயம்! ஆச்சரியமாக உள்ளது: மெய்ஞ்ஞானம் அடைந்தோர் நிலையான அமைதியில் வாழ்வதைக் காண - மழைத் தெய்வம் மழையைப் பொழியும் போது, மழைத் தெய்வம் கொட்டும் போது, மின்னல் அடித்துக் கொண்டிருக்க, இடி (காற்றை) பிளந்து கொண்டிருக்க அவர் எதையும் காணவும் இல்லை, எதையும் கேட்கவும் இல்லை!' அவர் என்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு என்னை வலம் வந்து பின் புறப்பட்டார்."
4.34. இதைக் கேட்டபின் புக்குஸ மள்ளபுத்திரர் பகவரிடம், "ஆலார காலாமரின் மீது எனக்கிருந்த நம்பிக்கை பெரும் காற்றடிக்கும் போது தூற்றுவது போலப் பறந்து விட்டது. வேகமாக ஓடும் ஆற்றில் அடித்துச் செல்வதுபோல அடித்துச் செல்லப்பட்டது. அருமை அண்ணலே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, பகவரும் - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தம்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். பகவரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தம்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். என்னைப் பகவரின் இல்லற சீடனாக நினைவில் கொள்வாராக. இன்றிலிருந்து வாழ்நாளைக்கும் பகவரிடம் அடைக்கலம் சென்றவனாகப் பகவர் நினைவில் கொள்வாராக.'
4.35. பின் புக்குஸ மள்ளபுத்திரர் அருகில் இருந்த ஒருவனிடம், "இங்கு வா. எனக்கு உடனடியாக அணியக்கூடிய, தங்க நிறம் கொண்ட ஆடைகள் இரண்டைக் கொண்டு வா," என்றார்.
"அப்படியே ஆகட்டும், ஐயா" என்று புக்குஸ மள்ளபுத்திரருக்குப் பதிலளித்த அவன் உடனடியாக அணிவதற்குத் தங்க நிறம் கொண்ட ஆடைகளைக் கொண்டு வந்தான். பின் புக்குஸ மள்ளபுத்திரர் அந்த உடைகளைப் பகவருக்கு காணிக்கையாகத் தந்து, "பகவர் இந்த உடனடியாக அணியக் கூடிய தங்க நிறம் கொண்ட ஆடைகளை அன்போடு ஏற்றுக் கொள்வீராக."
"நல்லது புக்குஸ. எனக்கு ஒன்றையும், ஆனந்தருக்கு ஒன்றையும் நீயே கட்டிவிடு."
"அப்படியே ஆகட்டும், அண்ணலே" என்று புக்குஸ மள்ளபுத்திரர் பகவருக்குப் பதிலளித்து, பகவருக்கு ஒரு ஆடையையும், ஆனந்தருக்கு ஒரு ஆடையையும் அணிவித்தார். [8]
4.36. பின் பகவர் புக்குஸ மள்ளபுத்திரருக்குத் தம்ம போதனையைக் கற்பித்து, அவரை ஈர்த்து, விழித்தெழச்செய்து, ஊக்குவித்தார். பின் புக்குஸ மள்ளபுத்திரர் பகவரின் தம்ம போதனையால் - கற்பிக்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு, விழித்தெழச்செய்யப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு - அதன் பின்னர், தனது ஆசனத்திலிருந்து எழுந்து பகவரை வணங்கி, அவரை வலம் வந்து அங்கிருந்து புறப்பட்டார்.
4.37. புக்குஸ மள்ளபுத்திரர் புறப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின்னர், போ ஆனந்தர், பகவர் அணிந்திருந்த தங்க நிறம் கொண்ட ஆடைகளைச் சீர்செய்து வைத்தார். பகவரின் உடலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்வுடைகள் ஒளி வீச்சற்று இருப்பதாகத் தோன்றின.
பின் போ. ஆனந்தர். "அருமை அண்ணலே. ஆச்சரியமாக உள்ளது – ததாகதரின் உடலின் நிறம் எவ்வளவு தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது! பகவரின் உடலோடு இந்த ஜொளிக்கும் தங்க நிறம் கொண்ட ஆடைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் அவை ஒளிவீச்சற்று இருப்பதாகவே தோன்றுகின்றன!"
"அப்படித்தான் ஆனந்தா. ததாதரின் உடலின் நிறம் இருமுறை தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும். எந்த இரண்டு முறை?
ததாகதர் ஒப்புயர்வில்லா சுய முயற்சியால் பெற்ற வீடுபேற்றின் இரவின் போது, மற்ற சமயம் ததாகதர் முழுமையாக எரிபொருள் ஏதும் இல்லாத நிலையில் (அவர் உடல்) முழு பரிநிப்பாணம் அடையும் இரவின் போது. இந்த இரண்டு சமயங்களில் தான் ததாகதரின் உடலின் நிறம் குறிப்பாகத் தெளிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும். "
4.38. "இன்று, இரவின் கடைச்சாமத்தில், குசிநகரத்தின் அருகில் உள்ள, மல்லர்களின் சாலமர வனத்தில், இரு சால மரங்களுக்கிடையே ததாகதரின் முழு வீடுபேறு நடைபெறும்.
"வா ஆனந்தா, நாம் ககுத்த ஆற்றிற்குச் செல்வோம். (Kakudha River)"
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று போ. ஆனந்தர் பகவரிடம் கூறினார்.
புகுஸ்ஸர் இரு தங்க நிறம் கொண்ட ஆடைகளைப் பகவருக்குத் தானமாக அளித்தார்.
அந்த ஆடைகளைவிட அதிகமாக ஒளி வீசியது தங்க நிறம் கொண்ட ஆசிரியரின் உடல்.
ககுத்த ஆற்றில்
At the Kakuttha River
4.39. பின் பகவர் ஒரு பெரும் சங்கத்துறவிகளின் கூட்டத்துடன், ககுத்த ஆற்றுக்குச் சென்றார். அங்கு சென்ற பின் ஆற்றில் இறங்கி, குளித்து, நீரருந்திவிட்டுத் திரும்ப வந்து ஒரு மாந்தோப்பிற்குச் சென்றார். பின் பகவர் போ. சுண்டக்கரிடம், "சுண்டக்கரே, எனது வெளியாடையை நான்காக மடித்து வைக்கவும். எனக்குக் களைப்பாயிருக்கிறது. நான் சற்று ஓய்வெடுக்கிறேன்," என்றார்.
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்த சுண்டக்கர் வெளியாடையை நான்காக மடித்தார்.
4.40. பகவர் விரிக்கப்பட்டிருந்த ஆடையின் மீது வலப்பக்கமாகப் படுத்தார். சிங்கம் படுக்கும் நிலையில் படுத்தார் - அதாவது ஒரு கால் மற்றதின் மீது இருக்க - கடைப்பிடியோடு, அக்கறையோடு, எழுந்திருக்கப் போவதன் மனக்குறிப்போடு படுத்திருந்தார்.
போ. சுண்டக்கர் அவர் முன் அமர்ந்தார்.
4.41. விழிப்புற்றவர், ஆசிரியர், உலகில் ஒப்புயர்வில்லாத் ததாகதர்
- ககுத்த சிற்றாற்றுக்குச் சென்றபின்
அதன் தூய, சுத்தமான, சுகமான, தெளிந்த நீரில் -
தன் மிகவும் களைப்புற்ற உடலை மூழ்குவித்தார். குளித்து, நீரருந்திவிட்டு வெளியே வந்தார்.
போற்றப்படும் துறவிகளால் சூழப்பட்டிருந்தார் பகவர்.
பகவர், ஆசான், தம்ம வழியில் செல்பவர் பின்
மாந்தோப்பிற்குச் சென்றார்.
அங்கு சுண்டக்கர் என்ற துறவியிடம்
"எனது மேலாடையை நான்காக மடித்து விரித்து விடு நான் படுப்பதற்காக," என்றார்.
பக்குவ மனம் கொண்டவர் கட்டளைக்கு
சுண்டக்கர் உடனே பணிந்து ஆடையை நான்காக மடித்து விரித்தார்.
ஆசான் மிகவும் களைப்புற்றவராகப் படுத்தார்
சுண்டக்கர் அவர் முன் உட்கார்ந்தார்.
The awakened one,
Having gone to the little Kakudha river
With its pristine, pleasing water, clear
The Teacher, seeming very tired,
The Tathāgata, unequalled in the world
Went down, bathed, drank, and came out.
Honored, surrounded,
In the midst of the group of monks,
The Blessed One, Teacher,
Proceeding here in the Dhamma,
The great seer,
Went to the mango grove.
He addressed the monk named Cundaka,
“Spread it out, folded in four
For me to lie down.”
Ordered by the One of developed mind,
Cundaka quickly set it out, folded in four.
The Teacher lay down, seeming very tired,
And Cundaka sat down there before him.
சுண்டரின் வருத்தம் நீக்குதல்
Relieving Cunda's Remorse
4.42. பின் பகவர் போ. ஆனந்தரிடம், "ஆனந்தா, யாரேனும் சுண்டர் என்ற தட்டாரிடம் இவ்வாறு சொல்லி வருத்தமுறச் செய்தால், 'உனக்கு லாபம் இல்லை, நண்பர் சுண்டா, நீ பிழை செய்து விட்டாய். உனது உணவைக் கடைசியாக உண்டபின் ததாகதர் பரிநிப்பாணம் ஏய்து விட்டார்,' சுண்டரின் வருத்தத்தை நீ இவ்வாறு சொல்லி நீக்க வேண்டும்: 'உனக்கு இலாபம், நண்பர் சுண்டா, நீ நல்ல காரியம் செய்தாய். ததாகதர் பரி நிப்பாணத்தைக் கடைசியாக உனது உணவை உண்டபின் எய்தினார். பகவர் நேருக்கு நேராக நான் இதைக் கேட்டேன், அவர் முன்னிலையிலே நான் இதைக் கற்றேன்.
"வினைப்பயனைப் பொருத்தவரை இந்த இரண்டு தானங்களும் ஒன்று. மேலும் மற்ற எல்லாத் தானங்களைவிடவும் மேலானவை. எந்த இரண்டு?
ததாகதர் ஒப்புயர்வில்லாச் சுயமுயற்சியால் பெற்ற வீடுபேற்றின் முன்னர் உண்ட உணவு தானமும் [9], மற்ற சமயம் ததாகதர் முழுமையாக எரிபொருள் ஏதும் இல்லாத நிலையில் (அவர் உடல்) முழு பரிநிப்பாணம் அடையும் முன்னர் கொடுக்கப்பட்ட உணவு தானமும் ஒன்றே. இவை இரண்டும் வினைப்பயனைப் பொருத்தவரை ஒன்றுக்கு ஒன்று சமமானவை. மற்ற எல்லா உணவு தானங்களைவிட மேலானவை. போற்றுதற்குரிய (ஆயஸ்மான்) [10] சுண்டர் என்ற தட்டார் நீண்ட வாழ்நாள் வாழ்வதற்கான புண்ணியத்தைச் சேகரித்துள்ளார். போற்றுதற்குரிய சுண்டர் என்ற தட்டார் மிகுந்த அழகுக்கு எடுத்துச் செல்வதற்கான புண்ணியத்தைச் சேகரித்துள்ளார். போற்றுதற்குரிய சுண்டர் என்ற தட்டார் மகிழ்சிக்கான புண்ணியத்தைச் சேகரித்துள்ளார். போற்றுதற்குரிய சுண்டர் என்ற தட்டார் சொர்க்கத்தில் மறுபிறப் பெடுப்பதற்கான புண்ணியத்தைச் சேகரித்துள்ளார். போற்றுதற்குரிய சுண்டர் என்ற தட்டார் உயர்நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான புண்ணியத்தைச் சேகரித்துள்ளார். போற்றுதற்குரிய சுண்டர் என்ற தட்டார் சுதந்திரத்திற்கு எடுத்துச் செல்வதற்கான புண்ணியத்தைச் சேகரித்துள்ளார். “இவ்வாறு ஆனந்தா, சுண்டர் என்ற தட்டாரின் வருத்தத்தைத் தணிய வைக்க வேண்டும்."
Then the Blessed One addressed Ven. Ānanda, “Ānanda, if anyone tries to incite remorse in Cunda the silversmith, saying, ‘It’s no gain for you, friend Cunda, it’s ill-done by you, that the Tathāgata, having eaten your last alms, totally unbound,’ then Cunda’s remorse should be allayed (in this way): ‘It’s a gain for you, friend Cunda, it’s well-done by you, that the Tathāgata, having eaten your last alms, totally unbound. Face to face with the Blessed One have I heard it, face to face have I learned it, “These two alms are equal to each other in fruit, equal to each other in result, of much greater fruit and reward than any other alms. Which two? The alms that, after having eaten it, the Tathāgata awakens to the unexcelled right self-awakening. And the alms that, after having eaten it, the Tathāgata unbinds by means of the unbinding property with no fuel remaining. These are the two alms that are equal to each other in fruit, equal to each other in result, of much greater fruit and reward than any other alms. Venerable Cunda the silversmith has accumulated kamma that leads to long life. Venerable Cunda the silversmith has accumulated kamma that leads to beauty. Venerable Cunda the silversmith has accumulated kamma that leads to happiness. Venerable Cunda the silversmith has accumulated kamma that leads to heaven. Venerable Cunda the silversmith has accumulated kamma that leads to rank. Venerable Cunda the silversmith has accumulated kamma that leads to sovereignty.” In this way, Ānanda, Cunda the silversmith’s remorse should be allayed.”
4.43. பின் அதன் முக்கியத்துவத்தை அறிந்து, பகவர் அச்சமயம் கூறியது:
கொடுப்பவருக்குப்
புண்ணியம் அதிகரிக்கும்.
தன்னடக்கம் கொண்டவரிடம்
வெறுப்பு சேர்வதில்லை.
திறமையாகச் செயல்படுவோர்
தீயவற்றை விட்டுச் செல்கிறார்.
காமம், வெகுளி மயக்கம் முடித்தவர்
முழுமையாக வீடுபெறுகிறார்.
For a person giving,
Merit increases.
For one self-restraining,
No animosity is amassed.
One who is skillful
Leaves evil behind and
From the ending of
Passion,
Aversion,
Delusion
Totally unbinds.
* * *
விளக்கம் ஆதாரங்கள் (Source for the Notes):
(BA) Bhante Anandajoti அனந்தஜோதி பிக்கு காணொளி
(MW) The long Discourses of the Buddha - A translaton of the Dhigha Nikaya by Maurice Walshe
(TB) Thanisarro Bhikku
(SV-FS) Sister Vajirra, Fransis Story Source
[1] யானையின் பார்வை: யானைகளைப்போல புத்தர்களும் திரும்பப் பார்ப்பதற்குத் தங்கள் உடலை முழுவதும் திருப்பிக் கொள்வார்களாம்!
Buddhas, like elephants, apparently turn the whole body round to look back! (MW)
[2] The usual triad of morality, concentration and wisdom, with the outcome, which is liberation.
பௌத்தப் பாதையென்பது ஒழுக்கம்(சீலம்), மனஒருமைப்பாடு (சமாதி), மெய்யறிவு(பஞ்ஞா). அந்த பாதையைத் தொடர்வதால் உண்டாகும் விளைவு - விடுதலை.
[3] (TB) The Mātikā is a list of dhamma-topics such as the 37 Wings to awakening that formed the basis for the Abhidhamma.
மாதிகா என்பது தம்மத்தின் தலைப்புகள் - உதாரணமாக 37 போதி-பாக்கிய-தம்மங்கள் - இவை அபிதம்மத்தின் அடித்தலமாக விளங்கின.
[4] பாலியில் சுகர-மத்தவ (பன்றி-மென்மை, sukara-maddava, pig-delicacy)
(TB) உரைகளின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மஹா-அத்தகதாவில் சுகர-மத்தவ என்றால் மென்மையான பன்றிக் கறி என்று விளக்கப் படுகிறது. ஆனால் மற்ற விளக்கங்களும் உண்டு. பன்றிகள் உண்ணும் மென்மையான இளம் மூங்கில் தளிர்கள் என்றும், பன்றிகள் உண்ணும் மென்மையான காளான்கள் என்றும் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது. எனவே புத்தர் கடைசியாக உண்டது என்ன உணவு என்பது உறுதியாகக் தெரியவில்லை. 36.
The Commentary notes a wide range of opinions on what “pig-delicacy” means. The opinion given in the Mahā Aṭṭhakathā the primary source for the Commentary, we now have, is that pig-delicacy is tender pork. Other opinions include soft bamboo shoots or mushrooms that pigs like to nibble on, or a special elixir. Given that India has long had a history of giving fanciful names to its foods and elixirs, it’s hard to say for sure what the Buddha ate for his last meal.
(MW) (siikara = 'pig', maddava = 'mild, gentle, soft', also 'withered'). It could therefore mean either 'the tender parts of a pig' or 'what pigs enjoy'
DA gives three possibilities: 1. The flesh of a wild pig, neither too young nor too old, which had come to hand without being killed,
2. Soft boiled rice cooked with 'the five products of the cow', or
3. A kind of elixir of life (rasiiyana)
சுகர என்றால் பன்றி, மத்தவ என்றால் மென்மை. எனவே சுகர-மத்தவ என்றால் பன்றியின் மென்மையான பகுதி என்று பொருள் கூறலாம். அல்லது பன்றிகள் விரும்பி உண்பவை என்றும் பொருள் கொள்ளலாம்.
(SV-FS) புத்தகோஷர் மூன்று சாத்தியங்களைத் தருகிறார்:
1. கைக்குக் கிடைத்த (நோக்கத்தோடு கொல்லப்படாத) இளமையானதும் அல்லாத முதியதும் அல்லாத காட்டுப் பன்றியின் இறைச்சி.
2. பசு தரும் ஐந்து பொருட்களால் செய்யப்பட்ட புழுங்கள் அரிசி சாதம்.
("From a cow comes milk; from milk, curd; from curd, butter; from butter, ghee; and from ghee, the skimmings of ghee, which is the best."
பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள்: பால், பாலேடு, வெண்ணை, நெய், நெய்யின் ஆடை)
3. ஒரு வகையான உயிர்ப்பிக்கும் அமிர்தம் (ரசாயனம்)
The commentary to our text gives three alternative explanations: (1) the flesh from a single first-born (wild) pig, neither too young nor too old, which had come to hand naturally, i.e., without intentional killing; (2) a preparation of soft boiled rice cooked with the five cow-products; (3) a kind of alchemistic elixir (rasayanavidhi).
(MW) கறி சாப்பிடுவது பற்றி தேரவாத பௌத்தப் பிரிவின் கருத்து, மஜ்ஜிம நிகாயம் 55 (ஜீவிக சூத்திரத்தில்) குறிப்பிடப் பட்டுள்ளது. துறவிகள் தங்களுக்காகவே கொல்லப்பட்ட மிருகமென்பதைக் கண்டால் அல்லது அவ்வாறு கேள்விப்பட்டால் அல்லது ஐயப்பட்டால் அதன் மாமிசத்தை உண்ணக் கூடாது என்று புத்தர் கூறினார். தேவதத்தன் துறவிகள் கறி உண்பதை முழுமையாகத் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை புத்தர் நிராகரித்தார். அக்காலத்தில் இந்தியக் கிராமப் பகுதிகளில் நிலவி வந்த சூழலில், பிச்சையேற்று உண்ணும் துறவிகள் உணவு கொடுப்பவர்களைத் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆட்படுத்தக் கூடும் என்பதாலும் அல்லது இறைச்சியே உண்ணவில்லையென்றால் பட்டினி கிடக்க நேரிட்டு விடும் என்பதாலும் புத்தர் இறைச்சி உண்பதற்குத் தடை விதிக்கவில்லை.
The standard Theravada position is set out in the Jivaka Sutta (MN 55), in which the Buddha tells Jivaka that monks must not eat the meat of any animal concerning which they have seen, heard or suspect that it was specially killed for them. The Buddha rejected Devadatta's proposal to forbid meat-eating altogether to the monks. Living on alms as they did in the conditions of rural India at the time, they would either have gravely embarrassed those who offered them food, or starved if they had refused all meat.
[5] குத்தக நிகாயம் - மூன்றாம் புத்தகமான உதானம் 8.5 சுண்டர் சூத்திரத்தில் (Cunda Sutta) பகவரின் கடைசி நாள் விவரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அந்தச்சூத்திரத்தில் அடுத்து வரும் புக்குஸ மள்ளபுத்திரர் நிகழ்வு தவிர்க்கப் பட்டிருக்கிறது.
The narrative in Ud 8:5 skips from this poem to the place in the narrative where the Buddha goes to the Kakudha River, skipping over the story of Pukkusa Mallaputta. (TB)
[6] The first teacher the future Buddha went to: see MN 26. எதிர்கால புத்தர் (வீடு துறந்த பின்) பார்க்க சென்ற முதல் ஆசிரியர். (மஜ்ஜிம நிகாயம் MN26) (MW)
[7] புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்னர் ஆலார காலாமரிடம் அரூப ஞானம் என்ற உயர்ந்த மன ஒருமைப்பாடு தியான முறைகளைக் கற்றுக் கொண்டார். அந்த ஞான நிலைகள் ஒன்றில் மனம் ஒருமைப்பட்டிருக்கும் போது வெளிச் சப்தங்கள் கேட்காது. (TB)
Āḷāra Kālāma was the teacher from whom the Buddha, before his awakening, learned how to attain the dimension of nothingness, one of the formless attainments. See MN 26. The Vibhaṅga to Pārājika 4 indicates that the purity of one’s mastery of any of these formless attainments can be measured by the extent to which one does not hear sounds while in that attainment. The same passage also indicates that if one does hear sounds, that does not mean that one has not achieved that attainment, simply that one’s mastery of the attainment is not entirely pure. It further indicates that “purity” here does not mean purity from defilements. After all, in the Vibhaṅga to Pārājika 4, Ven. Mahā Moggallāna’s attainment of the formless states is said to be impure, and yet he is an arahant. “Purity” refers instead to the strength of one’s concentration.
[8] இந்த விசித்திரமான நிகழ்ச்சி பிற்காலத்தில் சேர்க்கப் பட்டிருக்கக் கூடும்.
This ridiculous story is probably a late insertion. (MW)
[9] பகவர் ஞானம் பெறுவதற்கு முன் அவர் பெற்ற உணவு: சுஜாதை என்ற பெண் தந்த பால் சோறு.
[10] பகவர் சுண்டர் என்ற தட்டாரை 'ஆயஸ்மான்' என்று அழைக்கிறார். பொதுவாக மூத்த துறவிகளை மட்டும் அழைக்கும் முறையில் சுண்டரை அழைத்ததற்குக் காரணம் பகவருக்குக் கடைசியாகத் தந்த உணவு தானம் ஒரு மேன்மையான செயல் என்பதை வலியுறுத்துவதற்காகவே.
Āyasmant: This is a term of respect usually reserved for senior monks. The Buddha’s using it here was probably meant to emphasize the point that Cunda’s gift of the Buddha’s last meal should be treated as a very honorable thing. (TB)
* * *