துறவிக்கு ஒரு கேள்வி
Question for the monk
அஜான் சோணா
Ajahn Sona
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
11. தானாக நிகழ்கிற ஞானம் பற்றி? Top
பௌத்த நோக்கில் ஒருவர் தானாக ஞானம் பெற்றிருந்தால் - அதுவும் உறுதியில்லை, ஏனென்றால் சில சமயம் ஞானம் பெற்றுவிட்டதாகத் தவறாகக்கூடக் கருதலாம் - அதற்கு ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஞானம் பெறுவதற்கு முன் பல காரணிகள் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆக தக்க முன்னேற்பாடுகளுக்குப் பின்னரே, திடீரென்று ஞானம் பிறக்கும். தானாக ஞானம் பெற்றதாகத் தெரிவது எப்போதும் தானாக நடைபெறுவதில்லை. ஏற்கனவே தேவையான காரணிகள் உற்பத்தியாக்கப் பட்டிருக்க வேண்டும். எதுவும் காரணம் இன்றி நடைபெறுவதில்லை. ஆக மாற்றம் உண்டாகும் செயற்றொடர் படிப்படியாக நடைபெறுகிறது. காரணிகள் ஒவ்வொன்றாகச் சேர்க்கப் படுகின்றன. பின் திடீரென்ற ஒரு கணத்தில் ஞானம் பிறக்கிறது. திடீரென்று உணர்ந்து கொண்டீர்கள். உணர்வது படிப்படியாக நடைபெறுவதில்லை. எப்போதும் திடீரென்றே அறிந்து கொள்கிறோம். ஆனால் ஆரம்ப நடவடிக்கைகளெல்லாம் படிப்படியாகவே நிகழ்கின்றன.
புத்தர் இதற்கு ஒரு உவமானம் தருகிறார். ஒரு மொத்தமான மணிலாக் கயிறு அல்லது சணலினால் செய்யப்பட்ட கயிற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கயிறு கரையோரம் நிறுத்தப் பட்டிருக்கும் ஒரு படகில் இருக்கிறது. இது போன்ற கயிற்றைக் கவனித்தீர்களென்றால் அது படகில் பயன் படுத்தப் பட்டுக் கால நிலையால் சேதமுற்றிருந்தாலும், அதன் சுற்றளவில் மாற்றம் எதுவும் இருக்காது. புறத் தோற்றத்தில் எப்போதும் போலவே இருக்கும். அதே வலிமையுள்ளதாகவே தோன்றும். ஆனால் நீர்த் துளிகளினாலும், காற்று, மழையால் நனைந்து, சூரிய வெப்பத்தினால் காய்ந்து மீண்டும் ஈரமாவதாலும் அதன் நார்கள் பலவீனமாகிக் கொண்டே வருகின்றன. மெதுவாக மேலும் மேலும் பலவீனமாகி வருகின்றன. தேய்மானம் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் எந்த அளவு பலவீனமானது என்பதைச் சொல்ல முடியாது. பலவீனமாக்கும் செயற்றொடர் படிப்படியாக நடைபெறுவதால் மாற்றத்தைக் கவனிக்க முடிவதில்லை. ஆனால் ஒரு நாள் அந்தக் கயிற்றை எடுக்கும் போது அது முன் போலவே சுற்றளவு கொண்டதாக இருந்தும் அதை ஒரு நொடியில் எளிதாக முறித்து விடலாம். இப்படித்தான் ஞானம் பெரும் செயற்றொடரும் நிகழ்கிறது என்று புத்தர் விளக்கினார். ஞானம் பெருவதற்கு முன் செய்யவேண்டிய வேலைகளெல்லாம் படிப்படியாக நடைபெறும். ஆனால் ஞானம் பெறுவது திடீரென்று கணத்தில் நடைபெறும்.
பிறிதொரு உவமானம் தச்சன் பயன்படுத்தும் மரத்தினால் ஆன கைப்பிடி கொண்ட சுத்தியலைப் பற்றியது. அது தினந்தோறும் பயன்படுத்தப் படுகிறது. அதனால் வேர்வையும், அழுக்கும் அந்த மரக் கைப்பிடியை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்மானம் செய்து கொண்டு வருகின்றன. ஒரு நாளில் எவ்வளவு தேய்மானம் ஆனது என்பதைக் கூற இயலாது. ஆனல் பயன்படுத்தப்படும் அளவுக்கு அது தினம் தேய்ந்து கொண்டிருக்கிறது என்பது உறுதி. இதையும் புத்தர் ஞானம் பெறும் செயற்றொடரை விளக்கும் ஒரு உவமானமாகக் கூறினார். ஒருநாள் அந்தக் கைப்பிடி உடைந்து விடும். ஒருநாள் அந்தக் கயிறு அறுந்துபோகும். ஒரு நொடியில் நடக்கும் செயல் இது. தேய்மானச் செயற்றொடர் படிப்படியாகவே நடைபெறும். ஆனால் தெளிவு பெறுவது ஒரு கை சொடுக்கும் நேரத்தில் நடைபெறுகிறது. ஒரு கணம் நமக்கு விளங்க வில்லை. மறு கணம் தெளிவு பெற்று விட்டோம். ஆக இப்படித்தான் ஆன்மீகப் பாதையை அணுக வேண்டும். அந்தத் தெளிவு பெறும் கணத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம். அந்தக் கணத்தை வலிந்து கண்டறிய முடியாது. காரணிகள் இல்லையென்றால் விளைவுகள் கிடைக்காது. காரணிகள் இருக்குமானால் விளைவுகள் உண்டாவது உறுதி. ஆகக் காரணிகளைச் சரியான முறையில் தோற்றுவிப்பதைப் பற்றியது ஆன்மீகப் பயிற்சி.
இந்தப் பயிற்சியை இப்பிறப்பிலேயே முடித்து விட முடியும் என்றும் சொல்வதற்கில்லை. பௌத்த நோக்கில் பல பிறவிகள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் முற்பிறவிகளில் ஏராளமான அடிப்படை வேலைகளைச் செய்து காரணிகளைச் சேகரித்திருக்கலாம். புத்தர் வாழ்ந்த காலத்தில் புத்தரிடம் போதனைகளைக் கேட்ட பல சாதாரண மனிதர்களும் அவரிடம் சிறிது நேரம் உரையாடியதும் ஞானம் பெற்றனர். அங்கேயே! ஒரு சிறிய போதனை. பின் ஞானம்! அவர்கள் முன்கூட்டியே பயிற்சி முறைகளைக் கேட்டறிந்ததாகத் தகவல் இல்லை. பின் எப்படி ஞானம் பெற்றனர்? இதற்கு ஒரே விளக்கம் அவர்கள் முன்னரே பயிற்சி செய்திருக்கின்றனர் என்பதே. இங்கு முன்னரே என்றால் முற்பிறவிகளில்.
Spontaneous Enlightenment?
From a Buddhist point of view that could only have happened, if it did happen - sometimes it is just wishful thinking - if a lot of preparation has gone into it. There is a lot of preparation before that. So a lot of planning and then a spontaneous (awakening). What appears to be spontaneous enlightenment is never spontaneous. All the causes have gone in. Nothing happens without a reason. And so the process of transformation is a gradual one, a gradual accumulation of causes and then a sudden and always a sudden, instantaneous realization. You suddenly realize something. You don't gradually realize it. Only suddenly. All the preliminaries though are gradual.
The Buddha's simile for how this takes place is like a manila rope or hemp rope (any natural material as in the time of the Buddha) maybe on a boat dragged up onto the beach. And if you ever been around a natural fibre rope after they have been weathered, the diameter stays the same. The outward appearance stays the same, it look like it has the same strength. However due to drops of water and wind and rain and sun, drying out wetting again the fibres are all weakening. Gradually weakening. Imperceptibly. You cannot say how much it has weakened in one day. The process is so gradual you cannot see that process. But one day you can pick up that one inch diameter manilla rope and it will still be one inch but you can break it, just like that. That is how the Buddha explains the gradual nature of the process (of getting enlightened).
Or as a carpenter uses a single hammer. And the handle of that hammer because it is being handled everyday - sweat and grime and so forth working away - it is wearing away. How much is worn away in a day is difficult to say. But if it is used we know for sure there is some being worn away. And that is the next simile the Buddha uses for the gradual nature of this process. One day that handle will break. One day the rope will snap. And it is in a single instance. But the weakening process has to take place gradually and then the realization process is only a finger snap. One moment you don't understand and the next moment you get it. So that is the way one should approach the spiritual path. Don't focus on that sudden break through moment. You can't force that through. If the causes have not been put in, the results cannot appear. If the causes have been put in, the results must appear. So it is a matter of arranging the preliminary causes.
So this process may not be just of this lifetime. From the Buddhist point of view there are many lifetimes. And you may have already done a lot of work. Many many encounters with the Buddha by ordinary people, lay people: they have a little conversation with him and realized enlightenment. Right there. Bing! A little talk and Enlightened! Apparently they never had any preliminary instructions, development or anything like that but the explanation is that the only possible way that can happen is that if there had been preliminary (work in a previous lifetime).
12. கோயங்கா போதித்த பௌத்த நெறி. Top
பௌத்தத்தின் பல கிளைகளைப் பற்றிப் பேசினீர்கள். திரு. கோயங்கா அவர்கள் அதில் எந்தக் கிளையைச் சேர்ந்தவர்?
பதில்: திரு. கோயங்கா (திரு. சத்திய நாராயண் கோயங்கா 1924-2013) தேராவாத பள்ளியைச் சேர்ந்தவர். அவரது ஆசிரியர் ஊ பா கின் ஒரு உபாசகர் (இல்லற பௌத்தர்). ஊ பா கின் அவர்களின் ஆசிரியர் ஒரு துறவி. கோயங்காவின் போதனைகள் புத்தரின் போதனையொன்றை அடிப்படையாகக் கொண்டதே. பெரும்பாலும் அவர் துவங்கிய சமூகத்தில், இல்லறத்தார் மட்டுமே கலந்து கொள்கின்றனர். மக்கள் ஒன்றுகூடிப் பயிற்சி செய்கின்றனர். அவர்கள் பயிற்சி பெரும்பாலும் சதிபட்டானம் சூத்திரத்தை - மனக் கவனத்தின் நான்கு அடித்தளங்கள் - ஒட்டியிருக்கும். அதுவும் குறிப்பாக வேதனானுபாஸன்னா என்கிற நான்கின் ஒரு கவனத்தைச் சார்ந்திருக்கும். மேலும் அவர்கள் அனபனாசதியும், இறுதியில் மெத்தா தியானத்தையும் பயில்கின்றனர். அவர்கள் பயிலும் வேதனானுபாஸன்னா செயல்முறையில், உடலை உச்சந்தலையிலிருந்து பாதம் வரை கண்ணோட்டம் செய்வார்கள்.
உடலைக் கண்ணோட்டம் செய்கையில் உணர்ச்சிகள் தோன்றி, மறைந்து, மாறுவதைக் கவனித்து ஆராய்வார்கள். அவர்களது முறையில் அனைத்தும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது என்றும், எப்படியாவது இந்த உணர்ச்சிகள் மீதுள்ள பற்றிலிருந்து விடுபட்டால், இந்த இன்பமான, துன்பமான, நொதுமலான உணர்ச்சிகளுக்கும் அதன் பின் வரும் பற்றுக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்து விட்டு ஞானம் பெறலாம் என்பது அவர்களது கோட்பாடு. இது தேராவாத பௌத்தத்தில் ஏற்கப்பட்ட கொள்கை. சூத்திரங்களில் உடலை உச்சியிலிருந்து பாதம் வரை கண்ணோட்டம் இடும் முறை எங்கும் காணமுடியாது. சூத்திரத்தில் கூறப்படுவதாவது: இன்பமான உணர்ச்சி தோன்றினால் நமக்கு இன்பமான உணர்ச்சி தோன்றியது தெரியும். நொதுமலான உணர்ச்சி தோன்றினால் நமக்கு நொதுமலான உணர்ச்சி என்பது தெரியும். அதுபோலவே துன்பமான உணர்ச்சி தோன்றினால் நமக்குத் துன்பமான உணர்ச்சி தோன்றியது தெரியும். உலகின் மீதுள்ள வெறுப்பும் விருப்பும் நீக்க வேண்டிய அளவுக்கு இந்த உணர்ச்சிகளைத் தெரிந்திருக்க வேண்டும் என்று சூத்திரங்கள் கூறுகின்றன. இங்கு உலகின் மீது விருப்பு என்பது ஒன்றைப் பெறவேண்டும் என்ற ஆசை. வெறுப்பு என்பது ஒன்றை ஒதுக்கவேண்டும் என்ற விருப்பம். எனவே இந்த உணர்ச்சிகள் எழுவதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால் உணர்ச்சிகள் உடல் சம்பந்தப்பட்டவை மட்டும் அல்ல. வேதனானுபாஸன்னா மனத்தைப் பாதிக்கும் உணர்ச்சிகளையும் உள்ளடக்கியது. ஆக இப்போது ஆறு வகை உணர்ச்சிகள் உள்ளன, உடல் சம்பந்தப்பட்ட மூன்று, மனம் சம்பந்தப்பட்ட மூன்று. சூத்திரத்தில் 'நாம் தெரிந்திருக்கிறோம்’ என்று மட்டுமே கூறப்படுகிறது. இன்பமான உணர்ச்சி, துன்பமான உணர்ச்சி, நொதுமலான உணர்ச்சி ஆகியவை இருக்கும் போது அவை இருப்பது நமக்குத் தெரியும்.
அதே சமயம் நம்மைப் பற்றி மற்ற வழிகளிலும் நாம் தெரிந்து கொள்ளலாம். உணர்ச்சிகளுக்கு அப்பாலும் நாம் உடலை அறிந்து கொள்ளலாம். மனதைப் பார்த்து, 'ஆ, நான் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன்,' என்று உணர்ச்சிகளுக்கு அப்பால் மனத்தின் எண்ண ஓட்டங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். அல்லது, 'நான் கோபமாக இருக்கிறேன்,' 'நான் அமைதியாக இருகிறேன்', 'என் மனத்தில் அவா இருக்கிறது' என்றறியும் போது இவை உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டவை அல்ல என்பது விளங்கும். எனவே புத்தர் இந்தச் சதிபட்டான சூத்திரத்தில் பல வழிகளில் நம்மைக் ( நம் உடலையும் மனத்தையும்) கவனிக்கச் சொல்கிறார். இவ்வாறு கவனிப்பதால் நாம் ஒரு கெட்டியான நிலையான பொருள் என்று தவறாக நினைப்பதைக் கலைத்து விடலாம். பின் நான் இப்படிப் பட்டவன், அவர்கள் அப்படி, எதற்கு மதிப்புள்ளது, எதற்கு மதிப்பில்லை, எதற்குப் பயப்பட வேண்டும், எதற்குப் பயப்பட வேண்டியதில்லை என்றெல்லாம் நாம் கட்டும் கற்பனைகள் குறையும். எனவே நற் கடைபிடி மிகவும் முக்கியம்.
ஆக கோயங்கா தேராவாத மரபில் ஒரு குறிப்பிட்ட செயல்முறையை வலியுறுத்துபவர். இல்லற மக்கள் சமூகம். மேலும் அவர்கள் பயிற்சி முகாம்களிலேயே (தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பத்து நாட்கள் என்று) பெரும்பாலும் சந்திக்கின்றனர்.
(தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் - சென்னை அருகிலும், மதுரை அருகிலும் - கோயங்கா பயிற்சி முறை கற்பிக்கப்படுகிறது. விவரங்களுக்கு http://www.tamil.dhamma.org/ )
Q: You talked about the different schools of Buddhism. Where does Goenka fit in?
Goenka is in the Theravada school, Burmese influence. His teacher U Ba Khin is a lay teacher and his teacher was a monastic teacher. Goenka's teachings are based on a very main stream sutta. And has been kept very much a lay practitioners community. People practice together and have centres. Based primarily around the Satipatthana Sutta - four foundations of mindfulness with particular emphasis on vedananupassana - Mindfulness of sensations. Another area he uses is Anapanasati i.e. mindfulness of breathing - which is one of the most universally practiced meditation techniques. All of the schools pervasively use this. So in the Goenka school they use Anapanasati with a dash of Metta - loving kindness at the end. And a particular kind of vedananupassana that has to do with sweeping through the body.
Sweeping through the body examining or watching sensations arising and passing away and changing etc. with a particular interest in that where everything comes together. They articulate that all comes down to sensations and if you can somehow get some freedom from your attachments to sensations, if you can cut the link of conditioning between sensations unpleasant, neutral and pleasant sensations and your grasping at them. If you cut that link in the dependent origination of your conditioning, you may become enlightened. That is very main stream Theravada. The sweep moving the mind through the body looking for sensations not particularly emphasized in the sutta, there is no mention of it. There is a very general statement that when experiencing a pleasant feeling one knows what a pleasant feeling is. Neutral - one knows what a neutral feeling is. Unpleasant - one knows what a unpleasant feeling is. Just to the extent necessary for the overcoming of covetousness and grief for the world. Covetousness is desire for the world and grief is rejection of the world. So you are to watch the rising of these sensations - painful and pleasant. They do include not only bodily sensations though. Vedananupassana includes sensations that are produced as a side effect of the mind. They are two different sensations. Now there are six different sensations. Bodily sensations - 3 types and mental sensations - 3 types. There is no mention of sweeping through the body looking or examining sensations as a particular technique added to it (the sutta). All it says is just 'one knows'. And I think you basically know. You know when something is painful, when something is neutral, something is pleasant.
But you also know other dimensions of yourself as well. You know the body objectively. You can look at your body without thinking of sensations or without considering sensations. This is what I think of as my body. Or you can look at your mind. 'Ah, I am thinking,'. Quiet divorced from sensations there are thought processes flowing. Quite divorced from sensations there are emotions: 'I am angry,' 'I am greedy,' 'I am peacful.' Quite aside from the sensations associated with it there is that emotion. So the Buddha is asking us in that sutta to look at yourself from a number of different points of view, in number of ways to dissolve the ordinary sense of our structure of a solid self and a persisting identity over time. To dissolve this , to work this away, to get less caught in the flights of imagination about who I am and everybody else is, what is valuable what is not valuable, what is to be feared what is not to be feared. These are what is undermined and overcome through the practice of mindfulness of these things - mindfulness of the four dimensions of what we are.
So Goenka is particular technique within the Theravada tradition with a lay, retreat and a specific technique orientation.
13. பற்றறுத்தல்: காரண காரியத் தொடர் என்ற சங்கிலியின் எந்த வளையத்தை முறிப்பது? Top
சிலர் சங்கிலியின் எந்த வளையத்தையும் முறிக்கலாம் என்கின்றனர். ஒரு உணர்ச்சி உண்டானபின் அதனைத் தொடர்வது தண்ஹா - தாகம், ஆசை, கையை நீட்டுகிறோம். கையை நீட்டுவது தள்ளி விடுவதற்காகவும் இருக்கலாம் அல்லது பிடித்துக் கொள்வதற்காகவும் இருக்கலாம். அடுத்த கட்டம் அதனோடு ஒட்டிக் கொள்வது. ஆகப் பற்றுக் கொள்ளத் துவங்குகிறோம். முதலில் தாகம். பின் அதனோடு ஒட்டிக் கொள்வது. தாகத்திற்கும், அதனோடு ஒட்டிக் கொள்வதற்கும் உள்ள தொடர்பைத் துண்டிக்கலாம். பற்று முதிர்ச்சி அடையுமுன் செயற்றொடரை நிறுத்தி விடலாம். அல்லது உணர்ச்சிக்கும் அதனைத் தொடரும் செயற்பாட்டுக்கும் இடையே உள்ள வளையத்தைப் பலவீனப் படுத்தலாம். ஒரு மிட்டாய் சாப்பிட்டபின் அது நமக்குப் பிடித்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் பிரதிபலிப்பதில்லை. அந்த மிட்டாய் தந்த சுகத்தில் மூழ்கி விடுகின்றனர். 'ஆகா அருமை!' ஏதோ, காலமெல்லாம் அந்த இனிப்புச் சுவை நீடிக்கும் என்பது போல எண்ணுகின்றனர். அல்லது நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அப்படி அது நீடிக்காது என்பதை மறந்து விடுகின்றனர். பின் அந்தச் சுவை நாக்கிலிருந்து மறைந்து விடுகிறது. அதனால் ஏமாற்றம். 'அந்தச் சுவை மீண்டும் இருந்தால் நன்றாக இருக்குமே! இது உலகத்திற்கான துயரம். பின், 'சரி இன்னொரு மிட்டாய் எடுத்துக் கொள்வோம். யாரும் பார்க்கப் போவதில்லை,' என்று நினைத்து மிட்டாய் இருந்த மேஜைப் பக்கம் போகிறோம். உலகிற்கான பேராசை இது. மேஜைக்குச் சென்ற பின், 'அட! எல்லா மிட்டாயும் தீர்ந்து போய் விட்டதே!' மறுபடியும் உலகத்திற்கான துயரம். பின், சரி அது போகட்டும், அற போதனையையாவது கேட்போம் என்று நினைக்கலாம். அல்லது மனத்தின் அமைதி முற்றும் குலைந்து விடலாம். 'சை! இந்த விகாரையில் ஏன் இரவுச் சாப்பாடு கொடுக்கக் கூடாது?' (சிரிப்பு)
பின் இது ஒரு பிடிப்பாகி விடுகிறது (உபதானா). இதைச்சுற்றி ஒரு தனித்தன்மை உருவாகிறது. இதுவே ஆகுதல். (பவோ) அப்படி ஆகிவிடுகிறோம். அப்படி ஆவதற்குப் பயில்கிறோம். நாம் விரும்பியது நடக்கவில்லையென்றால் நாம் மிகவும் ஏமாற்ற மடைகிறோம். இது நல்ல நிலையில்லை, இது நம்மை மேலும் ஒரு எல்லைக்கு இழுத்துச் சென்று விடும். சீர்குலையச் செய்யும். விரும்பியது கிடைக்கவில்லையென்றால் அல்லது வேண்டாதது கிடைத்து விட்டால் புலம்பி, நொந்து கவலையில் மூழ்கி விடுகிறோம்.
எதையும் பொறுக்கி எடுத்துத் தெரிவு செய்வோருக்கு வாழ்க்கை கஷ்டமாகத்தான் இருக்கும். இப்படிச் செய்யாதோருக்கு வாழ்க்கை எளிதாக இருக்கும். இப்படிச் செய்பவராக இருந்தால், அப்படிச் செய்யாமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
மாம்பழம் சாப்பிட்டால், இமாம் பஸந்த் மாம்பழம் தான் சாப்பிடுவேன். அதுவும் திருச்சி மாவட்டத்தில் விளைந்ததாக இருக்க வேண்டும். மேலும் அது தாத்தாச்சாரியர் தோட்டத்துப் பழமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது. இப்படிக் குறுகிக் குறுகித் தேர்ந்தெடுத்தால் உலகத்தை நாம் மேலும் கஷ்டமாக்கிக் கொள்கிறோம். உங்களையே கஷ்டப்படுத்திக் கொள்கின்றீர்கள். இப்படி இருப்பது நமது இணக்கமற்ற, குறுகிய மனப்பாங்கை அதிகமாக்குகிறது, வளையாத, பணியாத, இறுக்கமானவராகி விடுகிறோம். வளைந்து கொடுத்து ஒத்து வாழ்ந்தால் ஆறுதலோடு சிக்கலில்லாமல் வாழலாம். (பெரும் காற்றடித்தால் தென்னைமரம் வளைந்து கொடுக்காததால் முறிந்து விடுகிறது, ஆனால் நாணல் புல் வளைந்து கொடுப்பதால் எத்தகைய காற்றிலும் ஒடிந்து போவதில்லை என்பதைக் கேட்டிருக்கின்றோம் அல்லவா?) பணிந்து போவது நல்லது. அதே சமயம் முட்டாளாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு கல்லை எடுத்து அதைச் சாப்பிட வேண்டியதில்லை. நாம் ஒரு ஆடு இல்லை. நாம் மனிதர், எனவே மனிதருக்கேற்ற உணவைச் சாப்பிட வேண்டும். ஆனால் எதற்கெடுத்தாலும் சலித்துக் கொள்ள வேண்டியதில்லை.
உங்கள் தாய் அறிவாளியாக இருந்திருந்தால் உங்களுக்குக் கிடைப்பதைச் சலிக்காமல் ஏற்றுக் கொள்ளக் கற்பித்திருப்பார். புதிதாக கற்றுக் கொள்ள விருப்பப்பட வேண்டும். திறந்த மனத்தவராக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் எல்லாவற்றையும் பெரிது படுத்த வேண்டாம். அப்போது உலகத்தோடு முரண்பாடில்லாமல் வாழலாம். அப்படி இல்லாமல், 'என் மகன் தேவேந்திரன் இருக்கிறானே, அவனுக்கு முள்ளங்கிச் சாம்பார்தான் பிடிக்கும். வேறு எந்தச் சாம்பாரையும் தொட மாட்டான். அப்படிப்பட்டவன் என் மகன்,' என்று பெருமையடித்துக் கொள்ளும் தாய் வளர்த்த மகனாக இருந்தால் வாழ்க்கை முழுதும் எல்லோருக்கும் தேவேந்திரன் ஒரு தொல்லையாகத் தான் இருப்பான், தேவேந்திரனுக்கும் உட்பட (சிரிப்பு). இப்படி வளர்ப்பது மிகவும் மோசமான பயிற்சியாகும். இப்படி நீங்கள் வளர்ந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் பழக்க வழக்கங்களை மறந்து மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
எப்படித் துண்டிப்பது? இந்தத் தொடர் சங்கிலியின் முதல் வளையம் பொதுவாக அறியாமை என்று கூறுவார்கள். அறியாமையைத் தொடர்வது முடிவுகள். அறிவு இல்லாத போது எடுத்த முடிவுகள். நமக்குத் தெரிந்ததை வைத்து முடிவு எடுக்கிறோம். ஆனால் தெரிந்ததோ பெரும்பாலும் திரிந்து இருக்கிறது. அதில் குறை இருக்கிறது. ஆனால் அதன் முன் உங்கள் அறியாமை எப்படி உருவானது? அதன் உணவு என்ன? அறியாமையின் உணவு தான் ஐந்து கிலேசங்கள். பின் அந்த அறியாமையோடு முடிவெடுக்கிறோம். உங்கள் முடிவுகள் உங்கள் மன அறிநிலையைத் தோற்றுவிக்கின்றன. தெரியாததைத் தெரிந்து கொள்ள முடியாது. அதை எப்படி மாற்றுவது? கிலேசங்களை நாம் கவனிக்க வேண்டும். அதற்கு உணவளிக்கக் கூடாது. விவேகத்தோடு, கோபம், பேராசை, சோம்பல், அலைக்கழிப்பு மற்றும் சந்தேகம் ஆகிய ஐந்து கிலேசங்களையும் குறைத்தால் நாம் அறியாமையைக் குறைக்கலாம். முதலில் நமக்குத் தெரிய வேண்டும், 'நான் கோபமாக இருக்கிறேன். நான் எரிச்சல் நிலையில் இருக்கிறேன்,' என்று அறிந்திருக்க வேண்டும். நாம் கோபமாகவோ எரிச்சலோடோ இருக்கும் போது நமது முடிவெடுக்கும் திறன் குன்றியிருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் ஒரு பொருளின் மீதோ ஒருவரின் மீதோ குறைப்பட்டுக் கொள்ளக் கூடாது. அல்லது உள்ள குறையை நாம் பெரிது படுத்தக் கூடாது. விவேகமில்லாத கவலை. பின் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். நமது இந்த எரிச்சலான உணர்ச்சியை நம்பக்கூடாது. எல்லாவற்றையும் இது குழப்பி விடுகிறது. இந்த எரிச்சலான மனநிலையை அமைதிப் படுத்த வேண்டும். பின் நாம் நமது குறையை அறிவோடு பார்க்க முடியும். சரியான சூழலில் பார்க்க முடியும். 'அப்படிச் செய்தால் நான் தொடர்ந்து எடுக்கும் முடிவுகளும், எனது செயலும் சரியானவையாக இருக்கும். சமநிலையில் இருக்கும். அப்படிச் செய்தால் என் பழக்கப்பட்ட தன்மைகளை நான் மாற்ற முடியும். எனது எதிர்கால முடிவுகளும் இப்படி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளாக இருக்கும்.'
Which link in the chain of conditioning do we break?
Some say it can be broken at any point in the chain. You get the sensation and what follows is Thanha - thirst, desire, reaching out. Now it may be reaching out to push it away or reaching out to grab it. Next level is grasping. So you begin to cling. You thirst and then you grasp. You can cut it possibly between thirsting and grasping you may stop the process from becoming fully mature and fully developed. You might weaken it between feeling and reacting. You eat a candy that you like and then the ordinary person doesn't reflect at all, they just dive into it, they buy into it. and get some pleasure. 'Oh, wonderful!' Kind of like it will last forever. You hope it will last forever. You foget that it won't. Then when it goes away and you don't have that taste.' I wish I had that taste again' Ah, Grief for the world. Then you think I could get another one, nobody will notice.' You go get another one.' Covetousness for the world. Then you go there and then 'Damn, they are all gone.' Grief for the world again. And then you could say, Forget it. I will just listen to the Dhamma talk.' or it could be really the straw that broke the camel’s back. 'Damn! Christ! Why don't they have supper at this monastery.' (laughter).
Then it turns into thorough upadana (grasping). Then you make a thing about it on and on. You develop a whole personality around that. That is becoming (bhavo). You become that. You train yourself. You become that creature that is terribly upset when they don't get their own way. Not a good thing to come, your condition will become more and more extreme. You will have a terrible time. When you get what you don't want. Lamenting and depressed and worried .
Life is difficult to those who pick and choose. Life is easy for those who do not pick and choose. Train yourselves out of that. Do not train yourself to be a Connoisseur of this and that where I can only take wine between 1965 and 1967, if only grown in a certain area etc.. You are just narrowing and narrowing and make the world more difficult. More difficult for yourself. You are increasing your rigidity and narrowness instead of allowing yourself to be at ease. You don't have to stupid. You don't have to pick up a stone and eat it. You are not a goat. You are a human and so you eat food suitable for humans. But you don't make a fuss about everything. Fussy. If your mother was wise she would have taught you not to be fussy. You should learn to try things and open up. Don't make a big deal about this. That sends you into a world of very much more flowing, harmonious person. The other kind of training is, 'Davie, he doesn't like mashed potatoes.. etc that is the way he is.' Davie is going to be damn nuisance for the rest of his life to everybody including Davie. Davie can't stand gravy. (laughter) That is bad training. Undo your training. There is all kinds of places you can cut it. The first step often presented is ignorance, Avijja, non-knowledge. What follow non-knowledge is decisions. You make decisions out of your absence of knowledge. You decide based on the structure of your unknowing. So you decide to go up highway 5 instead of 5a because you didn't pay attention when we gave you directions to the monastery. That is based on genuine unknowing. That decision takes you way out of the way. You can't do much about that. You are going to make decisions based on what you know. What you know is usually distorted. It is lacking something. But before that what is it that shapes your non-knowledge.? What is its food? The hindrances. The five hindrances are the food by which your ignorance lives by and which informs your decisions. And your decisions shape your consciousness. You can't know what you don't know. How do you diffuse that, transform that? By watching the hindrances. Not feeding the hindrances. If you skillfully reduce anger, greed, sloth, agitation and doubt you will transform your ignorance. First of all you recognize, 'I am angry', 'I am irritable.' When you are irritable and angry recognize that your judgment is distorted. Obsessively concerned with the fault of an object or person or situation. Unwisely concerned. Then you go back to step 2. I don't trust this emotion. It distorts everything. Let me diffuse the emotion. Then I will see the fault wisely, in context. Then the actions and reactions that follow will be the right one. Balanced. That will change who I am, how I deal with things, how I access things. My future decisions will be based on that.
காரண காரியத் தொடர் என்ற சங்கிலியை முறிக்கவில்லையென்றால் சம்சாரச் சக்கரத்தில் தொடர்ந்து கொண்டே இருப்போம். இதனைப் படச்ச சமுப்பாத என்ற போதனையில் புத்தர் விளக்கியிருக்கிறார்:
மணிமேகலை 30-ஆம் காதை 103-116
பேதைமை சார்வாச் செய்கை யாகும் Avijjapaccaya sankhara: "Through ignorance the rebirth-producing volitions, or kamma-formations, are conditioned."
செய்கை சார்வா உணர்ச்சி யாகும் Sankhara-paccaya viññanam: "Through the kamma-formations (in the past life, the present) consciousness is conditioned."
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் Viññana-paccaya nama-rupam: "Through consciousness the mental and physical phenomena (which make up our so-called individual existence) are conditioned."
அருவுரு சார்வா வாயி லாகும் Nama-rupa-paccaya salayatanam: "Through the mental and physical phenomena the six bases (of mental life, i.e. the five physical sense-organs and consciousness as the sixth) are conditioned."
வாயில் சார்வா ஊறா கும்மே Salayatana-paccaya phasso: "Through the six bases the (sensory and mental) impression is conditioned."
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் Phassa-paccaya vedana: "Through (the sensory or mental) impression feeling is conditioned."
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் Vedana-paccaya tanha: "Through feeling craving is conditioned."
வேட்கை சார்ந்து பற்றா கும்மே Tanha-paccaya upadanam: "Through craving clinging is conditioned."
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி Upadana-paccaya bhavo: "Through clinging the process of becoming (consisting of the active and the passive life-process, that is to say, the rebirth-producing kammic process, and as its result, the rebirth-process) is conditioned."
கருமத் தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் Bhava-paccaya jati: "Through the (rebirth-producing kammic) process of becoming rebirth is conditioned."
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறெனத் தவலில் துன்பந் தலைவரும் என்ப. Jati-paccaya jaramaranam, etc.: "Through rebirth, decay and death, sorrow, lamentation, pain, grief and despair are conditioned. Thus arises this whole mass of suffering (in the future)."
This is in brief the whole P.S. or dependent origination.
மேலும் சுருக்கமாக இந்தத் தொடர் எப்படி உருவாகிறது என்பதையும் அதை எப்படி முறிப்பதென்பதையும் இவ்வாறு விளக்கலாம்:
இது இருந்தால், அது இருக்கிறது.
இது உண்டானால், அது உண்டாகிறது.
இது இல்லையானல், அது இல்லை.
இது ஒழிய, அது ஒழிகிறது.
14. புலனடக்கம் Top
கேள்வி: புலன்களை அடக்க ஏன் பயிற்சி செய்கிறோம்?
பதில்: விகாரைகளில் புலன்களைத் தூண்டும் செயல்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்த அறையின் ஓரத்தில் சினிமாப் பாடல்களோடு தொலைக்காட்சிப் பெட்டி ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கப் போவதில்லை. நாம் புலன்களை அடக்கப் பயிற்சி செய்கின்றோம். அதனால் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் காரணிகளில் தலையிடுகிறோம். இல்லையா?
உணர்ச்சிகள் எப்படி எழுகின்றன? எப்படித் தோன்றுகின்றன? ஒரு தொடர்பு, ஒரு சந்திப்பினால் தான் எழுகின்றன. தொடர்பு உண்டாக ஒரு பொருள் தேவை. அந்தப் பொருள் இருப்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். நம் கண்ணோ, காதோ (மற்ற புலன்களோ) வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அந்தப் பொருளைக் கண் பார்த்து, பார்த்ததை அறியும் போது ஒரு தொடர்பு உண்டாகிறது. பின் அதிலிருந்து உணர்ச்சி உண்டாகிறது. எனவே புத்தர் புலன்களை அடக்குவது நல்லது என்று கற்பித்தார். உலகத்தில் மனம் போன போக்கில் நடந்து கொள்ள வேண்டாம். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். புலன்களைச் சற்று அடக்குங்கள். புலன்களைத் தேவைக்கு ஏற்றவாறு திசை திருப்புங்கள். நெறிப் படுத்துங்கள். அவற்றைச் சாந்தப் படுத்துங்கள். புலன்களைத் தூண்டும் செயல்களைக் குறைத்து விடுங்கள். புலன்களைத் தூண்டும் செயல்களின் மீதான கவனத்தைக் குறையுங்கள். புலன்களைத் தூண்டும் பொருட்களில் உள்ள அடையாளங்கள் மீதான கவனத்தைக் குறையுங்கள். அதாவது, 'அது அழகு. எனக்கு அது பிடிக்கும். அந்த மிட்டாய் எவ்வளவு இனிப்பு?!' அல்லது 'எனக்கு அது பிடிக்கவில்லை. அது உடைந்திருக்கிறது. அது அழுக்கு. எனக்கு அதனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.' இவையெல்லாம் பொருளின் மீதுள்ள அடையாளங்கள் மேல் செலுத்தும் கவனம்.
புத்தர் இந்தக் கவனத்தைத் தெரிந்தே குறைக்கச் சொன்னார். இப்படிச் செய்வதால் நாம் கவனத்தை செலுத்த வேண்டிய இடத்தில் செலுத்த முற்படுவோம். அது தான் இந்தப் பிரமாண்டமான மனம் என்பது. மனத்தில் எத்தனை கற்பனைகள், விசித்திரங்கள், பாடல்கள், வர்த்தக விளம்பரங்கள், பழைய நினைவுகள், எதிர்காலம் பற்றிய கவலைகள், கனவுகள்! எங்கு துவங்குவது? எப்படித் துவங்குவது?
இங்கு தான் புத்தரின் திறமை பிரகாசிக்கிறது. அதனால் தான் அவர் ஒரு மேன்மையான ஆசிரியர். இதோ பார்! இப்படித் துவங்கு. இதனை நான்காகப் பிரிப்போம் (சதிபட்டானத்தில் வரும் நான்கு அடித்தலங்களைக் குறிப்பிடுகிறார்).
இந்த அறையில் முன்னும் பின்னும் நட. மனத்தில் கற்பனைக் கோட்டைகள் கட்டாமல் நட. இதைச் செய்ய மனத்திற்கு ஒரு வேலையைத் தருவோம். கால் பாதங்களில், நடக்கும் போது உள்ள உணர்வைக் கவனி. இதுவே ஆரம்பம். ஒவ்வொரு முறையும் கற்பனை உலகில் மூழ்காதவரை, மனத்தில் தெளிவு பிறக்கும். எல்லாம் இலகுவாகிறது. இந்தப் பயிற்சியைச் செய்யச் செய்ய அது மேலும் மேலும் இலகுவாகி விடுகிறது. மனத்தின் நடைமுறைப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும். பெரும்பான்மையானோருக்குத் தங்கள் மனம் சிதறிக் கிடக்கும் நிலை தெரிவதில்லை. சிதறலை அடக்கி மனத்தை அமைதிப் படுத்த ஒரு நல்ல இயற்கையான பயிற்சி இது. (நடைத் தியானம் பற்றிச் சொல்கிறார்.) சாதாரண மனத்தில், 99.9 விழுக்காடு நேரம் மனம் சிதறியே இருக்கிறது. நாம் தெரிந்தே இந்தச் சிதறலை அடக்கப் பயில்கிறோம். சிலருக்கு அதிலும் கவலை. 'ஓ! என் மனத்தைக் கட்டுப் படுத்தி விட்டால் என்னவாகுமோ? விசித்திரமாக இருக்குமே?' உங்களுக்குத் தெளிவு இருக்கும். எளிமை இருக்கும். சுமை இருக்காது. இந்த நிலையில் நல்ல ஆரோக்கியமான தீர்மானங்களை எடுப்பீர்கள். ஆனால் மனம் நழுவிக் கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் மனம் மிகவும் பலவீனமானதாக இருக்கும். நமது கவனத்தைச் செலுத்துவது நமக்குச் சுலபமாக இருக்காது. ஏனென்றால் சிதறிய மனப் பழக்க வழக்கங்களோடு பழகிப் போய் விட்டோம்.
தியான முகாம் சென்றால் 95 சதவீத நேரம் மனம் கற்பனை உலகிலேயே இருக்கிறது. ஆனால் ஐந்து சதவீதம் கவனம் செலுத்தினால்…. ஏன் ஒரு சதவீதம் கவனம் செலுத்தினால் கூட நல்லது தான். அந்த நேரத்தில் மனத்தின் தெளிவைக் கண்டு விட்டோம். ஒரு கதவு திறக்கத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்தால் கதவு முழுதும் திறந்து விடும். மூடுபனி கரையத் தொடங்கி விட்டது. தீடீரென்று ஒரு அறையில் தியானம் செய்வதை அறிகின்றீர்கள் (இதுவரை அதே அறையில் தியானம் செய்து வந்திருந்தாலும் மனம் வேறெங்கோ அலைந்து கொண்டிருந்தது). ஏதோ நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தார்ப் போல. எப்போது தூங்கப் போனோம் என்பது கூட நினைவில்லை. அது தான் விழிப்பது என்பது. அதனாலேயே ஞானம் பெருவதை விழித்தல் என்கின்றனர். விவேகத்திற்கு, தெளிவுக்கு, எளிமைக்கு கண்களைத் திறந்து விட்டோம். இதுவே நற்கடைப்பிடி (மனக் கவனம்) என்கிற பயிற்சி.
Why do we practice sense restraints?
Monasteries have low sensory input. Why don't we have a TV going in the corner of the room watching Mary Tyler Moore reruns. We are practicing sense restraint. So we are meddling with the input which results in sensations, right? Contact: How do we get feelings? How do sensations arise? Because of contact. There has to be an object. We have to be conscious of it. We have to have the eye or the ear working in order to make contact. And then from contact, sensations flows. So the Buddha recommends sense restraints. Don't just randomly walk through the world. Allowing everything to pour in. Restrain the senses. Direct the senses. Cool the senses. Reduce the sensory input. Reduce your attention to the sensory input. Reduce your attention to the signs in the sensory input. i.e 'That's t beautiful. I love that. I want that. That candy is just..I don't like that. It is broken. It is dirty. I really don't like that." That is attention to the sign.
The Buddha says reduce that. Consciously reduce that. Now you are reducing the very perceptions that shape the volume of your sensations. Now you have whole different set of sensations to deal with. Reduction of that. Various ways you can become conscious of this whole process. This is all an expedient, a means to an end to get you to focus somewhere, to start somewhere on this gigantic thing called your mind. The mind is just kind of a rolling playground of fantasies and songs and old commercials, drifting into the past, worrying about the future, dreaming. Where do you even start? How do you even begin?
This is the brilliance of the Buddha. That is why he is a great teacher. He says, now look here is where you start. Let’s divide it into four. Just take a look at this. Walk across the room and don't fantasize. I want you to walk across this room and here is something you can do to keep you here. Feel the sensations of the floor on your feet. Now that is a beginning. Every time you don't just roll away into the fog and the fantasy you clarify, you make it all simpler. If you keep doing that you will just increase the tendency to do it further and further. You have to undo that. it doesn't occur to most people, their mind is always like that. This is a systematic way to undo that process that is very natural. Ordinary persons mind, 99.9% of the time of the human population is just doing that al the time. We are going to deliberately to stop that. Some people think what would happens if I did that. That would be weird. You will be clear, simple, light. In reality many more are able to make some good choices. But you keep slipping away. The mind at first is very weak. The attention is short. It is small. It is deeply habitual. So you go to a retreat and 95% of the time you are gone. But if you can even get 5% even 1% you put something into the latch you know, so that you are starting to open the door. Just keep doing it and doing it and eventually the door starts to open. The fog starts to clear and you find yourself miraculously here in a simple empty room. As if you woke up from a long dream, right from the.. you can't even remember the beginning of it. That is waking up. That is why it is called awakening. Wake up into sanity, clarity, simplicity. That is the practice of mindfulness.
15. மனக் கவனம் Top
அஜான் சோணா (முன்னால்) துறவி காந்திபாளோ எழுதிய கட்டுரையிலிருந்து படித்தது:
மனக் கவனம் (நற்கடைப்பிடி) என்றால் என்ன? அதனை எப்படி நிலைநாட்டுவது? நற்கடைப்பிடி என்பது நாம் செய்யும் செயலை அதைச் செய்யும் போது அறிந்து இருப்பது. அதே சமயம் வேறு எதனையும் மனத்தில் கொண்டு வராமல் இருப்பது.
உதாரணமாக நடந்து கொண்டிருக்கும் போது பொதுவாக மனத்தில் பல சிதறிய என்ணங்கள் வந்து வந்து போகும் - பழைய நினைவுகள், விருப்பங்கள், பயம் போன்றவை. பலதரப்பட்ட எண்ணங்களும், கற்பனைகளும் வந்து செல்லும். இவற்றிற்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. மாறாக நடக்கும் போது உடலின் இயக்கம் சம்பந்தமான அறிநிலையும், நடக்கத் தேவையான கண் காது சம்பந்தப் பட்ட (சுற்றிலும் பார்த்து காது கொடுத்துக் கேட்டுத் தானே நடக்க வேண்டும்) அறிநிலையின் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு கவனிக்க வேண்டியதை மட்டும் கவனிக்கும் தியானிப்போர் (பெண்ணோ ஆணோ) மனத்திலிருக்கும் குப்பை கூளங்களை அகற்றி விடுகின்றனர்.
மேலும் இவ்வாறு நடைத் தியானப் பயிற்சி செய்வதால் கற்கும் திறமைகள் வாழ்க்கையில் மற்ற நேரங்களிலும் பயன் தரும். மனத்தில் தேவையற்ற எண்ணங்களோடு வாழ்பவன் அக்கறை இல்லாத மனிதனாவான். இந்த அக்கறை இல்லாதவன் மனத்தின் சிதறிய நிலையினால், குழப்பம் உண்டாக்கித் தனக்கும், மற்றவருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடும். ஏன் உயிருக்கே கூட ஆபத்து உண்டாக்கலாம்.
மற்றொரு பௌத்த மரபில் ஒரு பிரபலமான கதை உண்டு. இது சாதாரண மனிதனின் பயில்விக்கப்படாத மனத்திற்கும், நீண்ட காலம் பயில்விக்கப்பட்டுத் தெளிவான உள்ளம் கொண்ட ஒரு பெரியவரின் மனத்திற்கும் உள்ள வேறுபாட்டினைத் தெளிவாக விளக்குகின்றது. என் நினைவிலிருந்து இந்த ஜென் பௌத்தக் கதையைக் கூறுகிறேன். ஜென் பௌத்தமும் நற்கடைப்பிடி நிலை நாட்டுவதை அடித்தலமாகக் கொண்டுள்ளது. ஒரு ஜென் ஆசிரியரை அவரது சீடர் ஒருவர் சந்தித்து அறத்தின் முக்கியமான கருத்துக்களைப் பற்றிக் கூறுமாறு கேட்டார். சீடர், பௌத்தத் தத்துவத்தைப் பற்றி ஒரு நீண்ட போதனையை எதிர்பார்த்தார். மேலும் அற்புதமான மற்றும் மர்மமான விஷயங்களையும் ஆசிரியர் கூறுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அந்த இரண்டும் அவருக்குக் கிடைக்கவில்லை.
ஆசிரியர் இதை மட்டுமே கூறினார்: "நான் பசிக்கும் போது உணவு அருந்துவேன். கலைப்பாக இருக்கும் போது தூங்குவேன்."
ஏமாற்றமடைந்த சீடர், "ஆனால் இதைத்தானே சாதாரண மக்களும் செய்கின்றனர். நீங்கள் எப்படி மற்றவர்களிலிருந்து வேறுபடுகின்றீர்?" என்று கேட்டார்.
அதற்கு, "பெரும்பாலானோர் உண்ணும் போது ஆயிரம் எண்ணங்களை எண்ணுகின்றனர். தூங்கும் போது ஆயிரம் கனவுகளைக் காண்கின்றனர்," என்று பதில் கூறினார் ஆசிரியர்.
இதன் பொருள் என்னவெனில் பெரும்பான்மையான மனிதர்கள் நற் கடைப்பிடியுடன் இருப்பதில்லை. மனம் போகும் போக்கில் சென்று கட்டுப்பாடில்லாமல் வாழ்கின்றனர். ஆனால் (மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய) வேலையை முடித்த ஒருவர், மனத்திலிருந்து மாசுக்களை நீக்கிய ஒருவர், ஞானம் பெற்ற ஒருவருக்கு மனம் அலைந்து கொண்டிருப்பதில்லை. அவர் மனத்தில் குழப்பமோ, ஏமாற்றமோ, கற்பனைக் கோட்டைகளோ இல்லை. இருப்பது பிரகாசமான அறிநிலை ஒன்றே. இப்போதும், எப்போதும் பிரகாசிக்கும் அறிநிலை.
(நற்கடைப்பிடி: கடைப்பிடித்தல் என்றால் உறுதியாகப் பற்றுதல். எதனை உறுதியாகப் பற்றுகிறோம்? செய்யும் காரியத்தை. தியானத்தின் போது தியானப் பொருளை. உண்ணும் போது உணவு அருந்துவதை. உணவருந்தும் போது வேறு பல எண்ணங்களோடு இருந்தால் அது நற்கடைப்பிடியுடன் உணவருந்தியதாகக் கருத முடியாது. )
Ajahn Sona quotes from an essay written by (former) Bhikku Khantipalo
What is Mindfulness and how is it established? Mindfulness is the awareness of what one is doing while one is doing it and of nothing else. i.e. while walking instead of the usual distracted state of memories hopes and fears and so on, a jumble of thoughts and fantasies which have nothing whatever to do with walking. Instead while walking one confines attention to consciousness of bodily movements of the legs and such eye and ear consciousness as is necessary. The meditator concentrating on these bare essentials thereby clears out of his or her mind a lot of junk. Clearly this is useful to the ordinary living of life as well, for the person who allows his mind to be overgrown by a jungle of irrelevant thoughts is a careless person and his or her personal confusion may bring about the harm or even death both of himself and others.
A story famous in another Buddhist tradition illustrates very well the difference between the mind of the ordinary untrained person and the serene heart of the master disciplined by long practice at last gone beyond the need for self discipline by penetration of the inward Truth. This is a Zen story I quote from memory. Zen Buddhism is also based on the establishment on mindfulness. A certain Zen master was approached by a disciple who asked about the essentials of Dhamma probably expecting to receive a lengthy exposition of suttle Buddhist philosophy or perhaps something marvelous and mysterious. He got neither.
The Zen master only said: "When hungry, I eat. When tired, I sleep."
The disappointed disciple asked then, "But this is what ordinary people do. How do you differ?"
To which the Zen master replied, "When they eat most people think a thousand thoughts. When they sleep they dream a thousand dreams."
What this means is that most people are not very mindful since they allow the minds to wander as they will with very little restraint whereas one who has finished the job, reached enlightenment by cutting out of his heart the defilements has no wandering mind, no delusions, no fantasies. But brilliant awareness, now. All the time.
16. மஞ்சுஶ்ரீ Top
அஜான் சோணா துறவி காந்திபாளோ எழுதிய கட்டுரையிலிருந்து படித்தது:
தீமையின் மூன்று வேர்களாவன: அவா, வெறுப்பு மற்றும் அறியாமை.
இங்கு அவா என்பது அனைத்து ஆசைகளையும் நாடிச் செல்வது - பேராசையிலிருந்து நுட்பமான ஆசை வரை, கொஞ்சம் பிடித்திருக்கிறது என்பதிலிருந்து ஆபாசமான மோகம் வரை. எல்லாவிதமான பற்றுகளும் இதில் அடங்கும். அகம் மற்றும் புறம் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும், உயிருள்ள அல்லது உயிரற்ற எந்தப் பொருளானாலும் அதனைத் தன்னுடையதாக்க முயல்வது அதற்குச் சொந்தம் கொண்டாடுவது.
இவற்றுக்கெல்லாம் எதிர்மறையானது வெறுப்பு என்னும் தீய வேர். பலவிதமான அவாவும், ஆசையும் தீர்க்கப்படவில்லையென்றால் வெறுப்பு தோன்றுவதைக் காணலாம். அவாவைப்போல வெறுப்பும் பலவகைப்பட்டது. ஒன்றை நமக்குப் பிடிக்க வில்லை என்பதிலிருந்து பழி, கடுங்கோபம் போன்றவை. வெறுப்பை உண்டாக்கும் பொருட்களும் பலதரப் பட்டவை.
இந்தத் தீமையின் இரு வேர்கள் மனத்தில் தோன்றும் போது - ஒரே சமயத்தில் அவை இரண்டும் மனத்தில் இருக்க முடியாது. ஆனால் இவ்விரண்டும் மாறி மாறித் தோன்றலாம் - அறியாமை என்ற தீமையின் மூன்றாம் வேரும் மனத்தில் இருக்கும். உள்ளத்தில் அறியாமை இருக்கும் போது தான் மனிதர்கள் பேராசையும், வெறுப்பும் கொள்ள முடியும். அறியாமையில் இருக்கும் மனிதர்கள் தான் தங்கள் மனத்தால், பேச்சால், உடலால் வெறுப்பை அல்லது பேராசையைக் காண்பித்துத் தங்களுக்கும் மற்றவர்கட்கும் பாதிப்பை உண்டாக்க முடியும். அறியாமை என்பது சுறுசுறுப்பற்ற நிலை, மடமை, அறியாமல் இருப்பது, அறிவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது. (சோணா பிக்கு மேலும் சேர்ப்பது:) அறியாமை என்பது உண்மையான நிலையைத் தவறாகப் புரிந்து கொள்வது. அப்படித் தவறாகப் புரிந்து கொண்டதில் திட நம்பிக்கை கொண்டிருப்பது.
ஞானம் பெறாத ஒவ்வொரு மனிதரிடமும் இந்தத் தீமையின் மூன்று வேர்களும் உள்ளன. இந்த மூன்று வேர்களின் கலவையில் தான் பல்வேறுபட்ட மன மாசுகள் பிறக்கின்றன - மோகம், பற்று, பொறாமை, ஆணவம், துவேஷம் போன்றவை. விவேகம் இல்லாத உள்ளத்தில் இந்த மாசுகள் அவ்வப்போது தோன்றி அவர்கள் பேச்சிலும் செய்கையிலும் தவறிழைக்க வைத்துத் தங்களுக்கும், மற்றவர்கட்கும் தீங்கு விளைவிக்கிறது.
இந்த மூன்று தீய வேர்களையும் உள்ளத்தில் ஊடுருவியுள்ள கூர்மையான அறிவென்னும் வாளினால் தான் வெட்டி எடுக்க முடியும்.
மகாயான பௌத்த மரபில் உள்ள ஓவியங்களில் போதிசத்தர் மஞ்சுஶ்ரீ இந்த மெய்யறிவை மனித வடிவில் குறிப்பிடுகிறார். ஒரு கையில் தீமைகளைக் களைந்திடத் தீப்பிழம்பான வாளோடும், மறுகையில் முழுமையான மெய்யறிவை உணர்விக்கும் புத்தகத்தோடும் சித்தரிக்கப்படுகிறார்.
Manjushri
Ajahn Sona quotes from an essay written by (former) Bhikku Khantipalo
The three roots of evil are greed, aversion and delusion.
Greed here means the tendency towards all sorts of desires - gross and subtle. From the slightest liking to the coarsest lust. All kinds of attachment, all tendencies to make me and mine whether the objects are physical or mental, sentient or non sentient.
The evil root of aversion is the opposite of all this and can be seen when the various kinds of greed and desire cannot be satisfied.. The range is similar to mere dislike to revenge and fury and the objects vary in the same way.
Whenever either of these evil roots are operating and they cannot operate simultaneously though they may alternate, there is also present the evil root of delusion. Only when delusion is present in the heart is it possible for people to be greedy or hateful. Only deluded people harm themselves let alone others, by expressing their greed and aversions in mind, speech and body. Delusion is dullness, stupidity, boredom, not understanding and not making any effort to understand. (Ajahn Sona adds) I should just add to that it is also a wrong conviction about reality. Just a misapprehension about the nature of reality.
These three roots of evil are present in every unenlightened person. And out of their combinations are born all the range of defilements - lust, attachment, jealousy, pride, malice which stain the unenlightened heart from time to time and cause evil actions to be made in speech and body resulting in troubles for the doer and many others.
The three evil roots can be cut off only by the wisdom called supramundane which is sharp, penetrating and has been compared to a sword.
You may see in Mahayana paintings that the bodhisattva Manjushri, a personification of supra mundane wisdom wields in one hand a flaming sword for cutting off the defilements while in the other he has a book, the treatise on the perfection of wisdom.
17. இங்கேயே! இப்போதே! Top
பெரும்பாலான மக்கள் கற்பனை உலகிலும், கனவு கண்டு கொண்டும் தங்கள் வாழ்க்கையை வீணாக்குகின்றனர். ஒரு நாற்காலியில் ஏன் அமர்ந்து கொண்டு இருக்கவேண்டும் என்பதும், (உட்கார்ந்து தியானம் செய்வது) அல்லது ஒரு பாதையில் முன்னும் பின்னும் ஏன் நடக்க வேண்டும் என்பதும், (நடந்து தியானம் செய்வது) அல்லது அவர்கள் கையைத் தூக்கும் போது, கையைத் தூக்குகிறோம் என்பதை ஏன் தெரிந்திருக்க வேண்டும் (எல்லாச் செயல்களிலும் கவனத்தோடு இருப்பது) என்பதும் அவர்களுக்கு விளங்குவதில்லை. அவ்வாறெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? அது சலிப்படையவைக்கும் (வெறுப்பூட்டும்) செயல் என்று நினைக்கின்றனர்.
இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? ஏனென்றால் அவ்வாறு செய்யவில்லையென்றால் நாம் தொடர்ந்து கனவுலகிலேயே மிதந்து கொண்டிருப்போம். அந்தக் கனவுலகிலிருந்து நாம் மீள வேண்டும். மீளும் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். இங்கேயே இந்நேரத்திலேயே இருப்பது எப்படிப்பட்ட அனுபவம் என்பதைத் தொடர்ந்து விசாரித்து, இங்கேயும் இப்போதே இருப்பது ஒரு சௌகரியமான நிலையாகும் வரை, தொடர்ந்து விசாரிக்க வேண்டும். பெரும்பாலானோர் இங்கே இப்போது இருப்பதைத் தவிர்த்து, அதை விட்டு அகன்றோட விரும்புகின்றனர். இங்கு போதுமான சுவை இல்லை. இப்போதய நிலை சுவாரசியமாக இல்லை. எனவே மனத்தில் வேறெங்காவது ஓடப் பார்க்கிறோம். ஒருவர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். சொல்லி முடித்தவுடன் ஒரு இடைவேளை வருகிறது. அமைதி நிலவுகிறது. உடனே நாம் மனத்தில் வேறு எதையாவது செய்ய நினைக்கின்றோம். பழைய நினைவுகள் மனத்தில் பளிச்சிடுகின்றன. 'அன்று கிணற்றில் நீச்சல் அடிக்கச் சென்றது… ஆற்றில் மீன் பிடித்து மகிழ்ந்தது.. அதுவும், இதுவும் நினைவில் எழுகிறது.. அன்று கடற்கரையில் உலவச் சென்றபோது சந்தித்த நண்பரைப் பற்றிய நினைவு.. பின் நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிய கனவு.." அந்த இடைவேளையை நிரப்ப எதையாவது நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் இங்கு/இப்போது மிகவும் வறட்சியாக நமக்குத் தெரிகிறது.
அதனால் தான் பெரியோர்கள் போதைப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றனர். போதைப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள். மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏன் இந்த அறிவுரைகள்? மக்கள் இவற்றை உட்கொள்ளக் காரணம் வறட்சியாகத் தோன்றும் தற்போதைய நிலையைச் சற்றுச் சுவாரசியப் படுத்தப் பார்ப்பதேயாகும். ஆனால் இவற்றை நாம் உட்கொள்வதால், சாதாரண நிலையில் இருப்பது, மேலும் கடினமாகி விடுகிறது. சாதாரண வறண்ட நிலையில் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போதைப் பொருட்களை மேலும் உட்கொள்ள உட்கொள்ளச் சாதாரண நிலையில் இருப்பது மேலும் கடினமாகி விடுகிறது. இருக்கும் தற்போதைய நிலை மேலும் பிரச்சனைக்குரியதாகி வறண்டு காணப் படுகிறது. இயற்கையாகவே நாம் இந்த நிலையிலிருந்து விலகப் பார்க்கிறோம். எப்படியாவது பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைப்பது தவறான வழி. ஏனென்றால் இந்த பாதையில் சென்றால் பொழுதைப் போக்குவதற்கு மேன்மேலும் அதி தீவிரத் தூண்டுதல் தேவைபடுகிறது. பின் வேறு எந்த நிலையில் (தூண்டுதல் இல்லாத நிலையிலும்) இருப்பதும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்தப் போதை நிலையும் ஒரு கட்டத்தில் திருப்தியற்றுப் போய்விடுகிறது.
எனவே நாம் வேறு பாதையில் பயணிக்க வேண்டும். நமது யுத்தி (intuition) நம்மிடம் சொல்வதற்கு எதிர்மறையான பாதை இது. ஒரு வெறுமையான அறைக்குள் சென்று அமைதியாக அமர வேண்டும். அப்படி அமரும் போது உண்டாகும் மனச்சஞ்சலம், வருத்தம் அல்லது பதற்றத்தைக் கண்டு ஓடாமல் இருக்க வேண்டும். அல்லது பயம், சலிப்பு உண்டாகலாம். அப்போதும் ஒடாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஓட நினைக்கும் போது உங்களால் சாதாரணச் சூழ்நிலைகளைச் சமாளிப்பது கடினமாகி விடுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தச் சஞ்சலங்களை நேருக்கு நேர் சந்தித்து - ஓடும் மனத்தை மீண்டும் இருக்கும் இடத்திற்கே கொண்டுவரும் போது - அந்த ஓட வேண்டும் என்னும் துடிப்பைச் சந்தித்து, துடிப்பைக் குறைத்து நாம் மீண்டும் அமைதியை நிலை நாட்டுகிறோம். இங்கேயே, இப்போதே. இந்தச் சாதாரணச் சூழ்நிலையிலேயே இருப்பது ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதை அறிகிறோம். 'ஆ! இந்தச் சாதாரண நிலையும் நல்ல நிலையே. அருமை! இதனை நான் மறக்கக் கூடாது!' என்று எண்ணுகிறோம். ஆனால் மறந்து விடுகிறோம், பின் மீண்டும் ஓடுகிறோம். வெறி நாய் துரத்தி வருவதைப் போல ஓடுகிறோம். இங்கிருந்து போய்விட வேண்டும். வேறு எங்காவது போக வேண்டும். மனத்தில் ஓட வேண்டும், எங்கேயாவது ஓட வேண்டும்.
நாம் செய்யும் பயிற்சி, கவனத்தை நிலை நிறுத்தும், அதற்குச் சக்தியூட்டும் ஒரு கலை. உங்கள் கவனத்தை இங்கேயே சாதாரண நிலையிலே நிலைக்க வைக்க முற்படுகிறோம். இருக்கும் சாதாரண நிலையில் அமைதி காணவில்லை யென்றால், வேறு எங்கு போய் அதைக் காணப் போகிறோம்? அமைதியைக் காணவே முடியாது. ஏனென்றால் நாம் எப்போதும் அசாதாரண நிலையை நாடுகிறோம். நாம் அதற்கு எதிர்மாறாக, இங்கேயே இப்போதே இருக்கும் சாதாரண நிலையின் மீது கவனத்தைச் செலுத்தி இந்நிலையை மத்தியப் படுத்திக் கொள்ளும் போது சாதாரண நிலை அசாதாரண நிலையாகிவிடுகிறது. அருமையான நிலையாகி விடுகிறது. பின் நமக்கு வேண்டிய திருப்தி, நன்மை, அமைதி எல்லாம் அளப்பரிய அளவு நம்மிடம் இருக்கும். இவை யெல்லாம் உட்கார்ந் திருக்கும் தலையணையின் மீதிருந்தே கிடைக்கின்றன (தியானம் செய்யும் இடத்திலேயே). இதனால் பல பிரச்சனைகளைத் தீர்த்து விடுகிறீர்கள் அல்லவா?
முழுமையான கவனம் இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் எந்தப் பயனும் இல்லை என்று நினைப்பது தவறு.
ஒரு சில மனிதரால் எந்தச் சூழ்நிலையிலும், தான் இருக்கும் நிலையில் கவனம் செலுத்த முடிவதில்லை.
ஆனால் ஒரு சமன்பாடுள்ள சாதாரண மனிதரால், அவர் தியானம் செய்யாதவராயினும், தங்கள் நிகழ்காலச் சூழ்நிலையில் புறத் தூண்டுதல் இல்லாமலும் குறிப்பிடத் தக்க காலத்திற்குக் கவனம் செலுத்த முடிகிறது. அவர்களால் தனியாக இருக்க முடியும். எந்தப் பொழுது போக்கும் இல்லாத போதும் சலிப்படையாமல் இருக்க முடியும், சுமார் அரைமணி நேரத்திற்கு (சிரிப்பு). இது பாராட்டத் தக்கது தான். இப்படித் தான் துவங்கவேண்டும். ஆனால் இவர்களும் ஒரு பூங்காவிற்குச் சென்று இருக்கையில் அமர்ந்திருக்கும் போது ஒரு அரைமணி நேரம் கழிந்தபின் சலிப்படையத் துவங்கி விடுவார்கள்.
எந்த அளவு பயில்கிறோமோ அந்த அளவு கவனத்தில் முன்னேறலாம். இந்த மனப் பாவனையைத் தொடர்ந்து செய்தால் நம்மால் ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம், ஏன் மதியம் முழுவதும் கூட எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையிலேயே இருக்க முடியும். இதை ஞானத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும் ஞானத்துக்குத் தேவையான ஒரு குணாதிசயத்தை வளர்த்துக் கொள்கிறோம். அது தான் கவனம். நற்கடைப்பிடி. இந்தக் கவனம் ஒரு அழுத்தம் தந்ததால் உருவான கவனம் இல்லை. கட்டளையிடப் பட்டதால் உண்டான கவனமும் இல்லை. அழுத்தம் இல்லாத கவனம். யாரும் இழுத்துச் சென்று கவனமாக இருக்க வைக்கவில்லை. கவனம் உள்ளத்தின் நிலையைச் சார்ந்திருக்கிறது. அது சார்ந்து இருக்கும் வரை நாம் நிதானமாக இருகிறோம். தசைகளுக்குப் பயிற்சி கொடுப்பது போல. அதனைப் பயன்படுத்தப் படுத்த, அது வலுவடைகிறது. அதே போலக் கடைப்பிடியையும் பயிற்சி செய்து வலுவாக்க முடியும். திரும்பத் திரும்பப் பயிற்சி செய்யலாம். பல வாய்ப்புகள் உள்ளன: ஒரு அறையில் நடக்கும் போது (ஒவ்வொரு அடி எடுக்கும் போதும் கவனத்தோடு எடுக்கலாம்), உணவருந்த உட்காரும் போது மற்றவர்களைப்போல் ஆயிரம் எண்ணங்களை ஓடவிடாமல், பசியாரலாம். ஜென் மாஸ்டர் சொன்னது போல, "பசிக்கும் போது உணவு அருந்துவேன். கலைப்பாக இருக்கும் போது தூங்குவேன்."
நாம் சாப்பிடும் போது என்ன நடக்கிறது என்பதைக் கவனித்திருக்கின்றீர்களா? ஒரு வாய் சாப்பிடுகிறோம். அடுத்த கணமே கற்பனை உலகிற்குச் சென்று விடுகிறோம். (அல்லது தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.) பின் கற்பனையிலிருந்து திரும்பி வரும்போது நாம் நினைப்பது, "அட, அதற்குள் பாயசம் முழுதும் சாப்பிட்டு விட்டேனா?" இதுவரை சாப்பிட்டவற்றையே கவனிக்கவில்லை. சாப்பிட ஆர்வத்துடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் உருசித்துச் சாப்பிடத்தான் வந்தோம். ஆனால் இடையே கற்பனை உலகில் மூழ்கி விட்டோம்.
நற்கடைப்பிடி என்பதை ஒரு மோசமான அனுபவமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. மென்மையாக இருக்க வேண்டும், புன்னகையோடு இருக்க வேண்டும். இருக்கும் இடம் நம்மை வரவேற்க வேண்டும். இந்தக் கணத்திற்கு வரும் போது, நற்கடைப்பிடியுடன் இருக்கும் போது மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வறண்ட பயிற்சியாக இருக்கக் கூடாது. நற் கடைப்பிடி ஞானம் பெருவதற்கான ஒரு முக்கிய அடித்தலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஞானத்தின் ஒரு பெரும் பங்கை நற் கடைப்பிடி வகிக்கிறது. ஆனால் இந்தக் கவனம் (புலன்களைக் கவரும்) ஒரு பொருளின் காரணமாக இருந்தால் அது நிலையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு மிட்டாய் கிடைத்து, அதைச் சாப்பிடும் போது தான் கவனத்தை இந்தக் கணத்திற்குக் கொண்டுவரமுடியும் என்பது சரியான வழியல்ல. நினைத்துப் பாருங்கள், உங்களது மகிழ்ச்சிகரமான நேரங்களெல்லாம் உங்கள் கவனம் அந்த நேரத்தில், அந்த இடத்தில் இருந்தமையின் காரணமாகத்தான் இருந்திருக்கிறது. அதனை வலுப்படுத்த வேண்டும். ஆனால் அது கண்ணுக்கோ, காதுக்கோ, நாக்குக்கோ சுவை தரும், கவற்சியூட்டும் பொருளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தவறான வழி. நிகழ் காலத்திற்கு எனது கவனத்தைக் கொண்டு வர நான் ஐஸ்-கிரீம் சாப்பிட வேண்டும், அல்லது குதிரைச் சவாரி செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடாது. அல்லது பாராஸூட்டிலிருந்து கீழே குதிக்கும் போது தான் நான் உயிருடன் இருப்பதையே உணர்கிறேன் என்று எண்ணக் கூடாது (சிரிப்பு). செங்குத்தான பாறையில் ஏறும் போது தான் நிகழ்காலத்தில் சிலரால் கவனத்தோடு இருக்க முடிகிறது. பின் அதையே செய்து கொண்டிருக்கும் போது தான் அவர்களால் நிகழ்காலத்தில் இருக்க முடிகிறது. மகிழ்ச்சி உண்டாகும் காரணத்தை அறிந்து கொண்டால், நீங்கள் இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லை. மக்களுக்கு இது புரிவதில்லை. 'மிட்டாய் சாப்பிடும் போது எனக்கு இன்பமாக இருக்கிறது - அதனால் மிட்டாய் தான் இன்பம் கொடுத்தது.' என்று எண்ணுவது தவறான கருத்து. அந்த இன்பத்தை நாம் தான் தோற்று வித்தோம். தோற்றுவித்த போது மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவ்வளவுதான் (மிட்டாய் சாப்பிடும்போது கவனத்தோடு நிகழ்காலத்தில் இருந்தோம் என்பதால் தான் இன்பம் தோன்றியது). எனவே மகிழ்ச்சியை எப்படி உண்டாக்குவது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Here and now
Most people fantasize and dream their life away. They can't understand why they should be present in an empty room walking down a corridor (as in walking meditation), sitting in a chair (as in sitting meditation) or knowing that they are raising their hand (as in being mindful of all activity). Why would they do that? That is boring.
Because if you don't do that, you stay in dreamland. You have to pull yourself out of dreamland. So you have to exercise that - all the time. Again and again. See what it is to be here and now until here and now can be alright. Most people flee the here and now. Not enough juice to it. Not interesting enough. So you flee in your mind. Somebody is telling you a story and you are right there and the moment they stop and everything goes quiet you look for something else to (do)...you go back to "remember the time when I was water skating ..this and that.. I met this person at the beach..I wonder what I will do tomorrow.." Anything to fill that because it is really dry here - in the present.
This is why wise people have warned people against doing drugs. Do not do drugs, do not take alcohol. Why? One reason people take things is to make things a little less dry. But actually it makes it more and more difficult to be in ordinary consciousness. To be in ordinary dry consciousness. You can't stand it. The more you take these things (drugs), the more you can't stand to be in ordinary consciousness. It is terribly problematic and dry. Intuition is to find some way of getting away from it. Entertain yourself somehow. But that is the wrong direction because you need stronger and stronger stimulus. And it becomes more and more unbearable to be in any other condition. But then that condition turns out to be very unsatisfactory too.
So we have to go the other way. it is counter intuitive. We have to sit quietly in an empty room and not run away from the anxiety that comes from that. Or the fear, the boredom or the restlessness that comes from that. Every time you run away you it makes less possible for you to be ever to be happy in an ordinary situation. Every time you face it - sit down there and bring the mind back - that impulse to run is met and overcome and you are at peace again. It is alright, it is alright. It turns out that, 'Hmn, this ordinary present is just fine. Wonderful! Don't let me forget.' We forget and then we must run, you know. It's terrible! It is like the devil is at our heels. We got to get out of here. We have to go somewhere. We got to run in the mind, somewhere. This is an art of refinement of attention. When your attention is fully here in the ordinary.. How are you ever going to be at peace if you are not at peace in the ordinary? You will never be at peace. You are always looking for the extraordinary. But this is kind of a reversal. When your attention is strong and centered and you are not running the ordinary is wonderful - becomes extraordinary. Then you have access to an unlimited supply of what you are seeking - satisfaction, well being, peace. You can get it without having to stir from your cushion. And you solve a lot of problems in life right there, haven't you?
It is not all or nothing. It is a matter of degree. The extreme person is unable under almost any circumstances to be present. Whereas a well adjusted normal, but non-meditator does have substantial periods of time when they are not really over wrought and driven by things and they can function without any extra stimulus. They can be alone and they can be without entertainment without going out of their minds (for) more than half an hour. And that is good. That is the beginning of things. But even they will fade after they can go to the park and sit on the bench. After half an hour they have to move on. It is a matter of degree. We keep cultivating this and then we find we can spend an hour, two hours all afternoon not needing much. That is not enlightenment yet but is certainly one of the factors of enlightenment that is starting to assemble there. Attention is there. It is not like a stressed attention, not a commanded attention. no tension, you are not having to drag yourself there. Your attention is just resting there. You are there. As long as it is resting there you are at ease. It is like exercising a muscle. You build up. You exercise mindfulness. Again and again. All kinds of opportunities: walking across the room, sitting down to eat. "When I eat, I just eat. Most people think a thousand thoughts." (quote from a Zen master)
Have you noticed at the meal what happens? One bite and then you are gone. And you emerge at the other side and you think "was that the last of the apple pie?... You missed the whole meal. The whole point was to be there for the whole meal, spoonful after spoonful. To be there. Don't make it a bad experience. Just gently be there, smilingly be there. It has to be a place that welcomes you. When you bring yourself into the present moment, when you are mindful, you have to coax yourself in with happiness. Remember how it feels like to be happy? it is not a dry exercise. Remember mindfulness is one of the factors of enlightenment. The way to enlightenment is strongly realized on mindfulness but also mindfulness constitutes a substantial part of enlightenment. When you are well and happy your mindfulness is there. But If it is based on a sensory object it is in a very shaky condition. So if it is just because you got some chocolate that you have been lured into the present and mindfulness has gone for it. You have been lured into the present. .. Your pleasant times when you are present is to do with mindfulness. So you have to strengthen it. But don't make it dependent on having a special treat through the eye and ear and the tongue. I have to bring myself to the present by ice cream or by going horse back riding. I am only alive when I am para shooting. (laugh) Some people have to hang off cliffs without any ropes in order to get themselves present. And they have to keep doing that to be present. Be much easier if you discover the secret of your happiness. People haven't figured it out. 'I know my happiness is associated with chocolate - so must be the chocolate.' It is not very good figuring. You are the one that generates it. Happens to be an association with that. Get a hold of the thing that makes happiness itself.
18. கனவுகள் Top
முழுமையாக ஞானம் பெற்றவர்கள் கனவு காண்பதில்லை. கனவு காண்பவர்களிடத்திலும் கனவுகளில் தோன்றும் காட்சிகள் மாறுபடுவதைப் பார்க்கலாம். சமீபத்தில் சில மனோதத்துவ நிபுணர்கள் செய்த ஒரு ஆராய்ச்சியைப் படித்தேன். அவர்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஆராய்கின்றனர். அவை பெரும்பாலும் உதவாக்கரை ஆராய்ச்சிகள் தான். ஆனால் அவ்வப்பொது சில பயனுள்ள ஆராய்ச்சிகளையும் செய்கின்றனர். அவர்களது அத்தகைய ஒரு ஆராய்ச்சியின் முடிவு, சாதாரண மனிதனின் கனவுகளில் 65 சதவீதம் கவலையும், அச்சமும், மனச்சஞ்சலமுமே உள்ளது என்பதாகும். ஆனால் தியானம் செய்வோர் அவர்கள் ஞானம் பெறாவிடினும், அவர்கள் கனவுகளில் மனக் கவலைகள் குறைந்தே தென்படுகின்றன. பயிற்சி செய்து, நற்கடைப்பிடி இருந்து, ஒழுக்கம் தவறாமல் நடந்து கொண்டால் முந்தைய நமது செயல்கள் நமக்குக் கவலை தருவதில்லை. ஆனால் எப்போதும் போலத் தவறான, திறமையற்ற குறும்புச் செயல்களைச் செய்து கொண்டிருந்தால் அதை எப்போது நிறுத்தப் போகிறோம் என்று உங்கள் மனத்தை அது உறுத்திக் கொண்டே இருக்கும். பின் அதே கவலைகள் கனவுகளிலும் வந்து உங்களைத் துரத்தும்.
உங்களைச் சீர்படுத்திக் கொண்டு, மனநிறைவு தரும் நடத்தையும், திருப்திகரமான பேச்சும், தெளிவான குறிக்கோளும் இருந்தால் உங்கள் மனம் பிரகாசமாகவும், உள்ளம் இலேசாகவும் இருக்கும். அவ்வாறே உங்கள் கனவுகளும் பிரதிபலிக்கும். அவ்வப்போது பழைய நினைவுகள் தொந்தரவு செய்யலாம். ஆனால் பெரும்பாலும் கனவுகளினால் பிரச்சனை இருக்காது. உங்களால் அமைதியாகத் தூங்கவும், நன்கு ஓய்வெடுக்கவும் முடியும். மேலும் அப்படியே கவலை தரும் கனவுகள் வந்தாலும் அல்லது மோகமோ, அச்சமோ, கோபமோ கனவில் வந்தாலும் அது பெருமளவில் விளைவுகளை விட்டுச் செல்லாது. இந்தக் கவலைகளைக் கனவுலகிலேயே நாம் சமாளித்து விடுவோம். கனவுகளினால் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம் பூண்டு கொள்வோம். மோசமான கனவுகள் வந்தாலும் அது நம்மிடம் அதிகம் ஒட்டிக் கொள்ளாது.
Dreams
The fully enlightened person does not dream. But you will also find a difference in the content of dreams. I was reading a study done by psychologists. They are studying everything mostly useless. But occasionally interesting information. They say that the average person 65% of dream content are full of fear and anxiety. When you really pay attention to the content mostly worried and afraid and anxious. Whereas a meditator even before enlightenment may have a very small anxiety content. If you practice, get your mindfulness together, have your virtue you are not worried about what you did yesterday. You are upto mischief again and it is on your mind when you are going to stop doing that. And then it goes right into your dreams and chases you down the street..
If you straighten out and if you are happy with your behaviour and if you are happy with your speech and you have a clear view of where you are going then your mind is bright and your heart is light and it will also be in your dreams. You will get the odd churning up from the past and so forth, sometimes vividly but a great reduction in terms of ability to sleep and get some rest and also not to have difficult dreams. Also if anxiety dream content comes up or lust or fear or anger anything like that comes up it will not leave much residue. You handle it even in your dreams, you start to Teflon coat your mind even in your dreams. This stuff comes up but it doesn't stick so much.
19. தூண்டப்படுவதற்கு இரண்டு வழிகள் Top
நாம் தூண்டப் படுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நேரடித் தூண்டுதல். உங்களுக்குக் கவர்ச்சிகரமான ஒருவர் உங்கள் அறைக்கு வருகிறார். நீங்கள் அவரால் கவரப்பட்டு விடுகின்றீர்கள். அதே போல உங்களுக்குப் பிடிக்காத ஒருவர் உங்கள் அறைக்கு வந்து சில வார்த்தைகளால் உங்களைச் சாடுகிறார். உங்களுக்கு அவர் மீது வெறுப்பு உண்டாகிறது. இது ஒரு மட்டம். இந்த மட்டத்தில் நீங்கள் தூண்டப்படுவதால் உங்களை அதிகம் குறைகூற முடியாது.
அடுத்த மட்டம், நீங்கள் உள்ள அறையில் யாருமே இல்லை. ஆனாலும் ஒருவர் மீது மோகம் மனத்தில் தோன்றுகிறது. அல்லது ஒருவரைப் பற்றி மனத்தில் கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் தோன்றுகின்றன. நேரடித் தூண்டுதல் கூடத் தேவை இல்லை, யாரும் அருகில் இல்லாமல் தானாக மனத்தில் இந்த என்ணங்கள் எழுகின்றன: ஏதோ அறையில் பேய்கள் உலாவுவது போலவும் அல்லது நாம் கனவுலகில் இருப்பது போன்ற எண்ணங்கள்.
இந்தத் தானாகக் கற்பனையில் தோன்றும் முடிவில்லா மோகத்தையும், வெறுப்பையும் முடித்துக் கொள்வது அல்லது பெருமளவு குறைத்துக் கொள்வது நல்லது. பாதியளவு குறைத்து விட்டால் கூட நன்றாக இருக்கும், இல்லையா? உங்களது துயரம் ஐம்பது சதவீதம் குறைந்து விட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! வாழ்க்கை ஐம்பது சதவீதம் மேம்பட்டு விடும் அல்லவா? பத்து சதவீதம் அல்லது ஐந்து சதவீதம் மேம்பட்டால் கூட எவ்வளவு அருமையாக இருக்கும்! எனவே உங்கள் உள்ளம் இலேசாகவும், மகிழ்ச்சியாகவும், தொந்தரவு செய்யப் படாமலும் கற்பனை உலகில் மூழ்காமலும் இருந்தால் மிகவும் நல்லது.
சிக்மன்ட் ஃரோய்ட் (Sigmund Freud 1856-1939) என்ற ஒரு மனோதத்துவ நிபுணர் கூறியது நினைவுக்கு வருகிறது. பல நேரங்களில் அவர் கருத்துக்கள் தவறானவை என்றாலும், சில சமயம் அவர் கூறியவை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் சொன்னார், "மகிழ்ச்சியான ஒருவர் கற்பனை உலகுக்குச் செல்வதில்லை." அதாவது ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவர் கற்பனை செய்வதில்லை. கற்பனை செய்யும் போது நாம் வேறு எங்கோ இருக்க விரும்புகிறோம் என்பதையே அது குறிக்கிறது. இருக்கும் இடம் வசதியாக இல்லை என்பதையும் அது காட்டுகிறது. மாறாக மகிழ்ச்சியான நிலையில், இருக்கும் இடம் திருப்தியாக உள்ளது. எனவே கற்பனை செய்யத் தேவை இல்லை.
எனவே உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இது சாத்தியமான காரியமே. சாதாரண மனிதனுக்கு இது விளங்குவதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இது போன்ற ஒரு விகாரைக்குச் செல்லுங்கள். உட்கார்ந்து தனியாகவோ கூட்டத்துடனேயோ மனப் பாவனை செய்யுங்கள். விடாமுயற்சியுடன் திரும்பத் திரும்ப மனப் பாவனை செய்யுங்கள். பின் மனத்தின் நடவடிக்கைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்றவை (பாதையில் தொடர்வதும், முயற்சி எடுப்பதும்) உங்கள் கையிலேயே உள்ளது.
Two levels of provocation
There are two levels. One is a direct provocation. Somebody you find attractive comes into the room and you find yourself attracted. Somebody you dislike comes into the room and says something nasty to you and you find yourself having aversion. That is one level which is less blamable than the next level which is, there is nobody in the room and suddenly you have lust or there is nobody in the room and suddenly you think that 'son of a bitch'. You don't even need a provocation, right? Just comes spontaneously without anybody being around. Just like there are ghosts or dreams around.
So get that business of spontaneous endless fantasies of desire and aversion out of the way or reduced significantly. What if you cut it down by half, wouldn't it be nice? What if you cut your suffering down by 50%? Wow, that would be nice. Life would be wholly different wouldn't it. It would be 50% better. What about 10% or even 5% - nothing to be sniffed at. That would be wonderful. So if you are basically light, happy and untroubled, tending not to fantasize..
Remember this quote from Freud. Occasionally I find Freud quite good even though he is off the mark in many ways. He said, "The happy person does not fantasize" I was a bit puzzled first because from a Freudian point of view there is no such thing as a happy person. Just ordinary human misery. What he meant was when a person is happy that they don't fantasize. He did acknowledge that people can be happy for periods of time. When you are happy you don't fantasize. Fantasy is an indication that you'd rather be somewhere else. You are not happy with where you are. But if you are happy, at that time you don't fantasize. So increase your level of happiness. This is entirely possible. It may never occur to the ordinary person. This is what you do. You go to a monastery like this. Sit down, do it again and again in a group or manage to stay there and start beginning to train your mind and then you start to see what you are up to. What the mind is up to. The rest is up to you.
20. பயிற்சி செய்வோரை மூன்று வகையாகப் பிரிக்கலாம் Top
விடாமுயற்சியோடு பாடுபடுபவர் சிலர்.
சிலர் ஒரு சில வார்த்தைகள் (தம்மத்தைப் பற்றி) கேட்டு விட்டுத் தாங்களாகவே கருத்துக்களைப் புரிந்து கொள்பவர்கள்.
மற்றொரு வகையானோர் 'பஞ்ஞா' அதாவது மெய்ஞ்ஞானம் கொண்டவர், 'எனக்கு இது முழுவதும் விளங்குகிறது. தெளிவாக உள்ளது. பயிற்சி தான் செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு நாள் செய்து விடுவேன்.'
பக்தியுள்ளவர்களாக இருந்தால் இவ்வாறு நினைக்கலாம்: 'ஆசிரியர் சொல்வது எனக்கு முழுவதும் விளங்கவில்லை ஆனால் அவர் நல்ல அறிவுரைதான் கூறுவார் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. ' அல்லது, 'புத்தர் மெய்யறிவு படைத்தவர். நல்லதைத்தானே அவர் சொல்வார்.' இவர் 'சத்தா' (Saddha) மாதிரி அல்லது நம்பிக்கை கொண்ட மனிதர்.
ஆக மூன்று வகையிலும் பயிற்சி செய்வோர் உள்ளனர். ஒருவர் உழைப்பாளி. அவர் விடாமுயற்சியோடு உழைப்பவர். இன்னொருவர் மிகவும் கூர்மையான அறிவாளி, சாரத்தை மிக விரைவில் புரிந்து கொண்டிருக்கின்றார். மூன்றாமவர் பக்தி கொண்டவர். அவருக்கு நம்பிக்கை உள்ளது.
இந்த மூன்று வகையானவரும் தங்கள் நோக்கத்தை அடைவார்கள். முயல்பவர் எல்லோரும் நோக்கத்தை அடைவார்கள்.
Three types of practitioners
If you got it in you to have persistence . If you are the type that catches a glimpse of it, if you can figure it out.. you are clever you can see. If you are a faith type person you may think, 'I am not sure what he is talking about I am sure the Buddha was a wise person' or 'I am sure they are giving good advice' They are the saddha type, the faith type. The panna type or wisdom type is, 'I absolutely understand this. It is clear to me. I just can't do it. But I will do it.' So there three ways of going at it. One is the person who is just a worker. They work. The other person is a confident truster. He has faith. The third one is very sharp, clever. They got it figured. And they will all get there. They will all get there.