ஐந்து சீலங்கள்

ஐந்து சீலங்கள் (ஒழுக்கங்கள்) Five Precepts

Audio Malgudi Subha

Pāṇātipātā veramaṇī sikkhā-padaṃ samādiyāmi.

I undertake the training rule to refrain from taking life.

பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.

எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

Adinnādānā veramaṇī sikkhā-padaṃ samādiyāmi.

I undertake the training rule to refrain from stealing.

அதினாதானா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.

கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.

Kāmesu micchācārā veramaṇī sikkhā-padaṃ samādiyāmi.

I undertake the training rule to refrain from sexual misconduct.

காமேசு மிச்சாசாரா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.

தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருக்கும் பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.

Musāvādā veramaṇī sikkhā-padaṃ samādiyāmi.

I undertake the training rule to refrain from telling lies.

முஸாவாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.

தவறான பேச்சு உரைக்காமல் இருக்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

Surā-meraya-majja-pamādaṭṭhānā veramaṇī sikkhā-padaṃ samādiyāmi.

I undertake the training rule to refrain from intoxicating liquors & drugs that lead to carelessness.

சுரா-மேரயா-மஜ்ஜா-பமா தத்தானா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.

போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

*****

பாலி மொழிச் சொற் பொருள்

veramaṇī வேரமணி = abstaining from தவிர்

sikkhā சிக்கா = study, discipline. ஒழுக்கம், சீலம்

sikkhāpada சிக்காபத = a precept; a religious rule. ஆன்மீகப் பயிற்சி விதி

samādinna சமாதின்னா = taken upon oneself. உறுதி எடுத்தல்

pāṇa பான = life; breath; a living being. பிராணி

pāṇātipātā பனாதிபாத = killing கொல்லுதல்

adinnādāna அதினந்தானா = theft. திருட்டு

kāma காமா = pleasure; lust; enjoyment; an object of sexual enjoyment. காமம்

kāmesu micchācārin காமேசு மிச்சாசாரா = transgressing in lusts, தவறான பாலியல் உறவுகள்

micchācāra மிச்சாசாரா = wrong behaviour. தவறான நடத்தை

musāvāda முஸாவாதா = lying. பொய் பேசுதல்

Pamāda பமாத = carelessness, negli- gence, indolence, remissness அக்கறையில்லாத

Sura, meraya, majja சுரா-மேரயா-மஜ்ஜா = Various alcoholic intoxicants மூன்று விதமான போதை தரும் குடி

Sura was brewed from rice or flour (Sn.398; Vin.I,205), meraya was distilled alcohol made from sugar or fruit and sometimes flavored with sugar, pepper or the bark of a certain tree (M.I,238). Majja was made from honey and asava was made from the juice of the palmyra palm or the wild date palm and could be either just brewed or distilled (Vin.II,294). (Source http://sdhammika.blogspot.com/2009_08_01_archive.html )

விளக்கவுரை Based on this English Commentary

ஆன்மீகப் பயிற்சி விதி என்பது நாமாகவே கட்டுப் பாட்டுணர்வோடு ஏற்றுக் கொள்ளும் ஒழுக்கம். எல்லாப் பௌத்தர்களும் பஞ்சசீலம் என்று கூறப்படும் ஐந்து ஒழுக்கங்களை ஏற்று அதன் படி தங்கள் தினசரி வாழ்வில் நடந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வொழுக்கங்களைக் கடைப் பிடிப்பதால் படிப்படியாக மற்றவரின் உயிர் மீதும், பொருள் மீதும், கண்ணியத்தின் மீதும், அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை மீதும் மரியாதை ஏற்படுகிறது. நம் மனது தெளிவடைவதன் மீதும் மரியாதை ஏற்படுகிறது. புத்தர் இவ் வொழுக்கங்களைக் கடைப்பிடிப்பது மற்றவருக்கும் நன்மை தரும் என்கிறார். மேலும் 'அன்பும் மரியாதையும் உருவாகி, பயன் தரும் எண்ணமும், சர்ச்சை இன்மையும், அமைதியும், நட்பும், உடன்பாடும் ஏற்படும்' என்கிறார். இந்த ஐந்து ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பது ஒரு பரிசு என்று புத்தர் கூறுகிறார். இந்தப் பரிசு கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் பயன் தரும் என்கிறார். 'இவ்வொழுக்கங்களைக் கடைப் பிடிக்கும் ஒருவர் கணக்கிலடங்கா உயிரினங்களுக்குப் பயத்திலிருந்தும், வெறுப்பிலிருந்தும் , மன வேதனை யிலிருந்தும் பெரும் விடுதலையைப் பரிசாகத் தருகிறார்' மேலும் புத்தர் பண்பினை 'விடுதலை தரும்' என்றும் 'ஒரு முகப்படுத்த உதவும்' என்றும் இவ் வொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் ஒரு முக்கியப் பலன் 'மாசற்ற நிலையினால் ஏற்படும் மகிழ்வு' என்கிறார்.

தங்கள் நலன் மீது அக்கறை இருப்பதாலும் மற்றவர் நலன் மீதும் மகிழ்வின் மீதும் அக்கறை இருப்பதாலும் பௌத்தர்கள் பஞ்சசீலத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.

ஐந்தாம் ஒழுக்கம்: பௌத்த மதத்தைப் பின் பற்றுவோர் போதை யளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்பொருட்கள் மனதைத் தெளிவற்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது. பௌத்த மதத்தைப் பின் பற்றுவதற்குக் காரணம் மனதைத் தூய்மைப் படுத்துவதே. இது மட்டும் அல்ல. போதை அளிக்கும் பொருள் அருந்துவதால் மற்ற சிக்கல்களும் ஏற்படும். புத்தர் கூறுகிறார்: 'குடிப்பதால் ஆறு வகை அபாயம் ஏற்படுகிறது: செல்வம் குறையும், சச்சரவுகள் அதிகரிக்கும், உடல் நலம் கெடும், கெட்ட பெயர் கிடைக்கும், முட்டால் தனமாக நடந்து கொள்வோம், அறிவுக் கூர்மை குறையும்'. தம்மபதத்தில் புத்தர் எச்சரிக்கிறார்: '..மயக்கம் உண்டாக்குகிற குடிவகைகளைக் குடிக்கிறவர், இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக் கொள்கிறார்கள்'. பௌத்த வழக்கப்படி இந்த ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்காதோர் மற்ற நான்கு ஒழுக்கங்களையும் கடைப் பிடிக்கச் சிரமப்படுவார்கள்.