சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 1.10
ஆலவக சூத்திரம்: ஆலவகனுக்குப் போதனை
Alavaka Sutta: Discourse to Alavaka
Translated from the Pali by: Piyadassi Thera
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: பியாதாசி தேரர்
* * *
இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:
ஒருமுறை புத்த பகவான் அளாவியில் ஆலவகன் என்ற யாக்ஷையின் குடிலில் தங்கியிருந்தார். அப்போது ஆலவகன் பகவரிடம் வந்து,
"துறவியே, வெளியே போ," என்றான். "சரி போகிறேன் நண்பரே," என்று கூறிப் பகவர் வெளியேறினார்.
"துறவியே உள்ளே வா." -- "சரி வருகிறேன் நண்பரே," என்று கூறிப் பகவர் உள்ளே வந்தார்.
"துறவியே, வெளியே போ," என்று ஆலவகன் பகவரிடம் இரண்டாம் முறையாகக் கூறினான். -- "சரி போகிறேன் நண்பரே," என்று கூறிப் பகவர் வெளியேறினார்.
"துறவியே உள்ளே வா." -- "சரி வருகிறேன் நண்பரே," என்று கூறிப் பகவர் உள்ளே வந்தார்.
"துறவியே, வெளியே போ," என்று ஆலவகன் பகவரிடம் மூன்றாம் முறையாகக் கூறினான். -- "சரி போகிறேன் நண்பரே," என்று கூறிப் பகவர் வெளியேறினார்.
"துறவியே உள்ளே வா." -- "சரி வருகிறேன் நண்பரே," என்று கூறிப் பகவர் உள்ளே வந்தார்.
"துறவியே, வெளியே போ," என்று ஆலவகன் பகவரிடம் நான்காம் முறையாகக் கூறினான். -- "முடியாது நண்பரே. வெளியேற மாட்டேன். நீ செய்ய முடிந்ததைச் செய்து கொள்," என்று பகவர் கூறினார்.
"உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன், துறவியே. பதில் கூறாவிட்டால், உன் மனத்தைக் கட்டிப் போட்டு அல்லது நெஞ்சைப் பிளந்து அல்லது கால்களைப் பற்றிப் பெருங்கடலின் அக்கறையில் வீசி விடுவேன்," என்று மிரட்டினான்.
"நண்பரே தேவர்கள், மாரர்கள், பிரமர்கள் வாழும் உலகிலோ அல்லது துறவிகள், பிராமணர்கள், தெய்வங்கள், ஆவிகள், மனிதர்கள் வாழும் உலகங்களிலோ எவராலும் என் மனத்தைக் கட்டிப்போட அல்லது என் நெஞ்சைப் பிளக்க அல்லது கால்களைப் பற்றிப் பெருங்கடலின் அக்கறையில் வீசக் கூடியவர் யாரையும் காணவில்லை; இருந்தாலும் நண்பரே, கேட்க விரும்புவதைக் கேள்."
Thus have I heard:
On one occasion the Blessed One was living in the abode of Alavaka, the Yakkha (demon), at Alavi. Then Alavaka approached the Blessed One and said: "Get out, recluse (samana)." — "Very well, friend," so saying the Blessed One went out.
"Come in, recluse." — "Very well, friend," so saying the Blessed One entered.
"Get out, recluse," said Alavaka to the Blessed One a second time. — "Very well, friend," so saying the Blessed One went out.
"Come in, recluse." — "Very well, friend," so saying the Blessed One entered.
"Get out, recluse," said Alavaka to the Blessed One a third time. — "Very well, friend," so saying the Blessed One went out.
"Come in, recluse." — "Very well, friend," so saying the Blessed One entered.
"Get out recluse," said Alavaka to the Blessed One a fourth time. — "No, O friend, I will not get out. Do what you will."
"I will ask you a question, recluse. If you do not answer me, I will confound your mind (thoughts), or cleave your heart, or take you by your feet and fling you over to the further shore of the ocean (para gangaya).
"Well, friend, I do not see anyone in the world of Devas, Maras, Brahmas, or among the generation of recluses, brahmanas, deities, and humans, who could either confound my mind or cleave my heart, or take me by the feet and fling me over to the further shore of the ocean; nevertheless, friend, ask what you will."
Then Alavaka addressed the Blessed One in verse:
பகவரை ஆலவகன் பா வடிவில் கேட்டான்:
1. What wealth here is best for man?
What well practiced will happiness bring?
What taste excels all other tastes?
How lived is the life they say is best?
மனிதனுக்குச் சிறந்த செல்வம் எது?
எதை நன்கு பயின்றால் மகிழ்ச்சி கிடைக்கும்?
சுவைகளுள் சிறந்த சுவை எது?
எப்படி வாழ்ந்தால் அதைச் சிறந்த வாழ்வு என்பார்கள்?
[The Buddha:]
2. Faith is the wealth here best for man;
Dhamma well practiced shall happiness bring;
Truth indeed all other tastes excels;
Life wisely lived they say is best.
[புத்தர்:]
நம்பிக்கையே மனிதனுக்கு சிறந்த செல்வம்;
அறத்தைப் பயில்வதே மனிதனுக்கு சிறந்த மகிழ்வைத் தரும்;
வாய்மை என்ற சுவையே, சுவைகளுள் சிறந்தது;
மெய்ஞ்ஞானத்தோடு வாழ்ந்த வாழ்வையே சிறந்த வாழ்வு என்பார்கள்.
[Alavaka:]
3. How does one the currents[1] cross?
How is ocean's[2] existence crossed?
How is one's suffering quelled?
How is one purified?
[ஆலவகன்:]
வெள்ளத்தைத் தாண்டுவது எப்படி? [1]
கடலைத் தாண்டுவது எப்படி? [2]
துக்கத்தை முடிப்பது எப்படி?
எவ்வாறு ஒருவன் தன்னைத்
தூய்மைப் படுத்திக் கொள்வது?
[The Buddha:]
4. By faith are currents crossed;
By diligence is the ocean crossed;
By effort is one's suffering quelled;
By wisdom is one purified;
[புத்தர்:]
நம்பிக்கையோடு வெள்ளத்தைக் கடக்க வேண்டும்;
விடாமுயற்சியோடு கடலைக் கடக்க வேண்டும்;
நன்முயற்சி செய்து துக்கத்தை முடிக்க வேண்டும்;
மெய்ஞ்ஞானத்தோடு ஒருவன் தூய்மைப் படுகிறான்;
[Alavaka:]
5. How does one wisdom win?
How does one wealth obtain?
How does one come to fame?
How does one friendship win?
How does one without sorrow fare
When from this world to another he's gone?
[ஆலவகன்:]
எவ்வாறு மெய்ஞ்ஞானத்தை வெல்வது?
செல்வம் பெறுவது எப்படி?
கீர்த்தி பெறுவது எப்படி?
நண்பர்களை வெல்வது எப்படி?
இந்த உலகிலிருந்து அடுத்ததற்குச் செல்லும் போது துயரப்படாமல் இருப்பது எப்படி?
[The Buddha:]
6. The mindful and discerning one,
Who in the Dhamma plead his faith;
By his will to hear that Dhamma
Wins the wisdom of Nibbana.
[புத்தர்:]
நற்கடைப்பிடியும் விவேகமும் உள்ளவன்,
அறத்தில் நம்பிக்கை உள்ளவன்;
அந்த அறத்தைக் கேட்க விரும்புவதால்
நிப்பாண ஞானத்தை வெல்கிறான்.
7. Who is tactful and energetic,
And gains wealth by his own effort;
Fame will he acquire by truth,
And friendship by his giving.
திறமையானவன் சுறுசுறுப்பானவன்,
தன் முயற்சியினாலேயே செல்வம் பெறுகிறான்;
வாய்மையோடு கீர்த்தி பெறுவான்,
தானம் செய்து நண்பர்களை அடைவான்.
8. He who has faith and is also truthful,
virtuous, firm, and fond of giving;
By virtue of these four conditions
Will never in the hereafter grieve.
நம்பிக்கை உள்ளவன் வாய்மையுடையவன்,
ஒழுக்கம் உடையவன், உறுதியுடையவன், தானம் செய்ய விரும்புபவன்;
இந்த நான்கு மேன்மையான பண்புகளினால்
மறுமையில் துயரப்படுவதில்லை.
9. Truth and Restraint,
Charity and Forbearance,
Are the great reformers of man;
If there be any better
Ask of other samanas and brahmanas.
வாய்மையும், அடக்கமும்,
தானமும், பொறுமையும்:
இவையே மனிதனை மேன்மையாக்குவன;
இதைவிட மேன்மையான இயல்புகள் இருந்தால்
மற்ற சமணரையும், பிராமணரையும் கேள்.
[Alavaka:]
10. Why should I now try to ask
From other samanas and brahmanas
When this day I came to learn
What weal is here and hereafter?
[ஆலவகன்:]
மற்ற சமணரையும் பிராமணரையும்
ஏன் கேட்க முயற்சி செய்யவேண்டும்,
எனக்கு நன்மை பயப்பனவற்றை
இன்று நானே தெரிந்து கொண்ட பின்?
11. This for my weal indeed
The Buddha to Alavi came;
A gift always bears a fruit;
This too I learned today.
எனது நன்மைக்கென்றே
புத்தர் அளாவி வந்தார்;
தானமென்ற நல்வினை நற்பயன் தரும்,
என்பதையும் இன்று நானும் கற்றுக் கொண்டேன்.
12. From village to village and town to town
I shall now wander along
Praising that Supreme Buddha
And the Dhamma well preached by him.
கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக
நான் இனி நடமாடி,
மேன்மையான புத்தரைப் போற்றுவேன்.
அத்தோடு சிறப்பாக மொழியப்பட்டுள்ள தம்மத்தையும் போற்றுவேன்.
Having thus spoken, Alavaka said to the Blessed One:
"Most excellent, O Gotama, is thy teaching, most excellent. Just as a man would set upright what is overturned, reveal what is concealed, point out the way to one gone astray, bring an oil lamp into the darkness so that those with eyes could see objects; even so the Dhamma (doctrine) has been declared in many a manner by the Venerable Gotama. I take refuge in the Venerable Gotama (the Buddha), in the Dhamma and in the Sangha (the Order). May the Venerable Gotama accept me as a disciple who has taken refuge, from this day forth while life lasts."
இவ்வாறு கூறிய பின், ஆலவகன் பகவரிடம் கூறினான்:
"அருமை ஐயா கௌதமரே! உங்கள் போதனை அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரே - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி உள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். இன்றிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் என்னை அவரிடம் அடைக்கலம் சென்ற சீடராக ஏற்றுக் கொள்வாராக."
* * *
Notes
விளக்கம்:
1. "Current" stands for the Pali word 'ogha' which is fourfold — sense pleasures, becoming, wrong views and ignorance (kama-ogha, bhava-o., ditthi-o., avijja-o).
"வெள்ளம்" என்பது (பாலியில் 'ஓகா') நான்கு வகைப்படும் - புலன் இன்பங்கள், பவம் (தோன்றுகை), தவறான பார்வை மற்றும் அறியாமை.
2. "Ocean" stands for the Pali word 'annavam' which is metaphorically used to signify repeated existence, or samsara.
"கடல்" என்பது (பாலியில் 'அண்ணாவம்') சம்சாரச் சுழலைக் குறிக்கும். திரும்பத் திரும்பப் பிறப்பெடுத்துத் துக்கம் அனுபவிப்பதைக் குறிக்கும்.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
©1999 Buddhist Publication Society. See details English Source
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.