விடுதலை
The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்
தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro Bhikkhu
Release
விடுதலை (மோட்சம்)
§ "Our practice is to go against the stream, against the flow. And where are we going? To the source of the stream. That's the 'cause' side of the practice. The 'result' side is that we can let go and be completely at ease."
"நமது பயிற்சி நீரோட்டத்திற்கு மாறாக எதிர் நீச்சல் போடும் பயிற்சியாகும். சரி, எங்கே போகிறோம்? ஓடை தோன்றும் ஊற்றுக்குப் போகிறோம். அதுவே பயிற்சியின் ஒரு பக்கமான 'வினை'. மறுபக்கமான 'விளைவு' தான் நாம் விடுவிக்கப்பட்டு அனுபவிக்கும் அமைதி."
§ "The stages of the practice... Actually the different stages don't say what they are. We simply make up names for them. As long as you stay stuck on these made-up names, you'll never get free."
"பயிற்சியில் பற்பல படிகள் உள்ளன... வெவ்வேறு படிகளும் தங்களை விவரித்துக் கொள்வதில்லை. நாமே அவற்றுக்குப் பெயர் சூட்டுகிறோம். நாம் வைத்த பெயர்களுடன் பற்றுக் கொண்டிருக்கும் வரை, நாம் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியாது."
§ "When teaching people, you have to teach them in line with their temperaments and aptitudes, but eventually they all come to the same point: letting go."
"பயிற்சியை மக்களுக்குக் கற்பிக்கும் போது, அவர்களின் இயல்பான மனப்பாங்குக்கும் திறமைக்கும் தகுந்தார்ப் போலக் கற்பிக்க வேண்டும். ஆனால் இறுதியில் அவை அனைத்தும் ஒரு குறிக்கோளையே கொண்டுள்ளன: அதுவே விடுவித்தல்."
§ "Nibbana is subtle and takes a lot of discernment. It's not something that the force of desire can reach. If we could get there through the force of desire, everyone in the world would have gotten there by now."
"நிப்பாணம் மிக நுட்பமானதொன்று. அதை அடைய ஏக விவேகம் தேவை. அதீத ஆசைப் படுவதால் மட்டுமே அதனை அடைய முடியாது. ஆசைப் படுவதால் மட்டுமே அதை அடையமுடியுமென்றால், இந்நேரம் உலகில் உள்ள அனைவருமே அந்நிலையை அடைந்திருப்பார்கள்."
§ "Some people talk about, 'temporary nibbana, temporary nibbana,' but how can nibbana be temporary? If it's nibbana, it has to be constant. If it's not constant, it's not nibbana."
"மக்கள் சிலர், 'தற்காலிக நிப்பாண நிலை, தற்காலிக நிப்பாண நிலை,' என்று பேசுகின்றனர். ஆனால் நிப்பாணம் எப்படித் தற்காலிகமாக இருக்க முடியும்? நிப்பாணம் என்பது நிலையானது. அது நிலையாக இல்லாவிட்டால் அது நிப்பாணமாக இருக்க முடியாது."
§ "When they say that nibbana is empty, they mean that it's empty of defilement."
"நிப்பாணம் வெறுமையானது என்று சிலர் சொல்வது, அது மாசுகள் அற்றது என்பதையே குறிக்கும்."
§ "Right where there's no one to be pained, no one to die. Right there. It's in each and every person. It's as if your hand were palm-down, and you turn it palm-up — but only people of discernment will be able to do it. If you're dense, you won't see it, you won't catch on to it, you won't go beyond birth and death."
"பிணி இல்லாத, மரணம் இல்லாத ஓர் இடம். அங்கேயே உள்ளது. ஒவ்வொருவரிடத்திலும் அந்த இடம் உள்ளது. இது உள்ளங்கையைக் கீழ்ப்புறமாக வைத்திருந்து பின் மேற்புறமாகத் திருப்பி வைப்பது போன்றதே - ஆனால் விவேகம் உள்ளவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். நீங்கள் அறிவிலியாக இருந்தால் இதைப் பார்க்க முடியாது, இதை அறிந்து கொள்ள முடியாது, பிறப்பு, இறப்பு என்பதற்கு அப்பால் போக முடியாது."
§ "The heart when it's released is like the fire element in the air. When fire goes out, it isn't annihilated anywhere. It still permeates space, simply that it doesn't latch onto any kindling, so it doesn't appear.
"தீச்சுடர் காற்றில் பறப்பது போலவே விடுதலை பெற்ற உள்ளமும் இருக்கும். தீ அணையும் போது அது எங்கேயும் அழிந்து போவதில்லை. அது ஆகாயத்தை ஊடுருவி விடுகிறது. ஆனால் அங்கு அதைத் தூண்டுவதற்கு எதுவும் இல்லாததால் அது வெளியே தெரிவதில்லை."
"When the mind 'goes out' from defilement, it's still there, but when new kindling comes, it doesn't catch fire, doesn't latch on — not even to itself. That's what's called release."
"மாசுகளிலிருந்து 'விடுபட்ட' மனம் இன்னும் இருக்கிறது, ஆனால் தூண்டுதல் எதேனும் தோன்றினாலும் அது பற்றிக் கொள்வதில்லை. அதனோடும் பற்றுக் கொள்வதில்லை - தன்னோடும் கூடப் பற்றுக் கொள்வதில்லை. இதையே விடுதலை (மோட்சம்) என்கிறோம்."
* * * * * *