அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்


தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro Bhikkhu


People Practicing the Dhamma 
அறவழி நடக்கும் மக்கள்

குறிப்பு: பொதுவாகப் பௌத்தர்கள் ஐந்து சீலங்களைக் (ஒழுக்கங்களை) கடைப்பிடிப்பார்கள். ஆனால் விஷேட நாட்களின்போதும் அல்லது ஒரு விகாரைக்குச் சென்று தங்கும்போதும் எட்டு சீலங்களைக் கடைப்பிடிப்பது வழக்கம்.

§ One of Ajaan Fuang's students — a seamstress — was criticized by a customer: "You practice the Dhamma, don't you? Then why are you so greedy, charging such high prices? People practicing the Dhamma should take only enough profit just to get by."

Although she knew her prices were fair, she couldn't think of a good answer, so the next time she saw Ajaan Fuang she told him what had happened. He replied, "The next time they say that, tell them — 'Look, I'm not practicing the Dhamma to be stupid.'"

    தையல் வேளை செய்து வாழ்க்கை நடத்தும் அஜான் ஃபுவாங்கின் ஒரு மாணவி, அவரது வாடிக்கையாளர் ஒருவரால் குறை கூறப்பட்டார்: "நீ அறவழி நடப்பவள் தானே? பின் ஏன் இப்படிப் பேராசையோடு இவ்வளவு அதிகமாகக் காசு வாங்குகிறாய்? அற வழி நடப்போர் பிழைப்புக்குத் தேவையான இலாபம் சம்பாதிப்பது தான் சரி."

    அந்த பெண்ணுக்குத் தான் அளவாகக் காசு கேட்பது தெரிந்திருந்தும் அவர் கேட்ட கேள்விக்குத் தகுந்த பதிலை கூற முடியவில்லை. அதனால் அடுத்த முறை அஜான் ஃபூவாங்கைச் சந்திக்கும் போது அவரிடம் நடந்ததைக் கூறினார். அவரது பதில், "அடுத்த தடவை யாராவது அப்படிச் சொன்னால், அவர்களிடம், 'இதோ பார், நான் அற வழி நடப்பது முட்டாளாக இருப்பதற்காக இல்லை,' என்று கூறு."

§ When I first went to stay at Wat Dhammasathit, the B-52's from Utapao Air Force Base could sometimes be heard high overhead in the wee hours of the morning, flying on their bombing missions into Cambodia. Each time I heard them, I began to wonder what business I had meditating when there were so many injustices in the world that needed to be fought. When I mentioned this to Ajaan Fuang, he said, "If you try to straighten out the world without really straightening yourself out first, your own inner goodness will eventually break down, and then where will you be? You won't be able to do anybody — yourself or anyone else — any good at all."

    முதல் முறையாக நான் வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரைக்குத் தங்கச் சென்ற போது, 'உதாபவோ' (Utapao) ராணுவ விமான தளத்திலிருந்து B-52 விமானங்கள் விடியற் காலையில் பறந்து செல்வதைக் கேட்க முடிந்தது. அவை கம்போடிய நாட்டில் குண்டு வீசுவதற்காகப் பறந்து கொண்டிருந்தன. (அது வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த சமயம்) ஒவ்வொரு முறை விமான ஒலியைக் கேட்கும் போதும் எனக்குள் இந்த எண்ணம் தோன்றும்: 'உலகில் பல அநீதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அவற்றை எதிர்த்துப் போராடாமல் நான் இங்கு தியானத்தில் அமர்ந்திருப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?"  இந்த எண்ணத்தை அஜான் ஃபூவாங்கிடம் சொன்ன போது அவர், "உங்களை நேர்ப்படுத்துவதற்கு முன்னர் உலகத்தைச் சீர்ப்படுத்த முயன்றால், உங்களுக்குள் உள்ள நல்லெண்ணமும் நன்மையும் நாளடைவில் அழிந்துவிடும். பின் உங்கள் நிலைமை என்னவாகும்? யாருக்கும் - உங்களுக்கும், மற்றவருக்கும் - எதையும் செய்ய இயலாமல் போய்விடும்."

§ "As soon as we're born, we're sentenced to death — just that we don't know when our turn will come. So you can't be complacent. Start right in and develop all your good qualities to the full while you still have the chance."

    "பிறந்தவுடனேயே நமக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு விட்டது - நமது திருப்பம் எப்போது வரும் என்பது மட்டும் நமக்குத் தெரிவதில்லை. எனவே விழிப்பற்று (அஜாக்கிரதையாக) இருந்துவிட முடியாது. வாய்ப்புக் கிடைக்கும் போது நல்ல பண்புகளை முழுமையாக வளர்த்துக் கொள்ள முயற்சி எடுங்கள்."

§ "If you want to be a good person, make sure you know where true goodness really lies. Don't just go through the motions of being good."

    "நீங்கள் நல்லவராக இருக்க விரும்பினால், உண்மையான நன்மை எங்கு இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நல்ல காரியங்களைச் செய்யும் செயல்களில் ஈடுபட்டிருந்தால் மட்டும் போதாது."

§ "We all want happiness, but for the most part we aren't interested in building the causes for happiness. All we want are the results. But if we don't take an interest in the causes, how are the results going to come our way?"

    "நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் அந்த மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் காரணங்களை வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை. விளைவுகளை மட்டுமே விரும்புகின்றோம். ஆனால் காரணங்களில் ஆர்வம் காட்டா விட்டால் விளைவுகள் நமக்கு எப்படிக் கிடைக்கப் போகிறது?" 

§ When I first went to practice meditation with Ajaan Fuang, I asked him if people really were reborn after death. He answered, "When you start out practicing, the Buddha asks you to believe in only one thing: karma. As for things aside from that, whether or not you believe them isn't really important."

    நான் முதன் முதலில் அஜான் ஃபுவாங்குடன் தியானப் பயிற்சி செய்யத் துவங்கியபோது அவரிடம், “உண்மையிலேயே மனிதர் மாண்ட பின் மறுபிறப்பு  எடுப்பார்களா என்று கேட்டேன். அவர் பதில்: "பயிற்சியைத் துவங்கும் போது புத்தர் ஒன்றில்  மட்டும் நம்பிக்கை வைக்கச் சொன்னார்: கன்மம். அதைத் தவிர மற்ற விஷயங்களெல்லாம், அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அவ்வளவு முக்கியமல்ல."

§ One year, shortly before the Rains Retreat — a time when people traditionally make resolutions to step up their practice of the Dhamma — one of Ajaan Fuang's students approached him and said that she was thinking of observing the eight precepts during the Rains, but was afraid that going without the evening meal would leave her hungry.
He retorted: "The Buddha fasted until he didn't have any flesh at all — just skin and bones — so that he could discover the Dhamma to teach us, but here we can't even stand going without one single meal. It's because of this that we're still swimming around in the cycle of birth and death."
As a result, she resolved that she'd have to observe the eight precepts on each Buddhist sabbath — the full moon, the new moon, and the half-moon days — during the three months of the Rains. And so she did. At the end of the Rains she felt really proud of herself for having kept to her resolution, but on her next visit to Ajaan Fuang, before she was able to broach the topic at all, he commented, "You're lucky, you know. Your Rains Retreat has only twelve days. Everyone else's is three months."
On hearing this she felt so embarrassed that she has observed the eight precepts every day throughout each Rains Retreat ever since.

    ஒரு ஆண்டு, மழைக்கால சங்கமத்துக்கு முன்னர் - அந்த மூன்று மாதங்களின் போது பொதுவாக மக்கள் அறவழியில் நடப்பதற்கு மேன்மேலும் பயிற்சி செய்வதாக நேர்ந்து கொள்வார்கள் -  அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர் அவரை அணுகித் தான் மழைக்காலத்தின் போது எட்டு சீலங்களைக் கடைப்பிடிக்க நினைத்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் மாலை உணவு சாப்பிடாவிட்டால் தான் பசி தாங்க முடியாமல் போய்விடுவோமோ என்று கவலைப்படுவதாகவும் கூறினார்.

    அதற்கு அவர்: "புத்தர் பட்டினி கிடந்து எலும்பும் தோலுமாக - நமக்கு அறத்தைக் கற்பிப்பதற்காகக்   கஷ்டப்பட்டார். ஆனால் நாம் தினசரி ஒரு வேளை உணவு அருந்தாமல் இருக்கத் தயங்குகிறோம். அதனால் தான் இந்தப் பிறப்பு, இறப்பு என்ற சம்சார சக்கரத்தில் இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறோம்."

    இதைக் கேட்ட அப்பெண் மழைக்காலத்தின் மூன்று மாதங்களின் போது பௌத்தப் புனித நாட்களான பௌர்ணமி, அம்மாவாசை மற்றும்  இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள இரண்டு அர்த்த சந்திர நாட்களிலும் தான் எட்டு சீலங்களைக் கடைப்பிடிப்பதாக நேர்ந்து கொண்டார். அதன்படியே அந்தத் தினங்களில் எட்டு சீலங்களைக் கடைப்பிடித்தார். மழைக்காலம் முடிந்ததும் அவர் தான் நேர்ந்ததைக் கடைப்பிடித்ததில் பெருமை கொண்டார். ஆனால் அடுத்த முறை அஜான் ஃபுவாங்கைச் சந்திக்கும் போது அவரிடம் அந்தச் செய்தியைச் சொல்வதற்கு முன்னர் அஜான் ஃபுவாங் (அவர் மனத்தைப் படித்தவர் போல) , "நீ அதிர்ஷ்டமுள்ளவள் தெரியுமா? உனது மழைக்கால சங்கமத்திற்குப் பன்னிரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன. மற்றவர்க்கெல்லாம் மூன்று மாதங்கள் இருந்தன."

    இதைக் கேட்ட மாணவி மிகவும் வெட்கப் பட்டார்.  அதிலிருந்து ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் அவர் தினசரி எட்டுச் சீலங்களைக் கடைப்பிடித்து வந்தார்.

§ Another student was meditating in Ajaan Fuang's presence when — in a spasm of mindlessness — she slapped a mosquito that was biting her arm. Ajaan Fuang commented: "You charge a high price for your blood, don't you? The mosquito asks for a drop, and you take its life in exchange."

    மற்றொரு மாணவி அஜான் ஃபுவாங்கின் அருகில் தியானம் செய்துகொண்டிருந்த போது - அறி நிலையில் இருக்கவேண்டியதை மறந்து - தன் கையில் கடித்த கொசு ஒன்றைத் தன்னையறியாமல் அடித்து விட்டார். இதைக் கவனித்த அஜான் ஃபுவாங்: "உனது உதிரத்துக்கு நீ மிகப்பெரிய விலை கேட்கிறாயே? அந்தக் கொசு உன்னிடம் ஒரு சொட்டு இரத்தம் கேட்டது. நீ பதிலுக்கு அதன் உயிரையே எடுத்துக் கொண்டாயே."

§ A young man was discussing the precepts with Ajaan Fuang and came to number five, against taking intoxicants: "The Buddha forbade alcohol because most people lose their mindfulness when they drink it, right? But if you drink mindfully it's okay, isn't it, Than Phaw?"
"If you were really mindful," he answered, "you wouldn't drink it in the first place."

    ஒரு வாலிபன் அஜான் ஃபுவாங்குடன் ஐந்து சீலங்களைப் பற்றிப் விவாதித்துக் கொண்டிருக்கையில் கள்ளுண்ணாமை என்ற ஐந்தாவது ஒழுக்கத்தைப் பற்றி: "புத்தர் போதைப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்றது நாம் அறி நிலை தவறிக் கவனக் குறைவோடு இருக்கக் கூடாது என்பதால் தானே?  ஒருவர் அறி நிலையோடு மது அருந்தினால் அதில் ஒன்றும் தவறில்லையல்லவா ஐயா?" என்று கேட்டார்.

    "உண்மையிலேயே நீ அறி நிலையோடு இருந்தால், குடிக்கத் துவங்கவே மாட்டாயே," என்று அஜான் ஃபுவாங் பதில் அளித்தார்.

§ There seem to be more excuses for breaking the fifth precept than for any other. One evening another student was conversing with Ajaan Fuang at the same time that a group of people were sitting around them in meditation. "I can't observe the fifth precept," he said, "because I'm under a lot of group pressure. When we have social occasions at work, and everyone else in the group is drinking, I have to drink along with them."
Ajaan Fuang pointed to the people sitting around them and asked, "This group isn't asking you to drink. Why don't you give in to their group pressure instead?"

    ஐந்து ஒழுக்கங்களில் ஐந்தாம் ஒழுக்கமான கள்ளுண்ணாமையை மீறுவதற்கே அதிகச் சாக்குப் போக்குகள் கண்டுபிடிக்கப் படுகின்றன போலும். ஒரு மாலைப் பொழுதில் ஒரு மாணவர் அஜான் ஃபுவாங்குடன் பேசிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் பலர் அவர்கள் அருகில் தியானத்தில் அமர்ந்திருந்தனர். "என்னால் ஐந்தாம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை," என்றார் அவர். "ஏனென்றால், என்மீது கூட்டத் தாக்கம் (group pressure) அதிகமாக இருக்கிறது. வேலையில் நண்பர்களுடன் அளவளாவும் (socialize) போது அனைவரும் மது அருந்துவதால், நானும் அவர்களோடு சேர்ந்து குடிக்க வேண்டியிருக்கிறது."

    அஜான் ஃபுவாங் அருகில் தியானத்தில் அமர்ந்திருப்போரைச் சுட்டிக் காட்டி, "இந்தக் கூட்டம் உங்களைக் குடிக்கச் சொல்லவில்லையே.  இவர்களின் கூட்டுத் தாக்கத்துக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது?"

§ The seamstress saw her friends observing the eight precepts at Wat Dhammasathit, and so decided to try it herself. But in the middle of the afternoon, as she was walking through the monastery, she passed a guava tree. The guavas looked inviting, so she picked one and took a bite.
Ajaan Fuang happened to be standing not far away, and so he remarked, "Hey. I thought you were going to observe the eight precepts. What's that in your mouth?"
The seamstress realized in a jolt that she had broken her precepts, but Ajaan Fuang consoled her, "It's not all that necessary to observe the eight precepts, but make sure you observe the one precept, okay? Do you know what the one precept is?"

"No, Than Phaw. What is it?"

"Not doing any evil. I want you to hold onto this one for life."

     தையல் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் மாணவி அவரது தோழிகள் எட்டு சீலங்களை வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் ஒழுகுவதைப் பார்த்துத் தானும் எட்டு சீலங்களைக் கடைப்பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைத்து அதன் படி நடக்கத் துவங்கினார். மதிய வேலையில் விகாரையில் ஒரு கொய்யா மரத்தருகே நடந்து கொண்டிருந்தார். (எட்டு ஒழுக்கங்களில் ஒன்று மதியத்திற்குப் பின் உணவருந்தக் கூடாது என்பது.) மரத்தில் இருந்த கொய்யாப் பழங்கள் கண்களை ஈர்த்தன. எனவே ஒரு பழத்தைப் பரித்து ஒரு வாய் உண்டார்.
 
    எதேச்சையாக சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த அஜான் ஃபுவாங் அதைப் பார்த்து "அட, நீ எட்டு சீலங்களை அணுகப் போவதாக எண்ணியிருந்தேன். உன் வாயில் இருப்பது என்ன?" என்று கேட்டார்.

    அப்பெண் அப்போது, தான் எட்டு சீலங்களை முறியடித்து விட்டதை உணர்ந்தார். ஆனால் அஜான் ஃபுவாங் அவரைத் தேற்றினார், "எட்டு சீலங்களை  ஒழுகுவது மிக முக்கியமானது அல்ல. ஆனால் ஒரு சீலத்தை மட்டும் எக்காரணம் கொண்டும் முறியடிக்காதே. அந்த ஒன்று என்ன வென்று தெரியுமா?"

    "தெரியவில்லையே, ஐயா. அது என்ன அவசியம் ஒழுக வேண்டிய சீலம்?"

    "தீயதைச் செய்யாதே.  உன் வாழ்நாளுக்கும் அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்."

§ A woman came to Wat Dhammasathit to observe the precepts and meditate for a week, but by the end of the second day she told Ajaan Fuang that she had to return home, because she was afraid her family couldn't get along without her. He taught her to cut through her worries by saying, "When you come here, tell yourself that you've died. One way or another, your family will have to learn to fend for themselves."

    வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரைக்கு வந்த ஒரு பெண் ஒரு வாரம் அங்கு தங்கிச் சீலங்களைக் கடைப்பிடித்துத் தியானம் செய்வதற்காக வந்தார். ஆனால் இரண்டாம் நாள் முடியும் போதே அவர் அஜான் ஃபுவாங்கிடம் தான் வீடு திரும்ப விரும்பவதாகக் கூறினார். தான் இல்லாமல் தன் குடும்பத்தார் சமாளித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற கவலை அவருக்கு இருந்தது. அவர் கவலைகளை மறக்கும் வகையில் அஜான் ஃபுவாங் அவரிடம் கூறியது, "இங்கு வந்த பின் உங்களிடமே நீங்கள் இறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளுங்கள். எப்படியாவது உங்கள் குடும்பத்தார் நிலைமையைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வார்கள்."

§ On his first visit to Wat Dhammasathit, a middle-aged man was surprised to see an American monk. He asked Ajaan Fuang, "How is it that Westerners can ordain?"
Ajaan Fuang's answer: "Don't Westerners have hearts?"

    ஒரு நடுத்தர வயதுக்காரர் முதல் முறையாக வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரைக்கு வந்தார். அங்கு ஒரு அமெரிக்கத் துறவியைக் கண்டு வியப்படைந்த அவர் அஜான் ஃபுவாங்கிடம், "அது எப்படி மேற்கத்தியர்கள் துறவறம் பூண முடியும்?" என்று கேட்டார்.
அஜான் ஃபுவாங் கொடுத்த பதில், "ஏன், மேற்கத்தியர்களுக்கு உள்ளம் என்று ஒன்று  இருக்காதா?"

§ A Bangkok magazine once carried the serialized autobiography of a lay meditator who used his powers of concentration to treat diseases. One installment mentioned how he had visited Ajaan Fuang, who had certified that he (the layman) had attained jhana. This didn't sound like Ajaan Fuang's style, but soon after the magazine came out, unusual numbers of people came to the wat under the impression that Ajaan Fuang, like the author of the autobiography, could treat illnesses through meditation. One woman asked him if he treated kidney diseases, and he answered, "I treat only one kind of disease: diseases of the mind."

    பேங்காக் நகரத்துப் பத்திரிக்கை ஒன்றில் தியானம் செய்யும் ஒரு இல்லறத்தாரின் சுய சரிதையைத் தொடராக வெளியிட்டார்கள். அதில் அவர் எப்படித் தனது ஆழ்ந்த மனஒருமைப்பாட்டினால் வியாதிகளைக் குணப்படுத்தினார் என்று விளக்கப் பட்டது. மேலும் ஒரு பதிப்பில் அவர் அஜான் ஃபூவாங்கைச் சந்தித்ததாகவும் அவர் தான் ஜான நிலை (ஆழ்ந்த மனஒருமைப்பாடு) அடைந்ததாகக் கூறியதாவும் எழுதப்பட்டிருந்தது. அஜான் ஃபூவாங்  அப்படி ஒரு நற்சான்று தந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அது அவர் பாணி இல்லை. ஆனாலும் அந்த இதழ் வெளிவந்தபின்  சாதாரணமாக வருபவர்களை விட அதிக மக்கள் விகாரைக்கு வந்து அந்த சுயசரிதையை  எழுதியவரைப் போலவே அஜான் ஃபூவாங்குக்கும் தியானத்தைக் கொண்டு நோய்களைக் குணப் படுத்தக் கூடிய சக்திகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்தனர். ஒரு பெண் அவர் சிறுநீரக வியாதியைக் குணப்படுத்த முடியுமா என்று கேட்டார். அவர் பதில்: "நான் ஒரு வகை நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை தர முடியும்: மனத்தின் நோய்களுக்கு."

§ A student asked permission to keep a notebook of Ajaan Fuang's teachings, but he refused, saying, "Is that the sort of person you are? — always carrying food around in your pocket for fear there'll be nothing to eat?" Then he explained: "If you jot everything down, you'll feel it's okay to forget what you've written, because it's all there in your notebook. The end result is that all the Dhamma will be in your notebook, and none in your heart."

    ஒரு மாணவர் அஜான் ஃபூவாங்கின் போதனைகளை  ஒரு குறிபேட்டில் எழுதிக் கொள்ள அனுமதி கேட்டார். அவர் மறுத்து, "நீ அப்படிப் பட்டவனா? – போகும் இடத்தில் உண்ண உணவு கிடைக்காமல் போய்விடுமென்று எப்போதும் சட்டைப்பையில் உணவை வைத்துக் கொண்டிருப்பாயா?" பின் அவர் அதை விளக்கினார்: "நான் சொல்வதை யெல்லாம் நீ எழுதிக் கொண்டாயென்றால், எல்லாம் உனது குறிப்பேட்டில் இருக்கிறபடியால் உனக்கு எழுதி வைத்ததை மறந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அதன் விளைவு அறம் குறிபேட்டில் மட்டும் இருக்குமே ஒழிய உள்ளத்தில் இருக்காது."

§ "The texts say that if you listen well, you'll gain wisdom. To listen well, your heart has to be quiet and still. You listen with your heart, not just with your ears. Once you've listened, you have to put what you've heard into practice right then and there. That's when you'll reap the benefits. If you don't put it into practice, what you've heard will never become real inside you."

    "பௌத்த மறை நூல்கள் நீங்கள் அறத்தை நன்கு செவிமடுத்தால், விவேகம் பிறக்கும் என்கின்றன.  நன்கு செவிமடுக்க, உள்ளம் அமைதியாகவும் அசைவற்றும் இருக்க வேண்டும். காதோடு மட்டும் கேளாமல் உள்ளத்தோடும் கேட்க வேண்டும். கேட்ட பின் அதனை உடனே அங்கேயே பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் அதனால் நல்ல விளைவுகள் உண்டாகும். கேட்டதைப் பயிற்சி செய்யவில்லையென்றால், அது உள்ளத்தில் வாய்மையாக நிலைக்காது."

§ Once, while the chedi at Wat Dhammasathit was being built, some of the students working on the chedi got into a serious argument. One of them became so upset that she went to tell Ajaan Fuang, who was staying in Bangkok at the time. When she finished her report, he asked her, "Do you know what gravel is?"

Taken aback, she answered, "Yes."

"Do you know what diamonds are?"

"Yes."

"Then why don't you gather the diamonds? What good do you get out of gathering gravel?"

    ஒரு முறை வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் சேதியம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது வேலை செய்து கொண்டிருந்த சில மாணவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் உண்டானது. இதனால் மிகவும் மனசஞ்சலம் கொண்ட  ஒரு மாணவி அப்போது பாங்காக்கில் தங்கியிருந்த அஜான் ஃபூவாங்கிடம் சென்று நடந்ததைக் கூறினார்.  பேசி முடித்த பின் அஜான் ஃபூவங் அவரிடம் கேட்ட கேள்வி, "உனக்கு ஜல்லி என்றால் என்னவென்று தெரியுமா?"

    எதிர்பாராத அந்தக் கேள்விக்கு, "தெரியும்," என்று பதிலளித்தார் மாணவி.

    "உனக்கு வைரம் என்றால் என்னவென்று தெரியுமா?"

    "தெரியும்."

    "பின் ஏன் வைரங்களை பொறுக்கக் கூடாது. ஜல்லியைப் பொறுக்குவதில் என்ன நன்மை உண்டாகப் போகிறது?"

சேதியம் cētiyam  1. Jain or Buddhist temple; பௌத்தரின் பள்ளி.
     பகவற் கியற்றிய சேதியந் தொழுது (மணி. 28, 175).

§ Even in a Buddhist country like Thailand, some young people who practice the Dhamma find that their parents are against it, and feel that they should be spending their time in more practical ways. Once the parents of the seamstress tried to put a stop to her visits to Wat Makut, and this got her very angry. But when she told her feelings to Ajaan Fuang, he warned her, "You owe a huge debt to your parents, you know. If you get angry with them, or yell at them, you're stoking the fires of hell on your head, so watch out. And remind yourself: If you wanted parents who would encourage your practice, why didn't you choose to be born from somebody else? The fact that they're your parents shows that you've made past karma with them. So just use up your old karma debts as they come. There's no need to create any more karma by getting into arguments."

    தாய்லாந்து போன்ற பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாட்டிலும் இளைஞர்கள் சிலர் அறத்தைப் பயிலச் செல்லும்போது அவர்களது பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்கள் தங்கள் நேரத்தைப் (பொருள் ஈட்டுவதற்கு) பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும் என்றே சில பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள். தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மாணவியின் பெற்றோர் அவரை வாட் மாகுட் (Wat Makut) விகாரைக்குச் செல்வதைத் தடுத்தனர். இது அந்த மாணவிக்கு மிகந்த சினத்தை உண்டாக்கியது. தமது உணர்ச்சிகளை அஜான் ஃபுவாங்கிடம் தெரிவித்த போது அவர் மாணவியைக் கண்டித்தார், "பெற்றோருக்கு நீ மிகவும் கடமைப் பட்டிருக்கின்றாய், தெரியுமா? அவர்களிடம் கோபப்படுவதும் சத்தமிடுவதும் உனது உள்ளத்தில் நரகத்தீயை மூட்டுவது போலாகும். எனவே ஜாக்கிரதையாக இரு. இதை நீ நினைவு படுத்திக் கொள்: உனது பயிற்சிக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய பெற்றோர்கள் வேண்டுமென்று நீ நினைத்தால் அப்படிப் பட்ட பெற்றோருக்குப் பிறக்க நீ முடிவெடுத்திருக்கலாமே? அவர்கள் உனது பெற்றோராக இருப்பதிலிருந்தே அவர்களுடன் முன் ஒரு சமயத்தில் உனக்குக் கன்மத் தொடர்பு இருந்திருக்கிறது என்று அர்த்தம். எனவே அந்தப் பழைய கன்மக் கடன்கள் வரும் போது அவற்றைப் பயன்படுத்தி விடு. மேலும் சர்ச்சை செய்து மேலும் மேலும் கன்மத்தை (வினைப்பயன் கொண்ட செயல்களை) வளர்த்துக் கொள்ளாதே."

§ Channeling spirits has long been popular in Thailand, and even some people who practice the Dhamma also like to attend seances. But Ajaan Fuang once said, "If you want results from your practice, you have to make up your mind that the Buddha is your one and only refuge. Don't go taking refuge in anything else."

    இறந்தவர் ஆவிகளை அழைப்பது என்பது  தாய்லாந்தில் நெடுங்காலமாக மக்களின் ஆதரவு பெற்று நடந்து வரும் செயலாகும். அறத்தைப் பயில்வோர் சிலரும் இதில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் அஜான் ஃபூவாங் ஒருமுறை சொன்னது: "உங்கள் பயிற்சியிலிருந்து உங்களுக்கு நல்ல விளைவுகள் கிடைக்க வேண்டுமென்றால் மனத்தில் உறுதியோடு புத்தர் மட்டுமே உங்கள் ஒரே அடைக்கலம் என்று முடிவெடுக்கவேண்டும். வேறு எதிலும் அடைக்கலம் கொள்ள வேண்டாம்."

§ "If you practice the Dhamma, you don't have to be amazed by anyone else's powers or abilities. Whatever you do, say or think, let your heart take its stand on the principles of reason."

    "அறத்தைப் பயின்றால், மற்றவரின் சக்திகளையும், திறமைகளையும் கண்டு வியப்படைய வேண்டியதில்லை. நீங்கள் எதைச் செய்தாலும், பேசினாலும், நினைத்தாலும் உங்கள் உள்ளம் பகுத்தறிவுக்கு ஏற்ப நடந்து கொள்ளட்டும்."

§ "The truth lies within you. If you're true in what you do, you'll meet with the truth. If you're not, you'll meet only with things that are fake and imitation."

"வாய்மை உங்களுள் இருக்கிறது. வாய்மையோடு செயற்பட்டால், வாய்மையைச் சந்திப்பீர்கள். இல்லாவிட்டால் போலிச் சரக்கைத் தான் சந்திப்பீர்கள்."

*    *    *    *    *    *