இரத்தின சூத்திரம் Ratana Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 2.1

இரத்தின சூத்திரம்: புதையல்

Ratana Sutta: Treasures

Translated from the Pali by: Thanissaro Bhikkhu

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு

* * *

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்

- பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும் --

நீங்கள் அனைவரும் மகிழ்வோடு இருப்பீர்களாக!

நான் சொல்லப் போவதை மிகக் கவனமாகக் கேளுங்கள்.

Whatever spirits have gathered here,

— on the earth, in the sky —

may you all be happy

& listen intently to what I say.

ஆவிகளே, நீங்கள் அனைவரும் கவனமாகக் கேளுங்கள்.

மனித இனத்திடம் அன்பு காட்டுங்கள்.

இரவும் பகலும் அவர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.

எனவே விவேகத்துடன் அவர்களைப் பாதுக்காக்கவும்.

Thus, spirits, you should all be attentive.

Show kindness to the human race.

Day & night they give offerings,

so, being heedful, protect them.

எத்தகைய செல்வம் – இங்கும் வேறெங்கும்,

சொர்க்கத்தில் உள்ள அளப்பரிய பொற்குவியலும்,

எங்களுக்கு அவை ததாகதருக்கு ஈடாகாது.

புத்தருள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Whatever wealth — here or beyond —

whatever exquisite treasure in the heavens,

does not, for us, equal the Tathagata.

This, too, is an exquisite treasure in the Buddha.

By this truth may there be well-being.

இந்த இணையற்ற சாந்தமான மரணமில்லா முடிவு,

அவாவை அடக்கி மன ஒருக்கத்தால் கண்டுபிடித்த சாக்கிய மாமுனிவர்:

தம்மத்திற்கு ஒப்பானது ஏதும் இல்லை.

தம்மத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

The exquisite Deathless — ending, dispassion —

discovered by the Sakyan Sage in concentration:

There is nothing to equal that Dhamma.

This, too, is an exquisite treasure in the Dhamma.

By this truth may there be well-being.

அற்புதமானவர், விழிப்புற்றவர் (புத்தர்) பெரிதும் போற்றிய மன ஒருக்கத்திற்கு (ஒருமைப்பாட்டுக்கு)

எடுத்துச் செல்லும் தியானம் உடனே நல் விளைவுகள் தருவது.

அந்த ஒருக்கத்திற்கு ஒப்பானது ஏதும் இல்லை.

தம்மத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

What the excellent Awakened One extolled as pure

and called the concentration

of unmediated knowing:

No equal to that concentration can be found.

This, too, is an exquisite treasure in the Dhamma.

By this truth may there be well-being.

எட்டு நபர்கள் - நான்கு ஜோடிகள் - [6]

அமைதி உடையவர் போற்றுவார்:

அவர்கள் மகிழ்ச்சியானவரின் சீடர்கள், நன்கொடைபெறத் தகுதியானவர்கள்.

அவர்களுக்குக் கொடுக்கப் படுவது நற்பலன் விளைவிக்கும்.

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

The eight persons — the four pairs — [6]

praised by those at peace:

They, disciples of the One Well-Gone, deserve offerings.

What is given to them bears great fruit.

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

யாரெல்லாம் நம்பிக்கையுடன், உறுதியான மனத்துடன்

கோதமரின் போதனைப்படி நடக்கின்றனரோ அவரெல்லாம்

நோக்கத்தை அடைந்தவுடன் மரணமற்ற நிலையை அனுபவிக்கின்றனர்.

தாங்கள் பெற்ற விடுதலையோடு மகிழ்கின்றனர்.

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Those who, devoted, firm-minded,

apply themselves to Gotama's message,

on attaining their goal, plunge into the Deathless,

freely enjoying the Liberation they've gained.

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

ஒர் இந்திரர் தூண், [1] பூமியில் நாட்டப்பட்டது

நான்கு காற்றுகளாலும் அசைக்க முடியாதது:

நான் கூறுகிறேன் - அது தான் ஒரு நேர்மைமிக்க மனிதனைப்போல,

அவர் - நான்கு மேன்மையான உண்மைகளைக்

கண்டு கொண்டவர் - அறிந்தவர்.

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

An Indra pillar,[1] planted in the earth,

that even the four winds cannot shake:

that, I tell you, is like the person of integrity,

who - having comprehended

the noble truths - sees.

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

ஆழமான விவேகம் உள்ளவர் (புத்தர்) நன்றாகக் கற்பித்த

மேன்மையான உண்மைகளைத் தெளிவாகப் பார்த்தவர்கள் -

[பின்னர்] விவேகமில்லாமல் நடந்து கொண்டாலும்

எட்டாவது முறை மறுபிறப்பெடுக்க மாட்டார். [2]

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Those who have seen clearly the noble truths

well-taught by the one of deep discernment —

regardless of what [later] might make them heedless —

will come to no eighth state of becoming.[2]

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

மனக்கண் திறந்தவர்,

மூன்று விஷயங்களைக் கைவிடுகிறார்:

நான்,எனது என்ற எண்ணம், சந்தேகம்,

சடங்கு சாங்கியங்களுக்கான பற்று. [3]

நான்கு இழப்புகளிலிருந்து, [4]

முழுமையாக விடுவிக்கப் படுகிறார்.

ஆறு பெருந்தவறுகளை

அவரால் செய்யவும் முடியாது. [5]

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

At the moment of attaining sight,

one abandons three things:

identity-views, uncertainty,

& any attachment to precepts & practices.[3]

One is completely released

from the four states of deprivation,[4]

and incapable of committing

the six great wrongs.[5]

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

எந்தத் தவறான செய்கையைச் செய்தாலும்

- உடலால், பேச்சால், மனத்தால் -

அதை மறைக்க முடியாது:

இந்த இயலாமை மார்க்கத்தைக் கண்டவனின் ஒரு இயல்பு.

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Whatever bad deed one may do

— in body, speech, or in mind —

one cannot hide it:

an incapability ascribed

to one who has seen the Way.

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

கோடைகாலத்தின் முதல் மாதத்தில்

அடர்ந்த சோலையில் பூத்துச் சொரியும் மரங்களின் உச்சியைப்போல,

அவர் கற்பித்த முதன்மையான அறமும்,

சிறந்த பயன் தரும், கட்டவிழ்க்கும் நெறிமுறை.

புத்தருள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Like a forest grove with flowering tops

in the first month of the heat of the summer,

so is the foremost Dhamma he taught,

for the highest benefit, leading to Unbinding.

This, too, is an exquisite treasure in the Buddha.

By this truth may there be well-being.

முதல்வர்,

முதன்மையான - அறிஞர்,

முதன்மையான - தயாளர்,

முதன்மையான - மேன்மையைக் கொண்டுவருபவர்

அவரை மிஞ்சியவர் எவரும் இல்லை, அவர் மேலான அறத்தைக் கற்பித்தார்.

புத்தருள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Foremost,

foremost-knowing,

foremost-giving,

foremost-bringing,

unexcelled, he taught the

foremost Dhamma.

This, too, is an exquisite treasure in the Buddha.

By this truth may there be well-being.

பழயது முடிந்தது, இனிப் புதுப்பிறப்பில்லை.

மேலும் பிறப்பெடுக்க அவர்கள் மனம் விரும்புவதில்லை,

அவர்கள், விதைப்பதில்லை, வளர்க்க விருப்பமில்லை,

விவேகமுள்ளவர், இந்த நெருப்பு அணைவது போல மறைவார்.

சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.

இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

Ended the old, there is no new taking birth.

dispassioned their minds toward further becoming,

they, with no seed, no desire for growth,

the prudent, go out like this flame.

This, too, is an exquisite treasure in the Sangha.

By this truth may there be well-being.

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்

- பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும் --

புத்தருக்கு மரியாதை செலுத்துவோம்

உயிரினங்களால் கும்பிடப்படும் ததாகதர்,

மனிதர் தெய்வீகமானவர்.

நன்மை

நிலவட்டும்.

Whatever spirits have gathered here,

— on the earth, in the sky —

let us pay homage to the Buddha,

the Tathagata worshipped by beings

human & divine.

May there be

well-being.

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்

- பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும் --

தன்மத்துக்கு மரியாதை செலுத்துவோம்

உயிரினங்களால் கும்பிடப்படும் ததாகதருக்கு மரியாதை செலுத்துவோம்,

மனிதர் தெய்வீகமானவர்.

நன்மை

நிலவட்டும்.

Whatever spirits have gathered here,

— on the earth, in the sky —

let us pay homage to the Dhamma

& the Tathagata worshipped by beings

human & divine.

May there be

well-being.

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்

- பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும் --

சங்கத்துக்கு மரியாதை செலுத்துவோம்

உயிரினங்களால் கும்பிடப்படும் ததாகதருக்கு மரியாதை செலுத்துவோம்,

மனிதர் தெய்வீகமானவர்.

நன்மை

நிலவட்டும்.

Whatever spirits have gathered here,

— on the earth, in the sky —

let us pay homage to the Sangha

& the Tathagata worshipped by beings

human & divine.

May there be

well-being.

* * *

Notes

விளக்கம்

1. Indra-pillar: A tall hardwood pillar, planted at the entrance to a village.

இந்திரர் தூண்: மரவைரத்தால் செய்யப்பட்ட உயரமான தூண், கிராமத்து நுழைவாயிலில் நாட்டப்படும்.

2. The person who has reached this stage in the practice will be reborn at most seven more times.

இந்த நிலையை அடைந்தவர் அதிகபச்சம் ஏழு முறை தான் மறுபிறப்பெடுப்பார்கள்.

3. These three qualities are the fetters abandoned when one gains one's first glimpse of Unbinding at stream-entry (the moment when one enters the stream to full Awakening).

ஞானத்தின் முதல் படி எடுத்தவுடன் இந்த மூன்று கட்டுக்கள் உடைபடுகின்றன.

4. Four states of deprivation: rebirth as an animal, a hungry shade, an angry demon, or a denizen of hell. In the Buddhist cosmology, none of these states is eternal.

நான்கு இழப்பு நிலைகளாவன: மிருகப் பிறப்பு, பசிகொண்ட பூதப் பிறப்பு, கோபமான அசுரப் பிறப்பு, நரகப் பிறப்பு (பௌத்த மரபில் இவையும் நிரந்தரமானவை அல்ல)

5. The six great wrongs: murdering one's mother, murdering one's father, murdering an arahant (fully Awakened individual), wounding a Buddha, causing a schism in the Sangha, or choosing anyone other than a Buddha as one's foremost teacher.

ஆறு பெருந்தவறுகள்: தாயைக் கொலைசெய்வது, தந்தையைக் கொலை செய்வது, ஞானியைக் கொலைசெய்வது, ஒரு புத்தரைக் காயப் படுத்துவது, சங்கத்தில் பிளவு ஏற்படுத்துவது, புத்தரைத் தவிர மற்றொருவரை முதன்மை ஆசிரியராகக் கொள்வது.

6. The eight persons - the four pairs

பௌத்தக் கொள்கைப்படி ஞானம் பெறும் பாதையில் நான்கு காலக் கட்டங்கள் உள்ளன.

முதலாவது 'சோதாபத்தி'

இரண்டாவது 'ஸகாதாகாமிதா'

மூன்றாவது 'அனாகாமிதா' இறுதியாக நான்காவது நிலை 'அரஹத்தா' (அரஹந்தரின் நிலை).

இவ்வாறு நான்கு நிலைகள் இருக்கின்றன. இந்த நான்கு நிலைகளை அடைந்தவரும் அடைய முயற்சிப்போருமாக நான்கு ஜோடி மக்களும் (முதல் நிலை அடைய முயற்சிப்போர், அடைந்தவர் , இரண்டாம் ...) அதாவது எட்டு இயல்புடைய மக்களும் இருக்கின்றனர்.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

With gratitude to http://www.accesstoinsight.org for English Source

©1994 Thanissaro Bhikkhu. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.