நற்காட்சி
நற்காட்சி - தணிசாரோ பிக்கு
Right View - Thanissaro Bhikkhu
நாம் இப்போது ஓதிய "தம்ம சக்கப் பவத்தன சுத்திரம்" என்னும் திருப்பா, அட்டாங்க மார்க்கத்தில் துவங்கிப் பின் நற்காட்சியை விளக்குகிறது. நற்காட்சி என்பது நான்கு மேன்மையான உண்மைகளின் விளக்கம். இந்த நற்காட்சி பற்றிய போதனையை மட்டும் கேட்ட ஐந்து தாபதர்களில் (முனிவர்கள் - புத்தரின் முதல் ஐந்து சீடர்கள்) ஒருவருக்கு 'அழியாநிலை'யின் சுவையை உணரமுடிந்தது; அதாவது திரிபிடகத்தில் கூறுவது போல அவருக்கு "ஞானக்கண் திறந்தது".
எனவே நற்காட்சி மிக முக்கியமானது. மார்க்கத்தின் பகுப்பாய்வு ஒன்றில் கூறப்படுவது போல, மார்க்கத்தின் ஒவ்வொரு குணாங்கத்தையும், மூன்று பண்புகள் வட்டமிடுகின்றன. முதலாவது பண்பு நற்காட்சி. இரண்டாவது நல்லூக்கம். மூன்றாவது நற்கடைப்பிடி. ஆகவே இம்மூன்று பண்புகளும் உங்கள் பயிற்சியை எப்போதும் சூழ்ந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அடிப்படையில் நற்காட்சியில் நான்கு உண்மைகள் விவரிக்கப் படுகின்றன. முதலாவது துக்கம் அல்லது அழுத்தம் பற்றிய உண்மை. சில சமயம் இந்த உண்மை "வாழ்வே துக்கம்" அல்லது "அனைத்தும் துக்கமே" என்று உணர்த்துவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படிச் சொல்வது சரியல்ல. புத்தர் "துக்கம் உள்ளது," என்று மட்டுமே கூறுகிறார். நான்கு பிரிவுகளில் ஒன்றான இந்தத் துக்கத்தை நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கப் போகின்றீர்கள். எனவே அதன்மேல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வே துக்கம் என்று சொன்னால் அந்தக் கருத்தின் மேல் விவாதம் நடத்தலாம். ஆனால் துக்கம் இருக்கின்றது என்ற கருத்தில் விவாதிக்க இடமே இல்லை. நம்மைச் சுற்றிலும் துக்கத்தைப் பார்க்க முடிகிறது. நமக்குள்ளும் துக்கத்தை நம்மால் உணர முடிகிறது. எனவே புத்தர் அதன்மேல் மனப் பூர்வமாக அக்கறை காட்டச் சொல்கிறார்.
துக்கத்தின்மேல் ஈடுபாட்டுடன் அக்கறை காட்டுவதென்பது அதனைப் புரிந்துணரக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. அப்படிச் செய்ய, அதனைக் கவனிக்கும் நிலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின் துக்கம் எப்படி வருகிறது, எப்படிச் செல்கிறது, அதனோடு எது வருகிறது, எது அதைத் தொடர்ந்து செல்கிறது என்பனவற்றையெல்லாம் நாம் கவனிக்கலாம். அதனோடு வருவதையும் போவதையும் ‘பாலி’மொழியில் 'சமுதயா' என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்கள். பொதுவாக இந்த வார்த்தையைக் "காரணி" அல்லது "தோற்று விப்பது" என்று மொழி பெயர்க்கலாம். மனத்தில் துக்கம் இருக்கும் போதெல்லாம் அதனோடு பற்றும் சேர்ந்து இருப்பதைக் கவனிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தப் பற்று மூன்று வகைப்படும்: புலன் இன்பங்களுக்கான பற்று, ஆகுதல் மீது பற்று (வேறு தோற்றம் எடுக்க வேண்டும் என்ற பற்று), மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற பற்று.
புலன் இன்பங்கள் மீது உள்ள பற்று என்பது அவற்றின் மேலுள்ள விருப்பத்தின் மீதான பற்று. ஒரு பகுப்பாய்வில் கண்டறியப்பட்ட மிகச் சுவாரசியமான செய்தி யாதெனில் புலன் இன்பங்கள் மீதான பற்று 'புறத்தில் உள்ள பொருட்கள்' மீதுள்ள பற்று என்றில்லை; அது 'புறத்தில் உள்ள பொருட்களைப் பற்றிய' நமது திட்டங்கள் மீதான பற்று. இன்பமான காட்சிகள், சப்தங்கள், நுகர்வுகள், சுவைகள், ஸ்பரிசங்கள் மீதான நமது நோக்கத்தின் மீதுள்ள பற்று. நாம் அவற்றைத் திட்டமிட்டுச் செயலாக்குவதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகிறோம். அவற்றை அனுபவிக்கும் நேரம் மிகக் குறைந்ததே. நாம் உண்ணும் உணவை எண்ணிப் பாருங்கள். நாவில் அதன் சுவை எவ்வளவு நேரம் நீடிக்கிறது? மிகக் குறைந்த நேரம் தான் அல்லவா? ஆனால் அந்த உணவைக் கடையிலிருந்து வாங்கி வந்து, சுத்தம் செய்து, நறுக்கி, சமைத்துச் சாப்பிட்டபின் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்யச் செலவிட்ட நேரம் அதைவிடப் பன்மடங்கு அதிகம். நாம் சுவைக்காக மட்டும் அல்லாமல், உடலைப் பாதுகாக்கவும் உணவு உண்கிறோம் என்றாலும் 'இந்த உணவைச் சுவையுடன் சமைக்க வேண்டும்' என்ற எண்ணத்தின் காரணமாகவே நாம் மிகுந்த சக்தியையும், நேரத்தையும் செலவு செய்கிறோம். ஆகவே இந்தத் திட்டங்கள் மீது உள்ள பற்று, அப்பொருட்களின் மீதுள்ள பற்றைவிடப் பெரியது. ஒரு புலன் இன்பத்தை மற்றொரு புலன் இன்பமாக மாற்றுவது எளிது. ஆனால் புலன் இன்பத்தை முற்றுமாக அகற்றுவது என்பது கடினம். துக்கம் உண்டாக இதுவும் ஒரு காரணம்.
துக்கத்துக்கு மற்றொரு காரணம் 'ஆகுதல்' என்பதன் மீது உள்ள பற்று. நமது அனுபவ உலகினுள், நாம் இன்னொன்றாக மாற விரும்புகிறோம்; ஒரு குறிப்பிட்ட அடையாளம் கொள்ள விரும்புகிறோம். நமது உலகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம் தெரியுமா? எந்தச் சூழலில் நம்மைக் காண விரும்புகிறோம், எந்தச் சூழலில் நமது ஆற்றலைத் தெரிவிக்கிறோம் என்பதெல்லாம் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டதே. நாம் உருவெடுக்கும் உலகமும், அந்த உலகில் நமது செயலாற்றலும் ஒன்றோடொன்று பிணைந்தே இருக்கின்றன. சில சமயம் அந்த உலகம், இன்ப அனுபவம் (sensual level) சம்பந்தப்பட்டதாக இருக்கும். சில சமயம் உருவ நிலையில் (form) இருக்கும் - நாம் தியானிக்கும் போது நாம் நமது உருவத்தினுள் இருப்பதைப்போல. சில சமயம் உருவமில்லா (formless) அனுபவமாகவும் இருக்கும். தியானத்தின் போது வெறுமையை அனுபவிப்பது போல. நாம் இது போன்ற ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போகவே விருப்பப் படுகிறோம். இது தான் அலைதல், திரிதல் என்பது. நாம் ஒரு பவத்திலிருந்து (பவம்: பிறப்பு) இன்னொன்றுக்கும் பின் மற்றொன்றுக்கும் அலைந்து கொண்டே இருக்கின்றோம்.
தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த்
தோற்றற்கு ஏற்ற காலம்மூன்று உடைத்தாய்க்
மணிமேகலை 30-27,28
பார்க்கின் - ஆராயுமிடத்து; (ஆராய்ந்து பார்த்தால்) தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்; தோற்றற்கேற்ற காலம் மூன்றுடைத்தாய் - அம்மூவகைப் பிறப்பும் தோன்றுதற்கேற்ற காலம் மூன்றுடையதாயும் நிலவும் எ - று.
பிறப்பு (Becoming, ஆகுதல்) மூன்றாவன; அருவம் (formless), உருவம் (form), காமம் (sensual) என்பன. காலம் மூன்று; இறப்பு. நிகழ்வு, எதிர்வு என்பன, இவற்றை, "மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை" (30,158) என்பது முதலியவற்றாலும் "கால மூன்றுங் கருதுங் காலை" (30-159) என்பது முதலியவற்றாலும் விளக்கிக் கூறுப.
நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் மற்றும் வித்துவான் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை இவர்களால் எழுதப்பெற்ற விளக்கவுரை ஆதாரம்
சம்சாரம் என்பதன் நேரான பொருள் சுழலுதல் என்பது தான். நம்மில் பலர் சம்சாரம் என்பது நாம் தற்போது வாழுகின்ற இடத்திற்குப் பௌத்தத்தில் இடப்பட்ட பெயர் என எண்ணுகின்றனர். நாம் நிர்வாண நிலையை அடைவதற்கு முன் வாழ்ந்த உலகம் எனக் கருதுகின்றனர். சம்சாரம் என்பது ஒரு இடம் அல்ல. அது ஒரு செயற்றொடர். ஒரு உலகை உருவாக்கிப் பின் அதில் புகுந்து வாழ்கிறோம். அந்த உலகோ இடிந்து விடுகிறது. அதில் வாழ்ந்த நாம், பின் மற்றொரு உலகை எழுப்பி அதில் வாழ முற்படுகிறோம். அதுவும் இடிந்து விடுகிறது. பின் வேறொரு உலகம். இதுவே திரிதல். ஒரு நாளைக்குள்ளேயே நாம் உருவாக்கிய பல உலகங்கள் அழிந்து விடுகின்றன. காலையில் வேலைக்குச் சென்றவுடன் அங்கு ஒரு உலகத்தை உருவாக்குகிறோம். வீட்டுக்குத் திரும்பியபின் வேறொரு உலகம் - தந்தை, தாய் என்ற பாத்திரங்களைக் கொண்ட உலகம். விளையாடச் சென்றால் அது வேறு ஓர் உலகம். அதில் கூடைப் பந்தாட்டக்காரன் என்ற ஒரு பாத்திரம் ஏற்று இருக்கலாம். அதே சமயம், தங்களுக்கென்று தனி உலகத்தை அமைத்துக் கொள்கின்ற மற்றவர்களோடும் மோதிக் கொள்கிறோம்.
இந்த இடங்கள் மீது மனம் தன் கவனத்தைச் செலுத்துகிறது. அதனாலேயே அது துக்கம் அடைகிறது. ஏன்? ஏனென்றால் இந்த இடங்கள் நிலைப்பதில்லை. 'இதுவே என் உலகம். இது தான் நான்' என்று அந்த உலகத்தோடு பற்றுக் கொண்டு விடுகிறோம். ஆனால் அந்த இடம் மெழுகுபோல் உருகிக் கரைந்து விடுகிறது. நம்மைச் சுற்றி உள்ள உலகங்களெல்லாம் கரைந்து மறைந்து விடுகின்றன.
இந்த உலகங்களை உருவாக்கும் விளையாட்டு, சில சமயம் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால் அதில் மிகுந்த துக்கம் உள்ளது. ஏனென்றால் நாம் உருவாக்கும் உலகங்கள் தொடர்ந்து நொறுங்கி நம்மை நசுக்கி விடுகின்றன. புதிய உலகங்களை உருவாக்குவதற்கு மிக்க முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. புதுப் பிறப்பெடுப்பதில் பல சிக்கல்களும், தொந்தரவுகளும் அடங்கியுள்ளன - மனத்திற்கும் உடலுக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவராவதுவரை உள்ள மாற்றங்கள் - இதையே திரும்பத் திரும்பச் செய்கின்றோம். புத்தர் ஒரு முறை துறவிகளைக் கேட்டார், "எது அதிகமாக இருப்பதாக நினைக்கின்றீர்கள்: சமுத்திரத்தில் உள்ள நீரா அல்லது சம்சாரத்தில் உழலும் போது நீங்கள் சிந்திய கண்ணீரா?" அவர் பதில்: கண்ணீர்தான். அடுத்த முறை கடற்கரையை இரசித்துக் கொண்டிருக்கும் போதும், அதன் அலையில் நின்று விளையாடும்போதும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற பற்று. இருப்பதை அழிக்க வேண்டும், நாம் இருப்பதாக உள்ள உலகத்தை அழிக்க வேண்டும் என்ற பற்று. சுற்றியுள்ள உலகத்தை அழிப்பது. இந்த உலகம் மகிழ்ச்சிகரமாக இல்லை. கொடுமை மிக்கது. உங்களுக்கு அதைப் பிடிக்க வில்லை. அதை அழிக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் - அது புற அழிவு விருப்பமாகவோ அல்லது அக அழிவு விருப்பமாகவோ இருக்கலாம். விசித்திரமான செய்தி என்னவென்றால், முரண்பாடாகத் தோன்றினாலும் இப்படி மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற பற்றும் ஒரு ஆகுதல் தான். ஏன்? 'அழிப்பவன்' என்ற கருத்தோடு உள்ள ஒற்றுமையுணர்ச்சியும், ஒரு ஆகுதல் தான். அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்படும் மகிழ்ச்சியும், வேறு உரு எடுப்பது போலத்தான்.
புத்தர் இதற்குத் தரும் உவமானம், ஒரு விதையை மண்ணில் நடுவதைப்போல என்கிறார். விதை தான் உங்கள் விஞ்ஞானம் (consciousness). நிலம் தான் உங்கள் முந்தைய, தற்போதைய கன்மத்தின் காரணமாகத் தோன்றும் வினைப்பயன். பின் இவற்றோடு நாம் தோற்றுவிப்பதிலும், அழிப்பதிலும் உள்ள ஆனந்தம். இவை எல்லாம் துக்கம் உண்டாக்கும் காரணிகள். எளிதாகப் புரியாததாகத் தோன்றுகிறதா? ஆனால் உங்கள் மனத்தைத் தெரிந்து கொள்ளும் போது அது இந்தத் திசைகளில் நகர்வதைக் காணலாம் – ஆக வேண்டும் என்ற விருப்பம் அல்லது அழிக்க வேண்டும் என்ற விருப்பம். ஒரு சிக்கல் என்னவெனில், ஆக வேண்டும் என்ற விருப்பத்தை நிறுத்தப் பார்ப்பதும் ஒரு ஆகுதல் தான்! ஆகுதல் துக்கம் உண்டாக்குகிறது. ஆகுதலை நிறுத்த நினைப்பதும் ஒரு ஆகுதல் தான். பின் எப்படிப் பிரச்சனையைத் தீர்ப்பது? இங்கு தான் புத்தர் ஒரு மிகச் சாமர்த்தியமான ஆசிரியர் என்பது தெரிய வருகிறது.
அவர் சொல்வதாவது: ஆகுதலுக்கு அப்பால் போக வேண்டும் என்றால் அதை அழிப்பதால் போக முடியாது. அது எத்தகைய திறமையான புதிய உருவம் எடுப்பது என்பதைப் பொறுத்துள்ளது என்றார். குறிப்பாகத் திறமையான மனஒருமைப்பாடு கொள்வதும், ஒரே இடத்தில் மனத்தை நிலைக்க வைப்பதும் போன்ற திறமையான செயல்கள். ஒரு இடத்தில் இருக்கவேண்டியிருக்கும் வரை அது உடலினுள் உள்ள நல்ல திடமான ஓர் இடமாக இருப்பது நல்லது. (நல் ஒருக்கம் சம்பந்தப்பட்ட விளக்கம்.) அதுவே குறையில்லாத ஆனந்தம் தரும். பின் அந்த இடத்திலிருந்து தெளிவாகப் பார்க்கும் போது ஆகுதல் என்ற செயற்றொடரை விட்டு விடலாம். சில சமயம் இந்த மன ஒருக்கத்தின் மீது பற்றுக் கொள்வதனால் உள்ள அபாயங்களைப் பற்றிக் கேள்விப் படுகிறோம். ஆனால் திரிபிடகத்தில் பார்க்கும் போது புத்தர் ஒரு சில இடங்களில் மட்டுமே இப்படி ஒருக்கம், மன அமைதி மீது உள்ள பற்றினைப் பற்றி எச்சரிக்கின்றார். அந்நிலைகளில் உள்ள ஆனந்ததைக் கண்டு விட்டு, அதற்கப்பால் போக விரும்பாத சிலரை எச்சரிக்கின்றார். ஆனால் இந்தப் பிரச்சனை, புலன் இன்பங்கள் மீது உள்ள பற்றைக் காட்டிலும் மிகச் சிறியதே.
புலன் இன்பங்கள் மீது உள்ள பற்றினால் வரும் துன்பத்தையும், களங்கத்தையும் பற்றிப் புத்தர் பல நீண்ட போதனைகளைத் தந்துள்ளார். நீங்கள் மிகவும் நேசிப்பதைப் பெறுவதற்கு கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சில சமயம் நாம் எடுக்கும் முயற்சி பலன் அளிக்காது. பலன் அளித்தாலும் அப்பொருட்கள் உங்களுடன் நிலைத்திருப்பதில்லை. புத்தர் கூறுவது போல அவை தீயினால் எரிந்து போகலாம், நீரினால் அடித்துச் செல்லப் படலாம், அல்லது திருடர்களும், அரசனும் கவர்ந்து கொள்ளலாம் - திருடனையும் அரசனையும் ஒன்றாகச் சேர்த்திருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது - அல்லது கொடுமைக்கார வாரிசுகள் பிடுங்கிக் கொள்ளலாம். (இக்காலத்தில் அரசன் என்பது அரசாங்கம் விதிக்கும் வரி என்று எடுத்துக் கொள்ளலாம்). இந்தப் புலன் இன்பங்கள் மீதான பற்றே குடும்பப் பிரச்சனைகளையும், நாடுகளுக்கு மத்தியில் சண்டை, சச்சரவுகளையும் உண்டாக்குகிறது. இதன் விளைவாகவே போர்கள் நிகழ்கின்றன. ஆழ்ந்த மன ஒருக்கத்தின் மேல் உள்ள பற்றின் காரணமாக, எவரும் போருக்குப் போனதாகத் தெரியவில்லை. ஆனால் புலன் இன்பங்கள் மீதான பற்றே நம்மைக் கொலை செய்யவும், திருடவும், தவறான பாலியல் உறவுகளில் ஈடுபட வைக்கவும், பொய் சொல்லவும், போதையில் ஈடுபடவும் வைக்கிறது. இவை எதுவும் மன ஒருக்கதின் மீது உள்ள பற்றினால் நடைபெறுவதில்லை. மன ஒருக்கத்தின் மீது பற்றுக் கொள்வதால் உள்ள ஒரே அபாயம் அதனை மீறி மெய்ஞ்ஞானம் தேடிச் செல்வதை சிலர் நிறுத்தி விட நேரிடலாம்.
நற்காட்சி நான்கு மேன்மையான உண்மைகள் சம்பந்தப் பட்டது. நான்கு மேன்மையான உண்மைகள் பற்றிப் புத்தர் பல இடங்களிலும் சந்தேகத்துக்கே இடம் அளிக்காதவாறு கூறுகிறார்: திறமையற்ற நடத்தையைக் கைவிடுவதும், திறமையான நடத்தையை மேற்கொள்வதையும் அடித்தலமாகக் கொண்டுள்ளது. அதாவது நாம் ஒரு திறமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். நமது உடலாலும், பேச்சாலும், எண்ணத்தாலும் நோக்கத்துடன் செய்வதெல்லாம் கன்மச் செயல்களாகக் கருதப்படும். அப்படிப்பட்ட கன்மச்செயல்களுக்கு விளைவுகள் உண்டு. வெட்டி எண்ணங்கள் என்று ஒன்றும் இல்லை. வீண் என்ணங்கள் தான் நோக்கமாக இருந்தாலும் அவற்றிற்கு மனத்தின் மேல் விளைவுகள் இருக்கின்றன. நீங்கள் தெரிந்தே செய்வதால் கன்ம விளைவுகள் இருக்கும். புத்தர் வெட்டிப் பேச்சைத் தவிர்க்கச் சொன்னது போலவே நோக்கமற்ற எண்ணங்களையும் தவிர்க்கச் சொன்னார்.
எனவே எண்ணங்களையும், அவை மனத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். புத்தர் தானும் தன் எண்ணங்களை இரு வகையாகப் பிரித்த பின்னரே சரியான பாதைக்கு வந்ததாகக் கூறுகிறார்: தீமை பயக்கும் எண்ணங்கள் மற்றும் தீமை பயக்காத எண்ணங்கள். அதாவது அவரது எண்ணங்களை மனத்தின் மீது அவை உண்டாக்கும் திறமையான, திறமையற்ற விளைவுகளை வைத்துப் பிரித்தார். அந்தப் பாகுபாட்டிலிருந்து தான் மற்ற மார்க்கப் பகுதிகள் உண்டாயின.
* * * *
நான்கு மேன்மையான உண்மைகள் ஒவ்வொன்றுக்கும் நாம் ஒரு காரியம் செய்ய வேண்டியுள்ளது. முதலில் உண்மையான துக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். துக்கத்தைக் கவனிப்பது, அதைப் புரிந்து கொள்வதற்காகத் தான். அதைப் புரிந்து கொண்ட பின்னர், 'எனக்குத் துக்கம் இருக்கிறது,' என்று நினைக்காமல் (என் துக்கம் என்று நினைக்காமல்) மனத்தின் என்ன ஓட்டம் சம்பந்தப்பட்ட விளைவு தான் துக்கம் என்பதை அறிகிறோம். துக்கம் உண்டாக்கும் மனத்தின் எண்ண ஓட்டங்களைப் பார்க்கத் தெரிந்த பின், அவை தேவை இல்லாதவை என்பதை அறிந்து அவற்றைக் கைவிட்டு விடுகிறோம்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். துக்கத்தை நாம் கைவிடுவதில்லை; துக்கத்திற்கான காரணியையே கைவிடுகிறோம். (இரண்டாம் உண்மையைப் பொருத்தவரை நாம் செய்யவேண்டிய காரியம்). ஒரு சமையலறைக்குள் நுழைந்து அங்கு புகை மண்டலம் இருப்பதைக் காண்பதுபோல. நாம் முதலில் செய்ய வேண்டியது அடுப்புப் பக்கம் ஓடி அதை அணைப்பதுதான். அதாவது நாம் புகையைக் களையப் பார்ப்பதில்லை. முதலில் நெருப்பை அணைக்கவே பார்க்கிறோம் இல்லையா? இங்கு நெருப்பு என்பது பற்றும், அறியாமையும் ஆகும். அவற்றைத்தான் நாம் கைவிட வேண்டும். நெருப்பு இல்லாவிட்டால் புகையும் களைந்து விடும். என்ன செய்யவேண்டும் என்பதையும், அதைச் செய்யும் வழியும் நமக்குத் தெரிகிறது: அதுதான் பாதை. இந்தத் திறமையை நாம் மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் (நான்காம் உண்மையைப் பொருத்தவரை நாம் செய்ய வேண்டிய காரியம்). மார்க்கத்தைப் பற்றிய அறிவு மேலும் நுட்பமாகிறது. இறுதியில் துக்கத்தின் முடிவை நாமே நேரில் உணர்கிறோம். (மூன்றாம் உண்மையைப் பொருத்தவரை நாம் செய்யவேண்டிய காரியம்)
அதுவே புத்தர் கூறியது போலப் பிரச்சனையின் முடிவு.
* * * *
Composed from many sources: 1 2 3 4
The discourse we chanted just now — “Setting the Wheel of Dhamma in Motion” — starts with the whole noble eightfold path and then goes into right view. And that’s all it discusses in detail: right view, going through the four noble truths. Simply listening to this talk on right view, one of the Five Brethren had his first taste of the deathless—or, as they say in the text, he experienced “the arising of the Dhamma Eye.”
So right view is important. As one analysis of the path says, three qualities circle around every factor of the path. One is right view. The second is right effort. The third is right mindfulness. So try to make sure that these three qualities are circling around your practice right now.
There are basically four truths covered by right view. First is the truth of suffering or stress; dukkha is the Pali term. Sometimes we’re told that the first truth is that “life is suffering” or “everything is suffering,” but that’s not the case. The Buddha basically said that “there is
suffering.” It’s one of four things you’re going to encounter in life that you should pay attention to. You could argue with the idea that life is suffering, but you can’t argue with the idea that there is suffering. You see it all around you. You see it inside you as well. The Buddha’s simply asking you to take it seriously.
To take suffering seriously means that you should learn how to comprehend it. To do that, you have to put yourself in a position where you can watch it, to see how it comes, how it goes, what comes and goes along with it. The coming and going along with it: That’s essentially what the word samudaya — usually translated as “cause” or “origination”—means. You want to see that every time there’s real suffering in the mind, it’s accompanied by craving—any one of three kinds of craving to be specific: craving for sensuality, craving for becoming, craving for non-becoming.
Craving for sensuality is easy enough to explain: the desire to have sensual desires. That’s one of the most interesting parts of the analysis: that sensual attachment is not so much to ‘things out there’; we’re more attached to our plans for things out there, our scheming for things out there, for pleasant sights, sounds, smells, tastes, tactile sensations. We spend a lot more time planning and working toward these things than we do in actually tasting them. Often the taste is very fleeting. Think of the food we eat. Exactly how long does it really taste good in your mouth? Look at that little burst of taste, and then think of how much work goes into buying the food, preparing the food, cleaning up after the meal. Of course we do it for more than just the taste; we do it to keep the body going. But, there’s an awful lot of energy expended in the idea, “Let’s make this taste really good”—and then it’s gone.
We’re actually more attached to our plans for these things, our desires for these things, than we are to the things themselves. It’s easy enough to replace a desire for one sensual pleasure with a desire for another sensual pleasure. It’s hard to drop our desire for sensual desire entirely. That’s one of the causes of suffering.
Another cause is craving for becoming. You want to become something, to take on a particular identity, within a particular world of experience. We choose our worlds, you know: the context in which we see ourselves, the context in which we move and exert an influence. These two things are entwined: both the world in which we have a self and the sense of self that functions within that world. Sometimes the world is on the sensual level. Sometimes it’s on the level of form, as when we’re meditating and fully inhabiting the form of the body. Sometimes it’s on the formless level—any abstraction, any formless experience, anything without a form, as when we experience space in our meditation, or a sense of formless “knowing.” And again, we tend to go from one of these types of becoming to another, to another, to another. This is what the wandering on is all about. We go from one bhava, one state of becoming, to another.
Samsara literally means "wandering-on." Many people think of it as the Buddhist name for the place where we currently live — the place we leave when we go to nibbana. But in the early Buddhist texts, it's the answer, not to the question, "Where are we?" but to the question, "What are we doing?" Instead of a place, it's a process: the tendency to keep creating worlds and then moving into them. As one world falls apart, you create another one and go there. At the same time, you bump into other people who are creating their own worlds, too.
These are the locations that the mind focuses on. And we suffer from this because none of these locations can last; none of these positions can last. Whatever we latch onto as a self, it just keeps melting away. The world around us just keeps melting away.
The play and creativity in the process can sometimes be enjoyable. In fact, it would be perfectly innocuous if it didn't entail so much suffering. The worlds we create keep caving in and killing us. Moving into a new world requires effort: not only the pains and risks of taking birth, but also the hard knocks — mental and physical — that come from going through childhood into adulthood, over and over again. The Buddha once asked his monks, "Which do you think is greater: the water in the oceans or the tears you've shed while wandering on?" His answer: the tears. Think of that the next time you gaze at the ocean or play in its waves.
Then there’s craving for non-becoming, the desire to destroy whatever you’ve got, whatever you identify yourself with. Or you want to destroy the world around you. It’s unpleasant. Outrageous. You don’t like it. You want to get rid of it, which can either be an external destructive urge or an internal destructive urge. Paradoxically, this type of craving leads to becoming as well. Why is that? Because in taking on the identity of the Destroyer, you’re assuming another identity. In taking delight in the idea of destruction, you’re watering?? a sense of identity; you’re watering?? a sense of becoming.
The Buddha’s image is of a seed planted in the ground. The seed is your consciousness. The ground is your kamma, past and present, as it’s manifesting right now. Then there’s the delight in doing something with these things, either creating something out of them or destroying them. All of that counts as a cause of suffering. It may sound pretty abstract, but as you get to know the mind, you begin to sense the movement as it’s going in one of these directions or another: toward becoming or non-becoming. In one sense we’re in a double bind; the desire to get rid of becoming itself is a way of creating becoming—but this is where the Buddha’s genius as a strategist comes in.
He’s says that you go beyond becoming not by destroying becoming but by learning how to create new forms of becoming that are more skillful, particularly the “becoming” of concentration, getting the mind to settle down and be in one spot. As long as you’re going to have a location, develop a solid steady location within the form of the body, because it’s a blameless way of giving rise to happiness. Then, when you can see things clearly from this location, you can simply let the processes of becoming go.
Sometimes you hear about the dangers of being stuck on concentration. But if you look through the texts, the Buddha talks about them only in very rare cases. He mentions the
dangers of delighting in the state of equanimity or of not wanting to go beyond a particular state of concentration, but these are pretty harmless, pretty minor compared to the dangers of staying stuck in sensuality.
The Buddha gave long, long discourses about all the suffering and conflict that come from sensual craving. You have to work hard to gain what you crave and sometimes your efforts are fruitless. Or, even when they do bear fruit in what you want, those things don’t really stay with you. As the Buddha says, sometimes fire burns them, water washes them away, thieves or kings will make off with them—I like that: pairing thieves with kings—or hateful heirs make off with them. It’s because of sensual craving that there are conflicts within the family, conflicts among nations. This is why we go to war. I don’t think that anyone has ever gone to war over attachment to jhana, attachment to concentration. But we kill, steal, have illicit sex, lie to one another, indulge in intoxicants, all because of sensual craving, sensual attachment—none of which happens because of our attachment to jhana. The only danger of being stuck on jhana is that as long as you’re stuck, you don’t gain awakening.
And that, as the Buddha said, is the end of the problem.
* * * * *