உவமானங்கள் 1-12
இது போலத்தான்
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
It’s Like This
1 0 8 D H A M M A S I M I L E S
Venerable Ajahn Chah
* * * * * *
1. கூண்டில் உள்ள பறவை Top
மனத்தைப் பயன்படுத்தி உடலைப் பிரதிபலித்து அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உடலைத் தெரிந்து கொண்டால், அது உறுதியற்றது - ஒவ்வொரு பாகமும் நிலையற்றது என்பது தெரியவரும். இவ்வாறு பார்க்கும் போது உலகின் மீதான மோகம் குறைவதைக் காணலாம் – இது உடலோடும், மனத்தோடும் பற்றுக் குறையும் நிலை. ஏனென்றால் அவை உறுதியற்றவை, நம்பக்கூடியவை அல்ல. எனவே உறுதியுள்ள ஒன்றைத் தேடுகிறோம். துக்கத்திலிருந்தும், அதிருப்தியிலிருந்தும் விடுதலை பெற வழி தேடுகிறோம்.
இது ஒரு கூண்டில் உள்ள பறவையைப் போல: தன்னால் எங்கும் பறக்கமுடியவில்லையே என்ற குறையை அது அறிந்துள்ளதால், எப்படியாவது அந்தக் கூண்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று தனது மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூண்டின் மேலும், அது இருக்கும் இடத்தின் மேலும் அதற்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பறவைக்கு உணவளித்தாலும் அது மகிழ்வதில்லை. ஏனென்றால் அந்தக் கூண்டிற்குள் சிறைப்பட்டிருப்பதை அதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நம் உள்ளமும் அப்படித்தான்: அகத்தின், புறத்தின் தன்மைகள் நிலையற்றவை, திருப்தியற்றவை, அவை ஏதும் தனதில்லை என்பதை அறிவதால், அவற்றில் உள்ள குறைபாடுகளைக் கண்டு, அவற்றில் தொடர்ந்து சிக்கியுள்ள நிலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று எண்ணுகிறது.
A Bird in a Cage
Use the mind to contemplate the body so that you’re familiar with it. When you’re familiar with it, you’ll see that it’s not for sure—every part of it is inconstant. When you see in this way, your mind will give rise to a sense of disenchantment—disenchanted with the body and mind because they’re not for sure, they’re unreliable. So you want to find a way out, a way to gain release from suffering and stress.
It’s like a bird in a cage: It sees the drawbacks of not being able to fly anywhere, so its mind is obsessed with finding a way out of the cage. It’s fed up with the cage where it lives. Even if you give it food to eat, it’s still not happy, because it’s fed up with the cage where it’s imprisoned.
The same with our heart: When it sees the drawbacks of the inconstancy, stressfulness, and not-selfness of physical and mental phenomena, it will try to contemplate how to escape from that cycle of wandering-on.
2. அறத்தின் சக்தி Top
புத்தரின் போதனைகள் சாதாரண மனிதரை மாற்றி அவர்களை வணக்கத்துக்குரியோராக உருவாக்குகிறது. அதாவது அவை மனத்தில் உள்ள தவறானவற்றை ஒழித்துவிடுகிறது. அப்படிச் செய்தால் தான் சரியானவை மேலுக்கு வரும். அவை தீயவற்றை ஒழிப்பது, நல்லவற்றை மேலோங்க வைப்பதற்குத் தான்.
உங்கள் வீடு குப்பை கூலங்களோடு இருப்பது போலத்தான் இது: வீட்டைப் பெருக்கி அழுக்கைத் துடைத்து விட்டால், வீடு சுத்தமாகிவிடுகிறது - ஏனென்றால் அழுக்கு மறைந்துவிட்டது. மனத்தில் தவறானவை விலக்கப்படாத வரை சரியானவை உருவாகாது. தியானம் செய்யவில்லையென்றால் உண்மை தெரியவராது. புத்தரின் அறம் மிகவும் சக்திவாய்ந்தது. உங்கள் உள்ளத்தை நல்வழிக்கு மாற்ற முடியாவிட்டால் அது சக்தி வாய்ந்த அறமாகாது. ஆனால் அறம் சாதாரணமானோரையும் பெரும் மதிப்புக்குரியோராக்க முடியும், ஏனென்றால் தவறான பார்வை உள்ளோரிடமும் அது சரியான பார்வையை உண்டாக்குகிறது.
The Power of the Dhamma
The teachings of the Buddha get rid of people and give rise to venerables. In other words, they get rid of what’s wrong in the mind. Only then can what’s right arise. They get rid of what’s evil so that goodness can arise. As when your house is dirty: If you sweep it out and wipe away the dirt, it’ll be clean—because the dirt is gone. As long as what’s wrong in the mind isn’t gone, what’s right can’t arise. If you don’t meditate, you won’t know the truth. The Buddha’s Dhamma is very powerful. If it couldn’t change your heart, it wouldn’t be a Dhamma with any power. But the Dhamma can turn ordinary people into noble ones, because it enables people with wrong views to give rise to right views.
3. உங்களுக்கு நீங்களே சாட்சி Top
அறம் என்பது, நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது அவர்கள் உங்களுக்குப் பழங்கள் கொடுப்பது போல. பழத்தைக் கையில் எடுக்கும் போது அது புளிப்பா, இனிப்பா அல்லது காயா என்பது தெரியாது. அதாவது பழத்தைக் கையில் மட்டும் வைத்திருந்தால் அதன் உருசி தெரியவராது. அதன் சுவையை அறிய அதைக் கடித்து மெல்ல வேண்டும். அப்போது தான் அது புளிப்பா, இனிப்பா அல்லது அதன் பிற வேறுபட்ட சுவைகளும், உங்கள் மனக் குறிப்புகளுக்குத் தகுந்தார்போல் தெரியவரும்.
அறமும் இதைப் போலத்தான். எல்லாவற்றிலும் புத்தர் உங்களுக்கு நீங்களே சாட்சியாக இருக்க வேண்டுமெனச் சொன்னார். வேறொருவரைச் சாட்சியாக்க வேண்டியதில்லை. மற்றவரின் வாழ்க்கை முறைகளை ஆராய்வது கடினம், ஏனென்றால் அவை மற்றவரின் விவகாரங்கள். உங்கள் சம்பத்தப்பட்ட விவகாரமாக இருந்தால், அதை ஆராய்வது எளிது - ஏனென்றால் அதன் உண்மை உங்களுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு நீங்களே சாட்சியாகின்றீர்கள். அறத்தைக் கேட்கும் போது, அதைப் பற்றித் தியானிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் படிப்பும், பயிற்சியும் ஆன்மீக வளர்ச்சியும் முழுமை அடையும்.
'பரியத்தி' என்றால் தெரிந்து கொள்வதற்காகப் படிப்பது என்று பொருள். தெரிந்த பின் 'பதிபட்டி'. அதாவது அதை நடைமுறைக்குக் கொண்டுவருவது. 'பதிவேதா' (ஞானம்) அடைந்த பின் வாய்மைக்கு ஒருங்கிணைய உங்களுக்குள் உண்டாகும் அறிவு.
கேட்பதோடு நிறுத்தி விட்டால் உங்கள் அறிவு வெறும் மனக் குறிப்புகளும் கருத்துக்களும் தான். அதைப் பற்றிப் பேசினால் உங்கள் கருத்துகளுக்கு ஒப்பாகத் தான் பேசுகின்றீர்கள். உண்மையை வெளிக்கொணர்ந்து பேசுவதில்லை. அப்படியென்றால் நீங்கள் அறத்தை அடையவில்லை, அறத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று பொருள். உங்கள் உள்ளம் அறத்தோடு இல்லை, ஆனால் அறத்தைப் பற்றிப் பேச முடிகிறது, அறத்தை அறிந்தார்ப்போல நடந்து கொள்ளமுடிகிறது. இதைத்தான் புத்தரின் போதனைகளின் நியதிப்படி நீங்கள் முழுமையடையவில்லை என்பது.
மொழிபெயர்ப்பாசிரியர் குறிப்பு:
பரியத்தி: அறத்தைப் படிப்பதால், கற்பதால் வரும் அறிவு (உதாரணமாகத் திரிபிடகப் பகுதிகளை மனப்பாடம் செய்வது)
பதிபட்டி: அறத்தை நடைமுறையில் பயில்வது. புத்தரின் போதனைப்படி ஒழுக்கத்தையும், மன ஒருமைப் பாட்டினையும் வளர்த்துக்கொள்வது.
பதிவேதா: நேரடியாக அறத்தை/வாய்மையை உணர்வது. கிலேசங்களை (மனத்தை உறுத்துவன) முழுமையாக ஒழிப்பது, துக்கத்திலிருந்து விடுதலை பெறுவது. இதுவே அறத்தின் சாராம்சம்.
Your Own Witness
With the Dhamma, it’s like going to the home of friends or relatives and they give you some fruit. When you take the fruit in your hand, you don’t know whether it’s sour, sweet, or unripe. In other words, if you simply hold the fruit in your hand, you can’t know its taste. To know the taste, you have to bite into it and chew it. That’s when you’ll know that it’s sour or sweet or what its various flavors are, in line with your own perceptions.
It’s the same with the Dhamma. In everything, the Buddha has you take yourself as your own witness. You don’t have to take anyone else. The affairs of other people are hard to judge because they’re the affairs of other people. If something is your own affair, it’s easy—because the truth lies within you. It has you as its witness. When you hear the Dhamma, you have to meditate on it to be complete in study, practice, and attainment.
Pariyatti is study so as to know. When you know, then patipatti: You put it into practice. With pativedha, attainment, knowledge in line with the truth arises within you.
If you simply listen, your knowledge is just perceptions and concepts. If you talk about it, you speak in line with your concepts. You aren’t bringing the truth out to talk about. This means you haven’t reached the Dhamma, haven’t contemplated the Dhamma. Your heart isn’t Dhamma, but you can speak the Dhamma and act as if you were Dhamma. This is called being incomplete according to the standards of the Buddha’s teachings.
Tamil Translator's Note:
pariyatti: Theoretical understanding of Dhamma obtained through reading, study, and learning.
paṭipatti: The practice of Dhamma, as opposed to mere theoretical knowledge
paṭivedha: Direct, first-hand realization of the Dhamma.
4. அறத்தின் மொழி Top
எல்லா மொழிகளும் அறம் என்ற மொழியில் இணைகின்றன. ஒரு எளிமையான உதாரணம் தருகிறேன். தேனீர் தயாரிக்கத் தண்ணீரைக் கொதிக்கவைக்கும் போது தண்ணீர் சூடாகிறது. "சூடு" என்ற வார்த்தை ‘தாய்’ மொழியில் "ராவ்ன்" என்றும் இஸான் மொழியில் "ஹாவ்ன்" என்றும் ஆங்கிலத்தில் "ஹோட்" என்றும் அழைக்கப்படும். அப்படித்தான் வழக்கத்தில் இருக்கிறது. மொழிகள் அப்படித்தான். சூடு ஒரே சூடுதான் என்றாலும், ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் வருணிக்கின்றனர். இந்த மொழிகளெல்லாம் எங்கு ஒன்று கூடுகின்றன என்பதைத் தெரிய வேண்டுமானால், சூட்டின் மொழி ஒன்று கூடுவது நமது விரலைத் தேனீரில் விடும் போதுதான். சீன மனிதர் அவர் விரலைத் தேனீரில் விடும் போதும், அந்தச் சூடு மேற்கத்தியரோ, ஆங்கிலேயரோ விரலை விடும் போது உள்ள சூட்டைவிட வித்தியாசமானதாக இல்லை. ஒரே வித்தியாசம் மொழிகளின் வார்த்தைகளே. அனைவருக்கும் சூடென்பது ஒன்றுதான். நீங்கள் சூடு என்ன என்பதை அறியும் போது மற்றவருக்கும் சூடு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்கின்றீர்கள்.
The Language of the Dhamma
All languages come together in the language of the Dhamma. I’ll give you a simple example. When we boil water for tea so that it’s hot, the word “hot” in Thai is rawn. In Isaan it’s hawn. In English, they say, hot. That’s the way it is. Languages are like that. Each person speaks in his or her own language, even though it’s all the same heat. If you want to find where all these languages come together, the language of heat all comes together where we stick our finger into the tea. If you get a Chinese person to stick his finger into the tea, the heat is no different from when you get a Westerner or an English person to stick his finger into the tea. The only difference is in the language of the words. Heat is the same for everybody. When you know heat, it means that you know how it is for everyone.
5. கண்களைத் திறவுங்கள் Top
மனிதர்கள், துன்பத்தை உணராவிட்டால், கண்களைத் திறப்பதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எல்லாம் அடைக்கப் பட்டுச் சோம்பேறிகளாகி விடுகின்றனர். துக்கம் உங்களைத் துளைக்கும் போது: அப்போது தான் நீங்கள் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றீர்கள், பின் உங்கள் விழிப்புணர்வை விரிவுபடுத்துகின்றீர்கள். துக்கம் அதிகமாக அதிகமாக அதற்கான காரணத்தை நீங்கள் மேன் மேலும் விசாரிக்க வேண்டும். வெறுமனே உட்கார்ந்து கொண்டு அந்த துயரம் தானாகப் போய்விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இந்தச் சமயத்தில் என் கைகள் பாரமாகத் தோன்றுகின்றன - ஏன்? ஏனென்றால் இந்தக் கண்ணாடிக் கோப்பையை நான் தூக்கிக் கொண்டிருக்கிறேன். பிடியை விட்டுவிட்டால், அந்தக் கோப்பை பாரமாகத் தெரியாது. குறைந்தது எனக்குப் பாரம் விளைவிக்காது. ஏனென்றால் அதனோடு எனக்குத் தொடர்பு இல்லை.
அது போலத்தான் அழுத்தமும், துயரமும்: அவை ஏன் பாரமாக இருக்கின்றன? ஏன் துக்கத்தை உண்டாக்குகின்றன? ஏனென்றால் அதனைப் பிடித்துக் கொண்டுள்ளீர்கள். ஆனால் அது துயரத்தைத் தருவதை நீங்கள் அறிவதில்லை. நீங்கள் அது சிறப்பானதென்றும், நல்லதென்றும் நினைக்கின்றீர்கள். உங்களை விடச்சொன்னாலும் உங்களால் விடமுடியவில்லை. கீழே வைத்துவிடுங்கள் என்றாலும் வைக்க முடிவதில்லை. எனவே தொடர்ந்து பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள், தொடர்ந்து துக்கம் அனுபவிக்கின்றீர்கள்.
Open Your Eyes
People, if they don’t feel pain, don’t open their eyes. If they’re happy, everything shuts down and they get lazy. When suffering stabs you: That’s what gets you thinking, and you can really expand your awareness. The greater the pain, the more you have to investigate it to see what causes it. You can’t just sit there and let the pain go away on its own. Right now my arm feels heavy—why? Because I’ve picked up this glass. If I let it go, the glass won’t be heavy, or at least won’t be heavy on me, because I’m not connected with it.
The same with stress and pain: Why is it heavy? Why is it painful? Because you’re holding onto it. But you don’t understand that it’s stressful. You think that it’s something special, something good. When you’re told to let it go, you can’t let it go. When you’re told to put it down, you can’t put it down. So you keep on being heavy, keep on suffering.
6. துணிக்கு சாயம் போடுவது Top
நமது அண்ணல் புத்தர் நமது அத்திவாரத்தை முதலில் நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று கூறினார். தெளிவாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கச் சொன்னார். இது ஒரு கட்டிடத்தையோ, வீட்டையோ கட்டுவதைப்போல. முதலில் நிலத்தைப் பரிசோதனை செய்ய வேண்டும். நல்ல நிலையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அல்லது துணிக்குச் சாயம் தோய்ப்பது போல: துணிக்குச் சாயம் தோய்க்க வேண்டுமென்றால் முதலில் துணியைச் சோதனை செய்து அழுக்கின்றி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அழுக்காக இருந்தால் முதலில் சோப்புப் போட்டு அழுக்கு நீங்கும் வரை துவைக்கவேண்டும். அதன் பின்னரே நீங்கள் போடும் சாயம் அதில் ஒட்டும். அதாவது சுத்தமாகும் வரை துவைத்த பின்னால் சாயத்தில் தோய்க்கலாம். அது போலவே புண்ணியம் சேர்ப்பதற்கு முன்னால் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்.
உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதென்றால் தீய எண்ணங்களை விட்டு விடுதல், தவறானவற்றையும் தீயவற்றையும் விட்டு விடுதல். அப்போதுதான் நல்லதைச் செய்ய முடியும், சரியானதைச் செய்ய முடியும். எதை எடுத்துக் கொண்டாலும் முதலில் அத்திவாரம் சுத்தமாக இருக்க வேண்டும். பின் எதைச் செய்தாலும் புண்ணியம் கிடைக்கும்.
"சப்பா-பபஸா-அ-கரணம்": முதலில் தீயதைக் கைவிட வேண்டும், தவறானவற்றைக் கைவிட வேண்டும். இது துணியில் சாயத்தைத் தோய்க்குமுன் அதில் உள்ள அழுக்கை அகற்றுவது போல. இது புத்தரின் போதனைகளில் ஒரு முக்கியமான பாடம்.
குறிப்பு: பாலி மொழியில் "சப்பா-பபஸா-அ-கரணம்" என்றால் தீயவைகளை செய்யாதே என்று பொருள்.
எல்லா - சப்பா (Sabba - All things)
எல்லா தீயவை - சப்பா-பபஸா (Sabba-papassa - All things evil)
செய்யாதே - அகரணம் (akaranam - not doing)
Dyeing the Cloth
Our Lord Buddha wanted us to get our foundation in good shape first, get everything clear and clean first. It’s like building a house or a building. We have to inspect the ground, the area where we’re going to put up the building, so that it’s in proper shape. Or like dyeing cloth: If you want to dye a piece of cloth, you have to look it over to see if it’s dirty. If it’s dirty, you have to wash it in detergent until it’s clean. Only then will it take the color when you dye it. In other words, wash it until it’s clean, and then it will take the dye. It’s the same with making merit. You first have to make your mind clean.
Making your mind clean means letting go of evil thoughts, letting go of everything that’s wrong and evil. That’s when you can do good, do what’s correct. With everything, the foundation has to be clean first, and then whatever you do will give rise to merit. Sabba-papassa akaranam: First you have to abandon evil, abandon what’s wrong, in the same way that you get rid of the dirt so that you can dye your cloth. This is one of the lessons in the heart of the Buddha’s teachings.
7. களை பிடுங்கு Top
காய்கறிச் செடிகள் பெரிதாகவும் அழகாகவும் வளரக் களைகளைப் பிடுங்க வேண்டும். அப்போதுதான் காய்கள் பெரிதாகவும் அழகாகவும் வளர வாய்ப்பிருக்கும். ஏனென்றால் களைகளைப் பிடுங்கிவிட்டோம். காய்கறிச் செடிகளின் மத்தியில் இருந்த வேண்டாதவற்றை எடுத்துவிட்டதால் கறிகாய்ச் செடிகள் நன்கு வளர்கின்றன. நம் உடலும், பேச்சும, உள்ளமும் இது போலத்தான். நமது தவறான நடத்தையை நீக்கிவிட்டால், பின் நமது நற்குணம் - நமது பண்பு - வளரும்.
எனவே சீலங்களைக் கடைப்பிடியுங்கள். அவற்றை அடக்கத்துடனும், கவனத்துடனும் பின் பற்றுங்கள்.
Remove the Weeds
For your vegetable to grow big and beautiful, you have to remove the weeds. That’s when your vegetables will have a chance to grow large and beautiful— because you’ve removed the weeds. You’ve removed the bad things around the vegetables, so the vegetables can grow. It’s the same with our body, speech, and mind. If we remove our bad actions, then our goodness—our virtue—will grow.
So take the precepts and follow them with restraint, with care.
8. காத்திருக்க வேண்டாம் Top
எப்போது உங்கள் எண்ணத்திலோ, சொல்லிலோ, செய்கையிலோ திறனற்றதொன்று தோன்றுகிறதோ அதை உடனே களைந்து விடுங்கள். நீண்ட நேரம் விட்டுவிட வேண்டாம். இது உங்கள் உடம்பில் உண்டாகும் காயத்தைப் போல. அல்லது காலில் குத்தியிருக்கும் முள்ளைப்போல. அதை எடுத்துவிட விரும்புகின்றீர்கள், ஆனால் இன்றே எடுப்பது நல்லதா? நாளை எடுப்பதா? அல்லது, அடுத்த வாரம் எடுக்கலாமா?
அல்லது உங்களுக்கு இன்று வயிற்று வலி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். வயிற்றுவலி மிகவும் தொல்லை தரும். அதை சரி செய்ய வேண்டுமென எண்ணுகின்றீர்கள். ஆனால் இன்றே சரியாக வேண்டுமா? அல்லது நாளை சரியாக வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அல்லது, ஒரு வாரம் காத்திருந்து பின் சரியாக வேண்டும் என்று நினைப்பீர்களா?
Why Wait?
As soon as there’s anything unskillful in your thoughts, words, and deeds, remove it. Don’t let it hang around for a long time. It’s like a wound appearing in your body, or a thorn sticking into your foot. You want to remove it, but would it be better to remove it today or tomorrow? Or how about taking it out next week?
Or suppose you get a stomachache today. A stomachache is painful, and you want the pain to go away. But do you want it to go away today, or would tomorrow be better? Or would you rather wait for a week for it to go away?
9. அறத்துக்கு விழிப்பது Top
அறத்தை அடைவது, அறத்துக்கு விழிப்பது: இவை எல்லாம் வெகு தூரத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது. உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இவற்றைப் பற்றிப் பேசக் கூடத் தயக்கமாக இருக்கிறது.
ஆனால் உண்மையில், நம்மைப் போல உள்ளவர்கள் அறத்தை அடைய முடியும். அறத்தை அடைவதென்பது, "இது தீயது. இது தவறானது. மேலும் இது எனக்கும் பயனற்றது, மற்றவர்களுக்கும் பயனற்றது." என்று அறிவது. இது போல அறிந்து கொண்டால், புறக்கணிக்க வேண்டியது பற்றிய அறத்தை அடைந்து விடுகிறோம். இது தான் அறத்துக்கு விழிப்பதென்பது.
இது ஓடங்கள் கரை இறங்கும் இடத்துக்குச் செல்வதைப் போல. அங்கு வந்து சேர்ந்தவுடன் கரையை அடைந்துவிட்டீர்கள். இந்த அரங்கத்திற்கு வந்துசேர்ந்தவுடன், அரங்கத்தை அடைந்து விட்டீர்கள்.
வாய்மையோடு சரியாக அறிமுகமானபின், வாய்மையை, அறத்தை அடைந்து விட்டதாகப் பொருள். அறத்தை அடைந்த பின் உங்கள் கிலேசங்கள் (தூய்மையைக் கெடுப்பவை) படிப்படியாகக் குறைந்து மறைந்து விடுகின்றன. உங்கள் கருத்துக்கள் சரியாக இருக்கும் போது, நீங்கள் தவறான கருத்துக்களை விலக்கி விடுவீர்கள் என்பது நிச்சயம்.
Awakening to the Dhamma
Reaching the Dhamma, awakening to the Dhamma: These things sound awfully exalted, too exalted to talk about. But actually, people like us are on a level where we can reach the Dhamma. Reaching the Dhamma is understanding, “This is evil. It’s wrong and doesn’t benefit me or anyone else at all.” When you understand in this way, that’s called reaching the Dhamma of what should be abandoned. This is what’s called awakening to the Dhamma.
It’s like going to a boat landing. When you’ve arrived at the landing, you’ve reached the landing. When you come up here to the meeting hall, you’ve reached the meeting hall.
When you’re correctly acquainted with the truth, that’s what’s meant by reaching the truth, reaching the Dhamma. When you’ve reached the Dhamma, your defilements gradually fade away and decrease. When your views are right, it’s normal that you’ll abandon your wrong views.
10. அறிவும் நன்மையும் Top
அறிவு ஒரு கத்தியைப் போல. அது கூர்மையாகும் வரை - மிகக் கூர்மையாகும் வரை அதை மேம்படுத்துகிறோம், தீட்டுகிறோம். பின் அதை ஒரு புறத்தில் வைத்துவிடுகிறோம். கத்தியினால் நன்மையும் செய்யலாம், தீமையும் விளைவிக்கலாம். பகுத்துணர்வுள்ள ஒருவர் கத்தியைப் பயன்படுத்தும் போது அது துரிதமாகச் செயற்படுகிறது. பகுத்துணர்வுள்ள ஒருவர் கத்தி கூர்மையாக இருப்பதால் அதைக்கொண்டு பல்வேறு பயன்களை அடைவார். ஆனால் உன்னிப்பில்லாதவர் அதைக்கொண்டு நாட்டையே அழிக்கலாம், மகிழ்ச்சியை அழிக்கலாம், இணக்கத்தை அழிக்கலாம் - பல தீய காரியங்களைச் செய்யலாம். மேலும் கத்தி கூர்மையாக இருப்பதால் இவற்றை எளிதாகச் செய்யலாம்.
அறிவு முட்டாளை அடைவது, ஒரு கள்வனிடமோ தீயவனிடமோ ஒரு ஆயுதத்தைக் கொடுப்பது போல. அவன் எல்லா இடங்களிலும் மக்களைச் சுட்டுத் தள்ளுவான், எல்லா இடங்களிலும் கொன்று குவிப்பான். அறிவு மெய்யறிவு படைத்தவனை அடையும் போது நாடும் மக்களும் இணக்கத்தோடு செயல்பட முடிகின்றது.
இந்தக் காலத்தில் அறிவின் மீது அதிக நம்பிக்கை வைக்கிறோம். அறிவை வணங்குகிறோம். ஆனால் நல்லதையோ, சரியானதையோ வணங்குவது மிக அரிது. அறிவு இருக்கும் போது நல்லதும், சரியானதும் உடன் இருக்கவேண்டும். இவற்றை ஊக்குவித்தால் உலகம் நல்லபடி இயங்கும். ஆனால் இப்போதோ, "எனக்கு அறிவு உள்ளது, எனவே நான் தான் தலைவன். என் சொற்படிதான் கேட்க வேண்டும்." என்ற நிலைமை உள்ளது. இந்த வழியில், எல்லாம் நாசமாகிறது. நன்மை இல்லா அறிவென்பது இதுதான்.
Knowledge & Goodness
Knowledge is like a knife. You hone it until it’s sharp—really sharp. Then you put it away. The knife can cause both benefits and harm. When a person of discernment uses it, it’s sharp. A person of discernment can get lots of benefits from it because it’s sharp. But a person without discernment can use it to destroy the nation, destroy happiness, destroy harmony—all kinds of things. And he can do it easily because the knife is sharp.
When knowledge comes to a fool, it’s like putting a weapon in the hands of a bandit or an evil person. He’ll shoot people all over the place, kill all over the place. When knowledge comes to a wise person, the nation and its people get along easily.
These days we pin our hopes on knowledge. We worship knowledge. We rarely worship goodness or correctness. When you have knowledge, you need to have goodness and correctness as well. When you encourage these things, the world will go well. But here it’s, “I’ve got knowledge, so I’m in charge.” In this way, everything goes to hell. That’s what it’s like when you have knowledge without goodness.
11. உன்னிப்பில்லா நன்மை Top
திறமையாகச் செயல்படுவதென்பது இன்பத்திலோ, மகிழ்ச்சியிலோ மட்டும் மையப்படுவது இல்லை. அந்த மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது, எப்படிப் பட்டது என்பதையும் பார்க்க வேண்டும். எதிலிருந்து வந்தது அந்த மகிழ்ச்சி என்று உன்னிப்புடன் பார்க்க வேண்டும்.
சிலர் செல்வத்தைப் பெருக்குவது நன்மை என்று நினைக்கின்றனர். ஏராளமான செல்வம் இல்லாவிட்டால் அது நல்லதல்ல என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு எப்படிச் செல்வத்தை சேர்த்தோம் என்பது முக்கியம் இல்லை, எப்படிச் சேர்த்தாலும் சரியே. மனிதனின் தோல் நல்ல விலைக்குப் போகும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோவிற்கு பல்லாயிரக்கணக்கான பாஹ்ட் (தாய்லாந்து நாட்டு நாணயம்) கிடைக்கிறது. இன்னொரு கூட்டம் மனிதத் தோல் கிடைக்குமிடந்தேடிச் செல்கிறது. அப்போது நாம் எங்கு வாழ்வது? மனிதத் தோலைப் பெறுவதற்காக ஒருவரை ஒருவர் எல்லா இடங்களிலும் கொன்று குவித்துக் கொண்டிருப்போம் - ஏனென்றால் மனிதத் தோலுக்கு மதிப்பு இருக்கிறது. இந்தக் காலத்தில் நாமும் பிழைக்க வேண்டும் அல்லவா? அதிகம் சொத்துச் சேர்த்தால் அதிக நன்மை. ஆனால் அறமற்ற வழியில் நாம் ஆதாயம் தேடுவது சரியா? எந்த வகையான நன்மையும் பகுத்துணர்ந்து செய்யப்படல் வேண்டும். உன்னிப்பில்லாமல் கிடைக்கும் இலாபம் நமக்குத் தீமை விளைவிக்கும். உன்னிப்புடன் செய்து கிடைக்கும் இலாபத்தில் தீமை இருக்காது. உன்னிப்பில்லாமல் கிடைக்கும் இலாபமோ, நன்மையோ புத்தரின் போதனைகளுக்கு அப்பாற்பட்டவை.
இது ஒருவன் விஷத்தை விற்பதற்கு விளம்பரம் செய்வது போல. அவன் கூறுகிறான்: "நான் விற்கும் விஷப் பொருள் சிறந்தது. நாய்க்குத் தந்தால் நாய் மாண்டுவிடும். மனிதனுக்குத் தந்தால் மனிதன் மாண்டு விடுவான். கோழிக்குத் தந்தால் கோழி மாண்டுவிடும். யாருக்குத் தந்தாலும் அவர் மாண்டு விடுவார். எனவே எனது விஷத்தை வாங்குங்கள். அது நல்ல விஷம்." அது உண்மையிலேயே நன்மை விளைவிப்பதாக இருந்தால் விற்பவனுக்கு முதலில் அதைத் தந்து சோதிக்க வேண்டும். நன்மை தான். ஆனால் அது கொல்லும் நன்மை. அதை உண்டது எல்லாம் இறக்கும். எனவே அவன் நல்லது என்கிறான். அது நல்லது என்றால், நீங்கள் விற்பவனுக்கே அதைத் தரவேண்டும் - ஆனால் அவன் அதை அருந்துவானா? மாட்டான். அது தன்னைக் கொன்றுவிடும் என்ற அச்சம் அவனுக்கிருக்கும். இது போன்ற நன்மை புத்தரின் போதனைக்கு அப்பால் உள்ள நன்மை. இது தீவினை கொண்ட நன்மை, ஒழுக்கம் கெட்ட நன்மை, அழுக்குள்ள நன்மை, அமைதியில்லா நன்மை. புத்தரின் போதனைப்படி உள்ள நன்மை, சேதம் இல்லாத நன்மை. ஆகவேதான் புத்தரின் வழியில் உள்ள நன்மையை அடைய அதை உன்னிப்புடன் தேடவேண்டும்.
Goodness Without Discernment
Skillfulness doesn’t focus only on pleasure or happiness. It has to see where that happiness comes from and what it’s like. You have to use your discernment to see what it comes from. Some people think that gaining a lot of wealth is goodness. Not gaining a lot is bad. It doesn’t matter to them how you gain it, just as long as there’s a lot. Suppose that after a while they decide that human skin fetches a high price. One kilogram fetches tens of thousands of baht. So another group goes out looking for human skins. Where could we live? We’d be killing one another all over the place simply to get skins to put up for sale—because human skin fetches a high price.
These days we look for our livelihood, thinking that the more we gain, the better. But if we gain it in a way that’s not moral, would it be right? Every form of goodness has to be done with discernment. Any form of goodness done without discernment is harmful. Any form of goodness done with discernment is free of harm. Any form of goodness done without discernment is goodness outside the Buddha’s teachings.
It’s like a person advertising poison for sale. He says, “My poison is good. If you feed it to a dog, the dog will die. If you feed it to a person, the person will die. If you feed it to a chicken, the chicken will die. Whoever you feed it to will all die. So buy my poison. It’s good poison.” If it’s really good, you should try feeding it to the person selling it. But its goodness is that it kills. Whatever eats it dies. So he says it’s good. If it’s good, you should try feeding it to the person selling it—but would he eat it? He wouldn’t eat it. He’d be afraid that it would kill him. That kind of goodness is goodness outside the Buddha’s teachings. It’s harmful goodness, filthy goodness, unclean goodness, goodness that’s not
peaceful. Goodness in line with the Buddha’s teachings is goodness without harm. This is why, when you look for happiness in line with the Buddha’s teachings, you have to do it with discernment.
12. உண்மையான செல்வம் Top
"சிலீனா போக-சம்பதா": அதாவது பண்புள்ளவருக்குச் செல்வம் உண்டு. புறச் செல்வத்தைப் பொருத்தவரை, பண்புள்ளவர் பிழைப்புக்காகத் தேடுவதெல்லாம் நல்வாழ்வாக இருக்கும். நல்வாழ்விலிருந்து கிடைப்பது, அது அதிகமாக இல்லாவிட்டாலும், பெரிது. அது ஏன் பெரிதென்றால் அவற்றுக்கு மதிப்பு இருக்கிறது. எனவே அவற்றைப் 'போக-சம்பதா' என்ற கணக்கில் சேர்க்கலாம்: செல்வத்தைப் பயன்படுத்துவது. வைரங்களையும் நகைகளையும் போல: சிறு துண்டுகளுக்கும் மிகுந்த மதிப்பு உள்ளது. ஏனென்றால் அவற்றில் மதிப்பில்லா எவையும் கலக்கப்படவில்லை.
வாழ்க்கையை நடத்துவதற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களெல்லாம், அவை சேதமற்றவையாக இருந்தால் அவற்றிற்கு மதிப்பு உள்ளது. அவையே செல்வம்.
குறிப்பு: பாலி மொழியில் "சிலீனா போக-சம்பதா" என்றால் சீலத்துடன் செல்வத்தை அனுபவி என்று பொருள்.
சீலத்துடன் அதாவது ஒழுக்கத்துடன் - சிலீனா (Silena - With virtue)
அனுபவி - போக (Bhoga - enjoyment)
செல்வத்தை - சம்பதா (Sampada - Wealth)
Genuine Wealth
Silena bhoga-sampada: A person with virtue has wealth. In terms of external wealth, all the things that we search out for our livelihood will be Right Livelihood. The things we gain from Right Livelihood, even if they’re not much, are large. They’re large because they have value. That’s why they count as bhogasampada: consummation in terms of wealth. Like diamonds and jewels: Even tiny pieces have a high price because they’re free of things that are worthless. All the things that we use to maintain our livelihood: If they’re free of harm, they have value. They’re wealth.