FILM : MANIMEGALAI
SONG : VANTHAYA MAGALE
SINGER : G.RAMANATHAN
MUSIC : G.RAMANATHAN
LYRICS : N.S.CHIDAMBARAM
YEAR : 1959
வந்தாயா மகளே இங்கே வந்தாயா மகளே
வந்தாயா மகளே இங்கே வந்தாயா மகளே
வெந்தே உருக்குலைந்து என்றோ தீக்கிரையான
வெந்தே உருக்குலைந்து என்றோ தீக்கிரையான
வீரன் உதயன் உடல் சாம்பலைக் காண நீ
வந்தாயா மகளே இங்கே
வந்தாயா மகளே
சுவாமி! எங்கு காண்பேன் தங்களை? அழவிடும் (?) தங்கள் முகம் எங்கே? (மணிமேகலை)
கவரும் வைரம் அணிந்த கட்டுடல் எங்கே
கரும்பெனப் பேசும் இன்பக் கனிமொழி வாய் எங்கே
கவரும் வைரம் அணிந்த கட்டுடல் எங்கே
கரும்பெனப் பேசும் இன்பக் கனிமொழி வாய் எங்கே
தவமணி முகம் எங்கே தழைத்திடும் ஒளி எங்கே
சற்றுமே தளராத மோகன நடை எங்கே
தாவி எரியும் நெருப்பில் கலந்திடத் தான் மகளே
மண்ணுடன் மண் கலந்த
நீருடன் நீர் கலந்த
விண்ணுடன் விண் கலந்த
விந்தையைப் பாராய்
காற்றுடன் காற்றிணைந்த
தீயுடன் தீகலந்த
சாற்றிடும் ஐம்பூதச்
சாம்பலைப் பாராய்
அப்படியானால் மரணத்திலிருந்து தப்புவது? (மணிமேகலை)
சுடரெரி நிச்சயம்
படு குழி நிச்சயம்
எடுத்துள்ள மானிட இவ்வுடல் அணித்தியமே
செல்வம் பலகோடி சேமித்தே வைத்திருப்போன்
தெருத்தெருவாய்ப் பிச்சை தேடியே அலைந்திடுவோன்
இல்லறத்தான் ஞானத் துறவறத்தான் தூய
ஈகையுள்ள தருமி இரக்கமில்லாக் கருமி
வல்லயெழில் (?) வாலிபன்
தளர் நடை வயோதிகன்
வடிவாக் கற்பரசி
மனப்புருவக் கணிகை
நல்ல யோகியரும் போகியரும்
இந்த அல்லல் இடுகாட்டை
அடைந்தே ஆகவேண்டும் மகளே
ஆ! அப்போது பிறவி? (மணிமேகலை)
மாய்ந்தொரு நாள் போகும் மனிதப்பிறவி இது
வாய்த்த முன் வினையால் மடிந்தே திளைந்திடும்
காதல்? (மணிமேகலை)
கருதும் போதெல்லாம் கனைபோல் காச்சி நிற்க
கடும் துன்பம் தந்தே கருத்தழிக்கும் காதல்
செல்வமும்? (மணிமேகலை)
செத்த போதிலொரு செப்புக் காசு பெறாது
செவியற்ற ஊசியும் சேர்வழிக்கு வாராது
சுற்றத்தார் (மணிமேகலை)
சோக முகம் கொண்டு சோம்பலிது கொண்டு
இடுகாடு மட்டுமே சுற்றத்தார் வருவார்
வாழ்வு? (மணிமேகலை)
அழியாத அறிவுடன் ஆராயும் போதில்
புவிவாழ்வின் முடிவு பொல்லாத சாவுதான்
இளமை? (மணிமேகலை)
இன்று குலுங்குகின்ற இளமையின் துடிப்பெல்லாம்
எதிர்நோக்கும் நாளை எளிதில் மாறிவிடும்
அழகு? (மணிமேகலை)
மனதை வெகுவாக மயக்கிடும் பேரழகும்
இனங்கத்தை அடியோடு அழிந்தே போகும்
கணவன் மனைவி உறவு (மணிமேகலை)
கணக்கற்ற பிறவிகளில் கருவுற்ற ஜீவன்கள்
கண்டுவரும் கனவே கணவன் மனைவி உறவு
(மணிமேகலை)
இதுதானா மனித வாழ்வு?
நெருப்புக்கும் புழுவுக்கும் இறையாகும் இந்தப் பொய்யான உடல்மீதா இவ்வளவு காதல் கொண்டிருந்தேன். தெளிந்து விட்டது என் பைத்தியம். தெளிந்து விட்டது என் பைத்தியம்.
* * * * *
உதயன்: மணிமேகலை மீது மோகம் கொண்டிருந்த, பின்பு கொலைசெய்யப்பட்ட சோழ இளவரசன்.
குறிப்பு: விவேகத்துடன்கேட்கவேண்டிய பாடல் இது. இது போன்ற கருத்துக்கள் பௌத்தத்தில் கூறப்படுவதற்கு காரணம் உடல் மீதுள்ள மோகத்தை குறைக்கத்தான். உடலையோ வாழ்க்கையையோ வெறுப்பதற்காக போதிக்கப்படவில்லை. உடலளவில் மரணத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும் பௌத்ததின் நோக்கமே மனத்தளவில் மரணத்துக்கு அப்பால் எப்படிச் செல்வது என்பதே.
YouTube பதிவுக்கு நன்றி: திரு. Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI