தம்மபதம் - யானைகள்

23. நாக வர்க்கம - யானைகள்

NAGA VAGGA - ELEPHANTS

320

யானையானது, போர்க்களத்திலே எய்யப்பட்ட அம்பை எவ்வாறு தாங்கிக் கொள்கிறதோ அதுபோல, நிந்தையான சொற்களை நான் பொறுத்துக் கொள்வேன். ஏனென்றால், உலகத்திலே தீயவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

I — like an elephant in battle, enduring an arrow shot from a bow — will endure a false accusation, for the mass of people have no principles.

321

பழகிய யானை ஊர்வலத்தில் கொண்டு போகப் படுகிறது. பழகிய யானையை அரசர் ஊர்ந்து செல்கிறார்கள். தம்மை நல்வழியில் பழக்கிப் பிறர் கூறுகிற நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்கிறவர்கள், மக்களில் மேலானவர்கள்.

The tamed is the one they take into assemblies. The tamed is the one the king mounts.

The tamed who endures a false accusation is, among human beings, the best.

322-323

பழகிய குதிரை நல்லது; அது போன்று பழகிய சிந்து தேசத்துக் குதிரை சிறந்தது. அதுபோலவே, பழக்கப்பட்ட குஞ்சர யானையும் கொம்பன் யானையும் மேலானவை. ஆனால் தன்னைத் தானே அடக்கி ஆளப் பழகியவன் இவை எல்லாவற்றிலும் மேலானவன்.

Excellent are tamed mules, tamed thoroughbreds, tamed horses from Sindh. Excellent, tamed tuskers, great elephants. But even more excellent are those self-tamed.

தம்மைத்தாமே அடக்கப் பழகி மனத்தை நல்வழியில் செலுத்துவதனாலே அடக்கமுள்ள ஞானிகள் நிர்வாண மோக்ஷத்திற்குப் போவது போல, இத்தகைய ஊர்திகளில் ஏறிக்கொண்டு ஒருவரும் நிர்வாண மோக்ஷத்திற்குக் போக முடியாது.

For not by these mounts could you go to the land unreached, as the tamed one goes by taming, well-taming, himself.

324

அடக்கிப் பழக்கி ஆளமுடியாத தனபாலகன் என்னும் பெயருள்ள யானையானது, பிடிக்கப்பட்ட பொழுது, கவளத்தை உண்ணாமல் தான் இருந்த காட்டுக்குச் செல்ல ஏங்குகிறது.

The tusker, Dhanapalaka, deep in rut, is hard to control. Bound, he won't eat a morsel: the tusker misses the elephant wood.

325

சோம்பலும் பெருந்தீனியும் உறக்கமும் உடையவராய், பன்றிகள் சேற்றில் புரள்வது போல

இப்புறமும் அப்புறமும் புரண்டு கொண்டிருக்கிற மூடர்கள், மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

When torpid and over-fed, a sleepy-head lolling about like a stout hog, fattened on fodder: a dullard enters the womb over and over again.

326

இந்த மனமானது முன்பு, தன் விருப்பம் போலக் கண்டபடி எல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. யானைப்பாகன், மதமுள்ள யானைய அடக்கிப் பழக்குவது போல, இன்று என் மனத்தை அடக்கிப் பழக்குவேன்.

Before, this mind went wandering however it pleased, wherever it wanted, by whatever way that it liked. Today I will hold it aptly in check — as one wielding a goad, an elephant in rut.

327

விழிப்பாக இரு. உன் மனத்தை நன்றாகக் காத்துக் கொள். சேற்றில் அகப்பட்ட யானை அதிலிருந்து முயன்று வெளிவருவது போல, துக்கங்களிலிருந்து உன்னை வெளியேற்றிக் கொள்.

Delight in heedfulness. Watch over your own mind. Lift yourself up from the hard-going way, like a tusker sunk in the mud.

328-330

நல்லொழுக்கமும் நல்லறிவும் உடையவராய்த் தீமைகளைவிட்ட அறிஞர் கிடைப்பாரானால்,

அவரிடம் அன்புடனும் அக்கரையுடனும் நட்புக் கொண்டு பழகு.

If you gain a mature companion — a fellow traveler, right-living, enlightened — overcoming all dangers

go with him, gratified, mindful.

நல்லொழுக்கமும் நல்லறிவும் உடைய ஒருவரைத் தோழராகப் பெறமுடியாவிட்டால்,

மாதங்கம் என்னும் யானை, தன்னந்தனியே காட்டில் வாழ்வது போலவும், பகைவர்களிடம் தன் தேசத்தை விட்டுவிட்டுத் தன்னந்தனியே வாழ்கிற அரசனைப் போலவும், நீ தனியே வாழ்வாயாக.

If you don't gain a mature companion — a fellow traveler, right-living, enlightened — go alone like a king renouncing his kingdom, like the elephant in the Matanga wilds, his herd.

தன்னந்தனியே வாழ்வது நல்லது. மூடர்களின் நட்பு கூடாது. பாவம் செய்யாமல், கவலை யற்றவராய், காட்டில் வாழும் மாதங்கம் என்னும் யானையைப் போன்று தன்னந் தனியே வாழ்வாயாக.

Going alone is better, there's no companionship with a fool. Go alone, doing no evil, at peace, like the elephant in the Matanga wilds.

331-333

துன்பம் அடைந்த காலத்தில் உதவிபுரியும் நண்பர்களைப் பெறுவது மகிழ்ச்சிக்குரியது.

உள்ளதைக் கொண்டு திருப்தி அடைவது மகிழ்ச்சிக்குரியது. இறக்கும் போது புண்ணியம் உடன் வருவது மகிழ்ச்சிக்குரியது. துக்கத்தை நீக்குவது மகிழ்ச்சிக்குரியது.

A blessing: friends when the need arises. A blessing: contentment with whatever there is. Merit at the ending of life is a blessing. A blessing: the abandoning of all suffering and stress.

இவ்வுலகத்தில் தாயை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. பின்னர் தந்தையை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. உலகத்திலே துறவிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. அதுபோன்று, பேரறிஞராகிய ஞானிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது.

A blessing in the world: reverence to your mother. A blessing: reverence to your father as well. A blessing in the world: reverence to a contemplative. A blessing: reverence for a brahman, too.

முதுமைப் பருவம் வருவதற்கு முன்பே சீலத்தைக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சிக்குரியது.

தர்மத்தில் உறுதியான நம்பிக்கையோடு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அறிவை வளர்ப்பது மகிழ்ச்சிக்குரியது. பாவத்தை விலக்குவது மகிழ்ச்சிக்குரியது.

A blessing into old age is virtue. A blessing: conviction established. A blessing: discernment attained. The non-doing of evil things is a blessing.