உவமானங்கள் 73-84
இது போலத்தான்
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
It’s Like This
1 0 8 D H A M M A S I M I L E S
Venerable Ajahn Chah
* * * * * *
73. படபடக்கும் மனம் Top
உன்னிப்பில்லாமல் அமைதி அடைந்த மனம் காற்றடிக்கும் போது படபடக்கும் ஒரு இலையைப் போல. அதாவது உன்னிப்பில்லாமல் அமைதி அடைந்த மனம் சில சமயம் இருட்டாகவும் சில சமயம் பிரகாசமாகவும் முன்னும் பின்னும் அலை மோதும். இது மாமிசம் உண்ணும் ஒருவன் பல்லிடுக்கில் ஒரு சிறு துண்டு சிக்கிக் கொள்வதைப்போல. அதை எடுக்கும்வரை அவதிப்படும் அவன், எடுத்தவுடன் நிம்மதி அடைகிறான். மீண்டும் பசியெடுக்கும் போது மாமிசம் உண்கிறான். மற்றொரு துண்டு அவன் பல்லிடுக்கில் சிக்கிக் கொள்கிறது. அதனால் மீண்டும் அவன் வாதைப் படுகிறான். அதை எடுத்த பின் மறுபடியும் நிம்மதி அடைகிறான்.
The Fluttering Mind
Stillness of mind without discernment is like a leaf that flutters when stirred by a breeze. In other words, stillness of mind without discernment is dark and then bright, back and forth. It’s like a person who eats meat and gets a piece stuck in his teeth. When he pries it out, he feels better. When he’s hungry he eats some more and gets another piece stuck in his teeth. It hurts again. When he pries it out, he feels better again.
74. துணிக்கு அடியில் உள்ள பாம்பு Top
மனம் அசைவற்று இருந்தாலும், மற்ற பொருட்கள் அதனோடு கலந்திருக்கின்றன. மற்ற பொருட்கள் கலந்திருப்பதால்தான் அது அசைவில்லாமல் இருக்கிறது, ஆனால் மனம் அதைத் தெரிந்து கொள்வதில்லை. அதனால் தான் அது அசைவற்று இருக்கிறது. நான் கால் வைத்திருக்கும் இந்த மிதியடிக்குக் கீழ் ஒரு விஷப் பாம்பு வாழ்வதாக வைத்துக்கொள்ளுங்கள். பாம்பு என் கண்ணுக்குத் தெரியாததால் பயம் ஏதுமில்லாமல் என் கால்களை இந்த மிதியடி மேல் வைத்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அதன் அடியில் ஒரு விஷப்பாம்பு இருக்கிறது. எனக்கு அது தெரியாததால் எந்தப் பயமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறேன். நான் பயம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், மிதியடிக்குக் கீழ் ஒரு விஷப் பாம்பு இருப்பது எனக்குத் தெரியாததால் தான். இதுவே சமதா: அமைதி. "மனத்தைத் தீண்டும் கிலேசங்கள் இருந்தால் யாருக்குக் கவலை? இப்போதைக்கு நான் மன அமைதி காண்கிறேன்." இதைத்தான் உன்னிப்பில்லா அசைவற்ற மனம் என்பது. இதைச் 'சமதா' என்கிறோம். நாம் மனத்தை அசைவற்றிருக்கக் கற்பிப்பது, அடுத்த படியாக மனக் கிலேசங்களை அமைதியாக்குவதற்காகத்தான். அதைச் செய்ய வேண்டியது உன்னிப்பின் வேலை.
The Snake under the Cloth
Mental stillness, on its own, has other things mixed in with it. It’s still because there are things mixed in with it, but it’s not aware of them. That’s why it’s still. Suppose that this foot-wiping cloth that my feet are on has a poisonous snake living under it. I can put my feet here without any fear because I don’t see the snake. But actually, there’s a poisonous snake right here. I have no idea, so I can relax, with no fear of anything. The fact that I don’t feel any fear is because I don’t know that there’s a poisonous snake right here. This is samatha: tranquility. “Who cares if there are defilements there? I feel peaceful right now.” This is called stillness of mind without the defilements being still. It’s called samatha. We train the mind to be still so that, in the next step, the defilements will be still. That’s an affair of discernment.
75. காயத்தைக் குணப்படுத்துவது Top
மனத்தின் அசைவற்ற நிலை என்பது கொஞ்ச நேரமே நீடிக்கும் அமைதி. இந்த அசைவில்லா நிலையே அகப்பார்வைக்கு அடித்தளம். அகப்பார்வையென்பது தெளிவாகக் காண்பது, முன்பைவிடத் தெளிவாகப் பார்ப்பது. அகப்பார்வை என்பது அசைவில்லா நிலை மட்டுமல்ல. அமைதியில் வரும் அசைவில்லா நிலை சப்தங்களைத் துறந்து சப்தங்கள் ஏதும் இல்லாத காட்டுக்கு ஓடுவது போல. உங்களுக்கு நிறையக் குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் இல்லாத இடத்தைத்தேடி ஓடுவது போல. உங்கள் குழந்தைகளைப் பார்க்காவிட்டால் அல்லது எந்தச் சப்தத்தையும் கேட்காவிட்டால் நீங்கள் அமைதி காண்பீர்கள். ஆனால் அது போன்ற அமைதி, உடலில் ஒரு காயம் ஏற்பட்டு அதைத் தைத்து, மருந்து போட்டு அதன் மீது ஒரு கட்டுப் போடுவது போல. அது மேலுக்கு ஆறிவிட்டதாகத் தோன்றினாலும் உள்ளே இன்னும் ஆறவில்லை. உண்மையில் உள்ளே அது புறையோடிச் சீழ் பிடித்துள்ளது. புறையோடிய புண்ணை மீண்டும் கிழித்து, தைத்து மருந்து போட்டால்தான் காயம் ஆறும். அப்போதும் மேலாக ஆறிவிட்டாலும் உள்ளுக்குள் இன்னும் புண் ஆறாமல் இருக்கலாம். இது தான் சமதா (மன ஒருக்கம்) தியானத்தில் கிடைக்கும் அமைதி என்பது.
அகப்பார்வை இருந்தால், புண்ணுக்குள் உள்ள சீழையும், அழுகிய சதையையும் எடுத்துப் புண்ணை ஆற விடவேண்டும். மேல் தோலைத் தைக்க வேண்டாம். முதலில் உள் புண் ஆறட்டும், அதன் பின் புண்ணை மூடுங்கள். தேவையான மருந்தைப் போட்டு அது உள்ளிருந்து வெளியே ஆற வழி செய்யுங்கள். பின் வெளிப்புண்ணும் ஆறிவிட்டால் பிரச்சனை முழுமையாக முடிந்து விட்டது. உள்ளும் புறமும் ஆறிவிட்டது. எனவே மறுபடியும் அங்கு சீழ் பிடிக்காது. அதுவே அகப்பார்வைத் தியானம்.
Healing the Wound
Tranquility is stillness that lasts only for a little while. The stillness is the foundation for insight. Insight is seeing clearly, understanding more clearly than you did before. Insight is not simply still. The stillness of tranquility is like running away from noises to a wilderness where there’s no noise. If you have lots of children, you run away to a wilderness where there are no children. When you don’t see your children or don’t hear any noise, you find stillness. But that kind of stillness is like having a wound, stitching it up, and covering it up with a bandage until it looks like it’s healed. But actually there’s still an infection inside. When the infection flares up, you cut it open, stitch it up again, put medicine in it, and the wound heals over. But there’s still infection inside. It’s not really healed. That’s tranquility.
With insight, you have to remove all the infected tissue so that it can heal from the inside. Don’t stitch it up. Wait until it’s free from infection, and then close it off. Shoot it full of medicine so that it heals from the inside to the out. When the outside is healed, that’s it. The inside is already good, so it won’t get infected again. That’s insight meditation.
76. அகப்பார்வையின் அமைதி Top
மனம் ஒருக்கத்தால் ஓரளவுக்கு அமைதி அடைகிறது, ஆனால் அது மட்டும் போதாது. அகப்பார்வையோடு சேர்ந்து வரும் அமைதியை அடைய வேண்டும். உன்னிப்பை உண்டாக்க வேண்டும். ஒருக்கத்தால் மட்டுமே வரும் அமைதி என்பது ஒரு சூடான இடத்தில் அமைதிகாக்க முடியாததைப் போன்றது. கடற்கறை ஓரம் சென்றால் மட்டுமே அந்த அமைதியை அடைய முடிகிறது. சூடான இடத்துக்குத் திரும்பச் சென்றால் மீண்டும் அமைதி குலைந்து விடுகிறது. மன ஒருமுகப்படுத்தலால் வரும் அமைதி இது போன்ற அமைதியே. ஆனால் அகப்பார்வையினால் வரும் அமைதி மலைகளில் சூடாக இருக்கும் போதும் வசதியாக இருக்க முடிகிறது. கடற்கரை ஓரம் சென்றாலும் அங்கும் வசதியாக இருக்க முடிகிறது. இவற்றைத் தெரிந்து கொள்ள மனத்தைச் செலுத்துகிறோம். மனம் விட்டு விட்டு ஓடுவதில்லை. அதற்கு இன்பமும் தெரியும், துன்பமும் தெரியும். பயிற்சியின் காரணமாக நாம் தெரிந்து கொள்வது இப்படித்தான்.
The Stillness of Insight
When the mind reaches that level of stillness, it’s not enough—the stillness of tranquility. You have to make it still through insight. You have to give rise to discernment. With the stillness of tranquility, it’s like not being able to be still in a hot place. You have to go to the seaside to be still. When you go back to where it’s hot, you’re not still anymore. The preoccupations of tranquility are only on this level of stillness. But with the preoccupations of insight, then when it’s hot in the mountains, you can stay there comfortably. When you go down to the seaside, you can stay there comfortably. You can focus on knowing these things, and the mind doesn’t run. It knows pleasure; it knows pain. That’s how we know when we practice.
77. வழியில் உள்ள பாறைகள் Top
நேராகச் செல்லும் ஒரு சாலையில் நாம் நடந்து கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தூரம் செல்கிறது என்பது முக்கியமில்லை, நாம் அதன் வழியே நடந்து கொண்டிருக்க வேண்டும். வழியில் கட்டையோ, பாறையோ குறுக்கிடுமானால் அதைத் தூக்கிச் சாலையின் ஓரமாக வீசிவிட்டு நடக்க வேண்டும்.
நாம் மனத்தை அமைதியாகவும் சலனமில்லாமலும் வைத்திருக்க முயற்சிக்கிறோம். கண்கள், காது, மூக்கு, நாக்கு மற்றும் உடல் மூலமாக வரும் சலனங்கள் மனத்தில் ஒன்று கூடுகின்றன. மனம் இவற்றுள் மூழ்கிவிடுமானால் அது நாம் நடந்து செல்லும் பாதையில் குறுக்கிடும் பாறையைப் போல.
அது நம் நடைப் பயணத்தில் தடையேற்படுத்துவதால் நாம் அதை எடுத்துச் சாலை ஓரத்தில் போடுகிறோம்.
அந்தக் கணத்தில் தோன்றும் மன நடவடிக்கையை நிலையற்றதெனவும், துக்கம் விளைவிப்பன என்றும், நமதில்லை என்றும் உணரவேண்டும். அதைத் தூக்கி ஓரமாக வீசிவிட வேண்டும். அதனைப் பற்றிக் கொண்டிருக்காதீர்கள். அது போகட்டும். நீங்கள் நடையைத் தொடருங்கள். அன்பு வந்தாலும் விட்டு விடுங்கள். வெறுப்பு வந்தால் அதையும் விட்டு விடுங்கள். அவ்வளவே.
Rocks in the Way
We’re walking along a road that goes straight ahead. It doesn’t matter how many kilometers it goes, we just keep walking straight ahead. When we find a log or a rock obstructing our way, we pick it up and throw it off to the side of the road.
We’re trying to make the mind quiet and still. The preoccupations that arise by way of the eyes, ears, nose, tongue, and body all come together here at the mind. When the mind gets involved with these things, it’s like a rock obstructing our way. It interferes with our walking, so we pick it up and throw it off to the side.
The preoccupation arising at that moment we see as inconstant, stressful, and not-self. We throw it off to the side. Don’t hold onto anything at all. Let it go, and keep on walking. If love comes, we let it go. If hatred comes, we let it go, that’s all.
78. தியானத்தைக் கொல்வது Top
நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும், படுத்திருக்கும் போதும் உங்கள் தெரிந்த நிலையைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். இதுவே தியானம் செய்யும் சரியான முறை (கம்மா தானா). நமது தெரிந்த நிலை தொடர்ந்து நிலைக்காததன் காரணம் அதை நாம் செய்வதில்லை. "செய்வது" என்பது உடலால் செய்வதல்ல. மனம் தான் அதைச் செய்கிறது. மனக் கவனத்தோடு தொடர்ந்து இருந்தோமானால், நாம் தொடர்ந்து தெரிந்த நிலையோடு இருந்தோமானால் அது சொட்டுச் சொட்டாகத் தொடர்ந்து விழும் தண்ணீர் தொடர்ந்து ஒடி ஒரு நீரோட்டமாவதைப் போன்றது. இவ்வாறு உங்கள் மனத்திற்குப் பயிற்சியளிக்க முடிந்தால், உங்கள் தியானமும் நன்றாகவும் விரைவாகவும் முன்னேறும்.
ஆனால் இப்போதெல்லாம் மக்கள் விபாஸணா பயில மூன்று நாட்களோ, ஏழு நாட்களோ, பத்துப் பதினைந்து நாட்கள் சென்று விட்டுப் பின் தியானத்தை முடித்துக் கொண்டு வெளியேறி விடுகின்றனர். பின்னர் அவர்கள் தாங்கள் விபாஸணா செய்ததாகச் சொல்வது மட்டுமல்லாமல் அதில் தாங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அதனால் அவர்கள் பாடவும் , ஆடவும் விளையாடவும் சென்று விடுகின்றனர். அத்தகைய போக்கால் அவர்கள் அரை குறையாகக் கற்றிருந்த விபாஸணாவும் மறந்து விடுகிறது, அவர்களிடம் ஏதும் மிஞ்சி இருப்பதில்லை. உள்ளத்தைக் கிளரச் செய்யும் இது போன்ற திறனற்ற செயல்களைச் செய்வதைப் "பயிற்சி" என்று சொல்ல முடியாது. இது எவ்வகையான பயிற்சி என்றால் ஒரு மரக்கன்றை இன்று ஒரு இடத்தில் நட்டு விட்டுப் பின் மூன்று நாட்கள் கழித்து, அதைப் பிடுங்கி மீண்டும் வேறொரு இடத்தில் நடுவதைப் போல. இப்படியே மூன்று நாட்களுக்கு ஒருமுறை அதைப் பிடுங்கிப் பிடுங்கி நட்டால் மரம் செத்து விடும். அதன் பழங்களை உண்ணும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்காது. தியானமும் இது போலவே அரைகுறையாகச் செய்தால் அது செத்து விடக் கூடும்.
Killing Your Meditation
When standing, walking, sitting, and lying down, keep your mindfulness continuous at all times. This is called practicing meditation (kammatthana) correctly. The reason why our mindfulness isn’t continuous is because we don’t do it. “Doing it” isn’t something the body does. The mind is what does it. If we do our mindfulness so that it’s continuous, so that we’re constantly aware, it’s like drops of water that flow continuously so that they become a continuous stream of water. If you can train the mind in this way, your meditation will progress quickly and well.
But these days, people go practice vipassana for three days, seven days, ten days, fifteen days, and then they come out of retreat. They say that they’ve already done vipassana and they’re already good at it. So they go to sing and dance and play around. When that happens, their vipassana is gone and they don’t have any left. When they do all kinds of unskillful things that stir up the heart and damage it like this, you can’t call it “practice.” It’s a mode of practice like planting a tree where you plant it today and then, in three days’ time, you pull it up and plant it over there. Then, after another three days, you pull it up again. The tree is going to die and you won’t get to eat the fruit. Meditation can die in just the same way.
79. வீட்டிலேயே இருப்பது Top
மனக் கவனத்துடனும் விழிப்புற்ற நிலையிலும் எந்நேரமும் இருந்தால் நீங்கள் நேராகச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். மற்றவற்றோடு விளையாடிக் கொண்டு நேரத்தை வீணாக்கினால், துக்கம் தோன்றி நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள் - ஏனென்றால் உங்கள் மனக் கவனம் சிதறி விட்டது. நீங்கள் தெரிந்த நிலையில் இருக்கவில்லை. இது உங்கள் வீட்டைப் போல. நீங்கள் வெளியே செல்லும்போது கதவை மூடாமல் சென்றால், தெரு நாய்கள் வீட்டுக்குள் புகுந்து சேர்த்து வைத்த அரிசியைத் தின்றுவிடும். திருடர்கள் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களைக் களவாடுவார்கள். மனக் கவனம் இல்லாதிருப்பதும் இது போலத்தான்.
உண்மையில், உங்களுக்கு மனக் கவனம் இருக்கிறது. ஆனால் உங்கள் கவனம் மற்றவற்றில் உள்ளது. இது நீங்கள் வீட்டை விட்டுச் செல்வது போல. நீங்கள் அங்கேயே தான் இருக்கின்றீர்கள் ஆனால் வீட்டில் இல்லை. நீங்கள் அங்கு இருந்தும் உங்கள் கவனம் வேறெங்கோ இருக்கின்றது. மனக்கவனத்துடன் இருப்பதும் அப்படித்தான் உங்களுக்கு மனக்கவனம் உள்ளது. ஆனால் உங்கள் மனக் கவனம் வேறு எங்கோ தொலைவில் வேலை செய்கிறது. திருடர்கள் வீட்டில் நுழைந்து சாமன்களைக் களவாடுகின்றார்கள். ஆனால் நீங்கள் “இங்கு” இருக்கின்றீர்கள். "இங்கு" இருப்பது வேறெங்கோ. மனம் இங்கு வேலை செய்யவில்லை. மனக் கவனம் இங்கு வேலை செய்வதாக இருந்தால் மனத்தில் ஒரு நடவடிக்கை தோன்றும் போது அது உணரும். மனத்திற்குப் பிடித்த நடவடிக்கையாக இருந்தால் அதற்குத் தெரியும். மேலும் அந்த நடவடிக்கை நிலையற்றது என்பதும் தெரியும். அதனைப் பிடித்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் துக்கமும் அழுத்தமும் அனுபவிப்பீர்கள். உங்களுக்கு "இது நிலையற்றது, துக்கம் விளைவிப்பது, எனதும் இல்லை," என்று உடனே தெரியும் இது தெரிந்தால் நீங்கள் அறத்தைப் பயில்கின்றீர்கள் என்று பொருள். அதனால் தான் அறத்தைப் பயில்வோர்க்கு மனக் கவனம் இருக்கிறது - நினைவு படுத்தும் ஆற்றல் - நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும், படுத்திருக்கும் போதும் எல்லா நேரத்திலும் மனக் கவனம் இருக்கிறது. தெரிந்த நிலையில் இருப்பதென்றால் நீங்கள் இப்போது என்ன செய்கின்றீர்கள் என்பதை உணர்ந்த நிலையில் இருப்பது. இப்படித்தான் அறத்தை அறியும் வாய்ப்பு வரும். வீட்டில் புகுந்த நாய்களையும், திருடர்களையும் துரத்தும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது, ஏனென்றால் நீங்கள் அங்கேயே விழிப்புடன் இருக்கின்றீர்கள். உங்கள் உடமைகளை இழக்காமல் இருக்கவும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.
Staying at Home
If you have mindfulness and alertness at all times, you’ll come to your senses. If you waste your time playing with other things, suffering will arise and you’ll suffer—because you don’t have any mindfulness. Your alertness isn’t here. It’s like your home. If you leave and don’t close the door, dogs will come in and eat your stored-up rice. Thieves will come in and steal all your things. It’s the same when you don’t have mindfulness.
Actually, you have mindfulness, but it’s mindful of other things. It’s like leaving your house. You’re still there, but you’re not there in the house. You’re there somewhere else. It’s the same with mindfulness. You have mindfulness, but your mindfulness isn’t here. Thieves come and steal the things you have here, but you’re not here. Your “here” is somewhere else. Your mindfulness is working somewhere over there. It’s not working here. If your mindfulness is working here, then you’ll sense when a preoccupation strikes the mind. If the mind likes it, you’ll know—and you’ll see that it’s inconstant. Don’t latch onto it or else you’ll fall into suffering and stress. You’ll see: “This is inconstant, stressful, and not-self,” right there. That means that you’re practicing the Dhamma. This is why people who practice have mindfulness—the ability to recollect— at all times while they’re standing, walking, sitting, and lying down. Alertness always knows what we’re doing right now. This is how you have the opportunity to awaken to the Dhamma. You’ll have the opportunity to chase these dogs out of your home, to chase away the thieves that have come to steal your things— because you’re right here. You’ll have the opportunity not to lose your belongings.
80. இப்போதே சரியாக்குவது Top
இந்தப் பயிற்சிதான் அறத்தின் பயிற்சி எனப்படுவது. ஒவ்வொரு நாளும் பார்க்க முடிந்தால், தொடர்ந்து மனத்தைக் கவனிக்க முடிந்தால், நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட நீங்கள் மனத்தினுள் பார்க்கலாம். ஒவ்வொரு கணத்திலும் கவனிக்கப் பாருங்கள். நீங்கள் இவ்வாறு சலித்துக் கொள்ளலாம்: "ஓ, மதிப்புக்குரிய ஐயா, எனக்குத் தியானம் செய்ய நேரமே இல்லை. என்னால் தியானம் செய்ய முடியவில்லை. எந்நேரமும் வேலை, வேலை என்றே அலைகிறேன்." இப்படித்தான் நாம் சாதாரணமாக நினைக்கிறோம். சொல்லப்போனால் நீங்கள் மிகவும் பரப்பரப்பாக வேலையில் இடுபட்டிருக்கும் போது தான் பயிற்சி செய்வது அவசியம். சூடு எங்கே உள்ளதோ அங்கேயே குளுமையையும் காணமுடியும். உங்களுக்குப் புரிவதில்லை. சூடாக இருக்கும் போது, சூட்டைத் தவிர வேறெதும் இல்லாதது போல் தெரிகிறது. குளுமை தெரிவதில்லை. உண்மையீல் எங்கெல்லாம் பரபரப்பு இருக்கிறதோ அங்கு அமைதியும் இருக்கும். தவறான இடத்தில், சரியானதும் இருக்கும். குழப்பம் இருக்கும் இடத்தில் தெளிவும் இருக்கும். இதைக் கவனியுங்கள். இங்கே ஒரு தவறு செய்கின்றீர்களென்றால், அதை எங்கே சரியாக்கப் போகின்றீர்கள்? உதாரணத்திற்கு உங்கள் மோட்டார் சைக்கில் இதோ இந்த இடத்தில் பழுதாகிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எங்கே சரியாக்கப் போகின்றீர்கள்? அதைப் பழுதான இடத்திலேயே சரி செய்தால், அது அங்கேயே வேலை செய்யத் தொடங்கும், அவ்வளவுதான். உங்களுக்குப் பிடித்த மனத்தின் நடவடிக்கை தோன்றினால், அதே இடத்தில் தான் பயிற்சி செய்ய வேண்டும்: "ஓ, இது நிச்சயமற்றது. நாம் ஏற்கனவே பல இன்பங்களை அனுபவித்துள்ளோம். பல துன்பங்களையும் அனுபவித்துள்ளோம். இதுவும் வேறு விதமாக முடியப் போவதில்லை. முடிவில் இதுவும் துக்கத்தோடுத் தான் முடியும்." இவ்வாறு சரியான கோணத்தில் சிந்தனை செய்தால், மனம் தொடர்ந்து அதே நிலையில் நிலைத்திருக்கும்.
Fix It Right Here
This practice is called the practice of the Dhamma. If you can see every day, if you can try to see continually into your mind, then even if you’re doing work, you’ll see. Try to see with every moment. You might say, “Oho, Venerable Father, I don’t have any time to meditate. I can’t meditate. I’m always busy.” That’s how we tend to see things. Actually, where you’re busy is the place where you practice. Wherever there’s heat, there’s coolness right there. You don’t understand. All you see is that when heat arises, there’s nothing but heat there. No coolness at all. Actually, wherever there’s busyness, there’s stillness right there. Wherever there’s wrongness, there’s rightness right there. Wherever there’s turmoil, there’s stillness right there. Look. If you do something wrong right here, where are you going to correct it? It’s as if something goes wrong in your motorcycle right here, right in this spot. Where are you going to fix it? You fix it right where something has gone wrong, and then it’ll go right, right there, that’s all. Wherever you encounter a preoccupation you like, you practice right there: “Oh. This isn’t for sure. We’ve already experienced pleasure. We’ve already experienced pain many, many times. This won’t turn into anything else. It’ll turn into nothing but suffering.” If you can think correctly like this, the mind will keep staying in that state.
81. தரையில் கிடக்கும் மீன் Top
நமது மாறுபட்ட உடல் நிலைகள் வேதனைகளை மறைக்கின்றன. நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருந்தால், உடலில் வலி தோன்றும். உடல் நிலையை மாற்றும் போது, அந்த வலி மறைகிறது. அதனால் தான் வலி தெரிவதில்லை. இது இளமை முதுமையைத் தனக்குள்ளே மறைத்திருப்பது போல. இளைஞர்கள் இரசிக்கும் காட்சிகள், சப்தங்கள், நுகர்வுகள், சுவைகள் மனதுக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் அவற்றோடு நீண்ட நேரம் இருந்தால் முதுமை மெதுவாகத் தலைத் தூக்க ஆரம்பிக்கிறது.
மனம் நீரில் உள்ள மீனைப் போல. அதைப் பிடித்து நிலத்தில் போட்டால் துடித்துக் கொண்டு தண்ணீருக்குள் செல்லப் பார்க்கும். அதை நீருக்குள் விட்டுவிட்டால் துள்ளுவதை நிறுத்தித் தன் இயல்பு நிலைக்கு வந்து விடும். அதுபோல, மனத்தைப் பிடித்து நிறுத்தித் தியானம் செய்ய உட்கார வைக்கும் போது, அது துயரத்தைக் காண்கிறது. அதன் விருப்பம் போல விட்டுவிட்டால் அது துயரத்தைக் காணாது - தண்ணீரில் உள்ள மீனைப் போல. ஆனால் தியானம் செய்ய உட்காரும் போது, அது மீனைப் பிடித்துத் தரையில் போட்டது போலாகி விடுகிறது. உடனே வேதனையைக் காண்கிறது.
A Fish on Land
Our different postures hide pain. When you’ve been sitting a long time and then switch positions because of the pain, the pain disappears. That’s why we don’t see the pain. It’s like youth hiding old age inside. The mind is taken with the looks, the sounds, the smells, the tastes of youth, but if you stay with it for a while, old age starts to show its face.
The mind is like a fish in water. When you catch it and bring it on land, it’ll squirm and struggle to get back into the water. If you simply let it go, it’ll be at its ease. But if you catch the mind and make it sit in meditation, it’ll see pain. If you simply let it go as it likes, it won’t see pain—like the fish in water. But when you try sitting in meditation, it’s like a fish caught and placed on land. It’ll see pain immediately.
82. வலியை வெற்றி கொள்வது Top
நீங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்யும் போது உங்களுக்கு உடலில் வேதனை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வேதனை ஏற்படும் போது தியானத்தை விட்டு வந்து விடுகின்றீர்கள். பின் மீண்டும் தியானம் செய்யத் தொடங்கி வேதனை தோன்றும் வரை செய்துவிட்டு, மறுபடியும் தியானத்தை விட்டு வருகின்றீர்கள். இப்படிச் செய்வதால்தான் நீங்கள் வேதனைப் பட்டாலும் வேதனையைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் எங்கு உட்கார்ந்து தியானம் செய்தாலும் வேதனையை உணர்கின்றீர்கள். எனவே நீங்கள், "இதை எப்படி வெற்றிக் கொள்வது?" என்று உங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்: "தியானத்தில் உட்காரப் போகிறேன், ஆனால் அசையப் போவதில்லை. உடல் சாகட்டும்."
தோன்றுவதெல்லாம் மறைகிறது என்ற புத்தரின் போதனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். பின் வேதனை உண்டானால், அது ஏன் மறையாது? தியானத்தில் உட்கார்ந்தவுடன், வேதனையைத் தவிர வேறெதுவும் இல்லை. ஒரே வேதனை. ஒரே வலி. வியர்வைத் துளிகள் சோளக் கதிரின் பருப்பின் அளவு பெரிதாக விழுகிறது. உடலை அசைக்க முற்படுகின்றீர்கள். ஆனால் நீங்கள் கூறுகின்றீர்கள், "உம்..வேண்டாம், சாகட்டும்." இவ்வளவு தூரம், மனம் மரணத்தையும் தாண்டிச் செல்லும் வரை கொண்டு செல்ல வேண்டும். பின் வேதனை மறைந்துவிடும். மரணத்தையும் தாண்டிச் சென்ற பின் உன்னிப்பு வளர்கிறது. நம்பிக்கை வலுவடைகிறது. வேதனையைத் தாங்க முடியாது என்று நினைத்தீர்கள்; செத்துவிடுவோமோ என்றும் நினைத்தீர்கள். இது தான் கடுமையாகப் பயிற்சி செய்வது என்பது. எப்போதும் இப்படிப் பயிற்சி செய்வது இல்லை. அதன் பின்னர் எப்போது தியானம் செய்தாலும், எவ்வளவு தூரம் வலியைப் பொறுத்துக் கொள்ளமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது தான் வலியை வெற்றி கொள்வது என்பது.
வலியை வெற்றி கொள்ளவில்லையென்றால், அந்த வலியைத் தாங்கமுடியாது என்று நினைக்கும் நிலையில் உங்கள் ஒருக்கமும் பாதிக்கப்படுகிறது. இது நீங்கள் ஒவ்வொரு முறையும் இறப்பது போல. உங்களுக்கு வலிமை இல்லை. ஏதாவது ஒரு நாள் உங்கள் பயிற்சியின் போது அதை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். ஒருமுறை தோற்கடித்த பின்னர் அதன் மீது பயம் கொள்ள மாட்டீர்கள் - ஏனென்றால் அது எப்படிப் பட்டதென்று உங்களுக்குத் தெரியும். இது ஒரு குத்துச் சண்டைக்காரனைப் போல. குத்துச் சண்டை போட்டதே இல்லையென்றால் அரங்கில் பயம் தோன்றும். ஆனால் ஒரு முறை சண்டை செய்த பின், அது எத்தகையது என்று உங்களுக்குத் தெரியுமாதலால் பயம் தெளிந்து விடுகிறது, நீங்கள் இதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். இது தான் வலியை வெற்றி கொள்வது என்பது.
Overcoming Pain
Suppose you’re sitting in concentration and it really hurts. When it hurts, you come out of meditation. Then you meditate some more until you reach the point where it hurts, and then you come out again. This is why you don’t understand suffering even though you suffer. Wherever you sit and meditate, you suffer pain. So you ask yourself, “What can I do to overcome this?” You have to make a decision: “Sit, but don’t move. Let the body die.”
You depend on what the Buddha said: Whatever arises passes away. If pain arises, why won’t it pass away? As soon as you sit, there’s nothing but pain. It hurts. It aches. Sweat starts flowing in drops as big as corn kernels. You’re about to move but you say, “Hmm. No. Let it die.” You have to take it that far—until the mind goes beyond death. The pain disappears. Once you’ve gone beyond death, discernment arises. Confidence gets strong. You thought that you wouldn’t be able to stand it; you thought that you were about to die. This is called training yourself with a heavy hand. It’s not for general use . After that, whenever you meditate, you understand—because you’ve seen how far the pain can go. This is called overcoming pain.
If you can’t overcome pain, then when you reach that point, you fall out of concentration. You die every time. You don’t have any strength. You have to overcome it someday in your practice. Once you’ve overcome it, you won’t be afraid of it—because you’ve seen what it’s like. It’s like being a boxer. If you haven’t boxed in the ring, you’re afraid. Once you’ve boxed in the ring, you’re not afraid anymore, for you know what it’s like. You have to experiment with this. This is called overcoming pain.
83. ஏன் படிக்க வேண்டும்? Top
கண்களை மூடிக் கொண்டால், நீங்கள் வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. பொருட்கள் பிரகாசமாய் இருக்காது. பொருட்கள் பிரகாசமாய் இல்லாவிட்டால், ஒளியோ, நிறங்களோ தெரியாது. நாம் செல்ல வெண்டிய பாதை தெரியாது.
அறத்தைப் பயில்வது உங்கள் கண்களைப் போலத்தான். நீங்கள் எங்கு போகின்றீர்கள் என்பதைக் காண உங்கள் கண்கள் உதவுகின்றன. எங்கு நடந்தாலும் முன்னே உள்ளவற்றைப் பார்க்கக் கண்களின் துணை வேண்டியிருக்கிறது. கண்கள் பார்க்கின்ற அதே நேரத்தில் கால்களும் நடக்கின்றன. எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், கண்களே முன்னோடியாக வழியைத் திறக்கின்றன, இருட்டிலும் வழிகாட்டு கின்றன. அதுதான் கண்களின் இயற்கை.
அறத்தைப் பயில்வதும் இது போலத்தான். அதை எப்படிப் பயன் படுத்துவது என்பது தெரிந்தால், நம் நோக்கத்தை அடைய அது துணை புரிகிறது. அதனைப் பயன்படுத்தாவிட்டால், எந்த நோக்கத்தையும் அடைய முடியாது. இது உங்களிடம் உள்ள கத்தியைக் கூர்மையாகும் வரை தீட்டுவது போல. அதைப் பயன் படுத்தாமல் ஒருபுறமாக வைத்துவிட்டால் அதனால் எதையும் சாதிக்க முடியாது. எவ்வளவுதான் கூர்மையாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தாவிட்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அறத்தைப் பயின்ற பின் அதனால் பயனடையப் பயின்றதைப் பயன் படுத்த வேண்டும். பயின்றும் பயன்படுத்தாவிட்டால், இது ஒரு விவசாயி நெல்லை வயலில் பயிர் செய்தபின், நெற்கதிரை அறுவடை செய்யாதது போலவோ, அல்லது தோட்டத்தில் காய்கறிச் செடிகளைப் பயிர் செய்தபின் விளைந்த காய்களை அறுவடை செய்யாதது போலவோதான்.
முதலில் கற்க வேண்டும். அதன் பின் காட்டுக்குச் சென்று பயிற்சி செய்வதைப் பற்றி நினைக்கலாம். காட்டிற்குச் சென்று பயில்வதன் நோக்கம் என்ன என்பதை அறியக் கற்க வேண்டும். அதற்குப் பின்னரே காட்டுக்குச் சென்று பயிற்சி செய்யலாம். இது நெற்பயிரை நடுவதற்கான காரணத்தைத் தெரிந்த பின் அதை நடவு செய்வதைப் போல. அல்லது காய்கறிச் செடிகளை வளர்ப்பதன் நோக்கத்தைத் தெரிந்து கொண்ட பின் அதைத் தோட்டத்தில் பயிரிடுவதைப் போல. காட்டில் பயில்வதன் நோக்கத்தையும், காரணத்தையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: அஜான் சா வந்த மரபில் துறவிகள் காட்டில் நீண்ட காலம் தியானித்துப் பயிற்சி செய்வது வழக்கம்.
Why Study?
If you close your eyes, you won’t see any light. Things won’t be bright. When things aren’t bright, you don’t see light and colors. You don’t see your way.
The Dhamma of study is like your eyes. Your eyes help you see where you’re going. Wherever you walk, you have to depend on your eyes to look ahead. While your eyes are looking, your feet keep walking at the same time. Whatever your activities, you have to depend on your eyes to open the way, to forge a trail through the darkness. That’s their nature.
It’s the same with the Dhamma of study. If you know how to put it to use, it serves a purpose. If you don’t put it to use, it won’t serve any purpose. It’s like having a knife that you hone until it’s sharp. If you put it away without using it, it won’t serve any purpose. No matter how sharp it is, if you don’t use it, if you put it away, it won’t serve any purpose. So when you’ve studied, you should put it to use so as to benefit from it. If you study but don’t put it to use, it’s like a farmer growing rice in a field but not harvesting the rice, or growing a garden but not harvesting the vegetables.
You have to study first. Only then should you think about going out to practice in the forest. You have to study what the aim of practicing in the forest is. Only then should you go practice in the forest. It’s like knowing the purpose of growing rice before you grow rice, or the purpose of growing vegetables before you grow vegetables. Know the aim, the purpose, of practicing in the forest.
84. பழத்தின் பெயர் Top
துறவிகளுக்கு நீங்கள் வழங்கிய பழம்: அதன் பெயர் எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதன் சுவை எனக்குத் தெரியும். அது நறுமணமும், இன்சுவையும் கொண்டதாக இருந்தது. அது மட்டும் எனக்குத் தெரியும், ஆனால் அதன் பெயர் எனக்குத் தெரியாது - மேலும் பெயர் தெரிந்து கொள்வது அவசியமும் இல்லை. தெரிந்து கொள்ளவேண்டியது அது நறுமணமும், இன்சுவையும் கொண்டதாக இருந்தது என்பது மட்டுமே. சரிதானே? அது அவசியம் தெரிந்திருக்க வேண்டும். "இந்தப் பழத்தின் பெயர் என்ன?" இது அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி இல்லை. யாராவது உங்களுக்குச் சொன்னால், அதை நினைவில் கொள்ளலாம். ஆனால் நினைவில் இல்லாவிட்டால் அதை விட்டு விடலாம். ஏனென்றால் பெயர் தெரிந்து கொள்வதால் அந்தப் பழத்தின் இனிப்போ, புளிப்போ அதிகரிக்கப் போவதில்லை.
பயிற்சியிலிருந்து வரும் அறிவு: நாம் பயிற்சி செய்வது தெரிந்து கொள்வதற்காகவே. இந்த அறிவு ஆழமானது. ஆழமாகத் தெரிந்துகொண்ட பின் அதை விட்டு விட வேண்டும். பயிற்சியிலிருந்து வரும் அறிவு, அதற்கு ஆழமாகத் தெரிந்த பின் விட்டு விடுகிறது. வெறும் படிப்பிலிருந்து வந்த அறிவு விடுவதில்லை, தெரியுமா. நம்மை வயிறு முட்டும் வரை நிரப்புகிறது. மேலும் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.
The Name of the Fruit
The fruit that you offered to the monks: I don’t know its name, but I know that its flavor is sweet and delicious. That much I know, but I don’t know what it’s called—and it’s not really necessary. All that’s necessary is knowing that its flavor is sweet and delicious. Right? That’s really necessary. “What’s the name of this fruit?” That’s not really necessary. If someone tells you, you can remember it. But if you don’t know the name, you can let the matter go. After all, knowing the name doesn’t increase the sweetness or make the fruit more sour.
The knowledge that comes from the practice: We practice so that we’ll know. It’s knowledge that knows all the way in. Once you know all the way in, you let go. The knowledge that comes from the practice, once it knows all the way in, lets go. The knowledge that comes from studying doesn’t let go, you know. It fills us up until we’re stuffed tight. It ties us down even more.