மனத்தைப் பயில்விக்க முடியும்

மனத்தைப் பயில்விக்க முடியும்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

The mind is trainable

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி (ஆண்):நாம் சோகம், கோபம், துயரம் ஆகிய உணர்ச்சிகளை அனுபவிக்கிறோம். பௌத்தப் பயிற்சியில் இவ்வகையான உணர்ச்சிகளோடு பற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நமக்கு மேல் உள்ள அதிகாரி கோபக்காரராக இருந்தால் நாம் அச்சூழ்நிலையிலிருந்து சுலபமாக விலக முடியாது. அது போன்ற சூழ்நிலைகளில் பயிற்சி நமக்கு உதவும் இல்லையா?

முதலில் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மூன்று அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன.

ஒன்று வெறுப்புக் கொள்வது. விருப்பமில்லாதவற்றை விலக்குவது. தள்ளிவிடுவது. அது உங்கள் தனித்தன்மையின் (பர்ஸனாலிடி) முக்கிய அம்சமாக இருக்கலாம். உங்களுக்குச் சில பொருட்களைப் பிடிப்பதில்லை. பொருட்களின் குறைகளின் மீதே உங்கள் கவனம் செல்கிறது. இதனால் அசௌகரியமான உணர்ச்சி உண்டாகிறது. அதுவே கோபம்.

இரண்டாவது மனம் தன்னை நோக்கிப் பொருட்களை ஈர்ப்பதும் பிரச்சனையான விஷயம் தான். இதை ஆசைப் படுவது என்கிறோம். இதுவும் பிரச்சனை தான் ஏனென்றால் வேண்டியது கிடைக்காதவரை உங்களுக்கு ஒரு குறைபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. பேராசை மிகுந்த அப்படிப் பட்டவனுக்கு எந்நேரமும் போதாதிருப்பதாகத் தோன்றுகிறது.

மூன்றாவது பிரச்சனை அறியாமை அல்லது மாயையில் இருப்பது. இது ஒருவித குழப்பமான நிலை. புரிந்து கொள்ளாதவன், அறியாதவன், அறிவு குன்றியவன் எந்நேரமும் குழப்பத்தில் சுழன்று கொண்டே இருக்கிறான்.

ஆக இந்த மூன்று பிரச்சனைகளையும் சுருக்கமாக இவ்வாறு வர்ணிக்கலாம்: போ போ என்று தள்ளிவிடுவது, வா வா என்று வரவேற்பது மற்றும் குழப்பத்தில் சுழன்று கொண்டே இருப்பது.

உங்கள் தனித்தன்மையில் தள்ளிவிடும் இயல்பு முன் நிற்குமானால் ஒவ்வொரு முறையும் தள்ளிவிடும் போது அப்படிச் செய்வதில் கெட்டிக்காரராகி விடுகின்றீர்கள். ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளும் போது மேலும் கோபம் கொள்வது எளிதாகி விடுகிறது. எதைச் செய்தாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வதற்கே தோன்றும்.

மனத்தைப் பயில்விக்க முடியும். ஏன் நாயைக் கூடப் பயில்விப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது சுவாரஸியமான விஷயம். நாய்களின் மனத்தைப் பயில்விப்பதற்கு நாம் நீண்ட நேரம் செலவிடுகிறோம். அதைவிடப் பயனுள்ளது என்ன? பயில்விக்கப்பட்ட நாய் மனிதனின் சிறந்த நண்பனாகும். கண் தெரியா தோருக்குக் கண்பார்வையாயிருக்க நாய்கள் பயிற்று விக்கப் படுகின்றன. காப்பாற்ற, தேட நாய்கள் பயில்விக்கப் படுகின்றன. அவை ஏன் மதிப்புள்ளவை? ஏனென்றால் அவை நன்றாகப் பயில்விக்கப் பட்டுள்ளன. பயில்விக்கப்படாத நாயைவிடத் தொந்தரவான பிராணி எதேனும் உண்டா? எங்கு பார்த்தாலும் சிறு நீர் கழிக்கும், தோட்டத்தில் பூச்செடிகளைத் தோண்டி விடும், தெருக்களில் நினைத்தவாறு ஓடும், மற்ற நாய்களைத் தாக்கும், எந்த இடத்திலும் மலம் கழிக்கும், இரவு முழுவதும் குறைத்துக் கொண்டே இருக்கும். இவையெல்லாம் உங்கள் மனத்தின் இயல்புகளை நினைவூட்டுகிறதா? (சிரிப்பு). இரவு முழுவதும் குறைக்கும்..லொள் ..லொள்..நீ இதைச் செய்திருக்க வேண்டும்,, நீ அதைச் சொல்லியிருக்க வேண்டும்.. இரவு முழுவதும் மனம் அலைகிறது. அப்படிப்பட்ட மனம் ஒரு பயில்விக்கப்பட்ட நாயைப் போன்றதன்று.

நாம் மிகவும் அறிவுள்ளவர்கள். நாயைப் பயில்விக்கத் தெரிந்திருக்கிறோம். நாயைப் பயில்விப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? நானாக இருந்தால் ஒரு புத்தகக்கடைக்குச் சென்று ‘நாயைப் பயில்விப்பது எப்படி?’ என்ற புத்தகத்தை வாங்கிப் படிப்பேன். அதைவிடப் பயனுள்ளது நாயைப் பயில்விக்கத் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் அவர்களிடம் சென்று அவர் அனுபவத்தில் கற்றதை நாமும் தெரிந்து கொள்ளலாம். அவர் எந்தப் புத்தகம் பயனுள்ளது என்று நமக்குத் தெரிவிப்பார். பல சிக்கலற்ற வழிகள் அவருக்குத் தெரிந்திருக்கும். அப்படி நடந்தால் அதைச் செய்யவும், இப்படி நடந்தால் இதைச் செய்யவும் என்று நமக்குச் சொல்வார். ஆனால் நமது மனத்தைப் பொருத்தவரை நாம் சரியாக அதைப் பயில்விப்ப தில்லை. மனத்தின் சில பகுதிகளை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்குப் பயிற்சியும் தருகிறோம். படிக்க, எழுத, கணிதம் ஆகியவற்றைக் கற்கப் பன்னிரண்டு ஆண்டுகள் தேவைக்கு அதிகமாகவே செலவிடுகிறோம். ஆனால் இந்தக் காலத்தில் மன உணர்ச்சிகளுக்கு என்று பயிற்சி எதையும் நாம் கற்றுக் கொள்வதில்லை. வேண்டிய உணர்ச்சிகளைப் பெறுவதற்கும், வேண்டாததை ஒதுக்குவதற்கும் நமக்குக் கற்பிக்கப் படுவதில்லை. இப்போது நாம் ,'சரி நான் எனது மனத்தைப் பயில்விக்க வேண்டும்,' என்று நினைக்கிறோம். 'இப்படிப்பட்டவன் தான் நான். என்னை மாற்றிக்கொள்ள எனக்குத் தயக்கமாக இருக்கிறது!,' 'மன்னிக்கவும் அப்படிப்பட்டவன் தான் நான்,' என்று நினைப்பது நாம் செய்யும் ஒரு தவறு. அப்படி நினைப்பது பிரச்சனைக்கு உள்ளானது. உங்கள் உணர்ச்சிகளோடு பற்றுக் கொள்ள வேண்டாம். உங்கள் உணர்ச்சிகள் நீங்கள் இல்லை. உணர்ச்சிகள் மாற்றத்துக் குட்பட்டவை. தோன்றி, சற்று நீடித்துப் பின் மறையும் தன்மை கொண்டவை. மறைந்த பின் அவற்றோடு சென்று விட்டீர்களா என்ன? உங்கள் மனப்போக்கையும் தவறாக, 'அது தான் நான்,' என்று நினைக்க வேண்டாம். பல முறை உங்கள் மனப்போக்கை மாற்றிக் கொள்கின்றீர்கள். ஆகவே அவையும் 'நாம்' இல்லை.

வானத்தில் பறக்கும் பறவைகளைப் போல என்று வர்ணிக்கப்படுகிறது. பறவைகளுக்குப் பின் உள்ள வானத்தைப் பார்க்கவேண்டும். பறவைகளை மட்டும் கவனிக்க வேண்டாம். பறவைகள் வெறிச்சோடிக் கிடக்கும் வானத்தில் பறக்கின்றன. அப்படிப்பட்ட வானம் நமது மனத்தின் அடையாளம். எல்லாவற்றையும் சூழ்ந்து கொண்டிருக்கும் மனம். அந்தப் பறவைகள் மனத்தில் தோன்றி மறையும் எண்ணங்களைப்போல. அவை முக்கியமானவை அல்ல. அந்தப் பறந்த வானமே முக்கியமானது. அதுவே பின்னணி. பரந்து விரிந்த மனத்தைக் குறிக்கும். அதற்கென்று தனிப்பட்ட தன்மை ஏதும் இல்லை. அதற்குச் சில இயல்புகள் உண்டு. சரியாகப் பயிற்சி அளித்தால் அது நன்கு பிரகாசிக்கும், நீல நிறமுள்ள (மேகங்கள் இல்லா வானம்), வெளிச்சத்தோடு இதமான வெயில் படும் உணர்வை உண்டாக்கும். பயிற்சி அளிக்கா விட்டால் புயலும், குளிர் காற்றும், இருண்ட முகிற்கூட்டமும் அடங்கியதாகத் தோன்றும்.

எனவே இதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எளிதில் கோபம் கொள்வோர் அந்தக் கோபத்தைக் கிளரும் வண்ணம் எதையும் செய்யக் கூடாது. பழகத் தெரியாத நாயை, மற்ற நாய்களோடுவிடக் கூடாது. அதனால் அது எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. கோபப்படும் ஒருவரைத் தன்னைக் கிளரக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாக்கக் கூடாது. முடிந்தால் சூழ்நிலையை அதற்குத் தகந்தார்ப் போல மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ள வேண்டும்.

பொருட்களின் மீது மோகம் கொள்ளும் மனம் எல்லாவற்றிலும் அழகை மட்டுமே காண்கிறது. ஞானமில்லாத பார்வை இது. எனக்கு வேண்டும். எனக்கு இது வேண்டும். எனக்கு அது வேண்டும். எனக்குத் தேவை. அது என்னிடம் இல்லை. எனவே எப்போதும் ஒரு பற்றாக்குறையிருப்பதாகவே தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒருவர் எந்நேரமும் ஒரு திருப்தியற்ற நிலையிலேயே இருக்கிறார். உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்று தோன்றினால் அது இல்லாதபோது பற்றாக்குறை தோன்றுகிறது. முன்பு உங்களுக்கு அது தேவைப்பட வில்லை. எனவே அது இல்லாததால் குறையிருப்பதாகவும் தெரியவில்லை. ஆக உங்களுக்கு ஒரு 'தேவை' எற்பட்டுவிட்டால் அது உங்களை முழுமையற்றவராக ஆக்கி விடுகிறது.

முழுமையான ஒருவருக்கான அறிகுறி என்னவெனில் அவர்கள் முழுநிறைவு உடையவராக இருப்பார். திருப்தியோடு வாழ்வார், எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தெரிவதில்லை. ஒன்றைப் பெற்று ஒரு குறையைத் தீர்க்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை. எனவே தள்ளிவிடுவதும் (வெறுப்பும்), வேண்டும் வேண்டும் என்று விரும்புவதும் (பேராசை கொள்வது) பிரச்சனையான எண்ணப் போக்குகள். மூன்றாவது பிரச்சனையான எண்ணப்போக்கு தெளிவில்லாமல் இருப்பது, ஊக்கமற்று இருப்பது. போதனைகளும் விளங்கவில்லை, கேட்டதும் சரியாக நினைவில் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த குழப்ப நிலையையும் நாம் நேர்த்தியாக்க வேண்டும்.

இந்த மூன்று, பிரச்சனையான மனப்போக்குகளையும் எப்படி நிவர்த்தி செய்வது? போதனை தருபவரிடம் மீண்டும் செல்ல வேண்டும். தெளிவாகக் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், புத்தகங்களைப் படிக்க வேண்டும், மனத்தைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். முயற்சி செய்தால் சற்று நம்பிக்கை பிறக்கும். எது வேலை செய்கிறது என்பதை முயற்சி செய்து தெரிந்து கொள்ளுங்கள். காலப்போக்கில் தொடர்ந்து முயன்றால் தெளிவு உண்டாகும். பின் இந்த பிரச்சனையான எண்ணப்போக்குகளும் குறையும். வெறுப்புக் கொள்ளுதல் குறையும். உதாரணமாக இந்தக் களி மண்ணால் (செராமிக்)செய்யப் பட்ட கோப்பையில் ஒரு சிறு துண்டு உடைந்துவிட்டது. கோபப் படுபவராக இருந்தால் இதைக் கண்டதும் ஆத்திரம் உண்டாகலாம். கோப்பையில் சிறு துண்டு உடைந்ததைக் கவனிப்பதில் தவறில்லை - ஆனால் அதை அறிவோடு கவனிக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளின் அழகையும் கவனிக்கலாம் - மீண்டும் அறிவோடே கவனிக்க வேண்டும். ஒரு பொருளின் குறையை அறிவோடு பார்க்கும் போது, வெறுப்பு உண்டாவதில்லை. களி மண்ணால் உருவாக்கப்பட்ட கோப்பைகளில் பிளவு உண்டாகும் என்பது இயற்கையே என்பதை உணர்ந்திருக்கின்றீர்கள். அவற்றில் இங்கும் அங்கும் சிறு துண்டுகள் உடையவும் கூடும். ஆனால் வெறுப்பு உண்டாகி விட்டால் நீங்கள் நினைப்பது, 'அட! எப்படி இது உடைந்தது? கடைசியாக யார் இதைக் கழுவியது? மடையன். இவர்களுக்கு என்னவாயிற்று? அவர்கள் பொருளாக இருந்தால் பொறுப்பாக இருந்திருப்பார்கள். நான் ஏன் இந்த மடையர்களோடு இந்த உலகில் பிறந்தேன் என்றே தெரியவில்லை,' என்றெல்லாம் நினைத்துக் கொள்வோம். (சிரிப்பு) இது ஒரு குறையை அறிவற்ற முறையில் பார்ப்பதாகும்.

கேள்வி (பெண்): இது ஆசைப் படுபவதைப் பற்றிய கேள்வி. நமது உறவுகளில் ஒரு பிரச்சனை இருக்குமானால் - அது வேலையில் இருக்கலாம் அல்லது தம்பதியருக்குள் இருக்கலாம் அல்லது நமது குழந்தைகளோடு இருக்கலாம். நாம் பிரச்சனையை தீர்க்கச் சில மாற்றங்கள் செய்ய முயல்கிறோம். இப்படி நல்ல முடிவு கொண்டுவர ஆசைப் படுவது சரியா?

அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பாடு படும் ஆசை. இந்த ஆசையைக் கைவிட வேண்டாம். புத்தரிடம் இதைப் பற்றிக் கேட்டார்கள். 'நீங்கள் ஆசையை விடுமாறு கூறுகின்றீர்கள். ஆனால் ஆசையை கைவிட வேண்டும் என்ற ஆசையையும் கைவிட வேண்டுமா? அப்படி என்றால் இதற்கு ஒரு முடிவே இல்லையே! இது ஒரு தீர்க்க முடியாத சிக்கலாக இருக்கிறதே?' அதற்குப் புத்தர், 'இல்லை நண்பனே. இதில் சிக்கல் ஏதும் இல்லை. காலில் ஒரு சிலாக்கு (முள்) குத்தித் தோலுக்குல் சிக்கிக் கொண்டால் அதை வேறு ஒரு முள் அல்லது ஊசியைக் கொண்டு தான் எடுக்க வேண்டும். ஆனால் அந்த முள்ளை வெளியே எடுத்த பின்பும் நாம் ஊசியைக் கொண்டு காலைக் குத்திக் கொண்டிருக்கத் தேவை இல்லை. எடுத்த முள்ளையும் எறிந்து விடுங்கள். பயன் படுத்திய ஊசியையும் ஒதுக்கி வைத்து விடுங்கள். இரண்டும் ஒரே நேரத்தில் மறைகின்றன. இறுதியாக ஆசையைக் கைவிட்ட பின் அதைக் கைவிட வேண்டும் என்ற ஆசையும் மறைகிறது.' அது வரை அந்த உயர் ஆசை நமக்குத்தேவை. அதன் வேலை முடிந்த பின் அந்த உயர் ஆசையும் மறையும் என்ற உத்தரவாதம் தருகிறோம். திருச்சிக்குப் போகவேண்டும் என்று விருப்பப்பட்டீர்களென்றால் திருச்சி சென்ற பின் அந்தத் திருச்சிக்குப் போக வேண்டும் என்ற ஆசையும் மறைந்துவிடும் (சிரிப்பு). ஆனால் அங்கு போய்ச் சேரும் வரை அந்த ஆசை இருக்கவேண்டும். ஆனால் அந்த ஆசை திறமையுற்றதாக அல்லது திறமையற்றதாக இருக்கலாம். திறமையற்றதாக இருந்தால் பொறுமையின்மை மற்றும் செயல் குலைந்த நிலைகளோடு சேர்ந்து இருக்கும். திறமையான ஆசையென்பது ஒரு உயர்ந்த சிந்தை அல்லது விருப்பப் படுவது. அப்படி எண்ணுவது நல்லது. எப்படியும் என் நோக்கத்தை அடைவேன். கவலைப்பட வேண்டாம். பொறுமையாக, அவசரப் படாமல் சென்றடைவோம். அழுத்தப் படுவதால், அவசரப் படுவதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. செய்ய வேண்டியதைச் செய்வதே நமக்கு உதவும். ஆக நமது உறவுகளில் பிரச்சனை இருந்தாலும் அல்லது வேறு ஏதாவது பிரச்சனை எழுந்தாலும் ஒரு நாற்காலியைப் பொறுமையுடன் பழுது பார்ப்பவரைப் போலவே, நாம் பொறுமையைக் கடைப் பிடித்துச் சமாளிக்க வேண்டும்.

அனுபவம் உதவும். அனுபவம் பெற நேரம் எடுக்கும். காலப்போக்கில் பயிற்சியில் சிறப்புறுவோம். மேலும் தகவல் கிடைக்கக் கிடைக்க அதற்கேற்றவாறு நாம் நடந்து கொள்வோம். அழுத்தமும், அவசரமும். கவலைப் படுவதும் எதற்கும் உதவப் போவதில்லை. எனவே நேரம் எடுத்துக் கொண்டாலும் சரியான காரியத்தைப் பொறுமையோடு செய்வோம். இதுவே தூய பொறுமை, தூய நிதானம், ஏன் தூய ஞானம் என்றும் சொல்லலாம். மேலும் நமது சக்தியை நாம் திறமையான வழியில் பயன்படுத்துகிறோம் ஏனென்றால் நாம் சஞ்சலப்பட்டு அதை வீணாக்குவதில்லை. நமக்கு ஆதரவு கிடைப்பதும் நல்லது. நம்மைப்போலப் பயிற்சி செய்வோரிடம் தொடர்பு கொள்வதும் நல்லது. அமைதியான நிலையில் உள்ளோரிடம் அடிக்கடி தொடர்பு கொள்வதும், இந்தப் பயிற்சியை ஏற்கனவெ செய்தோரிடம் தொடர்பு வைத்திருப்பதும் நல்லது.

பௌத்தப் பார்வையில் காரியங்கள் காரணத்தினாலேயே நடைபெறுகின்றன. எதுவுமே காரணமில்லாமல் நடைபெறுவதில்லை. சரியான காரணிகளைத் தோற்றுவித்தால் அதற்கேற்ப விளைவுகளும் கிடைப்பது நிச்சயம். காரணிகளைச் செய்யவில்லையென்றால் விளைவுகள் கிடைக்காது. விளைவுகள் உண்டாகுமோ, உண்டாகாதோ என்று எண்ண வேண்டியதில்லை. படிக்காமலேயே தேர்வினை எழுத முடியாது. 'அன்புள்ள கடவுளே, எனக்கு உதவி செய்யுங்கள்! உங்கள் மீது இன்றைக்கு எனக்கு நம்பிக்கை உண்டாயிற்று.' படித்திருந்தால் கடவுளிடம் வரம் கேட்க வேண்டியதில்லை. படித்திருப்பதால் தைரியமாகத் தேர்வினை எழுதலாம். இதில் மாயா ஜாலம் எதுவும் இல்லை. காரணிகளைச் செய்து விட்டீர்கள். தேர்வில் வரும் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டுமானால் முன்னரே படித்திருக்க வேண்டும்.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Comment: We experience sadness, anger, melancholy. The practice is to not being attached to those emotions. If we have a boss who has anger issues and brings it to the job and we can't physically remove ourselves from the situation hopefully the practice will help us deal with these issues.

Sona Bhikku:

First thing is to recognize the nature of your problem. There are three fundamental problems.

One is aversion. You want to push things away. That may be your dominant aspect of your personality. You don't like things. You tend to focus on the fault in things and it is a very uncomfortable feeling called anger.

Next problematic thing the mind does is, it wants to bring things towards it. It is called desire. That is also a problem because until you get what you want you feel that you lack what you want. The person is in a state of constant lack because they have much desire.

The third element is called ignorance or delusion which is a form of confusion. It is a lack of understanding, lack of knowledge and that would be called spinning around.

So the three basic modes are to push is away, pull towards you and to spin around in confusion.

So if your dominant personality is to push it away, every time you push it away you get better at pushing it away. Every time you get angry you get better and more inclined towards getting angry. Whatever you do you have a tendency to do it again.

The mind is trainable. You notice you can even train a dog. It is interesting about dogs. We spend a lot of time training their minds. And there is nothing more helpful. It is truly humans best friend when well trained. Seeing eye dog, the rescue dog, the search dog. Why is it so valuable? Because it is well trained. Is there anything more of a damned nuisance than an untrained dog, eh? It pees everywhere, it digs up the flowers, it runs into the street, it attacks other dogs, it is crapping everywhere, it is barking all night long. Does it remind you of your mind anytime? (laughter) All night long sometimes it barks .. ruff .. ruff .. I want you to do something about it ... you should have said this.. All night long it barks. Now that is not a seeing eye dog.

We are very clever. We can train a dog. Before you train a dog what do you do? I would be inclined to go to a store and get a book on dog training. Or even better go to somebody who trains dogs who has gone through all this cumulation of knowledge and sorted out which book is the best and got all kinds of tricks up their sleeve. When this happens do that and so forth. It is so obvious. But when it comes to our own minds.. Actually parts of our own mind we definitely understand the benefits of training. Such as reading, writing, arithmetic. There you will be over trained for 12 years in an institute. And in all that time you won't be taught training of the emotions. To have the emotions that you prefer and not the ones you don't like. Now you start thinking, 'I have to start working on my mind.' One of the first fallacies is thinking, 'This is who I am.' I don't like to tamper with who I am. 'Sorry that's who I am.' You will be sorry too. I am sorry if that is the way you think. 'Thats the way I feel. I am sorry but that is the way I feel.' You are identifying with your feelings. First thing is to understand, 'Wait a second. You are not your feelings.' Your feelings are transient. They arise, last for a while and they disappear. Did you go with them? You are not your attitudes. You change your attitudes many times. That's not you.

Described as birds flying through the empty sky. See the empty sky behind the birds. You don't see just the birds. Birds pass through the empty sky. The empty sky is a symbol of your mind, the whole encompassing mind. The birds are just the thoughts that fly through there. They are not the main thing. The empty sky is the main thing, the back drop the whole vast aspect of mind itself. It doesn't have an individual characteristic. It does not have a unique self to it. It has some universal qualities to it. And if we train it in a certain way it tends to be a nice, radiant, blue, sunny, warm kind of experience. If not we have a lot of storms, chills, flurries and so forth. Sounds like Canada, doesn't it? (laughter)

You undertake this whole thing as a training. Specifically that angry personality should not inflame its anger. For instance the dog that has problem with other dogs. Don't put it with other dogs. It is not going to learn anything from that. The person who is angry and has problems - try not to put through a situation that stirs up its irritability. Try to arrange, if you can, not to put it in difficult aggravating situations. You will continue to train it that way.

The mind that is infatuated with stuff, it is so preoccupied that is the desire dominant personality tends to select the sign of the beautiful out of all the possibilities. Unwisely. I want. I want. I need it. I lack it. Therefore you put yourself in a perpetual state of lack. So the desirous person is in a perpetual state of lack. When you want something you lack it. Before you want it you don't lack it. So whenever you 'want', you make yourself incomplete.

The mark of the whole person, the characteristic of a whole person is they feel quite full or whole or holy. Holy is the old fashioned spelling for the word whole. That is why you have an 'e' at the end of whole. The idea is one who feels content, complete, does not feel strong lack or deprivation and must see that object to fill that lack. So the repulsion and attraction are problematic attitudes. And the other one is lack of clarity, lack of conviction, uncertain of the instruction or what to do or whether you remember them right. This quality of haziness has to be addressed too.

How do you address these? Again you go to a person to get the instruction right. You go back there, get it clear, ask people who are helpful, consult books, clarifying the mind, try it, get some confidence, check - Does this work etc. You build up over a period of time, get clarity and these things tend to reduce. Your aversion to things. for ex. there is a little chip in this clay cup. Now if you were a an angry type of person that would be enough to set your teeth on edge. You can see the fault, but wisely. And you can see the beauty of it - wisely. When you see the beauty wisely you do not crave it. When you see the fault wisely, you do not feel aversion towards it. You just see that that is what happens to clay cups. They get nicks on them. But if you have aversion you are going to think, 'What the hell? Who washed that last time? Fool. What is the matter with people? If it was their cup you know would they have been careless? Damn. I don't know how I got born in this planet.' (laughter). This is unwise attention to the fault.

Q (woman) About desire, If there was a particular issue with your relationship - could be work related or with your partner or children or whatever that you don't like. You strive to make changes. Is it OK to desire a more positive experience?

That is the desire for well being. Do not give up the desire for well being. The Buddha was asked about this conundrum. You seem to advocate giving up desire. But do you desire to come to the end of desire? And if so then it must go on for ever. You desire to get to the end of desire and would it not be a circle that goes on for ever. And the Buddha said, 'No it wouldn't my friend. When you get a sliver then you get a needle and get the sliver out. When you get the sliver out you don't keep poking yourself with a needle, right? You throw the needle away, you throw the sliver away. They vanish at the very same moment. When you finally uproot desire the desire to uproot desire also ceases.' Until that time that is the master desire which you must have and we guarantee that when it has accomplished its task it will also cease. If you desire to go to Kamloops when you get there the desire to go to Kamloops will suddenly leave you. (laughter) However until you get there you need the desire. However that desire can be skillful or unskilful. When it is unskillful it is accompanied by impatience and frustration. Skillful desire is that it is an aspiration. It is a little less loaded term. It already feels better. I will get there. Don't worry. We will just patiently walk there without rushing. Without straining because it will not help me to strain. What will help me is to do it. So if I decide to fix some relationship or fix some situation which everybody is having to do then you would do it in the same patient way as you would fix a chair or make something.

Experience helps. It takes time to get experience. You get better at it. You get more information and that has to be taken into consideration. The straining and rushing and flurry and worry do not help. So we just have to take whatever time it takes.We do the right thing. That is pure patience, pure equanimity, pure wisdom in fact. You also have much skillful use of your emery because half of it is not going into frustration. Support is helpful. Keeping in contact with like minded people. Regular contact with people who are calm, who have been through it before.

From the Buddhist point of view things happen for a reason and they don't happen for no reason. If you put in the correct cause the results must appear. If you do not put in the causes the results can't appear. It is not a matter of maybe they will appear. I will just go and write the exam without any studying. 'Dear God help me, help me. I believe in you today.' So you don't even have to ask God if you have studied. You just go and write the exam because you studied. It is not magic. You put in the causes. You can't know these answers without learning them somewhere.

* * * * *