பௌத்த அடிப்படைக் குறிக்கோள்கள்
பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை
2. பௌத்த அடிப்படைக் குறிக்கோள்கள்
Basic Buddhist Concepts
வினா: பௌத்த சமயத்தின் முக்கிய போதனைகள் யாவை?
விடை: புத்தபெருமானின் பெரும்பாலான போதனைகள் நான்கு பேருண்மைகளையே சுற்றிச் சுற்றி வருபவை. ஒரு வண்டிச்சக்கரத்தில் வளையத்திலிருந்து ஆரங்கள் எப்படிச் சக்கரத்தின் மையத்தில் இணைகின்றனவோ, அதைப் போலவே புத்தர் போதனைகளும் நான்கு பேருண்மைகளையே சுற்றிச் சுற்றி வரும்.
உண்மைகள் நான்கு இருப்பதால், அவற்றை நான்கு பேருண்மைகள் என்கிறோம். அவை அறிந்து கொள்பவர்களை மேம்படுத்துவதால் அவற்றை மேன்மையான (NOBLE) பேருண்மைகள் என்கிறோம். அவை வாய்மை உடைத்தாயிருப்பதால் அவற்றை உண்மைகள் என்கிறோம்.
QUESTION: What are the main teachings of the Buddha?
ANSWER: All of the many teachings of the Buddha center on the Four Noble Truths just as the rim and spokes of a wheel center on the hub. They are called 'Four' because there are four of them. They are called 'Noble' because they ennoble one who understands them and they are called 'Truths' because, corresponding with reality, they are true.
* * * * * * * *
வினா: முதல் பேருண்மை எது?
விடை: முதல் பேருண்மை வாழ்க்கையே துன்பமயமானது என்பதாகும்; வாழ்வதற்கு நாம் துன்புற வேண்டும். துன்பத்தை அனுபவிக்காமல் வாழ்வது சாத்தியமே இல்லை; நாம் நோய், உடலில் ஏற்படும் காயங்கள், களைப்பு, முதுமை, இறுதியாகச் சாவு போன்ற உடலில் ஏற்படும் துன்பங்களாலும், தனிமை, எண்ணக் குலைவு, குழப்பம், ஏமாற்றம், கோபம் போன்ற உள்ளத்தில் ஏற்படும் துன்பங்களாலும் துன்புறுகிறோம்.
QUESTION: What is the First Noble Truth?
ANSWER: The first Noble Truth is that life is suffering. To live is to suffer. It is impossible to live without experiencing some kind of pain or distress. We have to endure physical suffering like sickness, injury, tiredness, old age and eventually death and we have to endure psychological suffering like loneliness, frustrations, fear, embarrassment, disappointment, anger, etc.
* * * * * * * *
வினா: இது ஒரு தோல்வி மனப்பான்மைக் கொள்கையல்லவா?
விடை: 'PESSIMISM' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதியில், எது நடந்தாலும் தீமையே நடக்கும் என்ற தீய, தோல்வி மனப்பான்மை அல்லது தீய சக்தியே நல்ல சக்தியைவிடப் பலம் வாய்ந்தது என விளக்குகிறது.
பௌத்தம் இவ்விரு கொள்கைகளையுமே போதிக்க வில்லை. மேலும் வாழ்வில் இன்ப மயமும் உள்ள தென்பதையும் அது மறுக்கவில்லை. ஆனால், பௌத்தம் கூறுவதெல்லாம், மனிதன் வாழ வேண்டுமானால், உடலாலும் உள்ளத்தாலும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்பதுதான். இதனை எவருமே மறுக்க முடியாது.
பௌத்த சமயம் அனுபவத்தில் ஆரம்பமாகிறது. ஒரு மறுக்க முடியாத கருத்தை, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை, எல்லோராலும் அனுபவிக்கப்பட்டு அதனை எப்படித் தவிர்ப்பது என்று முயலும் ஒன்றைத் தவிர்க்க வழிகாட்டுவதே பௌத்தமாம்.
பௌத்தம் ஒவ்வொரு மனிதனின் அக்கறையின் மையமாக இருக்கும் துன்பத்தையும், அவர்களின் துக்கத்தை நிவர்த்திக்கவும் வழிகாட்டும் சமயமாகும்.
QUESTION: Isn't this a bit pessimistic?
ANSWER: The dictionary defines pessimism as 'the habit of thinking that whatever will happen will be bad,' or ‘the belief that evil is more powerful than good.' Buddhism teaches neither of these ideas. Nor does it deny that happiness exists. It simply says that to live is to experience physical and psychological suffering which is a statement so true and so obvious that it cannot be denied. Buddhism starts with an experience, an irrefutable fact, a thing that all know, that all have experienced and that all are anxious to avoid. Thus, Buddhism starts by going straight to the core of every individual human beings' concern - suffering and how to avoid it.
* * * * * * * *
வினா: இரண்டாவது பேருண்மை என்பது யாது?
விடை: இரண்டாவது பேருண்மை என்பது அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது என்பதாகும். உள்ளத்தால் ஏற்படும் வேதனைகளைப் பார்த்தால், அடக்க முடியாத ஆசைகளால் அத்துன்பம் எப்படி வந்ததென்பது தெளிவாகத் தெரியும்; நமக்கு ஒன்றின் மேல் விருப்பம் ஏற்பட்டு அது கிடைக்காமல் போய்விடுகிறது என்றால், 'விரக்தி' ஏமாற்றம் அடைந்து விடுகிறோம். ஒருவர் நாம் எதிர் பார்க்குமளவுக்கு இருப்பார் என எண்ணுகின்றோம்; அப்படியில்லை என்று தெரிந்தவுடன், அது நமக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது; நாம் ஏமாற்றப் பட்டோம் என்ற எண்ணம் உருவாகிறது. ஒருவர் நம்மை விரும்ப வேண்டும் என என்ணுகிறோம். அப்படி நாம் எதிர்பார்க்கும் நபர், நம்மை விரும்பவில்லை என்றால், அச்செயல் நம்மைப் புண்படுத்துகிறது. நாம் விரும்பும் பொருள் நமக்குக் கிடைத்து விட்டாலும் அது நமக்கு நீண்டநாட்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. அம்மகிழ்ச்சி நமக்கு நிலைக்காது. சில நாட்களிலேயே, விரும்பி அடைந்த பொருளே, சலிப்பை ஏற்படுத்தி விடும். பின் அதன் மீதிருக்கும் பற்றை விட்டுவிட்டு, அது போன்ற வேறொன்றை நாடுவோம். இரண்டாம் பேருண்மை விளக்குவதுயாதெனில், நாம் விரும்புவது கிடைத்தால் கூட அது நிரந்தர மகிழ்ச்சியைத் தருமென்பது உறுதியில்லை. தொடர்ந்து நம் மனம் நாடும் தேவைகளுக்காகப் போராடுவது அல்லது தவிப்பதை விட்டுவிட்டு நம் தேவைகளைத் திருத்திக் கொள்வது நல்லது. அடிக்கடி மாறும் இத்தேவைகள் நம் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் கெடுத்து விடுகிறது.
QUESTION: What is the Second Noble Truth?
ANSWER: The Second Noble Truth is that craving causes all suffering. When we look at psychological suffering, it is easy to see how it is caused by craving. When we want something but are unable to get it, we feel disappointed or frustrated. When we expect someone to live up to our expectations and they do not, we feel let down and angry. When we want others to like us and they don't, we feel hurt. Even when we want something and are able to get it, this does not often lead to happiness because it is not long before we feel bored with that thing, lose interest in it and commence to want something else. Put simply, the Second Noble Truth says that getting what you want does not guarantee happiness. Rather than constantly struggling to get what you want, try to modify your wanting. Wanting deprives us of contentment and happiness.
* * * * * * * *
வினா: ஆனால் எப்படித் தேவைகளும் அடக்க முடியா ஆசைகளும் உடலுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகின்றன?
விடை: வாழ்நாள் முழுவதும் தேவைகளும் அடக்க முடியாத ஆசைகளும் தொடர்ந்து இருந்தால், குறிப்பாக நிரந்திரமாக உயிர் வாழ இருக்கும் பேராசையினால், அத்தேவையும் ஆசையும் ஒவ்வொரு தனி மனிதரிடையேயும் ஒரு பலம் வாய்ந்த சக்தியை ஏற்படுத்தி, அவரை மறுபடியும் பிறக்கச் செய்கிறது. நாம் மறுபடியும் பிறந்தால் நமக்கு உடம்பு உண்டாகிறது; பிறகு நாம் மேற்கூறியது போல, அவ்வுடல் காயத்துக்கும் நோய்களுக்கும் ஆசைகளுக்கும் ஆட்படுகிறது; அவ்வுடல் செய்யும் வேலைகளால் தளர்ந்து, வயது முதிர்ந்தவுடன் இறந்து, மறு பிறவி எடுக்கிறது. ஆக அடக்க முடியாத பேராசை நம் உடல் துன்பத்துக்கு வழிகோலுகிறது. ஏனென்றால் அவ்வாசையே நம் மறுபிறப்புக்குக் காரணமாகிறது.
QUESTION: But how does wanting and craving lead to physical suffering?
ANSWER: A lifetime of wanting and craving for this and that and especially the craving to continue to exist creates a powerful energy that causes the individual to be reborn. When we are reborn, we have a body and as we said before, the body is susceptible to injury and disease; it can be exhausted by work; it ages and eventually dies. Thus, craving leads to physical suffering because it causes us to be reborn.
* * * * * * * *
வினா: அவையெல்லாம் சரிதான்; நம் தேவைகள் அனைத்தையும் வேண்டாவென்று நிறுத்தி விட்டோமேயானால், நமக்கு ஒன்றுமே கிடைக்காதே, நாம் எதையும் சாதிக்க இயலாதே?
விடை: உண்மைதான். ஆனால், புத்தபெருமான் கூறுகிறார்: நமது ஆசை, தீராத ஆசை; நம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டு, திருப்தியடையாமல் அமைதியின்றி, மேலும் மேலும் வேண்டுமென்று அலைவதே நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறது. ஆகையால் அப்பேரலைச்சலைத் தவிர்க்க வேண்டும். புத்தபெருமான் நமது அவசியத் தேவைகள் என்ன, நாம் விரும்பும் தேவைகள் என்ன, என்பதற்கான வித்தியாசத்தை உணரக் கூறுகிறார். நமது அவசியத் தேவைகளைத் திருத்திக் கொள்ளச் சொல்கிறார்.
புத்தபெருமான் கூறுகிறார்: நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படலாம். ஆனால், விருப்பங்கள் முடிவற்றவை. நமது விருப்பங்கள் ஆழந்தெரியாத குழி. அதனை நிரப்பவே முடியாது. தேவைகள் பல இருக்கின்றன. அவை அவசியமானவை; அடிப்படைத்தேவைகள். அத்தேவைகளுக்காக நாம் உழைத்தோமேயானால் அவை நமக்குக் கிடைக்கும். அதற்கு மீறிய ஆசைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தேடுவதும், தேடியவை கிடைத்தவுடன் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதுதானே!
QUESTION: That's all very well. But if we stopped wanting altogether, we would never get anything or achieve anything.
ANSWER: True. But what the Buddha says is that when our desire, our craving, our constant discontent with what we have and our continual longing for more and more does cause us suffering, then we should stop doing it. He asked us to make a difference between what we need and what we want and to strive for our needs and modify our wants. He taught us that our needs can be fulfilled but that our wants are endless - a bottomless pit. There are needs that are essential, fundamental and that can be obtained and we should work towards this. Desires beyond this should be gradually lessened. After all, what is the purpose of life? To get or to be content and happy?
* * * * * * * *
வினா: நிங்கள் மறு பிறவிபற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்களே, அதற்கு ஏதேனும் சான்றுகள் உளவா?
விடை: அதற்குப் பல சான்றுகள் உள. அதனை விவரமாகப் பின்பு பார்ப்போம்.
QUESTION: You have talked about rebirth, but is there any proof that such a thing happens?
ANSWER: There is ample evidence that such a thing happens but we will look at this in more detail later on.
* * * * * * * *
வினா: மூன்றாவது பேருண்மை என்பது யாது?
விடை: மூன்றாவது பேருண்மையாவது துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம் என்பதாகும். நான்கு சத்தியங்கள் என்னும் பேருண்மைகளில் இம்மூன்றாவது பேருண்மை மிக முக்கியமானது. ஏனென்றால் புத்த பெருமான் இம்மூன்றாவது பேருண்மையால் நமக்கு மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுமென உறுதியளிக்கிறார். நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமேயானால் நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். ஏனென்றால் நம் சுய நலத்தேவைகள் நம்மை வாட்டி வதைப்பதில்லை; மற்றவர்களுக்கு உதவி செய்யவும், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நமக்கு போதிய நேரம் கிடைத்துவிடும். இதனையே நிர்வாண நிலையென்று கூறுகிறோம். உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். இதுவே இறுதியான நிர்வாண நிலை.
QUESTION: What is the Third Noble Truth?
ANSWER: The Third Noble Truth is that suffering can be overcome and happiness attained. This is perhaps the most important of the Four Noble Truths because in it the Buddha reassured us that true happiness and contentment are possible. When we give up useless craving and learn to live each day at a time, enjoying without restless wanting the experiences that life offers us, patiently enduring the problems that life involves without fear, hatred and anger, then we become happy and free. Then and only then, are we able to live fully. Because we are no longer obsessed with satisfying our own selfish wants, we find we have so much time to help others fulfil their needs. This state is called Nirvana.
* * * * * * * *
வினா: நிர்வாண நிலை என்றால் என்ன? அஃது எங்கே இருக்கிறது?
விடை: அஃது ஒரு மனித அறிவுக்கு அப்பாற்பட்ட கனபரிமாணம்; காலத்தையும் அறிவையும் கடந்தது. அதனால், அதைப்பற்றிப் பேசுவதோ, ஏன் நினைப்பதோ கூடக் கடினம். வார்த்தைகளும் எண்ணங்களும் தற்கால உலக கனபரிமாணத்தை மட்டுமே விளக்க முடியும்.
ஆனால், நிர்வாண நிலை காலங் கடந்தது; அதற்கு இயக்கமோ, வயதோ, மரணமோ கிடையாது. அது நிரந்தரமானது. மேலும் அது எல்லையற்றது; விளைவுண்டாக்கும் செயல் அற்றது. அது பொதுக் கருத்தோ தனிக் கருத்தோ அற்றது. ஆகையால் நிர்வாணம் வினைவகையில் எண், இடம், பால் கட்டுப் பாடற்ற வடிவமுடையது.
நிர்வாண நிலை அனுபவபூர்வமான பெரு மகிழ்ச்சி தரும் என உறுதியளிக்கிறார் புத்த பெருமான். அவர் கூறுகிறார்:
"நிர்வாண நிலையே மிக உயர்ந்த மகிழ்ச்சி!" தம்மபதம் 204
QUESTION: What or where is Nirvana?
ANSWER: It is a dimension transcending time and space and thus is difficult to talk about or even to think about, words and thoughts being only suited to describe the time-space dimension. But because Nirvana is beyond time, there is no movement, no friction and so no aging or dying. Thus Nirvana is eternal. Because it is beyond space, there is no causation, no boundary, no concept of self and no self and thus Nirvana is infinite. The Buddha also assured us that Nirvana is an experience of great happiness. He said:
‘Nirvana is the highest happiness.’Dhp.204
* * * * * * * *
வினா: நிர்வாண நிலை என்னும் பரிமாணம் நிலவுகிறது என்பதற்கு ஏதேனும் சான்றுகள் உளவா?
விடை: இல்லை. ஆனால், அப்படிப்பட்ட 'நிர்வாணம்' என்னும் ஒரு நிலையை நாம் ஊகித்தறியலாம்.
காலமும் உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு கனபரிமாணம் இருக்கிறது - அதுவே நாம் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகம் - காலமும் உலகமும் இயங்காத நிலை ஒன்றிருக்கிறது என்பதை, அதுதான் நிர்வாண நிலை என்பதை, நாம் ஊகித்தறியலாம். 'நிர்வாண நிலை' என்ற ஒருநிலை இருக்கிறதென்பதை நிரூபிக்கச் சான்றுகள் இல்லையென்றாலும், புத்த பெருமானின் சொற்கள் இன்றும் வாழ்கின்றன. அவர் கூறுகிறார்:
"பிறக்காத நிலை, உருவாகாத நிலை, ஆக்க முடியாத நிலை, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப்படாத நிலை என்று ஒன்று இருக்கிறது. பிறக்காத நிலை என்று ஒன்றோ உருவாகாத நிலையோ, ஆக்கப்படாத நிலையோ, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப்படாத நிலையோ என்று ஒரு நிலை இல்லையென்றால் இந்தப் பிறப்பிலிருந்து உருவான நிலையிலிருந்து, ஆக்கப் பட்ட நிலையிலிருந்து, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப்பட்ட நிலையிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால் பிறக்காத நிலை, உருவாகாத நிலை, ஆக்கப்படாத நிலை, கூட்டுப் பொருள்களால் உண்டாக்க முடியாத நிலை என்ற நிலை ஒன்று இருப்பதால், பிறப்பிலிருந்து, உருவான நிலையிலிருந்து, ஆக்கப் பட்ட நிலையிலிருந்து, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப் பட்ட நிலையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியிருக்கிறது." UD 80
அந்த நிலையை நாம் அடையும் போது நாம் அதை அறிந்து கொள்ளலாம். அதுவரை விசாரித்து உறுதிப் படுத்தக்கூடிய புத்தரின் போதனைகளைத் தொடர்ந்து முயல வேண்டும்.
QUESTION: But is there any proof that such a dimension exists?
ANSWER: No, there is not. But its existence can be inferred. If there is a dimension where time and space do operate and there is such dimension - the world we experience - then we can infer that there is a dimension where time and space do not operate - Nirvana. Again, even though we cannot prove Nirvana exists, we have the Buddha's word that it does. He told us:
‘There is an Unborn, a Not-become, a Not-made, a Not-compounded. If there were not this Unborn, Not-become, Not-made, Not-compounded, there could not be an escape from what is born, become, made, and compounded. But since there is this Unborn, Not-become, Not-made, Not-compounded, there is an escape from what is born, become, made and compounded.’Ud, 80
We will know it when we attain it. Until that time, we can still apply those aspects of the Buddha's teachings that we can verify.
* * * * * * * *
வினா: நிர்வாண நிலைக்கு விருப்பமும், பேராசையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், அந்த நிலையை அடையவேண்டுமென்ற ஆசையோடு எப்படி அந்த நிலையை அடைவது?
விடை: ஒரு நோக்கம் இருந்தால் அதை அடைய ஒருமுகத்தோடும் முயற்சியையும் சக்தியையும் பயன்படுத்த வேண்டும். நிர்வாண நிலையையும் அவ்வாறே அடைய முயற்சிக்க வேண்டும். ஆனால் நாளடைவில் நமது ஆழ்ந்த அறிவு அதிகரிக்க நமக்கு 'நிர்வாண நிலை என்பது ஒரு அடையக்கூடிய பொருள் அல்ல என்பதும் அது பேராசை அல்லாத, முழு அறிவடங்கிய, திருப்திகரமான, நிறைவேற்றம் உள்ள மன நிலை என்பதையும் அறிவோம். இதைப் புரிந்து கொண்டால் ஆசை தானாகவே குறைந்து மறைந்து விடும். பின் நாம் நிர்வாண நிலையை அடைந்து விடுகிறோம்.
QUESTION: If a characteristic of Nirvana is the absence of desire and craving, how can you attain it by desiring to attain it?
ANSWER: Like any other goal one has to focus one’s effort and energy to attain Nirvana. However, in time, as you understanding deepens, you come to realize that Nirvana is not a thing ‘out there’ which you can ‘get’, but rather the state of being without desire, a state of complete knowledge, satisfaction and fulfillment. When you understand this your desire fades and eventually ceases. Then you have attained Nirvana.
* * * * * * * *
வினா: நான்காவது பேருண்மை என்பது யாது?
விடை: நான்காவது பேருண்மை துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டுகிறது. இந்தப் பாதை மேன்மையான எட்டுப் பிரிவுகள் (அஷ்டாங்க மார்க்கம் ) அடங்கிய பாதை எனப்படும். அவை யாவை? நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நல் தொழில் வகித்தல், நன் முயற்சி, நன் மனக் கவனம், நன் மன ஒருமைப்பாடு (மனத்தை ஒரு முகப்படுத்துதல்) என்பவையே. பௌத்த வாழ்க்கை என்பது இந்த எட்டையும் பயின்று பயிற்சி செய்து பூரணத்துவப் படுத்திக் கொள்வதுதான். இந்த அஷ்டாங்க மார்க்கத்தினைக் கவனித்தீர்களென்றால் வாழ்க்கையின் எல்லா அம்சத்தினையும் அது உட்படுத்துகிறது என்பது விளங்கும்: அறிவாற்றல், நன்நெறி, சமுதாயம், பொருளியல், மனோ தத்துவ இயல் ஆகிய எல்லாம் உள்ளடங்குகிறது. . எனவே ஒரு மனிதன் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் ஆன்மீக வளர்ச்சி பெருவதற்கும் தேவையான எல்லாம் அஷ்டாங்க மார்க்கத்தினுள் இருக்கின்றன.
QUESTION: What is the Fourth Noble Truth?
ANSWER: The Fourth Noble Truth is the Path leading to the overcoming of suffering. This path is called the Noble Eightfold Path and consists of Perfect Understanding, Perfect Thought, Perfect Speech, Perfect Action, Perfect Livelihood, Perfect Effort, Perfect Mindfulness and Perfect Concentration. The Buddhist life consists of practicing these eight things until they are brought to completion. You will notice that the steps on the Noble Eightfold Path cover every aspect of life: the intellectual, the ethical, the social and economic, and the psychological and therefore contain everything a person needs to lead a good life and to develop spiritually.
* * * * * * * *