உணவு

உணவு

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Food

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

உணவருந்துவதைப் பற்றிப் புத்தரின் அறிவுரையை விளக்கிக் கூறுங்கள்.

துறவிகளின் பயிற்சியில் உணவருந்துவது பற்றிய விளக்கம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. உணவருந்தும் முன் நாங்கள் இவ்வாறு ஓதுவது வழக்கம்: "மனத்தின் அறி நிலையோடு இந்த உணவை அருந்துவேன். வேடிக்கைக்காவோ, கேளிக்கைக்காகவோ, உடலை அழகுபடுத்தவோ நான் உணவருந்துவதில்லை. இந்த உடலைப் பராமரிக்க மட்டுமே உணவருந்துகிறேன்." ஆக புத்தர் உணவருந்துவதை எப்படி அணுக வேண்டுமென்று பொதுவான ஆலோசனைகளைக் கூறினார். உணவை அறி நிலையோடு அணுக வேண்டும். இந்த ஆலோசனைகள் துறவிகளுக்கும், தியானிப்போருக்கும் கொடுக்கப்பட்டது.

இல்லற மக்களைப் பொருத்தவரை வாழ்க்கை இன்பங்களில் உணவு தரும் இன்பம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. வாழ்க்கையில் இன்பங்கள் தேவை தானே? தியானம் செய்து அதனால் இன்பம் பெறவில்லையென்றால் வேறு எப்படியாவது இன்பம் கிடைக்க வேண்டும் அல்லவா? ஆக இல்லற வாழ்க்கையில் நாம் இன்பத்துக்காக உணவருந்துவது வழக்கம். சில சமயம் விளையாட்டுப் போட்டிகளில் மேன்மையுறுவதற்காகவே குறிப்பிட்ட சக்திமிக்க உணவை உண்கிறோம். பின் வேறு நோக்கங்களும் உண்டு. பண்டிகை, திருமண விருந்து போன்ற சமூக வழக்கங்களுக்காகவும் உணவு அருந்துவது ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. உடலை அழகு படுத்துவதற்கெனச் சில உணவு வகைகளை உண்கிறோம். இதைச் சாப்பிட்டால் சருமம் பிரகாசிக்கும் என்றும் அதைச் சாப்பிட்டால் முடி கருமையாக வளரும் என்றும் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் துறவிகள் இவ்வாறெல்லாம் நினைத்து உணவருந்தக் கூடாது. உடலைப் பராமரிக்க மட்டுமே உணவு அருந்த வேண்டும். உடலைக் கவனிக்காமலும் விடக்கூடாது. அதைப் பராமரிக்கத் தேவையான அளவு மட்டும் உணவருந்தவேண்டும். கொடுக்கப்படுகிற உணவைத்தான் உண்ண வேண்டும். எந்த அளவு உணவருந்த வேண்டும்? பசி உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய அளவும், அதிக உணவு உண்பதால் உண்டாகும் தொல்லைகள் ஏற்படாத அளவே உண்ண வேண்டும். ஆக மிதமான பாதையைக் கடைப் பிடிக்க வேண்டும். அதிகம் சாப்பிட்டபின் அதனால் உடல் உபாதையும் இருக்கக்கூடாது. அதே சமயம் புத்தர் பசியோடு இருக்க வேண்டாம் என்கிறார். பசியால் எவரும் வாடக்கூடாது என்கிறார். அவரும் புத்த நிலை அடைவதற்கு முன்னர் பற்றற்ற வாழ்க்கையைத் தேர்ந்து, பட்டினியால் வருந்தி வாழ்ந்து பார்த்தார். ஆனால் அது ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்தது இல்லை என்ற முடிவுக்கு வந்து அப்படிப் பயிற்சி செய்வதை விட்டு விட்டார். அதற்கு முன்னர் இளவரசராக இருந்த போது சுகபோகம் மிகுந்த அரச வாழ்க்கை வாழ்ந்தார். இப்படி எந்த விருப்பதுக்கும் இடமளிக்கும் வாழ்க்கையும் அவருக்குச் சரியெனப் படவில்லை. ஆகவே அதையும் கைவிட்டார். ஏனெனில் அதுவும் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே இரு எல்லைகளையும் கைவிட்டு இடைப்பட்ட பாதையைத் தேர்ந்தார் புத்தர். ஆக உணவைப் பொருத்தவரையும் புத்தரின் அணுகுமுறை ஒரு மத்திய பாதையே.

திரிபிடகத்துள் துறவிகளுக்கான ஒழுகலாற்றைப் பற்றிய விதிகள் விநயபிடகம் என்றழைக்கப்படும். அதில் 'ஸேக்கிய' என்ற ஒரு தொகுதி உள்ளது. இந்தத் தொகுதி ஆச்சார விதிகள் பற்றியது. எவ்வகையான உணவு, எவ்வளவு உண்பது, எப்படிக் கலந்து உண்பது போன்ற விதிகள் இந்த தொகுதியில் விளக்கப் பட்டிருக்கிறது. இன்று போலவே அக்காலத்திலும் இந்தியாவில் ஆதார உணவாக இருந்தது அரிசிச் சாதமே. அதுவே முக்கிய உணவு. ஆக சம நிலையான உணவில் அறுபது சதவீதம் சாதமும் மீதி நாற்பது சதவீதம் காய்கறிகளும், பிறவும் கலந்திருக்க வேண்டும் என்று யோசனை கூறப்படுகிறது. காய்கறிகளையும் இனிப்புப் பண்டங்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு சாதத்தை ஒதுக்கிவிடக் கூடாது. அதாவது வாய்க்குச் சுவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிடக் கூடாது. (துறவிகள்) பாத்திரத்தில் இருப்பது மட்டும் அன்றி உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் அதே போலச் சாதமும் கறியும் கலந்திருக்க வேண்டும். முதலில் காய்கறிகளையும் பின்பு சாதத்தையும் தனித்தனியே சாப்பிடக் கூடாது. அக்கால வழக்கப்படி கையில் தான் உணவு உண்டார்கள். புத்தரும் தனது கை விரல்களால்தான் உணவு உண்டார். அளவாக எடுத்து, கவனத்தோடு அறி நிலையோடு சாப்பிட வேண்டும்.

சில சமயம் (துறவிகள்) உணவு யாசிக்கச் செல்லும் போது வேண்டியது கிடைக்கும் என்ற நிலைமை இருக்காது. இலங்கையில் இக்காலத்தில் துறவிகள் உணவு கேட்டுப் பிச்சா பாத்திரத்தோடு செல்வது குறைந்து விட்டது. தாய்லாந்திலும் பர்மாவிலும் இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. தானம் கொடுப்பவர் எதைப் பாத்திரத்தில் இடுகின்றாரோ அதுவே அவர்களுக்குக் கிடைக்கும் உணவு. எனவே விரும்பியது கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. பலவகையான உணவு கிடைக்குமாயின் சரியான விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும். நீங்கள் எப்போதாவது பல உணவு வகைகளும் மேசையில் இருக்கும் போது எப்படி உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பதைக் கவனித்தீர்களா? ஒரு உணவை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை ஒதுக்கி விடுவது, அல்லது நாக்குக்கு ருசியான உணவை மட்டுமே எடுப்பது, நமக்கு பிடித்ததை மட்டும் எடுக்கின்றோமா என்பதையெல்லாம் கவனித்துப் பார்க்க வேண்டும். துறவற வாழ்க்கையில் இப்படித் தேர்ந்தெடுப்பதையெல்லாம் விட்டு விடுகிறோம். வேண்டியது எப்போதும் கிடைக்காது. நினைத்த நேரத்திலெல்லாம் உணவு கிடைக்காது. ஆக பலருக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் உணவைப் பொருத்தவரையில் துறவிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இல்லற மக்களுக்கு உணவு வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. துறவிகள் அந்த இன்பத்தை ஒதுக்கி விட்டு மாற்று இன்பதை நாடுகின்றனர். அதுவே மனத்தின் மகிழ்வு. ஒருமுகப்பட்ட மனத்தில் உள்ள இன்பம்.

மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் போதும் எந்த வேலையிலாவது மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போதும் உணவு பற்றிய எண்ணமே எழுவதில்லை என்பதையும் கவனித்திருப்பீர்கள். சிறு வயதில் வீட்டுக்கு வெளியே விளையாடும்போது சாப்பிடவா என்று யாராவது அழைத்தால் உடனே போக விரும்புவதில்லை. சிறுவனாகவோ சிறுமியாகவோ வெளியே மகிழ்ச்சியாக மற்றவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம். அம்மா சாப்பிட அழைக்கிறார். ஆனால் போக மனமே இல்லை. உணவு பற்றி மனத்தில் எண்ணமே தோன்றுவது இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக எதையும் செய்து கொண்டிருக்கா விட்டால் உணவு அருந்தி மகிழலாமே என்று தோன்றுகிறது. வேறு சிலருக்குச் சலிப்பாக இருக்கும் போது சாப்பிடத் தோன்றும். மனத்தில் கவலை இருந்தால் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். சில சமயம் மனச்சிக்கல்களைச் சமாளிக்க உணவு உண்கிறோம். இது பிரச்சனை உண்டாக்கக் கூடும். வட அமெரிக்காவில் இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இளம் பெண்கள் அல்லது சிறுமிகள் 'புளிமியா' அல்லது 'அனோரெக்ஸீயா' போன்ற மனத்திலிருந்து தோன்றும் உடல் சம்பந்தபட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த நோய் உண்டாவதற்குக் காரணம் சாப்பிட்டால் அழகு குன்றிவிடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதால் தான். இது தங்கள் மனத்தை மிகவும் பாதிக்க, சிலர் பட்டினி கிடந்தே உயிரையும் இழக்கின்றனர். ஆப்ரிக்காவில் பஞ்சம் மிகுந்த நாட்டில் வாழ்வோர் போன்று எழும்பும் தோலுமாகத் தோன்றுகின்றனர். உணவு குவிந்திருக்கும் இடத்தின் மத்தியிலும் இப்படிப் பிரச்சனைகள். சில சமயம் சிரமாகத் தோன்றினாலும் உணவைப் பொருத்தவரை மத்திய வழியையே கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Please describe the Buddha's advice on consumption of food.

Eating as a practice for monks is important. We recite this before we eat: "Mindfully reflecting I take this food, not for fun, not for sporting, not for beautification, only the maintenance of the body." So the Buddha did give general instructions on about the approach to food. We want to approach it with mindfulness. Now this instruction is primarily for monks or meditators.

Part of the lay persons life is the pleasures of food. You got to have some pleasures in your life. Not going to meditate you got to have some pleasure. So in lay life one eats for fun sometimes, for sporting sometimes. Sporting means that you eat certain foods to improve your sporting performance and so forth. So there are other motives, socializations and so forth. Beautification sometimes. Have some avocados to make your skin glow. Eat certain food to make you beautiful. The monks are not supposed to be doing that. They are just to eat it for the maintenance of the body. Not to ignore the body but just to maintain it. Basic food, what you are given. As to the volume of food he just generally says to eat just enough to relieve feelings of hunger but not to induce new feelings of discomfort from overeating. So the middle path. So you don't feel uncomfortable after you eat. But he doesn't want you to be hungry. Doesn't want you to have the pain of hunger. Remember he gave up ascetic practices, starvation. He did not find that profitable. Before that he gave up the life of royalty as a prince which was the indulgent, sensuous life. So he gave up both extremes and he is taking up the middle path. So his approach to food is to follow the middle path.

In the Vinaya (rules for monks) we have a little section called the Sekhiyas. These are rules of conduct regarding etiquette. The type and amount, proportions of food you can take etc. In India at that time, of course as it is today, rice is a staple food. It is the main course. So he suggests that the balanced meal is something like 60 percent rice and the curries in proportion. You are not supposed to take the curries and desserts and just ignore the rice. Just take the good stuff. So probably at that time that was the standard idea of a balanced meal. You take about 60% rice and the curry is for flavouring or extra nutriments and that proportion is not only thought to be just the amount in the bowl but every fingerful you take is the combination of that much rice and the percentage of curries. So you just don't eat the curries and then the rice. Each one you mix together. In Sri Lanka that would be easy to follow, right? The ordinary person would follow that. The main thing would be rice and then the curry. When you take the rice you take a small amount of curry with it and in accord with the polite manners of the time they ate with their fingers. So the Buddha ate with his fingers. Basically use the 2 finger and then the thumb. So that would be a mouthful. So one would be mindfully eating.

Sometimes you can't be so choosy when you are on alms round. In Sri Lanka these days monks don't go alms round too much. But in Thailand they still go alms round. In Burma they still go alms round everyday. So whatever anybody puts in the bowl that's what you get. You have to eat it. So you don't have too much choice about proportions. But if you have choice about proportions then you would choose that. So you can watch yourself when you go to the table and see your preferences, see what you want. Take a lot of one thing, nothing of the other. Go by the tongue instead of the idea of proportions. See how much we take our favourites. In monastic life you have to give all that up. You can't get what you want, whenever you want. So we are giving up a big part of life for a lot of people -food. Food is a big part of life for people, the flavour and socializations etc. So we have to replace that with some other form of happiness. That will be the happiness of the mind. Happiness of the concentrated mind. You notice that when you are very happy and very involved in something then food is not on your mind. When you are that age sometimes when you are out playing and they say the foods on, you don't want to come in. When you are a little boy, a little girl running around outside having a good time. Somebody calls you for supper, ah you don't want to bother, you are having too much fun. Food is not on your mind. If we are not having a lot of fun then food is a way of having fun. So sometimes people, they feel bored so they eat when they are bored. They feel anxious so they eat when they are anxious. They use food as a way to get around certain emotions and then it can become a great problem. There is also this great problem in North America of beauty. This problem of young girls, is it Bulimia or anorexia. Don't want to eat because it ruins the beauty. So they become psychologically obsessed and they can starve to death sometimes. So they look like they are in an African famine, in the middle of all the food in the world. The minus can be it is not easy to find the healthy middle way in this.

"Properly considering alms food, I use it: not playfully, nor for intoxication, nor for putting on weight, nor for beautification; but simply for the survival and continuance of this body, for ending its afflictions, for the support of the chaste life, (thinking) I will destroy old feelings (of hunger) and not create new feelings (from overeating). Thus I will maintain myself, be blameless, and live in comfort."

* * * * * * *