அட்டாங்க மார்க்கம்

மேன்மையான அட்டாங்க மார்க்கம்

(உன்னத எண் வழிப் பாதை)

பிக்கு போதி

The Noble Eightfold Path - By Bhikkhu Bodhi In English

மக்க விபங்க சூத்திரம்: அட்டாங்க மார்க்க பகுப்பாய்வு Magga-vibhanga Sutta: An Analysis of the Path

துக்கம், அது தோன்றக் காரணம், அதன் முடிவு, முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் - இவையே நான்கு மேன்மையான உண்மைகள். இவற்றை "யானைக்கால் பாதச் சுவடுகள்" என்பார்கள். ஏனென்றால் யானையின் பாதச்சுவட்டினுள் மற்ற எல்லா மிருகங்களின் பாதச் சுவடுகளும் அடங்குவதைப்போலப் புத்தரின் அடிப்படைப் போதனைகள் எல்லாம் இந்த நான்கு மேன்மையான உண்மைகளுள் அடங்கிவிடும். இந்த நான்கினுள் ஒன்று மற்றதைவிட முக்கியமானது என்று சொல்வது தவறாகும். ஏனென்றால் இவை ஒவ்வொன்றும் முழுமையின் ஒரு பகுதியாகவே ஒன்றோடொன்று இணைந்து செயற்படுகின்றன. ஆனால் தம்மத்தை விளங்கிக் கொள்ள ஏதாவது ஒரு உண்மையைத் தனிப்படுத்திக் காட்ட வேண்டுமென்றால் நாம் மேன்மையான நான்காம் உண்மையையே குறிப்பிட வேண்டும். அதுவே துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம். அதுவே அட்டாங்க மார்க்கம். எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை. இந்த எட்டுப் பிரிவையும் மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்:

I. விவேகம் (பஞ்ஞா) Wisdom:

1. நற்காட்சி Right View (same as Right Understanding) புத்தரின் வார்த்தைகள் விரிவான விளக்கவுரை

2. நல்லூற்றம் (நல்கருத்து, நல்லெண்ணங்கள்) Right Resolve (same as Right Intention or Right Thought) விரிவான விளக்கவுரை

II ஒழுக்கம் (சீலம்) Moral Discipline

3. நல்வாய்மை Right Speech விரிவான விளக்கவுரை

4. நற்செயல் Right Action விரிவான விளக்கவுரை

5. நல்வாழ்க்கை (நற்சீவனோபாயம்) Right Livelihood விரிவான விளக்கவுரை

III. ஒருக்கம் (சமாதி) Concentration

6. நல்லூக்கம் (நல்முயற்சி) Right Effort விரிவான விளக்கவுரை

7. நற்கடைப்பிடி Right Mindfulness புத்தரின் வார்த்தைகள்

8. நல் ஒருக்கம் (நற்றியானம், நல்லமைதி) Right Concentration

புத்தரின் போதனைகளுள் அட்டாங்க மார்க்கமே மிக முக்கியமானதெனக் கூறுவதற்குக் காரணம், இதுவே தம்மத்தை நமக்குத் தினசரி வாழ்க்கை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. மார்க்கம் இல்லாவிட்டால் தம்மம் ஒரு வெறுமையான கோட்பாட்டுக் குவியலாக மட்டுமே இருக்கும். மார்க்கம் இல்லாவிட்டால் துக்கத்திலிருந்து விடுபடுவதென்பது ஒரு கனவாகத்தான் தோன்றும்.

அட்டாங்க மார்க்கம் என்ற தலைப்புக் குறிப்பது போல, அது எண் வகையான பிரிவுகளைக் கொண்டது. அந்த எட்டுப் பிரிவுகளையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர வேண்டும் என்பதில்லை. மார்க்கம் இந்த எட்டுப் பிரிவுகளையும் ஒரே சமயத்தில் வளர்க்கின்றது. ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக முற்றிலும் வேறுபட்ட செயல்களைச் செய்கின்றது. ஒவ்வொன்றும் அதனதன் வழியில் துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லத் துணை புரிகின்றது.

* * * * * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode